🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அன்பு என்பது...

வணக்கம் அன்பு நண்பர்களே... முந்தைய பதிவான அன்பின் கருவியானது அறத்திற்கு மட்டுமா துணை...? - இல்லவே இல்லை...! அன்பினால் துன்பம் வருமா...? - வரவே வராது...! காரணம்...? - அறம் தெரியாத கோழைக்கு அன்பும் தெரியாது...! தன்னலம் கருதாது அறத்தை ஒருவன் செயல்படுத்த வேண்டும் என்றால் அவனுக்குள் என்ன இருக்க வேண்டும்...? இரண்டாம் பகுதியில் குறளின் குரலில் விளக்கம் அறிவதற்கு முன், ஒரு பாட்டு கேட்போமா...?


ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பெயரென்ன? சொல்லு:- வள்ளுவன் / இனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன? சொல்லு:- அன்பு / ஊனா ஊவன்னா உலக உத்தமன் பெயரென்ன? சொல்லு:- காந்தித் தாத்தா / ஏனா ஏயன்னா, எழுத்தறிவித்தவன் இறைவனாகும்... அன்பும் அறமும் அடக்கமும் பொறுமையும் பண்பும் கொண்டவர் பெண்கள்...2 ஆளும் திறமையும் வீரமும் கடமையும் பெருமையும் கொண்டவர் ஆண்கள்...2

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

© அன்பு எங்கே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வேதா S.வேதாச்சலம் @ 1958 ⟫




அறத்துப்பால் - அதிகாரம் 08. அன்புடைமை (74-76)

குறளுக்கேற்ப திரைப்படப் பாடலை ஓரளவு தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளேன்... பாடலில் வரும் மூன்று சொற்களையும் கொடுத்துள்ளேன்... ஊகித்த விதத்தைக் கருத்துரையில் சொல்லலாம்... குறளையும் பாடலையும் வாசிக்க, கேட்க இதயத்தைச் சொடுக்கி, குறளின் மேன்மை கூடுவதையும் உணரலாம்... நன்றி...

அன்பிற்கான உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின் பயனை அறிந்து தெரிந்து புரிந்தவர்களின் வாழ்க்கை பயணமானது, தனது குடும்பம் உறவுகள் நண்பர்கள் என நிற்காமல், உலகத்தில் உள்ளவரையும் உறவுகள் என விரும்புவதோடு, நட்பு கொள்ளத் தூண்டும் ஆர்வமும் உண்டாகி விடும்...

அறிவில்லாத ? அருளில்லாத ? பணிவில்லாத ? பண்பில்லாத ? அன்பு என்பது ?
பக்தி ? ≻ பாசம் ? ≫ உண்மை ? ⋙ கருணை ?

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு 74


அறிவில்லாத மனிதர் உள்ளம் அருளில்லாதது, அருளில்லாத மனிதர் உள்ளம் பணிவில்லாதது, பணிவில்லாத மனிதர் உள்ளம் பண்பில்லாதது...2, பண்பில்லாத மனிதர் உள்ளம் அன்பில்லாதது...2 அன்பு என்பது தெய்வமானது, அன்பு என்பது இன்பமானது... மதத்தின் மீது வைத்த அன்பு பக்தி ஆனது, மனிதன் மீது வைத்த அன்பு பாசமானது, இதயம் மீது வைத்த அன்பு உண்மையானது...2 ஏழை மீது வைத்த அன்பு கருணையானது...2 அன்பு என்பதே தெய்வமானது, அன்பு என்பதே இன்பமானது...
© ஆசை அலைகள் கண்ணதாசன் K.V.மகாதேவன் சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா, LR.ஈஸ்வரி, AL.ராகவன் @ 1963 ⟫


அத்தகைய நட்பினால் மனிதநேயம், இரக்கக் குணம் எனப் பல பெருமைகளும் தானாகவே வந்து சேருவதோடு, எங்கேயும் எப்போதும் அன்பையே கொடுத்து வாழ்வதினால், உலகத்திலேயே என்றும் மகிழ்ச்சியாக வாழ்வதற்குக் கொடுத்து வைத்தவர்கள்... இது ஒருவருக்காக மற்றவர் என, என்றும் அன்புடன் வாழும் காதலர் போலச் சிறக்கும்...

ஜாதிகள் ⇄ பெருமை...? சண்டைகள் ⇄ புதுமை...!
எப்போது ஓடி ஒழிந்திடும் மடமை...?

