🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் அதிகாரங்கள் - ஐயனின் கணக்கியல் நுட்பம் (4)

அனைவருக்கும் வணக்கம்... எண் என்று சொல்லப்படும் கணித நூல் அறிவும், எழுத்து என்று சொல்லப்படும் இலக்கண இலக்கிய நூலறிவு ஆகிய இவ்விரண்டும் உலகில் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை... வேண்டுகோள் : இப்பதிவை வாசிக்கத் திருக்குறள் மீது ஆர்வமும், சற்றே நுணுக்கமான கவனிப்பும் அவசியம் தேவை... நன்றி...


இதுவரை என்ன செய்தோம்...? என்பதை விளக்க, "இதற்கு ஒரு தொழினுட்ப அட்டவணை உருவாக்க முடியாதா...?" என்று தாத்தா மனதில் கேள்வி கேட்க, புதியதொரு தொழினுட்ப அட்டவணையைக் கற்றுக்கொண்டேன்...! ( மு என்பது அதிகாரத்தின் முதலெழுத்து & என்பது அதிகாரத்தின் கடையெழுத்து - அவற்றை ஒவ்வொன்றாக ஒருமுறை சொடுக்கி....... வேண்டாம்... வாசிப்பவர்கள் கணினி என்றால் சுட்டியை உருட்ட உருட்ட அல்லது கைப்பேசி என்றால் சுட்டு விரலை மேலே மேலே தடவ வேண்டிவரும் என்பதால், இருமுறை சொடுக்கிப் பார்க்கவும்...! )

