பதிவர் சந்திப்பு 2013 - ஆதலால் பயணம் செய்வீர்
வணக்கம் நண்பர்களே... பதிவர் சந்திப்பு திருவிழா பற்றிய எனது பார்வையை சில காரணங்களால் பகிர முடியவில்லை; இதோ முந்தைய வருடம் முதல் பதிவர் திருவிழா சந்திப்பிற்கு முன் பகிர்ந்த பதிவு இங்கே சொடுக்கவும்
இது ஒரு பொன் மாலைப் பொழுது...! வான மகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்... இது ஒரு பொன் மாலைப் பொழுது...! வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கது சேதி தரும்... ஒரு நாள் உலகம் நீதி பெறும்... திருநாள் நிகழும் தேதி வரும்... கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்...!
பதில்களை நம்ம ஐயன் என்ன சொல்கிறார் என்பதை அறிய குறள் எண் (461-470) அருகே சுட்டியைக் கொண்டு சென்று, வாசித்து விட்டு, இடது புறமாக நகர்த்தி விடவும்... இந்தப்பதிவை கைப்பேசியில் அல்லாமல், கணினியில் (Desktop Computer) வாசித்தால், வலைத்தள நுட்பத்தையும் அனுபவிக்கலாம்... நன்றி...
திருவிழா எப்படி நடைபெற இருக்கிறது...?
சிறப்பாக என்னவெல்லாம் நடக்குமெனத் தெரிந்து கொள்ள ஆர்வமா...?
காசு, பணம், துட்டு, Money, Money, அதாங்க பொருளாதாரம் முக்கியமா...?
பாட்டு, நடனம், தனிநடிப்பு, நாடகம் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமா...?
வாங்க பழகலாம்... நாம் புதியவராயிற்றே என்ற எண்ணமா/தயக்கமா...?
தங்களின் படைப்புகளின் நூல் வெளியீடு எனும் எண்ணம்/ஆவல் உள்ளதா...?
வருகையைப் பற்றிய தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டுமா...?
இவ்வளவு பிரமாண்ட விழா எவ்வாறு சாத்தியமென அறிய ஆவலா...?
தங்குமிடம், வரவேற்பு குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருக்கிறதா...?
மேலும் திருவிழா சிறக்க தங்களது பரிந்துரைகள் ஏதேனும் இருக்கிறதா...?
நன்றி : திருவள்ளுவர் - அதிகாரம் 47 - தெரிந்து செயல்வகை
உறவுகள் வேண்டாம் - உலகமெங்கும் போகலாம்... இரவுகள் வேண்டாம் - புதிய சட்டம் போடலாம்... வீரமிருந்தால் - விண்ணிலெங்கும் செல்லலாம்... நேரமிருந்தால் - நிலவில் கொஞ்சம் தங்கலாம்... ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் - அனுதினம் உலகினை வலம் வரலாம்... பூப்பறிக்கும் சிறுமிகளாய் - புவியை ரசிக்கலாம்... வாழ்வென்ன - உலகில் நித்தியமா...? வாழ்வோமே - இதிலே பத்தியமா...? சோகம் இனி இல்லை - அட இனி வானமே எல்லை...! தூரம் இனி இல்லை - அட இனி வானமே எல்லை...! (படம் : வானமே எல்லை)
⟪ © வானமே எல்லை ✍ வைரமுத்து ♫ மரகத மணி 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1992 ⟫
நட்பிற்கு வானம் கூட எல்லை இல்லை...! dindiguldhanabalan@yahoo.com
நண்பர்களே... கொண்டாடுவோம்... ஆதலால் பயணம் செய்வீர்... நன்றி...

461
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, பலரைத் திகைக்க வைத்து, முதல் பதிவர் திருவிழாவைச் சிறப்பாக நடத்தி, எந்தளவிற்கு நன்மை / தீமை அல்லது நட்பு என்னும் லாபம் / நட்டம் ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்கிட்ட அனுபவத்துடன், தற்சமயம் மேலும் உற்சாகத்துடன் உத்வேகத்துடன் இறங்கி வேலைகள் பல நடந்து கொண்டிருக்கின்றன...!
