🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



என்னது மறதியா...?

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பதிவின் முக்கிய சாரத்தை முழுவதுமாக உள்வாங்கி, அருமையான கருத்துரைகளை வழங்கிய அனைவருக்கும் நன்றி... வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கிச் சென்று கருத்துரைகளையும் வாசித்துச் சிந்திக்கலாம்... மறதியைப் பற்றி எழுதக் காரணம், பதிவின் முடிவில் கொடுத்த ஓர் இணைப்பு...! அதையும் வாசித்தவர்களுக்கு நன்றி... அதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று, மனதுடன் ஓர் விவாதம்...!


531: மிக்க சினத்தைக் காட்டிலும் மட்டற்ற மகிழ்ச்சியால் உண்டாகும் மறதி கொடியது... 532: வறுமை அறிவைக் கெடுக்கும்; மறதி புகழைக் கெடுக்கும்... 533: மறதியுடையோர் புகழுடன் வாழ மாட்டார்; இது அறிஞர் கண்ட முடிவு... 534: அச்சமுடையோர்க்குப் பாதுகாப்பால் பயனில்லை; மறதியுடையோர்க்குச் செல்வத்தால் பயனில்லை... 535: துன்பங்கள் வருமுன் காக்க மறந்தவன், பின்னர் இரக்கப்படுவான்... 536: எவரிடத்தும் எப்போதும் தப்பாமல் மறதியற்று இருக்க வேண்டும்... 537: மறதியில்லாத மனத்தோடு ஆராய்ந்து செயல்படுபவருக்கு ஆகாது செயல் இல்லை... 538: புகழ்ந்து கூறப்பட்டவற்றை மறந்தோர்க்கு எப்பொழுதும் நன்மையில்லை... 539: மகிழ்ச்சியில் ஆள்வோர்கள், செய்ய வேண்டியதை மறந்தால் கெட்டு விடுவர்... 540: மறதியில்லாமல் ஒன்றைத் தொடர்ந்து நினைப்பவன், அதனை எளிமையாகப் பெறுவான்...

ஏன்டா டேய், என்னடா இது பித்தலாட்டம்...! என்னமோ எல்லாருக்கும் மறதி வந்தே தீரும்-ன்னு சொல்ற மாதிரி இருக்கு...?! தாத்தா இப்படியெல்லாம் சொல்லலையே... என்னமோ ஆச்சி... முருகா காப்பாற்று...!

பொச்சாவாமை அதிகாரத்தை, குறளின் குரலாக எழுதலாம் என்று, பலரின் உரைகளைப் படித்தேன்... பழனி தண்டாயுதபாணியைக் காப்பாற்றப்பட வேண்டுமே என்கிற நினைவு அதிகம்... சிந்தனை தடுமாற்றம்... இப்போது நீ வந்ததால் தெளிவாகலாம்...(!) எனக்கும் கூட தொல்லாசிரியர்களின் உரைகளில் சிலவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... அதனாலே சுருக்கமாக திருக்குறள் கேட்பொலி கேட்டு எழுதி விட்டேன்...!

அடேய்... உன் மனமாகிய நானே எதுவும் நினைக்கல... கல்வி, மொழி, இயற்கை எனப் பலவற்றையும் சீரழிக்கும் பொல்லாதவரையும் முருகன் பொடி பொடி ஆக்குவார், நீ கவலைப்படாதே... ஆத்தாடி... உன்னோடு சேர்ந்து சொல்ல வேண்டியதை மறந்துவிடுவேன் போலிருக்குதே... நல்லவேளை படைப்புகளைப் படித்து, படைப்பாளிகளை விமர்சிக்காமலிருந்தாயே... மகிழ்ச்சி... என்ன சந்தேகம் உனக்கு...?

இல்லேப்பா... உரை, மக்களுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று நினைத்து விட்டேன்... மீண்டும் படித்து விடாதே... !

ஐயகோ... மக்களில் நீயும் ஒருவன்... சரி 532, 533, 534, 537 குறள்களில் 'பொச்சாப்பு'-ன்னு சொல் இருக்கிறதா...? அது மறதியைக் குறிக்குமா...? யோசி... அப்படியே குறள் முழுக்கவே தேடி, அங்கு எதற்காகச் சொல்லப்பட்டது என்று ஆய்வு செய்... 199, 246, 285, 719 குறள்களிலும் இருக்கும்... இப்போது இன்னும் தெளிவா யோசி...!