வ.எண்அதிகார எண். அதிகாரம்மு
 1. கடவுள்வாழ்த்து
து
 2. வான்சிறப்பு
வாபு
 3. நீத்தார்பெருமை
நீமை
 4. அறன்வலியுறுத்தல்
ல்
 5. இல்வாழ்க்கை
கை
 6. வாழ்க்கைத்துணைநலம்
வாம்
 7. மக்கட்பேறு
று
 8. அன்புடைமை
மை
 9. விருந்தோம்பல்
வில்
 10. இனியவைகூறல்
ல்
 11. செய்ந்நன்றியறிதல்
செல்
 12. நடுவுநிலைமை
மை
 13. அடக்கமுடைமை
மை
 14. ஒழுக்கமுடைமை
மை
 15. பிறனில்விழையாமை
பிமை
 16. பொறையுடைமை
பொமை
 17. அழுக்காறாமை
மை
 18. வெஃகாமை
வெமை
 19. புறங்கூறாமை
புமை
 20. பயனிலசொல்லாமை
மை
 21. தீவினையச்சம்
தீம்
 22. ஒப்புரவறிதல்
ல்
 23. ஈகை
கை
 24. புகழ்
புழ்
 25. அருளுடைமை
மை
 26. புலான்மறுத்தல்
புல்
 27. தவம்
ம்
 28. கூடாவொழுக்கம்
கூம்
 29. கள்ளாமை
மை
 30. வாய்மை
வாமை
 31. வெகுளாமை
வெமை
 32. இன்னாசெய்யாமை
மை
 33. கொல்லாமை
கொமை
 34. நிலையாமை
நிமை
 35. துறவு
துவு
 36. மெய்யுணர்தல்
மெல்
 37. அவாவறுத்தல்
ல்
 38. ஊழ்
ழ்
 39. இறைமாட்சி
சி
 40. கல்வி
வி
 41. கல்லாமை
மை
 42. கேள்வி
கேவி
 43. அறிவுடைமை
மை
 44. குற்றங்கடிதல்
குல்
 45. பெரியாரைத்துணைக்கோடல்
பெல்
 46. சிற்றினஞ்சேராமை
சிமை
 47. தெரிந்துசெயல்வகை
தெகை
 48. வலியறிதல்
ல்
 49. காலமறிதல்
கால்
 50. இடனறிதல்
ல்
 51. தெரிந்துதெளிதல்
தெல்
 52. தெரிந்துவினையாடல்
தெல்
 53. சுற்றந்தழால்
சுல்
 54. பொச்சாவாமை
பொமை
 55. செங்கோன்மை
செமை
 56. கொடுங்கோன்மை
கொமை
 57. வெருவந்தசெய்யாமை
வெமை
 58. கண்ணோட்டம்
ம்
 59. ஒற்றாடல்
ல்
 60. ஊக்கமுடைமை
மை
 61. மடியின்மை
மை
 62. ஆள்வினையுடைமை
மை
 63. இடுக்கணழியாமை
மை
 64. அமைச்சு
சு
 65. சொல்வன்மை
சொமை
 66. வினைத்தூய்மை
விமை
 67. வினைத்திட்பம்
விம்
 68. வினைசெயல்வகை
விகை
 69. தூது
தூது
 70. மன்னரைச்சேர்ந்தொழுகல்
ல்
 71. குறிப்பறிதல்
குல்
 72. அவையறிதல்
ல்
 73. அவையஞ்சாமை
மை
 74. நாடு
நாடு
 75. அரண்
ண்
 76. பொருள்செயல்வகை
பொகை
 77. படைமாட்சி
சி
 78. படைச்செருக்கு
கு
 79. நட்பு
பு
 80. நட்பாராய்தல்
ல்
 81. பழைமை
மை
 82. தீநட்பு
தீபு
 83. கூடாநட்பு
கூபு
 84. பேதைமை
பேமை
 85. புல்லறிவாண்மை
புமை
 86. இகல்
ல்
 87. பகைமாட்சி
சி
 88. பகைத்திறந்தெரிதல்
ல்
 89. உட்பகை
கை
 90. பெரியாரைப்பிழையாமை
பெமை
 91. பெண்வழிச்சேறல்
பெல்
 92. வரைவின்மகளிர்
ர்
 93. கள்ளுண்ணாமை
மை
 94. சூது
சூது
 95. மருந்து
து
 96. குடிமை
குமை
 97. மானம்
மாம்
 98. பெருமை
பெமை
 99. சான்றாண்மை
சாமை
 100. பண்புடைமை
மை
 101. நன்றியில்செல்வம்
ம்
 102. நாணுடைமை
நாமை
 103. குடிசெயல்வகை
குகை
 104. உழவு
வு
 105. நல்குரவு
வு
 106. இரவு
வு
 107. இரவச்சம்
ம்
 108. கயமை
மை
 109. தகையணங்குறுத்தல்
ல்
 110. குறிப்புணர்தல்
குல்
 111. புணர்ச்சியின்மகிழ்தல்
புல்
 112. நலம்புனைந்துரைத்தல்
ல்
 113. காதற்சிறப்புரைத்தல்
கால்
 114. நாணுத்துறவுரைத்தல்
நால்
 115. அலரறிவுறுத்தல்
ல்
 116. பிரிவாற்றாமை
பிமை
 117. படர்மெலிந்திரங்கல்
ல்
 118. கண்விதுப்பழித்தல்
ல்
 119. பசப்புறுபருவரல்
ல்
 120. தனிப்படர்மிகுதி
தி
 121. நினைந்தவர்புலம்பல்
நில்
 122. கனவுநிலையுரைத்தல்
ல்
 123. பொழுதுகண்டிரங்கல்
பொல்
 124. உறுப்புநலனழிதல்
ல்
 125. நெஞ்சொடுகிளத்தல்
நெல்
 126. நிறையழிதல்
நில்
 127. அவர்வயின்விதும்பல்
ல்
 128. குறிப்பறிவுறுத்தல்
குல்
 129. புணர்ச்சிவிதும்பல்
புல்
 130. நெஞ்சொடுபுலத்தல்
நெல்
 131. புலவி
புவி
 132. புலவிநுணுக்கம்
பும்
 133. ஊடலுவகை
கை

133 அதிகாரங்களில், ஒரேயொரு முறை பதினான்கு (14) எழுத்துக்கள் முதலெழுத்தாகவும், ஒரேயொரு முறை ஏழு (7) எழுத்துக்கள் கடையெழுத்தாகவும், பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இருமுறை சொடுக்கிப் பார்த்து மேலேயே அறிந்திருப்பீர்கள்... ஆக மொத்தம் 21 அதிகாரங்கள்... இதை அப்படியே ஒரு அட்டவணையாக போடுவோம்...

