🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தேடலும் ஆய்வும்...

அனைவருக்கும் வணக்கம்... எனும் பதிவில், திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண் 7 எனும் ஓர் இலக்க பகா எண் என்பதை விளக்கச் சற்றே விளையாடவும் செய்தேன்...! ஆனால் முப்பால், இயல்கள், அதிகாரங்கள், குறள்கள், போன்றவற்றின் எழுத்துக்களிலும், இவை வரிசைப்படுத்திய எண் வரிசைகளிலும், உரையாசிரியர்களின் விளையாட்டு எண்ணிலடங்கா...! ஆம், வேறுபாடுகள் பலபல... அவற்றில் சிலவற்றை மட்டும் இந்தப் பதிவில் அறிவோம்...


ஐயன் இட்ட பெயரான 'முப்பால்' எனும் திருக்குறளை எடுத்துக் கொண்டால் காமத்துப்பாலை, இன்பத்துப்பால் அல்லது இன்பப்பால் என்று சிலர் சொல்லி இருப்பதும், அது தவறு என்பதைப் பலரும் நிரூபித்துள்ளார்கள்... இயல் பகுப்பில் காணும் வேறுபாடுகளை நோக்கும்போது இவை ஐயன் கொண்டவை அல்ல எனும் ஐயமும் வருகிறது...! இதைப் பற்றிய சிறு விளக்கம் கொண்ட விக்கிப்பீடியா இணைப்பு அடுத்து அதிகாரங்கள் பகுப்பு முறைகளை எனும் மூன்று பதிவுகளில் அறிந்தோம்... மேலும் மை தொகுப்பில் : ஈகை, புகழ், தவம், வாய்மை, துறவு போன்ற 5 அதிகாரங்களையும் 'உடைமை' என்பதைச் சேர்த்துக் கொள்கிறார் மணக்குடவர்... 110.குறிப்பறிதல் அதிகாரத்தை குறிப்புணர்தல் என காலிங்கர் உரையின் படி பதிவில் ஒரு முடிவிற்கு வந்தோம்...! காலிங்கர் பரிமேலழகருக்குக் காலத்தால் முந்தியவர்; பரிமேலழகரோ அல்லது அவரது ஏட்டை மீள்பதிவு செய்தோரோ ‘குறிப்புணர்தல்’ என்பதைத் தவறுதலாக ‘குறிப்பறிதல்’ என்று எழுத, இன்று வரை தொடர்கிறது... இது ஒருபுறம் இருந்தாலும், இணையம் வந்த புதிதில் சென்ற பல வலைதளங்களில் ஒன்று : இதில் அதிகாரம் 70. மன்னரைச் சேர்ந்தொழுகல் என்பதை மன்னரைச் சேர்ந்தொழுதல் என்று...! முருகா...!

குறள்களை எடுத்துக் கொண்டால் எடுப்பார் கைப்பிள்ளை என்று சொல்கிறது நம் ஊமைக்கனவுகள் வலைப்பூ நண்பரின் அங்கு "திருக்குறளை கரத்தில் ஆரம்பித்து கரத்தில் முடிந்திருக்கிறார் என்று சொல்வது முற்றிலும் பொருந்துமா?" என்று கேள்வி வைக்கிறார்... அதே பதிவில் அவரின் ஒரு கருத்துரை, அதிகாரம் 7 : "மக்கட்பேறா? புதல்வரைப் பெறுதலா?" என்று எழுத நினைத்த பதிவு அவசியமில்லை எனச் சொல்லிவிட்டது... சரி, இதுவரை 33 அதிகாரங்களின் உட்கருத்தைக் கொண்டு, ஏதோ எளிதாகப் புரியும் வகையில் குறளின் குரலாகப் பகிர்ந்துள்ளேன்... இப்போதுள்ள அன்புடைமை அதிகாரத்தின் குறள்களின் வரிசைப்படி குறளின் குரல் பதிவுகள் என்றோ எழுதி வைத்திருந்தாலும் பல வருடங்களாகப் பகிரவில்லை; காரணம் குறள்களின் எண் வரிசையில் இட மாற்றம்... இதன் விக்கிப்பீடியா இணைப்பு : இது போல், முதல் உரைகாரர் மணக்குடவரின் குறள் வைப்பு முறைக்கும், இப்போது உள்ள குறள் வைப்பு முறைக்கும், பல அதிகாரங்களில் வேறுபாடுகளும், காமத்துப்பாலில் அதிகாரம் விட்டு அதிகாரம் மாறின குறள்கள் கொண்ட உரைகளும் உள்ளன... மேலும் விக்கிப்பீடியாவில் 10ஆம் நூற்றாண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை உள்ள இந்த திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல், மணக்குடவர், காலிங்கர், பரிதியார், பரிப்பெருமாள், பரிமேலழகர் உரைகள் என ஒவ்வொன்றிற்கும் இணைப்புகள் உள்ளன... திருக்குறள் உரைகளைப் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருக்குறள் மெய்ப்பொருளுரையைக் கட்டாயம் படிக்க வேண்டும்... நான்கு பகுதிகள் கொண்ட இணைப்பு

