அஅ... இஇ... [1]


வணக்கம் நண்பர்களே... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பொக்கிசமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே... ஏதோ ஒன்றை தொலைத்தது போல... ஏதோ மீண்டும் பிறந்தது போல... தாயே என்னை வளர்த்தது போல... கண்களின் ஓரம் ம்... ம்... கண்ணீர் வருதே...© ஆட்டோகிராப் பா.விஜய் பரத்வாஜ் பரத்வாஜ் @ 2004 ⟫பலரைச் சந்தித்த எனது அனுபவத்தில், திறமை மிக்கவராக, சிறப்பானவராக, நேர்மையான ஆளுமைத் திறன் மிக்கவராக, இன்னும் பலவாறு எதிலும் பலே கில்லாடியாக அசத்தி வியக்க வைக்கிறார்களே, அவர்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்...? என்று யோசித்ததில்...

ஒரு அதிகாரம் இருமுறை குறளில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்... அது குறிப்பறிதல் - பொருட்பால் அமைச்சியலில் 71வது & இன்பத்துப்பால் களவியலில் 110வது... இவ்விரண்டையும் ஒப்பிட்டு பார்த்தேன்... + மனதிற்கு இனிய பாட்டு கேட்கும் போதெல்லாம், பல இனிய நினைவுகள் நம் மனதில் வந்து போகும் - ஆறுதலாக, மகிழ்ச்சியாக, மருந்தாக, பெருமையாக, பெருமிதமாக, உற்சாகமாக... - இப்படி பல... ரசிப்போமா...?

அன்றைக்கு அப்படி...! (அ அ) இன்றைக்கு இப்படி...! (இ இ)


அ அ : ஒரு தடவை பார்த்ததிற்கே இப்படி காய்ச்சல் அடிக்குதே... ம்ம் இது தான் காதல் நோயா...? கண்டு பிடித்து விட்டேன்... இதற்கு மருந்து என்னவளின் மை தீட்டிய மான் விழியின் மற்றொரு அழகுப் பார்வை தான்...! பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே - உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே... ஆஆஆ... ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே - என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே... காதல் தெய்வீக ராணி... போதை உண்டாகுதே நீ... கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே... கண்ணாலே பேசி பேசி்க் கொல்லாதே...© அடுத்த வீட்டுப் பெண் தஞ்சை ராமையா தாஸ் ஆதி நாராயண ராவ் P.B.ஸ்ரீனிவாஸ் @ 1960 ⟫
1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

இ இ : ஒருவர் வாயால் பேசாமல் இருந்தாலும், அவரின் மனக் கருத்தை முகத்தையும் கண்ணையும் வைத்து அறிந்து கொள்பவன், எப்போதும் வற்றாத கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்திற்கே ஆபரணம் போன்றவன்...!

701 கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி

அ அ : நான் பார்க்காதபோது கள்ளத்தனமான பார்க்கும் என்னவளின் கடைக்கண் பார்வை, எங்களின் காதல் ரசனையில் பாதியளவைக் காட்டிலும் பெரிது...! கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா...? (2) ஏகாந்தம் பறந்தது... (2) இதழும் இதழும் நெருங்கும் போது சுகம் தெரிந்ததா...? இல்லை சொர்க்கம் தெரிந்தது (2) சொர்க்கம் தெரிந்தது... ஆஹா...! என்னை முதல் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்...? நான் உன்னை நினைத்தேன்...© பூம்புகார் ராதா மாணிக்கம் ஆர். சுதர்சனம் T.M.சௌந்தரராஜன், S.ஜானகி @ 1964 ⟫
1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

இ இ : ஒருவர் மனத்தில் உள்ளதை சந்தேகமே இல்லாமல் தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள், மனிதனே ஆனாலும் தெய்வத்திற்குச் சமம்...!

