திருக்குறள் கணக்கியல் - ஐயனின் அதிகார நுட்பத்திற்கான வலியறிதல் (6)
கடந்த ஒரு ஆண்டு (2022) ஒரு பதிவையும் எழுதவில்லை; செய்தது குறள்களின் கணக்கியல் :- முதல், கடை, முதல்+கடை - இவற்றில் உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து - இவற்றில் முப்பால்வாரியாகவும், இவையே அதிகாரங்களையும் குறள்களையும் இணைத்தும்...! அதிகாரங்களின் கணக்கியல் குறள்களைப் போல் அவ்வளவாகச் செய்யவில்லை...! இவற்றில் சில கட்டமைப்புகளைக் கற்றுக்கொண்டு விட்டால், முக்கியமான கணக்கு : திருக்குறள் கற்றல்... திருக்குறளில் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து, முப்பால் முழுவதும் தேடித் தொகுத்து, அதைக் கணக்கிட்டால் ஏழு (7) வரும்... சரி, இதுவரை அப்படி ஏதேனும் பதிவு உள்ளதா...? எதற்கு...? ஏழு (7) எப்படி வருகிறது என்று கணக்கு செய்வதற்கு...! ஆகா...! மகிழ்ச்சி... இதோ :- ① கொம்பு எழுத்துக்கள் இல்லாத 19 குறள்கள், ② இதழுறல் 5 குறள்கள், ③ இதழகல் 47 குறள்கள், (②,③) இரண்டையும் கணக்கியல் பயிற்சி பதிவுகள் மூலம் குறள்களைக் கண்டுபிடிக்க வேண்டும்...!) ④ திருக்குறளில் நகைச்சுவை தொடர் 26 குறள்கள் (இதில் இன்னும் 3 குறள்கள் வரும்...!)
இதையெல்லாம் எப்படி எழுத்து வடிவில் எழுதுவது என்றே தெரியவில்லை... எழுதினாலும் புரியும்படி எழுத முடியுமா ? அல்லது புரிந்து கொள்ள வாசகர்கள் சுளகு மூலம் கணக்கிடுவார்களா...? அதனால் முதலில் கணக்கியல் பயிற்சி என்று 8 பதிவுகளை எழுதினேன்...! அதன்பின் அதிகாரத்தின் கணக்கியலைத் தொடங்கி எழுதி வருகிறேன்... எண்களாலும், எழுத்துக்களாலும் அதிகார கட்டமைப்பு 16 அதிகாரங்களில், ஏழு (7) வந்தவுடன், அதிகார கணக்கியலை முடித்திருக்கலாம்... குறள்களைப் போல் செய்து பார்க்கலாம் என்று நினைத்து, செய்தது தான் முந்தைய பதிவு...! மாட்டிக்கொள்ளவில்லை, கற்றுக் கொண்டேன்...! அதாவது மீதம் உள்ள (133-16)=117 அதிகாரங்களின் கணக்கியலைச் செய்த போது, முடிவில் கிடைத்தது "வலியறிதல்" அதிகாரம்... அதன் வழியே செல்கிறேன்...!
வலியறிதல் அதிகாரம் என்ன சொல்கிறது..? தனது ஆற்றல் என்னவென்பதை அறிந்து கொள்ளச் சொல்கிறது... அதுவும் எப்படி...? ஒரு செயலைத் தொடங்கும்முன் அதைப்பற்றி அறிய வேண்டியவற்றையெல்லாம் ஆராய்ந்து தெரிந்து புரிந்து கொள்... அதைச் செய்து முடிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறதா? என்று தன்னுடைய வலிமையையும் செயலின் திறத்தையும் எண்ணிப்பார்...! ஆனால் அடியேன் எடுத்திருக்கும் செயலும் எண்ணிப்பார்க்கும் செயல் (கணக்கு) தான்... தாத்தா இத்துடன் விட்டாரா ? இல்லை; யாரேனும் ஒருவர் விரைவில் திருக்குறள் கணக்கியலுக்கு வந்து போட்டியாளர் ஆகவேண்டும்...! அந்த போட்டியாளரின் ஆற்றலையும், தனக்கும் போட்டியாளர்க்கும் துணைபோவார் வலிமையையும், அளந்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் தாத்தா... வருக போட்டியாளர்களே...
