🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!

வணக்கம் நண்பர்களே... வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமுடைய அனைவருக்கும், இன்றைய பதிவர்களுக்கும் சிலது உதவும் எனும் எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்... சில சூழ்நிலையால் இணையம் மூலம் உங்களுடன் சந்திப்பே சில பல மாதங்களில் மாறலாம்... அதற்கு முன் இது போல் பகிர்வுகள் பதிவு செய்து விடை பெறுவேன்... அவ்வப்போது சிந்தனைப் பகிர்வுகளும் தொடரலாம்...!


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 23.07.2020

புதுக்கோட்டையில் 06/10/2013 அன்று நடந்த கணினி பயிலரங்கத்தில் பேசினதை இங்கே பேசுகிறேன்... இங்கும் முடிந்தளவு படிப்படியாக சொல்ல முயற்சிக்கிறேன்... விளக்கமாக அறிய அங்கங்கே இருக்கும் இணைப்புகளையும் (→ ←) சொடுக்கவும்... ஆறு தலைப்புகள் உண்டு... மூன்று தலைப்புக்குப் பின் டீ சாப்பிட அவகாசம் உண்டு ! ஹிஹி... நீண்ட விளக்கம் என்பதால்...! OK.

இந்தப்பதிவில் உங்களுக்குத் தேவைப்படுவதைக் கீழுள்ள தலைப்பைச் சொடுக்கியும் செல்லலாம்... அங்குச் சென்று அதே தலைப்பை மீண்டும் சொடுக்கினால், இங்கு வந்து விடலாம்...

1) உலாவி - சில குறிப்புகள்
2) மின்னஞ்சல் உருவாக்கம்
3) இணையப் பக்கத்தை சேமித்தல்
4) தமிழில் எழுதுவது (மாற்றுவது) எப்படி...?
5) வலைத்தளம் உருவாக்கம்
6) அமைப்புகளை தீர்மானித்தல்

1) உலாவி - சில குறிப்புகள் : Google உலாவி (browser) நமக்கு இலவசமாக தருவதில் வலைப்பக்கமும் (blogspot) ஒன்று... அதன் உருவாக்கத்தை அறிவதற்கு முன், உலாவி நமக்கு பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வோம்... உங்கள் கணினியில் Google உலாவி (browser) இருப்பதை சொடுக்கவும்... Google search பக்கம் திறக்கும்... அதை Google மொழியாக்கம் பக்கமாக முதலில் மாற்றுவோம்... உலாவியின் வலது பக்க மூலையில் மூன்று புள்ளிகளை சொடுக்கி, அதில் Settings என்பதை சொடுக்கவும்... திறக்கும் பக்கத்தை சிறிது சுட்டியில் (mouse) கீழ் நோக்கி உருட்டினால், (Scroll செய்தால்) அங்கே On startup இருப்பதை காணலாம்... அதில், Open a specific page or set of pages என்பதை தேர்வு செய்யவும்... Add a new page என்பதை சொடுக்கி, https://translate.google.com/ என்று தட்டச்சு செய்யவும்... Add என்பதை சொடுக்கி விடவும்... உலாவியின் வலது புறம் மேலுள்ள X என்பதையும் சொடுக்கி மூடி விடவும்... இப்போது மீண்டும் ஒரு முறை, உங்கள் கணினியில் Google உலாவியை சொடுக்கவும்... Google மொழியாக்கம் பக்கத்தை காணலாம்... இந்தப் பக்கம் தேவைப்படும் என்பதால் மூட வேண்டாம்...
2) மின்னஞ்சல் உருவாக்கம் : உலாவியில் + என்பதை சொடுக்கினால் இன்னொரு பக்கம் (tab) திறக்கும்... Create your Google Account to continue to Gmail - என்று சொல்லும் கூகுளின் சேவைக்கு முதலில் இங்கே சொடுக்கி சென்று, உங்கள் Google mail கணக்கை துவக்குங்கள்... First Name மற்றும் Last Name நிரப்புக... Username என்பதில் உங்கள் விருப்பப் பெயரை இடவும்... Password (கடவுச்சொல்) இடவும்... மறுபடியும் அதே கடவுச்சொல்லை அடுத்த கட்டத்திலும் இடவும்... username என்பதில், நீங்கள் இடும் பெயர் ஏற்கனவே இருந்தால், The username is taken. Try another. - என்று வரும்... அதை மாற்றவும்... பெயரோடு தங்களின் பிறந்த வருடம் அல்லது பிற எண்களையும் இணைத்துக் கொள்ளலாம்...

உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் சரியாக இருந்தால், Google அடுத்த பக்கம் செல்லும்... இங்கு Phone number மற்றும் Recovery email address - இவைகள் தங்களின் விருப்பப்படி (optional) என்பதை அறியவும்... ஆனால் இவை இரண்டும் நம் மின்னஞ்சலுக்கு பாதுகாப்பு தருபவை... இதில், நீங்கள் முதன்முதலாக மின்னஞ்சல் ஆரம்பிப்பவராக இருந்தால், Recovery email address என்பதை தவிர்த்து விடலாம்... ஏற்கனவே மின்னஞ்சல் இருந்தால், அந்த கட்டத்தை நிரப்பவும்... அடுத்து, கைபேசி எண்ணை கொடுப்பதாக நினைத்தால், அதையும் கொடுக்கவும்... கைபேசிக்கு வரும் ஆறு (6) இலக்க எண்ணை இடவும்... மின்னஞ்சல் பாதுகாப்பு எந்தளவு முக்கியம் என்பதையும், கடவுச்சொல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அறிய இங்கே சொடுக்கி அறியவும்...

