பாதுகாப்பு முக்கியம்...!
வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... "இது தேவை, அது தேவை"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததைச் சேமிக்கிற பழக்கத்தினாலே...! சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா...? அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழினுட்ப பதிவு...! (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்...!) முந்தைய சேமிப்பு அவசியம் பதிவில் சொன்னது போல் வலைப்பக்கம் (blogs) உட்படப் பல முக்கிய கோப்புகளை (documents) ஒரே ஒரு (Gmail) மின்னஞ்சல் மூலம் பயன்படுத்துகிறோம்... அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய பதிவு தான் இது...
முதலில் கடவுச்சொல் (Password) : எழுத்தும் எண்ணும் கலந்து இருந்தால் மிகவும் நல்லது... (எ.கா : d5235d123b6421) எழுத்து (a-z) - உங்கள் விருப்பம் போல்... எண்கள் (0-9) - இதோ இவையெல்லாம் மறக்க முடியாதது தானே ? :- 1) ATM பின் நம்பர் (ஒரு நாளைக்கு எத்தனை இடத்தில்... அதுவும் 2 மாதத்திற்கு மேல்... க்கும்...) 2) நம்மிடம் இருக்கும் வாகனத்தின் நம்பர், 3) பிறந்த வருடம், 4) 10-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள், இப்படிப் பல... கில்லாடிக்கும் கில்லாடியான ஹேக்கர்கள் இருந்தாலும், 6 மாதத்திற்கு ஒரு முறை, கடவுச் சொல்லை வேறு விதமாக மாற்றுவது நம் ஞாபகசக்திக்கு ஒரு சவால்...!
அடுத்து நம் வீட்டுக் கணினியில் கடவுச்சொல் சேமித்து(ம்) வைத்திருப்போம்... வேறு இடங்களில் நம் மின்னஞ்சல் உள்ளே செல்லும் போது save password என்பதைத் தவிர்க்க வேண்டும்... அதே சமயம் முறையாக Sign-out செய்து வருவது மிகவும் நல்லது... அவ்வாறு நாம் வேறு இடத்தில் உபயோகிக்கும் போது, நமது கைப்பேசிக்கு வரும் ரகசிய எண்ணைக் கொடுத்தால் தான், நமது மின்னஞ்சலுக்குச் செல்வது போல் செய்வது எப்படி...? சுருக்கமாக :-
உங்கள் Gmail முகவரிக்குச் செல்லுங்கள்... வலது ஓரம் (Sign-out செய்யும் இடத்தில் சொடுக்கினால்) Manage your Google Account என்பதையும் சொடுக்குங்கள்... வரும் திரையில் Security என்பதையும் க்ளிக்... 2-Step Verification என்பதைச் சொடுக்கி கடவுச்சொல்லையும் கொடுத்து தொடருங்கள்... அடுத்து உங்களின் கைப்பேசி எண்ணைக் கொடுங்கள்... "Verify" என்பதையும் சொடுக்கி உறுதி செய்து கொள்ளுங்கள்... கைப்பேசி ஒருவேளை தொலைந்து விட்டால்...? Backup Phone என்பதையும் சொடுக்கி, இன்னொரு கைப்பேசி எண்ணையும் கொடுத்து, உறுதியும் செய்யுங்கள்... முக்கிய குறிப்பு : ஒரே கைப்பேசியில் உள்ள இரு "சிம்" எண்களைக் கொடுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்...! பதிவின் முடிவில் பலதும் புரியும் என்று நம்புகிறேன்...! இனி உரையாடலாக...
அண்ணே... எனது வலைத்தளத்திலே பல மாற்றங்கள் செய்யணும்...
Gmail id, Password சொல்லுங்க சகோதரி... சரி, இதோ உங்கள் தளத்திற்குச் செல்கிறேன்... ம்ஹிம்... இப்போ "•••••• •••97" என்று முடியும் உங்க கைப்பேசிக்கு, ஒரு ஆறு இலக்க எண் வந்திருக்கும்... அதைச் சொல்லுங்க...
