🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉மனித வாழ்வில் போனா வராதது எது...?

"வணக்கம் ஐயா !"

"யாருப்பா அது ?"

"சார் ! என்னை தெரியலையா?"

"அட ! நீயா ? வாடா வா ? பார்த்து ரொம்ப நாள் ஆச்சி ! அது என்ன 'சார்' ?"

"என்னடா பண்றே ? எதோ பதிவு எழுதுற மாதிரி இருக்கே ? என்ன தலைப்பு ?""மனித வாழ்வில் போனா வராதது எது ?"

"நான் பதில் சொல்லட்டுமா ? அப்போ அப்போ பாட்டு பாடுவேன்..."

"சரி... சொல்லு"

"போனா வராதது - கரண்ட் தான்... எப்போ போகும், எப்போ வரும்-ன்னு யாருக்கும் தெரியாது... ஆனா போக வேண்டிய நேரத்தில் சரியா போயிடும்"

"ஆரம்பமே ரம்பமா ? நான் கேட்டது மனித வாழ்வில் போனா வராதது எது ?"

"போனால் போகட்டும் போடா... இந்த பூமியில் நிலையாய் வாழந்தவன் யாருடா...? (படம் : பாலும் பழமும்) போனா வராதது - உயிர் தான்...!"

"தத்துவம் ? இதிலே பாட்டு வேறயா ? டேய்... மனிதன் உயிரோட இருக்கும் போது...?

கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்...
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு...!
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்...
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு...!
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... உனக்கு நீ தான் நீதிபதி...
மனிதன் எதையோ பேசட்டுமே... மனசை பாத்துக்கோ நல்லபடி...
உன் மனசை பாத்துக்கோ நல்லபடி...
(படம் : அருணோதயம்)
கண்டுபிடிச்சிட்டேன்... உயிரை விட மானம் தான் பெரியது... அதனாலே மானம் போனா திரும்ப வருமா...? எப்படி என் பதில் ?"

"...ம்... அது சரி ! மானம் போற மாதிரி ஏன்டா வாழ்கிறே ?
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம் ?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் !
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... !
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா ?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா ?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா ?
(படம் : பணம் படைத்தவன்)"

"சரி... அதை விடு... நீ என்ன கேட்கிறேன்னு புரிஞ்சி போச்சி... நாளைக்கு உன் கிட்டே வாங்கின பணத்தை கொடுத்திர்றேன்...
காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
குறள் எண் : 102)

"அடப்பாவி ! நான் அதை கேட்டேனா ? நீ நல்ல நிலைமைக்கு வந்த பிறகு கொடுத்தா போதும்"

"அப்பாடா... பயந்துட்டேன்... தெரிந்தோ, தெரியாமலோ, பேராசைப்பட்டோ, ஏமாந்தோ, பணம் இழக்கிறோம் இல்லையா ? அதனாலே போனா வராதது பணம் தான்...
ஒண்ணும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே...
அவனை உயர்த்தி பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே...
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை...
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே...
பணம் பந்தியிலே... குணம் குப்பையிலே...
படம் : பணம் பந்தியிலே)

"நீ ஏண்டா... ஏமாந்து போறே ? ஏமாற்றுபவனை விட ஏமாறுபவன் தான் குற்றவாளி... நான் ஒரு பாட்டு பாடுறேன்..."
ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு !
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு !
பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு !
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு !
இன்றோடு போகட்டும் திருந்தி விடு !
இன்றோடு போகட்டும் திருந்தி விடு !
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு !
ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே...!
(படம் : அடிமைப்பெண்)"

"அப்போ பணமும் இல்லையா ? சரி... நல்ல, நேர்மையுள்ள, உண்மையான, எளிமையான, பயமில்லாத, அன்புள்ள.... இன்னும் உனக்கு தெரிந்ததையெல்லாம் எழுதிக்கோ - இப்படிப்பட்ட மனிதனின் புகழ், போனா வராதது... சரியா ?
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது... உலகம் உன்னை மதிக்கும்...
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...

