🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉டொய்ங்... டொய்ங்...

வணக்கம் நண்பர்களே... எனது புதிய பதிவை "preview"வில் பார்ப்பதோடு சரி... பிறகு 99% அந்தப் பதிவைப் பார்ப்பதே இல்லை... மீதி 1% கருத்துரை மூலம் வரும் புதிய பதிவர்களை முடிந்த வரை தொடர்வதே எனது வாடிக்கை...← இது பலரும் என்னிடம் கேட்கும் கேள்விற்கான பதில்...! (இரு கேள்விகளும் இந்தப் பதிவு முடிந்தவுடன் உங்களுக்குப் புரிந்து விடலாம்...!)

SettingsCommentsReader comment captchaShow word verification for readers who comment என்பதில் OFF செய்து இருப்பதே உங்களுக்குக் கோடி புண்ணியம்...!

இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 01.06.2020

SettingsComments
1) Who can comment???
2) Comment Moderation???
3) Comment Location???
இவற்றைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்...

கவனிக்க: அடுத்த மாபெரும் பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும்... அதற்குள் குறைந்தபட்சம் 50 புதிய பதிவர்களை உருவாக்கிட வேண்டும் என்பதே முத்துநிலவன் ஐயாவின் திட்டம் ... வரும் ஜனவரி முதல் வாராவாரம் ஆரவாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் புதுக்கோட்டையில் கணினி வலைப்பயிற்சி தொடர்ந்து நடக்கப் போகிறது... ஏற்கனவே பதிவு செய்த எனது தொழினுட்ப பகிர்வுகளால் வகுப்பு எடுக்க எளிதாக இருந்தது... அந்த வகையில் → இந்த பகிர்வில் உள்ளவை எல்லாம் எனது அனுபவமே... மாறுவதும் மாற்றுவதும் உங்கள் மனம் விருப்பம் போல்...! (அப்பாடா !)

1) Who can comment என்பதில் Anonymous என்று வைத்திருந்து, காலையில் Anonymous கருத்துரையைப் படித்தாலே எரிச்சல், கோபம், இன்னும் பல தொல்லைகள் என 2) Comment Moderation என்பதில் Always என்று மாற்றியவர்கள் பல பேர்... (ஆமாம்... மற்ற நேரங்களில் படித்தால் இப்படி ஆகாதோ...? ஹா...ஹா...) "நான் எழுதுவதை மட்டும் படி, மற்றபடி வாசிப்பவர்களுக்கு எந்த யோக்கியதையும் இல்லை போ" எனும் நினைப்பில் Settings »» Comments »» Comment Location »» Hide என்பதைத் தேர்வு செய்து விட்டு, கருத்துப் பெட்டியை மூடியவர்கள் சில பேர் ! (அடடா சொல்லிட்டேனா...? ஹிஹி... பதிவின் முடிவில் சொல்லித்தான் ஆக வேண்டும்...!)

2) Comment Moderation என்பதில் Always என்று வைத்திருந்தால், Anonymous உட்பட எந்த கருத்துரையையும் நீங்கள் நினைத்தால் தான் வெளியிட முடியும்... (வெளியிட்டு உங்களின் பொன்னான நேரத்தை அதற்குச் செலவழிக்கலாம்...!) உங்கள் தளத்திற்கு வரும் கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு, சந்தோசங்களுக்கு, எழுத்துப் பிழைகளுக்கு, தவறான தகவலின் சுட்டிக் காட்டுதலுக்கு, ஆரோக்கியமான விவாதங்களுக்கு, ரசிக்க வைக்கும் அரட்டைக்கு எனப் பல முக்கியமானவற்றுக்கு மறுமொழி இடுவது அவசியம் தான்... (பதறுவது-பம்முவது, கும்முவது-குமறுவது, பினாத்துவது-பிதற்றுவது - இவை இல்லையா...?) சிலரின் அற்புதமான கருத்துரைகளால், நொந்து நூடுல்ஸ் ஆன பல வலைத்தள நண்பர்களின் உரையாடல் மூலம் அவர்களின் வருத்தம் அறிந்து மீண்டும் பதிவுகளைத் தொடர வைத்தேன்... அதை பிறகு பார்ப்போம்...! ஒவ்வொரு கருத்துரைக்கும் "நன்றி" சொல்லும் வகையில் சொந்த தளத்திலேயே ஒரே மாதிரியான மறுமொழி தேவையா...? தேவை தான் என்போருக்கு அடுத்த பதிவர் சந்திப்பில் ஒரு பரிசு உண்டு !