ஒரேயொரு முறை வரும்
அ.
எண்
முதலெழுத்து 14
அதிகாரங்கள்
அ.
எண்
கடையெழுத்து 6
அதிகாரங்கள்
62 
  ள்வினையுடைமை
78 
படைச்செருக்கு  
23 
  கை
64 
அமைச்சு  
42 
  கேள்வி
74 
நாடு  
99 
  சான்றாண்மை
75 
அரண்  
46 
  சிற்றினஞ்சேராமை
120 
தனிப்படர்மிகுதி  
53 
  சுற்றந்தழால்
92 
வரைவின்மகளிர்  
94 
  சூது
மக்கட்பேறு  
65 
  சொல்வன்மை
35 
  துறவு
69 
  தூது
  நீத்தார்பெருமை
84 
  பேதைமை
97 
  மானம்
36 
  மெய்யுணர்தல்
808முதலெழுத்து 14
கடையெழுத்து 7
510முதலெழுத்து 6
கடையெழுத்து 7
திகார எண்களின் எண்ணிக்கை
808+510=1318 (4)
மொத்த முதல் + கடை எண்ணிக்கை
14+76+7 = 34 (7)


மொத்த அதிகார எண்களைக் கூட்டினால் ஏழு (7) வரவில்லை... ஆனால் மொத்த முதல் கடை எழுத்துக்களைக் கூட்டினால் 34 (7) வருகிறது... இந்தமுறையில் ஏழு (7) வருகிறது என்று சொல்லிக் கொள்ளலாம்... ஆனால் கணக்கிட்ட முறை தவறு.... மேலும் ஆய்வு தொடர்வோம்... முப்பால் எனும் நூல், ஏழு (7) எனும் எண்ணால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று பலமுறை கூறியுள்ளேன்... இங்கு அவை அதிகாரங்களைப் பொறுத்தமட்டில், எவ்வாறு என்பது தான் இந்த ஓர் ஆய்வு...!

இன்றைய பதிவை தொடங்குவோம்...! இதுவரை தாத்தா என்ன செய்துள்ளார்...? 133 அதிகாரங்களை 19 பகுதிகளாகப் பிரித்துள்ளார்... (133➗7=19) ✔ ஆக ஒவ்வொரு பகுதியும் 7 அதிகாரங்கள்... ஒரு பகுதியைக் கடையெழுத்திற்கும், ஈரேழு பகுதியை முதலெழுத்திற்கும், மீதம் 16 பகுதியை ஏனைய எழுத்திற்கும் அமைத்துள்ளார்...! இப்போது 133 அதிகாரங்களின் கடையெழுத்துக்களையும் (➕) முதலெழுத்துக்களையும் (அதாவது 133 x 2 = 266 எழுத்துக்களை) இணைத்துக் கணக்கிட்டுப் பார்ப்போமே...! வாருங்கள் சுளகு நண்பனே, கண்ணிமைக்கும் நேரத்தில் சொல்...!


ஒரேயொரு முறை வரும் அதிகார
கடையெழுத்தும்

முதலெழுத்தும்
வரிசை
எண்
அதிகார
எண்
 16  அதிகாரங்கள்
மக்கட்பேறு  
74 
நாடு  
75 
அரண்  
92 
வரைவின்மகளிர்  
120 
தனிப்படர்மிகுதி  
மொத்தம் ① 
368 
→(3+6+8)=17=(1+7)=
  நீத்தார்பெருமை
23 
  கை
36 
  மெய்யுணர்தல்
42 
  கேள்வி
10 
62 
  ள்வினையுடைமை
11 
65 
  சொல்வன்மை
12 
69 
  தூது
13 
84 
  பேதைமை
14 
94 
  சூது
15 
97 
  மானம்
16 
99 
  சான்றாண்மை
மொத்தம் ② 
674 
→(6+7+4)=17=(1+7)=
① + ② 1042 
→ 7 ←= +

முதல்➕கடை = 266 எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 21 அதிகாரங்களிலிருந்து 16 அதிகாரங்களாகக் குறைகிறது...! எண்களால் திருக்குறள் எண்ணான ஏழு, (7) "எட்டும் எட்டும் ஏழு" (+= 7 ) எனும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அட்டவணையில் காண்கிறோம்... அதேபோல் எழுத்துக்களை ஏதேனும் கணக்கிட்டோமா...? இல்லையே; அதனால் மேற்கண்ட அட்டவணையிலிருந்து அதிகாரங்களின் முதல் & கடை எழுத்துக்களை மட்டும் பிரித்து ஆராய்வோம்...