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் 461
ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, பலரைத் திகைக்க வைத்து, முதல் பதிவர் திருவிழாவைச் சிறப்பாக நடத்தி, எந்தளவிற்கு நன்மை / தீமை அல்லது நட்பு என்னும் லாபம் / நட்டம் ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்கிட்ட அனுபவத்துடன், தற்சமயம் மேலும் உற்சாகத்துடன் உத்வேகத்துடன் இறங்கி வேலைகள் பல நடந்து கொண்டிருக்கின்றன...!
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் 461
சிறப்பாக என்னவெல்லாம் நடக்குமெனத் தெரிந்து கொள்ள ஆர்வமா...?
462
ஒருவரா ? இருவரா ? பலர்...! ஒவ்வொன்றுக்கும் தனி தனி குழுக்கள்...! தெளிவான தேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கும் போது சந்தேகமே வேண்டாம்; ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்களுக்குச் செய்ய முடியாத செயல் என்று ஏதேனும் உண்டா என்ன...? வாங்க ரசிப்போம்...!
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் 462
ஒருவரா ? இருவரா ? பலர்...! ஒவ்வொன்றுக்கும் தனி தனி குழுக்கள்...! தெளிவான தேர்ந்த நண்பர்கள் பலர் இருக்கும் போது சந்தேகமே வேண்டாம்; ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்களுக்குச் செய்ய முடியாத செயல் என்று ஏதேனும் உண்டா என்ன...? வாங்க ரசிப்போம்...!
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல் 462
காசு, பணம், துட்டு, Money, Money, அதாங்க பொருளாதாரம் முக்கியமா...?
463
பெரும் ஆதாயமோ, புகழோ எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலல்ல என உணர்ந்த அனைவரின் கூட்டு முயற்சியால் தான் விழா சிறப்பாக நடந்தது; நடைபெறப் போகிறது... Some'think' Something உங்கள் விருப்பம் தான்...! அதை விட என்றும் தொடரும் நட்பு என்னும் நன்கொடை மிகவும் முக்கியம்...!
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் 463
பெரும் ஆதாயமோ, புகழோ எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலல்ல என உணர்ந்த அனைவரின் கூட்டு முயற்சியால் தான் விழா சிறப்பாக நடந்தது; நடைபெறப் போகிறது... Some'think' Something உங்கள் விருப்பம் தான்...! அதை விட என்றும் தொடரும் நட்பு என்னும் நன்கொடை மிகவும் முக்கியம்...!
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார் 463
பாட்டு, நடனம், தனிநடிப்பு, நாடகம் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமா...?
464
அவசியமில்லை... ஆனால் போட்டியில் பங்கு பெற முன்பதிவு அவசியம்...! தனக்கு அவமானம் / களங்கம் / தவறு வரும் என்று பயப்படுபவர்களுக்கு, நம்பிக்கை இல்லாத செயலைச் செய்ய நிர்ப்பந்தம் கிடையாது... இது சந்தோச சந்திப்பு திருவிழா...!
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் 464
அவசியமில்லை... ஆனால் போட்டியில் பங்கு பெற முன்பதிவு அவசியம்...! தனக்கு அவமானம் / களங்கம் / தவறு வரும் என்று பயப்படுபவர்களுக்கு, நம்பிக்கை இல்லாத செயலைச் செய்ய நிர்ப்பந்தம் கிடையாது... இது சந்தோச சந்திப்பு திருவிழா...!
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் 464
வாங்க பழகலாம்... நாம் புதியவராயிற்றே என்ற எண்ணமா/தயக்கமா...?
465
நாம் தமிழ்ப்பதிவர்கள் என்பதை ஒன்றே கருத்தில் கொண்டு, முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, முறையாகத் திட்டமிட்டுச் சந்திப்பு நடைபெறுவதால், பகைமை என்பது கனவில் கூட தோன்றாமல், பல அன்பு உள்ளங்களை நட்பாகப் பெறலாம்...!
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு 465
நாம் தமிழ்ப்பதிவர்கள் என்பதை ஒன்றே கருத்தில் கொண்டு, முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து, முறையாகத் திட்டமிட்டுச் சந்திப்பு நடைபெறுவதால், பகைமை என்பது கனவில் கூட தோன்றாமல், பல அன்பு உள்ளங்களை நட்பாகப் பெறலாம்...!