படம் : சூரியகாந்தி)"

"அடேய்... இந்த மண்ணு, பொன்னு, பெண்ணு, பெயர், பணம், புகழ், மற்ற எல்லாமே எப்போ வரும், எப்போ போகும்ன்னு தெரியாது. மாத்தி யோசிடா...
அறிவுக்கு வேலைகொடு... பகுத்தறிவுக்கு வேலை கொடு...
மூடப் பழக்கத்தை விட்டுவிடு... காலம் மாறுது... கருத்தும் மாறுது...
நாமும் மாற வேண்டும்... நம்மால் நாடும் மாற வேண்டும்....
(படம் : தலைவன்)"

"இப்ப என்ன தாண்டா சொல்ல வர்றே ? இவ்வளவு நேரம் வேஸ்ட் ?"

"...ம்... இப்ப சொன்ன பாத்தியா ? நேரம் அது தான் போனா வராதது !"

"அட இவ்வளவு தானா ? இதுக்கு தான் இவ்வளவு அலசலா ?"

"நம்ம ஐயன் திருவள்ளுவர் காலமறிதல் என்று ஒரு அதிகாரமே (49) எழுதி உள்ளார். அதிலே :
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(குறள் எண் : 483)
பொருள் : ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து, செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ ?

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்.
(குறள் எண் 484)
பொருள் :உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்ப்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்."

"மிச்ச குறள்களை நான் படிச்சிக்கிறேன்...! அவ்வளவு தானே ?"

"ஒரு சின்ன தொகுப்பு... அதையும் தெரிஞ்சிக்கோ :

புதிதாக விவாகரத்து ஆன தம்பதிகளிடம், பத்து ஆண்டுகளின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

இறுதித் தேர்வில் தோல்வியடைந்த மாணவனிடம், ஒரு ஆண்டின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் தாயிடம், ஒரு மாதத்தின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

வாராந்திர பத்திரிகையின் ஆசிரியரிடம், ஒரு வாரத்தின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

காத்திருக்கும் காதலர்களிடம், ஒரு மணி நேரத்தின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

விமானம், ரயில் அல்லது பஸ்ஸை தவற விட்டவர்களிடம், ஒரு நிமிடத்தின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

விபத்தில் உயிர் தப்பியவர்களிடம், ஒரு நொடியின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்களிடம், ஒரு மில்லி-நொடியின் அருமையை தெரிந்து கொள்ளலாம்.

"வெயில் தாங்க முடியலே... சரிப்பா நான் வர்றேன்."

"எங்கே போறே ? நீ என் மனசாட்சி தானே ? உன்னையே அப்புறம் பாத்துக்கிறேன்... காலம் பொன் போன்றது-ன்னு சொல்ல மாட்டேன். அதை விட மேலானது. இதில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பதெல்லாம் கிடையாது. அதைப் பற்றி பிறகு அலசுவோம். ஆக நண்பர்களே ! மனித வாழ்வில் போனா வராதது நேரம் அல்லது காலம் தான் !"

வாங்க நாம வேற மாதிரி சிந்திப்போம் இங்கே அரிதரிது மானிடர் ஆதல் அரிது... என்னும் பதிவை, படிக்காதவர்கள் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நூற்றுக்கு நூறு சரியே!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 2. காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது. காலத்தின் அருமையை உணர்த்தியது தங்களின் பதிவு.. !!

  காலத்தின் அருமையை உணர்த்தும் தொகுப்பும் அருமை. ஆக, என்னுடைய நேரத்தை தங்களின் பதிவை வாசித்ததன் மூலம் பயன்மிக்க பொழுதாக கழித்திருக்கிறேன்..

  வாழ்த்துகள் தனபாலன் அவர்களே.. ! தொடர்ந்து தங்களின் பொன்னான பதிவுகளை எதிர்நோக்குகிறோம்.. பகிர்வுக்கு நன்றி.!

