🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சிறப்பான செயலுக்கு என்ன தேவை...?

நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு Fabulous Blog Ribbon விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... ஐயாவிடமிருந்து தொடர்ச்சியாகப் பெறும் மூன்றாவது விருதாகும்... மிக்க நன்றி ஐயா... வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பதிவு எழுதி திங்கள் அன்று வெளியிடுவேன்... இந்தப் பதிவு முன்னதாகவே... காரணம் முடிவில்...


இன்று நாம் அலசப் போவது சிறப்பான செயலுக்கு என்ன தேவை ? என்பதைப் பற்றி... இவை யாவும் என் சொந்த கருத்துக்கள்..... நான் படித்த புத்தகங்கள் மூலமும் என் வாழ்வில் பழகிய/சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட விசயங்கள் :

01) கடவுள் அருள் இல்லாமல் எந்தச் செயலும் சிறப்பாக அமையாது...

02) கடமையைச் செய்... பலனை எதிர்பார்க்காதே...

03) ஒழுக்கம், நேர்மை இருந்தால் எல்லாம் சிறப்பாக அமையும்...

04) என்ன தான் சிறப்பாகச் செய்தாலும் பணிவு வேண்டும்...

05) முழுமனதுடன் உண்மையாகச் செய்யுங்கள்... அது தான் சிறப்பு...

06) என் தன்னம்பிக்கையே, என் தாரக மந்திரம்...

07) முயற்சி திருவினையாக்கும். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.

08) அடுத்த மாதம் எனக்குச் சுக்கிர திசை ஆரம்பம்... அப்புறம் பாருங்க...

09) என் திறமையைப் பற்றி எனக்குத் தெரியாதா...? தெரியலேனா... மற்றவர்களிடம் தெரிந்து கொண்டு சிறப்பா செய்வேன்...

10) கையிலே எவ்வளவு பணம் இருக்கு...? முடிந்தயளவு குடுங்க...! சிறப்பா எந்தச் செயலையும் செய்து காண்பிக்கிறேன்...

இன்னும் பொறுமை, அரவணைப்பு, etc... இப்படித் தொடர்ந்து கொண்டே போகும்... அவரவர் சிந்தனைக்கேற்ப / சூழ்நிலைக்கேற்ப / தொழிலுக்கேற்ப மாறுபடும்... பல உதாரணங்கள் சொல்லலாம்... இது நிஜம்... நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்... "மற்றவர்களைப் பற்றி அறிய வேண்டும்" என்றார்... நான், "அது இருக்கட்டும், உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்" என்றேன்... அவர் தன்னைப்பற்றியும் தன் சிறப்புகளைப் பற்றியும் கூறினார்... நான், "உங்களின் பலவீனங்கள் சொல்லுங்கள்" என்றேன்... அவரால் உடனே சொல்ல முடியவில்லை... சிறிது தயங்கித் தயங்கி, யோசித்துச் சொன்னார்... நான், "பார்த்தீர்களா...? உங்கள் பலவீனங்களைக் கூட உடனே சொல்வதற்குத் தெரியவில்லை... அப்படிச் சொல்வதானாலும் என்னிடம் சொல்வதற்குத் தயங்குகிறீர்கள்... நம் பலங்களைப் பற்றிச் சிந்திக்கும் அளவு, நாம் நம் பலவீனங்களைச் சிந்திப்பதில்லை... உங்களைப்பற்றி முதலில் முழுதாக அறிந்து கொள்ளுங்கள்... பிறகு மற்றவர்களைப் பற்றி யோசியுங்கள்..." என்றதை ஒத்துக்கொண்டார் அவர்...

நமது மகாத்மா காந்தியடிகள் அவர்கள், தனது சத்திய சோதனையில், தன் பலத்தையும் சொல்லி உள்ளார்... தனது பலவீனத்தையும் சொல்லி உள்ளார்... சத்திய சோதனையை முழுதாகப் படித்தவர்களுக்குப் புரியும்...

