🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மும்முனை தாக்குதல்...!

© தாயைக் காத்த தனயன் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫ தங்கரதம் போல வருகிறாள், அல்லித் தண்டுகள் போல வளைகிறாள்2 குங்குமப் பூப்போல சிரிக்கிறாள், இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்2) காலையில் மலரும் தாமரைப்பூ, அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ2 இரவில் மலரும் அல்லிப்பூ, அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ2 கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா...! அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா...! வாருங்கள் நண்பர்களே... ஐயனின் காதல் கோட்டைக்குச் செல்வதற்கு முன்...


கண்டுபிடிங்க பார்க்கலாம்...! என்கிற முந்தைய பதிவில், 10 திரைப்படப் பாடல்களின் ஆரம்ப வரிகள் சிலவற்றை மட்டும் கொடுத்து, எந்த குறளுக்கு எந்தப் பாடல் ஒத்து வருகிறது, அப்படியானால் அது எந்த அதிகாரம் என்று கேட்டிருந்தேன்... "பாடல் வரிகளைப் பார்த்தால் காமத்துப்பாலில் உள்ள அதிகாரம் தான் இருக்கும்" என்று திருக்குறளைக் கையில் எடுத்தவர்கள், அதன் முதல் அதிகாரமே என்று கணித்த ഽ திருமிகு. தளிர் சுரேஷ், ഽഽ திருமிகு. தில்லை அகத்து கீதா ഽഽഽ திருமிகு. தேன் மதுரத் தமிழ்! கிரேஸ் ഽഽഽഽ திருமிகு. வே.நடனசபாபதி மற்றும் ഽഽഽഽഽ திருமிகு. நாகேந்திர பாரதி ஐவருக்கும் பாராட்டுகள்... நன்றிகள்...
இதோ குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகளும்...! கொடுத்துள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க பிளேரை சொடுக்கவும்... வேறு சரியான பாடல் குறளோடு மேலும் ஒத்துப் போனால், அதைக் கருத்துரையில் பாடவும்... நன்றி...

அதிகாரம் 109 - தகையணங்குறுத்தல்(1081-1085)

யாரிந்த தேவதை...? பிரமிக்க வைக்கும் தேவ மகளோ...? இல்லை பரவசமூட்டும் அழகு மயிலோ...? அல்லது பெரிய கம்மல் அணிந்து இருக்கும் மானுடப் பெண் தானோ...? தித்திக்கும் இந்த அழகைக் கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்து மயங்கிப் போனதே என் நெஞ்சம்....!

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு (1081)  
காற்றினில் பிறந்தவளோ...? புதிதாய்க் கற்பனை வடித்தவளோ2 சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ...? செவ்வந்திப் பூச்சரமோ...? அவள் செந்தமிழ்த் தேன் மொழியாள்... நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்2 பைங்கனி இதழில் பழரசம் தருவாள்... பருகிடத் தலை குனிவாள்... // கண்களில் நீலம் விளைத்தவளோ...? அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ...? பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ...?!© மாலையிட்ட மங்கை கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.R.மகாலிங்கம் @ 1958 ⟫

இப்படி பிரமை பிடித்து அவளின் பேரழகு என்னை இப்படித் தாக்கிக் கொண்டிருக்கும் போது, நொடியிலே அவள் என்னைத் திரும்பப் பார்த்தது... ஐயகோ... செத்தேன்...! என்னைத் தாக்குவதற்குப் படைகளையும் சேர்த்துக் கூட்டி வந்தது போல் அல்லவா இருக்கிறது...!

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)  
பதுமை போலக் காணும் உந்தன் அழகிலே... நான் படகு போலத் தத்தளிக்கும் நிலையிலே... ஆஆஆ... மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே... என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே... காதல் தெய்வீக ராணி - போதை உண்டாகுதே நீ... கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே... கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே... காதாலே கேட்டுக் கேட்டுச் செல்லாதே...© அடுத்த வீட்டுப் பெண் தஞ்சை ராமையா தாஸ் ஆதி நாராயண ராவ் 🎤 P.B.ஸ்ரீனிவாஸ் @ 1960 ⟫

எமன் என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்... ஆனால் பார்த்தது கிடையாது... இன்றைக்குத் தான் அதைக் கண்டு கொண்டேன்... அழகிய பெண்ணின் வடிவத்தோடு போர் செய்யும் பெரிய கண்கள் தான் அது...!

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு (1083)  
தடாகத்தில் மீன் இன்று காமத்தில் தடுமாறி, தாமரை பூ மீது விழுந்தனவோ...? இதைக்கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில், படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ...? காற்றில் அசைந்து வரும் நந்த வனத்துக்கிளி, கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்... ஜதி என்னும் மழையினிலே... ரதி இவள் நனைந்திடவே... அதில் பரதம் தான் துளிர் விட்டு... பூபோல பூத்தாட மனம் எங்கும் மணம் வீசுது... எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது... சலங்கை இட்டாள் ஒரு மாது... சங்கீதம் நீ பாடு... அவள் விழிகளில் ஒரு பழரசம்... அதை காண்பதில் எந்தன் பரவசம்...!© மைதிலி என்னை காதலி டி.ராஜேந்தர் டி.ராஜேந்தர் 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1986 ⟫

ஒரே குழப்பமாக இருக்கிறதே... சிறந்த பெண்மைக்கு இலக்கணமாகத் திகழும் இப்பெண்ணிற்கு, கண்கள் மட்டும் பார்க்கிறவரின் உயிரைப் பறிப்பது போல் தோன்றுகிறதே...! ஏனிந்த மாறுபாடு...? விளக்கம் ஒன்றும் புரியாமல் தவிக்கின்றேனே...!

