🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே...

வணக்கம் நண்பர்களே... கணினியில் முதல் அனுபவம் - தொடர் பதிவு எழுத அழைத்த மின்னல் வரிகள் திரு.பாலகணேஷ் அவர்களுக்கு நன்றி...

அங்கங்கே பாடலை ரசிக்க பா என்பதற்கு மேலே சுட்டியை கொண்டு சென்று ரசித்து விட்டு, (டிக்) செய்வது போல் நகர்த்தி விடவும்... இந்தப் பதிவை கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் வலைநுட்பத்தை அனுபவிக்கலாம்... இருந்தாலும் கைப்பேசியில் வாசிப்பவர்கள், பா என்பதன் மேல் சொடுக்கிப் பாடி விட்டு, உடனே அருகில் எங்கேனும் சொடுக்கி விட்டுத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி... இனிய நினைவுகளோடு இதோ ⟶ பா 1
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... நீ இல்லாமல் நானும் நானல்ல... (படம் : இதயகமலம்)


அப்போது Madras - Binny Limited, B&C Mills ⟶ பா x>
பின்னி மில் - அனைத்து வித "பெருமைகளும்" கொண்ட 250 ஆண்டு வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்வது கடினம்... தென்னிந்தியாவின் முதல் தொழிற்சங்கம், சுமார் 14,000 தொழிலாளர்கள், பல உண்மையான போராட்டங்களைப் பார்த்தது, இன்று படப்பிடிப்புகளுக்காக அரங்கேறும் சண்டைக் காட்சிகளைப் பார்த்தபடி... சென்னை வரலாற்றின் மௌன சாட்சியாக...! உலகத்தில் எந்த நிறுவனத்திலும் வேலை வாங்க முடியுமென்று எனக்கு நம்பிக்கை தந்த பிரமாண்ட நிறுவனம்... முதல் கணினி கண்டது உட்பட "வேலைக்கு வாங்க" என்று பல பாடல்களிலிருந்து ஒரு பாடல் தொகுப்பைத் தொகுக்க (90min.) AVM ஸ்டுடியோ உட்படப் பல இடங்களுக்குச் சென்ற சந்தோசமான 1 வருடமும் உண்டு...!!!


முதலில் சேர்ந்தது Production Department - கணினி பற்றி மனதில் ! ⟶ பா 2
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...! மனம் தாளாமல் துடித்திடும் ஓசை...! (படம் : என்னடி மீனாட்சி)


ஒரு நாள் புதிதாகச் சேர்ந்த 4 பேர்கள் Mill Manager அறையில் - திரு. ஜம்புலிங்கம் அவர்கள் ⟶ பா x
அற்புத மனிதர்... - பஞ்சை கையில் சோதனை செய்து அதன் properties மட்டுமல்லாமல் நூலின் தரம் உட்பட, நெய்யப்படும் துணி இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும், ஆர்வத்தால் அனுபவத்தால் உயர்ந்த மேதை...! Testing Instruments-களில் சோதனை செய்தால் 99.99% correct...!!! எனது வாழ்வை மாற்றிய முதல் வழிகாட்டி...!


என்னை ஜம்ப் செய்து - Testing Department (Fibre & Yarn) - அங்கே ஒரு பெரிய பெட்டி (CPU) + பச்சை எழுத்துகளுடன் T.V. (!) + Epson Printer ⟶ பா 3
காதலிக்கும் ஆசை இல்லை - கண்கள் உன்னைக் காணும் வரை... உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்...! கணினி கற்றுக் கொள்ள... ஹிஹி... (படம் : செல்லமே)


ஏகப்பட்ட எழுதும் வேலை - தீர்வு திரு. ஜம்புலிங்கம் : "இதோ கணினி, உன்னால் ஜமாய்க்க முடியும்" - அடுத்து Vice President (Marketing) திரு. TKV அவர்கள் : "முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே..." உற்சாகம் தளரும் போது, ஊக்கத்தின் பீனிக்ஸ் பறவை...! ⟶ பா 4
சத்தியத்தை நாடு, சாதனையைத் தேடு... வெற்றி செய்யும் அதைப் பாடு...! கத்தும் கடல் கண்ணயர ஓய்வு கேட்குமா..? அந்த காட்சியைக் கண்ட போதிலே... மனம் கண்கள் தூங்குமா...? நெஞ்சே உன் ஆசை என்ன...? நீ நினைத்தால் ஆகாததென்ன...? இந்த பூமி அந்த வானம்... இடி மின்னலை தாங்குவதென்ன...? (படம் : நான் போட்ட சவால்)


சவால் = அவ்வப்போது பெட்டியைத் தட்டிக் கொண்டே இருக்க வேண்டும் !!! அதற்கும் மூளை இல்லை...! (Hard Disk) 5½ Floppy தான்... Lotus 123 : முதலில் தயாரித்தது மில்லின் உற்பத்தி பற்றிய (Spinning to Weaving) Daily statement - ஆகா! முதல் பதிவை Blog preview-வில் பார்த்த சந்தோசம், அன்று பேப்பரில்.! Backup எடுக்காததால் சோதனை வேதனை தனிக்கதை...! ⟶ பா 5
முதல் Statement தூள் ← படமும் → ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது… ஆசை தீரும் காலம் எப்பொழுது…?