ஐயோ அதுவா...? அந்த சிம் எப்போவோ தூக்கிப் போட்டாச்சு...!
போச்சுடா...! மின்னஞ்சலில் 2-Step Verification வைத்துள்ளீர்கள்... மீட்டெடுக்கப் பல வழிகள் இருந்தாலும், கொஞ்சம் சிரமம் தான்... இருந்தாலும் 2 முக்கிய கேள்விகள் : புது கணினி ஏதும் வாங்கி உள்ளீர்களா...? அல்லது இப்போது இருக்கும் கணினி Register-யை (Ccleaner) சுத்தம் செய்தீர்களா...?
இல்லை...
ஆகா...! நல்லது... இந்த "இல்லை" தான் உங்கள் தளத்தைக் காப்பாற்றப் போகிறது...! எனக்கும் வேலை கம்மி... உங்கள் மின்னஞ்சலில் உள்ள Security Settings-லே புதிய கைப்பேசி எண்ணைப் போட்டு விடலாம்... பிறகு நான் உங்கள் தளத்தில் நுழையும் போது, அந்த புதிய கைப்பேசிக்கு வரும் ஆறு இலக்க எண்ணை எனக்குச் சொல்லலாம்... சரியா...?
அண்ணே... புதிய கைப்பேசி நம்பரை நீங்களே மாற்றி விடுங்களேன்...
மறுபடியும் முதல்லே இருந்தா...? ம்ஹிம், அதற்கு வழியேயில்லை... இப்போது உங்கள் Gmail முகவரிக்குச் செல்லுங்கள்... ஆறு இலக்க எண் எல்லாம் கைப்பேசிக்கு வராது...! போயாச்சா...? வலது ஓரம் Sign-out செய்யும் இடத்தில் க்ளிக் செய்தால், Manage your Google Account என்பதையும் கிளிக் செய்யுங்கள்... வரும் திரையில் Security என்பதையும் க்ளிக் செய்தால்...
Recovery phone : XXXXXX XXXXX - Edit
Recovery email : XXXXXXXXXX@gmail.com - Edit
இப்போ edit(s) என்பதைச் சொடுக்கிச் செய்ய வேண்டிய மாற்றங்களை எல்லாம் செய்து விடுங்கள்... அப்பாடா...! இதுவரை 20 நிமிசம் ஆச்சி...! பொறுங்கள்... இனிமே தான் என் வேலை...!
இப்போ நீங்க தந்த (புதிய கைப்பேசி எண்ணிற்கு வந்த) ஆறு இலக்கத்தோடு, உங்க தளத்திற்குச் செல்கிறேன்... அடடா...! Google-ன்னா சும்மாவா...? இப்போ Confirm the recovery email you provided in your security settings: gan•••••••••••@gmail.com-ன்னு கேட்குது...! சொல்லுங்க பார்ப்போம், ரைட்டு... இனி 2 நிமிச வேலை தான் பாக்கி...!
இப்போ உங்கள் தளத்தை பாருங்க... 1) blogspot.com-ன்னு மாத்தியாச்சி, 2) திரட்டி சேர்த்தாச்சி, 3) நீங்க சொன்னா Gadgets-எல்லாம் சேர்த்தாச்சி, 4) அழகான Template வைச்சாச்சி... போதுமா...? நல்லா இருக்கா...?
என் தளத்தின் தலைப்பு போல ஆகிடும்ன்னு நினைச்சேன்... இனி மேல் எதிலிலும் கவனமாக இருக்கிறேன்... ரொம்ப நன்றி அண்ணே...
நன்றியை நான் தான் சொல்லணும் சகோதரி... இந்தப் பதிவு அனைவருக்கும் பயன் தரும் இல்லையா...?
நண்பர்களே... யார் என்று தெரிகிறதா...? அவர்கள் தளத்தின் பெயர் : காணாமல் போன கனவுகள் ஆம்... சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி...
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
நல்லதொரு பகிர்வு. உங்கள் மூலம் பலரும் இணையம் பற்றிய நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுகள்....
பதிலளிநீக்குஉபயோகம்.