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு 465
தங்களின் படைப்புகளின் நூல் வெளியீடு எனும் எண்ணம்/ஆவல் உள்ளதா...?
466
தங்களின் ஆசை நிறைவேற விளக்கமான ஆலோசனைகளும், பல சலுகைகளும் உண்டு... கவலை வேண்டாம்... ஏனென்றால் செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் மனத் திருப்தியின்மை வரும்...! வாருங்கள், வழிகாட்டுதலுக்கு அன்பர்கள் உண்டு...!
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் 466
தங்களின் ஆசை நிறைவேற விளக்கமான ஆலோசனைகளும், பல சலுகைகளும் உண்டு... கவலை வேண்டாம்... ஏனென்றால் செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் மனத் திருப்தியின்மை வரும்...! வாருங்கள், வழிகாட்டுதலுக்கு அன்பர்கள் உண்டு...!
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும் 466
வருகையைப் பற்றிய தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டுமா...?
467
உணவு, தங்குமிட ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் அவசியம் வருகையை உறுதி செய்ய வேண்டும்... முன் வைத்த காலை பின் வைக்காத செயல் வீரர்கள் உள்ளதால், திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, உங்கள் பேச்சை நீங்கள் தான் கண்டிப்பாக நிறைவேற்றணும்...!
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு 467
உணவு, தங்குமிட ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் அவசியம் வருகையை உறுதி செய்ய வேண்டும்... முன் வைத்த காலை பின் வைக்காத செயல் வீரர்கள் உள்ளதால், திருவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, உங்கள் பேச்சை நீங்கள் தான் கண்டிப்பாக நிறைவேற்றணும்...!
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு 467
இவ்வளவு பிரமாண்ட விழா எவ்வாறு சாத்தியமென அறிய ஆவலா...?
468
பல பேர் ஒற்றுமையோடு செய்தாலும், முறையாகச் செய்யப்படாத முயற்சி கடைசியில் முடங்கிப் போய்விடும்... ஆனால் அங்கு வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒவ்வொரு செயலும் சிறப்பாக முடிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன...
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் 468
பல பேர் ஒற்றுமையோடு செய்தாலும், முறையாகச் செய்யப்படாத முயற்சி கடைசியில் முடங்கிப் போய்விடும்... ஆனால் அங்கு வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒவ்வொரு செயலும் சிறப்பாக முடிக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன...
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் 468
தங்குமிடம், வரவேற்பு குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருக்கிறதா...?
469
வருகின்ற ஒவ்வொருவரின் குணநலன்களை அறிந்து, அவரவர் மனம் நோகாதபடி செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் தவறு நேர்ந்து விடும் என்பது விழாக் குழுவினர்கள் நன்கு அறிவார்கள்...!
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை 469
வருகின்ற ஒவ்வொருவரின் குணநலன்களை அறிந்து, அவரவர் மனம் நோகாதபடி செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் தவறு நேர்ந்து விடும் என்பது விழாக் குழுவினர்கள் நன்கு அறிவார்கள்...!
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை 469
மேலும் திருவிழா சிறக்க தங்களது பரிந்துரைகள் ஏதேனும் இருக்கிறதா...?
470
தங்களின் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால், உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்னும் மூத்தவர்களின் வழிகாட்டுதலோடு, பெரியோர்களின் மன நிறைவோடு மக்கள் இகழாத வழிமுறைகள் பலவற்றும் வரவேற்கப்படுகின்றன...
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு 470
தங்களின் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால், உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்னும் மூத்தவர்களின் வழிகாட்டுதலோடு, பெரியோர்களின் மன நிறைவோடு மக்கள் இகழாத வழிமுறைகள் பலவற்றும் வரவேற்கப்படுகின்றன...
