🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஏழு...

திருவள்ளுவருக்குப் பின் திருமூலர் :-
நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்
எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்
பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரை
விண்அறி வாளர் விரும்புகின் றாரே

அனைவருக்கும் வணக்கம்... மேலுள்ள திருமந்திரத்தின் எண் 2518 → இதன் மூல எண் ஏழு (7) - மேலும் சிலவற்றின் தொகுப்பு :-

கடல்கள் ║ கருங்கடல், காஸ்பியன் கடல், பெர்சியன் கடல், செங்கடல், மத்திய தரைக்கடல், ஏட்ரியாடிக் கடல், அரபிக்கடல்

கடல்களின் வகைகள் ║ உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற் கடல், சுத்த நீர்க் கடல்

நதிகள் ║ கங்கை, யமுனை, கோதாவிரி, சரசுவதி, காவிரி, சிந்து, நர்மதை

வானங்கள் ║ அடிவளிமண்டலம் (Troposphere), படைமண்டலம் (Stratosphere), இடை மண்டலம் (Mesosphere), வெப்ப வளிமண்டலம் (Thermosphere), புறவளி மண்டலம் (Exosphere), அயனியாக்கப்பட்ட வளிமண்டலம் (Ionosphere), காந்தக்கோளம் (Magnetosphere)

விண்மீன் கூட்டம் ║ ஏழு விண்மீன்கள் உள்ளதால் எழுமீன் என்று சங்கக் காலம் தொட்டு வழங்கப்பெறுகின்றது :- நற்றிணை - 231.நெய்தல் :- "மை அற விளங்கிய மணி நிற விசும்பில், கைதொழும் மரபின் எழு மீன் போல... ஆங்கிலத்தில் Ursa Major (பெருங்கரடி) என்றும் அமெரிக்காவில் "Big Dipper" (பெரும் கைவண்டி) என்றும் குறிக்கப்பெற்றுள்ளது...

பெயர் | பேயர் குறியீடு | வெளிச்சத் தோற்ற அலகு | தொலைவு (ஒளியாண்டுகள்)
தபி (Dubhe) | α UMa | 1.8 | 124, மெராக்கு (Merak) | β UMa | 2.4 | 79, பெக்குதா(Phecda) | γ UMa | 2.4 | 84, மெகுரேசு (Megrez) | δ UMa | 3.3 | 81, அலியோத்து (Alioth) | ε UMa | 1.8 | 81, மிசார் (Mizar) ζ UMa | 2.1 | 78, அல்காயிது (Alkaid) | η UMa | 1.9 | 101

மேகமும் மழையும் ║ சம்வர்த்தம் - மணி மழை (ரத்தினக் கற்கள்), ஆவர்த்தம் - நீர் மழை, புஷ்கலாவர்த்தம் - பொன் மழை, சங்காரித்தம் - பூ மழை, துரோணம் - மண் மழை, காளமுகி - கல் மழை, நீலவருணம் - தீ மழை (எரிமலை, சுனாமி)

மலரின் பருவங்கள் ║ அரும்பு (அரும்பும் நிலை), மொட்டு (மொக்கு விடும் நிலை), முகை (முகிழ்க்கும் நிலை), மலர் (மலரும் நிலை), அலர் (மலர்ந்த நிலை), வீ (வாடும் / வீழும் நிலை), செம்மல் (வதக்கும் நிலை)

பிறப்பு ║ ஐந்து மாதம் வரை - குழவிப் பருவம், அவயவங்கள் உற்பத்திக் காலம், பிண்டம் வெளிப்பட்ட காலம், குழந்தைப் பருவம், பாலப் பருவம், குமரப் பருவம், முதுமைப் பருவம்

பிறப்பில் சூட்சமப் பிறப்பு ║ சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி

உடம்பின் தாதுக்கள் ║ இரதம், குருதி, எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம்

உடலின் சக்கரங்கள் ║ (தமிழ் உயிரெழுத்தின் தொடர்பு) மூலாதாரம் (ஔ), சுவாதிஷ்டானம் (ஓ), மணிபூரகம் (ஐ), அனாகதம் (ஏ), விசுத்தி (ஊ), ஆக்ஞை (ஈ), சஹஸ்ராரம் (ஆ)