அடுத்து உங்களின் பிறந்த நாள், மாதம், ஆண்டு மற்றும் பாலினத்தை நிரப்பவும்... அடுத்து வரும் பக்கங்களை படித்து விட்டு, I agree என்பதை சொடுக்கி விட்டால், உங்களின் மின்னஞ்சல் உருவாகி விடும்... உருவாகி விட்டது பாருங்கள்...!
3) இணையப் பக்கத்தை சேமித்தல் : நம் உலாவியில் முக்கியமான இணையப் பக்கத்தை Bookmark செய்து வைத்துக் கொண்டால், அது ஒரு சேமிப்பாகவும், நாம் உடனே செல்வதற்கு வசதியாகவும் இருக்கும்... உலாவியின் வலது பக்க மூலையில் மூன்று புள்ளிகளை சொடுக்கி, அதில் Bookmarks என்பதில் சுட்டியை கொண்டு செல்லும் போது, பக்கத்தில் இன்னொரு பக்கம் காண்பிக்கும்... அதில், Show bookmarks bar என்பதை தேர்வு (√) செய்யவும்... Address bar-ல் கீழே Bookmarks காண்பிக்கும்... அதில், Apps என்று ஒன்று இருக்கும்... அது அவ்வாறே இருக்கட்டும்... உலாவியில் மின்னஞ்சல் உருவாக்கின பக்கத்தில் இப்போது நீங்கள் உள்ளீர்கள், அதை இப்போது Bookmark செய்யப் போகிறோம்... உலாவின் முகவரி (Address bar) முடிவில் ஒரு நட்சத்திரத்தை காணலாம்... அதன் அருகில் உங்கள் சுட்டியை கொண்டு சென்றால், Bookmark this tab என்பதையும் காணலாம்... அதை சொடுக்கி வரும் பெட்டியில், Name என்பதில் சுருக்கமாக G என்று தட்டச்சு செய்யவும்... ஏற்கனவே Folder உருவாக்கினவர்கள், Bookmarks bar என்பதை தேர்வு செய்து, Done என்பதை சொடுக்கவும்... அவ்வளவு தான்... நாம் Gmail பக்கத்தை Bookmark செய்து விட்டோம்... இனி நீங்கள் அடுத்த முறை உலாவியை திறக்கும் போது, Address bar கீழுள்ள G என்பதை சொடுக்கி, உங்கள் மின்னஞ்சல் உள்ளீடு பக்கத்திற்கு செல்லலாம்...
"நீண்ட பதிவு போல...!" என்று Page down செய்து பார்க்கும் எனதன்பு உள்ளங்களே... இனிமேல் தான் விளையாட்டு ஆரம்பம்...! டீ சாப்பிட்டு விட்டீர்களா...? இனி...
4. தமிழில் எழுதுவது (மாற்றுவது) எப்படி...? உலாவி திறக்கும் போதே இந்தப் பக்கத்தை (translate.google.com) ஆரம்பித்து விட்டோம்... அதனால் அந்தப் பக்கத்தை (1st tab) சொடுக்கவும்... இடது புறமுள்ள பெட்டியில் உள்ள download arrow mark (v)-போல் இருப்பதை சொடுக்கி, தமிழ் மொழியை தேர்ந்தெடுக்கவும்... இப்போது பெட்டியில் ஆங்கிலத்தில் ammaa என்று தட்டச்சு செய்து, spacebar-யை தட்டினால் அம்மா என்று மாறி விடும்... அடுத்து சொல்லப்போகும் பல குறிப்புகளில், தமிழில் எழுத (மாற்ற) இந்தப் பக்கம் மிகவும் தேவைப்படும்... அதனால் தான் இந்த சின்ன பயிற்சி...! இந்தப் பெட்டியின் வலதுபுறம் கீழே என்பதன் பக்கத்தில் உள்ள -யை சொடுக்கி, தமிழ் தட்டச்சு பயின்றவர்கள் பயன்படுத்தலாம்... இதில் எழுத்து வரம்பு 5000 என்பதையும் அங்கு காணலாம்... அதனால் :-

தமிழ் தட்டச்சு பயின்றவர்களுக்கென Google உள்ளீட்டு கருவி என்று உள்ளது... அங்கு செல்ல இங்கே சொடுக்கவும் அதில் நம் மொழியை Tamil என தேர்வு செய்யவும்... அதன் பக்கத்தில் என்பதன் பக்கத்தில் உள்ள download arrow mark (v)-போல் உள்ளதை சொடுக்கி, நீங்கள் பயின்ற தட்டச்சு பலகையை (Keyboard) தேர்வு செய்து, தட்டச்சு செய்து தமிழிலேயே எழுதலாம்... சற்று கீழே நீங்கள் scroll செய்தால், "Chrome நீட்டிப்பை நிறுவுக" என்று காணலாம்... அதை சொடுக்கி, அதன் பின் வரும் Add to chrome மற்றும் Add extension என்பதையும் சொடுக்கி விட்டால், நம் உலாவியில் Address bar அருகே ஒரு தமிழ் Icon வந்து விடும்... அதை சொடுக்கி நமக்கு வேண்டியதை தேர்வு செய்து விட்டு, தமிழில் தட்டச்சு செய்யலாம்...
5) வலைத்தளம் உருவாக்கம் உலாவியில் மீண்டும் ஒருமுறை + என்பதை சொடுக்கினால் இன்னொரு பக்கம் (tab) திறக்கும்... blogger.com என்று தட்டச்சு செய்யவும்... Sign in சொடுக்கி செல்லவும்... Create a new blog என்பதில், இப்போதைக்கு உங்களின் பெயரை தமிழில் இடவும்... அடுத்து வரும் பக்கத்திற்கு சென்ற பின், மொழி மாற்ற பக்கத்திற்கு (tab) சென்று உங்களுக்கு பிடித்த பெயரை தமிழில் மாற்றிப் பார்க்கவும்... ஆங்கில எழுத்துக்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும்... மீண்டும் நம் வலைப்பக்க பக்கத்திற்கு வந்து, Title என்பதில், நீங்கள் தீர்மானித்த வலைத்தளத்தின் பெயரை தமிழில் இடவும்... Address என்பதில், நீங்கள் ஆங்கிலத்தில் ஞாபகம் வைத்துள்ள வலைத்தளத்தின் பெயரை இடவும்... This blog address is available என்று வரும்வரை மாற்றம் செய்யவும்... தமிழில் சரியாக வரும் ஆங்கில எழுத்துகள் தான் உங்கள் தள முகவரி url... சரியானதை பொறுமையாக தேர்வு செய்யவும்... மற்றவர்களுக்குச் சொல்வதற்கும், அவர்கள் தமிழில் மாற்றி உங்களின் தளத்தை தேடியந்திரங்களில் விரைவில் கண்டுபிடிப்பதற்கும் எளிதாக இருக்க வேண்டும்... இதோ ஓர் எடுத்துக்காட்டு :-