702 ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்

அ அ : நான் பார்க்காத போது என்னை ரசித்து தலைகுனியும் அவளது செயல் எங்களுக்குள்ளே காதல் பயிரை மேலும் வளர வைக்கிறது...! தோட்டத்து பூவினில் இல்லாதது... ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது (2) ஆடையில் ஆடுது வாடையில் வாடுது... ஆனந்த வெள்ளத்தில் நீராடுது - அது எது...? ஆடவர் கண்களில் காணாதது... அது காலங்கள் மாறினும் மாறாதது (2) காதலன் பெண்ணிடம் தேடுவது, காதலி கண்களை மூடுவது - அது எது...? நாணமோ, இன்னும் நாணமோ... தன்னை நாடும் காதலர் முன்னே, திருநாளை தேடிடும் பெண்மை நாணமோ...? நாணமோ...?© ஆயிரத்தில் ஒருவன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1965 ⟫
1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்

இ இ : ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே உள்ளக் குறிப்பை அறியும் திறமை கொள்பவரை, எதைக் கொடுத்தாவது வளைத்துப் போடுவதில் வல்லவனாக இருக்க வேண்டும்...!
703 குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

அ அ :நான் பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள்... பார்க்காத போதோ என்னைப் பார்த்து மெல்ல உனக்குள்ளே சிரிப்பதை என் மனம் அறியும்...! உன்னை நான் பார்க்கும் போது - மண்ணை நீ பார்க்கின்றாயே (2) விண்ணை நான் பார்க்கும் போது - என்னை நீ பார்க்கின்றாயே (2) நேரிலே பார்த்தால் என்ன...? நிலவென்ன தேய்ந்தா போகும்...? புன்னகை புரிந்தால் என்ன...? பூமுகம் சிவந்தா போகும்...? நேற்று வரை நீ யாரோ...? நான் யாரோ...? இன்று முதல் நீ வேறோ...? நான் வேறோ...?© வாழ்க்கைப் படகு கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.சீனிவாஸ், P.சுசீலா @ 1965 ⟫
1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்

இ இ : ஒருவர் மனதில் நினைப்பதை அறியும் ஆற்றல் இல்லாதவர்களோடு உறுப்புகளால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர்கள்...!

704 குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு

அ அ :நேராக என்னை உற்றுப் பார்க்காமல், ஒரு கண்ணை மட்டும் சுருக்கி ரசித்து பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்...! என்றும் பேசாத தென்றல், இன்று மட்டும் காதில் வந்து... ஆஆஆஆஆ என்றும் பேசாத தென்றல், இன்று மட்டும் காதில் வந்து - இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன...? ஓர விழி பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லி விட்டு... ஆஆஆஆஆ... ஓர விழி பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லி விட்டு - ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனோ...?© இரும்புத்திரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.V.வெங்கட்ராமன் T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1960 ⟫
1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்

இ இ : உறுப்புகளுள் சிறந்த கண்களால், ஒருவரின் குறிப்பைக் கண்டு அவரின் மனக்கருத்தை அறியாதவர்கள், கண்கள் இருந்தும் என்ன நன்மை...?

705 குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

© உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கலைக்குமார் S.A.ராஜ்குமார் ஹரிஹரன் @ 1998 ⟫ ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்... கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்... என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்... நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்... ஞாபகங்கள் மழையாகும்... ஞாபகங்கள் குடையாகும்... ஞாபகங்கள் தீ மூட்டும்... ஞாபகங்கள் நீரூட்டும்...
தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. இப்படி சினிமாப் பாட்டு உதாரணங்களோட குறளைச் சொல்லிக் கொடுத்தா எல்லாக் குறளுமே மனப்பாடம் ஆயிடுமே நல்லா. டிடி டீச்சர் சேவை பள்ளிகளுக்கும் தேவை போலருக்கே.... நன்று.

  பதிலளிநீக்கு
 2. ஆழ்ந்த குறளின் அழகிய விளக்கம்
  எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொளளும்படி!
  தொடருங்கள் வலைச்சித்தரே!

  பதிலளிநீக்கு
 3. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஒரு அதிகாரம்(குறிப்பறிதல்) இருமுறை குறளில் வந்துள்ளது இப்போதுதான் தெரியும். நன்றி.

  அனைத்தும் அருமை. தொடர்கிறேன்.

  பதிவிலுள்ள படம்தான் கண்ணுக்குக் கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமதி சித்ராசுந்தர் அவர்களுக்கு, பதிவில் உள்ள படத்தை மாற்றி விட்டேன்... நன்றி...

   நீக்கு
 4. அ அ .. இ இ
  எ எ ...உ ம எ ?
  ஹாஹா எப்படி எப்படி ... உங்களால் மட்டும் எப்படி?

