🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது...?

வணக்கம் நண்பர்களே! இன்று நாம் அலசப் போவது நமது எண்ணங்களை மேம்படுத்துவதற்கு அல்லது நிறைவேறுவதற்கு அல்லது வெற்றி பெறுவதற்கு, நமக்கு என்ன வேண்டும் என்பதே...


சிறு வேண்டுகோள் : நண்பர்களே! கீழே உள்ள பிளே பட்டனை இருமுறை அழுத்தவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் லோட் ஆகி விடும்.


நண்பர்களே, இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய / சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

நண்பர் 1 : ஒவ்வொருத்தரின் கடமையை உணர்ந்து செயல்பட்டாலே போதும். அதற்கு உண்டான பலன் எதிர் பார்க்க வேண்டாம், தானே கிடைக்கும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - இவை தான் என் எண்ணங்களை மேம்படுத்தும் தாரக மந்திரம்.

நண்பர் 2 : எப்போதும் நல்ல சிந்தனைகள் இருக்கனுங்க. நல்லவற்றையே காண்போம், கேட்போம், பேசுவோம் - இவை போதாதுங்களா?

நண்பர் 3 : பிறரை நம்பி நம்பி ஏமாந்து போன எனக்கு, என்னை நான் நம்புகின்றேன் ! என்னால் முடியும் என்கிற தன்னம்பிக்கை-இதை விட வேறு ஏதேனும் உண்டா ? அது தான் என் தாரக மந்திரம் !

நண்பர் 4 : நம்மால் முடியும் வரை உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அயராத கடின உழைப்பு இருந்தால், நாம் நினைக்கும் எண்ணங்கள் தானாக நிறைவேறும்.

நண்பர் 5 : என்ன நடந்தாலும் நாம் முயற்சியை மட்டும் கை விடக் கூடாது. அதே சமயம் உண்மையாகவும் இருக்க வேண்டும். உண்மையும் விடாமுயற்சியும் தான் என் தாரக மந்திரம்!

நண்பர் 6 : நல்ல ஒழுக்கம், தர்ம சிந்தனை, நேர்மை-இவை தான் என் தாரக மந்திரம்.

நண்பர் 7 : எதைக் கண்டும் பயப்படக் கூடாது. தைரியமா இருக்கணும். நம் எண்ணங்களை முதலில் தடை போடும் தயக்கம், அச்சம், இவற்றைத் தூக்கி தூரப் போடுங்க. துணிவே துணை தான் என் தாரக மந்திரம்.

நண்பர் 8 : நான் படாத அவமானங்களா? அதிலிருந்து தான், நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் : தக்க நேரத்தில், தக்க இடத்தில் சமயோசிதமாக நடந்து கொள்வது ! அதுவும் இந்தக் காலத்தில் சமயோசித புத்தி இல்லையென்றால் நீங்க காலி ! அத்துடன் எவ்வளவு உயரே சென்றாலும் பணிவு வேண்டும். ஞாபகம் இருக்கட்டும்.

நண்பர் 9 : அளவிற்கு மீறி ஆசை இருக்கக்கூடாது. போதும் என்கிற மனம் இருக்க வேண்டும். திருப்தி தாங்க என் எண்ணங்களைச் சீர்படுத்துகிறது.

நண்பர் 10 : தோல்விகள் நம்மைத் தோற்கடிக்கக் கூடாது. அதில் பெற்ற அனுபவங்கள் தாங்க நமக்கு நல்ல படிப்பினை. நம் வாழ்வில் பெற்ற தோல்விகள் மூலம் நம் எண்ணங்களை வெற்றி அடையச் செய்யலாம்.

நண்பர் 11 : கூடப் பிறந்தவர்களாலே வஞ்சிக்கப்பட்டவன் நான் ! அதில் நான் அடையாத துன்பங்கள் அளவில்லாதவை ! இருந்தாலும் சத்தியம் ஒரு நாளும் தோல்வி அடையாது. சத்தியமே என் லட்சியம் !

மேலே எனது நண்பர்கள் கூறிய அனைத்து கருத்துகளும் வேண்டும். இதில் ஏதேனும் இல்லாமல் இருக்க முடியுமா ? ஆனால், எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு தாரக மந்திரம் உள்ளது. அது என்னவென்றால்... அதற்கு முன் வழக்கமாகக் கதையோடு பதிவை முடிப்பேன். இது கதை அல்ல நிஜம் !