அடுத்து, Theme என்பதில், Simple என்பதை தேர்வு செய்து, OK என்பதையும், No thanks என்பதையும் சொடுக்கவும்... இந்தப் பக்கத்தையும் B எனும் பெயரில் Bookmark செய்யவும்...
6) அமைப்புகளை தீர்மானித்தல் : வலைப்பக்கம் உருவாக்கி விட்டோம்... இடது புறம் கீழுள்ள Settings-யை சொடுக்கவும்... அதில் முதலில் Basic என்பதற்கு கீழுள்ள Title யை சொடுக்கவும்... அதில் உங்கள் பெயர் இருக்கும்... உங்களுக்கு கிடைத்த வலைப்பூவின் பெயரை மாற்றவும்... அது தான் உங்கள் வலைத்தளத்தின் பெயர்... நான் எடுத்துக்காட்டாக சொன்ன "அன்பே அனைத்தும்" என்று நிரப்புகிறேன்... (ஒவ்வொன்றையும் முடித்தவுடன் Save-யை சொடுக்க மறக்க வேண்டாம்...!) அடுத்து, Description என்பதில், உங்கள் வலைத்தளம் குறித்து சிறுகுறிப்பு எழுதவும்... இது வலைத்தளத்தின் பெயருக்கு கீழே வரும்... Blog language என்பதில், Tamil - தமிழ்-யை தேர்வு செய்யவும்... Privacy கீழுள்ள Visible to search engines என்பது On செய்து இருக்கட்டும்... அடுத்து HTTPS கீழுள்ள HTTPS redirect என்பதும் அவ்வாறே...

அடுத்து Comments கீழுள்ள Comment Location என்பதில் Embedded-யை தேர்வு செய்யவும்... Who can comment? என்பதில், User with Google Accounts-யை தேர்வு செய்யவும்... Comment Moderation ? என்பதில், Always-யை தேர்வு செய்யவும்... Email moderation requests to என்பதில் உங்களின் வலைப்பக்க மின்னஞ்சல் Gmail id முகவரியை இடவும்... Reader comment captcha என்பது Off செய்தே இருக்கட்டும்... இவற்றின் முக்கியத்துவத்தை விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்

Comment Form Message என்பதை சொடுக்கி உங்களுக்கு பிடித்த சில வரிகளை எழுதவும்... இந்த வரிகள் நீங்கள் எழுதப்போகும் பதிவின் கருத்துரைப்பெட்டிக்கு கீழ் வரும்... Formatting கீழுள்ள Time Zone என்பதில், (GMT+05:30) India Standard Time-யை தேர்வு செய்யவும்... Meta tags கீழுள்ள Enable search description என்பதை On செய்து விட்டு, Search description என்பதில், நீங்கள் எழுதப் போகும் பதிவுகளின் முக்கிய நோக்கம் மற்றும் சாரத்தை எழுதவும்... இதன் முக்கியத்துவத்தை விரிவாக அறிய இங்கே சொடுக்கவும்

அடுத்து Manage Blog கீழுள்ள Back up content என்று இருக்கும்... இப்போது அதை சொடுக்க தேவையில்லை... பதிவுகள் எழுதிக்கொண்டே வருகையில், மாதம் ஒருமுறை நம் பதிவுகளை சேமிக்க இது பயன்படும்... Gmail பக்கம் சென்று Inbox-ல், Comment subscription request from என்று வந்துள்ளதை சொடுக்கி, Subscribe என்பதை சொடுக்கவும்... இப்போது திறக்கும் பக்கத்தையும், இந்த Gmail பக்கத்தையும் மூடி விடலாம்...

முடிவாக Site feed கீழுள்ள Allow Blog Feed-ல் Until Jump Break-யை தேர்வு செய்யவும்... இதை நம் பதிவு எழுதும் போது பயன்படுத்த வேண்டும்... சுருக்கமாக இங்கே சொல்கிறேன்... உதாரணமாக 7 பதிவுகள் எழுதி விட்டீர்கள்... உங்கள் வலைத்தளத்திற்கு வருபவர்கள், அந்த 7 பதிவுகளையும் உங்களின் வலைத்தள முகப்பு பக்கத்திலேயே வாசித்து விடுவார்கள்... இதனால் பக்கப் பார்வைகளின் எண்ணிக்கை குறையும்... அதே சமயம் சற்று பெரிய பதிவாக இருந்தால், உங்கள் வலைத்தளத்தில் மின்னஞ்சல் சந்தாதாரர்களுக்கு, (email subscription) அந்தப் பதிவைக் குறித்து மின்னஞ்சல் செல்லாது... இவற்றை எல்லாம் தவிர்க்க, சில வரிகள் மற்றும் பதிவிற்கேற்ப படத்தை இணைத்த பிறகு, பதிவு எழுதும் பக்கத்தில், மேலே நிறையப் பொத்தான்கள் (icons) இருக்கும்... அதன் முடிவில் மூன்று புள்ளிகளை சொடுக்கி, அதில் "_" என்று இருக்கும் பொத்தானை (சுட்டியை கொண்டு செல்லும் போது Insert Jump break என்று தெரியும்...) சொடுக்கி விட்டு, பதிவை தொடர்ந்து எழுத வேண்டும்... வரும் பதிவுகளில் மேலும் விளக்கமாக அறியலாம்...
வலது பக்கம் மேலுள்ள உங்கள் பெயரில் தொடங்கப்பட்ட ஆரம்ப ஆங்கில எழுத்தைக் கொண்ட icon-யை சொடுக்கி, Sign-out செய்து விடவும்... இது நீங்கள் எங்கிருந்தாலும் மின்னஞ்சல் மற்றும் வலைப்பக்கம் உட்பட பலவற்றில் இருந்து Sign-out செய்ய வேண்டியது முக்கியம்... அடுத்த முறை உங்கள் வீட்டில் உலாவியை சொடுக்கும் போது, Address bar கீழுள்ள B -யை சொடுக்கினால் போதும்... அடுத்து உங்களின் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொலை கொடுத்து விட்டால், உங்களின் வலைப்பக்க பக்கத்திற்கு சென்று விடலாம்... நன்றி...
நண்பர்களே... எதையுமே கற்றுக் கொடுத்தால் தான் கற்றுக் கொள்ளவே முடியும்... அதைப்பற்றிக் கணினியில் முதல் அனுபவம் முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே ! பதிவிலேயே சொல்லியுள்ளேன்... இந்தப்பதிவால், "ஒரு தொழினுட்ப பதிவு எவ்வாறு எழுத வேண்டும்" என்பதை கற்றுக் கொண்டுள்ளேன் என்று நினைக்கிறேன்... இந்தப் பதிவைப் படித்தால் மட்டும் போதாது... அதனால் "செய்து பார்த்திட வேண்டும்" எனும் முடிவுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துகள் நண்பர்களே...!