  பதிலளிநீக்கு
 3. ம்ம்ம்ம் ....
  நேரமும் காலமும்தான் போனா வராதது

  நல்ல பதிவு சார்
  மனசாட்ச்சியுடன் பேசியது அருமை

  பழைய
  அர்த்தப் பாடல்கள்
  நல் சுவையும்
  சிந்தன்னை துளிகளும்

  பதிலளிநீக்கு
 4. திரைப்ப்டங்கள் என்றாலே எனக்குப் பிடிக்காது. எனினும் தங்களின் பதிவில் இடம்பெற்ற த்த்துவப் பாடல்களனைத்தையும் படித்தபோது மீண்டும் அத்தகைய திரைப்படங்களையும் காண ஆவல் ஏற்பட்டுவிட்டது. பதிவு மனதில் பதிந்தது.

  பதிலளிநீக்கு
 5. காலம் தான் பொன் போன்ற்து. போனால் திரும்ப வராதுதான் அதை அழகாக சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள். பாடல்கள் எல்லாமே நல்ல தெரிவு.

  பதிலளிநீக்கு
 6. நீண்ட நாட்களாகக் காத்திருந்தோம்.
  காலத்தின் அருமையை நகைச்சுவையுடன் கூறியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் நண்பரே..
  நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி..
  அதுவும் ஒரு அழகிய கருத்தோடு..
  மிகச் சரி நண்பரே..
  விட்டால் பிடிக்கமுடியாதது
  காலம் ஒன்றே...

  பதிலளிநீக்கு
 8. நேரம் குறித்து எழுத தாங்கள் நேரம் ஒதுக்கியமைக்கு நன்றி :))

  பதிலளிநீக்கு
 9. ஆண்டு, மாதம் , வாரம் ,நிமிடம் , நொடி குறித்து விளக்கிய விதம் மிகவும் அருமை . பல கருத்துக்களை சொல்லிப் போகும் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 10. நல்ல தன்னபிக்கை பதிவு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 11. ஆழமான சிந்தனையுடன் எழுதிய நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 12. ஆகா.. ரொம்ப நாள் கழித்து பதிவு போட்டாலும் நல்ல பதிவா போட்டு இருக்கீங்க!!
  வாழ்த்துகள்..

  "காலம்" பொன் போன்றது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.ஏனெனில்,

  காலம் விலைமதிக்க இயலாத அற்புதமாகும்.

  உங்களுடன் பேச விரும்பி வருபவர்களிடம் தயவு செய்து அவர்கள் பேசுவதைக் கேளுங்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியை உங்களுக்காக செலவழிக்கிறனர்.

  பதிலளிநீக்கு
 13. காலம் பொன் போன்றது,,

  கடமை கண் போன்றது...

  பதிலளிநீக்கு
 14. உண்மைதான் காலாம் மட்டும் போனால் வராது...!

  பதிலளிநீக்கு
 15. தனபாலன் அருமையான நேரப் பதிவு. அதைவிட அருமையான பாடல்கள் பதிவு. திண்டுக்கல் வந்த அனுபவம் கிடைத்தது. மிகவும் நன்றி. உங்கள் மனசாட்சியை அடிக்கடி பேச சொல்லுங்கள்.:)

  பதிலளிநீக்கு
 16. தத்துவ பாடல்கள் அனைத்துமே அருமை. இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரி மிகவும் அருமை. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல தத்துவ பாடல்கள் கேட்டதுபோல் இருந்தது....நல்ல பதிவு...

  பதிலளிநீக்கு
 17. என்னைப் பொறுத்தவரை எது போனாலும் திரும்ப வராது. காதலி போனால்கூட திரும்ப வரமாட்டாள். ஆனால் நேரம் மிகவும் முக்கியம்.

  பதிலளிநீக்கு
 18. பதிவு அருமை
  தொடர்ந்து பதிவுகளை எழுதவும்

  பதிலளிநீக்கு
 19. காலத்தின் அருமையை உணர்த்தியது தங்களின் பதிவு..

  பதிலளிநீக்கு
 20. ஒரு பதிவை எப்படி சுவாரஷ்யமாகவேண்டும் என்னும் உத்தி உங்களிடம் உண்டு . காலம் பொன்னானது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு எத்தனை விடயங்களைப் புகுத்தியுள்ளீர்கள் . அத்தனையும் தத்துவ முத்துக்கள்

  பதிலளிநீக்கு
 21. பாடல்களும் தங்கள் கருத்துக்களும் யாராலும் மாற்ற முடியாதவை....