(1) ஆஸ்திரேலிய ஒப்பன் ஒற்றையர் சாம்பியன் பட்டம் (பிப்ரவரி 2012) வெல்வதற்காக இரண்டு வீரர்கள் ஆறு நேரம் போராடியிருக்கிறார்கள். நோவக் ஜோகோவிக் vs ரபேல் நடால். டென்னிஸ் வரலாற்றில் இதுதான் மிக நீளமான இறுதிப்போட்டி இன்றைக்கு வரை ! அரையிறுதியில் ஆண்டி முர்ரேயுடன் ஐந்து மணி நேரம் மோதி வென்ற நோவக் ஜோகோவிக், இறுதிப் போட்டியில் 353 நிமிட தாண்டவத்தின் முடிவில், சட்டையைக் கழற்றி வீசிவிட்டு, எழுப்பிய வெற்றிக் கூச்சல் சிங்கத்தின் கர்ஜனையாக எதிரொலித்தது. கால்களில் ரத்தம், உடலெங்கும் ரண வேதனை, இருந்தாலும் மனதில் வெற்றி பெற வேண்டும் என்கிற உறுதி !

(2) அடுத்து சச்சின். நூறாவது நூறு (மார்ச் 2012) "ஒரு நூறு அடிக்க ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்று சினிமா பாட்டைப் போல் இப்போது பாடிக் கொண்டியிருந்தாலும், அந்த ஒரு வருடத்தில், எத்தனை போட்டிகளில், எத்தனை தடவை, 100 அடிக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டு இருப்பார். அந்த நூறாவது நூறு அடித்தவுடன், அவரது பேட்டை சிறிது நேரம் பார்த்தாரே, அதில் ஆயிரம் அர்த்தமுண்டு. ...வாவ்... என்ன ஒரு மனவுறுதி !

நம்ம ஐயன் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் குறள் எண் 497 இல்
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.
பொருள் : செய்யவேண்டியவற்றை எல்லாம் நன்றாக ஆராய்ந்து, தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம். அப்புறம், நண்பர்களே புதிதாக...

DD Mix : (Dindigul Dhanabalan Mix)

நண்பர்களே, பல பக்கங்கள் சொல்லும் கருத்துக்களை ஒரே ஒரு பாடலில் நமது திரையுலகக் கவிஞர்கள் சொல்லி விடுவார்கள். அவ்வாறு மேலே நமது நண்பர்களிடம் அலசும் போது என் மனதில் சில பாடல்வரிகள் தோன்றின. அவற்றைத் தொகுத்து இந்தப் பதிவிற்கு ஏற்றபடி "Mix" செய்துள்ளேன். இப்போது பாடல் லோட் ஆகியிருக்கும். பிளே பட்டனை அழுத்தவும். எப்படி இருக்கு நம்ம DD Mix ?

ஆக நண்பர்களே, மேலே நண்பர்களின் பல நேர்மறை சிந்தனைகளும், சில எதிர்மறை சிந்தனைகளும் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக, நமது எண்ணங்களை மேம்படுத்துவதற்கு அல்லது நிறைவேறுவதற்கு அல்லது வெற்றி பெறுவதற்கு, நமக்குத் தேவையான தாரக மந்திரம்... என்னைப் பொறுத்தவரை...

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கை பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும், கை வசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும், தரணியிலே பெருமை வேண்டும்;
கண் திறந்திட வேண்டும், காரியத்தில் உறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும், பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும், மண் பயனுற வேண்டும்;
வானகமிங்கு தென்பட வேண்டும், உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் -
பாரதியார்

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடம் சொன்ன சித்தர்களும், ஈன்ற தாயும் பெண்மை என்று எண்ணிடாத பித்தர்களே...

© மனதில் உறுதி வேண்டும் வாலி இளையராஜா 🎤 K.J.யேசுதாஸ் @ 1987 ⟫

மன உறுதியோடு நாம் என்ன செய்ய வேண்டும் ? மேலும் சிந்திக்க வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன தேவை? என்னும் பதிவை, படிக்காதவர்கள் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நல்ல கருத்து தான்...
  ஆனால், மனதில் உறுதி மட்டும் இருந்து விட்டால் போதுமா? முயற்சி வேண்டும்!

  பதிலளிநீக்கு
 2. தாங்கள் உணர்ந்து சொல்லிய தாரக மந்திரங்கள் பிறருக்கு வழிகாட்டியாக அமையும் முதல் த.ம வாக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடல்களை துணைக்கழைத்து, நல்ல எண்ணங்களை எழுத்துகளாகத் தூவி குறளையும் எடுத்துக் காட்டி.... DD...... அசத்தறீங்க!

  பதிலளிநீக்கு
 4. இந்த 'பாடல் பிட் தொகுப்பை' தரவிறக்கம் செய்ய முடியாதோ....

