திருக்குறள் அதிகார கடையெழுத்து கணக்கு (2)
① அதிகார பெயர்களின் எழுத்துகள் கட்டமைப்பில் உள்ளதா...?
② அப்படியென்றால் அந்த கட்டமைப்பின் அடிப்படை என்ன...?
③ முடிவில் திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண் 7 (ஏழு) வருகிறதா...?
(இதுவரை எழுதிய, இனி எழுதப்போகிற பதிவுகளின் நோக்கமும், 7 எனும் எண்ணை நோக்கியே அமையும்...)
ஏழு வெவ்வேறு எண்களின் கூட்டுத்தொகையும், அதன் மூல எண்ணும் :
7+64+74+75+78+92+120 = 510 = (5+1+0) =
இதில் முடிவில் வரும் மூல எண் என்பதை என்று வருமாறு, வண்ணம் கொண்ட 7 எண்களில் 2 எண்களை நீக்கவேண்டும்...!
இரண்டு எண்களை நீக்கி, மிச்சத்தைக் கூடினால் 368 வருகிறது... 3+6+8 = 17 = 1+7 = வருகிறது...! என்று சொல்லிவிட்டு, // நீக்கிய அந்த இரண்டு எண்களை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் // என்று சொல்லியிருந்தேன்... 7 வெவ்வேறு எண்களின் கூட்டுத்தொகை 510; இரண்டு எண்களை நீக்கிய பின் வரும் கூட்டுத்தொகை 368; அப்படியென்றால், 510-368=142 வரும்... அது 64+78 ஆகிய எண்களைக் கூட்டினால் மட்டுமே 142 வரும்...! ✔ மேற்படி முந்தைய பதிவின் கணக்கைச் செய்து கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி...(!)
ஓர் அட்டவணையாக :
ஒரேயொரு முறை வரும் அதிகார கடையெழுத்துக்கள் | ||
---|---|---|
எண் | எண் | |
1 | 7 | மக்கட்பேறு |
2 | 64 | அமைச்சு |
3 | 74 | நாடு |
4 | 75 | அரண் |
5 | 78 | படைச்செருக்கு |
6 | 92 | வரைவின்மகளிர் |
7 | 120 | தனிப்படர்மிகுதி |
மொத்தம் | 510 | →→(5+1+0)= |
பள்ளிக்குழந்தை கணக்கில் நீக்கிய எண்கள் 64 மற்றும் 78 ஆகும்... இவை அதிகார எண்களாக நினைத்துக்கொண்டு, மேற்காணும் அட்டவணையில் 64.அமைச்சு, 78.படைச்செருக்கு ஆகிய இரண்டு அதிகாரங்களையும் நீக்கிவிடுவோம்...! நீக்கியபின் மறுபடியும் ஓர் அட்டவணையாக :
ஒரேயொரு முறை வரும் அதிகார கடையெழுத்துக்கள் | ||
---|---|---|
எண் | எண் | |
1 | 7 | மக்கட்பேறு |
2 | 74 | நாடு |
3 | 75 | அரண் |
4 | 92 | வரைவின்மகளிர் |
5 | 120 | தனிப்படர்மிகுதி |
மொத்தம் | 368 | →→(3+6+8)= |
சுருக்கமாகச் சொல்வதென்றால், கடையெழுத்து சு மற்றும் கு நீக்கப்பட்டுவிட்டன... விடைக்கான குறிப்பு: 133 அதிகாரங்களின் பெயர்களை எல்லாம் மனக்கண்ணில் கொண்டு வருக... அத்துடன் முக்கியமாக அவற்றின் முதலெழுத்தும், கடையெழுத்தும்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
தொடர்கிறேன்.
பதிலளிநீக்குபிரமிக்க வைக்கிறது ஜி தங்களது பதிவின் ஆய்வு.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்...
திண்டுக்கல் தனபாலன் மட்டுமல்ல...திருக்குறள் தனபாலன்கூட...அப்பப்பா..உங்களின் கூர்மையான நோக்கு சிறப்பு.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபடித்தேன் என் மண்டையில் விஷயம் ஏறமாட்டேங்கிறதே
டிடி உங்கள் அளவுக்கு எல்லாம் கணக்குப் பாடம் பயிற்சி செய்யும் அளவு திறன் கிடையாது டிடி. புரிந்துகொள்ளவே நேரம் எடுப்பதால்....அதிகாரங்களையும் பார்த்தேன் டிடி. முதலெழுத்தும் கடை எழுத்தும்....காரணம் மட்டும் என்னவா இருக்கும்னும் புரியலை.
பதிலளிநீக்குகட்டமைப்பு 7 என்ற எண் வர வேண்டும் என்பதால் அதை நோக்கி ...வாசித்தாலும் புரிவது கடினமாக இருக்கு டிடி
கீதா
"அட இவ்வளவு தானா...?" என்று, வரும் பதிவுகளில் வியப்பு அடைவது உறுதி...
நீக்குநல்ல பகிர்வு
பதிலளிநீக்குசிந்தைக்கு விருந்து.
பதிலளிநீக்குசிறப்பான பதிவு..
அருமை பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நீங்கள் குறள்களை அலசும் விதங்கள் திகைப்பை தருகின்றன. உங்களைப் போல் வேறு யாராலும் இந்த மாதிரி ஆராய்ந்து தர முடியாது. உங்கள் திறமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கணித ஆராய்ச்சி வியக்க வைக்கிறது
பதிலளிநீக்குகடை எழுத்து அட்ட்டவணை வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குதிருக்குறளை தலபாடமாக படித்து அதை படி படியாக பிரித்து அலசி நிறைய சொல்லி தருகிறீர்கள்.
கணக்கு என்றாலே பிணக்கு என்பது போல இருக்கிறது புரித்து கொள்ள. முன்பு திருக்குறளுக்கு பாடல்கள் பதிவு செய்வீர்கள் அது போல இதில் பாடல்களை இணைத்தால் நன்றாக இருக்கும்.