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 
பேதைக்கு அமர்த்தன கண் (1084)  
கொடி மின்னல் போல் ஒரு பார்வை - மானோ மீனோ என்றிருந்தேன்... குயிலோசை போல் ஒரு வார்த்தை - குழலோ யாழோ என்றிருந்தேன்... நெஞ்சோடு நெஞ்சைச் சேர்த்தாள்... தீயோடு பஞ்சை சேர்த்தாள்2 இன்று காதல் ஏக்கம் தந்தாள் சென்றாள், நாளை என் செய்வாளோ...? ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் - நிலவில் குளிரில்லை... அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் - மலரில் ஒளியில்லை... அவளில்லாமல் நானில்லை... நானில்லாமல் அவளில்லை... ல ல லல்ல லா ல ல லல்ல ல ல ல லல்ல ல ல ல ல© தெய்வத்தாய் வாலி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫

இளமை பொங்கும் இவள் பார்வை, என்னுயிர் பறிக்கும் எமனோ...? என்னை ஆட்கொள்ளப் போகும் கண்ணோ...? பயங்கொண்டு துள்ளும் பெண்மானோ...? மும்முனை தாக்குதல் என்பது இது தானோ....?

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 
நோக்கமிம் மூன்றும் உடைத்து (1085)  
மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரனின் வில்லை புருவத்தில் கண்டேனே2 தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேன்2 இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் - உன்னைத் தமிழகம் என்றேனே2 காஞ்சித் தலைவன் கோவில் சிலை தான் கண்மணியே உன் பொன்னுடலோ...? குடந்தையில் பாயும் காவிரி அலை தான் காதலியே உன் பூங்குழலோ...? சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ...? தூத்துக்குடியின் முத்துக் குவியல் - திருமகளே உன் புன்னகையோ...?2© பூவா? தலையா? வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫

என்ன அவ்வளவு தானா...? அடுத்த பகுதி விரைவில்...! அதற்கு முன் மேலே சரியாக விடை சொன்னவர்களையே குழப்பிய அதிகாரத்தை இங்கே சொடுக்கி ரசிப்பதற்கு முன், இந்தப் பதிவு குறித்து... தங்களின் ரசனை என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கலக்கிட்டீங்க டிடி. பல கவிஞர்களின் பாடல்களுக்கு திருக்குறள்தான் மூலம் என்பதை மீண்டும் உறுதிப் படுத்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. பழமைக்கும் புதுமைக்கும் பாலம் அமைத்திருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை ஐயா
    திருக்குறள் தங்களின் உதிரத்தோடு கலந்துவிட்டது புரிகிறது

    பதிலளிநீக்கு
  4. பாடல்கள் பிறந்த விவரம் அருமை.
    கவிஞர்கள் எல்லாம் எவ்வள்வு அழகாய் திருக்குறளை கையாண்டு இருக்கிறார்கள்!
    பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை.
    பாடல்களை ஒவ்வொன்றாக கேட்க வேண்டும் மதியம் ஓய்வில்.
    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  5. கண்கள் மட்டும் பார்க்கிறவர்களின் உயிரைப் பறிக்கிறதா ?இதைதான் காதல் பிசாசு என்றானோ இன்றைய கவிஞன் :)

    பதிலளிநீக்கு
  6. அருமை டிடி!! திருக்குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்பது புலனாகிறது இல்லையா...

    கீதா: நன்றி டிடி சகோ!! மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. பழையபாடல்கள் மீது பைத்தியமானவன் நான். சிலபாடல்களைக் கேட்கையில் அந்த வரிகளைப் பாடுகையில், நான் கரைந்து காணாமல் போய்விடுகிறேன். அப்படி ஒரு பாடலைத்தான் நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டு இந்தக் காலைப்பொழுதை ரம்யமாக்கிவிட்டீர்கள். அவை இவை: கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே...காதாலேக் கேட்டுக் கேட்டுச் செல்லாதே ...!

    அடடா, நான் அந்தக்காலத்தை நழுவவிட்டுவிட்டு, இந்தக்காலத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. டிடி இப்படியெல்லாம் பதிவுபோட்டா. ரொம்ப பொறாமையா இருக்கு...
    நானெல்லாம் தலைகீழா நின்று தண்ணீர் குடிச்சா கூட முடியாது..
    பிரமிக்க வைக்கும் பதிவு..