பதிலளிநீக்குசரி, எனக்கொரு சந்தேகம் டிடி. எங்கள் கமெண்ட் பாக்சில் எம்பெட் கொடுத்துதான் save செய்திருக்கிறோம். ஆனாலும் ரிப்ளை பட்டன் கணினியில் பார்க்கும்போது எங்கள் கமெண்ட் பாக்சில் தெரிவதில்லை. அதே சமயம் மொபைலில் பார்க்கும்போது தெரிகிறது. கணினியிலும் Reply Option தெரிய என்ன செய்யவேண்டும்?
ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : உங்கள் தளத்தின் HTML-ல் சிறிது மாற்றம் செய்ய வேண்டும்... பிறகு நம் தமிழ்இளங்கோ அய்யாவின் தளம் போல, ஒவ்வொருவரின் பின்னூட்டத்திற்கும் கீழே நாமும் மறுமொழி இடலாம்...
நீக்குகீழே ஒரு இணைப்பு தந்துள்ளேன்... அதன்படி செய்யவும்...
ப்ளாக்கில் Threaded Comments வரவில்லையா?
முடியவில்லை எனில், உங்கள் gmail id & password ஆகியவற்றை எனக்கு அனுப்பவும்... (Whatsapp : 9944345233/dindiguldhanabalan@yahoo.com) முக்கியமாக இந்த பதிவு போல் நீங்கள் பாதுகாப்பு செய்து இருந்தால், உங்கள் தளத்தின் உள்ளே நான் செல்லும் போது, உங்களின் அலைபேசியில் வரும் ஆறு இலக்க எண்ணையும் எனக்கு அனுப்ப வேண்டும்...(!) நன்றி...
இதைதான் நான் அப்பவே ஸ்ரீராமிடம் கேட்டேன் ஏன் இப்படி வருகிறதென்று, அவர் பேசாமல் இருந்திட்டார்ர்:)
நீக்குசில டெம்ப்ளேட்டுகளில் இந்த சிக்கல் காணப்படுகிறது.டிடி சொன்னது போல நிரலில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும்.
நீக்குஅதேபோல் இன்னொரு சந்தேகம். Face Book மொபைல் எண் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவரை Not Now க்ளிக்கி வருகிறேன். தருவது நல்லதா? தவிர்ப்பது நல்லதா?
பதிலளிநீக்குகொடுக்கலாம்... ரசிகர்கள் அன்புத்தொல்லை அதிகம் என்றால், Facebook - settings சென்று "Privacy" தலைப்பில் உள்ள Who can look me up? என்பதில் Who can look you up using the phone number you provided? என்பதை "Edit" செய்து உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்...
நீக்குநன்றி DD.
நீக்குபேஸ்புக்கில் மொபைல் எண் முதல் நம் பிரைவசிக்காக அனைத்தினையும் நம் தனிப்பட்ட பார்வைக்குள் செட்டிங்க செட் செய்யமுடியும. நான் அப்படியும் செட் செய்துள்ளேன் ஐயா.
நீக்குஅனைவருக்கும் பயன் தரக்கூடிய அற்புத பதிவு!
பதிலளிநீக்குபடு சுலபமாக நமது தகவல்கள் ஹேக் செய்து விடப்படுகிற தற்போதைய சூழலில், பயனுள்ள - அருமையான கட்டுரை. வலைப்பதிவர்கள் மட்டுமன்றி... அனைவருக்குமே பயனுள்ள தகவல்கள்.
பதிலளிநீக்குநன்றி
இனிய உரையாடல் வழியாக பயனுள்ள பதிவு..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
அருமை. அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குபயனுள்ள பதிவு நண்பரே.
