மூல எண்...

அனைவருக்கும் வணக்கம்... →கணக்கியல்...← பதிவில், அதைப் பற்றிய விளக்கமும், கணக்கியல் மூலம் உருவான சில பதிவுகளையும் சொல்லியிருந்தேன்... அடுத்ததாக →எண்ணென்ப...← பதிவில், திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள எண்களைப் பற்றிய தொகுப்பையும் தொகுத்துப் பதிவு செய்திருந்தேன்... அவற்றில் "கூட்டுத்தொகை அல்லது மூல எண்" என்று குறிப்பிட்டிருந்தேன்... மூல எண் பற்றிய விளக்கம் ஒரு கோப்பில் கிடைத்தது...! அதை அனுப்பிய நம் அறத்தமிழ் வித்தகர் →திருமிகு.கரந்தை ஜெயக்குமார் ஐயா← அவர்களுக்கு நன்றி...

31.01.2021 - திருமிகு. நா.முத்து நிலவன் இல்லத் திருமண விழாவில்...

அந்த கோப்பு யாதெனில் "திருக்குறள் அமைப்பு" - பண்டிதர். R.P. அமிர்தலிங்கம் பிள்ளை, நன்னிலம் → இதையும் வருங்கால ஆய்வாளர்களுக்காக உதவும் வலைப்பூ இணைப்பு →தமிழ் மரபு நூலகம்← தமிழ்ப் பொழில் (1932-1933) துணர்: 8 - மலர்: 1 & 2 - இதில் உள்ளவற்றைச் சுருக்கமாக இங்கே :-
1 முதல் 9 வரை உள்ள ஒன்பது எண்களுமே நுண்பொருள், பருப்பொருள் ஆகிய எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமென்பதும், எண்கள் இன்றேல் எல்லாம் அழிந்தொழியுமென்பதும், எல்லா மறை பொருள்களையும், இரகசியங்களையும் அறிந்து கொள்வதற்கு எண்கள் ஏதுவாயிருக்கின்றன... அப்பரடிகள் : "எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி; எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்துமாகி..." Balzac : "Without them (the numbers) the whole edifice of our civilization would fall to pieces..." இரவி முதலிய கோள்கள் இந்த விநாடியில் இராசி மண்டலத்தின் (Zodiac) எந்தப்பகுதியில் (Degree) இருக்கிறதென்று தெரிந்து கொள்ள, எண்களைக் கொண்டு அவற்றைத் தெளிவாக எளிதில் தெரிந்து கொள்ளக்கூடுமென்பதை அறிந்த நமது முன்னோர்கள், 25287 ஆண்டுக்கொரு முறை அயனமாறுபாடு (the procession of the Equinoxes) உண்டாகிறதென எந்தக்கருவியின் உதவியுமின்றிக் கண்டு பிடித்துள்ளார்கள்...! தற்கால இயற்கை நூல் வல்லவர்கள் (Scientists) பல நூற்றாண்டுகள் வருந்திய பிறகு, "அவர்கள் கூறியுள்ள கால அளவு மிகச்சரியானது; அதில் ஒரு விநாடியும் வித்தியாசமில்லை; அதை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும்" என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்...!

மக்கள் தங்கள் வாழ்நாளில் அடையக்கூடிய நன்மை தீமைகளைத் தெளிவாய்த் தெரிந்து கொள்ளக் கூடும் என்றும், தமது வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் கொள்ளக் கூடுமென்றும் எண்வல்லவர்கள் (Numerologists) உறுதியாகக் கூறுகின்றார்கள்... மறை பொருள்களெல்லாவற்றையும் தெரிந்து கொள்வதற்கு அடிப்படையாகவுள்ள எண்களுக்குள் ஏழும் ஒன்பதும் மிக முக்கியமானவைகளாகக் கருதப்படுகின்றன... இவற்றுள் ஏழு என்னும் எண் தெய்வீகத்தன்மை உடையதாகவும், உலகில் கடவுளாக அல்லது கடவுளின் சக்தியாக நின்று யாவற்றையும் இயங்குவதாகவும் கருதப்படுவதோடு, மக்களுயிர்களிடத்துள்ள அறிவை விளக்கி, தெய்வத் தன்மையைப் பெருக்கக் கூடியதாகவுமிருக்கின்றது... ஒன்பது என்னும் எண் இதற்கு நேர் எதிரான தன்மையில் ஒவ்வொரு சீவரிடத்துமுள்ள தேக பலத்திற்கு ஆதாரமானதாகவும், சடப்பொருளோடு சம்பந்தமுடையதாகவும் இருக்கின்றது... அறிவுக்கு ஆதாரமாய் நின்று அறிவை விளக்கக்கூடியது ஏழு... உடலுக்கும் சடப்பொருளுக்கும் ஆதாரமாக நின்று உடல் வலிமையைத் தரத்தக்கது ஒன்பது... தமிழ்மொழிக்கு உயிராக 7 என்னும் எண்ணில் திருக்குறளும், உடலாக 9 என்னும் எண்ணில் தொல்காப்பியமும், இருக்கும்போது கற்றார்க்கு வேறுகற்க வேண்டுவது ஒன்றுமில்லை...