  பதிலளிநீக்கு
 5. அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. மன உறுதியும் நம்பிக்கையும் விடா முயற்சியும் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. மனதில் உறுதியும், தளராத முயற்சியும், எதையும் பாஸிட்டிவாகப் பார்க்கும் பார்வையும் அவசியம் தேவைதான். அழகான பகிர்வு! மனதைத் தொட்ட பகிர்வு!

  பதிலளிநீக்கு
 8. அருமையான கருத்துக்கள். ஃபாலோ பண்றதுதான் கஷ்டமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 9. மனதில் உறுதி வேண்டும். ஆம் மனதில் உறுதி வந்துவிட்டாலே மனதில்தோன்றும் எண்ணங்களுக்கும் அந்த வலு வந்து சேர்ந்துவிடும். பிறகு வெற்றி என்பது எட்டிப் பறிக்கக்கூடிய கனிதான். மனதில் உறுதி வந்துவிட்டாலே போதும். அதன் தொடர்ச்சியாக பயிற்சி, முயற்சி அனைத்தும் சேர்ந்துவிடும். நான் சொல்வது சரிதானே திண்டுக்கல் சார்..!!!

  பதிலளிநீக்கு
 10. அன்பின் தனபாலன் - உரை நன்று - சிந்தனைகள் நன்று - பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் நன்று - சில வரிகள் பல பாடல்களில் இருந்து எடுத்து ஒரு பாடலாக ஆக்கப்பட்டு இங்கு தரப்பட்டிருக்கிறது. நன்று நன்று.

  மேலும் பல நல்ல சிந்தனைகள் எழுத்து வ்டிவிலும்.

  நல்ல் தொரு பதிவு தனபாலன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 11. அன்பின் தனபாலன் - பாரதியும் வள்ளுவனும் துணைக்கழைத்தது அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. நல்ல கருத்துக்கள்.

  அருமையான பாடல்கள்.

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான பகிர்வுகள் பயனுள்ளவை.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 14. நம்பிக்கை கொடுக்கும் பதிவு தனபாலன் சார்

  பதிலளிநீக்கு
 15. நல்லவற்றையே காண்போம் , கற்போம் ,பேசுவோம் உண்மை உணர்த்தும் வரிகள் இது போதுமே .

  பதிலளிநீக்கு
 16. பதிவில் மட்டுமில்லாது பாடலின் தேர்வும் அருமை!

  பதிலளிநீக்கு
 17. பாடல்கள்தொகுப்புடன் கூடிய பதிவு மிக மிக அருமை!

  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான பதிவு. பயனுள்ளவை மனதில் கொள்ள வேண்டியவை . பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 19. நல்ல கருத்துக்கள் அருமை அன்பரே

  பதிலளிநீக்கு
 20. பாடல்கள் தொகுப்பு அருமை...

  தங்கள் கருத்துக்களை தொடர? ம்ஹும்... முயற்சி அவசியம்

  பதிலளிநீக்கு
 21. பாடல்கள் செலைக்சன் செம சூப்பர்

  தேவையான அவசியமான ஒரு பதிவு

  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 22. உண்மையும் விட முயற்சியும் தான் என்றும் தாரக மந்திரம் சகோ

  பதிலளிநீக்கு
 23. நல்ல, அருமையான தன்னம்பிக்கை பதிவு. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 24. மின்வெட்டு காரணத்தாலும், என் கணினி வேகம் குறைந்து இருந்ததால் உங்க தளத்தில் கருத்துரை பெட்டி திறக்க மாட்டேங்குது. அதனாலதான் கருத்துரை விட முடியலை சகோ மன்னிச்சு

  பதிலளிநீக்கு
 25. நல்ல தன்னம்பிக்கை பகிர்வு.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. நண்பரே உங்கள் தளம் கல்வி தொடர்புடையது. அதனால் நீங்கள் உங்கள் தளத்தில் 10 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடலாமே!

  தேர்வு முடிவுகள் வெளியிட லிங்க் http://www.muruganandam.in/2012/05/tamilnadu-10th-results-2012-10th.html

  பதிலளிநீக்கு
 27. மன உறுதி தான் எல்லாமே..அருமையான அலசல்

  பதிலளிநீக்கு
 28. நல்வாழ்வின் நடைமுறைக்கு
  ஏற்ற பயன்மிகு யோசனைகள்!
  அருமை தனபால்!