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குடிடி நல்ல பதிவு. எங்கள் செக்யூரிட்டி யாக மின் அஞ்சல் கொடுத்திருக்கிறோம். ஃபோன்ட் நம்பரும் கொடுத்துருக்கிறோம். அதனால் துளசி மொபைலில் க்ளிச் செய்தாலும் சரி, இல்லை மகனுக்கு வேண்டி வெளியில் சென்டரில் மெயிலுக்குள் போக வேண்டி வந்தாலும் சரி மெசேஜ் வந்துவிடும். அது போல நான் இங்கு பயன் படுத்துவது அவருக்குச் சென்று விடுகிறது. வேறு யாராவதா என்று கேள்வி கேட்கும். நான் தான் என்பதை க்ளிச் செய்துவிட்டால் போய்விடும். அது போல விளக்கங்கள் வந்துவிடும் எங்கு ஓபன் ஆகிறது, எத்தனை மணி என்ற விவரங்கள் எல்லாம்வ் அந்து விடும். உடன் செக்யூரிட்டி செக்கிங்க் பேஜும் கணினியில் வந்துவிடும்...அதனுள் சென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து செக்யூர்டாக வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறோம்..உங்கள் பதிவு பயனுள்ள பதிவு..
பதிலளிநீக்குகீதா
தகவல் அருமை சகோ
பதிலளிநீக்குSuper sir.
பதிலளிநீக்குவணக்கம் டி.டி. நான் எனது கணினியைப் பயன்படுத்தும் போது 2=step verification பயன்படுத்தி எனது கணக்கைத் திறக்கிறேன். எனது பேசிக்கு வரும் verification code எண்ணை வைத்து இதுபோல கருத்துகளைப் பகிர்கிறேன். ஆனால் எனது ஆன்ட்ராய்டு பேசியில் இதுபோல கமெண்ட் போடும்போது எனது பேசிக்கு வரும் verification code எண்ணைப் பார்க்க பின் நகரகையில் நான் இட்டிருந்து கருத்துகள் மறைந்து விடுகின்றன. ஆண்ட்ராய்டு பேசி மூலம் இதுபோல நல்ல பதிவுகளுக்கு கருததிடுவதில் எனக்கு ச் சரியான வழிகாட்டல் தந்துதவவும். பேசியில டேடா கார்டு பயன்படுத்துவதில்லை. வைபை மூலம்தான் இணையதளத் தொடர்புகள் வைத்துள்ளேன்.நன்றியுடன் பாவலர் பொன்.க. புதுகை.
பதிலளிநீக்குதிரு. பாவலர் அவர்களுக்கு : (1) தங்களது சொந்த கணினி என்றால் ஒருமுறை sign-in செய்தால் போதுமே... அதே சமயம் மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்... "Don't ask for codes again on this computer" என்பதற்கு முன் உள்ள கட்டத்தில் ஒரு "டிக்" செய்து விட்டு, உள்ளே சென்றால் போதும்... sign-out செய்து விட்டு, மீண்டும் sign-in செய்யும் போது, அந்த ஆறு இலக்க எண் தங்களின் அலைபேசிக்கு வராது...
நீக்கு(2) இதே போல் தங்களின் ஆண்ட்ராய்டு பேசியில் நண்பர்களின் வலைத்தளங்களை திறப்பதற்கு முன், உங்களின் தளத்திற்கு சென்று விடுங்கள் (sign-in)... அலைபேசியில் "sellinam" (செல்லினம்) உள்ளது தானே...? இனி கருத்துரை இடுவதில் எளிதாக இருக்கும்... அலைபேசியில் sign-out செய்ய வேண்டிய அவசியமில்லை...
dd இருக்கக் கவலை ஏன்
பதிலளிநீக்குபயன்மிக்க பகிர்வு டிடி .இது போல இனித்தான் சேமிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஇம்முறையும் எல்லோருக்கும் தேவைப்படும் பதிவு, என்னிடம் பல தடவை இந்த போன் நம்பர் குடு எனக்கேட்டிருக்கிறது மெயிலுக்கு, நான் பயத்தில் , இல்ல தரமாட்டேன் என்றே சொல்லி வருகிறேன்... இப்போ பயம் போய் விட்டது குடுத்து வைக்கிறேன்ன்ன்.