எனக்கெல்லாம் சிறிய குறள் விளக்கமாவது வேண்டும் :- 199: தெளிந்த அறிவுடையவர் மறந்தும் பயனற்ற, பொருளற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்... 246: அருளுக்கு மாறான செயல் புரிபவர், அறமும் கடமையும் மறந்தவர் ஆவர்... 285: பொருள் கருதி பிறர் சோர்ந்திருக்கும் நேரம் எதிர்பார்த்து வஞ்சனை செய்பவருக்கு, அன்பும் அருளும் இல்லை... 719: நல்ல அவையில் நற்பொருள் சொல்ல வல்லவர், அறிவற்ற பொல்லாதோர் அவையில் மறந்தும் பேசக் கூடாது... அடடே...! இவை எந்த கொடுங்கோல் அரசிற்கும், அதற்கு முட்டுக் கொடுக்கும் மூடர்களுக்கும் பொருந்துகிறதே...! மன்னிக்கவும் மனமே... இன்னும் யோசிக்கிறேன்... ம்ம்... இது வருவது அரசு + இயலில் = அரசியலில்... இதற்கு முந்தைய அதிகாரம், சுற்றத்தோடு வாழும் சிறப்பை விவரிக்கும் சுற்றந்தழால்... அதன் முடிவில், அதாவது குறள் 530: வேந்தனிடமிருந்து காரணமின்றி பிரிந்து விட்டு மீண்டும் சேருபவனை ஆராய்ந்து தான் முடிவெடுக்க வேண்டும்... என்று முடிகிறது... இதற்கு பிந்தைய அதிகாரம், நல்லாட்சி மற்றும் கொடுங்கோல் ஆட்சி அரசாங்கத்தைப் பற்றிய செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்கள்... சுற்றந்தழால், செங்கோன்மை அதிகாரங்களுக்கிடையே, மறதியையா ஐயன் ஒரு நாட்டின் தலைமைக்கோ அல்லது குடிமகனுக்கோ முக்கியப்படுத்தினார்...?

அப்படிக் கேள்...! அப்புறம் தாத்தா சொன்ன "எவற்றையெல்லாம் மறக்க வேண்டியது, எவற்றையெல்லாம் மறக்கக் கூடாதது" பற்றி ஒரு பதிவு போடு... அதிலே மறதியைக் குறிக்கும் சொல், ஒரே ஒரு இடத்தில் இருக்கிறது...! சந்திப்போம்...! எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்355 | எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்423 - ஐயன் சொன்னதை மறக்காமல் 'பொச்சாப்பு=?' என்னவென்று கணித்தவரின் விளக்கங்களோடு, ஒரு நாட்டின் தலைமைக்கோ அல்லது குடிமகனுக்கோ பொருந்தும் படி, இதே அதிகாரத்தை இன்னொரு முறை சரியாக எழுது...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மறதி என்பது எதெதில் இருக்கக் கூடாது என்று விளக்கி இருப்பது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. பல நண்பர்கள் என்னிடம் அலைபேசியில் பேசும் போது சொன்ன சொல்லும் வார்த்தைகள் இது. உங்க எழுத்தை பதிவை படித்தேன். படிக்கிறேன். ஆனால் விமர்சனம் செய்வதில்லை. என்ன எழுதுவது என்றே எனக்குத் தெரியவில்லை என்பார்கள். அப்படித்தான் உங்கள் பதிவும் உள்ளது. ஒரு சின்ன சந்தேகம். உங்கள் பதிவுகளை தமிழ் முதுகலை மற்றும் முனைவர் யாராவது படிக்கின்றார்களா? தொடர்பில் இருக்கின்றார்களா? ச்சும்மா வெறுமனே நல்லாயிருக்கு அருமையாகயிருக்கு என்று சொல்லி எனக்கு போர் அடித்து விட்டது. பிரமிப்புடன் கடந்து செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே... குறளின் மூலச்சுவடி கிடைத்திருக்கிறதா...? என்று தெரியவில்லை... உரையாசிரியர்கள் தங்கள் கருத்துக்கு ஏற்ப, அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி, அவர்களின் கருத்துக்களை உரைகளில் புகுத்தியுள்ளனர் என்பது வேறு கதை...! இது போல் எழுதிய வேண்டியவை சிலவற்றை, குறித்து வைத்துள்ளேன்... குறள்கள் → 380 vs 620 ← பற்றிச் சொல்லி விட்டேன்... அவ்வப்போது வரும்...! நன்றி...

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. மறதியினால் வரும் தீங்கை குறித்து மறக்காமல், எத்தனை குறள்களை அலசி ஆராய்ந்திருக்கிறீர்கள்.

