🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் கணக்கியல் - ஐயனின் அதிகார நுட்பத்திற்கான வலியறிதல் (7)

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவில் 117 அதிகாரங்களை எவ்வாறு பிரித்துக் கணக்கிடப் போகிறோம் என்பதை அறிந்தோம்... வலியறிதல் அதிகாரம் கொடுத்த வழிகளைப் பார்ப்போம்... அதற்குமுன் இதுவரை செய்த கணக்கியலைச் சுருக்கமான அட்டவணைகளாக :

( அடைப்புக்குறிக்குள் மூல எண் மற்றும் )

133 அதிகாரங்களில் ஒரேயொரு முறை
வரும் எழுத்துக்களின்
  கணக்கியல்  
கடையெழுத்து = 5 அதிகாரங்கள்

7. மக்கட்பேறு, 74. நாடு, 75. அரண்,
92. வரைவின்மகளிர், 120. தனிப்படர்மிகுதி

அதிகார எண்களின் கூட்டல்தொகை
7+74+75+92+120=
முதலெழுத்து = 11 அதிகாரங்கள்

3. நீத்தார்பெருமை, 23. ஈகை,
36. மெய்யுணர்தல், 42. கேள்வி,
62. ஆள்வினையுடைமை,
65. சொல்வன்மை, 69. தூது,
84. பேதைமை, 94. சூது,
97. மானம், 99. சான்றாண்மை

அதிகார எண்களின் கூட்டல்தொகை
3+23+36+42+62+65+69+84+94+97+99=

  எண்ணென்ப  
மொத்தம் = 368+674=1042 =
=

  ஏனை எழுத்தென்ப  
கடையெழுத்து = 5
முதலெழுத்து = 11
மொத்தம் = =
இவ்விரண்டும்
  கணக்குஎன்ப   வாழும் உயிர்க்கு

மேற்காண்பது திருக்குறள் அதிகார கட்டமைப்பின் முடிவான அட்டவணை : 16 அதிகாரங்கள்... விளக்கமாக: பதிவு 4
மீதம் உள்ள (133-16=)117 அதிகாரங்களின் கணக்கியலை குறள் போலச் சுருக்கி ஓர் அட்டவணையாக :-

117 அதிகாரங்களின்
  கணக்கியல்  
பயன்படுத்தப்பட்ட
எழுத்துக்கள்

கடையெழுத்து = 12
முதலெழுத்து = (4)
மொத்தம் :

இன்றைய பதிவைத் தொடங்குவோம் 117 அதிகாரங்களில், 12 கடையெழுத்துக்களும், 31 முதலெழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது... சரி, இதுவரையில் தான் அவை எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கு; அவற்றை நாம் ஓர் இலக்க எண்ணாக அதாவது மூல எண்ணாக மாற்றி விட்டோம் என்றால், அவை எண்களின் கணக்காக எண்ணிக்கொள்ள வேண்டும் என்பதை மிகவும் நன்றாகப் புரிந்து கொள்வதோடு மறக்கவும் கூடாது...! அடுத்து, இந்த 117 அதிகாரங்களை  16  +  101  என்று பிரிக்கப் போகிறோம்...! அதற்கான காரணம் விளக்கமாக நுட்பம் 5 பதிவு

வ.எண்16 அதிகாரங்கள் மு + க 
1
 1. கடவுள்வாழ்த்து
து
2
 35. துறவு
துவு
3
 39. இறைமாட்சி
சி
4
 44. குற்றங்கடிதல்
குல்
5
 46. சிற்றினஞ்சேராமை
சிமை
6
 53. சுற்றந்தழால்
சுல்
7
 64. அமைச்சு
சு
8
 71. குறிப்பறிதல்
குல்
9
 77. படைமாட்சி
சி
10
 78. படைச்செருக்கு
கு
11
 87. பகைமாட்சி
சி
12
 95. மருந்து
து
13
 96. குடிமை
குமை
14
 103. குடிசெயல்வகை
குகை
15
 110. குறிப்புணர்தல்
குல்
16
 128. குறிப்பறிவுறுத்தல்
குல்
பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள்
 98
முதல்+கடையில் ஒரேயொருமுறை
பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் 
6# 
6# அதிகார எண்களின் 
கூட்டல்தொகை =