மனிதனின் தலையிலுள்ள ஓட்டைகள் ║ கண்கள், காதுகள், மூக்குத் துவாரங்கள், வாய்

கொடிய பாவங்கள் ║ உழைப்பு இல்லாத செல்வம், மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி, மனிதம் இல்லாத விஞ்ஞானம், பண்பு இல்லாத படிப்பறிவு, கொள்கை இல்லாத அரசியல், நேர்மை இல்லாத வணிகம், சுயநலம் இல்லாத ஆன்மீகம்

கொல்லும் பாவங்கள் ║ ஆங்காரம், உலோபம், காமம், பகை, மிகையுணவு, காய்தல், சோம்பல்

ஆணின் பருவங்கள் ║ (1) பாலகன் (1-12 வயது), விடலை (12 -24 வயது), காளை (24-36 வயது), மீளி (36-48 வயது), மறவோன் (48-60 வயது), திறவோன் (60-72 வயது), முதுமகன் (72 வயதுக்கு மேல்)

(2) பிள்ளை, சிறுவன், பையன், காளை, தலைவன், முதியோன், கிழவன்

பெண்ணின் பருவங்கள் ║ பேதை (1-8 வயது), பெதும்பை (9-10 வயது), மங்கை (11-14 வயது), மடந்தை (15-18 வயது), அரிவை (19-24 வயது), தெரிவை (25-29 வயது) பேரிளம் பெண் (29 வயதுக்கு மேல்)

திருமண அக்னி வலம் ║ பஞ்சமில்லா வாழ்வு, ஆரோக்கியமான வாழ்வு, நற்காரியங்கள் தொடர்தல், நலமும் வளமும் தொடர்தல், அருளுடைமை நிறைதல், நாட்டில் நல்ல பருவங்கள் தொடர்தல், தர்மங்கள் நிலைத்தல்

ஜென்மங்கள் ║ தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர்

தலைமுறைகள் ║ நாம், தாய் + தந்தை, பாட்டன் + பாட்டி, பூட்டன் + பூட்டி, ஓட்டன் + ஓட்டி, சேயோன் + சேயோள், பரன் + பரை (பரம்பரை)

தன்னை ஒன்றாவதாக எண்ணிக் கொண்டு, தந்தை/தாய், பாட்டன்/பாட்டி, பெரிய பாட்டன்/பெரிய பாட்டி மூவரை மேலேயும், மகன்/மகள், பேரன்/பேத்தி, கொள்ளுப் பேரன்/கொள்ளுப் பேத்தி என கீழே மூவரையும் கணக்கிட்டால் ஏழு தலைமுறை ஆகும் என்றொரு கணக்கும் உண்டு...

மேலுலகங்கள் ║ பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம், சத்திய லோகம்

கீழுலகங்கள் ║ அதல லோகம், விதல லோகம், நிதல லோகம், தலாதல லோகம், மகாதல லோகம், சுதல லோகம், பாதாள லோகம்

திரைகள் ║ கருப்பு - மாயாசக்தி, நீலம் - கிரியாசக்தி, பச்சை - பராசக்தி, சிவப்பு – இச்சாசக்தி, பொன்வண்ணம் - ஞானசக்தி, வெண்மை - ஆதிசக்தி, கலப்பு - சிற்சக்தி

நரகங்கள் ║ (1) அள்ளல், இரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி

(2) பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரிபரல் வட்டம், அரிபடை வட்டம், புகை வட்டம், பெருங்கீழ் வட்டம், இருள் வட்டம்

கிரகங்கள் ║ சூரியன் (Sun) - ஞாயிறு,கதிரவன், சந்திரன் (Moon) - திங்கள், செவ்வாய் (Mars) - நிலமகன், புதன் (Mercury) - , கணக்கன், புலவன், அறிவன், குரு (Jupiter) - சீலன், பொன்னன், வியாழன், சுக்கிரன் (Venus) - சுங்கன், கங்கன், வெள்ளி, சனி (Saturn) - காரி, முதுமகன்

நிழல் கிரகங்கள் :-ராகு (Raghu) - கருநாகன், கேது (Kethu) -செந்நாகன்

நாட்டுக்கு வரும் குற்றங்கள் ║ விட்டில், தொட்டியர், பன்றி, கள்வர், ஆவமழை, யானை, கிளி

சங்கல்பம் ║ சக குடும்பம், க்ஷேமம், தைரியம், வீரியம், விஜயம், ஆயுள், ஆரோக்கியம்

சிலுவையில் இயேசு கூறியவை ║ மன்னிப்பு, மனந்திரும்புதல், உண்மையான ஆறுதல், ஜெபம், ஆத்தும பசி, பரிபூரணம், ஒப்புக் கொடுத்தல்

