🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சேமிப்பு அவசியம்...!

வணக்கம்... நம்ம மீரா செல்வகுமார் ஐயா அவர்கள், நமக்கான "தமிழ் வலைப்பதிவகம்" வாட்ஸ்-அப் திரட்டியில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்... அவரின் தளம் → நான் ஒன்று சொல்வேன்.....


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 15.06.2020

ஆனால் என்னிடம் "ஒன்று" சொன்னார் : // "DD எனது கைப்பேசியில் ஒரு மின்னூல் வாசித்தேன்... புகைப்படங்களும், அவரின் பயண அனுபவங்களும் என்னைப் பரவசமூட்டின... அதைப் பற்றி ஒரு பதிவு எழுதப் போகிறேன்... அந்தப் பதிவில் அவரின் மின்னூல் கோப்பையை (pdf) நம் வலைப்பதிவில் எவ்வாறு இணைப்பது...?" // இப்போது இணைக்கப் போவது அவர் கூறிய நம் இனிய நண்பர் → திரு.வெங்கட் நாகராஜ் ← அவர்களின் நைனிடால் பற்றிய மின்னூல்...!

பாடல்களை (mp3) இணைப்பதை → நேயர் விருப்பம் ← என்கிற தலைப்பில் எழுதி இருந்தேன்... இப்போது pdf file-யை இணைப்பது எப்படி...? கற்றுக் கொள்ள என்னவொரு வாய்ப்பு கொடுத்துள்ளார் பார்த்தீர்களா...? எனக்கு மட்டுமில்லேங்க... உங்களுக்கும் தான்...! கீழே வரிசை எண் 2) மட்டும் தான் தாமதமாகும் (?) மற்றபடி வெறும் க்ளிக் செய்துகிட்டே போகலாம்...!

1) முதல்லே உங்க Blogger A/c-க்கு போயிடுங்க...! browser-லே மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது இது தான் → https://drive.google.com/drive/my-drive ← சிரமப்படாம இங்கேயும் சொடுக்கலாம் !

2) + New-யை சொடுக்கி அதில் File upload என்பதையும் சொடுக்கி, உங்க கணினியில் எந்த இடத்தில் மின்னூல் கோப்பு (pdf file) இருக்கிறதோ, அதைத் தேடிச் சொடுக்கி, Open-யை சொடுக்கிட்டு, ஒரு டீ சாப்பிடுங்க... ஏன்னா மின்னூல் கோப்பின் அளவு (mb) பொறுத்து கொஞ்சம் நேரமாகும்...! சரி, கோப்பு முழுவதும் Upload ஆயிருச்சா...?

3) இப்போ சொல்லப் போறது முக்கியம்... சுட்டியாலே அந்தக் கோப்பின் மேலே "ரைட் க்ளிக்" செஞ்சி, Share-ங்கிறதை தேர்வு செய்யுங்க... இப்போ வர்ற திரையிலே, Restricted Only people added can open with this link-ன்னு இருந்தா அது கீழே இருக்கிற Change-ங்கிறதை சொடுக்கி, Anyone with the link-ன்னு மாத்திடுங்க... கடைசியிலே Click Done...!

4) பதிவில் இணைக்க வேண்டிய pdf Script-யை கண்டுபிடிப்போமா...? மறுபடியும் சுட்டியாலே அந்தக் கோப்பின் மேலே "ரைட் க்ளிக்" செஞ்சி, Preview-ங்கிறத தேர்வு செஞ்சி, மறுபடியும் சோத்துக்கை மேலே இருக்கிற மூணு புள்ளிகளைச் சொடுக்கி Open in new window-வை தேர்வு செஞ்சி சொடுக்குங்க... இப்போ புதிய திரை (tab) தானாகவே திறக்கும்...

5) இப்போ மறுபடியும் மேலே இருக்கிற மூணு புள்ளிகளை சொடுக்கினா Embed Item-ன்னு இருக்கும்... அதைச் சொடுக்கி, அப்படியே சுட்டியாலே தேர்வு செஞ்சி copy செஞ்சிட்டு, OK அமுக்கிட்டு வெளியே வாங்க...!

6) இப்போ அந்த மின்னூல் பற்றி விமர்சனம் எழுதிட்டீங்களா...? அந்தப் பதிவிலே எந்த பத்திக்குக் கீழே வரணும்ங்கிறதை முடிவு செய்யுங்க...< > Icon-யை சொடுக்கி, HTML view-யை தேர்வு செய்யுங்கள்... எந்த பத்திக்குக் கீழே வரணும்ங்கிறதை முடிவு செஞ்ச இடத்திலே pdf Script-யை Paste செய்யுங்க...! பதிவோட Preview பாருங்க... அகலம் / உயரம் சரியில்லையா...? அந்த pdf Script-லே உங்கள் தளத்துக்கு ஏத்த மாதிரி (width="550" height="600") மாத்தி மாத்தி பார்த்துட்டு, மறுபடியும் < > Icon-யை சொடுக்கி, Compose view-விக்கு மறுபடியும் வந்து, எதாவது எழுதணும்ன்னா எழுதிட்டு பதிவை Publish செய்யுங்க... அம்புட்டுதான்...!

