கனவில் வந்த காந்தி...!வணக்கம் நண்பர்களே... கண்மாயி நெறஞ்சாலும் - அதை பாடுவேன்... நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும் - அதை பாடுவேன்... புளியம் பூ பூத்தாலும் - அதை பாடுவேன்... பச்ச பனி மேலே பனி தூங்கும் - அதை பாடுவேன்... வலை நட்புகள் கேள்விகளுக்கும் பாடுவேன்... ஹா... ஹா... செவ்வானத்த பார்த்தா, சின்ன சிட்டுகள பார்த்தா, செம்மறிய பார்த்தா, சிறு சித்தெறும்ப பார்த்தா - என்னை கேட்காமலே பொங்கிவரும்... கற்பனைதான் பூத்து வரும் - பாட்டு - தமிழ் பாட்டு !© சின்னத்தம்பி வாலி இளையராஜா மனோ @ 1992 ⟫


முந்தைய பதிவு - பாடாதவர்கள் சொடுக்குக : → பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்...! ← கனவில் வந்த காந்தி...! - தொடங்கி வைத்த → கில்லர்ஜி ← அவர்களுக்கும், தொடர்பதிவிற்கு அழைத்த → கரந்தை ஜெயக்குமார் ஐயா ← அவர்களுக்கும் நன்றி... பதில்களில் உள்ள பாடல்களில் - அடர்த்தியான வரிகளில் கேள்வியும் உண்டு... சிந்தனையும் உண்டு...


1. நீ மறுபிறவியில் எங்கு பிறக்க வேண்டுமென்று நினைக்கிறாய்...?

எங்கு பிறந்தாலும் : அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே...
பசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம் - அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா...? விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் - கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா... ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி - நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா... ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் - உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா...? உன்னாலே பிறந்தேனே... // அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி... திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா... அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்... புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா... பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே - உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே... அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே... அதை நீயே தருவாயே... ⟪ © மன்னன் வாலி இளையராஜா K.J.யேசுதாஸ் @ 1992 ⟫

2. ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்து விட்டால், சிறப்பாக ஆட்சி செய்யும் திட்டம் உன்னிடம் இருக்கிறதா...?

ஒரு வேளையாக இருந்தாலும்... // ஒரு வேலையாக இருந்தாலும் : நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்...
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்... கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்... இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்... அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்... வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு (2) நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்... உன்னால் முடியும்... அட உன்னால் முடியும்... உன்னால் முடியும் தம்பி தம்பி... அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி... ⟪ © உன்னால் முடியும் தம்பி புலமைபித்தன் இளையராஜா S.P.பாலசுப்ரமணியம் @ 1988 ⟫

3. இதற்கு வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன செய்வாய்...?

ஹா... ஹா... யாதும் ஊரே யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்...
ஆடல் கலைகள் பாடும் இசைகள் - அதிலே என்ன பேதங்கள்...? காதல் கடலில் நீந்தும் சுவைகள் - அதிலே என்ன ராகங்கள்...? எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்... எல்லாம் அழகிய மாதங்கள்... என்றும் ஆடிட சுகமாய் வாழ எல்லா மக்களும் வாருங்கள்... யாதும் ஊரே யாவரும் கேளிர்... அன்பே எங்கள் உலக தத்துவம்... நண்பர் உண்டு பகைவர் இல்லை... நன்மை உண்டு தீமை இல்லை...© நினைத்தாலே இனிக்கும் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா @ 1979 ⟫

4. முதியோர்களுக்கென்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா...?