கிறிஸ்துவத்தில் கொடிய பாவங்கள் ║ காமம், பெருந்தீனி, பேராசை, சோம்பல், வெஞ்சினம், பொறாமை, தற்பெருமை

ரோமின் (Rome) குன்றுகள் ║ பாலடைன் (Palatine), கேபிடோலைன் (Capitoline), அவன்டைன்(Aventine), ஈக்விலைன் (Esquiline), விமினல் (Viminal), க்யூரினல் (Quirinal), சீலியன் (Caelian)

கராத்தேவின் (Karate) படிநிலைகள் ║ Belt colors :- வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், ஊதா, கருப்பு

ஜப்பான் அதிர்ஷ்ட தெய்வங்கள் ║ 大 黒- Daikoku, 毘 沙門 - Bishamon, 恵 比 寿- Ebisu, 福禄寿- Fukurokuju, 寿 老人 - Jurojin, 布袋 - Hotei, 弁 天 - Benten

ஜெர்மானிய கதை Snow white குள்ளர்கள் ║ Doc, Grumpy, Happy, Sleepy, Bashful, Sneezy, Dopey

அமீரக ராஜாக்களின் நாடுகள் ║ அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்-அல் குவைன், புஜைரா, ரஃஸ் அல்-கைமா

செவ்விய போரியல் நூல்கள்-சீனா ║ Jiang Ziya (Taigong)'s Six Secret Teachings, The Methods of the Ssu-ma (Also known as Sima Rangju Art of War), Sun-tzu's The Art of War, Wu Qi's Wu-tzu, Wei Liao-tzu, Three Strategies of Huang Shih-kung, Questions and Replies between T'ang T'ai-tsung and Li Wei-kung

சகோதரி மாநிலங்கள் ║ அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, திரிப்புரா

குமரிக்கண்டத்தில் இருந்த நாடுகள் ║ ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு, ஏழ்குணகாரை நாடு, ஏழ்குறும்பனைநாடு (கடைச்சங்க தமிழ்நாட்டிலிருந்தது :- 49 (7*7) நாடுகள்)

இலங்கை தீவுகள் ║ லைடன் தீவு (வேலணைத்தீவு), புங்குடுதீவு, நயினாதீவு (மணிபல்லவம் - மணிபல்லவத் தீவு), காரைநகர், நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு

மும்பை தீவுகள் ║ மாஃகிம், வோர்லி, பரேல், மச்சாகான், பம்பாய், கொலாபா, கிழவித் தீவு

தலையெழு வள்ளல்கள் ║ குமணன், சகரன், சகாரன், செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி

இடையெழு வள்ளல்கள் ║ அக்குரன், சந்திமான், அந்திமான், சிசுபாலன், தந்தவக்கிரன், கன்னன், சந்தன்

கடையெழு வள்ளல்கள் ║ அதியன், ஆய், ஓரி, காரி, நள்ளி, பாரி, பேகன் : விளக்கம் :-

நெல்லிக் கனியை ஔவைக்கு அளித்த அதியமான், நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்த ஆய், தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு (யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்த ஓரி, ஈர நன்மொழி கூறிய காரி, நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன் - நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கிய நள்ளி, முல்லைக்குத் தேர் தந்த பாரி, மயிலுக்குப் போர்வை அளித்த பேகன்

முனிகள் ║ வாழ் முனி, செம் முனி, முத்து முனி, வீர முனி, கரு முனி, வேத முனி, சடா முனி

முனிவர்கள்/ரிஷிகள் ║ எது சரி...? :
(1) அத்திரி, மரீசி, புலத்தியன், புலகன், சிரது, வசிச்டர், அங்கிரசு
(2) அத்திரி, பிருகு, குச்சன், கௌதமர், காசியபர், வசிச்டர், அங்கிரசு
(3) அத்திரி, பரத்வாசர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிச்டர், விசுவாமித்ரர்
(4) அகத்தியர், புலத்தியன், கௌதமர், காசியபர், வசிச்டர், மார்க்கண்டன், அங்கிரசு
(5) அகத்தியர், பரத்வாசர், கௌதமர், காசியபர், வசிச்டர், அத்திரி, வால்மீகி

சிரஞ்சீவிகள் ║ அனுமன், விபீஷணன், மகாபலி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமன்