ஒரேயொரு முறை வரும் அதிகார
முதலெழுத்தும், டையெழுத்தும்
வ.
எண்
தவறு ✖சரி ✔
முதல்
கடை
முதல்
கடை
 ம  று  று 
 நா  டு நா டு 
 அ  ண்  ண் 
 வ  ர்  ர் 
 த  தி  தி 
 நீ  மை  நீ  மை 
 ஈ  கை  ஈ கை
 மெ  ல்  மெ ல்
 கே  வி  கே வி
10  ஆ  மை  ஆ  மை 
11  சொ  மை  சொ  மை 
12  தூ  து  தூ  து 
13  பே  மை  பே  மை 
14  சூ  து  சூ  து 
15  மா  ம்  மா ம்
16  சா  மை  சா  மை 
 16  9  11  5 
( 16 + 9 )=
25=(2+5)=
 7 
( 11 + 5 )=
16=(1+6)=
 7 

இந்த அட்டவணையை நம் மதி நுட்பத்தால் ஆராய்ந்து, தாத்தாவின் ஒரு சிறிய நுட்பத்தைப் பார்ப்போம்... சரி ✔ என்பதைத் தானாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், தவறு ✖ தலைப்பின் கீழ் உள்ளதைப் பார்த்தாலே போதும்...! அப்படிப் பார்த்தால், முதல் எனும் நெடுவரிசையில் 16 வெவ்வேறு எழுத்துக்களும், கடை எனும் நெடுவரிசையில் 9 வெவ்வேறு எழுத்துக்களும், ஒரேயொரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளன... மொத்தம் (16+9) = 25 எழுத்துக்கள் மற்றும் திருக்குறள் எண் ஏழும் 25 = (2+5=7) வந்துவிட்டது... இதில் என்ன தவறு...?

உலகத்திலேயே மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு என்னவென்று தெரியுமா...? என்னைப் பொறுத்தவரை, தான் செய்யும் செயலிலும், பேசும் பேச்சிலும், தான் செய்த தவற்றைத் தான் அறியாமல் வாழ்வதே...! இங்கும் அப்படித்தான்...! இத்துடன் இப்பதிவை முடித்து, "இதுவே அதிகாரத்தின் கட்டமைப்பு" என்று புல்லறிவாளனாக முடித்திருந்தால், என்றாவது ஒரு நாள், யாராவது ஒருவர், கணக்கியல் பதிவுகளின் படி செய்யும் போது, அவரும் யோசிக்காமல் விட்டுவிட்டால்...? தாத்தா இதற்கும், மிக அதிக தமிழ் இலக்கண மாத்திரையில் ஒலிக்கும், ஒரு குறள் வைத்துள்ளார் :- 849 காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு...! எண்களை யார் கணக்கிட்டாலும் விடை ஒன்றாகத் தான் வரும்...! ஆனால் எழுத்துக்களும், அதனால் உருவாகும் சொற்களும், பேச்சுக்களும், இடத்திற்கேற்ப, ஆளுக்கேற்ப, நேரத்திற்கேற்ப - போன்ற பலவகையில் மாறுபடும்...! அதனால் எழுத்துக்களைக் கணக்கிடும் போது, கவனம் அதிகம் தேவை...


சரி, தொழினுட்ப அட்டவணையில் மு மற்றும் ஆகியவற்றைச் சொடுக்கிப் பார்த்தபோது, , நா, , , , கை, ல், வி, ம் ஆகிய 9 எழுத்துக்களும், ஒரேயொரு முறை பயன்படுத்தியதாக வந்தனவா...? வரவே வராது...! ஏனென்றால் அந்த 9 எழுத்துக்கேற்ப

எடுத்துக்காட்டாக ஒரு கடையெழுத்து: வி எனும் எழுத்து, கேள்வி அதிகாரம் தவிர, கல்வி, புலவி ஆகிய அதிகாரங்களின் கடையெழுத்தாகவும், விருந்தோம்பல், வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை ஆகிய அதிகாரங்களின் முதலெழுத்தாகவும் வருகிறது...! ஒரேயொரு முறை வரும் கே எனும் முதலெழுத்தினால் தான், கேள்வி அதிகாரமும் இந்த பட்டியலில் வருகிறது... அதனால் முதலும் கடையுமாக வருகின்ற வி எனும் எழுத்து, ஒரேயொருமுறை பயன்படுத்தியதாக வராது... அடுத்து எடுத்துக்காட்டாக ஒரு முதலெழுத்து: எனும் எழுத்து, க்கட்பேறு அதிகாரம் தவிர, டியின்மை, ன்னரைச்சேர்ந்தொழுதல், ருந்து, ஆகிய அதிகாரங்களின் முதலெழுத்தும் அதுவே...! எனவே, ஒரேயொருமுறை பயன்படுத்தியதாக வராது... இதுபோல் மற்ற 7 எழுத்துக்களும் (நா, , , , கை, ல், ம்) அவ்வாறே... இதுவே ஐயனின் அதிகார கணக்கியல் ...! மேலும் :

