🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எண்ணிய எண்ணியாங்கு எய்து...

அனைவருக்கும் வணக்கம்... அதிகார கணக்கியலில் முதலில் நாம் அதன் பாட வேறுபாடுகளில் தான் தொடங்கினோம்... இணைப்பு


திருக்குறளுக்கு உரை எழுதிய மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை, பழைய உரையாசிரியர்கள் பத்து பேரும், திருக்குறளின் முதல் அதிகாரத்தின் பெயர் கடவுள் வாழ்த்து என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை... ஆனால் அதன்பின் பல தமிழ் அறிஞர்கள் கூறியவற்றை ஏற்கவில்லை... மணக்குடவர் : உரையின்படி, ஈகையுடைமை, புகழுடைமை, தவமுடைமை, வாய்மையுடைமை, துறவுடைமை, குடி, பசப்புறுதல் ஆகியவற்றையும் ஏற்றுக்கொள்ளவில்லை... கவனிக்க : ஏற்றுக்கொண்டு பலவிதமாகக் கணக்குகள் செய்தபின் தான் இவற்றை ஏற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்... பரிமேலழகர் உரையின்படி ஏழாவது (7) அதிகாரம் புதல்வரைப் பெறுதல்மக்கட்பேறு → இதன்மூலம் முதலெழுத்து (➕) கடையெழுத்து கணக்குகள் மாறும் என்பதைக் கவனித்து, அதற்கான பல கணக்குகளைச் செய்து மக்கட்பேறு தான் சரி என்றும், மூடத்தனமான மத கருத்துக்களுக்கு திருக்குறளில் இடமில்லை என்றும் உறுதிப்படுத்தி விட்டோம்...

காளிங்கர் உரையின்படி, குறிப்புணர்தல், புணர்ச்சியின்மகிழ்தல், கண்விதுப்பழித்தல், ஆகியவற்றைத் தகுந்த சான்றுகளோடும், கணக்குகள் மூலமும் உறுதிப்படுத்தி விட்டோம்... இதன்மூலம் முதலெழுத்து, கடையெழுத்து மாறாது என்பதையும், அதனால் அதன் கணக்குகளும் மாறாது என்பதைக் கவனிக்க வேண்டும்... பெரியாரைப்பிழையாமை அதிகாரத்தில் 892. பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும். ഽ 896. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார், ஆகிய இரண்டு குறள்களில் பெரியார் வருகிறார்... அடுத்ததாக அவர்வயின்விதும்பல் : விதும்பல் என்றால் விரைதல் என்று பொருள் தரும்... பிரிவின் கண் தொலைவு சென்ற கணவன் திரும்பிவரும் நாள் வந்துவிட்டது... துயரத்திலிருந்த மனைவிக்குக் கணவனை விரைவில் காண வேண்டும்... அவர்வயின்விரும்பல் : மேலே சொன்னது போலவே, கணவனின் வரவை விரும்புகிறார்...

மேலும் காளிங்கர் உரையின்படி, 90. பெரியாரைப்பிழையாமை → பெரியார்ப்பிழையாமை, 127. அவர்வயின்விதும்பல் → அவர்வயின்விரும்பல் ஆகிய இரண்டு அதிகாரங்களும் பாட வேறுபாடுகளில் மீதம் உள்ளது... இரண்டிலும் வேறுபாடு ஓரெழுத்து மட்டுமே... இதனால் முதலெழுத்து (➕) கடையெழுத்து கணக்குகள் மூலமும், ஓரெழுத்து பதிலாக இன்னொரு ஓரெழுத்து வந்துவிடுவதால், அதிகார மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை மூலமும் "எது சரி...?' என்பதையும் சொல்லமுடியாது... சொற்களின் இடையில் வரும் இந்த பாட வேறுபாட்டை எப்படித் தீர்வு காண்பது...?
என்ன செய்யலாம்...? அவ்வளவு தான் அப்படியே விட்டுவிட வேண்டியது தான்... இதெல்லாம் ஒரு குறையா...? அடேய், மடி கொண்ட மடப்பயலே... செய்வது கணக்கு... ஆமாயில்லே...?! கணக்கு தேர்வில் ஒரு எண் தவறாகப் போனாலும் மதிப்பெண் கிடைக்காது தான்... ஆனாலும் இதில் பெரியாரைப் ➡ பெரியார்ப் :- உயிர்மெய்யெழுத்திற்குப் பதிலாக மெய்யெழுத்து வருகிறது... இதில் எப்படி? எவ்வாறு? என்ன? கணக்கு செய்வது...? உன் எண்ணத்திலேயே பதில் இருக்கிறது... தலையும் புரியலை... காலும் புரியலை... ம்... அதேதான்... நீ சொன்ன தலைப்பில் பதிவு மட்டும் போடத் தெரியுது...?! அப்பதிவில் "உயிருமில்லை, மெய்யுமில்லை, உயிர்மெய் மட்டும் உள்ள குறள்களைச் சொல்" என்று வாசுகி பாட்டியும் கேள்வி கேட்டார்கள்... அதேபோல உயிருமில்லை, மெய்யுமில்லை, உயிர்மெய் மட்டும் உள்ள அதிகாரங்கள் இருக்கா...? இல்லையா...? சரி புரியுது, மெய்யெழுத்து கொண்ட அதிகாரங்களின் கணக்கியல் செய்கிறேன்... அடுத்து, விதும்பல் - விரும்பல் எப்படி...?

