🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எல்லாம் என் நேரம்...! (பகுதி 10)

நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ? (பகுதி 7) பதிவை வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி... அதன் தொடர்ச்சியாக நேரத்தைப் பற்றிய பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் !

கவிதைகளுக்கு ஏற்றது போல் ஞாபகம் வந்த பொன்மொழிகளை ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சுட்டியைக் கொண்டு சென்று ரசித்து விட்டு, (டிக்) செய்வது போல் நகர்த்தி விடவும்... இந்தப் பதிவைக் கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் வலைநுட்பத்தை அனுபவிக்கலாம்... இருந்தாலும் கைப்பேசியில் வாசிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சொடுக்கி ரசித்து விட்டு, உடனே அருகில் எங்கேனும் சொடுக்கி விட்டுத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி...
நேர மேலாண்மை
பொன்மொழி : வாக்கர் :- சரியான முடிவை எடுக்க முடியாமல் காலம் கடத்தி வருவதைவிடத் தவறான முடிவை எடுத்துச் செயல்பட ஆரம்பிப்பது நல்லது. இந்தப் பழக்கம் சரியான முடிவை எடுக்கத் தேவையான அனுபவத்தைக் கொடுக்கும்.

நேரத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு
எப்போதும் நேரம் மிச்சம் இருக்கும்.
சோம்பேறிகள் தான் நேரம் இல்லை.
என பல்லவி பாடுவார்கள்.

சரியாக / தவறாக
பொன்மொழி : சி.ஸ்.ரெயிட் :- நேரத்தைச் சரியாகவும், ஒழுக்கமாகவும் பயன்படுத்தாது நம்மை நாமே தற்கொலை செய்வதாகும்.

நேரம் என்பது தேனீயைப் போல
அதில் தேனும் உண்டு,
கொடுக்கும் உண்டு
நேரத்தை...
சரியாகப் பயன்படுத்தினால் தேன்
தவறாகப் பயன்படுத்தினால் கொடுக்கு

வெற்றி தேடி வரும்
பொன்மொழி : சாணக்கியா :- காலம் தாழ்த்தாமல் உற்சாகத்துடன் வேலையைத் துவங்குவதால் பாதி வேலை உடனே முடியும்.

சுழலும் முள்ளு,
உன் வாழ்விற்கு தில்லு !
சுழலும் வேகம்
உன் வாழ்வின் தாகம்
வட்டத்தில் சுழல்
உன் வாழ்க்கைக்குக் காட்டும்
நேரம் நேரம் நேரம் !
தலைசிறந்த அறம் !
நேரத்தை மிச்சப்படுத்து
எதிர்காலத்தை உயரப்படுத்து !
வெற்றி வெற்றி வெற்றி
உன்னைத் தேடி வரும் !

சோம்பலைத் தூக்கி எறிந்தால்...
பொன்மொழி : தாமஸ் ஆல்வா எடிசன் :- எதையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடுகின்றவர்கள் அனைவரும் வெற்றியைத் தள்ளிப் போடுகிறார்கள்.

இன்றைய இளைஞன்
நாளைய தலைவன் !
இந்திய நாட்டின் எதிர்கால வீரன்
அறிஞராய் மருத்துவராய் தொழில்புரி வல்லுநராய்
ஆவதற்கே வீடு நடை பயிலும் காளை..!
கடமை உன் கையில் !
காலம் உன் செல்வம் !
கனிவும் பண்பும் உன்னிரு கண்கள் !
சோம்பலைத் தூக்கி எறிந்தால்
வாழ்வில் சுகமான பாதை
விளக்காய்த் தோன்றும் !

தோல்வியாளர்கள்
பொன்மொழி : நெல்சன் - மூன்று மணி நேரம் முன்பு சென்றாலும் செல்லலாம், ஆனால் ஒரு நிமிடம் கூட தாமதமாக் கூடாது.