துணைவலியும் தூக்கிச் செயல்.
(133-16=)117 அதிகாரங்களின் முந்தைய பதிவை →(நுட்பம் 5)← குறள் போலச் சுருக்கி ஓர் அட்டவணையாக :
கணக்கியல் |
---|
பயன்படுத்தப்பட்ட
எழுத்துக்கள் கடையெழுத்து = 12 முதலெழுத்து = (4) |
மொத்தம் = |
இன்றைய பதிவின் கணக்கியலைத் தொடங்குவோம்... 117 அதிகார எண்களின் கூட்டுத்தொகை என்ன...? 7869 ஆகும்... எப்படி...? 1 முதல் 133 வரை அதிகார எண்களின் கூட்டுத்தொகை 8911 (1) ஆகும்...! (சூத்திரம்: n(n+1) / 2) ஏற்கனவே →நுட்பம் 4← பதிவில், 16 அதிகாரங்களின் கூட்டுத்தொகை 1042 என்று தெரியும்... அதனால் 8911-1042=7869 ஆகும்...! இதன் மூலம் சொல்ல வருவது...? 133 எண்களிலிருந்து, 16 எண்களைத் தேர்வு செய்து, 368 (8) + 674 (8) = 1042 என்று எவ்வாறு கணக்கிட்டார்...? கேள்வி கேட்டால் பதில் தான் சொல்லவேண்டும்... எண்களின் கணக்கு கூட எளிது தான்... ஆனால், அதிகார முதல்+கடை (133+133)=266 எழுத்துக்களிலிருந்து, 5 கடையெழுத்துக்களையும், 11 முதலெழுத்துக்களையும், ஒரேயொரு முறை வரும்படி எப்படிக் கட்டமைத்திருப்பார்...? அவையெல்லாம் தாத்தாவிற்கு மட்டுமே தெரியும்...! நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை... ஒரு கேள்வி :
மேற்காணும் சுருக்கமான அட்டவணையில், கடையெழுத்து 12 என்பதை (8,8) எட்டு, எட்டு ஆகவும், முதலெழுத்து 31 என்பதை (9,9) ஒன்பது, ஒன்பது ஆகவும் பிரிக்க முடியுமா...? நினைத்துப் பார்க்கக்கூட விருப்பமில்லை...! அடுத்துச் செய்யப்போவது என்ன...? அதே தான் கேள்வியாகக் கேட்டேனே...! சரி, 133 எண்ணின் மூல எண் என்ன...? ஏழு (7) ஆகும்... 133-யை எப்படிப் பிரித்தாலும் என்ன வரும்...? இது ஒரு கேள்வியா...? அதே 7 தான் வரும்...! எ.டு. அதிகாரங்கள் : 38 + 70 + 25 = 133 அதே போல் இந்த 117 அதிகாரங்களையும் பிரிக்கப் போகிறேன்... உன் விருப்பத்திற்குப் பிரித்தால் எப்படி...? அப்படியெல்லாம் செய்ய மாட்டேன்... பிறகு எப்படி...? →நுட்பம் 5← பதிவின் அட்டவணையில் 5 அதிகார எழுத்துக்கள், மற்ற அதிகாரங்களின் கடையெழுத்தாகவோ அல்லது முதலெழுத்தாகவோ வந்ததா...? ஆமாம் அது 16 அதிகாரங்கள் வந்தது... ம்... அதைத் தான் கணக்கிடப் போகிறேன்... அப்படியென்றால் மீதம் (133➖16➖16)=101 அதிகாரங்களின் கணக்கு...? அதையும் தான்...! (இப்படி: 16 + 16 + 101 = 133 ) நல்லது, வலியறிதல் வழியைக் கொடுத்து விட்டது போல...! நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
// வருக போட்டியாளர்களே //
பதிலளிநீக்குபோட்டியாளரா... நான் அம்பேல்!