பதிலளிநீக்குநீங்க சொல்லிவதுபோலத்தான் பாஸ்வேர்ட் போட்டுவைக்கோணும் என தெரியும்., ஆனா அப்படி போட்டுவிட்டு , வீட்டு கொம்பியூட்டர், மொபைல் எல்லாம் சேவ் பாஸ்வேர்ட்டும் கொடுத்திடுவேன், பல காலம் போனபின் ஏதும் தப்புத்தண்டா நடந்தா அது பாஸ்வேர்ட்டைச் சொல்லெனக் கேட்கும்... அப்போ எதுவும் நினைவுக்குவராது.... இதனாலயே கொஞ்சம் ஈசியா போட்டு வைப்பேன்.
பதிலளிநீக்குபாங் கார்ட்ஸ் பாஸ்வேர்ட் எல்லாம் பல வருடங்களாக ஒன்றையேதான் வைத்திருக்கிறேன், அடிக்கடி மாத்தினால் தடுமாற்றம் வந்திடும் தடுமாறினால், மெசின் கார்ட்டை உள்ளே இழுத்திடும் எனும் பயம்தான்:)
நிறைய நல்ல தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க, திரும்ப வந்து பொறுமையா படிக்கிறேன்.
பதிலளிநீக்குடாக்டர் பட்டம் உங்களுக்கு தரலாமேன்னு யோசனையில்.
பதிலளிநீக்குFor your information,
பதிலளிநீக்குplease use cyauth[www.cyauth.com] app for secure your social media accounts. It is really useful. It has desktop version also...
அண்ணா blog உள்ள பதிவுகளை எல்லாம் pdf file மாற்ற என்ன செய்வது என்று கூறுங்கள் அண்ணா
பதிலளிநீக்குஏ.கா 2011 - 2017 வரை நான் எழுதிய அனைத்து கவிதை கட்டுரை ect வலைதளத்தில் பதிந்திருக்கிறேன் அதை அப்படியே
pdf file format மாற்ற முடியுமா கூறுங்கள் அண்ணா
இலவசமாக மாற்ற கீழே கொடுத்துள்ள இணைப்பை சொடுக்கி தொடர்பு கொள்ளவும்...
நீக்குhttp://freetamilebooks.com
OK
பதிலளிநீக்குஅண்ணன் ஒரு கோயில்......
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் ..எங்க வீட்டில் மூவரின் மெயில்களும் வெளியில் திறந்தா எனது போனுக்கும் மற்றும் மெயிலுக்கு செக்யூரிட்டி கேள்வி அனுப்பும் ..
பதிலளிநீக்குமுக்கியமான தகவல் இது. அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தால்தான் மனதில் ஏறுகிறது.
பதிலளிநீக்குஇராய செல்லப்பா , நியூ ஆர்லியன்ஸ்
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குநன்றி
காணாமல் போன கனவுகளையும் உயிர்ப்பித்து விட்டீர்கள் ,சகோதரியின் சார்பில் மட்டுமல்ல ..பதிவர்களின் சார்பிலும் நன்றி ஜி :)
பதிலளிநீக்குமிக மிக உதவிகரமான பதிவு. நன்றி
பதிலளிநீக்குநான் என் ஜிமெயில் முதல் பேஸ்புக் பிளாக் என அனைத்துக்கும் போன் மூலம் கோட் வந்து திறக்கும் செட்டிங்க செய்து ஐந்து வருடங்கள் மேலாகி விட்டது. என் கம்யூட்டரிலும் கூட பாஸ்வோட் கன்வோர்ம் சேர்வ் செய்திருந்தாலும் லாக் அவுட் ஆகி லாகின் ஆகும் ஒவ்வொரு தடவையும். இந்த போன் சிஸ்டத்தில் வரும் கோட் கொடுத்தால் மட்டுமே லாகின் ஆக முடியும்,இதிலும் நாங்கள் மூன்றாவதாகவும் இன்னொரு போன் இலக்கம் கொடுத்து சேமிக்கலாம் என்பதனால் என் கணவர் போன் இலக்கமும் கொடுத்துள்ளேன்.