இது அதைவிட எளிது... என்னது...? எண்ணியவர் எண்ணும் செயலின்மீது உறுதியுள்ளவராக இருந்தால், எண்ணிய செயல்களை எண்ணியவாறே அடைவார்கள்...! 666. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் - வினைத்திட்பம் புரிகிறது... ஆல் பதிவில் "ல்" அதிகாரங்களை வகைவகையாக பிரித்தோம் அல்லவா...? ஆம் 27 வகைகள் வந்தது... இப்போது விதும்பல் என்றால், 129. புணர்ச்சிவிதும்பல் என்று உள்ளதால், விதும்பல் வகையில் 2 அதிகாரங்கள் ஆகி விடும்... விரும்பல் என்றால், புதிய ஒருவகை உருவாகி 28 வகைகள் ஆகிவிடும்... அதிகாரங்களின் கடையெழுத்தை வைத்து, "மை" என்று முடியும் 44 அதிகாரங்களை, ஆமை 19, உடைமை 10 என்றும், பிற மை 15 என்பதையும் வகைகளாகப் பிரித்து, "ல்" என்று முடியும் 44 அதிகாரங்களையும் 28 வகைகளாகப் பிரித்து, மற்ற 45 அதிகாரங்களையும் வகைகளாகப் பிரித்து, (44+44+45=133) மொத்தமாகக் கணக்கிட்டுப் பார்த்ததில், "ல்" வகையானது 28 அதிகாரங்கள் தான் வந்தது...!

அப்படி வரக்கூடாதே...! ஏழு (7) என்று வந்தவுடன், இது தான் முடிவு என்று முடிவிற்கு வந்தேன்...! எவ்விதமாகச் செய்தாலும் சரியாகத் தான் வர வேண்டும்...! இப்போது என்ன விதம் செய்யவேண்டும்...? அதிகாரங்களின் முதலெழுத்து கணக்கு...! எப்படி...? அது எப்படி அல்ல, எவ்வாறு...? :- உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து வாரியாக... அதனால் விதும்பலா ? - விரும்பலா ? என்று தெரிந்து விடுமா...? கணக்கில் ஐயம் வந்தால் சொல்லிக் கொடுக்கலாம்... ஆனால் சலிப்பும் சோம்பலும் வந்தால்...? கணக்கிற்குச் சரிப்பட்டு வரமாட்டேனோ...? அதை வேறு சொல்ல வேண்டுமோ...? சரி, கணக்கைச் செய்து, எது சரி என்பதை உறுதி செய்கிறேன்... அடைய நினைத்ததை எண்ணிக்கொண்டே இருந்தால், எண்ணியதை எளிதாகவே எய்திவிடலாம்... ஓகோ...! பொச்சாவாமை : 540. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின் - கணக்கைப் பொறுத்தமட்டில், "நினைத்ததை நினைத்தல் சோர்வு நீக்கும் மருந்து..." அடுத்த ஒரு முன்னோட்டம் முடிந்தது...! நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வித்தியாசங்களுக்கு சொல்லப்பட்டுள்ள விளக்கங்கள் அருமை. விதும்பல், விரும்பல், பெரியார், பெரியாரை

    இந்த ர், ரை இன்னும் சரியாய்ச் சொல்லப் படவிலையோ... முன்னோட்டம்தானே.. அடுத்த பதிவு பார்த்தால் கொஞ்சம் விளங்கும்!

    பதிலளிநீக்கு
  2. தங்களது குறள் ஆய்வு மேலும் சிறக்க வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  3. நினைத்ததை நினைத்தல் சோர்வு நீங்கும் மருந்து என்பது உண்மைதான்.
    உங்களுக்கு திருக்குறளை நினைத்து கொண்டு ஆய்வு செய்து கொண்டே இருந்தால் சோர்வு என்பது இருக்காது என்பது தெரிகிறது. சார் இருந்து இருந்தால் உங்களிடம் கலந்துரையாடி இருப்பார்கள். உங்கள் பதிவை படித்து தமிழ் ஆசிரியர்கள் யாரும் உங்களிடம் உரையாடி இருக்கிறார்களா? உங்கள் பதிவுகள் பொக்கிஷங்கள். அடுத்த தலைமுறையினர் இதை படித்து பயன் பெறுவர்.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் ஆசிரியர்கள் கணக்கு என்றால், சற்றே தயக்கம் காட்டுகிறார்கள் அம்மா...

      நீக்கு
  4. முதல் விளக்கம் மக்கட்பேறு அருமை. புரிந்தது.

    அடுத்தாப்ல ர், ரை, ரு, து - பாட பேதம் இருப்பதால் இனிதான் விளக்கம் சரியா வருமோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதும்பல் - விரும்பல் வேறுபாடு கணக்கியல் எளிது... அடுத்த பதிவில் பார்ப்போம்...

      நீக்கு
  5. குறள் ஆய்வு மேலும் சிறக்க வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. தங்களது இவ்விதமான குறள் ஆராய்ச்சிகள், தங்களது திறமையை பறைசாற்றுகின்றன. மேலும் இதில் சிறந்து விளங்க மனப்பூர்வமான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.