ஆசை மேலதிகாரிகளுக்கெல்லாம்...! எல்லாவற்றையும் கணினி மயமாக்க வேண்டுமென்று...! Lotus 123 புத்தகங்களை வாங்கி, அதில் உள்ளபடி செய்ய, கணினி மேலும் சொல்லிக் கொடுத்தது... Worksheet, Range, Copy, Move, File, Print, Graph, Data, System, Quit - Main commands தவிர ஒவ்வொரு sub commands-யையும் விடவில்லை என்று சொல்வதை விட, Total Error messages 69 யும் எப்படி வரும்...? எந்த command-யை உபயோகித்தால் வரும்...? Error வந்தால் தான் வாழ்க்கையிலும் சிலது புரிகிறது...? ...ம்... தூக்கம் போனது - பச்சை திரையால் இரவில் கண்ணீர் தானாக வரும்...! ஒரு நாள் தாமதமாகச் சென்றதால் கடைசி பெஞ்ச் - AMIE Evening Course - Board-ல் எழுத்துக்கள் பட்டை அடித்தது போல் - கண்கள் பணால் - தீவிர ஆர்வத்திற்குப் பரிசு...! ⟶ பா 6
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்... நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்... நேற்று வந்த நினைவினிலே நெஞ்சம் இழந்தேன்... நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன்... (படம் : மணப் பந்தல்)


சில வருடங்கள் கழித்து Chief Executive அறையில் அவசரமாக ஒரு மில்லுக்கு வேண்டிய Project Plan போடச் சொல்ல - ஒவ்வொரு மெசினின் Production calculation கணினிக்குத் தாரை வார்த்து கொடுத்து விட்டதால் - திணறினேன் - நைசாக நழுவி - 5½ Floppy "நானா மூளை இல்லாதவன்" என சிரிக்க - Printed program பேப்பரை பார்த்து பிட் அடித்துத் தப்பித்தேன்...! ⟶ பா 7
கறைகள் அண்டாத, காற்றும் தீண்டாத, மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்...? உடலும் அல்லாத உருவம் கொள்ளாத, கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்... கண்கள் இருந்தால்... உன் கண்கள் இருந்தால்... என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென... சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்... என்னைத் தள்ளி விட்டுத் தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...! (படம் : சுப்ரமணியபுரம்)


அன்று கல்லூரியில் முக்கி முக்கிப் படித்தது சில வருடங்களிலே மறக்கடித்து விட்டது கணினி... விக்கி wiki (pedia-க்கும்) சிந்திக்கும் இன்றைய குழந்தைகளின் நிலை...?

"டூ வீலர் வாங்கினதற்குப் பதில் Aptech-ல் DCA முடித்து சர்டிபிகேட் வாங்கு... என்றைக்கும் உதவும்" அறிவுரை by மில் மேனேஜர்...! முடியவில்லை, AMIE தேர்வையும்... →திவா கி திவா...!←

இனிய அன்பரின் வசதிக்கேற்ப 5 Departments-களிலும் அடிக்கடி மாற்றம்...! நல்ல அனுபவம்...!!! →வாங்க பழகலாம்...!←

1992 - மில் மூடல் - கணினி நிபுணர் 45 பேருக்கு Computer Training - Basic, dbase & Foxbase - தேறின நால்வரில் அடியேனும் - கணினி முட்டாள் பெட்டி உட்பட Logic யாருக்கும் சொல்லிக் கொடுக்க முடியாது என்று புரிய வைத்தவர் - தினமும் டெஸ்ட் - Entry 2 digit number, Find Lowest or Biggest - இதோ போல் 3,4,5 digits & மற்றும் பல...! - குறைவான வரிகளில் செயல்படும்படி program எழுதிக் கொடுத்தால் மட்டுமே குறைவாகச் சிரிப்பார்... Foxbase போல Lotus-ல் முயன்ற போது கற்றுக் கொண்டது தான் Macro... "நிர்வாகம் முடிவு செய்த Promotion மற்றும் Increment முடிந்தால் பாருங்கள்" என்று அவர் விளையாட்டாகச் சவால் விட, அடுத்த நாள் நானும் நண்பரும் அதை Print எடுத்துக் காண்பிக்க, வந்ததே கோபம் சந்தோசமாக...! சவால் அதன் பிறகு இல்லை...! ⟶ பா 8
உறக்கமில்லாமல், அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்...! இரக்கமில்லாமல், என்னை நீ வாட்டலாமோ நாளும்...? வாடைக்காலமும், நீ வந்தால் வசந்தம் ஆகலாம்...! கொதித்திருக்கும் கோடைக் காலமும், நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்...! என்னாளும் தனிமையே, எனது நிலைமையோ...? தென்றல் கவிதையோ...? கதையோ...? இரு கண்ணும், என் நெஞ்சும்... இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ...? ஓ... (படம்: நானே ராஜா நானே மந்திரி)


மில் திறக்க - இப்போது ஆட்குறைப்பு எனது துறையில் உள்ளவர்களுக்கு Lotus & Wordstar சொல்லிக் கொடுக்க வேண்டும் - கணினிக்குக் குழந்தைகள் - வயது 45-50 - இன்று வீட்டில் குழந்தைகளுக்கு, கணினியும் கணக்கும் முழுதாக சொல்லிக் கொடுத்தால் நாம் முட்டாள்கள் என்று உணர வைத்தவர்கள்... தஞ்சாவூர் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட வேண்டிய சந்தேகங்களையும் தீர்த்து வைத்து, பொறுமையையும், கற்றுத்தரும் கலையையும் எனக்கு கற்றுத் தந்தவர்கள்... ⟶ பா 9
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும்... உன் கூடத்தான் பூமியே திரண்டு வரும்... உன் பாதையில் ஆயிரம் விருப்பம் வரும்... நில்லாமலே ஓடிடு இலக்கு வரும்... வானம் மேலே ஏ பூமி கீழே... வாசலில் நாங்கள் நடுவிலே... தோளின் மேலே ஏ வானம் இல்லை... துணிந்தவன் நடப்பான் கடலிலே... திரும்பி பாரு தினம் தினம்... இருக்கு நூறு சுகம் சுகம்... (படம் : ஆதவன்)