வருடம் ஒரு பூந்தோட்டம்
மாதம் ஒரு பூச்செடிகள்
வாரம் என்பது மொட்டுக்கள்
நாள் என்பது பூக்கள்
மணி என்பது வாசம்
மணி என்பது வாசம்
மணியை வீணடித்தால்
பூவின் வாசம் போய்விடும்
அது போல,
நாம் ஒரு நாழி வீணடித்தால்
நம் வெற்றி கைநழுவிப் போய்விடும்
கடிகார முட்கள்
நேரத்தை வீணடிப்பதில்லை
ஆனால், தோல்வியாளர்கள் வீணடிப்பார்கள்

வெற்றி உன் வசம்
பொன்மொழி : ஜெனரல் வெலிங்டன் :- அன்றைய பணிகளை அன்றே முடித்ததால் தான் எனக்கு வெற்றி கிடைத்தது.

கோபத்தை முறைப்படுத்தி
வீரத்தை செயல்படுத்தி
முயற்சியை சரிப்படுத்தி
உயிரின் மேலான
நேரத்தைப் பயன்படுத்தினால்
வெற்றி உன் வசப்படும்

நேரம் தவறாமல்...
பொன்மொழி : ஸ்வேட்டர் :- கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதிப்பது ஒழுக்க முறையில் உன்னத விதியாகும்.

விண்ணையும் ஆளலாம்...
மண்ணையும் ஆளலாம் !
போரில் நிற்கலாம்...
தைரியமாக நிற்கலாம் !
துணிந்து நிற்கலாம்...
துடிப்போடு நிற்கலாம் !
வளமாக வாழலாம்...
வருத்தமற்று வாழலாம் !
சிறப்பாய் இருக்கலாம்...
சிரிப்போடும் இருக்கலாம் !
காலத்தையும் வெல்லலாம்...
சரித்திரத்தையும் வெல்லலாம் !

திரும்ப வராது...!
பொன்மொழி : கத்ரினா லோன் :- நேரத்திற்காகக் காத்திருக்காதீர்கள் - ஏனெனில் நேரம் உங்களுக்காகக் காத்திருப்பதில்லை.

சொன்ன ஒரு சொல்...!
விடுபட்ட அம்பு...!
கடந்து போன நேரம்...!
இவை அனைத்தும்
திரும்ப வராது...

தங்கமான நேரம்
பொன்மொழி : நெப்போலியன் :- மனிதனின் மனம் எதையெல்லாம் சிந்தித்து நம்புகின்றதோ அதையெல்லாம் உண்மையிலேயே சாதித்துவிடும்.

காலம் என்பதொருபொன்முட்டை
அது மனிதனுக்குக் கிடைத்த
மிகப்பெரிய பொன் முட்டை...
நேரம் என்பது ஒரு பெரிய வைரம்
அதன் மதிப்பு எப்போது உயரும் ?
தங்கத்துளிகளாய் கிடைத்த மணித்துளிகள்
அது என்றும் கருகாத பனித்துளிகள்...
காலத்தை மிகச்சரியாகப் பயன்படுத்தியவன்
உயர்வான் வான்நோக்கி
அது பயன்படுத்தத் தெரியாதவன்
வீழ்வான் மண்நோக்கி

T I M E
பொன்மொழி : மகாத்மா காந்தி - ஒருவனிடம் தூக்கம் எப்போது குறையுமோ அப்போது அவன் மேதையாகிறான்.

Time will come, time will go
Time shall reap, that time has sown
Time comes slowly, time goes fast
Time will linger, time out lasts
Time sees all, time knows best
Time remembers, time never forgets
Time will hide, time will reveal
Time will open, time will seal
Time brings hope, time brings fear
Time brings distance, time draws near
Time will help, time will hinder
Time will shine, time turns to cinder
We forget about time,
Yet it's all we would know in time,
There is everything, and time will show

சுறுசுறுப்பாக எப்படி அசத்தி உள்ளார்கள்...! குழந்தைகளுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்...
பழமொழி மட்டுமல்ல... பொன்மொழி சொன்னாலும் ஆராயாமல் அனுபவிக்கணும்... சரி தானே...? நன்றி...