நன்றியோ, பாராட்டோ, உதவியோ - மனதில் தோன்றியவுடன் செய்து விட வேண்டும் அல்லவா...? ஆரம்பக் காலத்தில் இதே போல் நானும் செய்தேன்... பரிசு கொடுக்கத் தான் யாரும் இல்லை... ஹிஹி... பிறகு ஒவ்வொரு பதிவின் கருத்துரையாளர்களின் பெயரை எல்லாம் தொகுக்கும் படி Excel-ல் ஒரு Program செய்து வைத்திருந்தேன்... எதற்கு...? முடிவாக அந்தப் பதிவில் "அனைவருக்கும் நன்றி" என்று கருத்திட...! அதற்குப் பிறகு அந்தப் பதிவிற்கு எந்த கருத்துரையும் வராது என்பதையும் அறிந்தேன்... தேவையானதைத் தவிரக் கிட்டத்தட்ட எனது 1500 கருத்துரைகளை நீக்கி விட்டேன்...! (எளிதாக நீக்குவது எப்படி என்று ஒரு பதிவு போடணுமே...!)

நேர / காலத்தின் சிறப்பை அறிய... சொடுக்குக :
1) மனித வாழ்வில் போனா வராதது எது ?
2) அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ?
3) எல்லாம் என் நேரம்...!

புதிய பதிவர்களே நண்பர்களின் வலைத்தள நேரத்தை உங்களால் குறைக்க முடியுமா ?

கீழுள்ள Settings செய்வதன் மூலம் முடியும்... முக்கியமான ஒன்று... உங்கள் பதிவிற்கு வரும் கருத்துரை அனைத்திற்கும், நன்றி எனும் வகையில் ஒரே மாதிரியான மறுமொழி இட வேண்டும் என்று அவசியமில்லை... அவர்கள் வந்து பார்க்கப் போவதுமில்லை... பெட்ரோமாக்ஸ் லைட்டே வேண்டும் என்றால்... அதாவது மனதில் என்றும் இருக்க வேண்டிய நன்றியைச் சொல்லியே ஆக வேண்டும் என்றால், மறுமொழி இட்ட தளங்களைத் தொடர்ந்து வாசித்துக் கருத்திடுங்கள்... நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றுங்கள்... உங்கள் தளத்தைத் தொடர்பவர்களை + கருத்துரைகளால் சந்தோசப்படுத்துபவர்களை முதலில் தொடருங்கள்←அவர்கள் உங்கள் தளத்தைத் தொடரா விட்டாலும்...! (பதிவின் ஆரம்ப கேள்வி இரண்டில் ஒன்று லைட்டா புரியுது...!) I am a complan boy...!

டொய்ங்... டொய்ங்... இந்தப் பதிவின் தலைப்பிற்குச் செல்வதற்கு முன் Comments பகுதியில் Spam என்பதைச் சொடுக்கி ஒரு முறை பாருங்கள்... அன்பர்களின் கருத்துக்கள் அங்கு இருக்கக் கூடும்... Not Spam என்பதைச் சொடுக்கி மாற்றுங்கள்... இனி : 3) Comment Location »» இவற்றில் 1) Embedded 2) Full Page 3) Popup window 4) Hide என்று உள்ளது... முதல் மூன்றில் எதைத் தேர்வு செய்தால் கருத்துரை இடுபவர்களுக்குப் பெரு(று)ம் உதவியாக இருக்கும்...?

1) Embedded இருந்து Comment Moderation என்பதில் Never என்றிருந்தால், கருத்துரை இட்ட பின், உங்கள் கருத்துரையோடு மீண்டும் அந்த தளம் "டொய்ங் டொய்ங்" என்று சுற்றி, முழுவதுமாக வந்த பின், அடுத்த தளத்திற்குச் செல்ல வேண்டும் (அவசரப்பட்டால் முதல் தளத்தில் வெளியிட்ட கருத்துரை அடுத்த தளத்தில் சென்று, அவர்களின் இதயம் டொய்ங்... டொய்ங்... ஆகவும் வாய்ப்பு உண்டு...!) அதனால் 2) Comment Moderation என்பதில் Always - என்பதைத் தேர்வு செய்து, வரும் கருத்துரைகளை ரசித்து...... யோசித்து...... பிறகு வெளியிடலாம் ! (புரியுது... அடுத்து ?)

