தித்திக்கும் திண்டுக்கல் !
நண்பர்களே... உயர்திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு LIEBSTER AWARD விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்... பல நண்பர்களுக்கு விருதுகள் கொடுத்து ஊக்குவிப்பதோடு இல்லாமல், மிகச் சிறப்பாகக் கருத்துரைகளையும் வழங்குபவர்... மிக்க மிக்க நன்றி ஐயா... இனி...
சில மனிதர்களிடம் பேசினால் மனம் தெளிவடையும்; உற்சாகமடையும்; மகிழ்ச்சி, நம்பிக்கை உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த மனிதர், (5 வருடப் பழக்கம்) கவிஞர் அம்ஜத்பாரதி. இவர் ஒட்டன்சத்திரம் வட்டம், இடையக் கோட்டையில் பிறந்து, திண்டுக்கல்லை வாழ்விடமாகக் கொண்டவர்...
கவிஞரைப் பற்றிச் சுருக்கமாக : பெரியார், கவியரசு வைரமுத்து, எழுத்தாளர் பாலகுமாரன் ஆகியோர் படைப்புகளை முழுதும் படித்து உணர்ந்தவர்... காந்தியின் சத்திய சோதனை படித்த மாத்திரத்தில், 30 ஆண்டுகளாகச் சைவம் ஏற்றவர். கவியரசு வைரமுத்து அவர்களுடன் இணைந்து பல கவியரங்கங்களில் பங்கேற்றுப் புகழ் பெற்றவர். கவிஞர் அவர்கள், சமூகம், தேசியம், காதல், பெண்ணுரிமை, அரசியல் என அனைத்தும் சார்ந்த கவிதைகள் பல படைத்துள்ளார். இவரது கவிதைகள் பல, கல்கி தீபாவளி மலர்களில், சிறப்புத் தகுதி பெற்று வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.
பாரதி மின் அச்சகம் என்ற பெயரில் அச்சகம் நிறுவி கடினமான அச்சுத்தொழிலில் 28 ஆண்டுகள் உழைத்து, போராடி வென்றவர். அச்சகம் வைத்திருந்தும், தன் கவிதை படைப்புகளை, நூலாக வெளியிடாத ஒரே கவிஞர் இவர். எளிமையான, அமைதியான வாழ்க்கையை மேற்கொண்ட இவர், அம்ஜத்பாரதி அறக்கட்டளை நிறுவி, பல கல்வி உதவிகள் புரிந்தவர்.
தன் 50-வது வயதில் (1959-2009) கவிஞர் இன்னுயிரை நீத்தார். அவர் வாழ்ந்தாலும் மறைந்தாலும், பேர் சொல்ல அவரது கவிதைகள் பல உண்டு... சமீபத்தில் தான் அவரது கவிதைத் தொகுப்பு கிடைத்தது... அவரின் படைப்புகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளப் பெருமைப்படுகிறேன்... அவரது படைப்பில் இதோ எனது ஊரைப் பற்றி... (கிட்டத்தட்ட இன்றும்)
வளர வேண்டியது வளரவில்லை... வளரக் கூடாதது வளர்கிறது...
மலைக்கோட்டை - திண்டுக்கல் நகரத்தின்
முகமே இது தான் ! முகவரியும் இது தான் !
பெயர்ப் பலகை படிக்காமலே - திண்டு - கல் (திண்டு போன்ற கல்)
இதுதானென்று எல்லையிலேயே கண்டு கொள்ளலாம் !
சிறுமலை-கொடைக்கானலின் குழந்தையிது ! திண்டுக்கல்லின் சிகரம் இது !
பனியில் குளிக்கும் எழில் மலை ! எளிய மலை !
இது இன்னொரு பழமுதிர்சோலை ! இங்கே விளையும் பழங்கள்
உலக ஒருமைப்பாட்டுக்கே பாலங்கள் !
அரண்மனைக் குளம் - தலைநகரத்துக் கூவத்தின் திண்டுக்கல் கிளை இது !