முதன் முதலாக நண்பருடன் சண்டை போட்ட அரட்டையை வாசிக்க மனித வாழ்வில் போனா வராதது எது ? என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி - தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. எல்லாம் எனக்கு சொன்னது மாதிரியே இருக்கு. குழந்தைகளின் படைப்பும் அதற்கு பொருத்தமான அறிஞர்களின் பொன்மொழிகளும் சூப்பர்

    பதிலளிநீக்கு
  2. It is a timely post. Everybody needs to know about the TIME MANGEMENT. The contents are to be saved as a treasure and to be followed in day today life.

    பதிலளிநீக்கு
  3. குழந்தைகளின் படைப்புகள் அனைத்தும் அருமை அதை பகிர்ந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிகச் சரியாக அறிவுக்குத் தெரிந்தும்
    மனம் படுத்தும் பாட்டில் நாம் அதிகமாக
    அனாவசியமாகச் செலவழிப்பது
    பணத்தைவிட நேரமாகத்தான் இருக்கிறது
    பயனுள்ள அருமையான பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நேரத்தைப் பற்றி விரிவாக சொன்ன விதம் நன்று, சரியாக பயன்படுத்தினால் வெற்றி நம் காலடியில் இல்லையா ? அருமை...!

    பதிலளிநீக்கு
  6. நேரத்தைப் பற்றிய ஒவ்வொரு கவிதையும் அருமை... அதுவும் கடிகார முட்கள் நேரத்தை வீணாக்குவதில்லை.. தோல்வியாளர்களே நேரத்தை வீணடிப்பார்கள் என்பது வெற்றிக்காக எப்பொழுதும் நேரத்தை வீணாக்காமல் உழைக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தை கற்றுக்கொடுக்கும் வரிகளாக அமைந்துள்ளது. பகிர்வினிற்கு நன்றி.

    வலைப்பூ, வலைத்தள வடிவமைப்புக்கு (Webdesign) என்னைத் தொடர்புகொள்ளலாம்.

    தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி: 9865076239
    மின்னஞ்சல்: palanivel.nhai@gmail.com

    பதிலளிநீக்கு
  7. நேரம் பற்றிய கருத்துக்கள் மிக அருமை. துரதிர்ஷ்டமாக நம்மில் பலர் நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம்.

    ஒவ்வொரு தலைப்புக்கும் அருகே புதுவிதமாக(மறைக்கப்பட்டு) கொடுத்துள்ள பொன்மொழிகள் அனைத்தும் அருமை. அதுவும் நெல்சன் அவர்களின் ‘மூன்று மணி நேரம் முன்னதாகக் கூட செல்லலாம். ஆனால் ஒரு நிமிடம் கூட தாமதமாக செல்லக்கூடாது’ என்ற கருத்து உண்மையில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டிய ஒன்று!

    பதிலளிநீக்கு
  8. நேரத்தை செலவழித்து நேரத்தின் அருமை பற்றி சொன்னவிதம் அருமை

    பாராட்டுகள் - வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. ஆஹா...என்ன அற்புதமாய் நேரம் பற்றி இவ்வளவு சிரத்தையாக அழகாக எடுத்துரைதுள்ளீர்கள்.அதுமட்டுமல்ல உங்களின் வலைப்பக்கம் பல புதுமைகளையும் புகுத்தி மாறுபட்டு உழைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. குழந்தைகளாகட்டும்
    பெரியவர்களாகட்டும்
    அறிவு எல்லோருக்கும் ஒன்றே
    சிலரிடம் அது வெளிப்படுகிறது
    பலரிடம் முடங்கி கிடக்கிறது
    அருமையான் பதிவு
    பாராட்டுக்கள்


    நேரத்தை வீ(நடிப்பவர்கள்)
    நம் நாட்டை நாசமாக்குகிரார்கள்.
    ஆனால் அவர்களை விட
    அவர்களை தொடர்பவர்கள்தான்
    ஏமாளிகள்.