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com

அடுத்து என்னென்ன Gadgets மட்டும் தேவை...? அறிய இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு...

    புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    மிக்க நன்றி ..

    பதிலளிநீக்கு
  3. மிக எளிமையாக ஒரு வலைப்பதிவை தொடங்குவதிலிருந்து, அதில் செய்ய வேண்டிய அமைப்புகள் வரை அடிப்படை விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். உங்களது சேவை தொடரட்டும்..

    வாழ்த்துக்கள்..!!!

    பதிலளிநீக்கு
  4. புதியவர்களுக்கு அருமையான தகவல்கள்... நானும் கடைசி தகவலின் பயனாளர்.

    பதிலளிநீக்கு
  5. என்னுடைய வலையுலக அனுபவம் ஐந்தாக இருந்தாலும் கடந்த பத்து வருடமாக இந்த தமிழ் இணையத்தில் செயல்பட்டு கொண்டிருப்பவர்களை வைத்துச் சொல்கின்றேன்.

    இதுவரையிலும் வலையுலகில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், இனி வரப்போகின்றவர்களுக்கும் நீங்கள் முக்கியமானவர் மற்றும் முதன்மையானவர்.

    உங்கள் பெயரை எவரும் ஒதுக்கி விட்டு நகர்ந்துவிட்டு செல்ல முடியாத அளவுக்கு பல விதங்களில் சாதனை படைத்து விட்டீர்கள்.

    நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. உபயோகமானது. பி டி எப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளத் தரலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// பி டி எப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளத் தரலாமே... ///

      ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : முன்பு அதற்கான Save as PDF என்னும் script அல்லது gadget-யும் சேர்க்க வேண்டும்.. இப்போது அது தேவையில்லை... கூகிள் எளிதாக்கி விட்டது... எனது தளம் மட்டுமல்ல... எந்தத் தளத்தின் பகிர்வையும் உங்களது கணினியிலும் சேமிக்கலாம் உங்கள் விருப்பப்படி (.pdf ஆகவும்...!) பிடித்த பகிர்வுக்கு சென்று, Ctrl Key-யை அழுத்திக் கொண்டு P எழுத்தை அழுத்தவும்... மற்றவை சொல்ல வேண்டுமா என்ன...? ஹிஹி... அது சொல்லிக் கொடுக்கும்...! சரியா...?

      நீக்கு
    2. நீங்க சொல்லுவதும் சரி தான் அண்ணே. ஆனால் அப்படி செய்தால் கன்னாபின்ன என்று கோப்பு உருவாகும், பல சமயம் பதிவுகளை சரியாக படிக்க முடியாது.

      எனவே, நம் பதிவின் அடியில் Print Friendly தரும், buttonனை இணைத்தால், அனைவரும் எளிதில், பதிவை (மட்டும்), அழகாக எடுத்து சேமித்து வைக்கலாம். சென்று பாருங்க : http://www.printfriendly.com/button உங்க தளத்தில் சேருங்க.

      மாதிரி பார்க்க வேண்டுமானால் : தளம் http://naarchanthi.wordpress.com/2013/03/20/malai/, buttonனை அமுக்கியவுடன் கோப்பு உருவாகும் இடம் http://www.printfriendly.com/print?url=http%3A%2F%2Fnaarchanthi.wordpress.com%2F2013%2F03%2F20%2Fmalai%2F

      நீக்கு
  7. மிக்க நன்றி D.D. அதிகமானோர் கேட்பதால் பதிவாகவே போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப்பதிவு உங்கள் வலைத்தளத்தில் முதல்பக்கத்தில் எப்பொழுதும் இருந்தால் அநேகருக்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. கடுமையான உழைப்பைக் காண முடிகிறது. பழையவர்கள், புதியவர்கள் என, பதிவர்கள் அனைவருக்கும் பயன்படும் தகவல்கள் அடங்கிய பெட்டகம் இந்த பதிவு. கம்ப்யூட்டர் பயிலரங்குகளில் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அனுமதியோடு குறிப்பேடாக அச்சிட்டு வழங்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு DD.. நிறைய பேர் வரும் உங்கள் தளத்தில் இது இட்டது பல பேரை சென்றடையும்.. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பயனுள்ள பதிவு அண்ணா மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவு...
    ஜி+ பொறுத்தவரை நான் ஜி + ஆகவே தொடர்கிறேன். ஆனால் கருத்துப் பெட்டி இல்லாமல் ...
    நன்றி..