2) Full Page வைத்திருந்தால், comment option-ஐ சொடுக்கினால் பதிவு உள்ள பக்கம் மறைந்து கருத்துரை பக்கம் திறக்கும். (புதிய பக்கத்தில் திறக்க வேறு ஒரு settings செய்ய வேண்டும்...!) மீண்டும் பதிவை வாசிக்க வேண்டுமெனில், அங்குள்ள பதிவின் தலைப்பைச் சொடுக்க வேண்டும்... டொய்ங்... டொய்ங்... (இதுவும் நல்லாயில்லையே ! எதுதானப்பா சிறந்தது ?)

3) Popup window வைத்திருந்தால், கருத்துரைப் பெட்டி புதிய சிறிய விண்டோவாக திறக்கும்... அங்குச் சென்று நாம் கருத்திட்ட வேண்டும்... தமிழில் எழுத உங்களின் கணினியில், எத்தகைய வழிமுறைகள் வைத்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது... அதனால், இந்த Popup முறையும் எளிதல்ல...

உண்மையிலேயே நாங்க டொய்ங்... டொய்ங்... என்னதான் செய்யணும்...? இதோ :

1) Who can commentUser with Google accounts

2) Comment ModerationAlways

3) Comment LocationEmbedded

"காலம் மாறுது, கருத்தும் மாறுது; நாமும் மாற வேண்டும்; நம்மால் நாடும் (வலைத்தளமும்) மாற வேண்டும்..."

தங்களின் விருப்பம் என்ன நண்பர்களே...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. இந்த வித்தைகளை எல்லாம் தம்மிடம் ஏற்கனவே தொலை பேசியில் கேட்டு தெரிந்து கொண்டதால்.. என் தளம் நன்றாக ஓடுகின்றது, அநேகருக்கு உதவும் pathivu. தொடர்ந்து ஆற்றுங்கள்!

  பதிலளிநீக்கு
 2. கருத்துரைக்கு எவ்வளவு கருத்து!! :)
  அண்ணா, உங்களுக்கு நான் பரிசு தருகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. சொன்னதையெல்லாம் நிதானமா வாசிச்சு மாற முயற்சிப்பேன். ஆமாம்.... அதுக்கு முன்னே... என் இடுகைகளில் திடீர்னு வேர்டு வெரிஃபிகேஷன் காமிக்குதே இப்பெல்லாம். நான் நோ ன்னு சொன்னாலும் கேக்கலைன்னா என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்னது தான் சரி அம்மா...

   Posts and Comments »» Comment Location »» Popup window என்றும், Comment Moderation என்பதில் Always என்றும் வைத்துள்ளீர்கள்...

   Show word verification என்பதில் No என்று இருந்தாலும் Popup window என்று வைத்துள்ளவர்களின் தளங்கள் எல்லாம் தற்சமயம் கூகுள் Word Verification கேட்கிறது... சோதனை செய்து பார்த்து விட்டேன்... மீண்டும் மாறும் போது தெரிவிக்கிறேன்... அதுவரை Posts and Comments »» Comment Location »» Embedded என்றும், Comment Moderation என்பதில் Always என்று தேர்வு செய்வதே சிறந்தது... நன்றி...

   நீக்கு
 4. கருத்துரைகளுக்காகவே ஒருதனிப்பதிவு - பேஷ் பேஷ். ரொம்ப நன்னா இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. உங்களிடம் நிறையவே கற்றுக் கொண்டுள்ளேன் .மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 6. மிக பயனுள்ள பதிவு அண்ணா! புதுகை வகுப்பிற்காக காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 7. டொய்ங்..டொய்ங்..சற்றொப்ப இதைப்போன்ற ஒரு பதிவில் இது தொடர்பாக தாங்கள் விவாதித்ததாக எனக்கு நினைவு. இதில் கூடுதல் செய்திகளைக் காணமுடிந்தது. பல ஐயங்களைத் தெளிவுபடுத்திவிட்டன இப்பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இதைவிட எளிமையாக விவேகானந்தா ஆங்கில கோர்ஸ் கூட இருக்காது!