கன்னியர்கள் ║ பிராம்மி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி

அளவைகள் ║ நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல், நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்க முகந்தளத்தல், எண்ணியளத்தல்

பண்டைய உலக அதிசயங்கள் ║ சிச்சென் இட்சா, மீட்பரான கிறித்து, சீனப் பெருஞ் சுவர், மச்சு பிச்சு, பெட்ரா, தாஜ் மகால், கொலோசியம் (உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்ட நாள் :- 07.07.2007)

இந்தியாவின் அதிசயங்கள் ║ கோமதிசுவரா - சரவணபெலகுளா, கருநாடகம் - 57-அடி (17 மீ) உயரமுடைய பாகுபலி சிலை, ஒரு சைன துறவி - கிபி 981, பொற்கோயில் - அமிருதசரசு, பஞ்சாப் - சீக்கியர் குருத்துவார் - 1585–1604, தாஜ்மஹால் - ஆக்ரா, உத்தரப் பிரதேசம் - வெள்ளை பளிங்கு கற்களான மும்தாஜின் கல்லறை 1632–53, ஹம்பி - விஜயநகரம், கருநாடகம் - விருபாட்சர் கோயில் கிராமப்புற வீடுகள் - 1342-1565, கொனார்க் சூரியக் கோயில் - கொனார்க், ஒடிசா - கலிங்க கட்டிடக்கலையினால் கட்டப்பட்ட சூரிய கடவுள் கோவில் - கி.பி 13ம் நூற்றாண்டு மத்தியில், நாளந்தா - பாட்னா அருகே, பீகார் - உயர் கல்விக்கான பழமையான மையம் - கி.பி 5ஆம் நூற்றாண்டு, கஜீராகோ - சத்தர்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் - இடைக்கால இந்து மற்றும் சைன கோவில்கள் - கி.பி 9ஆம் நூற்றாண்டு :- கருத்துக் கணிப்புகள் : தி டைம்ஸ் ஆப் இந்தியா (2007 ஜூலை) மற்றும் என்டிடிவி 2008-09

வால்மீகி இராமாயண காண்டங்கள் ║ பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்காந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தர காண்டம்

நெடில் எழுத்துக்கள் ║ ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ,

யாப்பு முறை - தொல்காப்பியர் ║ பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல்

மாத்திரை ║ செய்யுள் அடியில் தமக்குரிய மாத்திரையில் ஒலிக்கப் பெறும் எழுத்துகள் : குறில், நெடில், உயிர், மெய், வல்லினம், மெல்லினம், இடையினம்

தளைகள் ║ நேரொன்று ஆசிரியத்தளை (மா முன் நேர்), நிரையொன்று ஆசிரியத்தளை (விளம் முன் நிரை), இயற்சீர் வெண்தளை (மா முன் நிரை; விளம் முன் நேர்), வெண்சீர் வெண்தளை (காய் முன் நேர்), கலித்தளை (காய் முன் நிரை), ஒன்றிய வஞ்சித்தளை (கனி முன் நிரை), ஒன்றாத வஞ்சித்தளை (கனி முன் நேர்)

சீர்த்தொடைகள் ║ இணை (1,2 சீர்களில் அமைவது), பொழிப்பு (1,3 சீர்களில் அமைவது), ஒரூஉ (1,4 சீர்களில் அமைவது), கூழை (1,2,3 சீர்களில் அமைவது), மேற்கதுவாய் (1,3,4 சீர்களில் தொடை அமைவது), கீழ்க்கதுவாய் (1,2,4 சீர்களில் தொடை அமைவது), முற்று (1,2,3,4 ஆகிய சீர்கள் எல்லாவற்றிலும் அமைவது)

விகற்பங்கள் ║ (1) மோனைத் தொடை விகற்பங்கள் : இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை

(2) இயைபுத் தொடை விகற்பங்கள் : இணைமோனை, பொழிப்பு மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, மேற்கதுவாய் மோனை, கீழ்க்கதுவாய் மோனை, முற்றுமோனை

(3) எதுகைத் தொடை விகற்பங்கள் : இணை எதுகை, பொழிப்பெதுகை, ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை

(4) முரண்தொடை விகற்பங்கள் : இணைமுரண், பொழிப்பு முரண், ஒரூஉ முரண், கூழை முரண், மேற்கதுவாய் முரண், கீழ்க்கதுவாய் முரண், முற்று முரண்