ஒரேயொரு முறை வரும் று எனும் கடையெழுத்தினால் தான், மக்கட்பேறு அதிகாரமே இந்த பட்டியலில் வருகிறது... 61. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற - மக்கட்பேறு அதிகாரத்தின் முதல் குறள்... வீடுபேறு, மோட்சம் - போன்ற உறுதிப்பொருட்கள் இல்லாதவற்றை எல்லாம் முப்பாலில் தேடினாலும் கிடைக்காது...! அறம், பொருள், இன்பம் மட்டுமே... மற்றவையெல்லாம் தமிழ்ப் பக்தி இயக்க காலத்தில் சில சிறுமைகளால் பரப்பப்பட்டவை... அதற்குத் துணையாகப் புரட்டுப் புராணங்கள் ஏராளம் + தாராளம்...! அந்த சில கீழ்களால் முப்பாலும் சிதைக்கப்பட்டது என்பது தான் கொடூரம்... இந்த அதிகார கட்டமைப்பின் பல சிறப்புகளில் ஒரு சிறப்பு, மிகவும் முக்கியமானது ஒன்று உண்டு...! ஏழாவது அதிகாரம் மக்கட்பேறு தான் என உறுதியாகிறது... கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு முன்பிருந்தே பரிமேலழகர், அவரின் மதம் சார்ந்து புதல்வரைப் பெறுதல் என்று உரைத்து, அதற்கான நான்கு வர்ண விளக்கங்கள் எல்லாம் இங்கே கணக்கு உடைத்தெறிந்து விட்டதை அறிவது மிக மிக முக்கியம்... நம் நாட்டில் ஒவ்வொரு மனிதனும், உலகில் வாழும் கணக்கற்ற உயிரினங்களில் "தான் ஒரு மனிதப்பிறவி" என்று நினைத்து வாழும்வரை, நம் நாடு எந்த வகையிலும் முன்னேற்றம் காணாது...!

சரி ✔ எனும் நெடுவரிசையில் முடிவாக, 5 எழுத்துக்கள் ஒரேயொரு முறை கடையெழுத்தாகவும், 11 எழுத்துக்கள் ஒரேயொரு முறை முதலெழுத்தாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன... (5+11) = 16 = (1+6) = 7 ✔ போகிற போக்கில் 5, 11 ஆகியவை பகா எண்கள் என்பதையும் மறக்காமல் கவனிக்க வேண்டும்...! எண்களாலும், முதல்+கடை எழுத்துகளாலும், அதிகாரத்தின் ஒரு பகுதி, திருக்குறள் எண்ணான ஏழில்  7  கட்டமைக்கப்பட்டுள்ளது...

// அதெல்லாம் சரி, முதல்➕கடை = 266 ஆகிய எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 21 அதிகாரங்களிலிருந்து 16 அதிகாரங்களாகக் குறைகிறது...! (21-16) = அந்த 5 அதிகாரங்கள் எங்கே போயின...? அதாவது ஒரேயொரு முறை வரும் முதலெழுத்தைக் கொண்ட துறவு, சிற்றினஞ்சேராமை, சுற்றந்தழால் ஆகிய அதிகாரங்களும், ஒரேயொரு முறை வரும் கடையெழுத்தைக் கொண்ட அமைச்சு, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்களும் எங்கே...? // சுருக்கமாக : து, சி, சு, சு, கு ? இவ்வாறு யாருக்காவது ஐயம் வந்ததா...? அவ்வாறு வந்தாலும் வாராவிட்டாலும், "மேற்கூறிய அதே தான்" என்று சொல்லத் தேவையில்லை என்று எண்ணுகிறேன்...! ஏனெனில் இந்த ஐந்து எழுத்துக்களைக் கவனித்தாலே தெரிந்து விடும்... அமைச்'சு' என்று முடிவது, 'சு'ற்றந்தழால் என்று ஆரம்பிக்கிறது...! நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அட்டவணை தயாரிப்பு சூப்பர்.  திருக்குறள் ஆராய்ச்சியை விட இது போல உங்கள் தொழில் நுட்ப அறிவுதான் என்னை எப்போதும் வியக்க வைக்கும்.  இதற்குத் தகுந்தாற்போல ஒரு அட்டவணை வசதியை உடனே தயார் செய்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வலைப்பூவில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை கேட்பொலியாக பயன்படுத்தியுள்ளேன்... அதை தொகுக்க ஒரு தொழினுட்பம் செய்து பார்த்தேன்... அது இன்னும் சரிவரவில்லை... ஆனால் அதில் செய்த ஒரு நுட்பம் இந்த தொழினுட்ப அட்டவணைக்கு உதவியது...