  :)))

  பயனுள்ள குறிப்புகள்.

  பதிலளிநீக்கு
 9. மிகவும் பயனுள்ள குறிப்புகள்.. நன்றி தனபாலன் ஜி..

  பதிலளிநீக்கு
 10. வெளியிட்ட சில நிமிடங்களுக்குள் மகத்தான ஆதரவைப் பெறுவதில் நீங்க தான் நம்பர் ஒன்

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் பயனுள்ள பதிவு. நானும் மாற்றம் செய்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 12. பின்னூட்டப் புயல், டிடி யின் கமெண்ட்ஸ் செட்டிங்க்ஸ் பற்றிய விரிவான பதிவு அபாரம்.பாடம் போல பில்லாமல் வித்தியாசமாக வழங்கியது சூப்பர். அந்த எக்சல் ப்ரோக்ராம் பற்றி அறிந்து கொள்ள ஆவல்.

  பதிலளிநீக்கு
 13. பயனுள்ள பதிவு அண்ணா ! என் தளத்தில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை கொண்டுவர என்னுடைய டெம்ப்ளேட் HTMLல் மாபெரும் போரே செய்துவிட்டேன் அண்ணா ! ஆனால் தொடர்ந்து தோல்வி தான் . ப்ளாக்கர் நண்பன் , வந்தே மாதரம் ஆகியவர்களோடு கூட்டணியில் இருந்தும் தோல்விதான் . அண்ணன் பகவான்ஜீ தான் தங்களைப்பற்றி கூறி , உங்களிடம் உதவி கேட்க சொன்னார் . எனக்கு இந்த தொழில்நுட்ப போரை முடிவுக்கு கொண்டுவர உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன் .

  மெக்னேஷ்

  joinmegu@gmail.com

  பதிலளிநீக்கு
 14. நானும் உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் தனபாலன் துளசி கேட்டு விட்டார்கள்.

  ஏன் இப்படி வருகிறது?

  உங்கள் இன்றைய பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. இவ்வளவு விஷயத்தை நேரிலேயே சொன்னால் கூட என் மர மண்டையில் ஏறாது ,எழுத்திலே இருப்பதால் ,என்னையும் தொழில் நுட்ப பதிவராக்கி புதுக் கோட்டையில் விருது பெரும் அளவிற்கு புரிய வைத்து விட்டீர்கள் ,நன்றி !
  த ம 8

  பதிலளிநீக்கு
 16. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  அடுத்த வலைப் பதிவர் சந்திப்பில், வலைப் பக்கம் தொடங்குவது, நிர்வகிப்பது தொடர்பான பதிவுகளை எல்லாம் திரட்டி, தனியொரு நூலாக வெளியிடுவீர்களேயானால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 17. மிக அருமையான விளக்கங்கள்.
  வலைச்சித்தர் என்று சும்மாவா சொன்னார்கள்!..
  நல்வாழ்த்துகள்!.

  பதிலளிநீக்கு
 18. பயனுள்ள தகவல்கள் களஞ்சியம்..உங்கள் தளம்...நன்றி சகோ தம. +1

  பதிலளிநீக்கு
 19. //Hide என்பதைத் தேர்வு செய்துவிட்டு, கருத்துப் பெட்டியை மூடியவர்கள் சில பேர்//

  இவர்களில் நானும் ஒருவன்.

  கருத்துரையாளர்களை அவமதிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கில்லை. Moderation வைத்தாலும் என்னுடைய சில பதிவுகளுக்கு வரும் மிக அநாகரீகமான தாக்குதல் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் எனக்கில்லை. எனவேதான், பெட்டியைப் பூட்டி வைக்கிறேன்.

  பதிவில் நேரிடும் பிழைகளை நண்பர்களின் கருத்துரை மூலம் அறியும் வாய்ப்பை இழக்கிறேன் என்பது உண்மைதான். அதனால், பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பிழை நீக்கி வெளியிடுகிறேன்.

  பதிவை வெளியிட்டு முடித்ததும் தொடர்ந்து வேறு பணிகளில் மூழ்கிவிடுவதால் கருத்துரைகளுக்கு உரிய நேரத்தில் நன்றி சொல்ல முடிவதில்லை. பெட்டியைப் பூட்டுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

  என் நிலையைப் புரிந்துகொண்டு, நான் செய்யும் இந்தத் தவற்றையும் பதிவுகளில் இடம்பெறும் பிழைகளையும் பொறுத்துக்கொள்ளுமாறு உங்களையும் நண்பர்களையும் மனப்பூர்வமாய் வேண்டுகிறேன்.