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு 470
உறவுகள் வேண்டாம் - உலகமெங்கும் போகலாம்... இரவுகள் வேண்டாம் - புதிய சட்டம் போடலாம்... வீரமிருந்தால் - விண்ணிலெங்கும் செல்லலாம்... நேரமிருந்தால் - நிலவில் கொஞ்சம் தங்கலாம்... ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் - அனுதினம் உலகினை வலம் வரலாம்... பூப்பறிக்கும் சிறுமிகளாய் - புவியை ரசிக்கலாம்... வாழ்வென்ன - உலகில் நித்தியமா...? வாழ்வோமே - இதிலே பத்தியமா...? சோகம் இனி இல்லை - அட இனி வானமே எல்லை...! தூரம் இனி இல்லை - அட இனி வானமே எல்லை...! (படம் : வானமே எல்லை)
⟪ © வானமே எல்லை ✍ வைரமுத்து ♫ மரகத மணி 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1992 ⟫
நட்பிற்கு வானம் கூட எல்லை இல்லை...! dindiguldhanabalan@yahoo.com
நண்பர்களே... கொண்டாடுவோம்... ஆதலால் பயணம் செய்வீர்... நன்றி...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
உங்கள் முயற்சி அத்தனையும் மிகசிறப்பாக விழா நடக்க வழிவகுக்கும். மிக அருமையாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். விழாவை தவறவிடப்போகிறோம் என்பதை நினைக்க கவலையாக உள்ளது! விழா மிக சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். விருப்பமிருந்தும் வரமுடியாதவர்கள் லிஸ்ட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விழா நேரம் மனதால் நாங்களும் உங்களுடன்தான் இருப்போம்.
பதிலளிநீக்குஎன்ன மாப்ள ரொம்ப நாளா ஆளைக காணோம். போன் பண்ணா கூட ரெஸ்பான்ஸ் இல்லை. என்ன ஆச்சு?
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குபிரமிப்பு! அருமை தனபாலா...! இப்படி பதிவை அழகுபடுத்தி வெளியிடற டெக்னிக்கை கத்துத் தராம ஏமாத்தற உமக்கு இருக்கு சந்திப்பன்னிக்கு திருவிழா...!
பதிலளிநீக்குகைதேர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பதிவு எழுதி வரவேற்பது நெஞ்சை நெகிழச் செய்கிறது! விழாவில் கலந்துகொள்வோருக்கும் நடத்துவோர்களுக்கும் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குநன்றி தங்களின் அழைப்பிற்கு!
உங்களின் உழைப்பு பலருக்கு ஏக்கம் வரவழைக்கக்கூடியது.
பதிலளிநீக்குதாடிக்காரன் நம் பதிவுலக சந்திப்பை பற்றியும் மிகவும் அழகாகத்தான் கூறிச்சென்றுள்ளான் என்பதை நினைக்கும் போது, தனபாலரே! லேட்டா சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்ற உங்க டெக்னிக் சூப்பர்ன்னு பாராட்டாமல் இருக்க முடியவில்லை!!!
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி... வர முயறசிக்கிறேன்....
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவிருப்பமிருந்தும் வரமுடியாதவர்கள் லிஸ்ட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
காட்சிக்கு வர முடியாவிட்டாலும் உங்கள் கட்சியில் இணைந்துள்ளோம்.
ஆச்சரியமாய் இருக்கிறது.பிரமிப்பாயும் உள்ளது.படித்ததா இல்லையே அனுபவமே இப்படியென்றால் ? சொல்ல வார்த்தையில்லை அற்புதம் ஆனந்தம்.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குDD.... நீங்கள் DD மட்டுமில்லை! TD யும் கூட! அதாவது திருக்குறள் தனபாலன். குறள்ல கலக்கறீங்க!
பதிலளிநீக்குகணேஷ் இவ்வளவு டெக்னாலஜி என் உடம்புக்கு ஆகாது! அதனை அவர் விடல் னுட்டு இந்த டெக்னாலஜி சமாச்சாரங்கள் எல்லாம் திருக்குறள் தனபாலனே செய்யட்டும்! (சீச்சீ...இந்தப் பழம் புளிக்கும்!)
வானமே எல்லை பாடலை நான்கூட சிலநாட்களுக்குமுன் மனதுக்குள் நினைவுகூர்ந்தேன். எதோ ஒரு சேனலில் கேட்டேன்.
இண்டி ப்ளாக்கர்ஸ் லிஸ்ட்டில் இடம் பெற்ற இரு தமிழ்ப்பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்பதற்கு எங்கள் வாழ்த்துகள். (இன்னொருவர் வரலாற்றுச் சுவடுகள் என்று அறிந்தேன்)
இனிய வணக்கம் நண்பரே...
