வாழ்க்கையில் தோல்வியில்லை...! திருக்குறள் அதிகார கடையெழுத்து நுட்பம் (8)
அது என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு முன் எழுதிய 3 பதிவுகள் : அவற்றில், "திருக்குறள் அதிகாரங்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் வழி கடையெழுத்துக்களே !" என்று சொல்லியிருந்தாலும், உள்ளுக்குள் கணக்கு ஓடிக்கொண்டிருந்தது....! இவற்றில் "மற்றவை" பதிவில், ஒருமுறை வந்த கடையெழுத்துக்கள் ஏழு 7 என்று வந்தது தான், மனதில் முதலாகத் தோன்றிய அதிகார கணக்கியல் சிந்தனை...! ஓர் அட்டவணையாக :-
வரிசை எண் | கடையெழுத்து | எண்ணிக்கை |
---|---|---|
1 | ||
2 | ||
3 | ||
4 | ||
5 | ||
6 | ||
7 | ||
முதலெழுத்துக்கள் பதினான்கு (14) வந்தபின், முதல் ➕ கடை இணைத்து நடந்த கணக்கையெல்லாம் கடந்த ஏழு (7) பதிவில் பார்த்து விட்டோம்...! அவற்றின் தலைப்பு உட்பட, அதில் பல அட்டவணைகள் முதலில் கடையெழுத்தின் கணக்கு தான் இருக்கும்... இந்த தொடரின் முதல் பதிவில் ஒரு பள்ளிக்குழந்தை கணக்கான, (7+64+74+75+78+92+120) ஏழு எண்களையும், அதன் கூட்டுத்தொகையும் (510) கொடுத்து, இரண்டு எண்களை நீக்கியபின், 368 வரும்படி செய்ய வேண்டும் என்று, ஆரம்பித்ததோ கணக்கில் தான்...! ஆனால் அந்த எண்கள் அனைத்தும், ஒருமுறை வரும் கடையெழுத்தைக் கொண்ட அதிகார எண்கள்...!
அப்படியென்றால் கடையெழுத்திற்குத் தான் முக்கியம் கொடுத்துள்ளாரா ஐயன்...? அப்படியென்றும் சொல்லமுடியாது... முதலெழுத்திற்கேற்ப கடையெழுத்து நுட்பம் என்றும் சொல்லலாம்...?! அப்படியென்றால் முதலெழுத்திற்கு எதுவும் கணக்கில்லையா...? தாத்தா கூட இப்படி கேள்வி கேட்பாரா என்று தெரியவில்லை... முருகா...! கொஞ்சம் பொறு... கணக்கிடாமல் தாத்தா எதையும் செய்ய மாட்டார்... 133 அதிகாரங்களின் முதலெழுத்துக்களை மட்டும் எடுத்து, முப்பால் வாரியாக பிரித்து, சுளகு பெட்டியில் ஒவ்வொன்றாக இட்டு, ஒரேயொரு முறை பயன்படுத்தப்பட்டிருக்கும் எழுத்துக்களைக் கணக்கிட்டால்.... 17+19+7=43= 7 வரும்...! நன்றி... கடையெழுத்திற்கேற்ப ஒன்று சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது...! அது குறட்+பா :-
114. தக்கார் தகவுஇலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்
இருட்டினில் வாழும் இதயங்களே - கொஞ்சம் குறளுக்கு வாருங்கள்... அறத்தின் உலகம் எப்படி இருக்கும் - என்பதைப் பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்...? - என்பது கேள்வி இல்லை... அவன் எப்படி வாழ்ந்தான்...? - என்பதை உணர்ந்தால் - வாழ்க்கையில் தோல்வியில்லை... வாழ்க்கையில் தோல்வியில்லை...
உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை தான்... ஆனால் இங்குக் கணக்கில் எதிர்பார்த்தது வரவில்லை என்றால், தோல்வி என்று எண்ணக்கூடாதே... தோல்விகள் தானே வெற்றிக்குப் படிக்கட்டுகள்...? கடையெழுத்து ➕ முதலெழுத்து 〓 திருக்குறள் எண் 7 என்று மேலும் சிந்தித்து "எண்ண" வேண்டும்... எண்ணுவதற்கான நேரம் வந்துவிட்டது...! சரி, இதுவரை என்னென்ன ஆய்வுகளை முடித்துள்ளோம்...? ✔፦
133 அதிகாரங்கள் | |||||
ஆய்வு 1 ✔ | |||||
பொருட்பால் காமத்துப்பால் மொத்த எழுத்துக்கள் | 397 (1) 229 (4) 853 (7) | ||||
மு = முதலெழுத்து ⇩ | |||||
ஆய்வு 2 ✔ | |||||
133 அதிகாரங்கள் | க | மு | |||
ஒரேயொரு முறை பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் | 14 | 7 | |||
16 (7) | |||||
அப்பாடா...! முடிந்து விட்டது...! இல்லை இனிமேல் தான் ஆரம்பம்...! என்னது ஆரம்பமா...? ஆம், முப்பாலைப் பள்ளிக்கூடமாகக் கருதி, அதில் முதல் வகுப்பில் இரண்டு பாடங்களைத் தான் முடித்துள்ளோம்...! சரி, எத்தனை பாடங்கள்...? எத்தனை வகுப்புகள்...? இவ்வளவு தான் பாடங்கள் உள்ளது என்று சொல்லத் தெரியவில்லை...! ஆனால் மூன்றே வகுப்புகள் தான்...! இப்போது என்ன செய்ய வேண்டும்...? முதன்முதலாகத் தோன்றிய அதிகார கணக்கியல் சிந்தனைக்கான அட்டவணையைச் சற்றே பார்... அனைத்துமே சரியாகத்தானே உள்ளது...? 133 அதிகாரங்களுக்கும் கடையெழுத்துக்களாக எத்தனை எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார்...? 17 எழுத்துக்கள்... சரி, முதலெழுத்துக்களாக எத்தனை எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளார்...? ஓர் அட்டவணையைப் போட்டு விடுகிறேன்... போடு, அது தான் இரண்டாம் வகுப்பின் முதல் பாடம்...!
