திருக்குறள் கணக்கியல் - ஐயனின் அதிகார நுட்பத்திற்கான வலியறிதல் (7)

(↓ அடைப்புக்குறிக்குள் மூல எண் மற்றும் ↓)
வரும் எழுத்துக்களின் கணக்கியல் |
---|
கடையெழுத்து = 5 அதிகாரங்கள் 7. மக்கட்பேறு, 74. நாடு, 75. அரண், 92. வரைவின்மகளிர், 120. தனிப்படர்மிகுதி அதிகார எண்களின் கூட்டல்தொகை 7+74+75+92+120= |
முதலெழுத்து = 11 அதிகாரங்கள் 3. நீத்தார்பெருமை, 23. ஈகை, 36. மெய்யுணர்தல், 42. கேள்வி, 62. ஆள்வினையுடைமை, 65. சொல்வன்மை, 69. தூது, 84. பேதைமை, 94. சூது, 97. மானம், 99. சான்றாண்மை அதிகார எண்களின் கூட்டல்தொகை 3+23+36+42+62+65+69+84+94+97+99= |
எண்ணென்ப மொத்தம் = 368+674=1042 = ➕ = ஏனை எழுத்தென்ப கடையெழுத்து = 5 முதலெழுத்து = 11 மொத்தம் = ➕ = |
இவ்விரண்டும் கணக்குஎன்ப வாழும் உயிர்க்கு |
மீதம் உள்ள (133-16=)117 அதிகாரங்களின் கணக்கியலை குறள் போலச் சுருக்கி ஓர் அட்டவணையாக :-
கணக்கியல் |
---|
பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் கடையெழுத்து = 12 முதலெழுத்து = (4) |
மொத்தம் : |
திருக்குறள் எண்ணான ஏழு, (7) எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தான் மேலே பார்க்கிறோம்... ஒரேயொரு முறை வரும் முதலெழுத்தைக் கொண்ட துறவு, சிற்றினஞ்சேராமை, சுற்றந்தழால் ஆகிய அதிகாரங்களும், ஒரேயொரு முறை வரும் கடையெழுத்தைக் கொண்ட அமைச்சு, படைச்செருக்கு ஆகிய அதிகாரங்களும், சுருக்கமாக : து, சி, சு, சு, கு - ஆகிய 5 அதிகாரங்களும் அல்லது 5 எழுத்துக்களும், எவ்வாறு மற்ற அதிகாரங்களில் முதல் அல்லது கடை எழுத்தாகவோ இருக்கும் நுட்பத்தை, →பதிவு 5←-ல் முதல் அட்டவணையில் 16 அதிகாரங்களில் உள்ளதை பார்த்தோம்... அதை 16 + 101 என்று பிரிக்கப் போகிறோம்...!
வ.எண் | 16 அதிகாரங்கள் | மு + க | |
---|---|---|---|
1 | க | து | |
2 | து | வு | |
3 | இ | சி | |
4 | கு | ல் | |
5 | சி | மை | |
6 | சு | ல் | |
7 | அ | சு | |
8 | கு | ல் | |
9 | ப | சி | |
10 | ப | கு | |
11 | ப | சி | |
12 | ம | து | |
13 | கு | மை | |
14 | கு | கை | |
15 | கு | ல் | |
16 | கு | ல் | |
9 | 8 | ||
6# | |||
வ.எண் | 101 அதிகாரங்கள் | மு + க | |
---|---|---|---|
1 | வா | பு | |
2 | அ | ல் | |
3 | இ | கை | |
4 | வா | ம் | |
5 | அ | மை | |
6 | வி | ல் | |
7 | இ | ல் | |
8 | செ | ல் | |
9 | ந | மை | |
10 | அ | மை | |
11 | ஒ | மை | |
12 | பி | மை | |
13 | பொ | மை | |
14 | அ | மை | |
15 | வெ | மை | |
16 | பு | மை | |
17 | ப | மை | |
18 | தீ | ம் | |
19 | ஒ | ல் | |
20 | பு | ழ் | |
21 | அ | மை | |
22 | பு | ல் | |
23 | த | ம் | |
24 | கூ | ம் | |
25 | க | மை | |
26 | வா | மை | |
27 | வெ | மை | |
28 | இ | மை | |
29 | கொ | மை | |
30 | நி | மை | |
31 | அ | ல் | |
32 | ஊ | ழ் | |
33 | க | வி | |
34 | க | மை | |
35 | அ | மை | |
36 | பெ | ல் | |
37 | தெ | கை | |
38 | வ | ல் | |
39 | கா | ல் | |
40 | இ | ல் | |