பதிலளிநீக்குஅருமையான வரவேற்பு ஆக்கம்...
விழா சிறக்க வாழ்த்துக்கள்...
நிகவின் சிறப்பை கட்டியம் கூறும்
பதிலளிநீக்குதங்கள் பதிவு மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
tha.ma 4
பதிலளிநீக்குவிழா வெற்றிபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபதிவர் விழாவுக்கு வரவங்க உங்களை தொந்தரவு செய்யப் போறாங்க - எப்படி இத்தனை நுட்பங்களை இணைக்கிறீங்கனு தெரிஞ்சுக்க.
பதிலளிநீக்குபதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள். பதிவெழுதத் திரும்பிய உங்களுக்கும்.
உங்கள் பதிவை சாதரணமாகப் படிக்க முடியாது. அதற்கென்று நேரம் ஒதுக்கி ரசித்து சுவைத்து படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குபதிவர் விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
கட்சித் தேர்தல் பணிகளில் ஈரோட்டில் இருப்பதால் எனக்கு வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றே நினைக்கிறேன் :(
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குதனபாலன்(அண்ணா)
பதிவர் சந்திப்பு விழா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
பதிவு அருமையாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆகா தலைப்பே அருமை
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவிலும் நீங்கள் செய்யும் வித்தைகளை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள் டி.டி
பதிவர் திருவிழா சிறப்பாய் நடக்க வாழ்த்துக்க்ள்.. உங்களிடம் கற்றுக்க் கொள்ள நிரய விடயங்கள் உள்ளது சார்,... technically so strong
பதிலளிநீக்குஆதலால் விழாவிற்கு வாருங்கள்...
பதிலளிநீக்குஅருமையாய் பதிவு அலங்காரம்....
அருமை தலைவரே.. பிரமாதம்.. கொஞ்ச நேரம் பதிலைத் தேடினேன்.. அப்புறம் டிக்கடிக்கவும் வருது..சூப்பர்..
பதிலளிநீக்குசிறப்பான ஆக்கம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது .
பதிலளிநீக்குவிழாவில் கலந்துகொள்வோருக்கும் நடத்துவோர்களுக்கும் பாராட்டுதல்களும் வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குநன்றி தங்களின் அழைப்பிற்கு!
அருமை பதிவு -
Vetha.Elangathilakam
பதிவர் திருவிழா பெரும் விழாவாக இருக்கிறதே...
பதிலளிநீக்குநானும் இங்கிருந்து அங்கு வந்துவிடவாவென
உங்கள் பதிவு ஆவலைத் தருக்கிறது.
விழாவே சிறப்பு அதனை இங்கு பதிவிட்ட உங்கள் தொழில் நுட்பம் இன்னொரு சிறப்பாக
எம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறது.
பகிர்வினுக்கு நன்றி!
வாழ்த்துக்கள் சகோதரரே!
த ம.9
பதிவர் திருவிழா பற்றிய அறிவிப்புக்கும் திருவள்ளுவரைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டீர்களே!
பதிலளிநீக்குஎப்படி இப்படியெல்லாம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நீங்கள் ஒரு தனி வகுப்பு எடுத்துவிடுங்கள் திருவிழா அன்று. உங்களது தனித் திறமை இதுவல்லவா?
பாராட்டுக்கள்!
தகவல்களை அளித்த விதம் அருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்!
மிக அருமையாய் தொகுத்திருக்கிறீர்கள் கட்டுரையை... ஒவ்வொரு பதிலுடன் அதற்கேற்ற ஒவ்வொரு திருக்குறளும் வியப்பு...
பதிலளிநீக்குகடைசியில் ''சோகமே இல்லை... அட இனி வானமே எல்லை...'' என்பது உற்சாகத்ததும்பல்...
மிக அருமை...
ஆதலால் பயணம் செய்ய விருப்பம்தான். இருந்தும் என்ன செய்ய.?எதிர்பார்க்காதது ஏதாவது நடந்தால் ஒருவேளை எதிர்பார்க்காமலேயே பங்கு கொள்ளலாம். எல்லாம் அவன் செயல்.மிகவும் அருமையான வெளியீடு. பாராட்டுக்கள்.