அது எதற்கு இப்போது என்கிறீர்களா...? மேலே நண்பர்கள் கூறியது போல், இன்னும் ஆயிரம் விசயங்கள் இருந்தாலும்... அவை எல்லாம் தேவையில்லை என்று சொல்லவில்லை... ஒரு செயலை செய்வதற்கு முன் நம் பலம் / பலவீனம் அறிந்து கொண்டு செய்தால் சிறப்பாக அமையும்... அதற்கு பொதுவாக எல்லார்க்கும் வேண்டியது திட்டமிடுதல்... அவ்வாறு திட்டமிட்டுச் செய்தால் சிறப்பாக அமையும்... அவ்வாறு தோல்வி / தடங்கல் வந்தாலும் அவை படிக்கற்களாக எடுத்துக் கொள்ளும் மன உறுதி வேண்டும்... பல குறள்கள் இருந்தாலும் அனைவரும் அறிந்த குறள் :

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
அதிகாரம் : தெரிந்து செயல்வகை (467)
(பொருள் : நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்... செயலைத் தொடங்கிய பின், அது பற்றி எதையும் எண்ணிப் பார்ப்பது குற்றமாகும்.)

ஆக என்னைப் பொறுத்தவரை...

சிறப்பான செயலுக்குத் தேவை : திட்டமிடுதலே


இது எதற்கு இப்போது என்கிறீர்களா...? என் அன்பான சொந்தங்களே... (பதிவர்கள் இல்லை) பத்து மாதங்களுக்கு முன் நானும் உங்களைப் போல, பல பேரின் பதிவுகளைப் படித்தவன்... பல தளங்களை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம்... நன்றி... உங்களின் சார்பாக நான் கலந்து கொள்ளப் போகிறேன்... கவலைப் படாதீர்கள்... வரும் காலங்களில் மெரீனா கடற்கரையில் பதிவர் சந்திப்பு நடக்கலாம்... அப்போது வரலாம்... ஹா... ஹா...

"ஐ... ஆசே... ஆசே... வோன் ஆசே நட்க்கட்டும்... என்ன நைய்னா... நாந்தான்ப்பா வோன் மனச்சாட்ச்ச்சி... பழ்சு மெட்ராஸ் வால்வு நாபமாக்கீதா... அதாண்டே போய்யி என்பா செய்ப்போரே...?"

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
அதிகாரம் : கேள்வி (420)
(பொருள் : கேள்வியாகிய அறிவுச் சுவையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்று தான்.)

"சூப்பராக்கீது... நள்ல நம்பரூ, அதெப்டி 420ங்கெல்லாம் அவங்ககலையே ஏமாத்திக்குவொங்கன்னு, எப்டி வள்ளுவருக்கு அப்ப தெறியும்... என்னாப்பஹா... நம்க்கே கேழ்வியா...? அப்புறாம் ?"

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல் (450)
(பொருள் : நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதை விடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.)

ஓஹோ... அப்டியா... அப்போ எந்நாத்துக்குத் தழைப்பு ஒர்மாத்ரி இக்குது... அப்றோம் வோன்னைப் பொருத்தன்காட்டிலும் வேர மாத்ரி இக்குது...

அடேய் மனமே... நிப்பாட்டு, உளறாதே... அதான் பேச வரவில்லையே... சென்னையை விட்டு இங்கு வந்து 10 வருசம் மேலே ஆச்சி... நமக்கு என்ன வருமோ, தெரியுமோ, முடியுமோ... அதைத் திட்டமிட்டுப் பொறுமையாகச் செய்தால் போதும்... தலைப்பு : சிறப்பான செயலுக்கு என்ன தேவை ? திட்டமிடுதல்... அதான் நான் திட்டவட்டமாகத் திட்டமிட்டு கிளம்பிட்டேனே... மனமே, முடிவில் உள்ள குறளின் விளக்கத்தை நன்றாகப் படி...! நண்பர்களே... பிறகென்ன தாமதம்...? நீங்களும்...

கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!

திட்டம் எல்லாம் ரெடி... முன்னேறுவதற்கு என்னங்க தேவை...? மேலும் சிந்திக்க இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன், இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல நல்ல பதிவு போடறது இல்லாம பலருடைய பதிவுகளை தவறாம படிக்கிற உங்களுக்கு FABULOUS BLOG AWARD பொருத்தமானதுதான்.