(5) அளபெடைத் தொடை விகற்பங்கள் : இணை அளபெடைத் தொடை, பொழிப்பு அளபெடைத் தொடை, ஒரூஉ அளபெடைத் தொடை, கூழை அளபெடைத் தொடை, மேற்கதுவாய் அளபெடைத் தொடை, கீழ்க்கதுவாய் அளபெடைத் தொடை, முற்று அளபெடைத் தொடை

அகப்பொருள் திணைகள் ║ அன்பின் ஐந்திண ( குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை), கைக்கிளை, பெருந்திணை

புறப்பொருள் திணைகள் ║ வெட்சித் திணை, வஞ்சித் திணை, உழிஞைத் திணை, தும்பைத் திணை, வாகைத் திணை, காஞ்சித் திணை, பாடாண் திணை

தமிழ் இசை ║ குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

சுரங்கள் ║ ச (மயில்), ரி (மாடு), க (ஆடு), ம (புறா), ப (குயில்), த (குதிரை), நி (யானை)

தாளங்கள் ║ துருவம், மட்டியம், ரூபகம், சம்பை, திரிபுடை, அடதாளம், ஏகதாளம்

தவில் தாளச்சொற்கள் ║ தா, தீ, தொம், நம், கி, ட, ஜம்

மண்டலங்களின் வகைகள் ║ வாயு, வருணம், சந்திரன், சூரியன், நட்சத்திரம், அக்கினி, திரிசங்கு

கிழமைகள் ║ ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி

வானவில்லின் நிறங்கள் ║ ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு

கண்டங்கள் ║ ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, அண்டார்ட்டிக்கா, ஆஸ்திரேலியா

நகரங்கள் ║ அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை

புண்ணிய தல சிறப்புகள் ║ சுயம்பு லிங்க பூமி (சுயமாக உண்டானது), யாக பூமி (மகா யாகம் நடந்த இடம்), பலி பூமி (பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்), யோக பூமி (ரிஷியின் தவமிருந்த இடம்), தபோ பூமி (யோகிமார் வாழ்ந்த இடம்), தேவ பூமி (தேவர்களால் முக்கியத்துவ இடம்), சங்கம பூமி (நதிகள் சங்கமிக்கும் இடம்) : சுவாமியே சரணம் ஐயப்பா...

திருமயிலை தலங்கள் ║ கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், விரூபாட்சீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர்

திருமலை ║ சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி

திருவரங்கம் ║ (1) திருச்சுற்றுக்கள் : தர்மவர்மன் திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருவீதி, குலசேகரன் திருவீதி, ஆலிநாடன் திருவீதி, அகலங்கன் திருவீதி, திரிவிக்ரமன் திருவீதி, சித்திரைத் திருவீதி

(2) திருநாட்கள் : தேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லித் தாயார், கமலவல்லித் தாயார், கோதை நாச்சியார், ரெங்கநாச்சியார்

(3) தேவியர்கள் : விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள், பரிவேட்டை, ஆதி பிரம்மோற்சவம்

(4) உற்சவங்கள் : கோடை உற்சவம், வசந்த உற்சவம், ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை, நவராத்திரி ஊஞ்சல் உற்சவம், அத்யயநோற்சவம், பங்குனி உத்திரம்

(5) பன்னிரண்டு ஆழ்வார்கள் - ஏழு சந்நதிகள் : முதலாழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் மற்றும் மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள், குலசேகரர், திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி, திருமழிசை

(6) கோபுரங்கள் : நாழிகேட்டான் கோபுரம், ஆர்யபடாள் கோபுரம், கார்த்திகை கோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், முதலாவது தெற்கு கட்டை கோபுரம், இரண்டாவது தெற்கு கட்டை கோபுரம், ராஜகோபுரம்

(7) அரிய சேவைகள் : பூச்சாட்டல் சேவை, கற்பூர படியேற்ற சேவை, மோகினி அலங்காரம், ரத்னாங்கி சேவை, வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாகனம், உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ஸ்ரீராமநவமி சேர்த்தி உற்சவம், தாயார் திருவடி சேவை, ஜாலி அலங்காரம் (ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவத்தை அடுத்து தீபாவளி அன்று மாலை நேரம்)