அன்றாடம் இங்கே கொசுக்களின் கும்பமேளா தான் !
நம் அரசியலை விட அதிகம் நாற்றமடிப்பது !
மலேரியாவை இலவசமாய்ப் பரப்புவது !
ரயில் நிலையம் - நாம் சந்திக்க வேண்டிய ரயில் நிலையம் இது !
இங்கே ரயில்கள் மட்டுமல்ல; அகல ரயில் தண்டவாளங்களே
தாமதமாகத் தான் வந்தன ! விக்ரமாதித்ததன் காலத்திலேயே இருந்தது !
நவீனப் படுத்தியதால் நகரம் சற்று விரைவாய் வளர்கிறது !
பேருந்து நிலையம் - வெறும் வர்த்தக நிலையமாய்
மாறி வருகின்றது. அவ்வளவு கடைகள் !
சாலைப் பள்ளங்கள் - இந்தியாவில் சகஜம் !
நிலையத்திலேயே பள்ளங்கள் திண்டுக்கல்லின் விசேஷம் !
தொழில் வளம் - நூற்பு ஆலைகளும், கல்விச் சாலைகளும் நிறைந்த நகரம் !
ஆனாலும் - வேலைவாய்ப்பு வற்றிக் கிடக்கும் இடம் !
புகையிலை திண்டுக்கல்லின் புகழுக்கு வாசம் சேர்க்கும் !
பூட்டுத் தொழிலில் - இதன் சாதனையை யாரும் பூட்டி வைக்க முடியாது !
சுற்றுச் சூழல் கேடு - தலையைச் சுற்ற வைத்தாலும், தோல் தொழிலின்
வளர்ச்சி, பொருளாதாரத்தில் தலை நிமிரச் செய்வதுண்மை !
சாலை இங்கே யாரும் சாலை மறியல் செய்வதில்லை !
சாலையின் மேடு பள்ளங்களே - அதைச் செய்து விடுவதால் !
வரனுக்குக் காத்திருக்கும் கன்னியைப் போல்
நல்ல சாலைகளுக்காக நகரமே காத்திருக்கிறது !
மக்கள் - ஆடம்பரச் சாயம் அதிகம் பூசிக் கொள்ளாதவர்கள் !
சிக்கனமான நகரங்களில் இது தான் சிகரம் !
ரவுடியிசம் இல்லாத அமைதிப் பூங்கா - திண்டுக்கல் !
இது எப்போதும் தன் பெருமை குன்றாத - வைரக்கல் !
எனது இஸ்லாமிய நண்பர்களுக்கு, இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...
பாட்டு வரிகள் எழுதி ரொம்ப நாளாச்சே... இன்று 2 திரைப்படங்கள் மட்டும்...
(1) சொர்க்கமே என்றாலும்... அது நம்மூரைப் போல வருமா...?
அட... ! எந்நாடு என்றாலும்... அது நம் நாட்டுக்கீடாகுமா...?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்... தமிழ் போல் இனித்திடுமா...?"
(2) யாதும் ஊரே யாவரும் கேளீர்... அன்பே எங்கள் உலக தத்துவம்...
நண்பர் உண்டு... பகைவர் இல்லை... நன்மை உண்டு... தீமை இல்லை..."
(1) ஊரு விட்டு ஊரு வந்து - வந்த அனைவருக்கும், அவரவர் ஊரை -
நினைத்தாலே இனிக்கும் (2)
பாடல்கள் நிறைய அறிந்து கொள்ள இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
விருது கிடைத்தமைக்கு-
பதிலளிநீக்குநல வாழ்த்துக்கள் !
நண்பரே!
மறைந்த கவிஞர் நூலை-
வெளியிட ஏதாவது நுயற்சி எடுக்கலாம்!
நல்ல நல்ல கவிதைகள்!
வாழ்த்துக்கள்!
வலைச்சரத்தில்-நோக்கம் (அறிமுகம்)
வை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து விருது பெற்றதற்கும், விருது பெற்ற அனைத்து பதிவர்களையும் வாழ்த்தியதற்கும் நன்றி.