வ.எண்101 அதிகாரங்கள் மு + க 
1
 2. வான்சிறப்பு
வாபு
2
 4. அறன்வலியுறுத்தல்
ல்
3
 5. இல்வாழ்க்கை
கை
4
 6. வாழ்க்கைத்துணைநலம்
வாம்
5
 8. அன்புடைமை
மை
6
 9. விருந்தோம்பல்
வில்
7
 10. இனியவைகூறல்
ல்
8
 11. செய்ந்நன்றியறிதல்
செல்
9
 12. நடுவுநிலைமை
மை
10
 13. அடக்கமுடைமை
மை
11
 14. ஒழுக்கமுடைமை
மை
12
 15. பிறனில்விழையாமை
பிமை
13
 16. பொறையுடைமை
பொமை
14
 17. அழுக்காறாமை
மை
15
 18. வெஃகாமை
வெமை
16
 19. புறங்கூறாமை
புமை
17
 20. பயனிலசொல்லாமை
மை
18
 21. தீவினையச்சம்
தீம்
19
 22. ஒப்புரவறிதல்
ல்
20
 24. புகழ்
புழ்
21
 25. அருளுடைமை
மை
22
 26. புலான்மறுத்தல்
புல்
23
 27. தவம்
ம்
24
 28. கூடாவொழுக்கம்
கூம்
25
 29. கள்ளாமை
மை
26
 30. வாய்மை
வாமை
27
 31. வெகுளாமை
வெமை
28
 32. இன்னாசெய்யாமை
மை
29
 33. கொல்லாமை
கொமை
30
 34. நிலையாமை
நிமை
31
 37. அவாவறுத்தல்
ல்
32
 38. ஊழ்
ழ்
33
 40. கல்வி
வி
34
 41. கல்லாமை
மை
35
 43. அறிவுடைமை
மை
36
 45. பெரியாரைத்துணைக்கோடல்
பெல்
37
 47. தெரிந்துசெயல்வகை
தெகை
38
 48. வலியறிதல்
ல்
39
 49. காலமறிதல்
கால்
40
 50. இடனறிதல்
ல்
41
 51. தெரிந்துதெளிதல்
தெல்
42
 52. தெரிந்துவினையாடல்
தெல்
43
 54. பொச்சாவாமை
பொமை
44
 55. செங்கோன்மை
செமை
45
 56. கொடுங்கோன்மை
கொமை
46
 57. வெருவந்தசெய்யாமை
வெமை
47
 58. கண்ணோட்டம்
ம்
48
 59. ஒற்றாடல்
ல்
49
 60. ஊக்கமுடைமை
மை
50
 61. மடியின்மை
மை
51
 63. இடுக்கணழியாமை
மை
52
 66. வினைத்தூய்மை
விமை
53
 67. வினைத்திட்பம்
விம்
54
 68. வினைசெயல்வகை
விகை
55
 70. மன்னரைச்சேர்ந்தொழுகல்
ல்
56
 72. அவையறிதல்
ல்
57
 73. அவையஞ்சாமை
மை
58
 76. பொருள்செயல்வகை
பொகை
59
 79. நட்பு
பு
60
 80. நட்பாராய்தல்
ல்
61
 81. பழைமை
மை
62
 82. தீநட்பு
தீபு
63
 83. கூடாநட்பு
கூபு
64
 85. புல்லறிவாண்மை
புமை
65
 86. இகல்
ல்
66
 88. பகைத்திறந்தெரிதல்
ல்
67
 89. உட்பகை
கை
68
 90. பெரியாரைப்பிழையாமை
பெமை
69
 91. பெண்வழிச்சேறல்
பெல்
70
 93. கள்ளுண்ணாமை
மை
71
 98. பெருமை
பெமை
72
 100. பண்புடைமை
மை
73
 101. நன்றியில்செல்வம்
ம்
74
 102. நாணுடைமை
நாமை
75
 104. உழவு
வு
76
 105. நல்குரவு
வு
77
 106. இரவு
வு
78
 107. இரவச்சம்
ம்
79
 108. கயமை
மை
80
 109. தகையணங்குறுத்தல்
ல்
81
 111. புணர்ச்சியின்மகிழ்தல்
புல்
82
 112. நலம்புனைந்துரைத்தல்
ல்
83
 113. காதற்சிறப்புரைத்தல்
கால்
84
 114. நாணுத்துறவுரைத்தல்
நால்
85
 115. அலரறிவுறுத்தல்
ல்
86
 116. பிரிவாற்றாமை
பிமை
87
 117. படர்மெலிந்திரங்கல்
ல்
88
 118. கண்விதுப்பழித்தல்
ல்
89
 119. பசப்புறுபருவரல்
ல்
90
 121. நினைந்தவர்புலம்பல்
நில்
91
 122. கனவுநிலையுரைத்தல்
ல்
92
 123. பொழுதுகண்டிரங்கல்
பொல்
93
 124. உறுப்புநலனழிதல்
ல்
94
 125. நெஞ்சொடுகிளத்தல்
நெல்
95
 126. நிறையழிதல்
நில்
96
 127. அவர்வயின்விதும்பல்
ல்
97
 129. புணர்ச்சிவிதும்பல்
புல்
98
 130. நெஞ்சொடுபுலத்தல்
நெல்
99
 131. புலவி
புவி
100
 132. புலவிநுணுக்கம்
பும்
101
 133. ஊடலுவகை
கை
பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் 
 278
முதல்+கடையில் ஒரேயொருமுறை
பயன்படுத்தப்பட்ட எழுத்து 
1# 
1#  (வலியறிதல்) அதிகார எண் 
48 