ஆய்வு 3 ? | ||||
133 அதிகாரங்கள் | க | மு | ||
கடையும் முதலும் - மொத்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் | 133 17 | 133 42 | ||
53 (8) | ||||
என்ன இது...? முதலும் கடையும் சேர்த்து 52, மூல எண் ஏழு (7) வருமென்று நினைத்தால், 53 (8) அல்லவா வருகிறது...? அதானே...! முதலும் கடையும் தான் முப்பாலின் கட்டமைப்பு என்று சொல்லியிருக்கிறோம்...! ஆமாம், அதுவும் ஏழில் முடியும் என்றோம்... என்ன செய்வது...? பதட்டப்பட்டால் கணக்கே நம்மை வெறுக்கும்...! குழப்பமாக இருக்கிறதே.... ஆனால் அதில் பதில் இருக்கிறதே...! என்ன அது...? இதுவரை செய்த ஆய்வுகள் என்ன...? கணக்கியல்... கொஞ்சம் விளக்கமாகச் சொல்... 120 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திய 853 அதிகார மொத்த எழுத்துக்கள் - மூன்று பதிவுகள்... அடுத்ததாக அதிகார முதல்+கடை (133+133)=266 எழுத்துக்களில், பயன்படுத்திய 53 எழுத்துக்களில் எட்டாவது பதிவாக, (8) எட்டு என்று ஆய்வு முடிந்துள்ளது...! அதெல்லாம் சரி, கதையா கேட்டேன்...? அதிகாரங்களின் கணக்கியல் என்று சொல்ல வேண்டும்... அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து விட்டதா...? இல்லை... இன்னொரு (8) எட்டைக் குறள்களில் எட்டிப்பிடி...! ஓ...! இப்போது தான் பதிவின் படம் "திருக்குறள் கணக்கு" புரிகிறது...! அதன் அடுத்துள்ள ஓரெழுத்து தகவல் நண்பர்களுக்காக :-
இரண்டாம் வகுப்பிற்குச் செல்லப்போகும்... அதாவது, இதுவரை செய்த அதிகாரங்களின் கணக்கியலைப் போலவே, குறள்களின் கணக்கியலைச் செய்யப்போகும் நண்பர்களே : மூன்று ஆண்டுகளுக்கு முன், ஐயத்துடனும் குழப்பத்துடனும் எழுதிய
669. துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை
முடிவு எப்படியும் ஏழு தான்... அதன் மகிழ்வே தனி...! ஆனால் அதை அடைவதற்கு எத்தகைய இடையூறுகளையும் ஊக்கமுடைமையால் உடைத்து, மனத்திண்மையுடன், கணக்கு உத்திகளின் வினைத்திட்பத்துடன் செய்க...! நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
விரிவான, நிதானமான ஆராய்ச்சி.
பதிலளிநீக்குவழக்கம் போல தங்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது ஜி
பதிலளிநீக்குமுழுவதும் வாசித்தேன். ஒரு சிறிய சிந்தனை, அதைச் செயல்படுத்த உந்தித் தள்ளிச் செய்ய வைத்து அது வியப்பாகி, முடிவு கிட்டும் போது நிச்சயமாக மகிழ்வு அதைச் சொல்ல இயலாதுதான்....ஒவ்வொன்றிலிருந்தும் மற்றொன்றிற்குச் சென்று குறள் கற்க உதவும் ஆராய்ச்சி, விரிவாகச் செய்திருக்கீங்க டிடி. நான் வியக்க முடிகிறது போல் புரிந்து கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும். இதிலேயே ஆழ்ந்தால் மட்டுமே முடியும். உங்கள் மூளைத் திறனுக்குச் சபாஷ்! பாராட்டுகள் டிடி!
பதிலளிநீக்குகீதா
மிக அருமையான பதிவு. உங்களின் உழைப்பு , ஆழ்ந்த அறிவு வியக்க வைக்கிறது.
பதிலளிநீக்குமனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமில்லை, எப்படி வாழ்ந்தான் என்பதுதான் போற்றப்படும்.
திருக்குறள் அறிவை உங்கள் பதிவை படித்து வளர்த்து கொண்டால் உங்களுடன் பயணம் செய்வது சுலபம்.
உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு பாடம் எடுக்க அழைக்க வேண்டும் அந்த என் விருப்பம் எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை. கூடிய விரைவில் நீங்கள் அதை செயல் படுத்த வேண்டும். குழந்தைகள் எளிதாக புரிந்து கொள்வார்கள் எங்களை மாதிரி வயதானவர்களைவிட.
அருமையான பதிவு..
பதிலளிநீக்குஎத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான்!.. - நல்ல மேற்கோள்..
காலத்திற்கும் நின்று பேசுகின்ற மாதிரி
சிறப்பான பதிவு..
திருக்குறளின் அடிப்படையே கணக்கீடுதான் போல. அதனால்தான் அய்யனே "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப" என சூளுரைத்தார் போலும்.
பதிலளிநீக்குவழக்கம் போல் பிரமிக்க வைக்கும் திருக்குறள் ஆராய்ச்சி
பதிலளிநீக்கு