நாம் சென்றால் தான் வேலை நடக்க வேண்டும் / முடியும் என்ற நினைப்பைக் குப்பைத் தொட்டியில் போட வைத்தவர்கள்...!! எல்லா வேலைகளையும் எல்லோருக்கும் கற்றுக் கொடுத்தால் மட்டுமே, நாம் வீட்டில் நிம்மதியாக இருக்கவும் / தூங்கவும் வைத்தவர்கள்...!!! மில் வாழ்க்கை முடிந்து 20 ஆண்டுகளுக்குப் பின், மில்களுக்கு ISO சான்றிதழ் வாங்கி தரும் போது, Mouse உட்படப் பல இத்யாதிகள் உள்ளதென்று தெரியுமென்பது வேறு கதை...! ⟶ பா 10
உன் பெயரே தெரியாது... உன்னை கூப்பிட முடியாது... நான் உனக்கோர் பெயர் வைத்தேன்... உனக்கே தெரியாது... அந்த பேரை அறியாது, அட யாரும் இங்கேது...? அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது...! அட தினந்தோறும் அதைச் சொல்லி உன்னைக் கொஞ்சுவேன்... நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்... (படம் : எங்கேயும் எப்போதும்) கணினியையும்...! ஹிஹி...


இதயக்கமலத்தின் பாடலின் ஆரம்பித்தது 'என்றும் அன்புடன்' என்று முடியக்கூடாது...! ⟶ பா 11
துள்ளும் அலையென அலைந்தேன்... நெஞ்சில் கனவினை சுமந்தேன்... வாழ்க்கை பயணத்தைத் தொடர்ந்தேன்... வானம் எல்லை என நடந்தேன்... கணினி வேள்விதனில் விழுந்தேன்... கேள்விக்குறி என வளைந்தேன்... உன்னை நினைத்து இங்குச் சிரித்தேன்... உண்மை கதையினை மறைத்தேன்... பதில் சொல்லிட நினைத்தேன்... சொல்ல மொழியின்றி தவித்தேன்... வாழ்கின்ற வாழ்வெல்லாம்.. நீர் குமிழ் போன்றது நண்பர்களே... துள்ளித் திரிந்ததொரு காலம்... பள்ளி பயின்றதொரு காலம்... (படம் : என்றும் அன்புடன்)


கணினியின் முதல் அனுபவம் கிட்டத்தட்டப் பலரும் எழுதியாகி விட்டதால்... முதல் பதிவின் சந்தோசம் புதிய தொடர்... அன்புடன் அழைக்கிறேன்... ஆறு மனமே ஆறு :

1. திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் - திருவரங்கத்திலிருந்து...........
2. திருமதி. ராஜி அவர்கள் - காணாமல் போன கனவுகள்
3. திரு. பால கணேஷ் அவர்கள் - மின்னல் வரிகள்
4. திரு. வே.நடனசபாபதி அவர்கள் - நினைத்துப்பார்க்கிறேன்
5. திரு. ஸ்ரீ ராம் அவர்கள் - எங்கள் Blog
6. திரு. பிரகாஷ் அவர்கள் - தமிழ்வாசி

எனது நான்கு விரல்களின் தட்டச்சு வேகம் : ஹிஹி...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. தங்களின் தளத்திற்கு வருவதே ஒரு புதுவித மகிழ்ச்சியினையும், அனுபவத்தினையும் வாரி வழங்குகின்றது அய்யா. எத்தனை எத்தனை மாயா ஜாலங்கள். அருமை அய்யா. ரசித்தேன், சவைத்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
 2. திரு. ஜம்புலிங்கம் ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

  பல தத்துவார்த்தமான பதிவுகளை இன்று திண்டுக்கல் தனபாலன் வலைப்பூவில் வாசிக்கிறோம் என்றால் அதற்கு முதல் வித்திட்டவர் அவர்தான் என்பது தங்களின் வரிகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது..

  தங்களது ஆரம்பகால கணினி அனுபவங்களை பகிர்ந்துகொண்டமை அருமை.. இடையிடையே பொருத்தமான பாடல்கள் வரிகளும் இனிமை..

  நாலுவரில்கள் தட்டச்சுப் பலகையில் நர்த்தனம் ஆடியிருக்கிறதை கண்கூடாக தெரிந்துகொண்டோம்..

  பகிர்வினிற்கு நன்றி..!!!

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையாக ரஸிக்கும் படியாக எழுதியுள்ளீர்கள். இன்று கணினியின் எல்லாத் தொழில்நுட்பங்களும் ஓரளவு தெரிந்தவராக மாறி, பலருக்கும் ப்ல் சந்தேகங்களை நிவ்ர்த்தி செய்து உதவி வருகிறீர்கள். மகிழ்ச்சி. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. "முடியவில்லை என்றால் இன்னும் சரியாக முயற்சிக்கவில்லை" என்று வாத்தியார் சொன்னதாக நினைவு. காத்திருக்கிறேன்...உங்கள் முதல் களைக்காண அப்புறம் முதற்களை காண !

  பதிலளிநீக்கு
 5. விக்கி விக்கி படிக்கும் பிரயோகம் அருமை. பாடல்வரிகளில் லேசான மாற்றம், விக்கி போல 'பா' வைத் தொட்டால் வரும் தகவல்கள்... தனபாலன்... எங்கேயோ போயிட்டீங்க.... இதை நாங்கள் தொடர்பதிவு செய்தால் கோட்டைக்கு முன்னே குடிசை போலத் தெரியும்! வேண்டியதுதான். கடைசியில் விரல்களின் டைப்பிங் வேகம்.... அடேங்கப்பா.... என்னென்னமோ பண்றீங்க....பின்றீங்க!