    பதிலளிநீக்கு

  11. பல பேருடைய (புதிய மற்றும் என்னைப் போல் உள்ள சில பழைய பதிவர்களின்) ஐயங்களை கேட்காமலேயே தீர்த்துவிட்டீர்கள். மிகவும் அருமையான உபயோகமான பதிவு. வருங்காலங்களில் பதிவர் சந்திப்பின் போது சில மணி நேரம் ஒதுக்கி புதிய பதிவர்களுக்காக உங்களை வகுப்பு எடுக்க சொல்லலாம். தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. நீங்க நல்லா இருக்கணும்... ‘பதிவர் நாடு’ முன்னேற!

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    அண்ணா

    விளக்கம் நன்றாக உள்ளது நல்ல முயற்சி பலரும் பயன் பெறட்டும்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    த.ம 4வது வாக்கு

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  15. இதை விட விளக்கமாய் யாரும் எழுதியதில்லை ,அருமையான பதிவு !
    long லீவ் சொல்லி இருக்கிறீர்கள் ,எந்த நோக்கமாக இருந்தாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
    த ம 5

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு/விளக்கம். பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  17. இப் பதிவை பாட்ட வார்த்தை இல்லை! வளமுடன் என்றும் வாழ்க!

    பதிலளிநீக்கு
  18. அளிக்கப்பட்ட விளக்கங்கள் மிக அருமையானவை..
    நல்ல மனம் வாழ்க!.. நாடு போற்ற வாழ்க!..

    பதிலளிநீக்கு
  19. எக்கச்சக்கமான அறிவுபூர்வமான விஷயங்கள். ஆங்கிலத்தில் படித்து படித்து இப்போ இவைகளை தமிழில் படிப்பது சுகேமே!
    தமிழில் படித்து விட்டேன்;
    உங்கள் உழைப்பு அதிகம்; ஜீரணிக்க ஒரு இரு நாள் ஆகும்
    +1

    பதிலளிநீக்கு
  20. மிகவும் பயன்மிக்க தகவல்கள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  21. என்னைப்போன்ற கத்துகுட்டி பதிவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு பகிர்விற்க்கு மிக்க நன்றி தனபால் சார்.

    பதிலளிநீக்கு
  22. மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. மதிப்பிற்குரிய திரு.தனபாலன் அவர்கட்கு,

    "வலைப்பூ"வில் மொட்டாக நிற்கும் 'பூமொக்கை' மலரச் செய்திருக்கிறீர்கள். எத்தனை விஷயங்கள். படித்து அறிந்து கொண்டு
    செயல் படுவோம். அனைவருக்கும் பிரசாதமாய்ப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    மொக்கை வலைப்பூ
    http://paavaivilakku.blogspot.in

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் செய்யும் மாயாஜாலங்களை எங்களுக்கும் கற்றுத் தர முடிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.தொழில்நுட்பப் பதிவாக இருந்தாலும் உங்களுக்கே உரிய பாணியில் அளித்திருப்பது சிறப்பு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  25. அருமையான விளக்கங்கள் அண்ணே! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  26. .in இல் இருந்து .com ஆக மாற்றும் முறையினை பலருக்கு நீங்கள் தனிப்பட்ட முறையிலேயே சொல்லியும் செய்தும் கொடுத்துள்ளீர்கள் (என்னையும் சேர்த்து). இப்பொழுது அதை பதிவாகவே இட்டுள்ளது பலருக்கும் உதவும்... நல்ல பதிவு சார்... :)

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள் தனபாலன் சார்..

    புதிய பதிவர்க்ளுக்கும், பழைய பதிவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். உங்களின் உதவியால் தான் நானும் என்னுடைய வலைத்தளத்தை சரி செய்துள்ளேன்..

    பதிலளிநீக்கு
  28. பயனுள்ள பதிவு.
    எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கும்
    என் போன்ற ரசிகர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  29. நல்ல பதிவு திண்டுக்கல் தனபாலன் அவர்களே.. புதுசாய் வலைப்பதிவு ஆரம்பிப்பவருக்கு நல்ல வழிகாட்டி... இதே தலைப்பை ஒத்த பதிவை நானும் டிராப்டில் டைப் செய்து வைத்துள்ளேன்..

    எனக்கு ஒரு சந்தேகம்...??

    நீங்க என்ன படிச்சிரிகீங்க????

    பதிலளிநீக்கு
  30. 6வது வழிமுறையை எனக்கும் தனிப்பட்ட முறைல சொல்லிக்கொடுத்துருக்கீங்க..!! மிகவும் பயனுள்ள பதிவு.

    உங்க சேவைக்கு மிக்க நன்றி.. :)

    பதிலளிநீக்கு
  31. அடடடா இந்த மாதிரி ஒருத்தர் நாங்கல்லாம் பதிவு தொடங்கறப்போ இருந்துருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். Jump Break முறையை விளக்கியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. மிகவும் தெளிவாக எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்கள் - இல்லையில்லை - சொல்லித் தந்திருக்கிறீர்கள்.
    அப்படியும் என்னைபோன்ற தொழில்நுட்ப அறிவிலிக்கு உங்கள் உதவி ரொம்பவும் தேவை.
    பொதுவாக தங்களுக்குத் தெரிந்ததை யாரும் பகிர்ந்துகொள்ளவோ, பிறருக்கு சொல்லித்தரவோ விரும்புவதில்லை. நீங்கள் இதிலும் தனித்து நிற்கிறீர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும். இணையம் உள்ளளவும், பதிவர்கள் உள்ளளவும் உங்கள் நீடித்த புகழ் இருக்கும். பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  33. மிக மிக பயனுள்ள பதிவு . அதற்கு முதலில் நன்றி .
    வீட்டுக்கு சென்று கணினியில் இந்த பதிவை படித்து தேவையானவற்றை மாற்றிக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  34. பட்டெல்லாம் பிரமாதமா எடுத்து விடுறீங்க!! நன்று!!