    பதிலளிநீக்கு
  11. க்குழந்தைகளின் படைப்பாற்றல் நேரத்தைப்போல்வே அருமையானது .. பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  12. குழ்ந்தைகலின் நேர மேலாண்மை உங்களால் கௌரவிக்கப் பட்டுள்ளது.
    எனக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  13. வலைப்பூவில் எழுத்தோடு என்னவெல்லாம் ஜிமிக்கி வேலை செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இனி நீங்க தான் குருவாக இருப்பீங்க போலிருக்கு. அனைத்தையும் வேடிக்கை பார்க்கத்தான் முடியுது.

    பதிலளிநீக்கு
  14. குழந்தைகள் எழுதிய கவிதை மட்டுமல்ல அவர்கள் எழுத எடுத்த கருப்பொருளும் அருமை. பொன்மொழிகளையும் இட்டு அதை மேலும் அழகு படுத்தியிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  15. நேர மேலாண்மை குறித்த சிறப்பான பதிவு... பொன்மொழிகளும் நல்ல தேர்வு சார்..

    பதிலளிநீக்கு
  16. அருமையான தொகுப்பு ! நேரத்தை பற்றியும் அதன் பெருமையை பற்றியும் அவ்வளவு அழகாக எழுதி இருக்கிறீர்கள்..... சில நேரங்களில் நான் கூட நினைப்பதுண்டு, அது எப்படி எல்லா பதிவுகளையும் படித்து, உற்சாகபடுதமுடிகிறது என்று........ பொன்னான நேரங்கள் அவை !

    பதிலளிநீக்கு
  17. நேரத்தின் அருமையை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  18. நேரம் பற்றிய பதிவு மகிழ்ச்சியை தருகிறது அனைவரும் பின்பற்றினால் இன்புற்று இருப்பார்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  19. நேரம் பற்றிய அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. நேரம் பற்றிய அழகான பொன் மொழிகள்... பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  21. குழந்தைகளின் படைப்பாற்றல் அருமை. நேரம் [காலம்] கண் போன்றது. மிகச் சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. அப்பப்பா என்ன ஓரு தொழில் நுட்பம். கருத்துகள் வந்த விதம்.
    நேரம் பற்றி மிக நல்ல கருத்துகள்.எல்லோருக்கும் வாழ்த்து.
    நேரம் பற்றி நானும் முன்பு எழுதியது இன்னும் போடவில்லை. எப்போது போடுவேனோ தெரியவில்லை. தேடிப் பிடித்துப் போடுவேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. இம்முறை எண்கள் இல்லையே எங்கு சொடுக்க சொல்வீர்கள் என்று யோசித்தேன்... பொன் மொழிகள் மிகவும் அருமை....

    பதிலளிநீக்கு

  24. நேரத்தின் இன்றியமையாமைப் பற்றிய தெளிவானப் பதிவு...(10)

    பதிலளிநீக்கு
  25. நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வாழ்வின் முன்னேற்றதிற்கு உதவும் . நேரம் உபயோகிப்பவர்களின் மனதில் அடக்கம் .நல்ல நேரம் கெட்ட நேரம் என்பது கிடையாது . நேரத்தை நல்ல வழியில் செயல்படுத்த அனைவரும் பலனடைவர். நீங்கள் உங்கள் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வது உயர்வாக உள்ளது .வாழ்த்துகள் .

    நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான், "ஆதமின் மகன் (மனிதன்) காலத்தை ஏசுகிறான்; நானே காலம் (படைத்தவன்) என் கையில்தான் இரவு பகல் (இயக்கம்) உள்ளது." அறிவிப்பவர்: அபு ஹுரைரா(ரலி); நூல்: புகாரி(6181)

    . முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.

    நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். 1043

    பதிலளிநீக்கு

  26. பழமொழி மட்டுமல்ல பொன் மொழி சொன்னாலும் ஆராயாமல் அனுபவிக்கணும். சரிதான்....!

    பதிலளிநீக்கு
  27. மாணவர்களின் ஆக்கங்கள், பொன்மொழிகள் அனைத்தும் மிகமிக அருமை.நன்றி,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. நேரத்தின் மதிப்பைக் கூறிய கருத்து
    காலத்தில் கவனிக்க வேண்டிய கணிப்பு!

    மிக்கமிக்க சிறப்பான பதிவும் பகிர்வும்!
    வாழ்த்துக்கள் தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  29. நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழித்து விட்டு - நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்.
    சிலர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்.
    விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்.
    குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார்.
    - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

    பதிலளிநீக்கு
  30. இலை மறைவில் இருந்து - இனிக்கும் கனியினைப் போல நல்ல செய்திகள் ஒளிர்கின்றன!.நிறைவான பதிவு. நன்றி!

    பதிலளிநீக்கு
  31. நல்ல.. நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்...நேரம் உங்களுக்காக காத்திருப்பதில்லை
    அந்த கடிகாரம் இதையே சுட்டிக்காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    நேரத்தைப்பற்றிய அறிவுரை மிக அருமையாக உள்ளது உண்மையில் நேரத்தை உதாசினப்படுத்துபவன் நீங்கள் கூறிய அத்தனையும் இழக்க நேர்இடும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  33. “மனித மனம் எதையெல்லாம் நம்புகிறதோ அதை சாதித்துவிடும்”
    முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. பகிர்விற்கு நன்றி ! வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  35. அசத்தலான தொகுப்பு...

    வாழ்த்துக்கள் தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  36. நேரத்தோடு இணங்கி போக வேண்டும் அப்போதுதான் நல்லவை தீயவைகளை சகித்துக்கொள்ள முடியும்...

    நேரத்தை வீணடிப்பவர்களுக்கு வாழ்க்கை நரகம்தான்...

    அழகிய நல்லதொரு தொகுப்பு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  37. பெயர் தெரியாத அந்தக் குழந்தைகளின் கவிதைகளும் பெயர் பெற்றவர்களின் பொன்மொழிகளும் தங்கள் பொன்னான நேரத்தை கூறு போட்டு எங்களின் நேர மேலாண்மையை மேன்மையடையச் செய்தது பாலண்ணா.

    பதிலளிநீக்கு
  38. நேரம் ...நேரம் ...நேரம் ...இது போனால் வராது மட்டும் அல்ல
    இப்போது போவதும் தெரிய மாட்டேன் என்கிறதே .முதலில் 24 மணி நேரம் என் பதை மாற்றி 64 என்று போட வேண்டும் .இப்படி அருமையான தகவல்களைப் படிப்பதற்கு இடமளிக்காமல் இருப்பதும் நேரம் தானே சகோதரா ?மிக்க நன்றி சிறப்பான பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  39. எல்லாம் அருமை...
    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. பகிர்விற்கு நன்றி

    தங்கத்தை சேமிப்பவர்களுக்கும், இத்தகவல்களை மனதில் நிறுத்தி செயல்படுபவர்களுக்கும் கட்டாயம் லாபம் உண்டு.

    பதிலளிநீக்கு
  41. குழந்தைகள் எழுதியிருக்கும் ஒவ்வொரு வரியும் பொன், முத்து, வைரம்!
    உங்களது பொன்மொழி மிகப் பொருத்தம். கணணி தொழில்நுட்பத்தில் அசத்துகிறீர்கள்!

    குழந்தைகளுக்கு நல்லாசிகள். அவர்களது திறமையை வெளிக் கொணரும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு!