பழம் உரையாசிரியர்கள் உரைகள் உட்பட 119 கோப்புகள் உள்ளடங்கிய ஓர் நன்றி : ... இதுவரை கொடுக்கப்பட்ட இணைப்புகளும், இதற்குப் பின் தொடரும் பதிவுக்கேற்ப கிடைக்கும் இணைப்புகளும், வருங்கால ஆய்வாளர்களுக்கு உதவும் எனும் நம்புகிறேன்... சரி, "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...?" எழுத்துகளை விடச் சற்றே ஒரு படி எண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முப்பால், இயல்கள், அதிகாரங்கள், குறள்கள், இவற்றுக்கு எண்களால் கொடுத்த வரிசையும், குறளின் சொற்களைக் கூட கணக்கிட்டுக் கட்டமைத்து உள்ளாரா ஐயன்...? இதற்கான ஆய்வுகள் கிடைத்தவற்றை வைத்து மேலும் தேடலும் ஆய்வும் செய்ய வேண்டும்... எனக்குத் தெரிந்த கணக்கியல் மூலம் தொடர்கிறேன்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அசத்துகிறது உங்கள் குறள் மீதான ஈடுபாடு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  2. காரைக்குடியில் கம்பர் சங்கம் உள்ளது. பேச வாய்ப்பு வாங்கித் தருகிறேன். போகிறீர்களா?

    பதிலளிநீக்கு
  3. அருமை ஜி வழக்கம்போல் வியப்பாக இருக்கிறது வாழ்த்துகள் சிகரம் தொட...

    பதிலளிநீக்கு
  4. உரையாசிரியர்களின் விளையாட்டின்மீதான உங்கள் ஆர்வம் நாங்கள் பல புதியனவற்றை அறிய உதவுகிறது.

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆராய்ச்சி.  நல்ல தொகுப்பாய்வு.  வியக்க வைக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. உங்கள் திருக்குறள் ஆராய்ச்சி யாவுமே வியக்க வைக்கின்றன. எத்தனை நுணுக்கமான அடிகளுடன் திறம்பட இந்த ஆய்வை மேற்கொள்ளுகிறீர்கள் என்பது புரிகிறது. படிக்கும் காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட ஆசான் கிடைத்திருந்தால் தமிழறிவு கொஞ்சமாவது முன்னேறியிருக்குமே என்ற ஆதங்கம் என்னுள் எழுகிறது. இப்போது உங்கள் முயற்சியில் நானும் ஒரு பள்ளி மாணவியாக பயின்று வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. குறளுக்கு விளக்கவுரை என்பது நீண்ட தேடல் கொண்டது . உங்களின் குறள் ஆராய்ச்சி வியப்புக்கு உரியது . வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா ... தங்களின் கருணையால் "பாவலரேறு பெருஞ்சித்திரனார்" அவர்களின் பல நூல்களை அறிந்துகொள்ளும் பாக்கியம் பெற்றேன் ... நன்றி ! நன்றி !! நன்றி !!!

    பதிலளிநீக்கு
  9. படிப்போருக்கும் ஆய்வாளருக்கும்
    பயனுள்ள தகவல் நிறைந்த சிறப்புப் பதிவிது.
    திருக்குறள் பற்றிய ஆய்வு அருமை

    பதிலளிநீக்கு
  10. தகவல்கள் அருமை.. பாவலரேறு நூல்ககளை அறியத் தந்தமைக்கு.....

    பதிலளிநீக்கு
  11. தொடரும் திருக்குறள் ஆய்வு வழக்கம் போல் அருமை. உங்களின் திருக்குறள் ஆய்வை அமேசானில் மின்புத்தகமாக பதிப்பித்துள்ளீர்களா .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.