பதிலளிநீக்குபதிவர்களை பாராட்டுவதும், அவர்களை மேலும் எழுத தூண்டும் பின்னூட்டங்களும் தந்து ம்கிழ்விப்பதையும் சிறப்பாகச் செய்வார் வை.கோபாலகிருஷ்ணன் சார். அவருக்கு வாழ்த்துக்கள்.
கவிஞர்அம்ஜத் பாரதி அவர்களின் ஊர் பெருமை கூறும் பாடல் நன்றாக இருக்கிறது.
நீங்கள் பகிர்ந்து கொண்ட பாடல்கள் இரண்டும் அருமை.
சொந்த ஊரை மறக்க முடியுமா!
Oor paasam pathivil therikirathu
பதிலளிநீக்குVaalthukkal
அருமையானவர்களை
பதிலளிநீக்குமிக மிக அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
அவருடைய கவிதையினை பதிவாக்கிக் கொடுத்தது
கூடுதல் சிறப்பு
(தங்களை சென்னையில் சந்திக்கக் கூடும் என நினைக்கிறேன் )
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
பதிலளிநீக்குதிண்டுக்கல் வந்த போது உங்களை சந்திக்காமல் போனேனே என எண்ண வைத்து விட்டீர்கள். இன்னொரு முறை வந்தால் உங்களை நிச்சயம் சந்திப்பேன்
பதிலளிநீக்குவிருதுக்கு நல வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குவிருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோ..உலகின் எந்த மூலைக்கு போனாலும் சொந்த ஊரை அதன் பெருமையை யாரும் மறக்க முடியாது.
பதிலளிநீக்குதிட்ட திட்ட திண்டுக்கல் வைய வைய வயிரக்கல்!
பதிலளிநீக்குதிண்டுக்கல்லும் நம்ம ஊர் தான்!
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிடமிருந்து விருது பெற்றதற்கும், விருது பெற்ற அனைத்து பதிவர்களையும் வாழ்த்தியதற்கும் இனிய நன்றிகள்.
பதிலளிநீக்குதன் பெருமை குன்றாத - வைரக்கல்லாய் திகழும் திண்டுக்கல் பற்ரிய சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
வாழ்த்துகள் !
பதிலளிநீக்குமிகவும் அருமை! தொடருங்கள் நண்பரே....
பதிலளிநீக்குஇன்னும் பல விருதுகள் பெற்று இணையத்தில் செழித்திட என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குcomment moderation பற்றி எனக்கு தெரியவில்லை ஐயா. முடிந்தால் அதைப்பற்றி விளக்கம் தாருங்களேன். உரிமை உள்ளவர்களிடம் தான் நிறைய எதிர்பார்க்க முடியும். நண்பன் என்ற உரிமையில் நான் உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநான் வளர்ந்த ஊரின் பெருமைகளை பற்றிய நல்ல கவிதை . நன்றி நண்பரே
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே ,
பதிலளிநீக்குதிண்டுக்கல்லை நேரடி விசிட் செய்த உணர்வு ,நன்றி திண்டுக்கல் பற்றிய இரத்தின சுருக்க விளக்கம் அருமை .
விருது பெற்றதற்கு வாழ்த்துகள் அதுவும் கோபால் சார் கையால் விருது. மேலும் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிருதினை அன்புடன் ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ள மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
பதிலளிநீக்குஅதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தங்களுக்கு மேலும் ஒரு விருது என்னிடமிருந்து வெகு விரைவில் கிடைக்க உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
====================
தன் பெருமை குன்றாத - வைரக்கல்லாய் திகழும் திண்டுக்கல் பற்றிய சிறப்பான பகிர்வுகள்..
காட்டப்பட்டுள்ள வைரக்கல்லைப் பார்த்ததும், எனக்கு ஏனோ நம் தோழி ஸாதிகா அவர்களின் நினைவு வந்தது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
வை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து LIEBSTER AWARD விருது வென்றதற்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குகவிஞர்அம்ஜத் பாரதி அவர்களின் அற்புதமான கவிதையை இங்கே பதிந்தமைக்கு நன்றி...
