திருக்குறள் ① உயிர் ② உயிர்மெய் ③ மெய் - அதிகாரங்கள் : (பகுதி 4/4)

④ ஈர் ஒற்று மயக்கம் : எனும் கணக்கியலில், 90-ஆவது அதிகாரம் பெரியாரைப்பிழையாமை என்று வந்தாலும், மேற்கொண்டு சில ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்று எழுதியிருந்தேன்... அதே போல் முதல் + கடை கணக்கியல் என்பது, திருக்குறள் சொற்களின் கட்டமைப்பிற்கு மட்டும் என்று நினைத்ததும் தவறாக உள்ளது என்பதையும், அடுத்தடுத்த ஆய்வு தொடர்களில் காண்போம்...! இதுவரை செய்த எழுத்து வகை கணக்குகளின் ஓர் அட்டவணை தொகுப்பு : (உயிரெழுத்துக்கள் கணக்கு இந்தப் பதிவில்)
எழுத்து வகை கணக்கியல்:
அதிகாரங்கள் | |
---|---|
அதிகாரங்களின்
எண்ணிக்கை | தனித்து வந்த
அதிகாரம் |
பகுதி 2 | |
உயிர்மெய்
எழுத்துக்கள் மட்டும் உள்ள 16 அதிகாரங்கள் | 74. நாடு |
மற்ற
117 அதிகாரங்கள் | 71. குறிப்பறிதல் |
பகுதி 3 | |
மெய்
எழுத்துக்கள் இல்லாத 22 அதிகாரங்கள் | 74. நாடு |
மற்ற
111 அதிகாரங்கள் | 71. குறிப்பறிதல் |
ஆய்த எழுத்து கொண்ட ஒரே அதிகாரம் வெஃகாமை ஆகும்; அதன் பத்து குறள்களிலும் ஆய்த எழுத்து வரும்... அதுபோல் இன்னொரு அதிகாரமும் உண்டு... அதிகார எழுத்துக்கள் முழுவதுமே அனைத்து குறள்களிலும் வரும்... அந்த அதிகாரத்தின் குறளின் குரல் : (1) உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோய் ஒன்று உண்டு...! (2) நம்மோடு வேறுபடும் நோக்கத்தில் ஒருவன் வெறுப்பன செய்தாலும், "விட்டுவிடு; அடிபட்டுத் திருந்துவான்", இதற்காக அவனுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே உயர்ந்தது...! (3) அழிவற்ற உள்ளொளி வேண்டுமா...? அப்படியென்றால், இந்த கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை, தனது மனத்தினின்றும் நீக்கிவிடு...! (4) ஏனென்றால் துன்பங்கள் எல்லாவற்றிலும் மிக்க துன்பமாகிய இந்த நோய் கெட்டுவிட்டால், அதன்பின் இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தைத் தரும்...! (5) இந்த நோய்க்கு எதிர்த்து நிற்கும் மருந்து கிடையாது; வளைந்து கொடுத்து சரியாக்கும் ஆற்றல் படைத்தவரை, எந்த கொம்பனானாலும் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன எவ்வித நோய்களும் அண்டாது...!
(6) "அதெல்லாம் முடியாது, எதற்கும் நான் முனைந்து நிற்பது தான் இனிது" என்று கூறுபவனது வாழ்க்கை, சிதைந்து முற்றிலும் அழிந்து போவதும் விரைவில் நடப்பது உறுதி...! (7) பகையை வளர்க்கவே விரும்பும் கொடிய அறிவினை கொண்டவர்களே: எக்காலத்திலும் உண்மைப் பொருளை அறியவே மாட்டீர்கள்...! (8) அதனால் பகைமையை விலகிப்போதல் உயர்வு தரும்; இல்லை மேற்கொண்டு மிகுதியாக மேற்கொண்டால், கேடு அவனிடத்தில் ஓடோடி விரைந்து வருவதில் முனைப்புக் காட்டும்...! (9) தனக்கு உயர்வுண்டாகும்போது இதைப் பாராட்டமாட்டான்; ஆனால், தனக்குக் கேடு செய்து கொள்ளுமாறு இருந்தால், இதில் முனைந்து நிற்பான்...! எதில்...? (10} முடிவாக, முகமலர்ந்து, நல்லெண்ணங்கள் கொண்டு நட்போடு பழகினால், வாழ்விற்கு நன்மையான அமைதி, மகிழ்ச்சி, இணக்கமான உறவுகள் என்னும் பெருமையான நிலை உண்டாகும்... இல்லையெனில் எல்லாத் துன்பமும் உண்டாகும்...!
மேற்சொன்னவை எந்த அதிகாரமாக இருக்கும்...? ம்... உயிர்மெய்யெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் கணக்கியல் செய்து, தனித்து நின்ற அதிகாரங்களைக் கண்டோம்... இதேபோல் உயிரெழுத்து கணக்கியல் செய்து பார்த்தால், அந்த அதிகாரம் கிடைத்து விடும்...! (முடிவில் காணலாம்...!) அதற்கான அட்டவணை :
எழுத்து வகை கணக்கியல்:
அதிகாரங்கள் | |
---|---|
அதிகாரங்களின்
எண்ணிக்கை | தனித்து வந்த
அதிகாரங்கள் |
பகுதி 1 | |
உயிரெழுத்தில்
தொடங்கும் 33 அதிகாரங்கள் | 38. ஊழ்
60. ஊக்கமுடைமை 86. இகல் |
உயிர்மெய்யெழுத்தில்
தொடங்கும் 100 அதிகாரங்கள் | 77. படைமாட்சி |
மேற்காணும் அட்டவணையில், 33 அதிகாரங்களின் கணக்கு, மூன்று (3) முறையும், 100 அதிகாரங்களின் கணக்கு பதினாறு (16) முறையும் கணக்கிட வேண்டும்... அவ்வாறு செய்தால் தான் மேற்காணும் நான்கு அதிகாரங்களும் தனித்தே வரும்...
860. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
அதிகாரம் : ↝ இகல் ↜
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
சிறப்பு. மிகச்சிறப்பு. தொடர்கிறேன். பத்து குறள்களுக்கான பொருள்களை படித்தேன். எந்த அதிகாரம் என்று தெரிந்து கொள்ள ஆவல்.
பதிலளிநீக்குவண்ணக் குறியீடு உள்ளதே...!
நீக்குஇன்றைய பதிவு மிக அருமை.
பதிலளிநீக்குநல்ல எண்ணங்களுடன், அனைவரிடமும் அன்போடு பழகினால் மகிழ்ச்சி, மன அமைதி கிடைக்கும் வாழ்க்கையில் என்பது உண்மை. குறள்களும் அதன் விளக்கமும் அருமை.
தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.
சிறப்பான்ம் செய்திகள்..
பதிலளிநீக்குஅருமை..
வாழ்க நலம்..
அதிகாரம் இகல் என்று சொல்லியிருக்கீங்க டிடி அந்த அதிகாரம் தானோ?
பதிலளிநீக்குகுறள்களின் பொருள் சிறப்பு. அன்போடு அனைவரிடமும் அதுவும் ஒரே போன்று பழகினால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் உண்மை.
கீதா
ஆம், இகல் அதிகாரம் தான்...
நீக்குகுறள்களின் பொருள் விளக்கம் அருமை . நன்றி ஐயா
பதிலளிநீக்குதொடர்ந்து வருகிறேன் ஜி பதிவு சிறப்பு
பதிலளிநீக்கு