  பாடல்களை நினைவில் இருத்தி அவற்றிற்குத் தகுந்த குறள்களையும் சேர்த்து அதைவிட முக்கியமாக சிறந்த கருத்துகளை ஏற்றி ..அப்பப்பா இத எழுதுறதுக்குள்ளயே எனக்குத் தலசுத்திடுச்சு :)
  அப்பொழுதும் போல கலக்கல் பதிவு..
  'குறிப்பறிதல்' இருமுறை வருவது இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன், நன்றி

  பதிலளிநீக்கு
 5. குறள்கள் திரைப் பாடல்கள் விளக்கங்கள் இப்படி விரிவாக யாரும் சொன்னதில்லை அருமை. தமிழாசிரியர் இப்படி பாடம் நடத்தினால் தமிழ் வகுப்பை விட்டு எவனும் வரமாட்டான்.
  உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே.
  மண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே
  என்ற பாடல் வரிகள் திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டதோ?

  பதிலளிநீக்கு
 6. தலைப்பில் ஆ ஆ வை காணலியே என்று நினைத்து படிக்கத் தொடங்கினேன் ,நீங்கள் எழுதி இருக்கும் திரைப்பட பாடல்களினால் ஆன குறள்உரையின் அருமைக் கண்டு ஆ ஆ என வியந்தேன் !
  த ம 5

  பதிலளிநீக்கு
 7. உங்கள் தளத்தில் நுழைந்து படிக்கும் போதே எதை எந்த இடத்தில் எப்படி இணைப்பு கொடுத்து இருப்பீங்க என்று ஒவ்வொன்றாக தடவி தடவிப் பார்க்க வேண்டியுள்ளது. விடுங்க நான் பள்ளிக்கூடம் திறந்தால் நீங்க தான் நிரந்தர முதல்வர். டீல் ஓகேவா?

  பதிலளிநீக்கு
 8. அருமையான சினிமா பாடல்கள்,, அதற்கேற்ற திருக்குறள் எல்லாம் மிக அருமை.
  உங்கள் சிந்தனை விளக்கம் மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அருமை நண்பா! அருமை. அடுத்த வீட்டு பெண்ணில் ஆரம்பித்து....இரும்பு திரையில் முடித்தாயே...அருமை.

  பதிலளிநீக்கு
 10. உங்கள் சாதனை மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு இந்த பதிவு. அசத்திட்டீங்க

  பதிலளிநீக்கு
 11. அருமையா இருந்தது பதிவு... அருமையான பாடல் தேர்வு.... திருக்குறளை அன்றைக்கும் இன்றைக்குமாய் எப்படி இணைத்துள்ளீர்கள்...

  பதிலளிநீக்கு
 12. அருமையான விளக்கம் அழகான பாடல்கள் தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 13. அஅ-அன்றைக்கு அப்படி
  இஇ-இன்றைக்கு இப்படி
  உஉ-உரைத்தீர் உருப்படியாய்
  வவ-வள்ளுவரின் வழிகாட்டலை
  பொபொ-பொருத்தமாய்ப் பொருத்தினீர்
  திதி-திருத்தமாய்த் திரைப்பாடலை
  பப-படிக்கப் படிக்கலாம்
  குகு-குறளையும் குறளறிவையும்
  நந-நம்புகிறேன் நன்றி!