வணக்கம் : வாழ்த்து சொல்லி வாழ்கவே...
முதுமை முதுமை வயசு - அது முழுசாய் வாழ்ந்த வயசு... நண்பர் பகைவர் யார் வந்தாலும் - அன்பாய் பார்க்கும் மனசு... குடும்ப பாரம் கடந்து கடந்து - ஆசை குறைந்து வாழ்கவே... மெளனமாக இருந்து - ஞானமெல்லாம் வளர்த்து - வந்த வேலை முடித்து - இன்று வந்த தலைமுறைக்கு - வாழ்த்து சொல்லி வாழ்கவே...© பாபா வைரமுத்து A.R.ரகுமான் சங்கர் மகாதேவன் @ 2002 ⟫

5. அரசியல்வாதிகளுக்கென்று புதிய திட்டம் ஏதாவது...?

ஒன்றே ஒன்று : குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்...
இனி எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் - இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே... (2) சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்... சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்... பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி...! (இனி →) தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்... கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்... // ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) அதில் ஆய கலைகளை சீராகப் பயில்வோம்... கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட - கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்...© மலைக்கள்ளன் தஞ்சை ராமையா தாஸ் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1954 ⟫

6. மதிப்பெண்கள் தவறென மேல்நீதிமன்றங்களுக்கு போனால்...?

ஓஹோ..! : உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்...
நிழல் வேண்டும் போது மரம் ஒன்று உண்டு... பகை வந்த போது துணை ஒன்று உண்டு... (2) இருள் வந்த போது விளக்கொன்று உண்டு... எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு... உண்மை என்பது எங்கும் உள்ளது தெய்வத்தின் மொழியாகும்... நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்... புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக...? - தோழா ஏழை நமக்காக... (2) கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக...? - நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக... கேள்விகுறி போல் முதுகு வளைந்து உழைப்பது எதற்காக...? - மானம் ஒன்றே பெரிதென எண்ணி பிழைக்கும் நமக்காக... ⟪ © சந்திரோதயம் வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

7. விஞ்ஞானிகளுக்கென்று ஏதும் இருக்கிறதா...?

அவசியமாக : நாட்டுக்கு தேவை எல்லாம் - நாம் தேடலாம்...
ஏர் பூட்டி தோளில் வைத்து, இல்லாமை வீட்டில் வைத்து (2) போராடும் காலமெலாம் போனதம்மா... எல்லோர்க்கும் யாவும் உண்டு; என்றாகும் காலம் இன்று - நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா... விடியும் வேளை வரப்போகுது, தருமம் தீர்ப்பை தரப்போகுது... நியாயங்கள் சாவதில்லை - என்றும் நியாயங்கள் சாவதில்லை... // கல்விக்கு சாலை உண்டு, நூலுக்கு ஆலை உண்டு, நாட்டுக்கு தேவை எல்லாம் - நாம் தேடலாம்... தோளுக்கு வீரம் உண்டு, தோற்காத நியாயம் உண்டு, நீதிக்கு நெஞ்சம் உண்டு - நாம் வாழலாம்... சிரிக்கும் ஏழை முகம் பார்க்கலாம்... சிந்தும் கண்ணீர் தனை மாற்றலாம்... வாருங்கள் தோழர்களே... ஒன்றாய் சேருங்கள் தோழர்களே... நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே... இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே... புரட்சி மலர்களே... உழைக்கும் கரங்களே... ⟪ © உழைக்கும் கரங்கள் புலமைபித்தன் M.S.விஸ்வநாதன் K.J.யேசுதாஸ் @ 1976 ⟫

8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா...?

ஒரே வழி : உடல் உழைக்க சொல்வேன்... அதில் பிழைக்க சொல்வேன்...
சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்... ஒரு மானம் இல்லை; அதில் ஈனம் இல்லை; அவர் எப்போதும் வால் பிடிப்பார்... எதிர்காலம் வரும்; என் கடமை வரும்; இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்... பொது நீதியிலே, புது பாதையிலே, வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன்... // ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் - அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்... உடல் உழைக்க சொல்வேன்... அதில் பிழைக்க சொல்வேன்... அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்... நான் ஆணையிட்டால்... அது நடந்து விட்டால்...? ⟪ © எங்கள் வீட்டு பிள்ளை வாலி M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

9. மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது புதுமையாக...?