(இவ்வளவு தூரம் வந்தமைக்கு நன்றி...! ஆகியவற்றைக் கவனிப்போம்)

இந்த கணக்கில் வலியறிதல் அதிகாரம் முடிவாக வந்து முடித்து வைக்கிறது...!

117 அதிகாரங்களை  16  +  101  என்று பிரித்ததைத் தொகுத்து, இணைத்துப் பார்த்தோம் என்றால்,
எண்களாலும், எழுத்துக்களாலும், திருக்குறள் அதிகார கட்டமைப்பு ஏழு என்பதை உறுதி செய்வோம்...

  பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள்  
அதிகாரங்கள் →
 16  101 
டையெழுத்து 
 8 
 27 
முதலெழுத்து
 9 
 8 
மொத்தம் 
17 
35 
மூல எண் 
  கட்டமைப்பு :  8+8 = 
 
ஒரேயொருமுறை ( க + மு )
  பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள்  
அதிகாரங்கள் →
 16  101 
எழுத்துக்கள் 
6#1#
  கட்டமைப்பு :  6+1
 
அதிகார எண்களின் 
கூட்டல்தொகை 
அதிகாரங்கள் →
 16  101 
#கூட்டல்தொகை 
33748
மூல எண் 
43
  கட்டமைப்பு :  4+3 =  

ஆகியவற்றில் எழுத்துக்களின் எண்ணிக்கை கணக்கு, மூல எண்ணாக மாற்றப்பட்டு, எண்களின் கணக்காக மாறி, கட்டமைப்பான ஏழு எவ்வாறு எல்லாம் வருகிறது பார்த்தீர்களா...? நன்றி...
வலியறிதல் அதிகாரம் - இரண்டாவது குறள்: 472

ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

செய்து முடிக்கக் கூடியதை அறிந்து, அச்செயலின் திறன்களைத் தெரிந்த பின்பு. அதன் கண்தங்கிச் செல்வார்க்கு முடியாதது ஒன்றும் இல்லை... முக்கிய குறிப்பாக, செயலின் வலிமையும் திறமும் அறிந்திருப்பினும், தம்மால் முடியும் என்ற நம்பிக்கை பெற்றபின்னரும், "பிழை நேர்ந்துவிடக் கூடாது" என்பதால் 'அதன்கண் தங்கி' என்று கவனிக்கச் சொல்கிறார் தாத்தா...! அதேசமயம் மேலாண்மைக் கோட்பாட்டில் சொல்லப்படும் 'வெளியேறும் உத்தி' அதாவது 'பின்வாங்குவது' எனும் சிறந்ததோர் உத்தியையும் சொல்லியுள்ளார் : 476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி யாகி விடும்...! → இதில் உவமானம் உள்ளது; உவமேயம் இல்லை... ஆனால் சொல்லப்படும் பொருள் தெளிவாகவும் ஆழமாயும் மனதில் நிற்கும்...! கடவுளை வணக்கும் போது அல்லது கணக்கைச் செய்து பார்க்கும் போது உணர்வதைப் போல, இக்குறளைப் படிக்கும் போது, சிந்தித்து உணர்ந்து கொள்ளவேண்டும்...!