  பதிலளிநீக்கு
 6. வலையுலக மந்திரவாதி தனபாலன் அவர்களே! lotus, word star என்று கலக்கி இருக்கிறீர்கள். நான் கணினி கற்கும்போது இவை புழக்கத்தில் இல்லை.
  பல மென்பொருள் பொறியாளர்களை விட அதை திறமை பெற்றவர் நீங்கள். என்பதை உங்கள் பதிவுகள் உணர்த்துகின்றன. நீங்கள் ஒரு சகல கலா வல்லவர் என்பதில் ஐயமில்லை.
  உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளமாக உள்ளது. பதிவர் சந்திப்பின்போது எனது சில ஐயங்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. திரு ஜம்புலிங்கம் அன்று உங்களுக்குக் கொடுத்த ஊக்கத்தை நீங்கள் இன்று பதிவர்கள் அனைவருக்கும் கொடுத்து வருகிறீர்கள். நன்றி மறக்காத நல்லவர் உங்களது முதல் கணணி அனுபவம் - கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பினையும் தவற விடாமல் எத்தனை கற்றுக் கொண்டுள்ளீர்கள் என வியக்க வைத்தது.

  'பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்...' பாடல் வந்த இடத்தை மிகவும் ரசித்தேன்.


  தொடர் எழுத முயற்சிக்கிறேன். ஆகஸ்ட் பத்து தேதிக்குமேல்!

  அழைப்பிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. சொந்தமா பாட்டெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டீர்கள் போலிருக்கிறது! திருக்குறளை எதிர்பார்த்தேன். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. ரசித்துப் படிக்கும்படி எழுதி இருக்கின்றீர்கள்.. பதிவின் ஊடாக இனிமையான பாடல் வரிகள் - மேலும் சிறப்பிக்கின்றன!.. வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 10. 'வலை உலகின் விரல் வித்தகர் 'எனும் பட்டத்தை நண்பர்களின் சார்பில் உங்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் !

  பதிலளிநீக்கு
 11. கரந்தை ஜெயக்குமார் சொல்லியிருப்பதே போதுமே, என்னைப் போன்றவர்கள் உங்கள் ஜாலக்கு வேலைகளை ரசிக்க மட்டுமே முடியும்.

  பதிலளிநீக்கு
 12. குறைவான வரிகளில் புரோகிராம் எழுதினால் குறைவாகச் சிரிப்பார் - செம! ரசனையா எழுதியிருக்கீங்க. மரியாதைக்கு பதில் மரியாதை மாதிரி தொடர் பதிவு எழுதக் கூப்பிட்ட என்னை மறுபடி தொடர் பதிவுக்கு அழைச்சுட்டீங்க. இந்த வாரம் நெட்ல தலைகாட்றதே பெரும்பாடா இருக்கு நண்பா..! திஙகட்கிழமை உங்கள் விருப்பப்படி நான் என் பதிவை வெளியிடறேன். ஆங்காங்கே சிவப்பெழுத்தைத் தொட்டால் வரும் தகவல் அருவிகளும், கடைசியில் உங்களோட தட்டச்சு வேகமும்(!) பிரமிக்க வெச்சுடுச்சு! இந்த மாதிரி விஷயங்கள்ளாம் கத்துத் தாங்க குருவே!

  பதிலளிநீக்கு
 13. முதல் கணினி அனுபவத்தை உங்கள் பாணியில் அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! ‘முதல் பதிவின் சந்தோசம்’ பற்றி எழுதப் பணித்திருக்கிறீர்கள்.அதற்கு நன்றி! விரைவில் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 14. உற்சாகமான புதிய முயற்சி, கவிதைகள் பழைய பாடல்கள் ரசனை, தகவலுக்கு நன்றி....!

  பதிலளிநீக்கு
 15. என்னமாக் கலக்கறீங்க போங்க. ஒங்க அசராத ஒழைப்புக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. வித்தியாசமாய் அருமையாக பகிர்ந்த அனுபவங்கள் ,பாடலகள் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 17. தங்களது ஆரம்ப கால கணினி அனுபவங்களை மிகவும் அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள்.. நன்றி...

  பதிலளிநீக்கு
 18. அனுபவம் புதுமை...

  தொடர்பதிவு முயசிக்கிறேன் சார்

  பதிலளிநீக்கு
 19. உங்கள் கணினி அனுபவத்ஹ்டோடு பாக்களையும் ரசித்தேன்.
  அதோடு அடுத்த தொடர் பதிவு ஒன்று ஆரம்பித்து விட்டீர்களே!

  பதிலளிநீக்கு
 20. திரு ஜம்புலிங்கம் அன்று உங்களுக்குக் கொடுத்த ஊக்கத்தை நீங்கள் இன்று பதிவர்கள் அனைவருக்கும் கொடுத்து வருகிறீர்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 21. சுவையான அனுபவங்கள்......

  ஆங்காங்கே வரும் பாடல் வரிகளும் கடைசியில் வரும் உங்கள் தட்டச்சு வேகமும் அருமை....

  பதிவுலகில் கலக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்....

  அட அடுத்த தொடர் பதிவு..... :)

  பதிலளிநீக்கு
 22. முதல் கணினி அனுபவம்-முத்தான பதிவு. சொல்லியுள்ள விதம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 23. உங்கள் பதிவைப் பார்த்து பிரமித்துப் போனவர்களில் நானும் ஒருவன். உங்களைப் பற்றி பல விவரங்களையும் தெரிந்து கொண்டேன் நேரில் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 24. நண்பரே உங்களின் வலைதளத்தைப் பார்க்கும்போது எனக்கே பொறாமை வருகிறது.எப்படி உங்களால் இவ்வாறு சிறப்பாக எழுத முடிகிறது.ஒவ்வொன்றும் புதுவிதமாய் நன்று

  பதிலளிநீக்கு
 25. அண்ணா! ரஞ்சனி அம்மாவும், நானும் திரு இல்லீங்கோ! திருமதி. திருமதின்னு மாத்திடுங்கண்ணா!