மூல எண் விளக்கம் : தனி எண்கள் (Single numbers) 1 முதல் 9 வரை உள்ள ஒன்பது எண்கள் ஆகும்; பத்தும் அதற்கு மேற்பட்ட எல்லா எண்களும் சேர்க்கை எண்கள் (Compound numbers) எனப்படும்... தனி எண்களாகிய 1 முதல் 9 வரை உள்ள ஒன்பது எண்களோடு, ஒன்பதை ஒருமுறையோ பன்முறையோ சேர்ப்பதனால், முடிவில்லாத சேர்க்கை எண்கள் உண்டாகின்றன... (1+9=10, 2+9=11, ...) எனவே தனி எண்களான 1 முதல் 9 வரை மூல எண்கள்... மூல எண்ணைக் கண்டுபிடிக்கும் முறை : 369-ஐ ஒன்பதால் வகுக்க மீதமின்மை காரணமாக இதன் மூல எண் ஒன்பதாம்... 538-ன் மூல எண் யாதெனில் இதனை ஒன்பதால் வகுக்க ஈவு 59-ம் மீதம் 7-ம் வருதலில், ஏழே 538-ன் எண்ணாகும்; ஏழோடு 59 ஒன்பதுகளைச் சேர்ப்பதனால் 538 உண்டாகிறது... எளிய வழி : கூட்டுத்தொகை : ஓரெண்ணாகும் வரையில் எண்களின் கூட்டுத்தொகை வருகின்ற தனி எண்ணே மூல எண்ணாகும்; 538 = 5+3+8 = 16 = 1+6 = 7 ஆகின்றது... எனவே 538-ன் மூல எண் 7
மேலும் "அகர முதல" முதல் குறளில் உள்ள எழுத்துக்கள் 25 - இதன் மூல எண் 7 (25=2+5=7) என்பதுடன், மனிதனுடைய எண்ணோ 666 என்பதையும், 6, 7, மற்றும் 9, ஆகிய எண்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய கோப்பை, மேலே கொடுத்துள்ள வலைப்பூ இணைப்பைச் சொடுக்கி, அங்குக் கொடுத்துள்ள கோப்பின் இணைப்பையும் சொடுக்கி 13 பக்கங்களில் (பக்கம் 21-33) அறியலாம்... ஏதேனும் சில நம்பிக்கையால் சிலர் எண்களைப் பார்த்தவுடன் அதன் கூட்டுத்தொகையை மனதில் கணக்கிட்டு மூல எண் என்னவென்பதை அறிவார்கள்... ஆனால் இங்கு திருக்குறளில் ஒவ்வொரு எழுத்தும் எவ்வாறு எத்தனை முறை பயன்படுத்திக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதே கணக்கியல் ஆய்வு... இந்தக் கோப்பில் கணக்கியல் ஆய்விற்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தரும் ஓர் வரி :-
1330 திருக்குறளினுமுள்ள எழுத்துக்கள் 35899* → மூல எண் : (3+5+8+9+9 = 34 = 3+4 =) 7* ( பகா எண்* )
இந்த எண்ணிக்கை சரியா...? இருந்தாலும் கணக்கிட்டு உள்ளார்கள் என்பதே மகிழ்ச்சி... தொடரும்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அவரவர்கள் வைத்திருக்கும் வாகனங்களின் பதிவெண்கள் கூட்டுத்தொகை 9 என்று இருக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புவார்கள்.  அல்லது முடிந்தவரை ஒற்றைப்படையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள்.  அது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 2. கரந்தையார் ஜமின்தார் மாதிரியும் நீங்கள் மாப்பிள்ளை மாதிரியும் ஜம்முனு இருக்கிறீங்க

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் ஜி
  எண்களை வைத்து புதுமையான பதிவு.

