🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் அதிகாரங்கள் - ஐயனின் கணக்கியல் நுட்பம் (5)

அனைவருக்கும் வணக்கம்...
 மு  = முதல் = முதலெழுத்து ഽ  க  = கடை = கடையெழுத்து ഽ
என்று சுருக்கமாக அழைத்துக் கொள்வோம்...!

முந்தைய திருக்குறள் அதிகாரங்கள் - ஐயனின் கணக்கியல் நுட்பம் (4) பதிவில், ஒரு தொழினுட்ப நுட்பம் மூலம், அனைத்து அதிகாரங்களின் முதலும் கடையும் தனித்தனியாக கணக்கிட்ட போது, (முதல் 14 + கடை 7) 21 அதிகாரங்கள் வந்தன... அடுத்து :


முதலும் கடையும் இணைத்து கணக்கிட்ட போது, 25# அதிகாரங்கள் - மூல எண் 7# என்று வந்தாலும், அது தவறு என்று தெளிந்து உணர்ந்து விட்டு, "கண்ணை நம்பாதே - உன்னை ஏமாற்றும்... உன்னை ஏமாற்றும் - நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது... கணக்கை நீ நம்பு - உள்ளம் தெளிவாகும்... அடையாளம் காட்டும் - பொய்யே சொல்லாதது...!" என்று மனதில் பாட்டு பாடிவிட்டு, முடிவாக 16🔯 அதிகாரங்கள் - மூல எண் 7🔯 என்று வருவது தான் சரி என்பதையும், ஒரேயொரு முறை முதல் 11 எழுத்துக்களாலும் மற்றும் கடை 5 எழுத்துக்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தோம்... 16 அதிகாரங்கள் தவிர மற்ற (133-16=) 117 அதிகாரங்களும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா...? அதற்கு முதலில், முந்தைய பதிவின் முடிவில் ஒரு பத்தி :-

// அதெல்லாம் சரி, முதல்➕கடை = 266 ஆகிய எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பார்க்கும் போது, 21 அதிகாரங்களிலிருந்து 16 அதிகாரங்களாகக் குறைகிறது...! (21-16) = அந்த 5 அதிகாரங்கள் எங்கே போயின...? அதாவது ஒரேயொரு முறை வரும் முதலெழுத்தைக் கொண்ட துறவு, சிற்றினஞ்சேராமை, சுற்றந்தழால் ஆகிய அதிகாரங்களும், ஒரேயொரு முறை வரும் கடையெழுத்தைக் கொண்ட அமைச்சு, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்களும் எங்கே...? சுருக்கமாக : து, சி, சு, சு, கு ? // அடுத்து வரும் தொழினுட்பம் அல்லாத அட்டவணையில், கணக்கிட போவது 117 அதிகாரங்கள் தான்... ஆனால், அதில் முதலில் து, சி, சு, சு, கு ஆகிய 5 அதிகாரங்களும் அல்லது 5 எழுத்துக்களும், எவ்வாறு மற்ற அதிகாரங்களில் முதல் அல்லது கடை எழுத்தாகவோ இருக்கும் நுட்பத்தை பார்த்து விடுவோம்...!