  பதிலளிநீக்கு
 26. தங்கள் வாழ்க்கைப் பயணத்தை (பாடல் வரிகளுடன் இணைத்து) அருமையான கட்டுரைத் தொகுப்பாக தந்துள்ளீர்கள். பதிவிற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 27. பதிவின் படமே ஆயிரம் கதைகள் சொல்லுதே!

  பதிலளிநீக்கு
 28. இன்னிக்கு ஆடிக்கிருத்திகை. வீட்டுல கொஞ்சம் வேலை அதிகம். அதனால, நாளைக்கு முடிஞ்சா பதிவு போடுறேன்ண்ணா!

  பதிலளிநீக்கு
 29. உங்கள் அனுபவத்தை மிக அருமையாக "பா"க்களுடன் தொகுத்திருக்கிறீர்கள். அருமை.

  அழகான தொகுப்பாக சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் சார்...

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. பச்சை நிற கணினியில் ஆரம்பித்து, உங்களது ப்ரோக்ராம் எழுதும் திறமை, வாழ்வை மாற்றி அமைத்த தருணம், இன்று உங்களது ப்ளாக்கில் பல புதுமைகளை செய்து வருவது என்று எழுதி அசத்திவிட்டீர்கள். ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கான குறிப்புகள், பாடல்கள் என்று அசத்தல் சார் ! நன்றி !

  பதிலளிநீக்கு
 31. உங்க பிளாக் டிசைன் சூப்பர்....பொறாமை கொள்ள வைக்கிறது...

  பதிலளிநீக்கு
 32. உங்களை மாற்றிய தருணங்களை மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்.நன்றி

  பதிலளிநீக்கு
 33. கலக்கிட்டீங்க போங்க.

  நட்புடன்
  அமர்க்களம் கருத்துக்களம்
  உலக தமிழ் பேசும் மக்களை ஒன்றிணைக்கும் களம்.
  http://www.amarkkalam.net

  பதிலளிநீக்கு
 34. நீங்கள் முதலில் பயன்படுத்திய கணினியை நாங்கள் பார்ததுகூடயில்லை. ஓடாத என் பழைய கணினியை வரலாற்றில் பதிய பத்திரமாக வைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 35. சிந்திக்க வைத்த அற்புதமான பதிவுங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள். தன்னம்பிக்கைச் சுடர் பட்டொளி வீசிப் பறக்கிறது!

  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 36. மிகவும் நன்றாக, உங்க கணனி முதல் அனுபவ‌ங்களை, நல்ல அருமையான பாடல்கள் மூலம் தொகுத்து தந்திருக்கின்றீர்கள். இந்த அனுபவங்களால்தான் நீங்கள் இன்று கணனி தொழில்நுட்பத்தில் மிளிர்கின்றீர்கள். பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் சார். உங்களுக்கு நிகர் நீங்களேதான். நன்றி.

  பதிலளிநீக்கு
 37. உங்கள் பதிவு ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் என்றால் மிகையில்லை. ஒரு பதிவை சுவாரஸ்யப்படுத்த எத்தனை சாத்தியக் கூறுகள் உண்டோ அத்தனையிலும் வெல்லுகிறீர்கள். ஒரு முறை படித்தால் மட்டும் போதாது. உங்களிடமிருந்து நான் இன்னும் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். அற்புதமான பதிவுக்கு, பகிர்வுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!!

  பதிலளிநீக்கு
 38. தங்கள் கணனி அனுபவம் அருமை .ரசித்தேன். என்னையும் சகோதரர் இளங்கோ அழைத்துள்ளார் எழுத வேண்டும்.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 39. அண்ணே கலக்குறிங்க சூப்பர் சென்னைக்கு வரும் பொது இதெல்லாம் சொல்லி தரனும்

  பதிலளிநீக்கு
 40. உங்களின் ப்ளாக் பக்கம் பலமுறை வந்து எங்கே ஆரம்பிப்பது எங்கே முடிப்பது என்று தெரியாமல் திணறி ஓடியதுண்டு.. இன்று என்ன வந்தாலும் சரி என்று புகுந்து மெதுவாக கடந்து ஒவ்வொன்றாக தொட்டு முழுமையாக வாசித்தேன்.
  வித்தியாசமான கணினி செட்டிங் உங்களுடையது... யாருடைய ப்ளாக்கும் இப்படி மின்னியதில்லை..
  இறுதியில் எங்கே கமெண்ட் எழுதுவதென்றும் புலப்படாமல் post comments(atom) அங்கே சென்று தட்டி திருதிருவென முழித்து.. பிறகுதான் //கருத்து பதிய இங்கே சொடுக்கவும்// என்கிற வாசகத்தைப்பார்த்து அங்கே சென்று தட்டி கருத்து எழுதுகிறேன். :P (ஷப்ப்ப்பா)

  பதிலளிநீக்கு
 41. ஒவ்வொருத்தருடைய அனுபவமும் தனிவிதம். கணினி எல்லாருக்கும் பொதுதான் என்றாலும் எத்தனை பயன்பாடுகள், எத்தனை அனுபவங்கள். அருமையாக கூறியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 42. அன்பின் தனபாலன் - அருமையான பதிவு - பிரமித்து விட்டேன் - முயற்சிக்காமல் முடியாதெனச் சொல்லாதே ! நல்ல தலைப்பு - கணினி முதல் அனுபவம் - தொடரில் அனுபவங்களை அள்ளித் தந்தது - தங்களிடம் மறைந்திருக்கும் தங்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்த பதிவு.