உடனடி தேவை : யுத்தம் இல்லாத பூமி - ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்... + தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்...
புத்தம் புது பூமி வேண்டும்... நித்தம் ஒரு வானம் வேண்டும்... தங்க மழை பெய்ய வேண்டும்... தமிழில் குயில் பாட வேண்டும்... யுத்தம் இல்லாத பூமி - ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்... மரணம் காணாத மனித இனம் - இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்... பஞ்சம் பசி போக்க வேண்டும், பாலைவனம் பூக்க வேண்டும், சாந்தி சாந்தி என்ற சங்கீதம் - சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்... போனவை அட போகட்டும், வந்தவை இனி வாழட்டும், தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்... தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்... ⟪ © திருடா திருடா வைரமுத்து A.R.ரகுமான் K.S.சித்ரா, மனோ @ 1993 ⟫

10. எல்லாமே சரியாக சொல்வதுபோல் இருக்கு, ஆனால் நீ மானிடனாக பிறந்து நிறைய பாவங்களை செய்து விட்டாய், உனக்கு மீண்டும் மானிடப்பிறவி கொடுக்க முடியாது... ஆகவே வேறு என்ன பிறவி வேண்டுமென இறைவன் கேட்டால்...?

இறக்கும் வரை தமிழுக்காக... தமிழ்கடவுள் முருகனுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அர்பணித்த... காந்திமகானின் சீறிய தொண்டராக... அன்னல் மறைந்த அதே தினத்தில் (அக்டோபர் 2) தனது ஊனுடல் நீக்கி விண்ணகம் சென்ற... ஔவையாராகவே வாழ்ந்த பத்மஸ்ரீ K.B.சுந்தராம்பாள் அவர்களின் காரைக்கால் அம்மையார் படத்திலிருந்து : பிறவாத வரம் வேண்டும்... என் பிழையாலே நான் மீண்டும் பிறந்துவிட்டால் - உன்னை என்றும் மறவாத வரம் வேண்டும்...

மனச்சாட்சி : தகவல் எல்லாம் சரி... ஏதோ ஆசை இருக்கிற மாதிரி தெரியுதே... கேள்விற்கு சரியான பதில்...? வள்ளுவரே உதவி செய்...

அதானே...?! ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை அல்லவா விரும்ப வேண்டும்...? அதை அடைய ஆசையே இல்லாத நிலை அல்லவா விரும்ப வேண்டும்...? அதிகாரம் 37 : அவா அறுத்தல்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். (362)

எனக்கினி பிறவி வேண்டாம் முருகா... எனக்கினி பிறவி வேண்டாம்... இறைவா உன் அருளால் எனக்கினி பிறவி வேண்டாம்... இறைவா உன் அருளால்... எனக்கினி இன்பம் வேண்டும்... ஈனமெல்லாம் மறைய வேண்டும் (2) எத்தனையோ பிறவி பெற்று இழைத்திடும் தீமையெல்லாம் இப்பிறவி ஒன்று பெற்று அத்தனையும் முடித்து விட்டேன்...! ⟪ © அருணகிரிநாதர் T.K.கிருஷ்ணசாமி G.ராமநாதன், T.R.பாப்பா T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫

போதுமா...! அத்தனையும் முடித்து விட்டேனா... (?)

எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அது போல் நிலவும்... (2) புதுமை உலகம் மலரும், நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும் (2) எங்கும் பாடும் தென்றல் காற்றும்-நானும் ஒன்று தானே...! இன்ப நாளும் இன்று தானே...! பாடும் போது நான் தென்றல் காற்று !© நேற்று இன்று நாளை புலமைப்பித்தன் M.S.விஸ்வநாதன் S.P.பாலசுப்ரமணியம் @ 1974 ⟫

நன்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. கேள்வி கேட்டாலும் அதற்குத் தகுந்த பாட்டைச் சொல்லி அற்புதமா பதில் சொல்லிட்டீங்க அண்ணா...வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தனிப்பாணியில் அசத்தி விட்டீர்கள். கேள்வி பதில் டிடி ஸ்டைல்!