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு 75


நேசமும் அன்பும் நிலையாக வேண்டும், நேர்வழி பேசும் உலகில்... பேசிடும் அன்பு செயல் முறையானால், பேரின்பம் வேறெது உலகில்...? காணா வளமும் மாறா நலமும் - கண்டிடலாம் அன்பு நினைவில்...2 ஜாதிகள் யாவும் ஒன்றாக மாறும் தேதியில் தோன்றும் பெருமை... சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால் தாரணியில் அது புதுமை... உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால் - ஓடி மறைந்திடும் மடமை...2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு...
© ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன், ஜிக்கி @ 1963 ⟫


தீமைகளைப் பொறுத்துக் கொள்ளாது "எதிர்த்தல் - போராடல் - வெற்றி அடைதல்" எனப் பல வீரச்செயல்களுக்கும், தூண்டுகோலாகவும் துணையாகவும் இருப்பது அன்பு என்பதை அறியாமல், 'நல்லெண்ணம் - நற்சொல் - நற்செயல்' எனப்படும் அறத்திற்கு மட்டும் தான் அன்பே துணை என்போர் பலர்...

சிறந்தது ≻ அன்பு ? ≫ தானம் ? ⋙ நிதானம் ?
பலர் ஆராய்ந்து சொன்னது என்ன...?

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை 76


மலருவதெல்லாம் உலருவதில்லை மறந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி... சில மனிதரைப்போலே வம்புகள் பேசி திரிந்திட வேண்டாம் அக்கச்சி அக்கச்சி... உலகில் சிறந்தது என்ன...? - அன்பு உள்ளவர் செய்திடும் தானம்... அந்த தானத்தில் சிறந்தது என்ன...? - நல்ல தன்மை வளர்க்கும் நிதானம்...2 அதிலும் சிறந்தது என்ன...? பல அகிம்சா மூர்த்திகள் ஆராய்ந்து சொன்ன - உலக சமாதானம் உலக சமாதானம்...2 அதை நாம் உணர்ந்து நடக்க வேணும், எல்லோரும் ஒண்ணாய் இருக்க வேணும்...2 அப்போ தான் உலவும் சமாதானம், எங்கும் நிலவும் சமாதானம்... சமாதானம்...
© மக்களைப்பெற்ற மகராசி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் K.V.மகாதேவன் ஜிக்கி, K.ஜமுனா ராணி @ 1957 ⟫


அன்பின் பாதை தொடரும்...
நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. முதல் பாடல் டி எம் எஸ்  என்று கொடுத்துள்ளீர்கள்.  அது சீர்காழி கோவிந்தராஜன்.  மூன்றாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன்.  

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஜி
    இன்றைய பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமாகி விட்டது.

    இவ்வரிகள் மூலம் சில பாடங்களும் கிடைத்தது பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. அழகாய் எழுதியிருக்கிறீர்கள்!
    இளம் வயதில் என் ஆசிரியர் ஒருவர் ' அன்பென்றால் அழகு. அழகென்றால் அன்பு. அன்பும் அழகும் இணையும் போது தான் உண்மை உதயமாகிறது' என்று ஆட்டோகிராப் நோட்டில் எழுதிக் கொடுத்தது நினைவில் எழுகிறது!

    பதிலளிநீக்கு
  4. குறள் ஓவியம், மற்றும் தேர்ந்து எடுத்த பாடல்கள், மிக அருமை. "அன்பு என்பது" என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல். ஆசை அலைகள் படத்தில் முன்பு பகிர்ந்து இருக்கிறேன் நானும்.

    உலக சமாதானம் பாடலும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. உலகில் பல வித நல்ல செயல்களுக்கு அன்பே அடிப்படை அறம் வீரம் எல்லாவற்றுக்கும் அன்பே மூலப்பொருள்

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு எப்போதும் போல் அருமை. அன்பை குறித்த விளக்கமான குறள்களும், பாடல்களும் இனிமையாக உள்ளன. திருவள்ளுவர் அனைத்து ஜீவன்களிடமும் காட்டும் அன்பைக் கூறும் முதல் ஓவியமும், அணில்கள் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வது போன்ற படமும், பதிவுக்கு மேலும் சிறப்பை தருகின்றன.

    அன்பு ஒன்றே நல்லறத்திற்கு வழிவகுப்பது. தூயஅன்புக்கு மட்டுமே மனிதரும், சகல ஜீவராசிகளும் கட்டுப்படுகின்றன. அந்த முழுமையான அன்பை உணர்ந்து கொள்ளாதவர்கள் தங்கள் வாழ்வில் பெரும் இன்னல்களை சந்திப்பதுடன், வாழ்க்கைப் போராட்டத்தில் தோற்றும் போகிறார்கள் . நல்ல பதிவு. அழகான, அன்பான பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. புண்பட்ட மனதில்கூட
    பண்பட்ட பாசத்தாலே
    அறமென்னும் விதைதூவ
    மறமென்னும் மரம் வளர்ந்து
    நேசமென்ற வாசத்துடன்
    நட்பூவாய் பூக்குமென்று
    குறிப்பாக குறள் கொண்டு
    குறையில்லா குரல் கொண்டு
    குறிப்பாக உணர்த்தியுள்ளீர்
    உள்ளமெல்லாம் உவப்பேயாக ... நன்றி நண்பரே!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.