  ஆங்காங்கே " பா "வின் மீது பட்டவுடனே கவிதை மழை பொழிவது பாராட்டத் தக்கது.

  படித்துப் படித்து பிரமித்தேன் - நல்வாழ்த்துகள் தனபாலன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 43. பிறருக்கு தன்னம்பிக்கையை தூண்டுகின்ற பதிவு

  தொகுத்த விதம் அருமை !

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 44. கணனி அனுபவத்தையும் அதில் அருமைப்பாடல்களையும் சேர்த்த விதம் நீங்கள் வித்தகர்தான் என்பதைச் சொல்லிவிடுகின்றது ஐயா நன்றி பல நல்ல பாடல்களை மீண்டும் ஞாபகம் ஊட்டியதுக்கு!

  பதிலளிநீக்கு
 45. கடந்து வந்த பாதையைக் காட்டிய விதம் அருமை

  பதிலளிநீக்கு
 46. முதல் கணினி அனுபவம் கடைசியாக போட்டாலும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அதிலும் சூழ்நிலைக்கேற்ப பாடல்கள் அருமை....tm12

  பதிலளிநீக்கு
 47. ஆகா முதல் பதிவு சந்தோசம்...அருமையான தொடர் பதிவு..ஆரம்பத்தில் நம்மை ஊக்கபடுத்தியவர்களுக்கு நன்றி சொல்லும் அருமையான வாய்ப்பு... என் ரவுண்டுக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 48. உங்களின் கணினி அனுபவம் அருமை!
  எப்பவுமே புதியபுதிய நல்ல தொழில் நுட்பங்கள் உங்கள் பதிவுகளில்.
  எம்மை நகரவிடாமல் இங்கேயே நிறுத்தி வைக்கின்றது. கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க வைக்கின்றீர்கள்!

  அத்தனையும் அருமை!
  வாழ்த்துக்கள் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 49. சொன்னதும் சொல்லிப்போனவிதமும்
  மிகவும் சுவாரஸ்யம் ,வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 50. அருமையான கணணி அனுபவம் அத்துடன் மனத்தைக்
  கவர்ந்து நிற்கின்றது தங்களின் தட்டச்சில் எழுதும் வேகம் ...!!!!!!
  இங்கே நான் ஒன்றரை மாதக் குழந்தையே .இன்னும் கை
  வலிக்க வலிக்க எழுத்துக்களைத் தேடிப் பிடித்து சுண்டு விரலால் சுண்டி முடிப்பதற்குள் விடிந்த பொழுதும் முடிந்து விடும் .இனித்தான் முயற்சிக்க வேண்டும் சகோ :)))))
  அருமையான பகிர்வுக்கு
  வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 51. பா"க்களுடன் ஒரு தொகுப்பு அருமையா இருக்கு தனபாலன் சார் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 52. பதிவின் தகவல்களும் அருமை. இணைக்கப்பட்டிருக்கும் புதுமுயற்சிகள் அதைவிட அருமை. வியக்க வைக்கின்றன.

  பதிலளிநீக்கு
 53. //எரர் வந்தால்தான் வாழ்க்கையிலும் சிலது புரிகிறது// ......சரியாச் சொன்னீங்க..

  பதிலளிநீக்கு
 54. மிக அருமையாகவும் ரசிக்கும் படியும் நகைச்சுவை கலந்து எழுதியிருந்தீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 55. உங்கள் ஆக்கங்களைப் படிப்பது என்றென்றும் புதிய இனிய அனுபவமாகத் திகழ்கிறது. பணி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 56. முதல் கணிணி அனுபவத்திலும் உங்கள் பாணியில் பாடல்களுடன் அழகாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 57. எதையும் முயற்சிக்காமல் முடியாது என்று சொல்லதே! முயன்றால் முடியாத விஷயம் உண்டா தனபால்னுக்கு? எவ்வளவு வித்தை கற்று வைத்து இருக்கிறீர்கள் வியக்க வைக்கிறது.
  அருமையான பாடல் தொகுப்பு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 58. எப்படித் தான் இத்தனை பேருக்கும் பதில் சொல்வீங்களோ தெரியலை!:))))) நல்லவேளையா நமக்கெல்லாம் பத்துப் பனிரண்டு கமெண்டோடு நின்னுடுது. :)))) பிழைச்சேன்.

  உங்கள் அனுபவங்கள் வழ்க்கம்போல் உங்கள் பாணியில் கலக்கல். :)))))) பல பதிவர்களையும் அழைச்சிருக்கீங்களா, அதன் சுட்டியைப் பார்த்துட்டு என்னடாஇது புதுசானு வந்தேன்.:))))

  பதிலளிநீக்கு


 59. நன்றி..திண்டுக்கல் தனபாலன் ஐயா .மிகவும் ரசித்தேன். அருமை... அருமை... :)
  அன்புடன்: S. முகம்மது நவ்சின் கான் (99likes)

  பதிலளிநீக்கு
 60. அசத்திட்டீங்க போங்க....

  கணினியில என்னமா கலக்குறீங்க!! கன்னத்தில் கைவைத்தபடி படித்தேன்.

  அருமையாக இருந்தது தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 61. அருமையாக ரசிக்கத் தந்துள்ளீர்கள்.