  மிக்க நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 20. வலைப் பதிவர்களுக்கு உபயோகமான பதிவு. நீங்கள் கொடுத்த இணைப்பின் வழியே சகோதரர எஸ். மது (மகிழ்தரு) அவர்களின் பதிவினைச் சென்று பார்த்தேன். நன்றாகவே சொல்லி இருந்தார்.

  ”அனானிமஸ்” மற்றும் “விதண்ண்டா வாத பேர்வழிகள்” தொல்லைகளுக்காக வேண்டித்தான் Comments moderation வைக்க வேண்டி உள்ளது. Word Verification ஐ எடுத்து விட்டாலும், Blogger Settings ஐ அவர்களே மாற்றும்போது தானாகவே வந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.
  த.ம.13

  பதிலளிநீக்கு
 21. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 22. மிக அருமையான கருத்தாக்கத்தினை கொண்ட கருத்துரை பதிவு நன்றி...

  பதிலளிநீக்கு
 23. தனபாலன் சார். நீங்கள் சொல்லும் தொழில்நுட்பம் எல்லாம் பிளாக்கர் பதிவர்களுக்கு மட்டும்தான் போலிருக்கிறது. என்னைப்போன்று, வேர்ட்பிரஸில் தெரியாமல் மாட்டிக்கொண்டவர்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் எல்லாம் எங்கே கிடைக்கும்?

  பதிலளிநீக்கு
 24. பயனுள்ள பகிர்வு பலருக்கும் பயன்படும்.

  பதிலளிநீக்கு
 25. உண்மைதான். சிலரது பதிவுகளில் சிரமப்பட்டு தட்டச்சு செய்தபின் "publish" பட்டனை அழுத்தியவுடன் அனைத்தும் காணாமல் போகும். இத்தனைக்கும் நமது gmail id கருத்துரைப்பெட்டியின் பக்கத்தில் இருப்பினும் இது நிகழ்கிறது. உதாரணமாக திரு. பகவான்ஜியாரது வலைத்தளத்தில் இத்தகைய அனுபவம் எனக்குக் கிட்டியது.

  நீங்கள் சொல்வது மிகப் பொருத்தமானது. அதுவும் அனைவரது வலைத்தளங்களையும் வருகைதரும் தங்களைப்போன்றோர்க்கு நேரம் வீணாதலை தடுக்கவேண்டியது மிக அவசியம்தான்.

  "வலைச்சித்தர் " பட்டம் உங்களுக்கு தகுந்த பட்டம்தான்.

  நன்று.

  God bless you

  பதிலளிநீக்கு
 26. மிகவும் பயனுள்ள பகிர்வு. மிக நன்றாக புரியவைத்திருக்கிறீங்க. ரெம்ப நன்றிகள் சகோ.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்
  அண்ணா
  அறியாத விடயத்தை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல... அரமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 28. மிக அவசிமான பதிவு சகோதரரே!

  இன்னும் நானும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது!
  அருமை!.. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 29. பயனுள்ள வலைத் தொழில்நுட்பப் பதிவை வரவேற்கிறேன். தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 30. சில சமயம் நானே மறுமொழி எழுத இருக்கும்போது வேர்ட் வெரிஃபிகேஷன் கேட்கிறது. நான் என் செட்டிங்கில் வேர்ட் வெரிஃபிகேஷன் வைக்கவில்லை. ஆனால் அதை ignore செய்தால்(லும்) கமென்ட் வெளியாகிறது

  பதிலளிநீக்கு
 31. அருமையான விளக்கம்.நானும் பின் பற்றுகின்றேன் விரைவில்

  பதிலளிநீக்கு
 32. பலருக்கு்ம் பயன் உள்ளவகையில் விளக்கவுரை அருமை நண்பரே...
  தமிழ் மணம் 20