      நீக்கு
  2. இரு முறை சொடுக்கிப் பார்த்ததும் நீங்கள் குறிப்பிட்டுள்ளது தெரிந்தது. புதியதொரு தொழில்நுட்பம் கற்றதற்கு வாழ்த்துகள்!

    அடுத்தாப்ல மதிநுட்பத்தால்னு சொல்லிருக்கீங்க பாருங்க அதான் பிரச்சனை...அதுக்குப் பிறகு வரும் கணக்கிடலுக்கு அது தேவை. 7 நோக்கிப் போறீங்கன்னு புரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், மீதம் உள்ள அதிகாரங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அடுத்த பதிவில் பார்த்து விடுவோம்...!

      நீக்கு
  3. பதிவு பிரமிப்பாக இருக்கிறது தொடர்ந்து வருகிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  4. முதல் அட்டவணை எந்த வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது? அதிகார எண் வரிசையும் இல்லை முதலெழுத்து அல்லது கடைசி எழுத்து வரிசையிலும் இல்லை.

    இந்தப்பதிவு கொஞ்ம் குழப்பம் உண்டாக்குகிறது. எனக்குப் புரியவில்லை.

    அய்யன் இருந்த காலத்தில் ஆரிய படைப்புகள் வாய்வழி பகிரப்பட்டன. அவை ஒலி வடிவத்திற்கு முக்கியம் தந்து அந்த சரியான ஒலி அதிர்வுக்கு முக்கியத்துவம் தந்தனர்.

    தமிழ் படைப்புகள் தமிழ் பிராகிருத எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டு நிலை நின்றன. அதே போல் ஆரிய படைப்புகளில் ஸ்லோகங்களில் எண் வரிசை என்ற ஒழுங்கு இருக்கவில்லை. ஆனால் திருக்குறள் முறையாக அதிகார எண் மற்றும் குரள் எண் என்று வரிசைப்படி எழுதப்பட்டு பகிரப்பட்டன.

    ஆகவே தான் வள்ளுவர் எண்ணுக்கும் எழுத்துக்கும் முக்கியத்துவம் தந்தார் என்பது என் சிற்றறிவு.

    குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // முதல் அட்டவணை எந்த வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது? //

      எண் 1 முதல் - எண் 133 வரை அமைக்கப்பட்டுள்ளது...

      // அதிகார எண் வரிசையும் இல்லை முதலெழுத்து அல்லது கடைசி எழுத்து வரிசையிலும் இல்லை.//

      ஒவ்வொரு அதிகாரத்திற்கும் முன் உள்ளது என்னங்க ஐயா...?

      நீக்கு
    2. // குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். மன்னிக்கவும்... //

      குறைகள் என்றால் மனதார ஏற்றுக்கொள்வேன்... அதனால் ஆய்வு மேம்படும்...

      நீங்கள் சொல்வது பேதைமை என்று சொல்வதாகக் கருத வேண்டாம்...

      நீக்கு
  5. இப்போஸ்ட்டைப் படிக்க ஆர்வமும், நுணுக்கமான கவனிப்பும் தேவை என ஆரம்பமே சொல்லிட்டீங்கள், உண்மையில் இதில் இரண்டுமே எனக்கு இல்லை, இருப்பினும் படிச்சேன் புரியவில்லை ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  6. ஆராய்ச்சி அசத்துகிறது. நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருக்குறள் அதிகாரங்களை கணக்கியலோடு சேர்த்து ஆராய்ச்சி செய்வதில் நீங்கள் மிக சிறந்தவராக ஆகி விட்டீர்கள். வாழ்த்துகள். உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன். வியக்க வைக்கும் உங்கள் தொழிற் நுட்பத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறப்பான பதிவு.. ஐயனின் மனம் குளிர்ந்திருக்கும்..

    வாழ்க தங்களது தொண்டு!..

    பதிலளிநீக்கு
  9. தொழிற் நுட்பம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கிறது உங்களுக்கு
    அதிகாரங்களின் அட்டவணை அருமை. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
    உங்களை பள்ளிகளில் திருக்குறள் வகுப்பு நடத்த அழைக்கலாம். சிறு வயதில் இந்த கணக்கியலை படித்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை பாதை நன்றாக இருக்கும்.
    பள்ளி, கல்லூரிகளில் உங்களை சிறப்பு வகுப்பு நடத்த அழைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.