  இந்த நிமிஷம் என்பது நமது வாழ்வின் மிக முக்கியமானது....

  பதிலளிநீக்கு
 22. அருமை! அருமை! தொடர்க பயன் மிக்க பதிவுகளை அள்ளித் தருக!

  பதிலளிநீக்கு
 23. நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள பாடல்கள் எல்லாமே எனக்கும் பிடித்த பாடல்கள்தாம். எனக்கு என்ன, நிறைய பேருக்குப் பிடித்த பாடல்கள்தானே... அதில் சிறந்த வரிகளை எடுத்துப் போட்டிருப்பது ரொம்பச் சிறப்பு. குறிப்பாக எனக்கு மிக மிகப் பிடித்த 'திருந்தாத உள்ளங்கள்'.... காலத்தின் அருமையைச் சொல்லும் அந்தத் தொகுப்பு முன்னரே படித்திருக்கிறேன். அருமை. சேமிப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய வரிகள்.

  பதிலளிநீக்கு
 24. அரசியல்வாதிகளின் ஊழல் பணமும் போனா வராது இல்லையா?

  பதிலளிநீக்கு
 25. மிக அருமையான பகிர்வு
  காலம் பொன் போன்றது.

  போனால் வராது , அருமையான எடுத்து காட்டுடன் பதிவு அருமை.

  ( என் வலை பதிவுக்கு ட்தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி)

  பதிலளிநீக்கு
 26. அருமையான பதிவு நண்பரே. கண்டிப்பாக 'போனா வராதது நேரம் தான்'. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. காலமும் உண்மையான காதலும் கூட

  பதிலளிநீக்கு
 28. காலம்பற்றிய அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 29. உண்மைதான்...காலம் யாருக்காகவும் காத்திருக்காது அது போயிட்டேதான்

  இருக்கும்..நாம்தான் பயன்படுத்திக்கணும்.ஓடு மீன் ஓட உறு மீன் உள்ளளவும் வாடி நிற்குமாம் கொக்கு.

  பதிலளிநீக்கு
 30. சரியாய் சொன்னிர்கள் நேரம் மட்டும்மே போனால் வராது இப்போ பாருங்கள் நான் கூட சரியான நேரத்திற்கு வரவில்லை...

  பதிலளிநீக்கு
 31. ஏன் உங்கள் தளத்தில் கட் அண்ட் பேஸ்ட் செய்யும் வாய்பை தடை செய்து வைத்து இருக்கீங்க. கீழே கொடுத்துள்ள மிகுதியாக தவறு செய்யும் போது............ என்ற வாசகத்தை ஒட்ட வேண்டும் போல் இருந்தது. வலைதளத்தில் எழுதுவதை விட இதில் அலங்கார வேலைகளுக்கு நிறைய நேரம் செலவழிப்பது போல தெரிகின்றதே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட் அண்ட் பேஸ்ட் - அது ப்ளாக் ஆரம்பிக்கும் போது பிளாக்கர் நண்பர் சொன்னது போல் செய்தது.

   எனது தளம் அலங்காரமாக உள்ளதா ? நன்றி ! தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார் !

   நீக்கு
 32. ஆமாம் காலம் பொன்னானது. அது அருமையாக எழுதப்பட்டுள்ளது சகோதரா. இனிய நல் வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம்
  தங்கள் வலைப் பதிவு அருமை.
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,

  பதிலளிநீக்கு
 34. மேற்கொண்டு படிக்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுகிற விதமாக எழுதுகிற அற்புதத் திறமை உங்களிடம் இருக்கிறது. படிப்பவருக்குப் பயனளிக்கும் விதமான இடுகைகள். ரசித்துப் படித்தேன்.

  பாராட்டுக்கள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 35. காலத்தின் அருமையை உணர்த்தும் பதிவு
  நன்றி!

  பதிலளிநீக்கு
 36. நல்ல பதிவு
  பாடல்கள் வேறு அருமையாக ..
  நன்றி அண்ணா
  http://www.malartharu.org/2012/12/blog-post_5854.html

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.