வ.எண் அதிகார எண். அதிகாரங்கள்  மு   க 
1
 35. துறவு
துவு
2
 1. கடவுள்வாழ்த்து
து
3
 95. மருந்து
து
4
 46. சிற்றினஞ்சேராமை
சிமை
5
 39. இறைமாட்சி
சி
6
 77. படைமாட்சி
சி
7
 87. பகைமாட்சி
சி
8
 64. அமைச்சு
சு
9
 53. சுற்றந்தழால்
சுல்
10
 78. படைச்செருக்கு
கு
11
 44. குற்றங்கடிதல்
குல்
12
 71. குறிப்பறிதல்
குல்
13
 96. குடிமை
குமை
14
 103. குடிசெயல்வகை
குகை
15
 110. குறிப்புணர்தல்
குல்
16
 128. குறிப்பறிவுறுத்தல்
குல்
❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋❋
17
 2. வான்சிறப்பு
வாபு
18
 4. அறன்வலியுறுத்தல்
ல்
19
 5. இல்வாழ்க்கை
கை
20
 6. வாழ்க்கைத்துணைநலம்
வாம்
21
 8. அன்புடைமை
மை
22
 9. விருந்தோம்பல்
வில்
23
 10. இனியவைகூறல்
ல்
24
 11. செய்ந்நன்றியறிதல்
செல்
25
 12. நடுவுநிலைமை
மை
26
 13. அடக்கமுடைமை
மை
27
 14. ஒழுக்கமுடைமை
மை
28
 15. பிறனில்விழையாமை
பிமை
29
 16. பொறையுடைமை
பொமை
30
 17. அழுக்காறாமை
மை
31
 18. வெஃகாமை
வெமை
32
 19. புறங்கூறாமை
புமை
33
 20. பயனிலசொல்லாமை
மை
34
 21. தீவினையச்சம்
தீம்
35
 22. ஒப்புரவறிதல்
ல்
36
 24. புகழ்
புழ்
37
 25. அருளுடைமை
மை
38
 26. புலான்மறுத்தல்
புல்
39
 27. தவம்
ம்
40
 28. கூடாவொழுக்கம்
கூம்
41
 29. கள்ளாமை
மை
42
 30. வாய்மை
வாமை
43
 31. வெகுளாமை
வெமை
44
 32. இன்னாசெய்யாமை
மை
45
 33. கொல்லாமை
கொமை
46
 34. நிலையாமை
நிமை
47
 37. அவாவறுத்தல்
ல்
48
 38. ஊழ்
ழ்
49
 40. கல்வி
வி
50
 41. கல்லாமை
மை
51
 43. அறிவுடைமை
மை
52
 45. பெரியாரைத்துணைக்கோடல்
பெல்
53
 47. தெரிந்துசெயல்வகை
தெகை
54
 48. வலியறிதல்
ல்
55
 49. காலமறிதல்
கால்
56
 50. இடனறிதல்
ல்
57
 51. தெரிந்துதெளிதல்
தெல்
58
 52. தெரிந்துவினையாடல்
தெல்
59
 54. பொச்சாவாமை
பொமை
60
 55. செங்கோன்மை
செமை
61
 56. கொடுங்கோன்மை
கொமை
62
 57. வெருவந்தசெய்யாமை
வெமை
63
 58. கண்ணோட்டம்
ம்
64
 59. ஒற்றாடல்
ல்
65
 60. ஊக்கமுடைமை
மை
66
 61. மடியின்மை
மை
67
 63. இடுக்கணழியாமை
மை
68
 66. வினைத்தூய்மை
விமை
69
 67. வினைத்திட்பம்
விம்
70
 68. வினைசெயல்வகை
விகை
71
 70. மன்னரைச்சேர்ந்தொழுகல்
ல்
72
 72. அவையறிதல்
ல்
73
 73. அவையஞ்சாமை
மை
74
 76. பொருள்செயல்வகை
பொகை
75
 79. நட்பு
பு
76
 80. நட்பாராய்தல்
ல்
77
 81. பழைமை
மை
78
 82. தீநட்பு
தீபு
79
 83. கூடாநட்பு
கூபு
80
 85. புல்லறிவாண்மை
புமை
81
 86. இகல்
ல்
82
 88. பகைத்திறந்தெரிதல்
ல்
83
 89. உட்பகை
கை
84
 90. பெரியாரைப்பிழையாமை
பெமை
85
 91. பெண்வழிச்சேறல்
பெல்
86
 93. கள்ளுண்ணாமை
மை
87
 98. பெருமை
பெமை
88
 100. பண்புடைமை
மை
89
 101. நன்றியில்செல்வம்
ம்
90
 102. நாணுடைமை
நாமை
91
 104. உழவு
வு
92
 105. நல்குரவு
வு
93
 106. இரவு
வு
94
 107. இரவச்சம்
ம்
95
 108. கயமை
மை
96
 109. தகையணங்குறுத்தல்
ல்
97
 111. புணர்ச்சியின்மகிழ்தல்
புல்
98
 112. நலம்புனைந்துரைத்தல்
ல்
99
 113. காதற்சிறப்புரைத்தல்
கால்
100
 114. நாணுத்துறவுரைத்தல்
நால்
101
 115. அலரறிவுறுத்தல்
ல்
102
 116. பிரிவாற்றாமை
பிமை
103
 117. படர்மெலிந்திரங்கல்
ல்
104
 118. கண்விதுப்பழித்தல்
ல்
105
 119. பசப்புறுபருவரல்
ல்
106
 121. நினைந்தவர்புலம்பல்
நில்
107
 122. கனவுநிலையுரைத்தல்
ல்
108
 123. பொழுதுகண்டிரங்கல்
பொல்
109
 124. உறுப்புநலனழிதல்
ல்
110
 125. நெஞ்சொடுகிளத்தல்
நெல்
111
 126. நிறையழிதல்
நில்
112
 127. அவர்வயின்விதும்பல்
ல்
113
 129. புணர்ச்சிவிதும்பல்
புல்
114
 130. நெஞ்சொடுபுலத்தல்
நெல்
115
 131. புலவி
புவி
116
 132. புலவிநுணுக்கம்
பும்
117
 133. ஊடலுவகை
கை
 பயன்படுத்தப்பட்ட 
எழுத்துக்கள் 
 3112