  புலவர் சா இராமாநுசம்

  த ம ஓ 12

  பதிலளிநீக்கு
 29. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  http://blogintamil.blogspot.in/2012/06/7.html

  பதிலளிநீக்கு
 30. துணிந்து நில்,தொடர்ந்து செல்,தோல்வி கிடையாது...மன உறுதிதான் வேண்டும்.அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 31. அனைத்துமே சிறந்த பாடல்கள்தான் சார் .. உங்களின் விளக்கமும் அருமை ..

  பதிலளிநீக்கு
 32. ஆளுமைத்திறன் வளர்க்க உதவும் அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 33. மன உறுதியும் விடாமுயற்ச்சியும் நம்மை நிலைநிறுத்தும் சார்! அருமை பகிர்வு!

  பதிலளிநீக்கு
 34. அன்பு நட்பே மன்னிக்கவும்.
  மிக அருமையான பதிவு என்று சொல்ல முடியவில்லை

  காரணம்

  எத்தனை எத்தனையோ இளைஞர்கள் தன்னம்பிக்கையோடும் (மன உறுதியோடும்) விடா முயற்சியோடும், உண்மையான உழைப்போடும் போராடி, போராடி தோற்றவர்கள், தோற்றபின் தன் தோல்விக்காண காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்து மீண்டும் போராடி தோற்று, போராடி தோற்று இறுதிவரை வெற்றிக்கணியை ருசிக்காமல் மாண்டவர்கள் பலபேரை நாம் அனைவருமே குறைந்தபட்சம் ஒருவரையாவது சந்தித்திருப்போம்.

  என்னுடைய கருத்து

  99 சதவீதம் தன்னம்பிக்கை (உறுதியான மனம்), விடாமுயற்சி, உண்மையான உழைப்பு இவை அனைத்தும் இருந்தாலும் ஒரே ஒரு சதவீதமாவது இறையருள் தேவை என்பதே என் தாழ்மையான கருத்து.

  எனவே மிக அருமையான பதிவு இல்லை என்றாலும்

  நல்ல பதிவு.

  உங்களைப்பற்றிய என் தனிப்பட்ட கருத்து "உங்கள் எண்ணங்களும், சிந்தனைகளும் என்னை பிரமிக்க வைக்கிறது. என்னை பிரம்மிக்க வைத்த சிலருள் ஒருவர் நீங்கள். என்னை பிரம்மிக்க வைத்தவர்கள் இரண்டு வகையினர். முதல் வகையினர், தவறான அல்லது எதிர்மறையான அல்லது கீழ்த்தரமான சிந்தனை உடையவர்கள். இரண்டாவது வகையினர், தங்களைப்போன்று உயர்ந்த சிந்தனைகளை உடையவர்கள்."

  மிக்க நன்றிகள் நட்பே.

  பதிலளிநீக்கு
 35. இந்த பாடல் தொகுப்பு மிகவும் அருமையாக உள்ளது.ஒரு உதவி இந்த பாடலை எப்படி தரவிறக்கம் செய்வது?என்னுடைய மின்னஞ்சல் முகவரி pkbmani@gmail.com .மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 36. மேலும் என்னை சிந்திக்க உதவும் கருத்துக்கள் உள்ளன... நன்றி...

  நமது நாட்டின் எல்லையில் பணி புரிபவர்கள், கைம்பெண்கள், உடல் குறைபாடு உள்ளவர்கள், உடல் ஊனம் உள்ளவர்கள், மற்றும் பல பேர்கள்... - இவர்களுக்கெல்லாம் தாரக மந்திரம் எது...?

  உழைப்பா...? முயற்சியா...? தன்னம்பிக்கையா...? மன உறுதியா...? யோசியுங்கள்...

  பதிலளிநீக்கு
 37. வணக்கம்
  தனபால்(அண்ணா)

  மனிதனை மேம்படுத்தும் தாரக மந்திரம் எது?என்ற தலைப்பில் எழுதப்பட்ட படைப்பு மிக அருமை அதற்கான தத்துவப்படல்களும் இல்லாமைக்கு வள்ளுவரின் குறல் வரியும் பாரதியன் பாடல்களும் உங்கள் படைப்புக்கு ஒரு மகுடம் சேர்க்குது வாழ்த்துக்கள் தனபால் (அண்ணா)மிகவும் அருமையாக சொல்லி விட்டிர்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 38. ஒவ்வொருவரும் அன்றாடம் உச்சரிக்க வேண்டிய தாரக மந்திரம். அழகிய பதிவு. பாடலடிகள். இரண்டுக்கும் ஒரு பெரிய சல்யூட்

  பதிலளிநீக்கு
 39. வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 40. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!
  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

  பதிலளிநீக்கு
 41. பாடல் தொகுப்பு மனத்துக்கு இதமாக இருந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.