அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...!


அனைவருக்கும் வணக்கம்... தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உலகம் முழுவதும் போராடும் நம் தமிழ் உறவுகளுக்கு இந்த பகிர்வு சமர்ப்பணம்...


ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா... களிபடைத்த மொழியினாய் வா வா வா... கடுமை கொண்ட தோளினாய் வா வா வா... தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா... சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா... எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா... ஏறுபோல் நடையினாய் வா வா வா...© தனிப்பாடல் பாரதியார் T-Series T.L.மகாராஜன் @ 2014 ⟫


காளை காளை வருகுதுபார்... கருப்புக் காளை வருகுதுபார்... சூரியனுக்கு வேண்டிவிட்ட துள்ளுக்காளை வருகுதுபார்... (நாட்டுப்புற பாடல், ஆறு.இராமநாதன்-2001-தொகுதி-1,பக்கம்-126)

(துள்ளுக்காளை - துடிப்பான அடக்க முடியாத காளை) மேற்கண்ட பாடல் ‘சடுகுடு’ விளையாட்டின் போது பாடிச் செல்பவர் எதிரணியின் எல்லைக்குள் நுழையும்போது அந்த அணியினரைச் சீண்டுவது போலவும் சவால் விடுவது போலவும் இதைப் பாடுகிறார். இந்தப் பாடலைப் பாடும் போது பாடலின் இறுதிச் சொல் (வருகுதுபார்) திரும்பத் திரும்பப் பாடப்படும்...


புதிய தோர் உலகம் செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்... எங்கும் பாரடா இப்புவி மக்களை...! பாரடா உனது மானிடப் பரப்பை... பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்... ‘என்குலம்’ என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்...© பல்லாண்டு வாழ்க பாரதிதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன், வாணி ஜெயராம் @ 1975 ⟫

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள் (கலித்தொகை 103:63-64) விளக்கம் : காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர் மகள், அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்க மாட்டாள்... ம்... இதற்கேற்ப ஒரு அழகிய பாடல் இதோ :-

கூரான கொம்பு ரெண்டு, சீராக மின்ன கண்டு... (2) வீராதி வீரனெல்லாம் கூறாமல் போனதுண்டு... மாறாத ஆசையுடன் வீராப்பு பேசிக்கொண்டு... மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு... ஓ...ஓ...ஓ... ஓஓஓஓஓஓஓ... மாட்டைப் பிடிக்க வந்து ஓட்டம் பிடித்ததுண்டு... ஆண் வாடை கண்டாலே ஆகாது - இது ஆவேசம் கொண்டாலே பொல்லாதது... அஞ்சாத சிங்கம் என் காளை - இது பஞ்சா பறக்கவிடும் ஆளை - இந்த ஆபத்தை நாடிவரும் மாவீரன்... பாரிலே யாரடி...?© வீர பாண்டிய கட்டபொம்மன் கு.மா.பாலசுப்ரமணியம் G.ராமநாதன் P.சுசீலா @ 1959 ⟫

இது எதிர்ப்பாட்டு :- பொதுவாக எம் மனசு தங்கம்... ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்...! உண்மையே சொல்வேன்... ஹ நல்லதே செய்வேன்... வெற்றி மேல் வெற்றி வரும்... ஆடுவோம் பாடுவோம் கொண்டாவோம்... ஹ ஹ... ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே... முன்னால சீறுது மயிலை காளை... பின்னால பாயுது மச்சக்காளை... (2) அடக்கி ஆளுது முரட்டுக் காளை... முரட்டுக் காளை முரட்டுக் காளை... நெஞ்சுக்குள் அச்சமில்லை, யாருக்கும் பயமுமில்லே... வாராதோ வெற்றி என்னிடம்... விளையாடுங்க... உடல் பலமாகுங்க... ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்.. ஹெய்... ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே...© முரட்டுக் காளை பஞ்சு அருணாச்சலம் இளையராஜா மலேசியா வாசுதேவன் @ 1980 ⟫

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு... மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன... மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற்... பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே... (திருமந்திரம் 2883)