    பதிலளிநீக்கு
  9. என்னைப் பாராட்டியதற்கும் எனது பெயரைப் பதிவிட்டதற்கும் நன்றி. திருக்குறள் திரைப்பாடல் விளக்கம் அருமை. அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம் .

    பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  11. குறளில் இருந்து எப்படி எல்லாம் பாடல் எழுதலாம் என்பதுக்கு அருமையான ஆராட்சி!

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் திருக்குறளுக்கும் எட்டாத தூரம்.. இதில போய் எங்கே ஒப்பிடுவது:)... மிக அழகிய அருமையான பாடல்கள்.. முதல்பாடல் எப்ப கேட்டாலும் இனிக்கும் பாடல்...

    கடசி 4 பாடல்கள் இதுவரை கேட்டதாக நினைவில்லை எனக்கு.

    பதிலளிநீக்கு
  13. ஆனா இங்கு பிளே பண்ணிப் பாட்டுக் கேட்க முடியவில்லையே என்னால்... வேறு யாராவது ட்ரை பண்ணினார்களா தெரியவில்லை சொன்னால்தான் தெரியும்... நான் முதலாவது லைட் ஊதா தொடங்கி... கடசி டார்க் ஊதாவரை ட்ரை பண்ணிட்டேன்ன்ன்.. எதுவும் பாடுதில்லையே:(.. எனக்கு மட்டும்தானோ??...

    முத்தான... பத்தாவது வோட் என்னோடதாக்கும்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எல்லா பாடல்களையும் க்ளிக்கி கேட்டேன்

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. நான் இப்பவும் ட்ரை பண்ணினேன் ம்ஹூம்ம்.. அப்போ வேறு ஏதோ பிரச்சனையாக்கும் எனக்கு...

      நீக்கு
  14. இரண்டு முறை சொடுக்கினாலும் எனக்குப் பாடல் வரிகள் கேட்கவில்லையே பேசாமல் திருக் குறளும் திரை இசைப்பாடல்களும் என்று ஒரு தீசிஸ் எழுதி முனைவர்பட்டம் பெறலாம்

    பதிலளிநீக்கு
  15. வாவ் !! அருமைங்க சகோ ..பாடல்களுக்கும் திருக்குறளுக்கும் எத்தனை ஒற்றுமை ..நீங்க குறிப்பிட்ட பாடல்கள் அனைத்துமே நான் ரசித்த ரசிப்பவை .பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  16. திருக்குறளோடு எதையும் இணைக்கலாம் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  17. நாம் கேட்ட பல பழைய பாடல்களின் கருத்துகள் திருக்குறளில் இருந்தே வந்திருக்கின்றன என்றறிந்து வியந்தேன். இக்குறள்களை இதுவரை படித்ததேயில்லை. பதிவுக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  18. பதிவை படிக்கும்போதே..எனக்கு மும்முனை தாக்குதல் தெரிந்தது தலைவரே... அருமை...தங்களின் மூலம் திரையிசை பாடல்களை கேட்கத் தூண்டுகிறது..

    பதிலளிநீக்கு
  19. குறள் படித்துச் சொல்லடுக்கி
    குறள் சுட்டும் பொருளுடுத்தி
    பாப்புனைந்த பாவலர் ஆற்றல் பகிர்ந்த
    வள்ளுவனார் பாட்டுத் திறன் சுட்டி
    பதிவெழுதும் தனபாலன் அவர்களுக்கு
    எனது பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  20. இது போன்ற கருத்துச்செறிவான பதிவுகளை உங்கள் வலைத்தளத்தில் தான் காணமுடிகிறது.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. நீங்கள் திண்டுக்கல் தனபாலன் மட்டுமல்ல, திருக்குறள் தனபாலனும்கூட.

    பதிலளிநீக்கு
  22. குறட்பாக்களுக்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களைத் தர தங்களால் தான் முடியும் என்பதை திரும்பவும் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்! சரியான அதிகாரத்தைக் கணித்த ஐவரில் நானும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  23. திருப்புகழைப்பாடப்பாட நா இனிக்கும்னு ஒருபாட்டு இருக்குது திருப்புகழ் பதிலா திருக்குறளை அந்த இடத்தில் போட்டுக்கலாம்போல தோணுது..


    இன்னொரு டவுட்டு தப்பா நெனக்க கூடாது. நான்லாம் 1330--- திருக்குறளையும் படிச்சதில்லதான். ஏதோ ஓரளவு படிச்சிருக்கேன்
    குறள் ல வரும் தமிழுக்கே அர்த்தம் சொன்னா தானே புரிஞ்சுக்கவே முடியுது...

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    அண்ணா
    பாடலும் விளக்கமும் சிறப்பு எனக்கு பிடித்த பாடல்கள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் இனி வலைப்பக்கம் என் வருகை தொடரும் எப்போதும். அண்ணா..
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. குறள் சிறப்பு பெருமை அருமை
    தமிழ் மணம் 13

    பதிலளிநீக்கு
  26. பிரமிப்பாக இருப்பதோடு அல்லாமல் இப்போதைய கவிஞர்களின் தேவைக்கேற்ப அப்போதே குறள் எழுதி வைத்திருக்கிறாரே திருவள்ளுவர் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.