    பதிலளிநீக்கு
  42. குழந்தைகளின் படைப்பாற்றல் வியக்க வைக்கிறது!!. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சும்மாவா சொன்னார்கள்!!!. நேரத்தின் மாண்பையும் அருமையையும் விளக்கும் அற்புதமான பதிவு. நேரத்தின் அருமை குறித்த பொன்மொழிகள் மனதில் நிறுத்திப் போற்றிப் பாதுகாக்க, பின்பற்ற வேண்டியவை. பகிர்விற்கு நெஞ்சார்ந்த நன்றி. குழந்தைகளுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!.

    பதிலளிநீக்கு
  43. நேரத்தின் பெருமை பற்றிச் சொன்னவை அனைத்துமே அருமை....

    த.ம. 17

    பதிலளிநீக்கு
  44. அண்ணே...மொக்கை ஏதும் இல்லையா....???
    கும்மி அடிக்குற மாதிரி.....

    பதிலளிநீக்கு
  45. நேரத்தின்
    பெருமையினை
    நன்கு உரைத்தீர்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  46. நேரம் பற்றிய மாணவச்செல்வங்களின் தொகுப்பு அருமை பகிர்ந்தமைக்கு நன்றிகள் சார்!

    பதிலளிநீக்கு
  47. உள் தலைப்பின் மீது அம்பு முனை பட்டால் பொன்மொழி பளிச்சிடுகிறது!

    ரொம்பவே கணினி நுட்பம் தெரிந்தவர் நீங்கள்!!

    பதிலளிநீக்கு
  48. குழந்தைகளின் படைப்பாற்றலும், அதற்கேற்ற உங்கள் பொன்மொழி தேர்வும் மிக அருமை.
    காலம் கண் போன்றது உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  49. மாணவர்களின் படைப்பு அருமை என்றால் ..பதிவில் அழகா பொன் மொழிகளை ஹைலைட் செய்து காண்பித்ததுமிக மிக அருமை .....திரும்ப வராது தலைப்பில் உள்ளது அவ்வளவும் நூற்றுக்கு நூறு உண்மை .
    Angelin.

    பதிலளிநீக்கு
  50. அனைவருக்கும் பயன்படும்
    அருமையான பதிவு. நன்றி தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  51. ரசித்தேன். இந்த இளம் வயதில் நேரத்தின் அருமையை உணர்ந்த இளம் உள்ளங்கள் நன்கு வளர்வார்கள்.

    பதிலளிநீக்கு
  52. உங்கள் நல்வார்த்தைகளைப் படிக்கும் நேரம் நன்னேரம்.
    கருத்தில் இருத்திக் கொள்ளும்படி எழுதிருக்கிறீர்கள் தனபாலம். மிகவும் நன்றி,.

    பதிலளிநீக்கு
  53. குழந்தைகளின் படைப்புகளும் அதற்கு தகுந்த பொன்மொழிகளையும் சரியாக இணைத்து தந்தமைக்கு நன்றிங்க. குழந்தைகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கவும்.

    பதிலளிநீக்கு
  54. நேரத்தைப் பற்றி மிகப் பிரமாதமாகச் சொல்லியிருக்கிறார்கள் குழந்தைகள். நான்தான் லேட்! கீழே குறிப்பைப் பார்க்காமல் இங்கங்கு கர்சரை வைத்துத் தேடிப்பார்த்தேன். ஆனாலும் கீழே குறிப்புப் படித்தவுடன்தான் தெரிந்தது பொன்மொழிகள் இருக்குமிடம்!

    பதிலளிநீக்கு
  55. அனைத்தும் அருமை என்றாலும் 'சரியாக தவறாக' மிகவும் பிடித்தது. நீங்கள் சொல்லியிருக்கும் பொன்மொழிகள் அருமை. நன்றி

    பதிலளிநீக்கு
  56. நேரம் பற்றிய தொகுப்பு அருமை நண்பரே ! வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  57. அருமை என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிட முடியாது..ஒவ்வொன்றும் ஆயிரம் கருத்துகளை சொல்கின்றன..மழலை சொல் இனிது...வாழ்துகள்

    பதிலளிநீக்கு
  58. அருமையான தொகுப்பு ! வாழ்துகள்..