    பதிலளிநீக்கு
  35. கட்டுரை சிறப்பு .வாழ்த்துகள் .
    வெளிநாடு பயணமா.
    வந்து திரும்ப உங்கள் சேவையை தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  36. திண்டுக்கல் தனபாலன் ஒரு Web Developer என்று நிருபித்த பதிவிது. வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குச் சிறந்த வழிகாட்டல். எனது வலைப்பூக்களூடாக தங்கள் பதிவை அறிமுகம் செய்ய அனுமதி தரவும். பலருக்கு இப்பதிவை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். வலைப்பூ நடாத்த விரும்புவோர் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டலாக இப்பதிவு அமையும் என்பதை விட, அவரவர் தமது வலைப்பூக்களை முன்னிலை வரிசைக்குத் தரமுயர்த்த உதவும் பயனுள்ள பதிவிது. எனது நண்பர்களே, இப்பதிவை உங்கள் தளங்களிலும் அறிமுகம் செய்து உதவுங்கள். அதனால் சிறந்த வலைப்பதிவர்கள் முன்னுக்கு வர உதவியதாக அமையும்.

    பதிலளிநீக்கு
  37. அருமை சகோ. இந்தாலும் இன் என்பதில் இருந்து காம் என்பது மாற்ற யோசனையா இருக்கு. ஏன்னா சரியா செய்யாட்டா ப்லாக் காணாமப் போயிடுமோன்னு பயம். நீங்க சொல்லி இருக்கதுல நிறைய விஷயம் நான் செய்யல.. ஹ்ம்ம்.

    பதிலளிநீக்கு
  38. நல்ல பதிவு. இவ்வளவு விளக்கமாக எழுத பொறுமை தேவை. அதை விட உள்ளடக்கம் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் சிறப்பு. எல்லாவற்றிக்கும் இணைப்புக்களை கொடுத்து அமர்க்களப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. அன்புச் சகோதரா வலை உலகத்தில் உங்களைப் போன்ற சொந்தங்கள்
    இருக்கையில் எங்களுக்கு என்ன குறை ?...விரைவில் அம்பாளடியாளின்
    தளமும் தங்களால் அழகுறும் .முகம் பார்க்காத இந்த உறவுகள் எங்கள் மனக்
    கண்களுக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் !! வாழ்த்துக்கள் சகோதரா அருமையான பகிர்வினை அனைவரும் பயன் பெறும் வண்ணம் மிக எளிமையாக நிறைந்த விளக்கங்களுடன் தந்துள்ளீர்கள் தங்களின் முயற்சிகள் யாவும் இது போன்றே வெற்றி பெற்றிட என் நன்றி கலந்த அன்பான நல் வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  40. பணி நிமித்தமாக இடைவெளியா? வீட்டில் அனைவரும் நலம் தானே? பயனுள்ள தகவல்கள். கற்றுக் கொடுப்பதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  41. மிக மிக பயனுள்ள பதிவு, எம்மைப்போன்ற கற்று குட்டிகளுக்கு வரப்பிரசாதம். நன்றி அண்ணார் அவர்களே....

    பதிலளிநீக்கு
  42. மிக மிக நல்ல பதிவு நண்பரே! அருமையான, விரிவான விளக்கங்களுடன், மிகவும் உபயோகமாக, எளிமையாகச் சொல்லி யிருக்கின்றீர்கள்.

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்பதே DD யின் கொள்கை என்பதை நிரூபித்து விட்டீர்கள்! அருமையான ஆசிரியராகவும் ஆகிவிட்டீர்கள்!

    வாழ்த்துக்கள்! தொடர்க தங்கள் சேவை!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  43. எங்களை இவ்வையகம் முழுவதும் அறிய இணைத்துக் கொடுத்தத்டும் நீங்கள் தானே! உங்கல எங்களுக்குச் சுட்டிக்காட்டிய பகவான் ஜி யையும் மறக்க இயலுமா!

    உங்கள் இருவருக்கும், மற்றும் எங்களை ஊக்குவிக்கும் எல்லோருக்குமே எங்கள் நன்றி உரித்தாகும்!

    நன்றி நன்றி! DD!!

    பதிலளிநீக்கு
  44. பயனுள்ள தகவல் !

    பாதுகாக்கப்பட வேண்டிய குறிப்புகள்

    பதிலளிநீக்கு
  45. ரொம்ப உபயோகமான பதிவு!.. நிறைய விஷயங்கள் இங்கு வந்துதான் தெரிந்து கொள்கிறேன்..பணி காரணமாக இடைவெளியா!.. ஆயினும் தங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  46. கண்டிப்பாக, புதிதாக வலைப்பூ தொடங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  47. மிகவும் உபயோகமான ஒரு பதிவு! புதியவர்கள் மட்டுமல்ல! என்னை போன்றவர்களுக்கும் உதவக்கூடிய ஒன்று. நானும் .in லிருந்து .com க்கு மாற வேண்டும். இந்த பதிவு அதற்கு உதவும். சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  48. மிக்க நன்றி நண்பரே! உங்களைப் போல அனைவருக்கும் பயன்படும் கருத்துக்களை வெளியிடுவோர் பதிவுலகில் மிகவும் சிலரே!

    பதிலளிநீக்கு
  49. அனைவருக்கும் பயன்படும் அற்புதப் பதிவு
    எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  50. மிகவும் பயனுள்ள பதிவு.மிக விரிவாக எளிதாக விளக்கப்படுத்தியிருக்கிறீர்கள்.
    உங்கள் பதிவில் பாட்டுகளில்லாமல் ஓர் பதிவா.பாடல்கள் அருமை.உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  51. வணக்கம் நண்பரே! இந்தப்பதிவு மூலம் என் தளத்தை .in லிருந்து .comக்கு சற்று முன்னர் மாற்றம் செய்து விட்டேன். புரொபைலும் ப்ளாக்கர் புரொபைலுக்கு மாற்றிவிட்டேன். ஜம்ப் ப்ரேக்கும் இட்டுவிட்டேன்! மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. தொடர்ந்து இது போன்ற குறிப்புக்களை எழுதவும். அனைவருக்கும் பயனளிக்கும். நன்றி!