    பதிலளிநீக்கு
  2. விருதுக்கும் பதவிக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் அருமையான கருத்துக்கள் . நன்றி

    பதிலளிநீக்கு
  4. கடவுள் அருள் இல்லாமல் எந்த செயலும் சிறப்பாக அமையாது...
    //////////////

    உண்மைதான் கடவுள் அருள் இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது...
    நல்ல பதிவு 4

    பதிலளிநீக்கு
  5. உங்கள் வாழ்வில் பழகிய/சந்தித்த நண்பர்களிடமிருந்தும் அறிந்து கொண்ட பத்து விஷயங்கள் அருமை... த.ம-9

    பதிலளிநீக்கு
  6. Fabulous Blog Ribbon விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!
    சிறப்பான செயலுக்கு தேவை : திட்டமிடுதலே என்ற உங்கள் கருத்துக்கு உடன்படுகின்றேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  8. என்ன பாஸ் விருது மேல விருதா வாங்கி குவிக்கிறீங்க!!! :)
    வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள்.
    இன்றைய பதிவு எனக்கு மிகவும் பயன்படும் விடயம். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. விருது பெற்றமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்! இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியதைப் பதிவாகப் போட்டிருக்கிரீர்கள்... மிக்க நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் நண்பா.
    "மாபெரும் சபையிலே நீ நடத்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்"

    பதிலளிநீக்கு
  11. "கிளம்புங்கைய்யா... கிளம்புங்க...!"

    All The Best....


    விருது பெற்றமைக்கு.....

    Congrats....

    பதிலளிநீக்கு
  12. விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.

    அன்புடன்
    VGK

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    பதிலளிநீக்கு
  13. எந்த செயலும் வெற்றியடைய ....

    சிறப்பான செயலுக்கு தேவை :

    திட்டமிடுதலே!

    அருமையான வரிகள்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் பாஸ்
    நல்ல தகவல்கள்

    விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்க

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.சகோ.

    பதிலளிநீக்கு
  16. விருது பெற்றதற்கு வாழ்த்துகள். பதிவர்கள் விழா சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல நல்ல பதிவு போடறது இல்லாம பலருடைய பதிவுகளை தவறாம படிக்கிற உங்களுக்கு FABULOUS BLOG AWARD பொருத்தமானதுதான்.

    பதிலளிநீக்கு
  18. மிகவும் சிறப்பான கருத்துக்கள்! பலவீனத்தை ஒத்துக்கொள்பவன் உண்மையில் சிறந்த மனிதன் தான்! அருமையான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    அஷ்டமி நாயகன் பைரவர்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  19. விருதுக்கு வாழ்த்துகள் :)

    அழகான கருத்துகள்.

    பதிலளிநீக்கு
  20. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. வாழ்த்துக்கள் தோழரே! பதிவு எதார்த்தமாக உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கீங்க! நன்றி தோழரே!

    பதிலளிநீக்கு
  22. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே...!! தொடர்ந்து கலக்குங்க..!

    பதிலளிநீக்கு
  23. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...
    சிறப்பான செயலுக்கு தேவை திட்டமிடுதலே...அருமையான வரிகள்.. நன்றி.......

    பதிலளிநீக்கு
  24. நல்ல பகிர்வு நண்பரே... பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. ஆகா.... கிளம்பிட்டாருய்யா... கிளம்பிட்டாரு! இனி பட்டைய கலட்டிடுவாரே!!

    தலைப்பைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய அருமையான குறள்...


    எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்.

    அப்படிப்பட்ட காலத்திற்காக காத்திருக்கிறேன்!
    சந்திக்க விழைகிறேன்!

    பதிலளிநீக்கு
  26. விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்
    பதிவர் சந்திப்பு இனிதே நடக்க வாழ்த்துக்கள் .
    நீங்க பதிவில் சொல்லியுள்ள விஷயம் திட்டமிடுதல் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று .அழகா எளிமையா சொல்லியிருக்கீங்க

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துக்கள் நண்பரே.

    சிறப்பாக கூறியுள்ளீர்கள். பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. அருமையான கருத்துக்களின் குவியல். அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  29. உங்களுக்கு ஒரு திண்டுக்கல் பூட்டு வாங்கித்தான் பூட்டணும்.

    அசராம சுத்தி சுத்தி கத்தி கத்தி பத்தி பத்தியா பலருக்கும் பின்னூட்ட்ம் போடுறீங்களே:)

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. அருமையா சொல்லிருக்கீங்க....!வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி தனபாலன்.
    விருதுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. ஆம் திட்டமிடலே சிறப்பு .
    நல்ல பதிவு.நிறைய சிந்திக்கிறீர்கள்.
    நன்று. நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  33. நல்லா எழுதியிருக்கீங்க தனபாலன், நன்றி & வாழ்த்துகள்!

    ***

    தனது பலம், பலவீனத்தை ஒருவன் தெரிந்து கொண்டால், செய்யும் செயலை சிறப்பாக செய்யலாம், என்பது மிக உண்மை!!