  உங்கள் புதிய நுட்பங்களைப்பார்த்து வியந்து நிற்கின்றோம். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 62. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழி எப்போதும் தனி வழிதான். கணினி அனுபவங்களை நீங்கள் சொன்ன முறை என்னை வியக்க வைக்கிறது. SPINNING துறையில் கணினியில் புகுந்து விளையாடிய நீங்கள் வலைப் பதிவிலும் நன்றாக எழுதுகிறீர்கள்.
  அடுத்த கல்லை (முதல் பதிவின் சந்தோசம் – புதிய தொடர் ) வலைப் பதிவு என்னும் குளத்தில் விட்டெறிந்து விட்டீர்கள். அலைகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 63. புதிது புதிதாக என்னவெல்லாமோ செய்து அசத்துறீங்க!

  பதிலளிநீக்கு
 64. பின்னி மில் மற்றும் கணினி அனுபவங்கள் அருமை ... கூடவே உங்கள் பாடல்களையும் ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 65. முதல் கணினி அனுபவத்தை அழகாய் சொல்லியுள்ளீர்கள். உங்களிடமிருந்து நிறைய புதிய உத்திகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 66. வணக்கம்
  தனபால்(அண்ணா)

  தொழில்நுட்பம் சார்ந்த பதிவு மிக நன்றாக உள்ளது பாடல்களும் மிக நன்று வலையுலகில் உங்களிடம் இருந்த தொழில்நுட்ப தகவலை வெளிக்காட்டிய விதம் மிக அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 67. தொழில்நுட்பங்களை அங்கங்கே புதைத்துவைத்து பதிவில் விளையாடியிருக்கின்றீர்கள்.மிக அருமையாக இருக்கின்றது நண்பரே..வாழ்க வளமுடன் வேலன்.

  பதிலளிநீக்கு
 68. உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கணிப்பொறியின் பங்கு அத்தியாவசியமாய் இருந்துள்ளதை உங்கள் பதிவில் உணர முடிந்தது..

  பதிலளிநீக்கு
 69. அருமையான பாடல் வரிகளுடன் அசத்தலான தங்கள் அனுபவம்... வேறு நிகழ்வை தொடர்பதிவாக எழுத சொன்ன விதமும் சிறப்பு. வாழ்த்துக்கள் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 70. நன்றி சொல்வதிலும் ஒரு புதுமை
  கணினி கற்க ஒரு இடம்
  நினைவில் நிறுத்த உயர்ந்த கருத்துகள்
  பழமையை புதுமையாக்க கற்பித்தல்
  கற்றதை பகிர்ந்து மகிழ்தல்
  சொல்வதை சிறப்பாக சொல்தல்
  சொல்லியதை ஆய்வுக்கு விடுதல்
  சொனனதால் மன மகிழ்தல்
  சொல்லியதை கற்றதால் பயனடைதல்
  சொல்லச் சேர்த்து அதனை பகிரும் திறன்
  உயர்ந்த சரக்கு திறமையான பகிரும் (விற்பனைத்) திறன்
  தேட வைக்கும் ஆற்றல்
  தேடித் தெரிந்து தெளிந்து செல்லும் நிலை
  திண்டுக்கல் தனபாலன் தரும் அறிவு
  திண்டுக்கல் ஹல்வா ருசி தனி ருசி போல்
  இதற்கோர் ஓர் உயர்வான இடம் இந்த இடம்
  திண்டுக்கல் தனபாலன் இடம் ஓர் உயர்வான இடம்
  http://dindiguldhanabalan.blogspot.com/

  பதிலளிநீக்கு
 71. சொல்லும் விஷயங்கள் அருமை
  சொல்லுவதில் புதுமை
  உங்களுக்கு நிகர் நீங்களே
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 72. உண்மை தான்..அப்போதெல்லாம் கம்ப்யூட்டரைத் தொட பெரிய சிபாரிசு தேவைப்படும்!..நல்ல அனுபவம்.

  அடுத்த தொடர்பதிவும் ஆரம்பிச்சாச்சா..குட்!

  பதிலளிநீக்கு
 73. உங்கள் எழுத்தெல்லாம் வித்தை காட்டுது.அதிசயமா இருக்கண்ணா.அற்புதம்.வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 74. வலைச்சர அறிமுகத்திகு வாழ்த்துகள்..!

  http://blogintamil.blogspot.in/2013/08/4.html

  பதிலளிநீக்கு
 75. முயற்"சிக்காமல்" முடியவில்லை எனச் சொல்லக் கூடாதென்பதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்! சிக்கிய வரிகள் அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 76. திருவாளர்கள் ;ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன் அவர்களும்
  http://kaviyazhi.blogspot.in/2013/08/blog-post.html#.Uf0JLKxSHEQ

  தி.தமிழ் இளங்கோ1 August 2013 22:05
  நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை! நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்திலிருந்து ஊக்கம் கொடுத்து வருபவர் கவிஞர் ரமணி அவர்கள். மேலும் தவறாமல் எனது ஒவ்வொரு பதிவிற்கும் தமிழ்மணத்தில் வாக்கும் அளித்திடுவார். அவரிடமிருந்து இதனை கற்றுக் கொண்ட நான் , எந்த பதிவாக இருந்தாலும் படித்து முடிந்ததும், கருத்துரையோடு தமிழ்மணத்தில் வாக்களித்தும் வருகிறேன்.

  நான் பள்ளி மாணவனாக இருந்த போது வீட்டில், நூலகத்தில் மற்றும் நண்பர்கள் வீட்டில் இருக்கும் பத்திரிகைகளை படிப்பதுண்டு. பெரும்பாலும் எல்லா பத்திரிகைகளிலும் வாசகர் கடிதம் பகுதியில் திருவனந்தபுரம் எஸ்.எஸ்.மணி என்பவர் தவறாமல் கடிதம் எழுதி இருப்பார். (அவர் இப்போது என்ன பண்ணுகிறார் என்று தெரியவில்லை) அவரைப் போன்று நமது திண்டுக்கல் தனபாலன் அவர்களின் ஊக்கமான கருத்துரையும் , தமிழ்மணத்தில் வாக்கும் வலையுலகத்தில் இல்லாத நாளே இல்லை எனலாம். எல்லா பதிவுகளிலும் இவருடைய முதல் கருத்துரை பதிவாகி இருக்கும்.

