🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉பொறை...

அனைவருக்கும் வணக்கம்... வலிமையுள் வலிமை எது...? பொறுமை காப்பது கோழைத்தனமா...? புறங்கூறுபவர்களாலும், நற்பண்புடையவர்கள் குறைவதாலும் உலகின் நிலை என்னவாகும்...? பொறுமை காக்கப் பேராற்றல் படைத்தவர் யார்...? தம்மை இகழ்ந்து பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக் கொள்ளுதல் தலையாய பண்பு என்பது, தனது மேலேயே நின்று தன்னை ஆழமாக வெட்டி அல்லது குழிதோண்டுபவர்களையும் சாய்த்துவிடாமல் தாங்கிக் கொள்ளும் நிலம் போல இருக்க வேண்டும் என்பதே :
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
அத்தகைய நிலமே சுமையாகக் கருதும் மூவர் யார் ?
'பொறை' எனும் சொல் உள்ள அனைத்து குறள்களின் குரல் :


16.பொறையுடைமை : 153. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
16.பொறையுடைமை : 154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும்
19.புறங்கூறாமை : 189. அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை

153.uniAmma-13; font-size: 14pt;">153:- ஒருவன் வறுமையில் வாடி மிகவும் துன்பம் தருவதை விடக் கொடியது, விருந்தோம்பலைச் செய்ய முடியாமல் இருக்கும் சமயம், அவன் தனது அனைத்து வலிமையையும் இழந்து விட்டதாக எண்ணுவான்... இந்த சூழல் வலியின்மையுள் வலியின்மை அல்லது வறுமையுள் வறுமை... அதே நேரத்தில் அறிவற்றவர்கள்# செய்யும் பலவித வரம்பு மீறல்களைப் பொறுத்துக் கொள்வதே வலிமையுள் வலிமை... 154:- அறிந்தோ, செருக்காலோ, அல்லது மடமையாலோ, பிறர் நமக்குச் செய்த தீமைக்குச் சினம் தோன்றி, பல்லுக்குப் பல், அடிக்கு அடி, உதைக்கு உதை என்று தோன்றுவதெல்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பே... அதற்காகப் பொறுமை நீங்கி, அதை வெளிக்காட்டினால் நிம்மதி உண்டாகும் என்று நம்புவதும் தவறு...! பொறுமை காப்பது கோழைத்தனமல்ல; மனத்தை ஒருநிலைப்படுத்தும் உயர்பண்பும் உறுதிப்பாடும், நற்குணங்களால் நிறைந்திருக்கும் தன்மை, அடக்கமுடைமையாகிய மிகையுடைமை, சால்புடைமை, பெருந்தன்மை, நிதான குணம் உள்ளவன் என்ற பெருமை, போன்றவற்றையெல்லாம் நீங்காதிருக்க வேண்டின் பொறுத்துக் கொள்ளும் தன்மையைப் போற்றி ஒழுக வேண்டும்... 189:- ஒருவர் இல்லாத போது, அவரைப் பற்றி படுமோசமாகப் பேசுகிறவர்கள் மனிதர்கள் இல்லை... அவர்களின் உடல் சுமையைக் கூட இந்த உலகம் பொறுத்துக் கொண்டிருக்கிறதே, அது அறம் கருதிப் போலும்...! இல்லறவியலுக்கு ஒரு பாடலின் ஆரம்ப பகுதி :
எல்லாருமே திருடங்கதான் - சொல்லப்போனா குருடங்கதான் - நம்ம நாட்டுல - நடு ரோட்டுல - வீட்டுல - காட்டுல - எல்லாருமே திருடங்கதான் - சொல்லப்போனா குருடங்கதான் - பொன்னான பாரதம் புத்திக் கெட்டு போச்சுடா - சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா...? எல்லாரும் இந்நாட்டு மன்னன் இல்ல மன்னன் இல்ல...
57.வெருவந்த செய்யாமை : 570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை
58.கண்ணோட்டம் : 572. கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை
74.நாடு : 733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு


570:- வெங்கோலனின் ஆட்சியை அறிவற்றவர்கள்# விரும்பிச் சூழ்வர்... மொத்த மூடர்களும் செய்யும் அந்த கடுங்கோல் ஆட்சி, பூமிக்குச் சுமையாவது அதுவன்றி வேறொன்று இல்லை... 572:- உலகத்து உயிர்களது இயக்கம், இரக்கப் பண்பெனும் கண்ணோட்டத்தில் நடைபெறுகின்றது... மனிதநேய அறமான கண்ணோட்டம் இல்லாதவர்கள் பூமிக்குச் சுமையே... 733:- அனைத்து மக்களுக்காக உண்டானதே அரசியல் அமைப்பு... அரசு உடல் என்றால் மக்கள் உயிர்... அப்படி அமையும் நாட்டில், மக்கள் தம் நாட்டிற்கு எத்தகைய கேடு நேர்ந்தாலும் அவற்றைத் தாங்குவதற்கு, அரசுக்குத் தேவைப்படுகிற அனைத்து வகை வரிப் பொருள்களையும் தரத் தயங்க மாட்டார்கள்... அத்தகையது வளமிக்க நாடு என்றும், நேர்மையாக நடந்து கொள்ளும் மக்களின் நாட்டுப்பற்றையும் உடையதே நாடு என்பர்... உழவனையும், உழைக்கும் மக்களையும் மிதிக்கும் எந்த நாடும் கனவில் கூட நல்லரசு ஆகாது என்பதையும், பற்பல வளங்கள் இருந்தாலும், "எவரால் பயனே இல்லாமல் போகும்...?" என்பதையும், அறியலாம்... அரசியல், அரணியலுக்கு அதே பாடலின் நடுப்பகுதி :
பந்தலும் மேடையும் போட்டுகிறான் - ஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான் - ஓட்டுகள் போட்டிட கேட்கிறான் - 'அத'ப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான் - எல்லாமே வேசம்தான் - ஏதேதோ கோசம்தான் - எங்கேயும் தில்லுமுல்லு திண்டாடுது தேசம்தான் - எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும்...? - அப்பாவி மனுசனெல்லாம் சிவப்பா மாறணும் - ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல - புத்தனும் இல்ல... ஹே ஹே ஹேய்...
099.சான்றாண்மை : 990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான் தாங்காது மன்னோ பொறை
101.நன்றியில்செல்வம் : 1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை
103.குடிசெயல்வகை : 1027. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து ஆற்றுவார் மேற்றே பொறை


990:- நிறைகுடம் போல் நற்பண்புகள் உடையவர்களின் இயல்பு குறையத்தொடங்கினால், இந்தப் பெரிய நிலவுலகமும் பொறுமையிழந்து தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்... 1003:- பற்றுள்ளம் கொண்டு செல்வங்கள் சேர்த்து வைப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இரக்கம் எனும் >புகழை விரும்பாதவர்கள், பிறந்து வாழ்தல் பூமிக்குச் சுமையே... 1027:- எத்தகைய தாக்குதலுக்கும் அஞ்சாமல் பொறுப்புடன் படை நடத்தும் ஆற்றலைப் போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்யும் பேராற்றல் இருப்பவரே, அவற்றின் சுமையையும் தாங்கிக் கொள்ள முடியும்... குடியியலுக்கு அதே பாடலின் முடிவுப்பகுதி :
எத்தனை எத்தனை சாமியடா - இதில் என் மதம் உன் மதம் சண்டையடா - எத்தனை எத்தனை சாதியடா - இதில் முட்டுது மோதுது மண்டையடா - கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு - எல்லாரும் கோயில் கட்டி இங்க இப்போ என்னாச்சு...? - தன்னால புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் திருந்தணும் - இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும் - அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன - புண்ணியமில்ல... ஹே ஹே ஹேய்...
வள்ளுவர் தாத்தா குறள் பாட, வாசுகி பாட்டி விளக்கம் சொல்ல, இளையராஜா பாடுகிறார்...!

© நான் சிகப்பு மனிதன் வாலி இளையராஜா இளையராஜா @ 1985 ⟫


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமை. பூமிதான் எவ்வளவு பொறுமையோடும் கருணையோடும் நம்மைக் காக்கிறது. குறள் விளக்கமும் பாடல் தேர்வும் அருமை

  பதிலளிநீக்கு
 2. பொறுமை என்றாலே பூமிதானே! குறள் விளக்கம் அருமை டிடி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி... இதையே இனி வரும் கருத்துரையாளர்கள் சொல்வார்கள்... அதாவது பதிவின் சாரத்தை உண்மையாக உணர்ந்தவர்கள் + விருப்பத்துடன் முழுமையாக வாசித்தவர்கள் + கூடுதலாக கேட்பொலியை கேட்டவர்கள் என பலரின் கருத்துக்களையும் அறிய ஆவலாக உள்ளேன்... நன்றி தோழர்...