    ***

    திட்டமிடுதலும் தேவை, அதனை சரியாக காலம் தாழ்த்தாமல் செயல்படுத்துவதும் தேவை!!

    பதிலளிநீக்கு
  34. வெற்றிமீது வெற்றி வந்து உங்களை சேரும்! அதை வாங்கித்தந்த பெருமை திரு.கோ. அவர்களைச் சேரும்!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  35. சிறப்பான பகிர்வு .அத்துடன் விருது பெற்றுக் கொண்டமைக்கு என்
    வாழ்த்துக்கள் .முடிந்தால் தங்கள் ஆதரவை அன்பு உள்ளம் வலைத்
    தளத்திற்கும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோதரரே .

    பதிலளிநீக்கு
  36. அன்பு தனபாலன், இன்று இரவு கிளம்புகிறேன்... உங்களை எல்லாம் சந்திக்க....
    நிறையக் கற்க.....கேட்க....

    பதிலளிநீக்கு
  37. வாழ்த்துக்கள்..நானும் வருகிறேன்..வரும்போது உங்களை சந்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  38. தொடர்ந்து கலக்குங்க நண்பரே! (TM 16)

    பதிலளிநீக்கு
  39. எவ்வளவு விஷயங்களைக் கோர்த்துப் பதிவாக்குகிறீர்கள் பாலன்.விருதுக்கு மிக மிகத் தகுதியானவர் நீங்கள்.மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழரே !

    பதிலளிநீக்கு
  40. விருது பெற்றதுக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து கலக்குங்கள்........

    பதிலளிநீக்கு
  41. பொருத்தமான விருதிற்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  42. தோழருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

    பதிலளிநீக்கு
  43. விருதுக்கு வாழ்த்துக்கள்.

    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. விருதுக்கு வாழ்த்துகள்..

    நல்ல கருத்துகள் சொல்லி இருக்கிங்க :)

    பதிலளிநீக்கு
  45. பத்து கருத்துகளும் சிறந்த எண்ணங்கள்.
    விருதுகளுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  46. நம்மை நாமே மீட்டிப் பார்க்கும் போது நமது பலவீனங்கள் புரியும்.அதனாலேயே சொல்வேன் ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு அரை மணிநேரம் இன்றைய நாள் நாம் என்ன செய்தோம் அதில் என்ன பலன் இருக்கின்றது. தவறு இருக்கின்றது நன்மை இருக்கின்றது என்று மீட்டிப் பார்க்க வேண்டும். அப்போது தீமையைத் திருத்திக் கொள்வோம் . நன்மையை மேம்படுத்துவோம் . சிறப்பான பதிவு. மீண்டும் பதிவுலகில் நுழைந்துள்ளேன். விடுமுறை சிறப்பாக அமைந்தது. உங்களுக்குக் கிடைத்த விருதுகளுக்கு வாழ்த்துகள். தொடரட்டும் விருதுமழை

    பதிலளிநீக்கு
  47. விருதுக்கு வாழ்த்துக்கள்/எப்படியிருந்தது சென்னை பதிவர் திருவிழா?

    பதிலளிநீக்கு
  48. சென்னை சந்திப்பில் உங்களை மட்டுமே வெகு நேரமாக கவனித்து கொண்டிருந்தோம்..

    ஏதோ ஒரு நட்பு உம்மேல் தானாக வருகிறது...

    வாழ்த்துக்கள் சகோதரரே..!!

    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    பதிலளிநீக்கு
  49. வாழ்த்துக்கள் அண்ணா.பதிவர் சந்திப்பில் தங்களை நேரடியாக சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  50. என் வலைப்பூவில் சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்):
    மறக்காம படிங்க அண்ணா
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

    பதிலளிநீக்கு
  51. ட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

    பிண்ணிட்டீங்க சார் (FL 32)

    வாழ்வில் முன்னேற சில படிகள்

    பதிலளிநீக்கு
  52. வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்பில் தங்களை நேரடியாக சந்தித்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு


  53. தன்னுடைய பலத்தை மட்டுமல்ல, பலவீனத்தையும் தெரிந்துகொள்தல் அவசியம் என்கிறீர்கள்.
    பலம், பலவீனம் இவற்றைத் தெரிந்துகொண்டு பலவீனம் பலத்தை விட் ஜாஸ்தி என்றால் என்ன செய்வது.
    இழுத்துப்போத்திக்கொண்டு தலகாணிக்குள் தலை புதைத்து வீட்டுக்குள்ளாரவே கிடப்போம்டா என்று இருப்பதா !!
    இல்லை.. வந்தது வரட்டும் போடா ! துணிந்தவனுக்கு த் தூக்குமேடை பஞ்சு மெத்தை என்று புறப்படுவதா !!