  பதிலளிநீக்கு
 3. அருமை அருமை என்ன சொல்வது?
  கேள்வி பதில்கள் பாட்டில், பாட்டே ஜீவன், பாட்டே அனைத்தும்
  பாடல்களை கேட்டு மகிழ்கிறேன்.

  படங்கள் எல்லாம் அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பதிலும் சொன்னார் பாட்டுக்குத்தான் பாடுபட்டார் பாட்டுக்கள் பலவிதம்தான் என்று அசத்தி விட்டீர்கள். பொருத்தமான பாடல்களை எப்படித்தான் தேடிக் கண்டுபிடித்தீர்களோ?

  பதிலளிநீக்கு
 5. வழக்கம் போல உங்கள் பாணியே தனி பாணியென்று, பாட்டாலேயே பதில் சொல்லி விட்டீர்கள். (கையில் ஏற்பட்ட வலி எப்படி இருக்கிறது? முழு நலமாகி விட்டீர்களா?)

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்
  அண்ணா
  பதில் சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  த.ம5வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 7. ஆகா அற்புதம்
  ஒவ்வொரு கேள்விக்கும் பாட்டாலே பதில் அருமை
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. ஆகா பாட்டாவே பாடீட்டீங்களே ..
  அத்துணையும் அருமை .. தொடர்க

  பதிலளிநீக்கு
 9. வேட்பாளரே ஏழாவது வாக்கு எனது ...
  வேட்டி சட்டை இன்னும் வரலை

  பதிலளிநீக்கு
 10. ஆஹா அருமையான பாடல்களுடன் வழாக்கம் போல் கலக்கிட்டீங்க சார் .

  பதிலளிநீக்கு
 11. காந்திஜியின் கேள்விக்கு நீங்கள் பாடல்களிலேயே பதில் சொன்னதைக் கேட்டு காந்திஜி அசந்து போயிருப்பார் !
  பாடலில் பதிலைக் கண்டுபிடிப்பதென்பது சாதாரணக் காரியம் அல்ல ,உங்கள் இல்லறத்துணைவியார் உடல்நலம் சரியில்லாத காரணத்தால் உங்கள் மனம்,சதா ரணமாய் இருக்கும் இந்த சூழ்நிலையிலும் கூட ,எங்களுக்காக நீங்கள் நேரத்தை செலவழித்து இருப்பதற்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை !
  விரைவில் உங்கள் துணைவியார் பூரண நலம் பெறுவார் ,நீங்களும் மீண்டும் பதிவுகள் நிறைய எழுதுவீர்கள் என்று நம்புகிறேன் ...நீங்களே சொல்வது போல் ...இதுவும் கடந்து போகும் பாஸ் !
  த ம 7

  பதிலளிநீக்கு
 12. வழக்கம்போல் தங்கள் பாணியில் பாட்டாலே பதில் சொல்லி அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. கேள்வியும் சிந்தனையும் - அடர்த்தியான வரிகளில்!.. தங்களின் பாணியே தனி!.. அருமை!..

  பதிலளிநீக்கு
 14. எல்லோரும் கேள்விக்கு பதிலை மட்டும் தான் சொல்லுவார்கள். ஆனால் தங்களோ பதிலும் சொல்லி அதற்கு ஏற்ற பாட்டையும் சொல்லி, "என்னையும் பாட்டையும் பிரிக்க முடியாது" என்று புரிய வைத்துவிட்டீர்கள்.