  பதிலளிநீக்கு
 14. DD! திருக்குறள் அன்றும் இன்றும் என்று அதுவும் எல்லோரும் ரசிக்கும் காதலை எடுத்துக் கையாண்டு மிக அழகான விளக்கங்களுடன் தந்தமை அருமை! திருவள்ளுவர் காதலை எவ்வளவு அழகாகச் சொல்லி உள்ளார்! ஆஹா! சினிமா பாடல்களும் அருமை!வித்தியாசமான சிந்தனைப் பதிவு! கணினிப் பயிற்சிப் பட்டறையுடன் தமிழ் திருக்குறள் வகுப்பும் எடுக்கலாம் நண்பரே! சூப்பர்! ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
 15. திருக்குறளையும், மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்களையும் இணைத்து நல்லதொரு பகிர்வு. வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. அருமையான குறள்களும் ஆழமான கருத்துகளும்
  அதனைச் சிறப்பிக்கும் இனிமையான பாடல்களும்
  மனதில் பதிக்கின்ற உங்கள் திறமையே தனிதான் சகோதரரே!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 17. நாட்டு நடப்பை அறிந்து நல்லாவே விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோதரா :)) வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 18. திருக்குறளை இவ்வளவு விரிவாகப் படித்ததில்லை. காதல் பற்றி வள்ளுவர் சொன்னதையும், இன்றையப் பாடல்களையும் தொகுத்து அசத்தி விட்டீர்கள் தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 19. அப்படினா எல்லா சினிமா பாடல்களுக்கும் முன்னோடி திருக்குறள் என்ட்ரி சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 20. அருமையான பாடல்களுடன் மிகவும் சுவாரஸ்யமான பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம்
  அண்ணா.
  வள்ளுவன் அன்றுசொன்னான்
  காதல் இரசனையை
  இரண்டடி குறள் வெண்பாவில்
  இன்றுமலர்ந்த சினிமா பாடல்கள்
  அன்று மலர்ந்த பொதுமறையும்
  கலந்த கலவை கண்டு மகிழ்ந்தேன்
  மிக அருமையாக அசத்திவிட்டீங்கள்அண்ணா... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 22. திருக்குறளும், பாடல்களும் என எளிதாய் புரிய வைத்து விட்டீர்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 23. அன்றும் இன்றும் என திருக்குறளுடன் இனிய திரைப்பாடல்களின் ஒப்பீடு - அருமை!..
  இன்றைய பதிவு - தனித்துவமாக மிளிர்கின்றது..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 24. அருமையான பகிர்வு. தொடருங்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. குறளே பாட்டுக்கு வித்தாக இருந்திருக்கிறது. அ அ வுக்குப் பாடல்கள். இ இ க்கு இல்லையா. ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 26. மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம்
  புதுமையாய் வித்தியாசமாய் சொல்லிச்சென்ற விதம்
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. திருக்குறளுக்கு ஏற்ற பாடல்களை தேடிப்பிடித்து அதை விளக்கி குறள்விளக்கமும் தந்து கலக்கிவிட்டீர்கள்! சுவையான திருக்குறள் பதிவு! இப்படி படித்தால் எந்த செய்யுளும் கசக்காது! இனிக்கும்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 28. ஐயா, நீங்கள் தமிழ் ஆசிரியராக மாறிவிடலாம். திருக்குறளை இப்படி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால், எல்லோரும் 1330 குறளையும் பொருள் உணர்ந்து சொல்லுவார்கள்.

  பதிலளிநீக்கு
 29. எங்கே துவங்கி எங்கே முடிந்தாலும்
  நம் திருக்குறளைத் தாண்டி எதையும் சொல்லி விட முடியாது
  என்பதை அழக்காகச் சொல்லி இருக்கிறீர்கள் தனபாலன் அண்ணா.
  அருமை.

  பதிலளிநீக்கு
 30. எப்படிச் சொல்ல டிடி
  மிக நன்று நன்றாக விளக்கியுள்ளீர்கள்.
  அருமை...அருமை.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 31. திருக்குறளையும் மனதிற்குப் பிடித்தப் பாடல்களையும் இணைத்து அருமையான பதிவு ஐயா
  மீண்டும் மீண்டும் படித்தேன் ரசித்தேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 32. அருமையான விளக்கங்கள். குறிப்பறிதல் அதிகாரம் காமத்துப்பாலில் வருது தெரியும், பொருட்பாலிலும் இருப்பதை இப்போதே அறிந்து கொண்டேன். :)))) நீங்க இந்தப் பதிவின் கடைசியில் கொடுத்திருக்கும் குறள் "நகுதற்பொருட்டன்று" மிகவும் பிடித்த குறள். ஆனால் அப்படி நடந்துக்கறச்சே பிரச்னை தான் வருது. :))))

  பதிலளிநீக்கு
 33. ஒவ்வொரு பதிவும், முத்துக்கள். அருமையான நல்முத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 34. இந்த புரிதலில் தானே அண்ணா மொத்த வாழ்க்கையின் இரகசியமும் அடங்கி கிடக்கிறது

  பதிலளிநீக்கு
 35. ஆஹா... அழகான விளக்கம்....
  அருமை....
  இப்படிச் சொல்லிக் கொடுத்தால் அனைவருக்கும் திருக்குறள் எளிதில் புரியும்...