சிறு விளக்கம் : நம்மை வழிநடத்திச் சொல்லும் கண்கள் மூலம், நம் மனதிலுள்ள ஐம்புலன்களையும் அங்கும் இங்கும் அலைய விடாமல் நம் வசப்படுத்தினால், கர்மேந்திரியங்கலான நம் புலன்கள் ஞானந்திரியமாக மாறி அதனால் நமக்கு அமுதம் கிடைக்கும் என்கிறார் திருமூலர்... அதே போல் மாடுகளை வளர்ப்போர் அந்த மாடுகளை முறைப்படி வளர்த்து பாதுகாக்கவேண்டும்.... இல்லாவிட்டால், அந்த மாடுகளின் பால் அதன் உரிமையாளருக்குப் பயன்படாமல் போய்விடும்... இதற்கான பாட்டு :-

இது நமக்கான பாட்டும் :- போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது... (2) மாடாகவே.... மாடாகவே மனுஷன் மாறக்கூடாது... மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது... மாட்டுக்கார வேலா உன் மாட்டைக் கொஞ்சம் பாத்துக்கடா... (2) காட்டு மல்லி பூத்திருக்க... காவல்காரன் பாத்திருக்க... ஆட்டம் போட்டு மயிலக்காளை தோட்டம் மேயப் பாக்குதடா...!© வண்ணக்கிளி அ. மருத காசி K.V.மகாதேவன் சீர்காழி கோவிந்தராஜன் @ 1959 ⟫

இது கருத்துள்ள எதிர்ப்பாட்டு :- வந்தேண்டா பால்காரன்... அடடா பசு மாட்டைப்பத்தி பாடப் போறேன்... புது பாட்டு கட்டி ஆடப்போறேன்... புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும் - உன்னால முடியாது தம்பி... அட பாதிப்புள்ள பொறக்குதப்பா - பசும்பாலை தாய்ப்பாலா நம்பி...! தன் ரத்தத்தில் ஒரு பாதி பாலாகப் பிரிப்பது பசுவோட வேலையப்பா... அது பிரிந்தாலும் பாலோடு தண்ணீரைக் கலப்பது மனிதனின் மூளையப்பா...! சாணம் விழுந்தா உரம்பாரு... எருவை எரிச்சா திருநீறு... உனக்கு என்ன வரலாறு...? உண்மை சொன்னா தகராறு...! நீ மாடு போல உழைக்கலையே, நீ மனுஷனை ஏச்சுப் பொழைக்கிறியே...© அண்ணாமலை வைரமுத்து தேவா S.P.பாலசுப்ரமணியம் @ 1992 ⟫இது அன்பான பாட்டு :- பாலூட்டும் அன்பிலே அன்னை நீயே... பழகும் உறவிலே பிள்ளை நீயே... (2) கருணை மனதிலே கங்கை நீயே... (2) கல்லார்க்கும் கற்றவர்க்கும் தெய்வம் நீயே... (2) கோமாதா எங்கள் குலமாதா... குலமாதர் நலம் காக்கும் குணமாதா... புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா... வண்ணக் கோமாதா...© சரஸ்வதி சபதம் கண்ணதாசன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1966 ⟫

இது அரவணைக்கும் பாட்டு :- (விவசாயி : "3 வருசமா இப்படி பாட்டு பாடித் தான் என் காளையை அடக்க வேண்டியிருக்கு...") ஏழூரு சீமையிலும் உன் போல யாரும் இல்லே... எட்டாத ஊரிலெங்கும் உன் போல பேரும் இல்லே... எப்போதும் நன்றியுள்ள உன் போல சீவனில்லை (2) இந்தப் பாட்டுக்காரன் பாட்டு, கோவிக்காம கேட்டு... (2) வாடி வாடி என்னுடையப் பேச்சி...!© எங்க ஊரு பாட்டுக்காரன் கங்கை அமரன் இளையராஜா மனோ @ 1987 ⟫

இது உணர்வு பீறிடும் பாட்டு :- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு...! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்... இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே...! பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்... சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு...!© கலங்கரை விளக்கம் பாரதிதாசன் M.S.விஸ்வநாதன் சீர்காழி கோவிந்தராஜன், P.சுசீலா @ 1965 ⟫