  அனைத்து பதில்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 15. எப்பவும்போல இப்போதும் அசத்திவிட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 16. பாட்டிலே பதில்கள்...
  ஆஹா... தங்கள் பாணியே தனிதான்..
  கலக்கிட்டீங்க அண்ணா...

  பதிலளிநீக்கு
 17. எதற்கும் பாடல்கள் உண்டு உங்க கைவசம்! அருமை பாலாண்ணா.

  பதிலளிநீக்கு
 18. அது கேளீர் இல்லை.கேளிர். கேளீர் என்றால் கேளுங்கள் என்றும், கேளிர் என்றால் உறவினர் என்றும் பொருள். கேளிர் என்பதே சரி.

  பதிலளிநீக்கு
 19. ஆஹா! இதுவல்லவோ நம் டிடியின் தனிப்பாணி. பாடல்கள் கொடுத்தே கலக்கிவிட்டீர்கள் நண்பரே! அருமையான பதில்கள்!

  தேசத்தந்தையும் பாடியிருப்பாரே! ரகுபதி ராகவ ராஜா ராம் பதீத்த பாவன சீதாராம்..ஈஸ்வர அல்லா தேரே நாம் ...

  நாங்களும் எங்கள் இடுகையில் இந்தப்பாடலையும், நான் ஆணையிட்டால் பாடலையும் போட நினைத்து இறுதியில் அவசரத்தில் நிறைய விடுபட்டு விட்டது...

  மிகவும் ரசித்தோம்.....நண்பரே!

  பதிலளிநீக்கு
 20. பாட்டாலே புத்தி சொன்னால் நல்லாத்தான் இருக்கும். நானும் இதுபோல வானொலிக்கு எழுதியது என் ஞாபகத்திற்கு வருகிறது. பாடல்கள் அனைத்தும் அருமை .

  பதிலளிநீக்கு
 21. கேள்வி பிறந்தது அன்று......
  நல்ல பதில் கிடைத்தது இன்று.....

  பதிலளிநீக்கு
 22. வித்தியாசமான சிந்தனை வரிகளாவது தான் உங்களின் தனித்தன்மை சார்.. அற்புதமான பகிர்வு...

  தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேரம் இருப்பின் வந்து பார்க்கவும்..

  இணைப்பு: http://blogintamil.blogspot.com/2014/11/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 23. எப்ப வருவீங்க நா கத்துக்கிட்ட த.ம.வாக்கப் போடலாம்னு காத்திருந்தா ராத்திரி வந்து, காலையில பாத்தா எனக்கு முன்னாடி 12பேர் போட்டிருக்காங்க.. அப்ப நா 13. நல்லா இருங்க.
  (ஆமா... பதில் எல்லாம் பட்டுக்கோட்டையும், கண்ணதாசனும், வாலியும் கொஞ்சூண்டு வள்ளுவரும் சொன்னது சரீ... டிடி எங்கே? (தொகுத்தது நல்லாருக்கு, அதுக்காக எல்லாமே பாட்டுத்தான் னா எப்புடீ? அடுத்த முறையாவது சொந்தச் சரக்கை எதிர்பார்க்கிறேன்)

  பதிலளிநீக்கு
 24. அதுதானே பார்த்தேன். டிடியின் பதிவு பாட் டில்லாமல் வள்ளுவம் இல்லாமல் இருக்க முடியாதே. மிகவும்ரசித்தேன் டிடி. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. இசைக்கு மயங்காத மனம் உண்டோ? இசைப்பாட்டாலே பதில் சொன்னால் ரசிக்காமல் இருக்கமுடியுமா? என் வழி தனி வழி என்று திரைப்படப் பாடல்களாலே பதில் சொல்லி இந்தத் தொடர் பதிவை சிறக்கச் செய்துவிட்டீர்கள், தனபாலன்.
  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 26. உங்கள் பாணி தனிப்பாணி ... பாடல்கள் எப்போதும் சுகமே சார் ... பதிவுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 27. ஒவ்வொரு கேள்விக்கும் தகுந்த பாட்டு ஒன்றைப் பதிலாகத் தந்து சிறப்பித்து விட்டீர்கள். மிகவும் ரசித்தேன் உங்கள் பதில்களை.

