திருக்குறள் ① உயிரெழுத்து அதிகாரங்கள் : 33 (பகுதி 3/3) தமிழே மருந்து...
அனைவருக்கும் வணக்கம்... உயிரெழுத்து வகைகள் என்னென்ன...? "அ, இ, உ, எ, ஒ" ஆகிய ஐந்து (5) எழுத்துக்களும் குறைந்த அளவு நேரமே ஒலிப்பதால் இவற்றைக் குறில் எழுத்துகள் அல்லது குற்றெழுத்து என்போம்... "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ" ஆகிய எழு (7) எழுத்துக்களும் நீண்டு ஒலிப்பதால் இவற்றை நெடில் எழுத்துகள் அல்லது நெட்டெழுத்து என்போம்.. அதன்படி உங்கள் கோப்பில் இருக்கும் உயிரெழுத்தில் தொடங்கும் 33 அதிகாரங்களைப் பிரித்துக் கணக்கிட்டால் வருவது :-
உயிரெழுத்தில் தொடங்கும் 33 அதிகாரங்கள் | |
குறில் 28 |
நெடில் 5 |
முதலெழுத்து ➕ கடையெழுத்து ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை |
|
4 | 3 |
7 |
இந்த கணக்கியலில் முதல் + கடை எழுத்துக்களில், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களில் (குறில் 4 ➕ நெடில் 3 ), திருக்குறள் எண்ணான ஏழு (7) வரும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது... இதே போன்று உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் அதிகாரங்களையும், குறில் / நெடில் என்று பிரித்துக் கணக்கிட்டால், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களில் (குறில் 7 ➕ நெடில் 9 ), 7+9=16=1+6= திருக்குறள் எண்ணான ஏழு (7) வரும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது...
குற்றெழுத்தான "எ" மற்றும் நெட்டெழுத்துக்களான "ஏ, ஐ, ஓ, ஔ" ஆகிய ஐந்து (5) எழுத்துக்களும் திருக்குறள் அதிகாரங்களில்
அடுத்ததாகத் தமிழன்னை கொடுத்த →🚫 மருந்தை 🚫← தாத்தா எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை அறிவோம்... முந்தைய பதிவில் 33 உயிரெழுத்து அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்கள் 70 தான் என்பதை, 127-ஆவது அதிகாரம் அவர்வயின்விதும்பல் என்பதன் மூலம் உறுதி செய்தோம்... அந்த 70 எழுத்துக்களை மட்டும் எடுத்து (copy), சுளகு பெட்டியில் போட்டுவிட்டு (paste), அங்குள்ள இதர என்பதில் "மாத்திரை" பொத்தானைச் சொடுக்கினால், ஒவ்வொரு எழுத்தின் மாத்திரையையும், மொத்த மாத்திரை:76.5 என்றும் காட்டும்... இந்த உயிரெழுத்தில் தொடங்கும் 33 அதிகாரங்களை, தொடங்கும் முதலெழுத்தை குறில் / நெடில் என்று பிரித்து, அதாவது 28 குறில் அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களையும், 5 நெடில் அதிகாரங்களில் பயன்படுத்திய எழுத்துக்களையும் கணக்கிட்டுப் பார்ப்போமே... சுளகு இருக்கச் சோம்பல் ஏன்...?
அதிகாரங்கள் | உயிரெழுத்து 33 | |
குறில் 28 | நெடில் 5 | |
பயன்படுத்திய எழுத்துக்கள் | 64 | 17 |
மாத்திரை | 67.5 | 20.5 |
மொத்த மாத்திரை | 88 ( 7 ) |
இதற்கு மேலும் என்ன செய்யலாம்...? மேலும் தாத்தாவின் நுட்பங்கள் அறிய என்னென்ன உத்திகள் செய்யவேண்டும்...? கோப்பில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கையில் உள்ள 64 மற்றும் 17 எழுத்துக்களையும் சற்றே கவனிப்போம்... இரண்டிலும் ஒன்றுபோல் சில எழுத்துக்கள் இருக்கிறதே...! அதன் எண்ணிக்கை என்னவாக இருக்கும்...? அவற்றைப் பிரித்து எடுத்துவிட்டால், குறில், நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை என்னவாக இருக்கும்...? இவற்றிற்கெல்லாம் மாத்திரை எண்ணிக்கையும் என்னவாக இருக்கும்...? 64+17=81 எழுத்துக்களைக் கணக்கிட்டால் :-
குறில்+நெடில் இரண்டிலும் வருவது | கு றி ல் | நெ டி ல் | மொ த் தம் | ||
எழுத்துக்களின் எண்ணிக்கை | 11 | 53 | 6 | 70 | (7) |
மாத்திரை | 23 | 56 | 9 | 88 | (7) |
குறில் | நெடில் |
75.அரண் 107.இரவச்சம் 39.இறைமாட்சி | 23.ஈகை 38.ஊழ் |
பயன்படுத்திய எழுத்துக்கள் | |
14 | 11 |
25 (7) |
இங்குக் காணும் ஏழு அதிகாரங்களுக்குமே தொடர்புண்டு... இந்த கணக்குகளையெல்லாம் செய்தபோது, எழுதிய சில பதிவுகள் ஞாபகம் வருகிறது... எடுத்துக்காட்டாக விதி வலியது என்பது போல ஊழ் அதிகாரத்தில், ஊழிற் பெருவலி யாவுள...? என்பார் தாத்தா... ஆனால் ஊழ்வினை என்பதே முப்பாலில் இல்லை... ஆள்வினையுடைமை அதிகாரத்தில், ஊழையும் உப்பக்கம் காண்பர் என்று விடாமுயற்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்வார்... விளக்கமான பதிவு: →380 vs 620← இரவச்சம் அதிகாரத்தில், அறச்சீற்றம் காட்டும் அவரது நெருப்பைக் கொட்டும் குறள் : இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் ஆகும்... ஏன்..? →இங்கு← விளக்கமாக அறியலாம்...