அட்டவணை கணக்கு சொல்வது என்னவென்றால், 117 முதலெழுத்துக்களைக் கணக்கிட்டால் 31 எழுத்துக்களும், 117 கடையெழுத்துக்களைக் கணக்கிட்டால் 12 எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன... அதனால் இந்த கணக்கியலில், திருக்குறள் எண்ணான ஏழு = 3112 = 43 = (4+3) =  7  என்று வருகிறது...! முதலும் கடையும் சேர்த்துக் கணக்கிட்டால், அதாவது 117+117 = 234 எழுத்துக்களைக் கணக்கிட்டால், 37 எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதாக வருகிறது...! 37 = பகா எண் மற்றும் இதன் மூல எண் ஒன்று (1) ஆகும்...

அடுத்ததாக ஒரேயொரு முறை பயன்படுத்திய எழுத்துக்களைக் கணக்கிடுவோம்... முதலும் கடையும் தனித்தனியே கணக்கிட்டால், 4 முதலெழுத்துக்களும், 2 கடையெழுத்துக்களும் பயன்படுத்தியதாக வருகிறது... (இது சரியில்லையே...!) முதலும் கடையும் சேர்த்துக் கணக்கிட்டால், ஒரேயொரு முறை ஒரேயொரு எழுத்து வருகிறது...! அது  வ...!  அட்டவணையைப் பாருங்கள்; அது லியறிதல் அதிகாரம்...! தாத்தா என்ன இது...? ஏன்...? இதற்கும் கணக்கிற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்...? மேற்கொண்டு கணக்கு செய்ய வேண்டும் என்று வழி சொல்லுமா...? அடுத்த பதிவில் எழுத்துக்களின் கணக்கைச் செய்வோம்... இப்போது சற்றே எழுத்து பேசுவதைப் பேசுவோம்...!
இன்றைய அட்டவணையில் மட்டுமல்ல; 133 அதிகாரங்களில் ஒரேயொரு முறை வரும் ஒரு அதிகாரத்தின் கடையெழுத்து, ஒரேயொரு முறை வேறொரு அதிகாரத்தின் முதலெழுத்தாகவும் வருகிறது...! அவை: அமைச்⇐சு⇒ற்றந்தழால்...! இந்த நுட்பத்தைத் தான் இந்த தொடரின் முதல் பதிவிலேயே கேட்டேன்...! தாத்தா, "ஒரு நாட்டின் அமைச்சரவையானது, சுற்றந்தழால் போல் இருக்க வேண்டும்" என்று ஓரெழுத்து நுட்பத்தில் சொல்லிவிட்டார்... இங்கோ மணிப்பூர் எரிய, பேடி பேசாது, நெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது...! // அமைச்சு அதிகாரத்தைக் குறளின் குரலாக, அதில் முதல் கேள்வியாக 1. தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்...? என்று ஆரம்பித்து ⇝ 10. அற்புதம்ங்க... வாயிலே வடை சுட்ற ஆட்கள் இப்போ பெருகிகிட்டு வர்றாங்க... முதல் கேள்விக்கு இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க...? // என்று முன்பே எழுதி விட்டேன்... வாசிக்காத குடும்பத் தலைமைகள் இணைப்பிற்குச் சென்று பதில் தரலாம்...!