  பதிலளிநீக்கு
 28. உங்களை மறுபடி வலைத்தளத்தில் சந்தித்ததே ஒரு ஆனந்தம். உங்கள் பதில்கள் அனைத்தும் அற்புதம். இதில் ஒரு ஆச்சரியம் கவனித்தீர்களா?

  பாட்டுக்களும் சரி பதில்களும் சரி (I mean the content) எல்லத்தலைமுறையினருக்கும் ஒத்துப்போகும்படிக்கு ஒரு wide spectral coverage இருக்கிறது.

  வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
  வேண்டாமை வேண்ட வரும்... என்பது உண்மைதான். வள்ளுவரின் வாக்கு தேவ வாக்கல்லவா?

  காந்தியை மருபடி வலம் வரச் செய்த குழுவினருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. அருமையாக பாடல் மூலமே கேள்விக்கு பதில் சொல்லி பகிர்வை சிறப்பாக்கிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு

 30. பாட்டால் பதில்கள். அனைத்தும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 31. ‘’பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்’’ இதற்க்கு நான் கொடுத்திருந்த கருத்துரையைத்தான் கொடுக்கணும் ஆனால் ? நண்பர் டி.என்.முரளிதரன் கொடுத்து விட்டார் பரவாயில்லை,
  பதிவு தாமதமானதற்க்கு காரணம் புரிந்து விட்டது நண்பரே எதிர் பார்த்தபடியே கொடுத்து விட்டீர்கள், என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. காந்திஜிக்கு பாட்டிலேயே...பதில் சொல்லி அவரை மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள்....அருமை

  தம 16

  பதிலளிநீக்கு
 33. பாட்டாலே...பதில் சொன்னார்...
  பாட்டாலே....பதிவு.. இட்டார்...
  அந்த பாட்டுக்கு என்னை..
  ஒட்டு போட வைத்தார்.

  பதிலளிநீக்கு
 34. பொதுவாக எம் மனசு தங்கம்
  ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்

  இதையும் சேர்த்திருக்கலாமே சித்தரே

  பதிலளிநீக்கு
 35. நண்பர்களே.. காலையில் எழுந்து அலுவலகம் புறப்பட்டு போகும் வழியில் சிறிய ட்ராபிக் ஜாம் வண்டி ஊர்ந்துகொண்டே போனது பொறுமை தாளாமல் எனது செல்லை திறந்தேன் வழக்கம்போல் வரைப்பூ தான் பார்த்தால் டி.டி யின் கனவில் வந்த காந்தி அறையும் குறையுமாய் படித்து விட்டேன் அலுவலக கணினியில் பணியின் பந்தப்பட்டவைகளைத் தவிற மற்ற இணைய விசயத்தில் நுளைய முடியாது (ஆல்... லாக்) ஏதாவது கருத்து போடவேண்டுமே என செல்லிலேயே Im coming after அவ்வளவுதான் முடிந்தது பணி முடிந்து அறைக்கு வந்து சாப்பிட்டு உடன் வெளியே செல்ல வேண்டிய அலுவலக வேலை. இருப்பினும் அவசரமாக மறுபடியும் சின்ன கருத்துரை போட்டு விட்டு போய் விட்டேன் பிறகு மீண்டும் மாலை வந்துதான் நிதானமாக படித்தேன் அப்ப மற்றநேரம் போதையில படிச்சியானு கேட்டுடாதீங்க இதையெல்லாம் ஏன் உழர்ற ச்சீ ஏன் எழுதுறேன் தெரியுமா ? நேற்று மாலை டி.டி. யிடம் பேசும்போது காலை 4 மணிக்கு பதிவு வெளியாகி விடுமென சொன்னார் நானும் அலாரம் வைத்து படுத்தேன் ஆனால் 6 மணிக்குதான் (வழக்கம்போல) எழுந்தேன் இந்தப்பதிவும் மிஸ்ஸாகிப்போச்சே எனது முதல் கருத்துரைக்கு சரி அடுத்துப் பார்ப்போமே...
  எங்கே போய் விடும் காலம் - அது
  என்னையும் (கருத்துரை) போடவைக்கும்.
  அந்தக்கோபத்துல தமிழ் மணத்துல கத்தியின்றி ரத்தமின்றி ஒரு குத்து.