  பதிவுக்கான சிரத்தை மிகவும் அதிகம் வாழ்த்துகளுடன் தொடர்கிறேன்....

  பதிலளிநீக்கு
 4. மூல எண் பற்றி மட்டும் கொஞ்ச்ம தெரியும் வீட்டில் கணக்குப் புலிகள்/சிங்கங்கள் இருப்பதால்.

  அருமையா சொல்லியிருக்கீங்க டிடி. நல்ல ஆய்வு. நியுமராலஜி பத்தி சொன்னதும் புரிந்தது. இதுவும் வீட்டில் பேசப்படும்.
  எனக்குத்தான் கணக்கு பிணக்கு!!!

  தொடர்கிறேன் டிடி

  கீதா

  பதிலளிநீக்கு
 5. 1330 திருக்குறள்களிலும் 35,899 எழுத்துக்கள் உள்ளன என்ற புதிய தகவலுக்கு நன்றி... ஆனால் வேறு ஒருசில தளங்களில் 42,194 எழுத்துக்கள் உள்ளதாக பதிவிட்டுள்ளார்களே ... இவ்விரண்டில் எதுதான் சரி நண்பரே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 42,194 என விக்கிப்பீடியாவின் படி எண்ணிக்கை... பதம் பிரித்துக் கணக்கிட்டு இருக்கலாம்... 35,899 எழுத்துக்கள் சரி என்றும் சொல்லவும் முடியாது... விளக்கத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்... நன்றி...

   நீக்கு
 6. நல்ல விளக்கம். பாராட்டுகள்.

  படத்தில் இருவரும் கலக்குகிறீர்களே! :)

  பதிலளிநீக்கு
 7. தங்களின் அற்புதப் பதிவில் என் பெயரும், படமும்
  ஆகா
  மகிழ்ந்தேன் ஐயா
  என்றென்றும் என் நன்றிகள்
  தங்களால் இன்று எனது 50 வது மின்னூல், அமேசான் தளத்தில் இணைந்துள்ளது
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. அருமையாக இருக்கிறது பதிவு.

  திருமண சடங்க்கில் மணமக்கள் ஏழு அடி எடுத்து வைத்து நிறைய உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள்.
  வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் , சமுதாயத்திற்கு எப்படி உதவ வேண்டும் என்று எல்லாம் சொல்வார்கள்.
  எங்கள் திருமணம் 7ம் தேதி .

  பதிலளிநீக்கு
 9. தமிழ் மொழிக்கு 7 எனும் உயிர் திருக்குறள், 9 எனும் எண் உடல் தொல்காப்பியம் அருமையான விளக்கம். 7 , 9 எண்களின் பெருமையை, சிறப்பை தெரிந்து கொண்டேன்.

  உங்கள் ஆராய்ய்ச்சிக்கு உதவிய சகோ கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் பதிவை புத்தகமாக கொண்டு வாருங்கள் படிக்கும், குழந்தைகளுக்கு ஆசிரியர்களுக்கு எல்லோருக்கும் உதவும்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே

  வழக்கம் போல் இந்தப் பதிவும் அருமையாக உள்ளது. ஒற்றைப்படை எண்களின் முக்கியத்துவத்தை விளக்கி கூறியது நன்றாக உள்ளது. திருக்குறளில் 7 ஆம் எண்ணின் சிறப்பையும் அழகாக விளக்கி தந்துள்ளீர்கள். தங்கள் திருக்குறள் பதிவு நிறைய விஷயங்களை கற்றுணர வழி வகுக்கிறது. உங்களின் ஆராய்ச்சி திறமைகள் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமைகிறது/அமையும். அற்புதமாக பதிவுகள் தரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.