இது அற்புத பாட்டு :- தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு... சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு... (2) பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு...? (2) பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு... (2) சத்தியம் நீயே தர்ம தாயே... குழந்தை வடிவே தெய்வ மகளே... (2) குங்கும கலையோடு குலம் காக்கும் பெண்ணை... குணத்தில் பசுவென்று சொல்வார்கள் கண்ணே (2) காலையிலே உன் முகம் பார்த்த பின்னே... (2) கடமை செய்வாள் எங்கள் தமிழ் நாட்டு பெண்ணே... ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு...! பால் கொடுப்பாய் - அது தாயாரைக் காட்டும்... பாசம் வைப்பாய் - அது சேயாக தோன்றும்... அம்மாவை அம்மா என்றழைக்கின்ற சொல்லும் - அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...! (2)© மாட்டுக்கார வேலன் கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫

வாங்க வள்ளுவரே... இந்தப் பதிவிற்கு தாங்கள் தரும் குறள்கள் என்ன...? எல்லோரும் சிந்திக்கிற மாதிரி சொல்லுங்க...!

புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை (குறள் எண் 59)


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (குறள் எண் 322)


கேட்டு ரசித்தவர்களுக்கும் நன்றி...
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. இந்த மகத்தான வெற்றிக்கு உழைத்த...பாடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்துகிறேன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் மக்களே...

  பதிலளிநீக்கு
 2. காளையைப் போல கம்பீரமான பதிவு!..

  வெற்றிகள் தொடரட்டும்!..

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடல்கள் தேர்வு .அதுவும் திருமூலர் மந்திர உரை அருமை...

  மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வியலுக்கு, பொருளாதாரத்திற்கு ஆட்சியாளர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். கொடுத்தால் நாடு நன்மை பெறும்..முன்னேறும்...

  பதிலளிநீக்கு
 4. கொம்புக்கு அஞ்சும் ஆண்மகனை ஆயர்மகள் வெறுப்பதிலும் நியாயம் இருக்கே :)

  பதிலளிநீக்கு
 5. தலைமையே இல்லா தமிழனின் போராட்டம்

  பாரம்பரியத்தின் போராட்டம்
  வாழ்க மாணவ சொந்தங்களே.

  பதிலளிநீக்கு
 6. காளை வருகுது பார் அருமை அண்ணா.. அனைவருக்கும் சொல்லப் போகிறேன்.
  பாடல்கள் எப்பொழுதும் போல் நன்று.

  பதிலளிநீக்கு
 7. கடைசியில் அடக்குமுறை அவிழ்த்து விடப்பட்டு விட்டதே
  மாணவர்கள் மனம் துவளவும் வேண்டாம் மண்டியிடவும் வேண்டாம்

  பதிலளிநீக்கு
 8. ம்ம்ம்
  இப்படி எல்லாம் செம. ஜா லி யா பதிவு போட்டு காலைப்பபொழுதை இனிமையாக்கிய நட்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 9. தமிழர் அடையாளம் (ஜல்லிக்கட்டு)
  அதை அடைய அருமையான
  மாணவர் எழுச்சி - அது
  உலகிற்கு உறைக்கச் சொன்ன செய்தி
  எல்லாவற்றையும் சுவையோடு நினைவூட்டிய
  தங்கள் கைவண்ணத்தைப் பாராட்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 10. ‘‘கொல் ஏற்றுக்கோடு அஞ்சுவானை மறுமையும்
  புல்லாளே, ஆயமகள்....’’

  நல்லவேளை... சங்க காலத்து பெண்கள் போல, இந்தக் காலத்து பெண்கள் இல்லை. இருந்திருந்தால்... நம்மாட்களில் பாதிப் பேர் கல்யாணமே வேண்டாம் என்று சன்னியாசம் கிளம்பியிருப்பார்கள்!