41 | தெ | ல் | |
42 | தெ | ல் | |
43 | பொ | மை | |
44 | செ | மை | |
45 | கொ | மை | |
46 | வெ | மை | |
47 | க | ம் | |
48 | ஒ | ல் | |
49 | ஊ | மை | |
50 | ம | மை | |
51 | இ | மை | |
52 | வி | மை | |
53 | வி | ம் | |
54 | வி | கை | |
55 | ம | ல் | |
56 | அ | ல் | |
57 | அ | மை | |
58 | பொ | கை | |
59 | ந | பு | |
60 | ந | ல் | |
61 | ப | மை | |
62 | தீ | பு | |
63 | கூ | பு | |
64 | பு | மை | |
65 | இ | ல் | |
66 | ப | ல் | |
67 | உ | கை | |
68 | பெ | மை | |
69 | பெ | ல் | |
70 | க | மை | |
71 | பெ | மை | |
72 | ப | மை | |
73 | ந | ம் | |
74 | நா | மை | |
75 | உ | வு | |
76 | ந | வு | |
77 | இ | வு | |
78 | இ | ம் | |
79 | க | மை | |
80 | த | ல் | |
81 | பு | ல் | |
82 | ந | ல் | |
83 | கா | ல் | |
84 | நா | ல் | |
85 | அ | ல் | |
86 | பி | மை | |
87 | ப | ல் | |
88 | க | ல் | |
89 | ப | ல் | |
90 | நி | ல் | |
91 | க | ல் | |
92 | பொ | ல் | |
93 | உ | ல் | |
94 | நெ | ல் | |
95 | நி | ல் | |
96 | அ | ல் | |
97 | பு | ல் | |
98 | நெ | ல் | |
99 | பு | வி | |
100 | பு | ம் | |
101 | ஊ | கை | |
27 | 8 | ||
1# | |||
48 |
இந்த கணக்கில் வலியறிதல் அதிகாரம் முடிவாக வந்து முடித்து வைக்கிறது...!
117 அதிகாரங்களை 16 + 101 என்று பிரித்ததைத் தொகுத்து, இணைத்துப் பார்த்தோம் என்றால்,
எண்களாலும், எழுத்துக்களாலும், திருக்குறள் அதிகார கட்டமைப்பு ஏழு என்பதை உறுதி செய்வோம்...
① பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் | ||||
16 | 101 | |||
---|---|---|---|---|
② ஒரேயொருமுறை ( க + மு ) பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் | ||||
16 | 101 | |||
6# | 1# | |||
③ அதிகார எண்களின் கூட்டல்தொகை | ||||
16 | 101 | |||
337 | 48 | |||
4 | 3 | |||
வலியறிதல் அதிகாரம் - இரண்டாவது குறள்: 472
ஒல்வது அறிவது அறிந்துஅதன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
செய்து முடிக்கக் கூடியதை அறிந்து, அச்செயலின் திறன்களைத் தெரிந்த பின்பு. அதன் கண்தங்கிச் செல்வார்க்கு முடியாதது ஒன்றும் இல்லை... முக்கிய குறிப்பாக, செயலின் வலிமையும் திறமும் அறிந்திருப்பினும், தம்மால் முடியும் என்ற நம்பிக்கை பெற்றபின்னரும், "பிழை நேர்ந்துவிடக் கூடாது" என்பதால் 'அதன்கண் தங்கி' என்று கவனிக்கச் சொல்கிறார் தாத்தா...! அதேசமயம் மேலாண்மைக் கோட்பாட்டில் சொல்லப்படும் 'வெளியேறும் உத்தி' அதாவது 'பின்வாங்குவது' எனும் சிறந்ததோர் உத்தியையும் சொல்லியுள்ளார் : 476. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி யாகி விடும்...! → இதில் உவமானம் உள்ளது; உவமேயம் இல்லை... ஆனால் சொல்லப்படும் பொருள் தெளிவாகவும் ஆழமாயும் மனதில் நிற்கும்...! கடவுளை வணக்கும் போது அல்லது கணக்கைச் செய்து பார்க்கும் போது உணர்வதைப் போல, இக்குறளைப் படிக்கும் போது, சிந்தித்து உணர்ந்து கொள்ளவேண்டும்...!