மேற்கொண்டு 64.அமைச்சு, 39.இறைமாட்சி ஆகிய அதிகாரங்களைப் பற்றி குறளின் குரல் பதிவுகளை எழுதியுள்ளேன்... நான்கு வருடங்களுக்கு முன் "மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்" →பதிவில்← 546.வேல்அன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதூஉம் கோடாது எனின் குறளுக்குத் தகுந்த வேறொரு பாடலை கோமதி அரசு அம்மா அவர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள்... அடியேன் தேர்வு செய்த பாடலினிடையே வரும் வசனம் இன்றைக்கும் உள்ளது... செங்கோல் என்ன செய்யும்...? முப்பால் முழுவதும் செங்கோல் எனும் சொற்களைத் தேடித் தொகுத்துக் கணக்கிட்டால், செங்கோல் என்ன செய்யும் என்பதை அறியலாம்...!
கோவில் காக்க வந்தவனே - பாவி என்று மாறிவிட்டா - சாமி எங்குக் குடியிருக்கும்...? செங்கோல் பிடிக்கும் ஒருவன் - கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால் - நீதியெங்கு குடியிருக்கும்...? ഽ நான் கேட்டு வச்ச கேள்வியிலே பொருளிருக்கு - அதைக் கேளாதோர் உள்ளத்திலே இருளிருக்கு... ഽ பாதுகாவல் போர்வையிலே - ஜாதி இன பேதம் சொல்லி - ஊர்ப் பகையை வளர்ப்பவன் நீ - ஊரில் உள்ளவரை மோதவிட்டு - குள்ளநரி போலிருந்து - ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ...
⟪ © நீதிக்கு தலைவணங்கு ✍ புலமைப்பித்தன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் (வசனம்: 🌰 சீனிவாசன்) @ 1976 ⟫
பாடலில் வருவது யார்...? பேடி...! ஐயன் எங்கெங்கு அவனை குறிப்பிடுவதை அறிய, முப்பால் முழுவதும் தேடி கணக்கையும் செய்யலாம்...! நன்றி..
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வழக்கம் போல தங்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
பதிலளிநீக்குமுதல படத்தில் கடிகாரம் அருமை இதுவரை நான் பார்க்கவில்லை.
எப்படிப்பட்ட ஆர்வம் திருக்குறள் மீது இருந்தால் இந்த மாதிரி ஆராய்ச்சி செய்வீர்கள். பிரம்மிக்க வைக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஉயிரெழுத்து அதில் குறில் நெடில் என்று உள்ளே சென்று அதிலும் முதல் கடை என்று உள்ளே உள்ளே சென்று நுட்பமான கணக்கியல், டிடி.
பதிலளிநீக்குகீதா
உங்களின் ஆர்வம், ஆராய்ச்சி, உழைப்பை பார்த்து வியப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குபலருக்கும் பயன்படும் தகவல்கள்.
செங்கோல் செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொன்னதை ஆள்பவர்கள் கடைபிடித்தால் நன்றாக இருக்கும்.
நான் பழைய பதிவை படித்து தூயவெள்ளம் பாடலை கேட்டேன். நன்றி.
இந்த பதிவில் பாடல் பகிர்வு அருமை. மீண்டும் உங்கள் பதிவுகளில் கருத்துள்ள பாடல்களை கேட்க விரும்புகிறேன்.
உங்கள் உழைப்பை ரசித்துக் கொண்டே தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஅந்தக் காலத்தில் எண்ணும் முறை என்பது காய், கால் விரல்களின் அடிப்படையிலேயே அதை வைத்தே வளர்ந்ததாம். ஆறு என்பதை அடுத்த கையில் ஒன்று என்பார்களாம். சமீபத்தில் எங்கயோ படித்தேன். இந்த கணக்கியல் நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்கு//காய், கால் விரல்களின்//
நீக்குகை கால் விரல்களின்
அனைத்து தாய்மார்களும் அப்படித்தான் சொல்லிக் கொடுப்பார்கள்...
நீக்குபோஸ்ட் படிச்சு , நீறு பூத்த நெருப்பாக இருந்த தமிழ் எழுத்துக்கள், நீறு தட்டப்பட்டு, ஸ்கூலை நினைவுபடுத்துகிறது. அழகாக விளங்கப்படுத்துறீங்க...
பதிலளிநீக்குபாடல் சூப்பர், ஒவ்வொரு வரியும் அழகு.. கேட்டபாடல்தான் மீண்டும் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வழக்கம் போல் தங்களது திருக்குறள் ஆய்வு தங்கள் திறமையை பறைசாற்றுகிறது. இந்த ஆய்வுகள் உங்களுக்கு கைவந்த கலையாகி விட்டது. தொகுத்து மின்னூலாக்கினால் அனைவருக்கும் (முக்கியமாக குறள் கற்கும் அனைவருக்கும்) பயனுள்ளதாக அமையும். உங்கள் இந்த அற்புதமான திறமைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
இந்தப்பதிவை இத்தனை நாள் எப்படியோ பாராது தவற விட்டு விட்டேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.