அழைப்புக்கு நன்றி தனபாலன்
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்
பதிலளிநீக்குஇதுதான் என் முதல் வருகையென நினைக்கிறேன். ஒரே ஒரு தடவை மதுரையில் வழக்கமான பதிவர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சந்தித்த நினைவு உள்ளது. இனிமேல் அடிக்கடி சந்திப்போம்.
நாங்கள் தற்போது அயலகத்தில் இருப்பதனால் பதிவர்கள் சந்திப்பு திருவிழாவிற்கு வர இயலாது. சந்திப்பு தொடர்பான புகைப் படங்களையும் காணொளியினையும் பதிவுகளையும் கண்டு மகிழ்வோம்.
வி
இப்பதிவு புது விதமாக அலங்காரம் - வடிவமைப்பு - செயலுக்குத் தொடர்புடைய குறள் பொருளுடன் பகிர்வு. என அமர்க்களமாக அமைந்துள்ளது.
தொடர்பில் இருப்போம்.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
அண்ணே கலக்கிட்டீங்க
பதிலளிநீக்குகுறள்கள் அனைத்தும் அருமையான கதம்பம் !புதிய தொழில்நுட்பம் .வானத்திற்கு ஏது எல்லை !
பதிலளிநீக்குஉங்கள் முயற்சி அத்தனையும் மிகசிறப்பாக விழா நடக்க வழிவகுக்கும். மிக அருமையாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். விழாவை தவறவிடப்போகிறோம் என்பதை நினைக்க கவலையாக உள்ளது! விழா மிக சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள். விருப்பமிருந்தும் வரமுடியாதவர்கள் லிஸ்ட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். விழா நேரம் மனதால் நாங்களும் உங்களுடன்தான் இருப்போம்.
பதிலளிநீக்குவிழா வெற்றிபெற வாழ்த்துகள். அருமையான் பாடல் வானமே எல்லை
பதிலளிநீக்குபயணிக்கவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி
பதிலளிநீக்குசகோ பகிர்வுக்கு .
பதிவர் சந்திப்பு , எந்தவித இயற்கை + செயற்கை இடையூறுகள் இல்லாமல் நடைபெற வாழ்த்துக்கள். சந்தித்துக் கொள்ள இருக்கும் அனைவருக்கும் All the best.
பதிலளிநீக்குசந்திப்பு எவ்ளோ தூரம் அழகாயிருக்குமோ இல்லையோ..:) ஆனா அதுக்கான இந்தப் பதிவு அழகோ அழகு.
உங்கள் பாட்டிலே தவறிருக்கிறது:))..
பதிலளிநீக்குகொஞ்சம் சுருதி தடம் புரண்டு விட்டது..:)
பாவம் இடம் மாறிவிட்டது....:)..
அதனால் அந்தாதி சற்றுத் தடுமாறி நிக்கிறது..:))..
அது.. வேறொன்றுமில்லை...
“காசு பணம் துட்டு.. மணி.. மணி” அப்பூடியல்லவா வரவேண்டும்..:))..
ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:))
விழா சிறப்புற வாழ்த்துக்கள்!! அப்புறம் உங்கள் பதிவு டிசைன்... வாவ்வ்வ்வ்!!!
பதிலளிநீக்குசென்னையில் சந்திப்போம் சார்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிருக்குறளை இணைத்துச் சொல்லிய விதம் அருமை
பதிலளிநீக்குபதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ஒவ்வொரு பதிவிலும் புதுமைகள் செய்து வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்
வாழ்த்துக்கள்.
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
சென்னை நகரில் வலைப்பதிவா்
சோ்ந்து நடத்தும் தமிழ்த்திருநாள்!
என்னை மெல்ல இழுக்கிறது!
ஏக்கம் பெருகிச் சுரக்கிறது!
பொன்னை அரசன் அளித்திடுவான்!
புலவன் வாழ்த்து படைக்கின்றேன்!
அன்னைத் தமிழின் திருவருளால்
அளகில் புகழைக் காணுகவே!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கைதேர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, பதிவு எழுதி வரவேற்பது நெஞ்சை நெகிழச் செய்கிறது!
பதிலளிநீக்குநன்றி தங்களின் அழைப்பிற்கு!