    பதிலளிநீக்கு
  52. .inலிருந்து .comற்கு மாற்ற கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனாலும் முயற்சி செய்து பார்க்கிறேன். ஜம்ப் பிரேக் இது வரை நான் செய்யவில்லை. அதையும் செய்து விடுகிறேன். எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் தனபாலன் சார் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  53. Dear Shri DDG-Dhanapal!
    Good day.
    It may be your personal...
    U plan go on long leave!..
    Many will be missing u.
    God bless u

    Balaraman R

    பதிலளிநீக்கு
  54. என்ன? இணையம் மூலம் சந்திப்பே மாறலாமா? இப்படி அதிர்ச்சி செய்தி கொடுத்துட்டீங்களே..நலம் தானே? பார்த்துக் கொள்ளுங்கள்..

    பதிவு அருமை..உபயோகமான தகவல்கள். g+ குழப்பம் தான்..இப்போதான் மாறினேன்..கருத்துரை சேர்க்காமல்..
    நன்றி!

    பதிலளிநீக்கு
  55. 'நல்லன எல்லாம் தரும்' என்ற அபிராமி அந்தாதி வரிகள் உங்களுக்கும் பொருந்தும்!

    பதிலளிநீக்கு
  56. இணையம் மூலம் சந்திப்பு மாறலாம் என்றது பணியின் காரணமாக இருக்குமோ !! உபயோகமான பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு

  57. எனக்கு மிக மிக அவசியமான பதிவு.
    மிகவும் நன்றி தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  58. ஜோதிஜி ஐயா அவர்களின் கருத்துடன் நான் மிகவும் ஒத்துப் போகின்றேன் ஐயா.
    வலையும் திண்டுக்கல்லும் ஒன்றுதான்.
    பிரித்துப் பார்ப்பது என்பது இயலாத காரியம். தங்களின் சேவை பாராட்டிற்கு உரியது.
    சூழ்நிலை காரணமாக இணையத்தை விட்டு சிலபல காலம் மாறலம் என்று கூறி இருப்பதுதான் மிகவும் வருத்தமளிக்கின்றது.
    ஆனால் ஒன்று இணையத்தைவிட்டு விலகி இருப்பதென்பது தங்களால் இயலாத ஒன்று.
    மீண்டும் தங்களின் வரவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  59. வலைப்பூ புதியதாக ஆரம்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, தொடரந்து வலைப்பூவில் எழுதிவருபவர்களுக்கும் பயனுள்ள செய்திகளை தங்களுடைய பதிவின் மூலமாக அறிந்தேன். எங்களைத் திருத்திக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு உதவும். நன்றி.

    பதிலளிநீக்கு
  60. மிகவும் பயனுள்ள பதிவு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  61. மிக மிக பயனுள்ள பகிர்வுக்கு நன்றிஜீ.

    தாங்கள் நலம்தானே?


    அமர்க்களம் கருத்துக்களம்
    உலக தமிழர்களின் வலை தளம்
    www.amarkkalam.net

    பதிலளிநீக்கு
  62. அருமையான பகிர்வு...
    மிகவும் அருமையான தகவல் தொகுப்பு...
    பயனுள்ள தொகுப்பு சார்....

    பதிலளிநீக்கு
  63. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    தங்களின் இந்த பதிவு அவசியம் அன்றாடம் அனைவருக்கும் பயன்படும். இதோ நான் பிக்மார்க் செய்து கொண்டேன். புதுக்கோட்டைக்கு நீங்கள் வந்து வகுப்பு எடுத்த அந்த தருணங்கள், நம் பேருந்து பயணம் இன்னும் என் நினைவுகளில் ரீங்காரம் இடுகிறது. மீண்டும் ஒரு பயிலரங்கத்தில் சந்திக்க வேண்டும். அனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரர்..

    பதிலளிநீக்கு
  64. மிக மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  65. இது புதியவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பயனுள்ள பதிவு. அனைத்தையும் செய்துவிட்டேன், என்னால் நம்பமுடியவில்லை. விசிட்டர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  66. தாமதமான கருத்துக்கு பொறுத்தருள்க
    பொறுமையாக வாசிக்க வேண்டி இருந்ததால் தான். திரும்ப வாசித்து செயல்படுத்த வேண்டும். நல்ல பதிவு இதனால் பல குழப்பங்கள் தெளிவடையும்.நன்றி சொல்ல வார்த்தை இல்லை சகோதரா!மனசாட்சி உள்ளவர் அல்லவா அது தான் நல்ல மனம் வாழ்க...!நன்றி நன்றி ...!

    பதிலளிநீக்கு
  67. அற்புதமான பகிர்வு, வாசகர்கள் கண்டிப்பாக புதிய வலைப்பதிவுகள் தொடங்க வசதி செய்து கொடுத்துள்ளீர்கள் !

    பதிலளிநீக்கு
  68. எல்லோர்க்கும் பயனுள்ள பதிவு சார்
    மேலும் தங்கள் பணி தொடர
    நெஞ்சார வாழ்த்துகிறேன்

    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  69. Thank you திண்டுக்கல் தனபாலன். கொஞ்சம் உங்களோடு வலை தளத்தில் தங்கள் வருகைக்கும் உற்சாக வரவேப்பிர்க்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  70. தனபாலன் சார். உடனடியாக ஓடோடி வந்து படித்தேன். ஆனால் என் சிற்றறிவுக்குச் சில செய்திகளைச் செய்ய இயலவில்லை. மேலும் மெனக்கெட நேரம் இல்லை. ஒரு ஓய்வான நாளில் மீண்டும் வந்து எல்லாவற்றையும் செயல்படுத்துவேன்.

    அருமையான பயனுள்ள பதிவுக்கும் நினைவூட்டி அழைத்தமைக்கும் நன்றி தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  71. பயனுள்ள பதிவு சார் ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  72. நன்றிகள்.

    எனது வலைப்பூ.in லிருந்து.com ஆயிற்று.

    நீர் உண்மையாலுமே பரோபகாரிதான். நான் பார்த்தவரை கணினி கற்றவர்கள் அதிகமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இது ஒரு வித மனோபாவமோ அல்லது குறையோ தெரியாது. நீர் வித்தையையும் காட்டி விளக்கமும் சொல்லியிருக்கிறீர்கள்.இது நீங்கள் கற்ற கல்விக்கு பயன் மட்டுமல்ல உங்களது பரந்த மனப்பாங்குக்கும் சாட்சி. தமிழை உணர்ந்து கற்றவர் என்பது நன்கு புரிகிறது.