  பதிலளிநீக்கு
 33. மிகவும் பயனுள்ள பதிவு டிடி! புதியவர்க:ளுக்கும், பழையவர்களுக்குமே!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 34. விளையாட்டு வினையான மாதிரி என்னையே வெரிஃபை செய்கிறது என் வலைப்பூ. விநோதமான செயலாக இருக்கிறது. நீங்கள் சொல்வதைச் செய்து பார்க்கிறேன். நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 35. நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள்...
  கோமதி அம்மா கேட்ட கேள்விதான் எனக்குள்ளும் இப்போது வந்தது அண்ணா... காரணம் நட்புக்களின் பதிவுகளைப் படித்து கருத்திடும் போது 10-ல் பேருக்கு வேர்ட் வெரிபிகேசன் கேக்குது... எதோ பிரச்சினை இருக்குமோ என்று நினைத்து வந்தால் தங்கள் பதிவின் பதிலில் விளக்கம் இருக்கு...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 36. நான் பாப் அப் வின்டோவெல்லாம் வைக்கலை. ஆனாலும் வேர்ட் வெரிஃபிகேஷன் வருது. நீங்க சொன்னது போல் கமென்ட் எம்பெடெட் கொடுத்திருக்கேன். இனி பார்க்கலாம். நன்றி.

  பதிலளிநீக்கு
 37. படித்ததில் புரிந்த சிலவற்றை தங்களின் வழிகாட்டுதலின் படி மாற்றி விட்டேன். நன்றி !! நன்றி!!

  பதிலளிநீக்கு
 38. பயனுள்ள பகிர்வு. எல்லோருக்கும் புரியும் படி படிப்படியாக சொல்லியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 39. உங்களுடைய விளக்கத்தை படிக்கும்போது இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். காத்திருக்கிறேன் மேலும் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள.

  பதிலளிநீக்கு
 40. புதியவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் உபயோகமான தகவல்! எளிமையாக விளக்கி கூறியமைக்கு நன்றி! தொடருங்கள் தொழில்நுட்ப சேவையை! எனக்கொரு உதவி தேவைப்படுகிறது மெயிலில் தொடர்பு கொள்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 41. word verificationற்கு நல்ல தீர்வு சொல்லி விட்டீர்கள் தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 42. புது பதிவருக்கு மட்டுமல்ல, நம்மை போன்ற ஆட்களுக்கும் டெக்னிக்கலாக ஒன்றும் புரிவதில்லை.
  இப்பவும் கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. வாழ்த்துகள் DD.

  அது சரி.... மதுரை சந்திப்பிற்கான பதிவின் போது எனது கருத்துகளையும் வாழ்த்துகளையும் உங்களுக்கு பின்னோட்டமிட்டிருந்தேன். ஏனோ வரவில்லை...? ஏன்?.

  பதிலளிநீக்கு
 43. அந்த வேர்டு வெரிஃபிகேஷனை ஜஸ்ட் பொருட்படுத்தாமல் விடுங்க. அது இல்லாமலேயே பின்னூட்டம் எல்லாம் போகுது:-)

  நல்லவேளை... இது நம்பர் வெரிஃபிகேஷனாக இருக்கு:-)
  எழுத்துன்னா.... வேலை மெனெக்கெட்டு ஃபாண்ட் மாத்தவேண்டி இருக்கும்!

  பதிலளிநீக்கு
 44. தாங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்களும் புதியவர்களுக்கு மட்டுமல்ல தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் மிகச் சிறந்த வழிகாட்டி. நீங்கள் சொல்லும் அனைத்தையுமே செயல்படுத்துவது என்பது இயலாத நிலையிலும்கூட சில கருத்துகள் நுணுக்கமான அளவில் முறையாகப் பயன்படுத்த உதவியாக இருக்கிறது. தமிழ் மணத்தில் இணைவது தொடர்பாக தங்களின் கருத்து எனக்கு பேருதவியாக இருந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
 45. பயனுள்ள பதிவு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 46. ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்:)
  ///பின்னூட்டங்களுக்குப் பதில் போடவேண்டும் என்பதுமில்லை.. அதனை அவர்கள் வந்து பார்க்கப் போவதுமில்லை /////
  என்பதை நான் ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்ன்ன்.. பதில் கிடைக்காது என தெரியும் புளொக்குகளுக்குத்தான் போய்ப் பார்ப்பதில்லை மீண்டும், ஆனா பதில் கிடைக்கும் என இருக்கும் புளொக்குகளுக்கு போய் படித்து சிலவேளை 2 வது பின்னூட்டமும் இட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்...