சுற்றந்தழால் ։➖ ஒருவர் தன் சுற்றத்தாரைப் பேணிக் கொண்டு, தன் இடத்திலிருந்து நீங்காமல் இருக்கச் செய்தலைச் சொல்வதே ஆகும்... நட்புச்சுற்றம், உறவுச்சுற்றம், தொழில்முறைச் சுற்றம், வலைப்பூ சுற்றம், எனப் பல சுற்றங்கள், அவரவர் மனத்திற்கேற்ப செயலுக்கேற்ப உண்டு...! இந்த அதிகாரம் நாட்டின் தலைமைக்கு மட்டுமன்றி ஏனையோருக்கும் பொருந்தும்...! பல குடும்பப் பிரிவினைக்குக் காரணமாக இருப்பது ஒப்பீடும், அதனால் செய்யும் ஓரவஞ்சனையும் ஆகும்... அதனால் இன்றைய காலத்தில் கூட்டுக்குடும்பம் 'மறை(ற)ந்து' விட்டதால், இங்குச் சொல்வது தாய், தந்தை, குழந்தைகள் கொண்ட தனிக்குடும்பம்...! எல்லாரையும் ஒரே தன்மை கொண்டவராக வைத்துப் பொதுவாகப் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார் தாத்தா... குடும்பத் தலைமையானது, தனது குழந்தைகளின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்பச் செயல்பட வேண்டும்... அத்துடன் சிறப்புத் தேவைகளை வரிசை அறிந்தும் செய்ய வேண்டும்... இன்றைய மேலாண்மைக் கோட்பாட்டுடன் ஒத்த கருத்தைத் தரும் குறள் : 528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.

வீட்டில் அம்மா, தகுதி திறமை எல்லாம் பார்ப்பதில்லை; அனைத்து குழந்தைகளுக்கும் பொதுநோக்கு தான்; அது அன்பு ஒன்றே... அப்பா என்றாலே பயம், திட்டு, அடி, இது போன்ற உத்தம வில்லன்...! (தேவதைகளைப் பெற்ற அப்பாக்கள், இந்த பட்டியலில் வருவதில்லை...!) // அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் - தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்... இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் - பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்...// அப்படியென்றால் "அன்னைக்கு அறிவு இல்லையா...? தந்தைக்கு அன்பு இல்லையா...?" என்றெல்லாம் நினைப்பு வந்தால், "சிலருக்கு மட்டும் தான் கல்வி" எனும் காலம் முதல் பேச வேண்டி வரும்...! இன்றைக்கு குடும்பத் தலைமை இருவருக்கும் அன்பும் அறிவும் மட்டுமல்ல, தகுதியும் திறமையும் உள்ளது... ஆனாலும் அம்மா, தன் அறிவை மறைத்து அன்பை வெளிப்படுத்துவார்கள்... அப்பா, தன் அன்பை மறைத்து அறிவை வெளிப்படுத்துவார்கள்... உண்மை நிலவரம் என்னவென்றால், தன் குழந்தைகளின் தகுதியும் திறமையும் பற்றி மனைவியிடம் கேட்டுவிட்டு, அதன்பின் குழந்தைகளிடம் 'அறிவுடன்' செயல்பட்டுச் சிறப்புச் செய்வார் அப்பா...! 😊 அம்மா-அப்பா, மனைவி-கணவன், பெண்-ஆண், என்று ஒப்பீடு செய்யும் புல்லறிவாளர்களே... பெண்ணின் பெருந்தக்க யாவுள...? நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வழக்கம் போல சிறப்பு.   அரசியல், சொந்த விருப்பு வெறுப்புகளை சேர்க்காமல் இது போன்ற சிறந்த கட்டுரைகளை அமைத்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. பதிவுக்காக தங்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான பதிவு..
    நுட்பத்திலும் நுட்பம்..