    குறள்களை படித்து ஆழ்ந்து பிரித்தறியும் உங்களின் ஆற்றல் வியக்க வைக்கிறது. திகைப்புடன் பதிவை படித்தேன். உங்களுக்குள் வரும் பேச்சுக்கள் கலந்தாலோசனை என பதிவுக்குள் ஒரு குட்டி பட்டிமன்றம். ரசித்தேன். இத்தகைய சிந்தனை வயப்பட உங்கள் ஒருவரால் இயலும். வாழ்த்துகளுடன் பாராட்டுகளும். இன்னுமொரு முறை ஆழமாக படிக்கத்தூண்டும் பதிவு.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. மறதி குறித்த பதிவு அருமை ஜி

    மனிதனுக்கு மறதி சில விசயங்களில் வேண்டும், சில விசயங்களில் கூடாது.

    செய்த உதவிகளை மறந்து விடவேண்டும்.

    பெற்ற உதவிகளை மறக்கவே கூடாது.

    பதிலளிநீக்கு

  5. ஸிக்னல் இன்னும் சுழன்று
    கொண்டே இருகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அந்தப் பதிவு வரப்போகிற இரு பதிவுகளுக்கும் காரணம் ஜி... ரொம்ப நாளாகவே இந்த அதிகாரத்தை எழுத வேண்டும் என்று நினைப்பேன்... ஆனால், அதற்கென்று ஒரு நேரம் இப்போது தான் வாய்த்திருக்கிறது... நன்றி ஜி...

      நீக்கு
  6. பொச்சாவாமை அதிகாரமா...??? என்னவென்று புரியவில்லை...தங்ககாப்பு இருந்தால் வித்து திங்கலாம்..பொச்சுகாப்பு இருந்தால் வித்து திண்ணமுடியாதே! என்றுதான் கேள்வி பட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மறதி இன்று நம் தேசிய வியாதியாக அல்லவா போய்விட்டது

    பதிலளிநீக்கு
  8. Thulasidharan V Thillaiakathu ← டிடி மறதி பற்றிய இந்தப் பதிவு அத்தனை எளிதாக என் புத்திக்கு விளங்கவில்லை. அம்புட்டுத்தான் என் அறிவு! என் தலைக்குள் தோன்றுவது முழுவதும் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்தவை ஆனால் நீங்கள் சொல்ல வருவது வேறு வகை என்று தெரிகிறது. மறக்கக் கூடாதது, மறக்க வேண்டியது பற்றிய அடுத்த பதிவு வரை காத்திருக்கிறேன். கீதா

    மன்னிக்க வேண்டும் சகோதரி... உங்களுக்குக் கொடுத்த எழுத்துப் பிழையுள்ள எனது மறுமொழியை 'நீக்கு' சொடுக்குவதற்குப் பதிலாக, கருத்துரையில் 'நீக்கு' சொடுக்கி விட்டேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன சிந்தனை தான் சகோதரி... பொச்சாவாமை அதிகாரம் என்ன சொல்கிறது...? அதில் 3 குறள்களில் வரும், "பொச்சாப்பு" என்றால் மறதியா...? மறதி தான் என்றால், மற்ற அதிகாரங்களில் வரும் 4 குறள்களிலும் அவ்வாறே தானா...? சரி, மறந்து விடுங்கள்... ஆனால் ஒரே ஒரு கேள்வி :- ஆமா, நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி...?

      நீக்கு
  9. பொச்சாமை அதிகாரம் முழுவதும் படித்தேன்.
    ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி சோர்வில்லாமல், இருக்கப்பெற்றால் அவன் நினைத்ததை அடைதல் எளிதாகும்.

    மறதி எந்த சமயத்திலும் வருதல் நல்லது இல்லைதான். எந்த நிலையில் இருந்தாலும் மற்வாமை என்ற கருவி கொண்டு கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என்று அய்யன் சொன்னதை நினைவு படுத்த இந்த பதிவு என்று நினைக்கிறேன்.

    380 குறள் விதியைப் போல வலிவுள்ள ஒரு பொருள் உலகில் வேறு இல்லை. அவ்விதி மனிதனுடைய முயற்சிகளையெல்லாம் அழித்து , தான் ஒன்றே முடிவில் வெல்கிறது.
    அந்த விதியை மதியால் வெல்லலாம் என்றி குறள் 620 சொல்கிறது.
    மனதளர்ச்சியில்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன் மேலும் முயன்று உழைப்பவர் யானை பயனை விலக்குவதாகிய விதியையும் வென்று புறம் காண்பர்.

    முயன்று உழைத்தால் , மறதி, சோம்பல் இல்லாமல் உழைத்தால் இப்போது ஏற்பட்டு இருக்கும் இடரிலிருந்து தப்பிக்கலாம்.

    வீட்டை, நாட்டை வழி நடத்தி செல்லும் தலைமைக்கு மறதி, முயற்சி இன்மை இருக்க கூடாது முக்கியமாக என்று தெரிகிறது.
    அடுத்த பதிவு என்ன சொல்கிறது என்று படிக்க ஆவல்.
    குறளை எல்லோரையும் படிக்க வைப்பது நல்ல விஷயம்.