    Thank you,
    God Bless you.

    பதிலளிநீக்கு
  73. பயனுள்ள தகவல்கள்..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  74. மிக்க நன்றி தனபாலன். ஜம்ப் ப்ரேக் பற்றி எனக்கே தெரியாத தகவல். இப்போது சரி செய்து விட்டேன். Thanks a ton.

    பதிலளிநீக்கு
  75. தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும். உங்களைக் காணோமேனு நினைச்சேன். இங்கே வந்து படிச்சுப் பார்த்தால் விடைபெறுவதாக எழுதி இருக்கீங்க! :( என்ன ஆச்சு? வேலை அதிகமா? நிதானமா எல்லா முக்கியமான வேலைகளையும் முடிச்சுட்டு வாங்க. காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  76. தேவையான பதிவு. எனினும் யாரையானும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் செய்யணும். :)))))முயன்று பார்க்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  77. Jump Break Settings தளத்தின் பார்வையாளர் வருகையை அதிகரிக்கும் என்பது எனக்கு புதிய தகவல். நன்றி.

    பதிலளிநீக்கு
  78. அண்ணா...நான் புதிதாக (www.santhanamrobin.blogspot.com) என்ற தலத்தை
    உங்கள் பதிவுகளை கண்டு கற்று உருவாக்கியுள்ளேன்..மிக்க நன்றி...
    மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கல்....

    பதிலளிநீக்கு
  79. அண்ணா...என்தலத்தில் விளம்பரங்களை சேர்ப்பது பற்றி தயவுசெய்து
    விலக்கவும்..

    பதிலளிநீக்கு
  80. தங்களின் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது.ஆலோசனைகளுக்கு நன்றி ஐய்யா...!

    பதிலளிநீக்கு
  81. இப்போது சொல்லப் போவது உங்களின் பகிர்வின் + மனதின் போக்கையே மாற்றும்... அதனால் ஜாக்கிரதை...!

    தாங்கள் கூறி இருப்பது எனக்கு புரியவில்லை சற்று விளக்கவும்.நன்றி ஐய்யா..!

    பதிலளிநீக்கு
  82. திண்டுக்கல் தனபாலன் ஒரு Web Developer என்று நிருபித்த பதிவிது. வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.

    பதிலளிநீக்கு
  83. தல.. தல... in என்பதை com என மாத்திட்டேன் தல...

    ரொம்ப நன்றிங்க தல....

    பதிலளிநீக்கு
  84. ஒவ்வொரு பதிவர்களுக்கும் இது ஒரு பகவத்கீதை போன்றது என்று உணர முடிகிறது. எல்லா கேள்விக்கும் தெளிவான விளக்கம் என்று அருமையாக எழுதி உள்ளீர்கள் சார்.


    ஆர்வமாக அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  85. ரெம்ப பயனுள்ள பதிவு. என்னுடைய பல நாள் தேடலுக்கு விடை கிடைத்தது. இவ்வளவு நாள் எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு பதில் அனுப்ப தெரியாம இருந்தேன். இப்போ சரி ஆகி விட்டது. ரெம்ப நன்றி அண்ணா..............

    பதிலளிநீக்கு
  86. மிகச் சிறப்பான பகிர்வு.....
    உங்கள் வருகையால் மாற்றம் என் தளத்திலும் ஏற்பட்டு விட்டது..தொடர்கிறேன்..

    நன்றிகளுடன் பாண்டியன்...

    பதிலளிநீக்கு
  87. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில்
    பாராட்டப்பட்டுள்ளது .
    இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/4.html

    பதிலளிநீக்கு
  88. நானும் .in இல் இருந்து .com மாறிவிட்டேன் ...சிறப்பான கட்டுரை ....பயனுள்ள செய்திகள் ....பகிற்விற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  89. .in இருந்து .com மாறி விட்டேன். ஆனாலும் தமிழ்மணத்தில் பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை.... இப்பிரச்சனை ஒரு வாரமாகவே தொடந்து வருகிறது... தயவு செய்து உதவுங்கள் சகோ!!!

    பதிலளிநீக்கு
  90. சகோ நீங்கள் இங்கே சொல்லி கொடுத்துள்ளது படி செய்து பார்த்தேன் paste செய்துவிட்டு savetheme கொடுக்கிறேன் ஆகிறது ஆனால் back போனால் பிளாக்கர்.com You have unsaved changes that will be lost. ok cancel இப்படி காண்பிக்கிறது சரி preview பார்க்கலாம் என்று பார்த்தால் The widget settings in widget with ID BloggerButton1 aren't valid. The specified logo URL is not allowed.

    Error 500
    இப்படி காண்பிக்கிறது

    பதிலளிநீக்கு
  91. செய்து பார்க்கிறேன் அன்பு தனபாலன்.மிக நன்றி. ரொம்ப தளர்வாக உணர்ந்தேன். பரவாயில்லி. முயற்சி செய்து மீளலாம்.

    பதிலளிநீக்கு
  92. இதில் உள்ளவற்றை எல்லாம் நான் ஏற்கனவே செய்து முடித்திருக்கிறேன். கமெண்ட்ஸ் பகுதியிலுள்ள பதிலளி, நீக்கு போன்ற தமிழ் பதங்களை எவ்வாறு ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்வது என்பதையும் சொல்லுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில் உள்ளவாறு செய்து விட்டீர்களா ஐயா :-

      பதிவில் உள்ளது இதோ :- Language and formatting-யை சொடுக்கவும்... Language என்பதில் Tamil - தமிழ்-யை தேர்வு செய்யவும்... Enable transliteration-என்பதில், Enabled மற்றும் Tamil - தமிழ்-யை தேர்வு செய்யவும்... நன்றி ஐயா...

      நீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.