    இன்னொரு கோணத்தில் பார்த்தால், இதை அந்தக் காலத்து மேனேஜ்மென்ட் ஸ்கூல் முதல் ( நான் சொல்வது 1951 வருடம்)
    இப்பைக்கு 2012 வரை ஒரே பாடம் தான். படிக்கவேண்டும் புதிய பாடம் வாத்தியாரையா, பழைய பாடம் புரியவில்லை என்று
    சொல்லிட முடியாது.

    ஸ்வாட் அனாலிஸிஸ் என்பார்கள். நம்முடைய பலம், மற்றும் பலவீனத்தை மட்டும் அல்ல, வரப்போகும் இன்னல்கள், அபாயங்கள்
    (threats) பற்றியும் அலசவேண்டும். அனலைஸ் பண்ணனும்.

    அதக்கப்புறம் தான் இருக்கு லாஸ்ட்.
    லாஸ்டா வந்தாலும் லேடஸ்ட் அட்வைஸ்.

    இந்த வரப்போகும் இன்னல்கள், இடர்கள், அபாயங்கள் எல்லாவற்றையுமே நமது பலம், மற்றும் பலவீனங்கள் அடிப்படையிலே
    opportunities ஆக மாற்ற உறுதி எடுத்து செயல் படவேண்டுன்.

    இன்னிக்கு தேதிலே புண்ணியகோடி மண்டபத்திலே பேசப்போறவனுக்கும் இந்த ஸ்வாட் முக்கியம்.
    அதே போல புண்ணிய கிரஹமான சுக்ரனுக்கு ( உங்களுக்கு வரப்போவுது அப்படின்னு சொல்றீக இல்லயா )
    போறவனும் இத கவனத்துலே வச்சுக்கணும்.

    அட என்னத்த பெரிசா சொல்லிப்பிட்டீக.. நம்ம வள்ளுவர் சொல்லாததையா அப்படின்னு கேட்கறீகளா ?

    சரிதான் தம்பி. வள்ளுவர் படா ஆள். அவனவன் ஒன்னரை பக்கம் எழுதரதை ஒன்ன்ரை வரிலே சொல்லிட்டு போயிட்டாரு.

    எதிரதாக்காக்கும் அறிவினார்க்கில்லை
    அதிரவருவதோர் நோய்.

    என்ன தனபாலன் ஸார் ! தூங்கிப்போய்ட்டீக !

    அட எழுந்துருங்க... எங்க வீட்டுக்கு வாங்க...

    ஒரு டிகிரி காபி சாப்பிட்டுகிட்டே பேசுவோம்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    பதிலளிநீக்கு
  54. @Suryanarayanan Siva அவர்களுக்கு தங்களின் கருத்துரை எனக்கு தரும் ஊக்கம், ஆசீர்வாதம், மகிழ்ச்சி...

    மிக்க நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  55. விருது வாழ்த்துக்கள்.
    மிகவும் சிறப்பான பதிவு

    பதிலளிநீக்கு
  56. அண்ணே இன்லி மேட்டருக்கு ரொம்ப நன்றி.. உங்க நல்ல மனச புரிஞ்சிக்காம, சிலர் உங்கள காயபடுத்த பார்க்கிறார்களே...

    பதிலளிநீக்கு
  57. நல்லா பதிவு சார்..தொடர்ந்து கலக்குங்க..வாழ்த்துகள் சார்..