//கோமதி அரசு said...
பதிலளிநீக்குவை.கோபாலகிருஷ்ணன் சாரிடமிருந்து விருது பெற்றதற்கும், விருது பெற்ற அனைத்து பதிவர்களையும் வாழ்த்தியதற்கும் நன்றி.
பதிவர்களை பாராட்டுவதும், அவர்களை மேலும் எழுத தூண்டும் பின்னூட்டங்களும் தந்து ம்கிழ்விப்பதையும் சிறப்பாகச் செய்வார் வை.கோபாலகிருஷ்ணன் சார். அவருக்கு வாழ்த்துக்கள்.//
தங்களின் சரியான புரிதலுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
=================
இராஜராஜேஸ்வரி said...
வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிடமிருந்து விருது பெற்றதற்கும், விருது பெற்ற அனைத்து பதிவர்களையும் வாழ்த்தியதற்கும் இனிய நன்றிகள்.//
ஆஹா, இங்கும் வந்து இப்படி என் மனதை ஜில்லிட்டுப்போக வைத்து விட்டீர்களே ! ;)))))
நன்றியோ நன்றிகள்.
====================
//Lakshmi said...
விருது பெற்றதற்கு வாழ்த்துகள்
அதுவும் கோபால் சார் கையால் விருது. மேலும் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்.//
ஆஹாஹா! ;)))))
அநேக நமஸ்காரங்கள் மேடம்.
====================
முப்பெரும் தேவியர்களாகிய தங்கள் மூவருடனும் மேலும் ஓர் விருதினை நான் வெகு விரைவில் பகிர்ந்து கொள்வதாக உள்ளேன்.
என்றும் அன்புடன்
VGK
கவிதையும் , திரைப்பாடலும் அருமை.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
விருது வாங்கிய உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சார்... ரவுடியிசம் இல்லாத ஊர் கேட்கவே மகிழ்வாய் உள்ளது
பதிலளிநீக்குமுதலில் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குமலைக்கோட்டையை நீங்க மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது!!
'மலைக்கோட்டை மாநகரம்' தெரியுமோ?
(நகைச்சுவைக்கு மட்டுமே!)
பதிவைப் பற்றி:
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன்,
கண்மணி என் கண்மணி!
ஞானம் பொறந்திருச்சு, நாலும் புரிஞ்சிருச்சு,
கண்மணி என் கண்மணி!
\\ஊரு விட்டு ஊரு வந்து - வந்த அனைவருக்கும், அவரவர் ஊரை -
நினைத்தாலே இனிக்கும்\\
உண்மை தான்.
இன்றும் எனது ஊருக்கு செல்லும் பேருந்தைப் பார்த்தாலே மனம் பரவசமடையும்!
வாழ்த்துக்கள் நண்பரே....
பதிலளிநீக்குவைகோ ஐயாவிடமிருந்து விருது பெற்ற உங்களுக்கு என்னுடைய இதய்ம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே.
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதிண்டுக்கல்லுக்கே போய் வந்தது போல் இருந்தது கவிதை
விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோ...வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குதிண்டுக்கல் பூட்டுக்கு தானே பிரபலம் மலைக்கோட்டை திருச்சிக்கு அல்லவா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
கவிஞர் அம்சத் பாரதி பற்றிய தங்களது அறிவிப்பும் தங்களது முயற்சியும் சிறப்பு. வாழ்த்துக்கள். சொந்தவூர் பற்றிய (திண்டுக்கல்) தங்களது செய்திகள் அருமை. பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுதல்களும்.
பதிலளிநீக்குகா.ந.கல்யாணசுந்தரம்.