  பதிலளிநீக்கு
 36. உண்மையில் உங்கள் கனவில் வந்த காந்தி கொடுத்துவைத்தவர். பல உதாரணங்களையும், பாடல்களையும், விளக்கங்களையும் கேட்டு அவர் அசந்து போயிருப்பார். இவ்வளவு தகவல்களையும் எவ்வாறு தாங்கள் மனதில் வைத்துள்ளீர்கள் என நினைக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது. முழுக்க முழுக்க பொருந்தும்படியான மறுமொழிகள், மிகவும் ரசிக்கும் நிலையில். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. எதைச்சொல்வது எல்லோரும் எல்லாமும் சொல்லிவிட்டார்கள்.

  அருமை அய்யா.

  பதிலளிநீக்கு
 38. கேள்வி பதில் மிக நன்றாக உள்ளது.
  இனிய வாழ்த்துகள் டிடி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு

 39. வணக்கம்!

  தமிழ்மணம் 20

  கேட்ட வினாவிற்குக் கீா்த்தியுடன் நன்காய்ந்து
  பாட்டில் படைத்தீா் பதில்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 40. கருத்துள்ள பாடல்களின் நினைவு கூறள். நீண்ட நாளைக்கு பிறகு !

  பதிலளிநீக்கு
 41. கேள்வி - பதிலா இல்லாமல்
  கேள்விக்கேற்ற பதிலாகப் பாடல்களைத் தொகுத்துத் தந்து சிந்திக்க வைக்கிறியளே!

  பதிலளிநீக்கு
 42. ஆஹா... என்ன ஒரு ஆழமான ரசனை. அழுத்தமான வரிகள். நிதானமான தேர்வு. பிரமாதம். பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 43. பயனுறு பாடல்கள் பார்த்தேன் பதிலாய்
  வியப்பும் விளைந்தது வே!

  மிக அருமையான பாடல்களுடன் நல்ல பதில்களும்!
  தொகுப்பு மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 44. அறிவு பூரணமான கேள்விகளுக்கு அர்த்தமுள்ள பாடல்கள். மிக அருமை டிடி.

  பதிலளிநீக்கு
 45. கற்பனை சிகரமே. அதிகம் பாட்டுகள் தெரியாவிட்டாலும் உங்கள் வரிகளிலிருந்து யாவற்றையும் தெரிந்து கொண்டேன். அழகான எண்ண ஓட்டமும்,பாடல்களும்,சுபாவமான சிந்தனையில் இருந்தால்தான் , எழுதமுடியும். நல்ல கருத்துக்கேற்ற பாடல்கள். சிந்தனை செய் மனமே என்ற பாடலின் வரிகள் மனதில்த் தோன்றியது. பாராட்டுகளும், நல் வாழ்த்துகளும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 46. உங்கள் ஸ்டைலில் பாட்டாலே பதில் சொல்லி அசத்தி விட்டீர்கள்! பொருத்தமான பாடல்களை தேர்ந்தெடுக்க நிறைய உழைத்திருப்பீர்கள்! ஆனால் சிறப்பான பதிவை படிக்கவைத்து உழைப்பின் பலனை அறுவடை செய்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 47. எங்கிருந்துதான் பாட்டை இப்படி ஆப்டாக ப் பிடிக்கிறீர்களோ?
  உங்கள் பாட்டிற்கு முன் பாணபத்திரன் அவனுக்கு அடிமையானதுபோல்
  வலைச்சித்தரின் வலைவிட்டு காந்தி இனி வெளியேற முடியாது போல!