  பதிலளிநீக்கு
 36. திருக்குறள்கள் திரைப் பாடல்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 37. குறளும், குறளுக்கு இணையான திரைப் பாடல்களும், மிகவும் அருமை ஐயா.

  பகிர்வுக்கு நன்றிகள் பல ஐயா.

  பதிலளிநீக்கு

 38. வள்ளுவன் நேரில் வந்தால் முதலில்
  உங்களைத்தான் வாழ்த்துவான்! தனபால் ! வெறென்ன சொல்ல!

  பதிலளிநீக்கு
 39. அட.. அட.. அருமை. குறளும் பாடலும் அருமை. அனைத்தையும் ரசித்தேன். அடுத்த பகுதியும் இதே போல் எங்கள் உள்ளங்களை மகிழ்ச்சிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 40. வள்ளுவரும் இப்படித்தானா..வயதுதான் எத்தனை முகமூடி போட்டுக்கொள்கிறது..இதுபக்குவமா?அல்லது பகல் வேடமா?

  பதிலளிநீக்கு

 41. நண்பருக்கு, நான் இரண்டுமுறை கருத்துரை அனுப்பி விட்டேன் ஏன் வரவில்லை ?

  பதிலளிநீக்கு
 42. அ அ இ இ படித்து அசந்தேன் :) அருமை தனபாலன் சகோ திருக்குறளும் பாடல்களும் பொருத்தம் அருமை.

  பதிலளிநீக்கு
 43. ஒரே கருத்தை பல விதங்களில் பயன்படுத்திய முதல் தமிழ் எழுத்தாளர் வள்ளுவரோ?

  பதிலளிநீக்கு
 44. திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்கள் சொன்னதை நானும் வழி மொழிகின்றேன்.

  பதிலளிநீக்கு
 45. " மிகவும் புதுமையான அருமை திருக்குறள்
  விளக்கத்தில் தமிழ் பாட்டு "

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

  http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

  ( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

  பதிலளிநீக்கு
 46. திருக்குறளுக்கு ஒரு புது உரை போடலாம் போலிருக்கே!

  பதிலளிநீக்கு
 47. விளக்கங்கள் மிகவும் பொருத்தமாக உள்ளன. ஊடே நீதி நெறி வகுப்பினைப் போல மனதில் பதியும் பல கருத்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 48. குறளும் திரையும் என்ற தலைப்பில் ஒரு புத்தகமில்லை,பத்து புத்தகங்கள் போடவேண்டிய அளவு செய்தி கொடுக்கிறீர்கள் தனபாலன். அத்தனையும் தேன் சுவை. மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 49. இலக்கியக் கனியின் சாறெடுத்து அன்று திரைப்படப் பாடல்கள் இயற்றினர். குறளமுதம் பொருத்தமான பாடல்களுடன்! பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 50. காலத்திற்கேற்ப பாடலையும் குறளையும் தந்து அதற்கேற்ப நல் விளக்கமும் தந்தால் யாருக்கு கசக்கும் அசத்திட்டீங்க சகோ
  வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 51. பல அருமையான பாடல்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 52. மிகவும் அருமை சார்.ஆனால் எப்படி சார் இப்படி எழுத முடியுது உங்களால் மட்டுமே முடியும்.பேசாம ஆசியராக இருந்திருக்கலாம் நீங்க!

  பதிலளிநீக்கு
 53. மீண்டும் திருக்குறள்… நான் மிகவும் விரும்பும் பகுதி இதுதான், எனது தந்தையும் மிகவும் விரும்புவார் ! ஒவ்வொரு குறளும், அதற்க்கு தகுந்த பாடலும் என்று எப்படித்தான் உங்களுக்கு முடிகிறதோ !

  குரல் 1094 மிகவும் அருமை சார், அந்த காலத்தில் பாடல்கள் எல்லாம் எவ்வளவு அழகு என்று உங்களது பதிவுகள் படித்தால் மட்டுமே தெரிகிறது !

  பதிலளிநீக்கு
 54. அ அ ...இ இ ...குறள்களும் விளக்கங்களும் மிகச் சரியாக வெகு பொருத்தமாக இருக்கின்றன. திரைப்பாடல்களை நினைவில் வைத்துக் கொண்டால் குறள் நினைவுக்கு வரும் போலிருக்கிறதே!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.