இதேபோல் பிறிதுமொழிதல் அணியாக உள்ள இன்னொரு குறள்: 475. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்...! வரவுக்கு மேல் செலவு கூடினாலோ, கொஞ்சம் தானே, கொஞ்சம் தானே என்று கடன் வாங்கினாலோ, வெங்கோலன் அரசு வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே போனாலோ, கட்டுப்பாடின்றி பேச்சிலும், உணவை உள்ளே தள்ளுவதற்கும், நாக்கிற்கு அதிக வேலை கொடுத்தாலோ, வீட்டிலும், அலுவலகத்திலும், அதிகாரம் எல்லை மீறினாலோ, தனக்குக் கொடுத்த அதிகாரத்திலிருந்து மீறி, அரசின் மீது அடாவடி கொடிகட்டிப் பறந்தாலோ......கதை முடியும்...! இப்படி பலவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்...
இந்த அதிகாரம் பத்து (10) ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் எனது வலைப்பூ வாழ்வில் வருவது வியப்பைத் தருகிறது...! 2013-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினத்திற்கு, முந்தைய நாள் இரவு 7 மணிக்கு ஓர் எண்ணம்... திருக்குறள் மூலம் உழைப்பாளர் தினத்திற்கேற்ப ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து, ஒரு மணிநேரத்தில் வலியறிதல் அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதிவீட்டேன்... அதன்பின் அரைமணி நேரத்தில் இடையிடையே குறள்களையும் கேட்பொலியையும் இணைத்துவிட்டு, Auto Publish → Logout → Shutdown...! இப்படி எந்த பதிவையும் இவ்வளவு விரைவாக எழுதவில்லை; பதிவை எப்படி எழுதினேன் என்றும் இன்றைக்கு வரை தெரியவில்லை...! 80% அந்த உரையாடல் எனக்கும் எனது தந்தைக்கும் நடந்த காரணத்தால் இருக்குமோ...? நன்றி... அந்தப் பதிவின் இணைப்பு :
என் வலி... தனி வழி...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அரை மணி நேரத்தில் எழுதப்பட்ட பதிவையும் பார்த்து வந்தேன்.  ஒரு விஷயத்தில் தேர்ச்சி இருந்தால் அரை மணி என்ன பத்து நிமிடங்களில் கூட இப்படி எழுதலாம்.  உங்களால் முடியும்.  குறளைப் பொறுத்தவரை அதுதான் உங்கள் ஆரம்பப் பதிவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதலில் குறளின் குரலாக எழுதிய அதிகாரம்:- சொல்வன்மை. Binny Mill, சென்னையில் வேலை பார்த்தபோது, எனது அலுவலகத்தில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பதிவு...

      நீக்கு
  2. வலியறிதல் அதிகாரத்தின் பொருள் சிறப்பு. போன பதிவில் வலியறிதல் பார்த்ததுமே இணையத்தில் குறள்களின் பொருளைத் தெரிந்து கொண்டேன்.

    உங்கள் பதிவையும் வாசித்தேன் டிடி. எளிதாகப் புரிந்தது. வலியறிதல் எல்லோருக்கும் வழிகாட்டும்.

    ஆனால் அதை எல்லோரும் உள்வாங்க வேண்டுமே!

    எனக்குப் புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்றாலும், உங்கள் ஆராய்ச்சியும் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது டிடி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. பதிவு அருமை. எப்படி வாழ வேண்டும் என்பதை அழகாய் சொல்கிறது.
    அளவறிந்து வாழவேண்டும் வாழ்க்கையை. எல்லாவற்றிலும் அளவு முறை வேண்டும்.
    என்பதை பதிவு அழகாய் சொல்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தொகுப்பு மிகுதியான உழைப்பு ஜி

    பழைய வழி சென்று வலி அறிந்து வந்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  5. வழக்கம் போல் வியக்க வைக்கும் ஆராய்ச்சி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.