  கவிஞர் ரமணி, திண்டுக்கல் தனபாலன் – இருவரும் பல்லாண்டு வாழ்க! பாராட்டி பதிவு எழுதிய கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 77. அருமை. lightbox effects மிக அருமையாக இருந்தது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 78. மிகவும் ரசித்துப் படித்தேன். நிறைய தொழில் நுட்பங்களை வைத்து பதிவிடுகிறீர்கள். ஆனால் சில நேரங்களில் உங்கள் தளம் திறக்கவே நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது. பின்னூட்டமும் இடமுடிவத்திலை.

  பதிலளிநீக்கு
 79. பிரமாதம் தனபாலன் அவர்களே! உங்கள் பதிவு திறக்க நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறதே! பின்னூட்டம் இடுவதும் சிரமமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 80. இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி சகோ .தொடர் பதிவு அழைப்பினை அறிவித்தமைக்கு .விரைவில் தொடர்கின்றேன் .

  பதிலளிநீக்கு
 81. நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)

  தங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....


  http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

  பதிலளிநீக்கு
 82. அண்ணா... உங்களுக்கு மட்டும் எப்படி இப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் கிடைக்கிறது... அருமையான அற்ப்புதமான மாயாஜாலம்...!

  பதிலளிநீக்கு
 83. உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. வாழ்வியல் தத்துவங்களாகட்டும், குறள் விளக்கமாகட்டும், கணினி வித்தையாகட்டும், பாடல் வரிகளில் அசத்தும் ஆளுமைத்திறனாகட்டும், ஒவ்வொரு பதிவிலும் வியக்கவைக்கிறீர்கள். பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 84. எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,

  உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

  http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
  நன்றி

  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 85. தங்களின் பதிவுகள் பார்ப்பதே ஒரு படம் பார்ப்பதுபோல்
  பாட்டுக்களும் விளக்கங்களும்
  கணணி அனுபவம் அருமை

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 86. முடியாதென்று நினைக்காமல் இன்று முயற்சித்து முழுவதையும் படித்தாயிற்று. கணினியின் அறிமுகப்பதிவு, அதனுள்ளே தொடர்ச்சியாக ஒளிந்து வரும் பாக்கள், தங்களின் தட்டச்சு வேகத்தை இணைத்த விதம் என எல்லாமும் அருமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 87. பல தத்துவ பாடல்கள் தான் உங்களை செதுக்கி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.தொழில்நுட்ப புதுமையுடன் !

  பதிலளிநீக்கு
 88. எத்தனையோ விஷயங்கள் ஒரே பதிவில்.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 89. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ப்ளாக் என்ன ஒரு அழகிய டிசைன்?? எவ்வளவு நுட்பங்கள்?? வியப்பா இருக்கு!

  பதிலளிநீக்கு
 90. எனக்கு எப்பொழுதுமே ஆச்சர்யமான விடயம் நீங்கள் போடும் திரைப்பட பாடல் வரிகள் தான்... எத்தனை பாடல்கள், எழுதும் கருத்திற்கு ஏற்றார் போல... எப்படி சார் இத்தனையும் நினைவில் வைத்து உள்ளீர்கள்....நல்ல அனுபவம் சார்... :)

  பதிலளிநீக்கு
 91. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்தியற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
 92. அண்ணே..

  எங்க வாழ்த்து சொல்றதுன்னு தெரியல.. Indiblogger அவார்டு பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)

  பதிலளிநீக்கு
 93. தனபாலன் நலமா? ஊரில் எல்லோரும் நலமா? சுற்று பயணம் முடிந்து வந்து விட்டீர்களா? பதிவுக்கு முதலில் வந்து கருத்து அளிப்பது நீங்கள் அல்லவா! உங்களை காணவில்லை எல்லோரும் தேடும் படி ஆகி விட்டது.
  நானும் ஒரு பதிவு போட்டு இருக்கிறேன். முடிந்த போது வாருங்கள்.
  பதிவர் சந்திப்பு வேலைகளில் தீவிரமாய் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
  அன்புடன்
  கோமதி அரசு

  பதிலளிநீக்கு
 94. உங்கள் அனுப பகிர்வை அருமையான முறையில் எழுதி இருக்கீறீர்கள்

  கடைசி லைன் எப்படி மேஜிக் போல வருகிறது.

  பதிலளிநீக்கு
 95. ஆசை அன்பு இழைகளினாலே
  நேசம் என்னும் தறியினில்
  நெசவு நெய்தது வாழ்க்கை :)

  பதிலளிநீக்கு
 96. அட அருமை. இதுவரை எந்தவொரு வலைத்தளத்திலும் நான் பார்த்திராத புதுமைகளை கண்டேன், வியந்தேன். வாழ்த்துக்கள். அருமையான அனுபவம். அருமை.

  பதிலளிநீக்கு
 97. முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
  முயலாமை வெல்லாது,,,,,,

  பதிலளிநீக்கு
 98. ஏற்கெனவே வந்து படிச்சுட்டுக் கருத்தும் சொல்லி இருந்திருக்கேன். கணினியில் உங்கள் திறமை பளிச்சிடுகிறது. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதற்கு நீங்கள் ஓர் எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். சிறப்பான சுவையான பதிவு. ஆங்காங்கே தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்களும் அருமை. மிகுந்த உழைப்பு.


  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.