🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மாயச்சதுரம்...

அனைவருக்கும் வணக்கம்... எப்படிக் கூட்டினாலும் 34 என வரும் ஒரு வினோதச் சட்டகத்தை அறிவோமா...?

1000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த புகழ் பெற்ற அபூர்வமான 34 மாயச்சதுரம் பற்றிய தகவல் : இந்த இணைப்பில் உள்ளது... திருமிகு கோமதி அரசு அம்மா அவர்கள், பார்சுவநாதர் கோயிலுக்குச் சென்று வந்ததை ஒரு பதிவில் சொல்லி இருந்தார்கள்... மாயச்சதுரம் என்று இணையத்தில் தேடினால் எண்ணற்ற வலைத்தளங்கள் உள்ளன... அவற்றில் மிகச்சிறிய மாயச்சதுரமாகிய 3 x 3 முதல் 9 x 9 வரை விக்கிப்பீடியாவில் காணலாம்... ஆமையின் ஓட்டின் மூலம் கிடைத்ததாகச் சொல்லப்படும் லோ ஷூ மாயச் சதுரம் பற்றிய விளக்கம் இங்கு உள்ளது... மாயச்சதுரம் உருவாக்க விளக்கங்களை நம் நண்பர் திருமிகு. டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவிலும், தமிழ்க் கணிதன் தளத்திலும் கற்கலாம்... ஒரு காலத்தில் பிறந்த நாள் மாயச்சதுரத்தை உருவாக்கி விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்...! சிலர் அதைப் புகைப்பட சட்டகமாகச் செய்து, பிறந்தநாள் பரிசாகத் தந்துள்ள காலமும் இருந்துள்ளது...! சரி, மேலுள்ள 34 மாயச்சதுரம் பற்றிய விளக்கம் படமாகக் கீழே கொடுத்துள்ளேன்... ஒவ்வொரு 4 x 4 மாயச்சதுரத்தில் 4 வெவ்வேறு பின்புற வண்ணங்களுடன் கூடிய வண்ண எண்களைக் கூட்டினால் 34...!


22.12.1887 அன்று பிறந்த கணித மேதை ஸ்ரீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள் மாயச்சதுரம் பிரபலமானது... நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் அவரின் பிறந்தநாள் கூட்டுத்தொகை 139 வரக் காணலாம்... ஆனால் 34 மாயச்சதுரத்தில் முடிவிலுள்ள இரண்டு 4 x 4 -ல் உள்ளது போல் கூட்டினால் 139 வரவில்லை... வேறு வகையில் எண்களைக் கோர்த்து கணக்கிட வேண்டும் போல...! நீங்களும் இதே போல் உங்களின் பிறந்தநாளை மாயச்சதுரமாக உருவாக்கி விட்டு, இங்கும் கீழேயுள்ள கட்டங்களில் உங்களின் பிறந்தநாளை இட்டு, மாயச்சதுரத்தைப் சரி பார்க்கலாம்...! (பிறந்த ஆண்டை இரு இலக்கமாகப் பிரித்து இடவும்...)

நாள் : மாதம் : ஆண்டு : ஆண்டு : :



உங்களது பிறந்தநாளின் கூட்டுத்தொகை எண் :

மாயச்சதுரம்




என்ன இது சின்னபிள்ளைத்தனமான கணக்கு...?
சும்மா... ஏன் கணக்கிடுவதற்கு வயதுண்டா...?
ஏழு கழுதை வயசாச்சு...!
பல்லாங்குழி, தாயக்கட்டை, ஆடுபுலி ஆட்டம்-ன்னு பெரிய கணக்கு விளையாட்டுகளுக்குப் பதிலாகச் சின்ன கணக்கு...! ஆமா, ஒரு கழுதைக்கு என்ன வயசு...?
ம்... 72=49 வயதில் குடும்பச்சுமை...?
புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் ஏழகநிலை-ன்னு நினைச்சேன்...!
ரொம்ப முக்கியம்... சரி, ஆங்கில செய்தித்தாளில் வர்ற சுடோகுவை, அப்பா எளிதா போட்டுட்டு இருக்கிறப்போ, அவர் பக்கத்திலேயே போறதில்லேயே...?
தமிழில் வர்ற குறுக்கெழுத்து போட்டி நிரப்பும் எண்ணத்தில் இருப்போமில்லே...!
அதுக்கே வீட்டிலே எல்லார்கிட்டயும் கேட்கிறே... சரி, விளையாட்டு போதும்...
மாயச்சதுரத்திலே 34-யை பார்த்தவுடன் ஞாபகம் வர்றது என்ன...?
திருக்குறளில் முக்கியத்துவம் வாய்ந்த எண்கள் 3, 4-ன்னு சொல்றாங்க...!
கேட்கலே...!
அதன் கூட்டுத்தொகை அல்லது மூல எண்...
கேட்கலே...!
3 கூட்டல் 4
இன்னும் சத்தமா...!
(7) ஏழு = திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண்...!
எதில், எந்த கணக்கீட்டில் வருகிறது...?
ஏழால் கட்டமைக்கப்பட்ட நூல்-ன்னு எண்களோடு விளையாடி விட்டோமே...!
அது தான் முடிந்து விட்டதே... எழுத்துக்களால் கட்டமைக்கப்பட்ட கணக்கீட்டில் எங்கே வருகிறது...?
அதுவா... அது வந்து... அது வந்து... 1330 குறள்களின் எழுத்துக்கள் கணக்கீட்டில் ஒருவகையில் வருகிறது...
அதென்ன வகை...? எப்படி...?
ஆய்வில் சந்திப்போம்...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மாயச் சதுரத்திற்கு எனக்கும் ரொம்ப தூரம்

    பதிலளிநீக்கு
  2. பதிவு பிரமிக்க வைக்கிறது ஜி

    எனது பிறந்தநாள் தேதியிட்டு தெரிந்து கொண்டேன்.