   நீக்கு
  2. உங்கள் திறமைக்கு விமர்சனம் எழுதும் தகுதி எனக்கில்லை.

   நீக்கு
 3. அருமையான தொகுப்பு ஜி

  வாசுகி பாட்டியின் குரல் இனிமை.

  வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 4. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. என்பதால்தான்... இயற்கையால் படைக்கப்பட்ட அனைத்தும் ஒரு நாள் மண்ணோடு மண்ணாக.. ஆகிவிடுகிறது.. என்று நிணைக்கிறேன்.அதையும் திரு வள்ளுவர். எழுதியிருப்பார்.

  பதிலளிநீக்கு
 5. தம்மை இகழ்ந்து, பழித்துப் பேசுபவர்களையும் தாங்கிக்கொள்ளுதல் தலையாய பண்பு..  பொறுமை காப்பது கோழைத்தனமல்ல.  மனதை ஒருநிலைப்படுத்தும் உயர்பண்பும் உறுதிப்பாடும்.  

  மனதில் நின்ற, ரசிக்கவைத்த வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் கடினமான ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள்... அருமை + உண்மை என்பதை விட சிறப்பு... நன்றி...

   நீக்கு
 6. எதையும் தாங்கும் நிலமே சுமையாய்க் கருதும்படி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்னும் வள்ளுவர் வாய்மொழியை இன்றைய நாட்டு நிலையோடு இணைத்துக் காட்டிச் சொன்ன விதம் அருமை!

  இந்தத் திருக்குறள் ஒலிக்கோவைகளெல்லாம் எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ!

  பதிலளிநீக்கு
 7. வள்ளுவர் குறள் சொல்ல
  வாசுகி விளக்கம் கொடுக்க, அதை அழகாய் வாலி பாடல் வரிகள் ஆக்கியதும் இளையராஜா இசை அமைத்து அருமையாக் பாடி விட்டார்.

  சுபதினம் என்ற படம் என்று நினைக்கிறேன் அதில் ஒரு பாடல் அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தனக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்,
  வள்ளுவர் பிறந்து குறளை சொன்னால் அறிவுக்கு அதுதான் சுபதினம் என்ற வரிகளை நினைத்துப் பார்க்க சொல்கிறது பதிவு.
  அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 8. பொறுத்தார் பூமியாள்வார் என்று எங்கள் ஆத்தா சொன்னது நினைவிற்கு வந்தது. பல இடங்களில் நான் காத்த பொறுமை என்னைக் காப்பாற்றியது. சில சூழல்களில் பொறுமை இழந்து தவறு செய்த அனுபவமும் உண்டு. பின்னர் என்னை திருத்திக்கொள்ள ஆரம்பித்தேன். பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்தால் இப்போதெல்லாம் ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பிக்கின்றார்கள். அதனை அனுபவத்தில் உணர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. பொறையுடைமை அதிகாரத்தில் இருந்து குறள்களும் விளக்கமும் மிகவும் சிறப்பு. வலைதளம் மிகச்சிறப்பு. அழகான வடிவமைப்பு. வாழ்த்துகள்! அன்புடன் நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.( தளிர் சுரேஷ்)

  பதிலளிநீக்கு
 10. அப்பாவி மனுசனெல்லாம் "சிவப்பா" மாறனும் ... உண்மை ... (பாரதியின் "ருத்திரம் பழகு") ...

  தங்களின் குறள் வளத்தைப்போல் வாசுகி பாட்டியின் குரல்வளமும் இனிமை.

  பதிலளிநீக்கு
 11. குறள் விளக்கம் வழக்கம் போல் அருமை. நன்றி

  பதிலளிநீக்கு
 12. பொறுமைதான் வலிமை! ஆனால் அதுவும் ரொம்ப சோதிக்கப்படுகிறதே! அது வலிமையல்ல கோழைத்தனம் என்று தவறாக நினைக்கும் 'அறிவற்றவர்களால்'! ஆனால் ஒன்று நிச்சயம், பூமித்தாயின் சுமை அதிகமாகிக் கொண்டே போகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.