நீதான் அந்த குயில்
பதிலளிநீக்குவண்ண மயில்,
தமிழுக்கு எழில் சேர்க்கும் ஒயில்
வாழ்த்துக்கள்
விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபாட்டுக்கு பாட்டெடுத்து எழுதும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, தாங்கள் LIEBSTER AWARD பெற்றமைக்கு எனது வாழ்த்துக்கள்! நம்ம ஊர் பெருமையைப் பற்றி நாம் சொல்லாமல் வேறு யார் சொல்லப் போகிறார்கள். முன்பு ஒருமுறை உங்களுக்கு மறுமொழி தந்தபோது நான் சொன்ன தகவல். (13.08.12)
பதிலளிநீக்கு// உங்கள் ஊர் தகவல் ஒன்று. ஞான சித்தன், ஞானவெட்டியான், ஆலயங்கள் என்று ஆன்மீக கட்டுரைகள் எழுதி வரும் ஆசிரியர் திண்டுக்கல்லில் தான் இருக்கிறார். அவர் எங்கள் வங்கியில் அதிகாரியாக பணியாற்றியவர்.//
திண்டுக்கல் பற்றிய அழகான,விபரமான அறிமுகம்.வரவேணும்போல இருக்கு !
பதிலளிநீக்குஇன்னும் விருதுகள் பெற வாழ்த்துகள் சகோ !
கவிஞரின் திண்டுக்கல் கவிதை அறிமுகம் அருமை.
பதிலளிநீக்குமாலை வேளைகளில் மலைக்கோட்டையில் அமர்ந்ததும்,அபிராமி அம்மன் கோவிலும், சோலைஹால் ஆங்கிலப்படங்களும் நினைவுக்கு வருகின்றன.
த.ம.8
பதிலளிநீக்குகவிஞரை பற்றியும் ஊரைப்பற்றியும் சிறப்பான பகிர்வு! அம்ஜத் பாரதியின் சில கவிதைகளை நானும் படித்ததுண்டு என்று நினைக்கிறேன்! நல்ல பகிர்வு! நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html
எனக்கு சொந்த ஊர் திருச்சி தான்,
பதிலளிநீக்குஆனால் நீங்க சொன்ன விஷயம் மிகவும் புதிது எனக்கு.
நன்றி..
வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவிடமிருந்து விருது பெற்றதற்கும், விருது பெற்ற அனைத்து பதிவர்களையும் வாழ்த்தியதற்கும் நன்றி.
பதிலளிநீக்குஅருமை....அருமை சகோ.....
விருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குநல்ல பதிவு! (TM 9)
திண்டுக்கல் பற்றிய அருமையான விளக்கம். பகிர்விற்கு நன்றி. TM 10 போட்டாச்சு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே....
பதிலளிநீக்குCongratulations for getting another Award - Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பதிலளிநீக்குஅவரவர் ஊரின் வாசமும் பாசமும் அவரவர் மனதில் இருக்கும். திண்டுக்கல் பற்றி நல்லதொரு பதிவு. விருதுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழரே... மேலும் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்...உங்கள் பணிவுக்கு திறமை வளர்ந்துகொண்டே போகும் இன்னும் பல விருதுகள் உங்கள் வழியில் காத்துகிடக்கின்றன..
பதிலளிநீக்குவிருது கிடைத்தமைக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு-வீரா
திண்டுக்கல் பற்றி சொன்னது அருமை. குறைகள் இருந்தாலும் நம்ம ஊரைப் போலாகுமா என்றும் சொல்லிவிட்டீர்கள் சூப்பர்!
பதிலளிநீக்குத.ம.12
விருதுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பு நண்பரே தாங்கள் பெற்ற LIEBSTER AWARD விருது மேலும் மேலும் உங்களை உற்சாகமடைய செய்யவேண்டும். உங்கள் பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிண்டுக்கல் பற்றிய தகவல்கள் அருமை.
ஒரு அருமையான மனிதரைப் பற்றிய பகிர்வை தந்தமைக்கு நன்றிகள் !!! கவிஞர் அம்ஜத்பாரதியின் கவிதைகள் இறுதிவரை அச்சில் ஏறவே இல்லையா ??? இளம் வயதில் இறந்துவிட்டாரே என்ற ஆதங்கமும் எழுகின்றது !!!
