🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் உயிரெழுத்து அதிகாரங்கள் : 33 (பகுதி 1)

அனைவருக்கும் வணக்கம்... முதலில் கீழ்க்காணும் படத்தின் விளக்கத்தை அறிந்து கொள்வோம்...


"மேற்காண்பது எனது கணினியிலுள்ள திருக்குறள் அனைத்து அதிகார முதன்மை கோப்பின் ஒரு பகுதி... இந்த நான்கு நெடுவரிசைகளில் உள்ள எழுத்துக்களை வைத்துத்தான், இதுவரை அதிகாரங்களின் கணக்கியல் பதிவுகள் அனைத்துமே செய்தது...! இனியும் செய்யப்போகிறோம்... முதல் நெடுவரிசையில் காணும் 133 மட்டுமே Excel அண்ணன் செய்த கணக்கு... அதன் சூத்திரத்தை (=COUNT() formula) படத்தில் காணலாம்...! மற்ற அனைத்து எண்களும் சுளகு தம்பி, கண்ணிமைக்கும் நேரத்திற்குக் குறைவாகச் செய்து கொடுத்த கணக்கு...! வண்ண எண்களாகவும் + பின்புற வண்ணம் கொண்ட எண்களாகவும், காணப்படுவதற்குக் காரணம், திருக்குறள் எண் ஏழு, பகா எண், பகா எண்ணை மூல எண்ணாக மாற்றினால் ஏழு, பகு எண்ணை மூல எண்ணாக மாற்றினால் பகா எண்ணாக மாறுவது, இது போன்றவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்...! மேலும் விளக்கமாக :

இரண்டாவது நெடுவரிசை : அதிகார மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை : 853 ഽ பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை : 120 ഽ அதாவது தமிழ் எழுத்துக்கள் 247-ல் 120 எழுத்துக்களை மட்டும் வெவ்வேறு எண்ணிக்கையில் 853 முறைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன... ഽ ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை 21 ഽ அதாவது பயன்படுத்திய 120 எழுத்துக்களில் 21 எழுத்துக்கள் மட்டும் ஒரேயொருமுறை தான் பயன்படுத்தப்பட்டுள்ளன...

மூன்றாம் மற்றும் நான்காம் நெடுவரிசை : அதிகாரங்களின் முதலெழுத்து மற்றும் கடையெழுத்து என்று எளிதாக யூகித்துக்கொள்ள முடியும்... ഽ 42 மற்றும் 17 ஆகியவை முறையே, முதல் | கடை எழுத்துக்கள் ஆகியவற்றில் பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை... முதலும் கடையும் சேர்த்துக் கணக்கிட்டால் வருவது 53 எழுத்துக்கள்... ഽ 14 மற்றும் 7 ஆகியவை முறையே முதல் | கடை எழுத்துக்கள் ஆகியவற்றில் ஒரேயொரு முறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை... முதலும் கடையும் சேர்த்துக் கணக்கிட்டால் ஒரேயொரு முறை பயன்படுத்தியதாக வருவது 16 எழுத்துக்கள்... (இங்கே கட்டமைப்பு முதல் ➕ கடை எழுத்துக்களில் உள்ளது...!)
இப்போது நாம் முதன்மை கோப்பில் 133 அதிகாரங்களையும், அகர வரிசைப்படி மாற்றிக் கொள்வோம்... அப்படி மாற்றினால், முதலெழுத்தை உயிரெழுத்தாகத் தொடங்கும் 33 அதிகாரங்கள் வருகிறது... மேற்சொன்ன கணக்குகளையெல்லாம் செய்வோமா...? இங்கே சொடுக்கினால், உங்களின் உலாவியில் (browser) புதிய பக்கத்தில் (tab) சுளகு வந்து விடும்... மறுபடியும் இங்கு வந்து இன்னொரு முறையும் சொடுக்கினால், மீண்டும் புதிய பக்கத்தில் (tab) சுளகு வந்து விடும்... (இதற்குக் காரணம் உண்டு...!) கீழே முதலெழுத்து என்பதைச் சொடுக்கினால், அதன் பெட்டியில் அனைத்தும் தேர்வு ஆகிவிடும்... பின்பு படியெடுத்து (Copy : Ctrl-C) முதல் சுளகு பெட்டியில் ஒட்டி (Paste : Ctrl-V) விட்டு, அங்குள்ள 'எழுத்து' என்பதில் 'ஓரெழுத்து' என்பதைச் சொடுக்கி விடவும்... மொத்தமாகப் பயன்படுத்திய முதலெழுத்து எழுத்துக்களையும், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களையும், வெறும் கண்களில் பார்த்து எண்ணி விடலாம்...! அவற்றை நம் கோப்பில் குறித்துக் கொள்வோம்... இதேபோல் கடையெழுத்து கணக்கையும் செய்து விடவும்... சுளகு பெட்டியில் ஒவ்வொரு முறையும் எழுத்துக்களை ஒட்டும் (paste) போது, அங்கு எந்த எழுத்தும் இருக்கக்கூடாது... இருந்தால், "அழி" பொத்தானைச் சொடுக்கிவிட்டு, அடுத்த எழுத்துக்களின் கணக்கை ஒட்டவும்...!