    பதிலளிநீக்கு
  59. நேரமேலாண்மை பற்றியும் நேரத்தின் மகத்துவம் பற்றியும் பாடமெடுத்தப் பள்ளிக்குழந்தைகளுக்கு அன்பான நன்றியும் பாராட்டுகளும். பெரியவர்களே இவற்றில் திணறும்போது பிள்ளைகள் அழகாய் நேரத்தின் பெருமையை அறிந்துவைத்திருப்பது வரவேற்கவேண்டிய விஷயம். பகிர்வுக்கு மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  60. ஒரு நொடி தவறவிட அந்த நாளில் எதையோ இழந்திருப்போம்.காலம் பொன்னானது.அருமையான தொகுப்பு.வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  61. காலத்தைக் கடத்தினால் நாமும் காலமானவர் பட்டியலில் சேரவேண்டியதுதான். நேரத்தின் அருமையை உணர்த்தியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு

  62. வணக்கம்!

    எல்லாம் என்றன் நன்னேரம்!
    இந்தப் பதிவைக் கண்ணுற்றேன்!
    சொல்லா இவைகள்! பொன்மொழிகள்
    சுடரும் பேழை என்றுரைப்பேன்!
    கல்லாய் இருந்தால் வருங்காலம்
    கசக்கும்! நன்றே உணா்ந்திங்கு
    முள்ளாய்ச் சுழன்று செயற்படுக!
    முன்னே வெற்றி மலா்துாவும்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  63. காலம் பொன்னானது மட்டுமல்ல. நேரமும் பொன்போன்றதே/

    பதிலளிநீக்கு
  64. காலம் பொன் போன்றது. அதனால் காலத்தே கடமையைச் செய்யுங்கள் என்று சொல்லிட்டீங்க. முயற்சி செய்கிறோம். செய்துகொண்டே இருக்கிறோம். ஒருநாள் நேரமேலாண்மை கைவராமலா போயிடும் :)

    பதிலளிநீக்கு
  65. நேர மேலாண்மை படித்தபோது வெட்கப்படுகிறேன்... எத்தனை முறை நானே இப்படி சொல்லி இருந்திருப்பேன்.. நேரமில்லை நேரமில்லை என்று... ஆமாம் உண்மையே சோம்பேறிகள் தான் நேரமில்லை என்று சொல்வார்கள்...


    நேரத்தை சரியாக பயன்படுத்தி நம் வேலைகளை செய்வதும்… தவறாக உபயோகப்படுத்திக்கொண்டு நமக்கே பாதகம் ஏற்படுத்திக்கொள்ளாமல் இருப்பதும் நம் கையில் தான் இருக்கிறது.. உண்மையே..


    சோம்பலை சரி செய்தால் ஏற்படக்கூடிய அத்தனை நல்ல விஷயங்களை மிக அற்புதமா சொல்லி இருக்கீங்க…. நாளை நாம் என்னவாக நினைக்கிறோமோ அதற்கான முயற்சியும் திட்டமிடுதலும் மட்டும் போதாது… சோம்பலின்றி பாடுபடவேண்டும்.. நேரம் பார்க்காமல் சிந்தித்து செயல்படவேண்டும்..