    பதிலளிநீக்கு
  10. மறதி என் பது வேண்ட போது வரும் போகும் என்பதுபொல்தோற்றம் தருகிறதோ

    பதிலளிநீக்கு
  11. அன்பு தனபாலன்,
    மறக்க முடியாமல் சில நினைவுகள் தவிக்க வைக்கின்றன.
    செய் நன்றி மறவாமை வேண்டும்.
    செய்யப்பட்ட தீங்கை மறத்தல் வேண்டும்.
    தீங்கு செய்தவர்களை விலக்க வேண்டும்.

    உங்கள் ஆராய்ச்சி அதிசயிக்க வைக்கிறது. கொஞ்சமாவது எனக்குப் புரிந்தாலே
    போதும்.

    பதிலளிநீக்கு
  12. ஏகப்பட்ட விஷயங்களைக் கொட்டி விட்டீர்கள் . எதற்கு கருத்து எழுதுவது என்பது கடினமாக உள்ளது . மொத்தத்தில் மறதியின் ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி இருக்கு

    பதிலளிநீக்கு
  13. என்னைப் போன்றவர்களுக்காக இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதலாமில்லையா?

    பதிலளிநீக்கு
  14. இங்குள்ள சில பிரச்னைகளால் எதையும் உள்வாங்கிப் படிக்க இயலவில்லை... மீண்டும் சந்திப்போம்...

    பதிலளிநீக்கு
  15. மறதி பற்றிய உங்களுடைய இந்தப் பதிவு மிகவும் சிறப்பு. உங்களை எப்படி பாராட்டுவது எனப் புரியவில்லை! மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. குறள்பால் தங்களுக்குள்ள அதீத ஞானம் சிறப்பாக வெளிப்படுகிறது ஒவ்வொரு முறையும் தாங்கள் ஐயனின் ஆணி சித்திரத்தை சொல்லும்போதெல்லாம். ஏற்கனவே சொன்னதுபோல் " நன்றல்லதை அன்றே மறப்பது நன்று" இதுவும் அய்யன் சொன்னதுதான்.

    பதிலளிநீக்கு
  17. வழக்கம் போல பதிவுகள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  18. அசதிக்கு "ஓய்வு" அவசியம் .... மறதிக்கு இதுபோன்ற "ஆய்வு" அவசியம் ... நான் அம்புட்டுதான் சொல்லுவேன் ....

    பதிலளிநீக்கு

  19. பொச்சாப்பு என்பதற்கு மறதி அல்லது சோர்வு என பொருள் கொள்வதுண்டு. ஆனால் இகழ்ச்சி என்றும் பொருள் கொள்வதுண்டு. அய்யன் வள்ளுவன் பொச்சாவாமை என்ற அதிகாரத்தில் மறதி என்ற பொருளில் தான் கருத்தை சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். ஏனெனில் மறதி என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை. அது இருக்குமானால் அது கோபத்தைக் காட்டிலும் தீமையானது, புகழை அழித்துவிடும், நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. என்பதைத்தான் இந்த அதிகாரத்தில் நேரடியாக மறதி என சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆனால் எந்த இடத்தில் மறதி என்று குறிப்பிட்டிருக்கிறார் எனத் தேடினேன். ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நீங்கள் தான் சொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோர்வு எனப் பொருள் கொண்டதும், இகழ்ச்சி எனப் பொருள் கொண்டதும், யார் யார் என்பதை வரும் பதிவுகளில் சொல்கிறேன் ஐயா... என்னிடம் உள்ள திருக்குறள் நூல்களிலும், இணையத்தில் உள்ள எண்ணற்ற வலைத்தளங்களிலும் அவ்வாறு இல்லை என்பது வேறு விசயம்... அதே போல் இந்த அதிகாரத்தில் மறதி எனப் பொருள் உரைத்தவர்கள், மற்ற அதிகாரங்களில் நான்கு குறள்களில் அவ்வாறு இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்... | நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் 605 | இங்கு மட்டுமே மறவி என்பது மறதியை நேரடியாகச் சொல்கிறது... அருமையான கருத்திற்கு நன்றி ஐயா...

      நீக்கு
  20. என்னது மறதியா? அதுதானே? எதுவும் அழவோடு இருப்பின் நல்லதே.. ஓவர் மறதியும் கூடாது, ஓவர் ஞாபகசக்தியும் நல்லதில்லை.... மறதிப்பதிவை எனக்குப் புரிஞ்சவரை ரசித்தேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.