இதே போல் உயிரெழுத்து அதிகாரங்கள் பெட்டியில் உள்ளவற்றை 'சுளகு'வில் போட்டுவிட்டாலே, "மொத்த எழுத்துக்கள் 194" என்று காட்டுவதைக் குறித்துக் கொள்ளவும்... "மொத்தச் சொற்கள் 33" என்று காட்டுவது, நாம் சரியாகச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது...! அடுத்து வழக்கம் போல் ஓரெழுத்து சொடுக்கினால், பயன்படுத்திய எழுத்துக்களையும், ஒரேயொருமுறை பயன்படுத்திய எழுத்துக்களையும் காண்பிக்கும்... "ஒவ்வொரு எழுத்தாக எண்ணுவதா...?" என்று எண்ணுவோம்...! எண்ண வேண்டாம்...!! சுளகு கணக்கிட்டுக் காட்டுவதில், ஒரேயொருமுறை பயன்படுத்திய எழுத்துக்களை மட்டும் எடுத்து (copy), இரண்டாவதாகத் திறந்து வைத்துள்ள சுளகு பெட்டியில் ஒட்டி (paste) விடவும்... ஒரேயொருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை காட்டுவதைக் குறித்துக் கொள்ளவும்... (அதில் "து", "ரு" ஆகிய இரண்டும் உள்ளதை உள்ளத்தில் சேமித்துக் கொள்ளவும்...!) அடுத்து முதல் சுளகு பக்கத்திற்கு வந்து, சுளகு கணக்கிட்டுக் காட்டும் அனைத்து எழுத்துக்களையும் எடுத்து (copy), அதே சுளகு பெட்டியில் ஒட்டி (paste) விடவும்... 33 அதிகாரங்களில் பயன்படுத்திய மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை காட்டுவதைக் குறித்துக் கொண்டால்.......

(கோப்பிலிருந்து இவற்றைச் செய்ய அதிகபட்சம் 3 நிமிடங்கள் ஆகலாம்...!)


33 அதிகாரங்களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 194 (5) என்றால், மீதமுள்ள 100 அதிகாரங்களின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை (853-194=) (659 (2)) என்று வரும்... மொத்த அதிகாரங்கள் 133 மற்றும் அதன் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 853 ஆகியவற்றை எப்படிப் பிரித்தாலும் ஏழு (7) வரும்... மற்றவற்றைத் தான் நாம் கவனிக்க வேண்டும்...! மேலே முதல் கடை கணக்கியலைக் கவனித்தோம் என்றால், பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை என்றாலும், ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்களின் எண்ணிக்கை என்றாலும், திருக்குறள் எண்ணான ஏழு (7) வரும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது...! அதேபோல் 33 அதிகாரங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை 70 (மூல எண் 7) ஆகும்... இது மாறலாம்...! எப்படி...? 127.அவர்வயின்விரும்பல் என்றால் மாறும்...! அப்படியென்றால் 127.அவர்வயின்விதும்பல் சரிதானா...? இதன் தீர்வை மீதமுள்ள உயிர்மெய்யெழுத்துகளில் ஆரம்பிக்கும் 100 அதிகாரங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை தான் முடிவு செய்யும்... எப்படி...? இந்தப் பதிவின் பயிற்சியால் அறிந்து, தெரிந்து, புரிந்து கொண்டவர்களும் தொடரலாம்...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஒன்றுக்கு இரண்டு முறை படித்தேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'எழுத்துக்களின் கணக்கு மிகவும் எளிது" என்பதை சொல்லவே, பயிற்சிகளுடன் இந்தப் பதிவு...

      நீக்கு
  2. வழக்கம் போல தங்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  3. படி முறைப்படி அங்கு செய்து பார்த்தேன் டிடி. சூப்பர். இந்தக் கணக்கை விட உங்கள் தொழில்நுட்பம் என்னை மிகவும் ஈர்த்தது!!! அதுவும் கணக்குதானே என்று சொல்கிறீகளோ?!!!!! அதுவும் சரிதான்!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் எழுத்துக்களின் கணக்கு மிகவும் எளிது என்று சொல்லிவீட்டீர்கள், ஆனால் நிறைய தடவை படித்தால் தான் புரியும் எனக்கு .
    உங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள் சொல்லத்தான் முடியும் என்னால்.
    உங்கள் உழைப்புக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திருகுறள்களை ஒவ்வொரு அதிகாரங்களையும் திறம்பட பிரித்து கணக்கியலோடு விளக்கமாகச் சொல்லித் தருகிறீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். படிக்கப் படிக்க நிச்சயம் உங்கள் ஆர்வம் எங்களையும் தொற்றிக் கொள்ளும். உங்கள் உழைப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. திருக்குறள் ஆய்வு வியக்க வைக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.