    எனது கூட்டுத்தொகை 3967

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னாது கூட்டுத்தொகை "3967" வருகிறதா? .... அட ஆண்டவா .. இந்த அநியாயத்த கேக்குறதுக்கு இந்த பூலோகத்துல நாதியே இல்லையா? தேதி ... மாதம்.... ஆண்டு எல்லாவற்றிலும் 99 - 99 - 99 - 99 போட்டாலும் வெறும் 396 தானே வருகிறது ... இதில் எங்கிருந்து எக்ஸ்ராவாக கடைசியில் ஒரு "7" வந்தது?... கில்லர்ஜி என்பதால மாயக்கட்டம் தாறுமாறாக கணக்குபோடுதோ? ... ம் ம் .. இருக்கும்... இருக்கும்...

      நீக்கு
  3. கணக்குப் பாடம் பிடிக்கும் என்றாலும் நீங்க எங்க பிறந்த நாளை அடிப்படையாக வச்சு எங்களுக்கு குடுக்கிற கட்டம் போட்ட ஹோம் ஒர்க் கொஞ்சம் ......

    பதிலளிநீக்கு
  4. நான் கல்கத்தாவில் உள்ள சமணக் கோவில் பார்சுவநாதர் கோவில்தான் பார்த்து இருக்கிறேன் சாருடன்.
    சார்தான் கல்லூரி சுற்றுலாவில் கஜூராஹோ பார்த்து இருக்கிறார்கள். கஜூராஹோ பார்த்தது இல்லை.
    என் பதிவுக்கு இங்கு சுட்டி கொடுத்து இருப்பதற்கு நன்றி.

    நீங்கள் கொடுத்த சுட்டிகளுக்கு சென்று பார்த்தேன். ராசி எண்களால் மாயச்சதுரம் என்று நிறைய விஷயங்கள் இருக்கிறது. பொறுமையாக படிக்கவேண்டும். இங்கு இரவு ஆகி விட்டது. மீண்டும் நாளை வந்து படிக்கிறேன்.

    நிறைய ஆய்வு செய்து கொடுத்த பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பதிவு பிரமிக்க வைக்கிறது டிடி. தகவல்கள் சுவாரசியம். பிறந்த நாள் போட்டுப் பார்த்தேன்...ஆஹா செம...

    அடிப்படைக் கணக்குப் புதிர் போடப் பிடிக்கும் .. ஆனால் கணக்கு எட்டாக்கனி எனக்கு!

    தனியாக ஒரு மாயச் சதுரம் செய்து பார்க்க வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சிறப்பு! மாயச் சதுரம்! கணக்கில் தான் எத்தனை எத்தனை புதிர்கள்...

    இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. தங்கள் குறள் ஆய்வுகள் வியக்க வைக்கிறது. தங்களின் அருமையான முயற்சிகளுக்கு வாழ்த்துகள். இன்று கட்டம் போட்டு தந்திருக்கும் மாயச்சதுரக் கணக்குகள் நன்றாக உள்ளன. நீங்கள் கூறியபடி போட்டு பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான பதிவு.
    எல்லோர் பிறந்த தேதிகளையும்
    இட்டு கூட்டுத்தொகை. பார்த்தேன்.

    எனக்கு எண் ஜோதிடத்தில் நம்பிக்கை மிக உண்டு.
    எண்கள் பொய் சொல்லுவதில்லை.

    மாயச்சதுரம் திகைக்க வைக்கிறது.
    எத்தனையோ அதிசயத் தகவல்களைக் கொடுக்கிறீர்கள். மிக நன்றி
    அன்பு தனபாலன்.

    பதிலளிநீக்கு
  9. இது எனது மாய சதுரம் குறித்த முதல் அனுபவம் . அதுவும் row - column -diagonal போன்றவற்றிற்கான தமிழ் பதங்களான நிரை நிரல் மூலை விட்டம் என அறிந்துகொண்டதும் இப்போதுதான்.

    பதிலளிநீக்கு
  10. சுவாரஸ்யமான தகவல்கள்! அருமையாய் ஆராய்ச்சி செய்திருக்கிறிர்கள்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  11. ஆஹா ... 1 செகண்ட் நேரத்திற்குள்ளாக மாயசதுரம் உருவாக்கும் வித்தையை எங்களுக்கு கற்று தந்துவிட்டீர்களே .. நன்றி ! என்னுடைய அதிர்ஷ்ட நம்பர் 122 என காண்பிக்கிறது.. ம் ம் .. தகவலுக்கு நன்றி !!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.