  - பூனைக்குட்டி -

  பதிலளிநீக்கு
 11. அருமை. குறள் எண் 59 , 322 பொருத்தம். குறள் எண் 400 ல் வரும் மாடு, செல்வம் என்ற பொருளில் வருகிறது. நன்றி

  பதிலளிநீக்கு
 12. போராட்டத்தில் கலந்து கொண்ட அத்தை இளைஞருக்கு எனது நன்றிகள்

  பதிலளிநீக்கு
 13. ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நீக்க உணர்ச்சிமிக்க போராட்டம் நடைபெறும் வேளையில் பொருத்தமான பாடல்களை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி! இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 14. இப்போதைய ஜல்லிக்கட்டும் மஞ்சு விரட்டும் ஏறு தழுவுதலும் வெவ்வேறுதானே

  பதிலளிநீக்கு
 15. மிக அருமையான “பழமை என்றும் இனிமை” பாடல்களோடு, மிக நல்லதொரு படைப்பு, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நமது மாணவர்கள் ஏறுபோல் பீடுநடை போடுகிறார்கள் ஐயா
  பதிவுஅற்புதம்
  மாணவர் போராட்டம் வெல்லட்டும்
  தமிழினம் தலைநிமிரட்டும்

  பதிலளிநீக்கு
 17. அருமையான பதிவு . பாடல்கள் பகிர்வு அற்புதம். மாணவர் நினைத்தால் நடத்தி காட்டுவார் .

  பதிலளிநீக்கு
 18. முத்தான பாடல்களின் மூலம் அருமையான ஒரு தொகுப்பு. நம் பாரம்பர்யத்தை மீட்டெடுக்கப் போராடும் போராளிகளுக்குச் சமர்ப்பணம் என்பது மிகப் பொருத்தம். நன்றி தனபாலன் சார்!

  பதிலளிநீக்கு
 19. மிக அருமையான தொகுப்பு. பாடல்களும் பதிவுகளும் சிறப்பு. தமிழினப் பண்பாட்டை மீட்டெடுக்க தன்னெழுச்சியாய் வெகுண்டெழுந்த இளங்காளைகள் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையினை நிகழ்த்தியிருக்கிறார்கள். வாழ்த்துகள்.

  கடைசி நேரத்தில் நம் காளைகளுக்கிடையே நுழைந்த சில பன்றிகளால் காளைகளின் சீற்றம் சிதைக்கப்பட்டதுதான் வேதனை.

  பதிலளிநீக்கு
 20. அருமை டிடி
  அகராதி போன்ற பதிவு.
  மிக மிக தேடுதல் செய்யப் பட்டுள்ளது.
  இனிய வாழ்த்துகள்.
  தமிழ்மணம் 9
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 21. திருமூலர் மந்திரம், கலித்தொகைப்பாடல்கள், திரைப்படப் பாடல்கள், பாரதிதாசன் கவிதை என்று காளையின் சிறப்பைச்சொல்லி அசத்தி விட்டீர்கள்! 'தடை அதை உடை ' ஓவியம் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 22. ஏராளமான தகவல்கள். எழுச்சியூட்டும் பதிவு. பாராட்டுகள்.

  என்னுடைய தளத்திற்கு வருகை புரிந்து கருத்துரையும் வழங்கியுள்ளீர்கள்.ஒரு வேண்டுகோள்.....

  ‘இந்தத் தத்துப்பித்து’ப் பதிவிற்கு.....’ நான்கரை லட்சத்திற்கு மேல் G+1 பதிவாகியிருக்கிறது. எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. இது எப்படிச் சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை.புள்ளிவிவரப் பதிவில் ஏதும் குளறுபடி நேர்ந்திருக்குமோ என்று சந்தேகம்[இந்த இடுகையைப் பதிவு செய்ததற்கான காரணமும் இதுதான்].

  தங்களால் முடிந்தால் இது குறித்து விளக்கம் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 23. அருமை. கலித்தொகையில் இருந்து அண்ணாமலை வரை அழகான தொகுப்பு. முத்தாய்ப்பாய் குறள் வெகு அருமை.

  பதிலளிநீக்கு
 24. அருமையான பதிவு, இந்த நேரத்தின் தேவையும் கூட..

  பதிலளிநீக்கு
 25. ஜல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட சரியான பாட்டுவிழா நடத்தி விட்டீர்கள் நண்பரே! - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  பதிலளிநீக்கு
 26. அருமை. சிறப்பான பதிவு. பாடல்கள் தெரிவும் உங்கள் எழுத்துக்களும் அருமை. எல்லாப் பாடல்களையும் விரும்பி ரசித்தேன். வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 27. தாமதமாகப் பார்த்தாலும் நல்லதொரு ரசனை நிறைந்த பதிவு.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.