திருக்குறள் ① உயிரெழுத்து அதிகாரங்கள் : 33 (பகுதி 2/3) விதும்பல் ✔
படத்தில் பகுதி 2-யை கவனித்தால், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை என்றாலும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணிக்கை என்றாலும், திருக்குறள் எண்ணான ஏழு (7) வரும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது...! சரி, இதே போல் மீதமுள்ள உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் 100 அதிகாரங்களின் முதல் + கடை கணக்கியலைச் செய்வோம்... கணக்கிடத் தேவையான எழுத்துக்களைக் கொடுத்து விட்டேன்... முந்தைய பதிவின்படி செய்யவும்...
133 அதிகாரங்கள் | |||||
33 அதிகாரங்கள் | 100 அதிகாரங்கள் | ||||
உயிரெழுத்தில் தொடங்குபவை |
உயிர்மெய்யெழுத்தில் தொடங்குபவை | ||||
பயன்படுத்திய எழுத்துக்கள் |
பயன்படுத்திய எழுத்துக்கள் | ||||
முதல் | கடை | முதல் ➕ கடை |
முதல் | கடை | முதல் ➕ கடை |
7 | 9 | 16 | 35 | 15 | 45 |
ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் |
ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் | ||||
2 | 5 | 7 | 12 | 6 | 15 |
ஒப்பீடு செய்து பார்த்து, எண்களையும் அதன் பின்புறத்தையும் வண்ணமிட்டுள்ளேன்... அவற்றைக் கூட்டினால் ஏழு (7) வரும்...! அடுத்து 127-வது அதிகாரம் அவர்வயின்விதும்பல் / அவர்வயின்விரும்பல் - எது சரி...? என்பதை உறுதி செய்யப்போகிறோம்...! முந்தைய பதிவில் உயிரெழுத்தில் தொடங்கும் 33 அதிகாரங்களின், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டபோது ഽഽ 'து', 'ரு' ஆகிய இரண்டும் உள்ளதை உள்ளத்தில் சேமித்துக் கொள்ளவும்...! ഽഽ என்றேன்... து எனும் எழுத்து வருவதற்குக் காரணம்...? = 127.அவர்வயின்விதும்பல் அதிகாரம் (என்று தான் கணக்கிட்டோம்...) ரு எனும் எழுத்து வருவதற்குக் காரணம்...? = 25.அருளுடைமை அதிகாரம்...! சரி, 33 அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 70 வந்தது... இது 69 என்று மாறலாம்...? எப்படி...? ஒருவேளை விரும்பல் என்று கணக்கிட்டிருந்தால் மாறும்...! ஏனெனில் து எனும் எழுத்து, அவர்வயின்விதும்பல் அதிகாரத்தில் மட்டுமே வருகிறது...
சிறிது மாற்றிச் சிந்திப்போம்... 70 அல்லது 69 என்று எதுவேண்டுமானாலும் வரட்டும்... சற்றுமுன் பகுதி 2 (முதல்+கடை) கணக்கைச் செய்து ஒப்பீடு செய்தோம் அல்லவா...? அதே போல் பகுதி 1 (மீதமுள்ள அதிகாரங்கள் = 100) செய்து ஒப்பீடும் செய்து பார்க்கப்போகிறோம்... 33 அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 70 என்பது சரியென்றால், 100 அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 108 வரவேண்டும்... ஏன்...? அப்போது தான் 70+108=178= மூல எண் = ஏழு (7) வரும்... ஒருவேளை இங்கிட்டு 69 என்பது சரியென்றால், அங்கிட்டு 109 என்று வரவேண்டும்... அத்துடன் 127.அவர்வயின்விரும்பல் என்பதே சரி எனலாம்... என்ன வரும் என்று ஆவலாய் இருக்கிறது அல்லவா....? வாங்க... பகுதி 1-க்கான மீதமுள்ள 100 அதிகாரங்களைத் தருகிறேன்... முந்தைய பதிவின்படி செய்யவும்...
தொகுப்பு ① உயிரெழுத்தில் தொடங்கும் அதிகாரங்கள் | தொகுப்பு ② உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் அதிகாரங்கள் | ||||||
33 | 7 | 9 | 194 | 100 | 35 | 15 | 659 |
16 | 70 | 45 | 108 | ||||
2 | 5 | 30 | 12 | 6 | 18 | ||
7 | 15 |
உயிரெழுத்தில் தொடங்கும் 33 அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் ( 70 ), உயிர்மெய்யெழுத்தின் 100 அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையையும் ( 108 ), கூட்டினால் ஏழு (7) வருகிறது... இந்த முறையில் எவ்வளவு எளிதாகக் கணக்கு, 127-வது அதிகாரம் அவர்வயின்விதும்பல் தான் சரி என்பதைச் சொல்லிவிட்டது...! அதேநேரம் அதிகார வகைகளில் "விரும்பல்" எனும் புதிய வகை இல்லை என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்...
இதே முறையில் 90.பெரியாரைப்பிழையாமையா...? ഽ 90.பெரியார்ப்பிழையாமையா...? என்பதைக் கண்டுபிடித்து விடலாம் தான்... ஆனால் அதுவும் சற்றே நீண்ட ஆய்வு... அப்படியென்றால் அடுத்து...? உயிரெழுத்து வகைகள் என்னென்ன...? குறுகிய அளவு நேரமே ஒலிப்பதையும், நீண்டு ஒலிப்பதையும் பிரித்து எளிதான ஒரு கணக்கை அடுத்துச் செய்து விடுவோம்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வியக்க வைக்கும் ஆராய்ச்சி, சிந்தனை. நீங்க அப்படியே முன்னால போங்க.. மெதுவா பின்னாடி வர்றேன்!
பதிலளிநீக்குமுனைவர் பட்டத்திற்கும் மேலான ஆய்வு....உங்கள் எழுத்தும், பதிவும் சிந்திக்கத்தக்கன.
பதிலளிநீக்குதங்களது ஆய்வு தொடரட்டும் வாழ்த்துகள் ஜி
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசிறப்பான பதிவு. நிறைய ஆராய்ச்சிகள் செய்து திருக்குறள்+கணக்கியல் பதிவை எப்போதும் போல் திறம்பட தொகுத்துள்ளீர்கள். தங்களின் திறமை கண்டு மிகவும் வியக்கிறேன். உங்களின் இந்த ஆராய்ச்சிகள் அனைவருக்கும் கண்டிப்பாக பயனுள்ளதாக அமையும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிகவும் அருமையான ஆராய்ச்சி. உங்கள் பணி சிறப்பாக தொடர்ந்து நடக்க வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிருக்குறள் கணக்கியல், கணக்குப்பாடம் படிப்பவர்களுக்கும் கூட ஒரு சவால்தானோ! பொறுமையாகச் செய்றீங்க டிடி. ஆராய்ச்சினா பொறுமை வேண்டுமே!
பதிலளிநீக்குஅருமை.
கீதா
சிறப்பான கணக்கியல் பதிவு..
பதிலளிநீக்குவாழ்க வாழ்க..
வியக்க வைக்கும் ஆய்வு ஐயா
பதிலளிநீக்கு