7) பதிவில் எவ்வாறு இருக்கும்...? இதோ கீழே... திரு.மீரா செல்வகுமார் ஐயாவிற்கு நீங்களும் நன்றி சொல்லி விடுங்கள்...


நம்முடைய வசதிக்கேற்ப பல நூல்களை வாங்குகிறோம்... வாசித்து மகிழ்வதோடு இல்லாமல், நூலின் விமர்சனத்தை ஒரு பகிர்வாகப் பகிர்ந்து கொண்டு, எழுதியவரைச் சிறப்பிக்கின்றோம்... ஆனால் உலகமெங்கும் பரவும் (பரவப்போகிற) மின்னூல்...? அதன் அறிமுகம்...? மின்னூல் எழுத்தாளருக்கு நாம் தரும் ஊக்கம்...? ப(பி)டித்த மின்னூல் பற்றிய விமர்சனப் பதிவு வலையுலகில் குறைவு... இனி இந்தப் பதிவு அந்தக் குறையை நீக்கும் என்று நம்புகிறேன்... சரி தானே நண்பர்களே...? நன்றி...

18/1/2017 அன்று புதுக்கோட்டையில், திருமிகு முத்துநிலவன் ஐயா தலைமையில் மின்னூல் வழிகாட்டு முகாம் நடந்தது... விவரம் → இங்கே ← வலைத்தளப் பதிவுகளை மின்னூலாக்கத் திட்டமிட்ட அனைவரும் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி :- padmanaban@pustaka.co.in

இந்தப் பகிர்வின் முக்கிய நோக்கம்

வலைப்பதிவர்கள் உட்படப் பல வகையான மின்னூல்களை நமது கணினியில் தரவிறக்கம் செய்து வாசிப்போம்... இதற்கென நம் கணினியில் தனியாக ஒரு இடத்தில் (Folder ) சேமித்தும் வைத்திருப்போம்... நம் கணினியை மாற்றும் சூழ்நிலை வரும்போது, ஞாபகமாகப் பலவற்றை Pen Drive-வில் சேமிக்கவும் வேண்டும்... ஒருவேளை நம் கணினி திடீரென்று பழுது ஆகி விட்டால்...?

அதனால் மின்னூல்களை நம் மின்னஞ்சலில் (drive) தரவேற்றம் செய்து விட்டால்...? இது மட்டுமல்ல :- mp3 (Audio Files),, xls (Excel Files), doc (Word Files), உட்படப் பல முக்கியமான கோப்புகளைத் தரவேற்றம் செய்து வைத்துக் கொண்டால் நல்லது... வலைப்பூ உட்பட ஒரே ஒரு மின்னஞ்சலில் எத்தனை விதமான பயன்கள்...! இப்படி இருக்கும் போது, இன்னொரு முக்கியமான பதிவிற்கு ஒரு சகோதரி எனக்கொரு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்...அது என்னவென்றால்...

"அண்ணே... எனது வலைத்தளத்திலே பல மாற்றங்கள் செய்யணும்..."

"சரி சகோதரி... உங்க Gmail id, password சொல்லுங்க... சரி... உங்க தளத்துக்கு போறேன்... ****** ***97- ங்கிற உங்க கைப்பேசிக்கு ஒரு ஆறு இலக்க நம்பர் வந்திருக்கும்... அதை சொல்லுங்க...!"

"ஐயோ...! அந்த சிம்மை எப்போவோ தூக்கி போட்டாச்சி...!"

"ஐயோ...!! அய்யய்யோ...!!!"

பிறகு நடந்தது என்ன...? காத்திருங்கள்... மேலும் மின்னஞ்சல் / வலைத்தளம் பற்றிய சந்தேகங்கள் + பிரச்சனைகள் எதுவென்றாலும் தொடர்பு கொள்க...

dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உபயோகமான செய்திகள். இப்போ படித்தாலும் பின்னர் மறந்து போகுமே, குறித்து வைத்துக் கொள்வோம் என்றால் உங்கள் தளத்திலிருந்து காபி செய்துகொள்ள முடியாது. இது போன்ற மற்றவர்களுக்கு உதவும் குறிப்புகளை நீங்கள் ஒரு தனி மின் நூலாக வெளியிடுங்கள் DD. என்னைப்போலவே இன்னும் நிறையபேர்களுக்கு உதவியாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார் வணக்கம்... எனது தளத்தில் "வலைத்தள நுட்பம்" என்கிற குறிச்சொல்லில் (Labels) உள்ள அனைத்து பதிவுகளையும் மின்னூலாக, மேலே சொன்ன "புஸ்தகா" மின்னஞ்சலுக்கு அனுப்பலாம் என்றிருந்தேன்... இந்தப் பதிவு எழுதும் போதே அடுத்த முக்கியமான தொழிற்நுட்ப பதிவிற்கும் வேலை வந்து விட்டது... இவையெல்லாம் சேர்த்து மின்னூல் விரைவில் வரும்... நன்றி...