அனைத்து வகை பயன்பாடுகளையும் பயன் படுத்தும் ஒரே பதிவர் தாங்கள்தான்.
பதிலளிநீக்குசமீபத்தில் நீங்கள் சென்னை வந்தபோது சந்திக்க இயலவில்லை.
01.09.2013 ஐ ஆவலுடம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பதிவர் திருவிழாவின் ஹீரோ திண்டுக்கல் தனபாலன்தான்
பதிலளிநீக்குபதிவர் விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பன்று வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால் பங்கேற்பது கடினம் என எண்ணுகிறேன்.இருப்பினும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குதங்கள் தளத்தில் மூளைக்கு மட்டும் இல்லை, கண்களுக்கும் விருந்துதான் சார் ! ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்கிறீர்கள், நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்துக்களை திருக்குறளில் இணைத்து எளிதாக புரிய வைக்கிறீர்கள்..... நன்றி !
பதிலளிநீக்குவர இயலாமையால் இங்கிருந்தே விழா சிறப்புற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
உங்களுக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிங்க. ஆவலுடன் காத்திருக்கிறேன். வருக வருக.
பதிலளிநீக்குஒவ்வொரு பதிவிலும்புதுமை செய்யும் உங்கள் உழைப்புத் தெரிகிறது.உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.
பதிலளிநீக்குதாமதத்துக்கு மன்னிக்கவும்
எங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் பங்கு கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎங்களைப் போன்ற வெளிநாட்டுப் பதிவர்கள் பங்கு கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதலைப்பே அசத்தலா இருக்கு.பதிவும் அப்படியே.விழா இனிதே நடந்தேற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆதலால்...... பயணம் செய்தே வருகிறேன்...
பதிலளிநீக்குஅருமையான முயற்சி.. வாழ்த்துக்கள் அண்ணா
பதிலளிநீக்குஇங்கயே இப்படி அசத்துறீங்களே! சென்னைல இன்னும் எப்படி அசத்துவீங்க?! ஹீரோவே நீங்கதான்ண்ணே!
பதிலளிநீக்குவணக்கம் அய்யா, வலைப்பக்கத்திற்கு புதியவன் நான், உள்ளே வந்தவுடன் தான் தெரிகிறது இதன் பிரமாண்டம். விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். செய்தியைப் பகிர்ந்தமைக்கும் நன்றி.
பதிலளிநீக்குஇடுகையைப் பதிவாக்கியுள்ள விதம் வெகு அருமை.
பதிலளிநீக்குஇரண்டாம் சந்திப்பு இனிதே நடைபெற இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎன்னொரு அழகா த்ரில் ஆ சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் தனபாலன் சார்
விழா சிறப்பாக நடைபெறவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅதனையொட்டி நீங்க வெளியிட்டிருக்கும் பதிவு மிகமிக அருமை.வாழ்த்துக்கள்.நன்றி.
எனக்கும் விருப்பமாகாத் தான் இருக்கிறது. ஆனால் நான் இலங்கையில் இருக்கிறேன்.. :( என்னால் வர முடியாது. இருந்தாலும் உங்கள் பதிவுகள் மூலம் நான் அறிந்து கொள்கிறேன்...
பதிலளிநீக்குபதிவர் விழாவில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகுந்த நட்போடு என்னுடன் பேசினீர்கள். Really i like it. என்றும் அன்புடன் ராகவாச்சாரி
பதிலளிநீக்குஅண்ணேன் உங்க பதிவர் சந்திப்பு அனுபவப் பதிவு இன்னும் வரவில்லையே..?
பதிலளிநீக்கு.அன்பு தனபாலன் ,வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் தங்கை, மனைவி உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
இறைவன் விரைவில் உங்கள் துனபங்களை போக்கி மகிழ்ச்சி கொள்ள செய்வார்.
உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது, தனபாலன்.
மனதிடம், நம்பிக்கை இவை எப்போதும் உங்களுடன் இருக்க வாழ்த்துக்கள். இது தனி மடல் உங்கள் மெயில் முகவரி தெரியாதக் காரணத்தால் இதில் பகிர்கிறேன்.
அன்புடன்
கோமதி அரசு