  அப்பா நான் தப்பிச்சேன்.
  தம 23

  பதிலளிநீக்கு
 48. ஒ! பாட்டாவே பாடீங்களா!!! தொடக்கத்தில் ஒரு புதிர்! அப்புறம் பாட்டு !! சூப்பர் அண்ணா!

  பதிலளிநீக்கு
 49. முதல் பதிலிலே நான் சிக்கிவிட்டேன் அன்பரே மீண்டுவர வெகு நேரம் ஆகும் ... சொக்க வைத்து விட்டீர்

  பதிலளிநீக்கு
 50. பாடல் வரிகளால் பதிலிறுத்தவிதம் அருமை! ஆழ்ந்த பொருள் பொதிந்த வரிகள்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 51. அன்புள்ள அய்யா,

  கனவில் வந்த காதிக்கு... பாட்டாலே புத்தி சொன்னது மிகமிக நன்றாக இருந்தது. அனைத்துப் பாடல்களையும் மீண்டும் மீண்டும் இரசித்துப் படித்தேன். அருமை... அருமை... ! அந்தப் பாடல்களை எல்லாம் தேடிப்பிடித்துக் கொடுத்தது தங்களுத்தே உரித்தான பெருமை அய்யா....!

  எனக்கு மிகவும் பிடித்த பாடலைச் சொல்ல வேண்டுமல்லவா?
  ‘உன்னால் முடியும் தம்பி’

  இருக்கிற கோவிலை எல்லாம்
  படிக்கிற பள்ளிகள் செய்வோம்...
  அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்...
  ‘உன்னால் முடியும் தம்பி தம்பி...
  உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
  தங்களின் ஆட்சியில் எல்லோர்க்கும் யாவும் உண்டு...
  அதைக்கண்டு மகிழ...
  வாழ்த்துகள்.

  நன்றி.  பதிலளிநீக்கு
 52. அருமையான பாடல்களில் பொதிந்த பதில்கள்.

  பதிலளிநீக்கு
 53. ஆஹா இப்போதான் பார்க்கிறேன் இதை....

  இது போதும்:) அத்தனை பதில்களும் ரசிக்கும்படியா இருக்கு.

  பதிலளிநீக்கு
 54. கம்பன் வீட்டுத் தறிகூட
  கவிதை பாடும் என்பார்கள்
  கம்பன் கவியாய் தனபாலன்
  கருத்து எல்லாம் குறள்பாடும்
  எம்மாம் பெரிய கேள்விக்கும்
  எளிதாய் பாடல் பதில்சொல்லும்
  இம்மாம் பெரிய ஆற்றல்கள்
  இகத்தில் உமக்கே தனிச்சிறப்பு !

  அத்தனை கேள்விக்கும் பாடல் வரிகளே விடைகளாய்,,,நல்ல தேடல் நல்ல திறமை அருமை அருமை

  வாழ்த்துக்கள் தனபாலன் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 55. வணக்கம் சகோதரரே!

  தங்கள் கனவிலும் வந்து காந்தியடிகள் கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும், தாங்கள் பாட்டாலேயே பதில் சொன்ன விதம் மிக அருமை!

  அந்தந்த கேள்விகளுக்கு தகுந்தாற்போல் பொருத்தமான பாடல்களுடன் ௬டிய பதில்கள்.!
  இது உங்களையன்றி வேறு எவர்க்கும் சாத்தியமில்லை!
  சிறப்பாக எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 56. காந்தி கேள்விகளுக்கும் பாட்டிலேயே, அதுவும் மிக பொருத்தமான பாடலகளினால் பதில்... அசத்தல் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 57. பாடல்கள் மூலம் அருமையான பதில்கள் தந்ததற்கு இனிய பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.