பதிலளிநீக்குபாஸ்வோட் பிளாக் தவிர மீதிக்கெல்லாம் அப்பப்போ மாற்றிக்கொள்வது தான். எழுத்துகள், குறியீடுகள் இலக்கங்கள் என கலந்தே தான் பாஸ்வோட் கொடுத்திருப்பேன்.என் கம்பெனி விடயமாக சில பல நேரம் செல்லும் இடங்களிலும் அங்கிருக்கும் கம்யூட்டர் பயன் படுத்தும் சூழல் வருவதனால் எப்போதும் லாக் அவுட் செய்து லாகின் ஆக வேண்டும் எனில் போன் மூலம் வரும் செக்ரூட்டி கோட் கொடுத்தே ஆக வேண்டும் என்பது செட்டிங்கில் இருக்கின்றது. அதே போல் நம் ஜிமெயில் நமக்கு தெரியாமல் மற்றவர்கள் திறந்தார்களா என நம்மால் பார்க்கவும் முடியும் அல்லவா சார்? Last account activity கிளிக் செய்தால் எங்கிருந்து யார் எப்போது எனும் விபரம் கிடைக்கும். நீங்கள் என் மெயில் மூலம் லாகின் ஆகி என் பிளாக் வடிவமைத்ததெல்லாம் அப்படி பதிவாகி இருந்தது.
ஆல்ப்ஸ் தென்றல் பிளாக்கில் நிரம்ப மாற்றங்கள் செய்து அழகாக்கி தந்தமைக்கும் நன்றி சார்.
பதிவில் படித்து வரும் போது என்னைத்தான் சுட்டுவீர்களோ என நினைத்தேன். நான் எங்கே போன் தொலைத்தேன் என யோசிச்சிட்டே படித்தால் அவங்க நமம் ராஜி மேடம்?
நல்ல சேவை.
பதிலளிநீக்குமிகவும் அருமையான யோசனை கூறியுள்ளீர்கள். பயன்படுத்த முயற்சிப்பேன். ஐயமிருப்பின் தொடர்புகொள்வேன்.
பதிலளிநீக்குவழக்கம்போல்
பதிலளிநீக்குஅனைவருக்கும் பயன்படும்
அருமையான பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தொழில் நுட்பப் பதிவு எழுதுவது என்பது இலகுவானது அல்ல. பலரது தவறான கையாளலை எளிமையாகச் சுட்டிக்காட்டி, சிறப்பாக வழிகாட்டியமை பாராட்டுக்குரியது. வலைப்பதிவர்கள் பாதுகாப்பாக இணையத்தைக் கையாள்வது பயன்மிக்கதாகும்.
பதிலளிநீக்குஎனக்கு இவைகள் பூராது. யாராவதுசெஞ்சு தந்தால் தான் உண்டு
பதிலளிநீக்குமிக்க நன்றி..டிடி-
பயன்னுள்ள தகவல்
பதிலளிநீக்குஎன்னைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு பயனுள்ள பதிவு தலைவா
பதிலளிநீக்குபயனுள்ள தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குபரவட்டும் தொழில் நுட்பம்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தம +
நான் நீங்க அதிரா அவர்களுக்கு கொடுத்த லிங்கை அப்படியே எனது வலைப்பூ டிசைனில் சேர்த்தேன் ..எனக்கு .com என்று காட்டுகிறது .மிக நன்றி சகோ
பதிலளிநீக்குநல்ல பகிர்வு அண்ணா...
பதிலளிநீக்குஅப்படியே நம்ம தளம் சிலருக்கு திறக்கவில்லையாம்...
கொஞ்சம் என்னன்னு பாருங்களேன்.
அருமை அய்யா நல்ல பகிர்வு அருமையான தகவல்கள் . மிகவும் நன்றி தங்கள் கருத்துகள் மாணவர்களுக்கு ஊக்கமாகவும் பயனுள்ள வகையிலும் இருக்கிறது அய்யா நன்றிகள் பல கோடி
பதிலளிநீக்குஇன்று தான் உங்கள் பல பதிவுகளை படிக்க நேரம் அமைந்தது.
பதிலளிநீக்கு