      நீக்கு
  2. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் வேண்டுகோளே எனது வேண்டுகோளும்
    விரைவில் மின்னூரை வெளியிடுங்கள் ஐயா
    அதுதான் இனி எங்களுக்கு கோணார் நோட்ஸ்

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள தகவல்கள்......

    எனது மின்னூலை இங்கே பகிர்ந்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  4. டிடியின் சேவை இணையத்துக்குத் தேவை! நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் பயன் பெறும் தகவல் ஜி தொடரும் என்பதுபோல சஸ்பென்ஸ் ஸூப்பர்

    பதிலளிநீக்கு
  6. பணம் வரும் போகும் ,பதிவர்களுக்கு நிரந்தர சேமிப்பு மின் நூல் தானே ?வழிகாட்டலுக்கு நன்றி ஜி :)

    பதிலளிநீக்கு
  7. மிகவும் பயனுள்ள பதிவு. எங்கள் சில பிடிஎஃப் கோப்புகள் ட்ரைவில் இருக்கிறதுதான். சேமித்து வைத்துள்ளோம்..இப்போது இணைப்பது பற்றியும் அறிந்து கொண்டாயிற்று. நன்றி டிடி. மட்டுமல்ல அனைத்தையும் சேமித்து வைத்துள்ளோம்...பேக்அப் உண்டு..ஒரு சில கூகுள் ட்ரைவிலும் உண்டு எப்போதும், எங்குமே எடுத்துக் கொள்ள முடியும் என்பதால்....மிக்க நன்றி அருமையான பதிவிற்கு. செல்வாவுக்கும் மிக்க நன்றி...

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள தகவல்கள். நிறைய்ய்ய்ய்ய்ய்ய நண்பர்களுக்கு பயன்படும். மிக்க நன்றி.

    - பூனைக்குட்டி -

    பதிலளிநீக்கு
  9. மிகவும் உபயோகமான பதிவு. உங்களை போன்ற ஒருவர் இல்லையென்றால் நானெல்லாம் வலையுலகில் குப்பைக் கொட்ட முடியாது. என்னைப் போன்று ஏராளமானவர்களை உருவாக்கிய பெருமை உங்களையே சாரும். விரைவில் மின்நூலை வெளியிடுங்கள்.
    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள தகவல்களை தந்துக் கொண்டிருக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தொழில்நுட்பப் பதிவு ஒன்றை இவ்வளவு சுவையாக எழுதியிருக்கிறீர்களே ஐயா! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. சேமிப்பு அவசியம்/// ஏதோ உங்கட பாங்ல எவ்வளவு சேமிச்சு வச்சிருக்கிறீங்க எனச் சொல்லப்போறீங்களாக்கும் என பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி வந்தேன்ன்ன்.. ச்சும்மா ஒரு ஆர்வக் கோளாறுதான்:)...

    //சொடுக்கிப் படிங்க////
    //சோத்துக் கை///
    ஹா ஹா ஹா சூப்பர் தமிழ்...

    நல்ல தகவல் சொல்லியிருக்கிறீங்க.. ஆனா குறைந்தது 5 தடவைகளாவது திரும்பத் திரும்பப் படித்தால் மட்டுமே புரியுமாக்கும்... ஆனா சகோ ஸ்ரீராம் சொன்னதுபோல ஆரும் களவெடுத்திட முடியாதளவு லொக் போட்டு வச்சிருக்கிறீங்க, கொப்பி பண்ணி வைத்துப் படிக்கவும் முடியாது... சரி இங்குதானே இருக்கும் தேவை வரும்போது ஓடிவந்து படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  13. எனக்கொரு தகவல் வேணும், யூ ரியூப்பில் அப்லோட் பண்ணாமல் நேரடியாகவே ஃபோனில் இருக்கும் வீடியோவை புளொக்கில் அட் பண்ண முடியுமோ? தகவல் தெரிஞ்சால் ஒரு பதிவாகப் போட்டால்ல் அனைவருக்கும் பயன்படும்...

    ”ஐயோ...!! ஐயையோ...!!!”/////

    அரோகரா.... அரோகரா...!!!!!

