🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் அதிகார முதலெழுத்து கணக்கு (3)

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய திருக்குறள் அதிகார கடையெழுத்து (2) பதிவைத் தொடர்ந்து, அதிகார முதலெழுத்து கணக்கு மட்டும் விளக்கமாகத் தொடர்கிறது...


இந்த தொடரின் முதல் பதிவில் எழுதியவற்றை ஓர் அட்டவணையாக :

133 அதிகாரங்களில்
ஒரேயொரு முறை வரும் அதிகார
முதலெழுத்துக்கள்
வரிசை
எண்
அதிகார
எண்
அதிகாரம்
3 நீத்தார்பெருமை 
23 கை  
35 துறவு 
36 மெய்யுணர்தல் 
42 கேள்வி 
46 சிற்றினஞ்சேராமை 
53 சுற்றந்தழால் 
62 ள்வினையுடைமை 
65 சொல்வன்மை 
10 69 தூது 
11 84 பேதைமை 
12 94 சூது 
13 97  மானம் 
14 99 சான்றாண்மை 
மொத்தம் 808 →(8+0+8)=16=(1+6)=7 

முதல் பதிவில் கேட்ட அதே கணக்கு :
அட்டவணையில் காணும் பதினான்கு (14) அதிகார எண்களின் கூட்டுத்தொகையும், அதன் மூல எண்ணும் :

3+23+35+36+42+46+53+62+65+69+84+94+97+99 = 808 = 8+0+8 = 16 = (1+6) =

இதில் முடிவில் வரும் மூல எண் என்பதை என்று வருமாறு, வண்ணம் கொண்ட 14 எண்களில் 3 எண்களை நீக்கவேண்டும்...!

கணக்கு செய்து விடுவோம் :- 35, 46, 53 ஆகிய எண்களை நீக்கிவிட்டேன்... இவற்றின் கூட்டுத்தொகை (35+46+53)=134 ஆகும்... இதை அட்டவணையில் காணும் 14 அதிகாரங்களின் மொத்த கூட்டுத் தொகையில் கழித்தால், (808-134=)674 வரும்... இதன் மூல எண் வந்து விட்டது...! முந்தைய கடையெழுத்து பதிவிலும் வந்தது...!! இதுவே அதிகார கட்டமைப்புகளின் ஒரு பகுதியாக "எட்டும் எட்டும் ஏழு (8+8=16=7)...!!!" 'எண்ணென்ப' அடுத்து 'ஏனை எழுத்தென்ப' :-

மேற்காணும் அட்டவணையில் நீக்கப்பட்ட அதிகார எண்களின் பெயர்கள் :- 35.துறவு, 46.சிற்றினஞ்சேராமை, 53.சுற்றந்தழால் ஆகியவை ஆகும்... சுருக்கமாக முதலெழுத்து து, சி, சு ஆகியவை நீக்கப்பட்டுவிட்டன... விடைக்கான குறிப்பு: முந்தைய பதிவில் சொன்னதுபோல் "சிரமப்படாமல்" 133 அதிகாரங்களின் பெயர்களை எல்லாம் மனக்கண்ணில் கொண்டு வரவேண்டாம்...! அத்துடன் முக்கியமாக அவற்றின் முதலெழுத்தையும், கடையெழுத்தையும் கவனிக்க வேண்டாம்...!! என்ன செய்யலாம்...? மூந்தைய பதிவில் இரண்டு கடையெழுத்துக்கள் நீக்கப்பட்டன... அதில் ஒரு கடையெழுத்து - அதே கடையெழுத்து - இங்கேயும் நீக்கப்பட்டுள்ளது...! சற்றே சிந்திக்கலாம்...! நன்றி.....

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்று காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. புதிய வலைப்பக்கம் தொடங்கியிருக்கிறேன். உங்கள் தொழில்நுட்பப் பதிவுகள் உதவியாக உள்ளன.
    'blog' என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல், இணையதளமா, வலைப்பக்கமா, வலைதளமா?

    பதிலளிநீக்கு
  3. புதிய வலைப்பக்கம் தொடங்கியுள்ளேன். உங்கள் தொழில்நுட்பப் பதிவுகள் உதவிகரமாக உள்ளன.
    blog என்பதற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் எது? வேறு வேறு சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்.
    இதைப் பற்றி ஒரு பதிவு எழுதுங்கள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபாலன் சார் பதிலளித்துவிட்டார்... "கூமுட்டை"க்கு இந்நேரம் தெளிவு கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றேன்... ஹ... ஹா...ஹஹா...

      அன்பரின் புதிய வலைத்தளத்திற்கு விரைவில் வருகை தருகின்றேன்... எங்கள் ஆதரவு என்றும் உண்டு... தங்களின் புதிய வலைப்பக்கமானது வாசகர்கள் மத்தியில் அமோகமாக வெற்றிபெற மனதார வாழ்த்துகிறேன்... - நாஞ்சில் சிவா.
      https://www.scientificjudgment.com/

      நீக்கு
  4. அந்த எழுத்து இரு முறை வருவதாலா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகிறதே...! நாம் செய்வது ஒரேயொரு முறை வரும் முதலெழுத்தோ அல்லது கடையெழுத்தோ தானே...?! அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் ? - என்ன செய்து உள்ளேன் ?

      அதிகார எண்கள் கணக்கில் "ஏழு" வந்து விட்டது... அதேபோல் எழுத்துகளின் கணக்கிலும் "ஏழு" வர வேண்டும்..!

      நீக்கு
  5. பதிவு பிரமிப்பாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  6. குறள் ஆராய்ச்சி தொடரட்டும் . நன்றி

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இதற்கு முன் ஒரு கருத்து தந்திருந்தேன் .அது மாயமாகி விட்டது போலும்.

    தங்களது திருக்குறள் ஆராய்ச்சிகள் நன்றாக உள்ளது. எங்களுக்கு கொஞ்சம் எளிதாக புரிவதுதான் கடினம். ஏனெனில் உங்கள் அளவுக்கு திருக்குறள் தேர்ச்சி எங்களுக்கு (குறிப்பாக எனக்கு) இல்லை. படிக்கும் காலத்தில் திருக்குறளுக்கென வந்த மதிப்பெண்கள் என்னவோ ஒரளவு நன்றாகத்தான் இருந்தது. ஆனால் நீங்கள் தரும் பதிவையெல்லாம் தொகுத்து வைத்துக் கொண்டு மும்மரமாக படித்தால் இப்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. திருக்குறள் பதிவுகள் நாளுக்கு நாள் புதிய செய்திகளிய சொல்கிறது.
    ஆனால் கமலா சொல்வது போல் நேரம் ஒதுக்கி கவனமாக மனதை ஒரு நிலை படுத்தி படிக்க வேண்டிய பதிவுகள். உங்கள் உழைப்பு மிகவும் பெரிது.
    திருக்குறளை முனைவர் பட்டத்து எடுத்து கொள்பவர்களுக்கு சிறந்த கையேடாக இருக்கும்.

    உங்கள் ஆராய்ச்சி தொடர வாழ்த்துக்கள்.

    உங்கள் பதிவை படித்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் , பயன் அடைந்தவர்களும் நிறைய இருப்பார்கள். உங்கள் பதிவை படித்து சிந்தித்து பதில் அளிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.