அபார ஆராய்ச்சி. நாள், வாரம், மாத, வருடம் முழுவதும் இதே சிந்தனையில் இருக்கிறீர்களே என்பது தெரிகிறது.
வழக்கம் போல் ஆச்சரியமாக இருக்கிறது ஜி பதிவு.
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன்
எத்தனை ஆராய்ச்சி... திருக்குறளில் மட்டுமே மூழ்கி விட்டீர்கள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குபோட்டியாளரா ஆஆஆ நான் க்ளீன் போல்ட்! டிடி புதிதாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதுவும் அறிவு சார்ந்த விஷயங்கள் அறியும் ஆர்வம் இருந்தாலும் இந்தக் கணக்கியல் புரிவதில் சிரமம் இருக்கிறது டிடி, நேரடி வகுப்பு என்றால் போர்டில் எழுதி விளக்கங்கள் என்று வரும் போது புரியும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎன்றாலும் உங்கள் பதிவிலிருந்து வேறு சில புதியவை கற்க முடிகிறது. இப்பதிவில் வலியறிதல் அதிகாரம். உளவியலில் குழந்தை வளர்ப்பில் சொல்லப்படும் ஒன்று கூடவே வளர்ந்தவர்களின் ஒரு சில பிரச்சனைகளுக்கு இதைத்தான் வலியுறுத்திச் சொல்வதுண்டு. அதற்கான ஆக்கப்பயிற்சிகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கொடுப்பதுண்டு. திருக்குறளில் இருக்கும் இது எனக்கு டக்கென்று உரைக்கவில்லை இதுநாள் வரை. இன்று உங்கள் மூலம் இது உரைத்தது. மிக்க நன்றி டிடி.
கீதா
உங்கள் ஆராய்ச்சி உண்மையாகவே நீங்கள் இதற்காக மேற்கொண்ட ஆராய்ச்சிகள் நீங்கள் சொல்லியிருக்கும் வலியறிதலுக்குப் பொருத்தம்! பாராட்டுகள் டிடி!
பதிலளிநீக்குகீதா
ஓர் ஆண்டு முழுமையும் திருக்குறள் கணக்கியலில் மூழ்கி முத்தெடுத்திருக்கிறீர்கள். நினைத்தாலே வியப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது ஐயா.
பதிலளிநீக்குஉங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் !.போட்டியாளர்கள் வந்து மேலும் உங்கள் கணக்கியல் தொடர வாழ்த்துகள். வலியறிதல் நல்ல வழியை கொடுத்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇது எல்லோருக்கும் ஆகி வரக்கூடியதில்லை..
பதிலளிநீக்குஐயனின் வாழ்த்துகள் தங்களுக்கு என்றும் உண்டு..
சிறப்பு..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. திருக்குறள் ஆராய்ச்சியில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் உங்கள் இத்தனை கண்டுபிடிப்பு தொகுப்பனைத்தையும் ஒரு சேர தொகுத்து ஒரு நூலாக்கினால், பள்ளியில் படிக்கும் மாணாக்கர்களுக்கும், கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கும் நிறைய விதத்தில் பயன்படும். அந்தளவிற்கு அற்புதமான விளக்கங்கள். தாத்தா இப்படியொரு பேரன் கிடைத்தமைக்காக உங்களை வாழ்த்திக் கொண்டேயிருப்பார். எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களுக்கு என்றென்றும் உண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
திருக்குறள் கணித ஆராய்ச்சி பிரமிக்க வைக்கிறது .
பதிலளிநீக்கு