மேலுள்ள ஒவ்வொன்றும் "ஏழு (7)" என வலைத்தளங்களும் சொல்கிறது... இவற்றில் கூடுதலால் மாறுதல்கள், அறிய முடியாதவற்றால் நம்ப முடியாதவை எனப் பல இருக்கலாம்... சரி உறுதியாகச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்மொழிக்கு 7 என்னும் எண்ணில் திருக்குறள் அமைத்திருப்பது ஒன்றே சிறப்பு...! அதைப்பற்றி →மூல எண்← பதிவில் அறிந்தோம்... ஏழு எழுத்துக்களே உள்ள "திருவள்ளுவர்" வழங்கிய முப்பாலில், ஏழு சீர்களால் ஆன ஒவ்வொரு 'ஒன்றே முக்கால் அடி' திருக்குறளைக் காற் காற் பகுதியாக வெட்டினால், அதுவும் ஏழுபகுதிகளாக வரும்... கோடி என்ற சொல் ஏழு குறள்களிலும், எழுபது கோடி ஒரே குறளிலும் உள்ளன... மேலும் மிகப்பெரிய ஓர் இலக்க பகா எண்ணான ஏழின் சிறப்பை →எண்களோடு விளையாடு...!← எனும் பதிவிலும், →கணக்கியல்← பதிவிலும் வாசிக்காதவர்கள் அறியலாம்... "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்றார் ஔவை பாட்டி... ஏழு பற்றி மேலும் என்ன சொல்வது...? ம்...

1 முதல் 100 வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கை 25 → இதன் மூல எண் ஏழு... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் உலகப் புகழ் பெற்ற →மாயச் சதுரத்தின்← மூல எண் ஏழு...! ஆதி மனிதர்கள் என விவிலியம் கூறும் Adam + Eve : பெயர்களின் எழுத்துக்களைக் கூட்டினாலும் ஏழு... திட்டுவது கூட "ஏழு கழுதை வயசாச்சி...!" ('வாங்கியது' உண்டு - கொடுத்ததில்லை...!) "ஏழேழு ஜென்மத்துக்கும் ___" : கோடிட்ட இடத்தில் நாம் சொன்ன சொற்களை நிரப்பியும் அறியலாம்...! அப்புறம் எவ்வளவு பெரிய தாளையும் ஏழே முறை தான் மடிக்க முடியுமாம் - பயிற்சி செய்து விட்டு கருத்துரையில் சொல்லலாம்...! எனக்காக ஒரு கணக்கைச் செய்யுங்கள் :- ஏதேனும் ஒரு எண்ணை@ நினைத்துக் கொண்டு, அதை இரண்டால் பெருக்கி, அதனுடன் பதினான்கையும் கூட்டி வருவதை இரண்டால் வகுக்கவும்... (@x2+14/2=#) கணக்கிட்டு வரும் எண்ணை# முதலில் நீங்கள் நினைத்த எண்ணை@ கழித்தால் என்ன வருகிறது...? (#@=?) மீண்டும் எவ்வளவு பெரிய எண்ணையும் நினைத்துக் கணக்கிட்டாலும்... ம்... ம்... பதிவின் தலைப்பு வருகிறதா...? நன்றி...

இன்றைக்குப் பிளக்க முடிந்த - துளைக்க முடிந்த அணுவையும் துளைத்து அதனுள் ஏழுகடலைப் புகுத்துவது போன்று ஒவ்வொரு குறளிலும், அரிய பெரிய - ஆழ்ந்த உயர்ந்த - பரந்த விரிந்த கருத்துகள் உள்ளதை எழுத்துக்களின் கணக்கியல் மூலமும், ஓரளவு அணு அளவிற்காவது அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியுமா என்பதே அடியேன் ஆய்வு... இனி மேலுள்ள தொகுப்பை ஒவ்வொன்றையும் துளைத்துப் பிளந்து... அதாவது உங்கள் சுட்டு விரலால் சொடுக்கி அதன் விளக்கங்களை அறியலாம்... (கணினி என்றால் சுட்டியால் சொடுக்கி...) வாசித்த தலைப்பை மீண்டும் சொடுக்கினால் அதன் தகவல்கள் மறைந்து விடுவதோடு, வாசித்ததற்கு அடையாளமாக அந்த தலைப்பு அடர்த்தி எழுத்தாக மாறி விடும்... தொகுப்பில் 70 தலைப்புகளில் தகவல்கள் உள்ளது... கவனிக்க : நேரமும் பொறுமையும் விட ஆர்வம் அவசியம் தேவை / ஏழு நாட்களிலும் வாசிக்கலாம்; தவறில்லை, ஆனால் தவறுகள் இருந்தால் நீக்கி விடுகிறேன் + மேலும் உங்களுக்குத் தெரிந்த ஏழின் சிறப்புகளைக் கருத்துரை மூலம் கூறினாலும் இந்த தொகுப்பில் சேர்த்து விடுகிறேன்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தங்களது முயற்சி பிரமிக்க வைக்கிறது ஜி

    ஆய்வுகள் தொடரட்டும்... தாள்களை மடித்து பார்க்கிறேன்.