  பிஸ்னஸ்க்காகவா நாம் புளொக் எழுதுகிறோம்.. ஒரு சந்தோசம் பொழுது போக்குக்காகத்தானே.. அப்போ பின்னூட்டத்தில் பேசுவதன் மூலம் மகிழ்ச்சிதான் அதிகரிக்கிறது.

  பதிலளிநீக்கு
 47. இந்த பிரச்சனை சரிசெய்யப்பட்டுவிட்டது. "Full page" அல்லது "Pop-up Window" தேர்வினை வைக்கலாம். :)

  பதிலளிநீக்கு
 48. தனபாலன் சார்

  verification இல்லாமல் பின்னூட்டம் போட முடிகிறதே ! யாராவது தவறாக பின்னூட்டமிட்டால் அழித்து விடவும் முடிகிறது . இருந்தாலும் உங்களின் பதிவு பயனுள்ளது .

  பதிலளிநீக்கு
 49. பயனுள்ள ,அருமையான தகவல்பகிர்வுகளுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 50. உங்களை ஏன் வலைச் சித்தர் என்று அழைக்கிறார்கள் என்று இப்போது தானே புரிகிறது.இவ்வளவு எளிமையாக கூட சொல்லித்தர இயலுமா?வியக்கிறேன்.அருமை.மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு "BLOG PROFESSOR " என்ற பட்டத்தை சூட்டுகிறேன்.நன்றி சகோதரரே.

  பதிலளிநீக்கு
 51. மிக அருமையான பிளாக்கர் டிப்ஸ்கள் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 52. //இதைவிட எளிமையாக விவேகானந்தா ஆங்கில கோர்ஸ் கூட இருக்காது!//

  ம்ம்ம்ம்

  பதிலளிநீக்கு
 53. நிறைய பயனுள்ள பல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 54. வணக்கம் சகோதரரே.!

  நல்ல விளக்கமான பதிவு!

  எனக்கு கணிணி புதிதாகையால், தங்கள் பதிவை பல முறை படித்தும் என் மகனிடம் கேட்டும், புரிந்து கொள்கிறேன். நன்றி

  என் தளம் வந்து ஊக்குவிப்பதற்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 55. மிக மிக பயனுள்ள குறிப்புகள். பொறுமையாகப் படித்து செயல் படுத்த வேண்டும் நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 56. அன்புள்ள அய்யா,

  வலைத்தள அன்பர்களுக்கு பயனுள்ள தகவல்கள்.
  நன்றி.
  த.ம.24

  பதிலளிநீக்கு
 57. நல்ல பதிவு நண்பரே
  எனது வலைப்பூ: www.thumitham.com

  பதிலளிநீக்கு
 58. வணக்கம் ஐயா :)
  இத்தனை நாள் இந்தப் பதிவைப் பார்க்கவில்லையே. :(
  இதுபோல் விடுபட்ட பதிவுகள் எத்தனை எத்தனையோ..!!
  இதெல்லாம் தெரியாமல் முட்டி மோதித் தட்டுத் தடுமாறித்தான் இவற்றைத் தளத்தில் அமைத்தேன்.

  2014 மே மாதம் புதுக்கோட்டையில் நடத்தப்பெற்ற வலைத்தளப் பயிற்சி முகாமில் முதல்நாள் மட்டுமே வர முடிந்தது.

  நீங்கள் இரண்டாம் நாள் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  வலையுலகம் பற்றித் தெரியாததால் உங்களையும் தெரியாது. அதனால் உங்களைத் தெரிந்து கொள்ளும். வாய்ப்பை இழந்துபோனேன்.
  மிக மிக வருத்தமே!

  ஒருவரின் பின்னூட்டங்களுக்கு நாம் அளிக்கும் பதில்களை வந்து பார்க்க மாட்டார்களா..?

  இவ்வளவுநாள் அப்படியல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.

  அப்பொழுது வேலையற்றுப் போய் நாம் கொடுக்கும் மறுமொழிகள் வீணானவைதானே....!

  நல்லவேளை சொன்னீர்கள்..!!

  இனிமேலாவது கவனமாய் இருக்கலாம்அ ல்லவா?

  தமிழ் இளங்கோ அய்யாவின் தளத்தில் இருந்து வருகிறேன்.


  அவருக்கும் உங்களுக்கும் ஒருசேர என் நன்றி.

  மிகவும்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.