இதேபோல் பிறிதுமொழிதல் அணியாக உள்ள இன்னொரு குறள்: 475. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்...! வரவுக்கு மேல் செலவு கூடினாலோ, கொஞ்சம் தானே, கொஞ்சம் தானே என்று கடன் வாங்கினாலோ, வெங்கோலன் அரசு வரிச்சுமையை ஏற்றிக்கொண்டே போனாலோ, கட்டுப்பாடின்றி பேச்சிலும், உணவை உள்ளே தள்ளுவதற்கும், நாக்கிற்கு அதிக வேலை கொடுத்தாலோ, வீட்டிலும், அலுவலகத்திலும், அதிகாரம் எல்லை மீறினாலோ, தனக்குக் கொடுத்த அதிகாரத்திலிருந்து மீறி, அரசின் மீது அடாவடி கொடிகட்டிப் பறந்தாலோ......கதை முடியும்...! இப்படி பலவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்...
இந்த அதிகாரம் பத்து (10) ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் எனது வலைப்பூ வாழ்வில் வருவது வியப்பைத் தருகிறது...! 2013-ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் உழைப்பாளர் தினத்திற்கு, முந்தைய நாள் இரவு 7 மணிக்கு ஓர் எண்ணம்... திருக்குறள் மூலம் உழைப்பாளர் தினத்திற்கேற்ப ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து, ஒரு மணிநேரத்தில் வலியறிதல் அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதிவீட்டேன்... அதன்பின் அரைமணி நேரத்தில் இடையிடையே குறள்களையும் கேட்பொலியையும் இணைத்துவிட்டு, Auto Publish → Logout → Shutdown...! இப்படி எந்த பதிவையும் இவ்வளவு விரைவாக எழுதவில்லை; பதிவை எப்படி எழுதினேன் என்றும் இன்றைக்கு வரை தெரியவில்லை...! 80% அந்த உரையாடல் எனக்கும் எனது தந்தைக்கும் நடந்த காரணத்தால் இருக்குமோ...? நன்றி... அந்தப் பதிவின் இணைப்பு :

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
அரை மணி நேரத்தில் எழுதப்பட்ட பதிவையும் பார்த்து வந்தேன். ஒரு விஷயத்தில் தேர்ச்சி இருந்தால் அரை மணி என்ன பத்து நிமிடங்களில் கூட இப்படி எழுதலாம். உங்களால் முடியும். குறளைப் பொறுத்தவரை அதுதான் உங்கள் ஆரம்பப் பதிவா?
பதிலளிநீக்குமுதன் முதலில் குறளின் குரலாக எழுதிய அதிகாரம்:- சொல்வன்மை. Binny Mill, சென்னையில் வேலை பார்த்தபோது, எனது அலுவலகத்தில் நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதிய பதிவு...
நீக்குவலியறிதல் அதிகாரத்தின் பொருள் சிறப்பு. போன பதிவில் வலியறிதல் பார்த்ததுமே இணையத்தில் குறள்களின் பொருளைத் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஉங்கள் பதிவையும் வாசித்தேன் டிடி. எளிதாகப் புரிந்தது. வலியறிதல் எல்லோருக்கும் வழிகாட்டும்.
ஆனால் அதை எல்லோரும் உள்வாங்க வேண்டுமே!
எனக்குப் புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்றாலும், உங்கள் ஆராய்ச்சியும் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது டிடி.
கீதா
பதிவு அருமை. எப்படி வாழ வேண்டும் என்பதை அழகாய் சொல்கிறது.
பதிலளிநீக்குஅளவறிந்து வாழவேண்டும் வாழ்க்கையை. எல்லாவற்றிலும் அளவு முறை வேண்டும்.
என்பதை பதிவு அழகாய் சொல்கிறது. தொடருங்கள் வாழ்த்துக்கள்!
சிறப்பான தொகுப்பு மிகுதியான உழைப்பு ஜி
பதிலளிநீக்குபழைய வழி சென்று வலி அறிந்து வந்தேன் ஜி
வழக்கம் போல் வியக்க வைக்கும் ஆராய்ச்சி
பதிலளிநீக்கு