    பதிலளிநீக்கு
  14. என் போன்றவர்கள் பாடு கஷ்டம்தான் சொன்னவை புரியவே அதிக நேரம் தேவைப்படும்

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள, தெளிவான ​விளக்கங்கள்...நன்றி !

    பதிலளிநீக்கு
  16. சுவாரசியமான பயனுள்ள பதிவு. மின்னஞ்சல் கணக்குடன் ஜிமெயில் மற்றும் அவுட்லுக் போன்றவை வழங்கும் 15GB இடத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  17. பயனுள்ள தகவல் சகோ ..அதிராவின் சந்தேகம் தான் எனக்கும் ..
    அந்த யூடியூபில் இணைக்காமல் எங்கள் காணொளிகளை எப்படி வலைப்பதிவில் இணைக்கலாம்னு சொல்லுங்களேன் ..நிறைய வீடியோஸ் இணைக்க முடிவதில்லை :(

    பதிலளிநீக்கு
  18. மிகவும் பயனுள்ள தகவல். நன்றி தனபாலன். இப்பதிவையும் சேமித்துக் கொண்டேன்.

    எனக்கும் ஒரு உதவி வேண்டும். என்னுடைய நூல் வெளியீட்டு விழா காணொளி மூன்று மணிநேரம் ஆறு பகுதிகளாக உள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 1.5 - 2 GB உள்ளது. youtube-ல் தரவேற்ற இயலவில்லை.. இணைய வேகமும் எனக்கு படுமந்தம். தரவேற்ற வேண்டுமெனில் வீடியோவின் மெமரி அளவைக் குறைக்கவேண்டுமாம். அதற்கு ஏதேனும் எளிய வழியிருந்தால் சொல்லுங்களேன். நன்றி தனபாலன்..

    பதிலளிநீக்கு
  19. ஸ்ரீராம் சொன்னதை நானும் வழிமொழிகின்றேன் தனபாலன் சார். எல்லாவற்றையும் சேர்த்து மின்னூலாக வெளியிடுங்கள். எங்கள் வழிகாட்டியாக வாங்கி வைத்துக்கொள்வோம். தேவை்யான போது எடுத்துப் பார்த்துக்கொள்ள வசதியாயிருக்கும். நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  20. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது....மறுபடியும் ஒரு புதிய உத்தி தந்தமைக்கு நன்றி. முயற்சித்துப் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  21. அருமையான அவசியமான பதிவு. ஒவ்வொரு எழுத்துக்களும் சுவாரசியம். வாசிப்போரை சுண்டி இழுக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. எல்லாரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு... நானும் ஒரு மின்னூலை இணைத்துப் பார்க்க வேண்டும்... அதற்கு முன்னர் இந்தப் பதிவை என் தளத்திலும் பகிர்ந்து கொள்கிறேன் அண்ணா...

    பதிலளிநீக்கு

  23. சிறந்த தொழில்நுட்பப் பதிவு
    பலருக்குச் சிறந்த வழிகாட்டல்
    தங்கள் தொழில்நுட்பப் பணிகளைப் பாராட்டுகின்றேன்.

    பதிலளிநீக்கு
  24. மிக மிகப் பயனுள்ள பதிவு. நன்றி.

    தனபாலன்.

    தமிழ்மணம் முகப்புப் பட்டியலைக் கவனித்தீர்களா? இன்று பிற்பகல் முதல், ‘தமிழறிவோம்’ என்னும் பதிவை முதலாவதாகக் கொண்ட பட்டியல் நகராமல் நின்றநிலையிலேயே உள்ளது.

    தமிழ்மணத்தின் தானியங்கி எந்திரம் பழுதடைந்துவிட்டது என்று நினைக்கிறேன்.

    நிர்வாகிகளும் இதைச் சரி செய்ய முயற்சிப்பதில்லை போல் தெரிகிறது.

    தமிழ்மணத்தை விட்டால் வேறு நல்ல திரட்டியும் இல்லை.

    என்ன செய்வது?

    நின்றநிலையில் இருக்கும் பட்டியல் நகர ஆரம்பித்தால், பட்டியலில் இடம்பெறக் காத்திருக்கும் புதிய பதிவுகள் முகப்புப் பக்கத்தைக் கடந்து அடுத்தடுத்த பக்கங்களுக்குச் சென்றுவிடுகின்றன. இதனால் அவற்றின் பக்கப் பார்வை எண்ணிக்கையும் குறைகிறது.

    இதையெல்லாம் நிர்வாகிகள் எப்போது கவனிப்பார்கள்?




    பதிலளிநீக்கு
  25. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

    https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

    பதிலளிநீக்கு
  26. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    பதிலளிநீக்கு
  27. டீ டீ சாப்பிட சொன்னீங்க...ஆனா டீ இன்னும் வரலை அங்கிள்...ஏதும்.டெக்னிக்கல் பிராப்ளமா...பாருங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.