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. பதிவு மிக அருமை.
    திருவிளையாடல் வரும் பாடல் வரிகள் உடனே நினைவுக்கு வந்தது.
    ஒன்றானவன் உருவில் இரண்டானவன் என்று ஆரம்பிக்கும் பாடலில் இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
    என்று வரும் வரி நினைவுக்கு வந்தது.
    ஒவ்வொரு குறளிலும் அரிய, பெரிய, ஆழ்ந்த உயர்ந்த கருத்துக்கள் அடங்கி இருக்கிறது.
    உங்களைப்போல யாரும் ஆராய்ச்சி செய்து இருப்பார்களா என்று தெரியவில்லை.
    உங்கள் ஆய்வு முனைவர் பட்டத்திற்கு உரியது.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தொகுப்பு.  7  க்குரியவற்றை விளக்கமாகப் படித்துவிட்டு மறுபடியும் சுருக்கி விடலாம் என்பது சிறப்போ சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அட ஆமாம் ஜி
      நள்ளிரவில் கவனிக்கவில்லை இப்பொழுதுதான் சொடுக்கி படித்தேன்.

      நீக்கு

  4. உலக அதிசயங்கள் ஏழு
    வானவில் ஏழு
    இன்றைய தேதி ஏழு
    இன்றைய மாதம் ஏழு
    பொன் தனபாலன் ஏழு
    பிரதமர் நரேந்திரமோடி ஏழு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... 2023-ஆம் ஆண்டு இதே நாளில் பதிவை எழுதி வெளியிட்டு இருந்தால் சரியாக இருந்திருக்குமோ...? (2023 - மூல எண் 7)

      நீக்கு
    2. அரசியல் சாணக்கியர் மோடிஜி (???) அவர்களின் பெயர் மட்டுமல்ல,... அவரின் வெற்றி மந்திர சொற்களான "ஜே பாரத் மாதாகி" இதுவும் ஏழு எழுத்துக்கள்தான்.

      நீக்கு
  5. பிரமிக்க வைக்கும் உழைப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. எழு பிறப்பும் ஏமாபுடைத்து..,..
    வள்ளுவர் சொல்லிவிட்டாரே.
    வியக்க வைக்கும் பதிவு நண்பரே. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

  7. பதிவு அருமை அதற்கு நீங்கள் கொடுக்கும் உழைப்பு மிக சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு.. ஏழு என்ற எண்ணின் சிறப்புகளை உங்கள் பதிவில் கண்டு கொண்டேன். தொகுப்பின் ஒவ்வொன்றையும் தொட்டால் உங்கள் அயராத உழைப்பை விளக்குகிறது. பொறுமையாக அனைத்தையும் படிக்கிறேன். சிறந்த ஆராய்ச்சியாளார் நீங்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளுடன் பாராட்டுகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. ஏழு என்றவுடன் ஏழரைதான் நிணைவுக்கு வருகிறது.. நண்பரே!!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்,
    தங்களது ஆய்வுகளுக்கு நன்றி. எனக்கு ஒரு அய்யம். நீங்கள் செய்யச் சொன்ன கணக்கு பற்றி... 2 ஆல் பெருக்கி மீண்டும் 2 ஆல் வகுத்துவிடுகிறோம். 7 இன் மடங்கான 14 ஐ கூட்டுகிறோம். இதற்குப் பதிலாக 4, 6, 8, 10, 12, 16, 18 என வைத்துக் கொண்டால் முறையே 2,3,4,5,6,8,9 என்று கிடைக்குமே!

    வலைப்பூ பற்றிய தொழிற்நுட்பப் பகிர்வுகள் சிறப்பு.

    நான் 2010 லிருந்து வலைப்பூவைப் பயன்படுத்தி வருகிறேன். அதன் இணைப்பு:

    http://musivagurunathan.blogspot.com/

    மிக்க நன்றி...

    மு.சிவகுருநாதன்
    திருவாரூர்

    http://panmai.in/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.