    காலம் இருக்கும்போதே நாம் செய்ய நினைத்ததை… செய்து முடித்துவிட வேண்டும்.. யார் அறிவார்.. இதற்கான வாய்ப்பை நாம் திரும்ப பெற முடியுமோ இல்லையோ… காலத்தை பொன் போன்றது என்றச்சொல் போய் இப்போது நாளுக்கு நாள் பெருகும் விலையைப்போன்று வைரத்தை எப்படி சாமான்ய மக்களால் வாங்க இயலாதோ அதுப்போன்று காலத்தை மிகச்சரியாக இதை உதாரணப்படுத்தி சொன்னது மிகச்சிறப்பு…


    கோபத்தில் உதிர்க்கும் சொல்லும் மண்ணில் சிந்திய அன்னத்தையும் திரும்பப்பெறவோ பயன்படுத்தவோ இயலாது… அதுப்போன்றே நேரமும்.. அதை சரியான விதத்தில் சரியான தருணத்தில் சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றிப்பெறுவது நம் கையில் தான் இருக்கிறது…


    நேரத்தை சரியாக பயன்படுத்தினால் ஏற்படக்கூடிய அத்தனையும் மிக அற்புதமாக வகைப்படுத்தி இருக்கீங்கப்பா… வெற்றியின் சிகரம் தொடலாம்… அடைந்த வெற்றியை விடாமல் தொடரலாம்… பிறருக்கு வழிக்காட்டியாக இருக்கலாம்… நாம் மண்ணில் இருந்து மறைந்தாலும் நம் செயலை சரித்திரம் பேசும்படி செய்யலாம்… எப்படி நேரத்தை சரியாக பயன்படுத்தி நாம் திட்டமிடும் செயல்கள்.. திட்டமிட்டப்படி நாம் செய்யும் செயல்கள்… திட்டமிட்டவை எல்லாம் எப்படி பாடுபட்டு முயற்சியுடன் வெற்றியை அடைந்தோம் என்று மிக அற்புதமாய் சொல்லி இருக்கீங்க..


    தோல்விக்கூட சோம்பலுடன் இருந்து பெற்றதை சரித்திரம் இகழ்பவரின் கல்வெட்டுகளில் பதித்து உமிழும்… முயற்சியில் தோற்றாலும் வெற்றியின் படிகளின் எண்ணிக்கை குறைகிறது நம் முயற்சியால் என்ற நம்பிக்கையில் இன்னும் பாடுபடுவோம் நேரத்தை பார்த்துப்பார்த்து செலவழிப்போம்… வெற்றியின் இலக்கு இதோ இன்னும் கொஞ்ச தூரம் தான் என்று உத்வேகத்துடன் பாடுபடுவோம்..


    நேரத்தின் பயனை பொன்னான வரிகளால் செதுக்கியது மிக மிக அற்புதம் தனபால் சார்… அன்பு நன்றிகள் பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
  66. மனதை ஒருமைப் படுத்தும் வித்தையைக் கற்றுக் கொண்டால் நேரத்தை சரியான வழியில் கொண்டு செல்ல உதவும்.அருமையான பொன்மொழிகள்

    பதிலளிநீக்கு
  67. உங்கள் பக்கத்தை இன்று தான் படிக்க முடிந்தது. எதற்கும் நேரம் வர வேண்டும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  68. தமிழ் தொழில்நுட்ப உலகில் புதியதோர் புரட்சி...!

    இணையத்தில் பரவிக்கிடக்கும் தொழில்நுட்பம், அறிவியல் சார்ந்த தமிழ் பதிவுகளை உடனுக்குடன் தானியங்கி முறையில் திரட்டும் வகையில் இப்போது "நுட்பம் திரட்டி" உருவாக்கப்பட்டுள்ளது.

    உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் அறிமுகம் செய்து "நுட்பம் திரட்டி" -யின் வளர்ச்சிக்கு உதவுங்கள்...!

    இன்றே விஜயம் செய்யுங்கள்...!

    நுட்பம் திரட்டி

    உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம். தெரிவிக்க நுட்பம் திரட்டியின் about பக்கத்தை பார்வையிடவும்.

    பதிலளிநீக்கு
  69. கைக்கெட்டிய நேரம்
    கைநழுவிப் போனபின்
    சிந்தித்து என்ன பயன்?
    திண்டுக்கல் தனபாலன் பதிவில்
    எண்ணிக்கொள்ள ஏராளம் இருக்கே...
    படித்துச் சிந்திப்போம்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.