    பதிலளிநீக்கு
  58. தாமதமாகவே வருகிறேன் என்றாலும் நி
    றைவான பதிவு. வாழ்த்துகள், மேன்மேலும் விருதுகளைப்பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  59. (1) T.N.MURALIDHARAN , (2) ARIVU KADAL, (3) Gnanam Sekar, (4) சிட்டுக்குருவி, (5) Manimaran, (6) வே.நடனசபாபதி, (7) மோகன் குமார், (8) ஹாரி பாட்டர், (9) தி.தமிழ் இளங்கோ, (10) Gobinath,

    (11) Chamundeeswari Parthasarathy, (12) NKS.ஹாஜா மைதீன், (13) Seeni, (14) RMY பாட்சா, (15) Nagendra Bharathi, (16) வல்லத்தான், (17) வை.கோபாலகிருஷ்ணன், (18) Seshadri e.s., (19) K.s.s.Rajh, (20) Asiya Omar,

    (21) கிஷோகர், (22) கும்மாச்சி, (23) கவி அழகன், (24) Anbu Dasan, (25) s suresh, (26) G.Ragavan, (27) புதுகைத் தென்றல், (28) நண்டு @நொரண்டு -ஈரோடு, (29) Prem Kumar.s, (30) ravi krishna,

    (31) ! ❤ பனித்துளி சங்கர் ❤ !.!, (32) ஆட்டோமொபைல், (33) வெங்கட் நாகராஜ், (34) ஆளுங்க அருண், (35) angelin, (36) Rasan, (37) Muruganandan M.K., (38) ராஜ நடராஜன், (39) Athisaya, (40) வீரா,

    (41) அப்பு, (42) kovaikkavi, (43) பழூர் கார்த்தி, (44) சந்திர வம்சம், (45) மழை, (46) அன்பு உள்ளம், (47) Ranjani Narayanan, (48) படைப்பாளி, (49) வரலாற்று சுவடுகள், (50) ஹேமா,

    (51) Doha Talkies, (52) இடி முழக்கம், (53) கவிநயா, (54) Vazeer Ali, (55) சே. குமார், (56) சுசி, (57) இந்திரா, (58) ஸ்ரீராம்., (59) சந்திரகௌரி, (60) விமலன்,

    (61) போளூர் தயாநிதி, (62) Ponniyinselvan, (63) அதிரடி, (64) தொழிற்களம் குழு, (65) விஜயன், (66) N.H.பிரசாத், (67) ♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !, (68) குன்னங்குடி மஸ்தான் சாகிபு, (69) வேடந்தாங்கல் - கருண், (70) Suryanarayanan Siva,

    (71) சிவகுமாரன், (72) அப்பாதுரை, (73) மொக்கராசு மாமா, (74) rufina rajkumar, (75) Uzhavan Raja, (76) sambasivam6geetha, (77) அனந்த பத்மநாபன் பத்மன், (78) Ezra Rajasekaran, (79) Atchaya Krishna Ravi, (80) hezhiyan Mozhiyan,

    (81) Gnanamoorthy Ponnaier


    மேலே உள்ள அனைத்து அன்பு உள்ளங்களின் வருகைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்திற்கும், சமூக தளங்களில் பகிர்ந்து கொண்டதற்கும், வாக்கு அளித்ததற்கும், எனது மனமார்ந்த நன்றிகள் பலப்பல...

    பதிலளிநீக்கு
  60. அன்பின் தனபாலன் - அருமை நண்பர் வை.கோவிடம் இருந்து விருது தொடர்ச்சியாகப் பெற்றமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்.

    சிறப்பான செயலுக்குத் தேவையானது எது என விளக்கியமை நன்று.

    நல்வாழ்த்துகள் திண்டுக்கல் தனபாலன்
    நட்புட்ன் சீனா

    பதிலளிநீக்கு
  61. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    அருமையான கருத்துக்கள்

    பதிலளிநீக்கு
  62. வாழ்த்துக்கள் சகோ மென்மேலும் சிறந்த விருதுகள் பெற்று வளம் பெற !!!!!....

    பதிலளிநீக்கு
  63. தளத்தினை பார்க்கும் போது மிகவும் வித்தியாசமானதாகவும் பிரம்மிப்பாகவும் தோன்றுகிறது.

    தொடர்ந்து விருது மழையில் நனைந்திளைக்கும் இவ்வலைப்பூவிற்கும் அதன் நிறுவனருக்கும் என் வாழ்த்துகள் பற்பல.

    பதிலளிநீக்கு
  64. அருமையான பதிவு...

    இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  65. வணக்கம்
    திண்டுக்கல்தனபால் (அண்ணா)

    சிறப்பான செயலுக்கு என்னதேவை?என்ற படைப்பு மிக அருமை மனிதன் வாழ்நாளில் மனிதனாக பிறந்த அனைவரும் கட்டாயம் வாழ்க்கையில் திட்டம்மிடல் என்ற ஒன்று அவசியம் என்பதை அழகாகச் சொல்லிவிட்டிர்கள்,இன்று உங்களின் பதிவு வலைச்சர கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.