    காலத்திற்கும் பெயர் சொல்லும் பதிவு..

    பதிலளிநீக்கு
  4. புதிய முறையில் திருக்குறள் எழுத்துகள் திறனாய்வு வியப்பூட்டுகிறது. டிடி யின் குறள் புலமை அசாதரணமானது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பதிவு. கணக்கை நம்ப வேண்டும் தான். துல்லியமாக காட்டும். அறிவு தெளிவாகும். அந்த கணக்கை சரியாக போட வேண்டும் இல்லையா?
    பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் பட்டியல் வியப்பை தருகிறது.
    உங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள். என் கணவர் உங்கள் திருக்குறள் ஆராய்ச்சியை படித்து இருந்தால் மிகவும் மகிழ்வார்கள், எனக்கு விளக்கமும் தந்து இருப்பார்கள். என் சந்தேகங்களை அவர்களை கேட்டு தெரிந்து கொண்டு இருப்பேன்.

    பதிலளிநீக்கு
  6. டிடி இன்று அந்த அட்டவணை புரிந்தது.

    அதன் பின் சொல்லியிருக்கும் சுற்றந்தழால்.....உண்மை குடும்பங்களில் ஒப்பீடு, ஓரவஞ்சனை குடுமத்தையே பிரித்துவிடும்.

    பொதுவாகத் தாய் இப்படி எல்லாம் செய்யமாட்டார் தனக்கு 4, 5 குழந்தைகள் இருந்தால் எல்லோரையும் ஒரே போல ட்ரீட் செய்வார் என்று சொல்வது கூட சரியல்ல என்று என் அனுபவங்களில் தோன்றியதுண்டு. தாத்தா சொல்லியிருப்பது போல் குழந்தைகளை அவரவர் திறமைக்கு ஏற்ப ஒப்பீடு செய்யாமல் வளர்க்க வேண்டும். இதுவும் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த என் அனுபவம்.

    டிடி நல்ல பதிவு. புரிந்த பதிவு. ஒரு சில கருத்துகளைத் தவிர்த்திருந்தால் அதன் சிறப்பு இன்னும் கூடும். முன்பும் கூட பல சிறந்த பதிவுகளில் அப்படித் தோன்றியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது புரிகிறது... சில வரிகள் தானாக வந்து விடுகிறது... அறச்சீற்றம்... தவிர்க்க முயல்கிறேன்... நன்றி...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. குறள்களில் அட்டவணையும், முதலெழுத்து, கடையெழுத்து கணக்கிலும் அது 7ஆக ஒத்து வருவதையும் குறிப்பிட்டு விளக்கிய விதமும் சிறப்பு. உங்களைப் போல் திருக்குறள் ஆராய்ச்சி செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே...! உங்கள் திறமை கண்டு எப்போதும் போல் இந்தப்பதிவிலும் வியக்கிறேன்...!

    ஒரு குடும்பத்தில் எப்போதும் முக்கிய. பங்குகளாக இடம் பெறும் அன்பும், அறிவும் போல், தகுதியும், ,திறமையும் சரிசமமாக சேர்ந்து கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டுமென முடித்திருப்பது இன்னமும் சிறப்பு. நல்ல பதிவு. ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. திருக்குறள் குறித்த தங்கள் ஆராய்ச்சி நன்றி. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் திருக்குறளாய்வு தொடரட்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  10. திருக்குறள் பற்றிய தங்களின் ஆராய்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  11. மணிப்பூர் தீயில் கருகுவது யாராலே... தலைமை அப்படி... மாற்றம் வரு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.