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்கு//எனக்கு LIEBSTER AWARD விருது வழங்கியதற்கு நன்றியையும், விருது பெற்ற 108 நண்பர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..// வாழ்த்துக்கள் சகோதரரே.
திண்டுக்கல்லைப் பற்றி நல்ல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.
அருமையான பதிவு.

நான் இடும் கருத்துக்கள் உங்கள் வலைப்பூவில் PUBLISH ஆகவில்லை. தயவு செய்து கவனிக்கவும்.
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தகவல் அருமை...
வணக்கம்!திண்டுக்கல் அழகு தங்கள் பதிவுகளைப்போலவே!
பதிலளிநீக்குவிருது பெற்றமைக்கு எனத இனிண வாழ்த்துக்கள் சொந்தமே!
கவிஞனுக்கென்று ஓர் கர்வம்!என்பார்கள்.அதைத்துறத்தல் பெரிய தவம் தான்.வாழ்த்துக்கள் அக்கவிஞனுக்காய்!
கவிதை அருமை!
கவிஞரின் புகைப்படம் பகிர்ந்திருக்கலாம்.
பதிலளிநீக்குவிருது கிடைத்தமைக்கு-
பதிலளிநீக்குநல வாழ்த்துக்கள் !
வாழ்த்துகள் தோழரே.
பதிலளிநீக்குவிருது கிடைத்தமைக்கு நல வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமுதலில் “LIEBSTER AWARD” விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே, மற்ற விருது பெற்ற 108 நண்பர்களுக்கும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான கவிஞரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். கவிஞரின் கவிதை அருமையாகவுள்ளது. அவருடைய படைப்புக்களை நூலாக வெளியிட முயற்சிக்கலாம் நண்பரே.
திண்டுக்கலை பற்றி நல்லவிதமாக அருமையாக கூறியுள்ளீர்கள். திண்டுக்கல் பலமுறை வந்து சென்றிருக்கிறேன். இனிவரும் போது இப்பதிவில் கூறப்பட்டவைகளை கூர்ந்து நோக்குவேன்.
// (1) ஊரு விட்டு ஊரு வந்து - வந்த அனைவருக்கும், அவரவர் ஊரை -
நினைத்தாலே இனிக்கும் (2) // ஆம் நினைத்தாலே இனிக்கும்.
"நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
பதிலளிநீக்குநல்லார் சொற் கெட்பதுவம் நன்றே-நல்லார் ளுரைப்பதுவும்
நன்றே அவரோடிணங்கி யிருப்பதுவும் நன்று."
விருது கிடைத்தமைக்கு-
நல வாழ்த்துக்கள் !
{எனக்கு அவர் மூன்று விருது அளித்துள்ளார்!}
தாமரை மதுரை,மாதேஸ்வரன் மதுரை பார்க்கவும்
பதிலளிநீக்குநல்ல பதிவுகள் மூலம் மனதில் நல்ல எண்ணங்களை வளர்க்கப் பாடுபடும் தங்களுக்கு இன்னும் பல விருதுகள் வழங்கப்பட வேண்டும்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தனபாலன்.
பிந்திய வாழ்த்துக்கள் சார் கோவிச்சுக்காம பெற்றுக் கொள்ளுங்கள்..
பதிலளிநீக்குதிண்டுக்கல் கவிதை அருமை...
வாழ்த்துக்கள் விருது பெற்றுக்கொண்டமைக்கும்
பதிலளிநீக்குஅழகிய பகிர்வு இதனைப் பகிர்ந்துகொண்டமைக்கும் .
விருதுக்கு வாழ்த்துக்கள் sakothara.
பதிலளிநீக்குஇது லிப்ஸ்ரர் அவாட்டா?.
Fabulous blue riban award அல்லவா? எனக்கும் கிடைத்ததே.
பெயரை சரி பாருங்கள் சகோதரா. நீங்கள் தவறாக எழுதியுள்ளீர்கள் என்று எண்ணுகிறேன்.
வேதா. இலங்காதிலகம்.
நவாழ்த்துக்கள் தனபாலன் சார்.
பதிலளிநீக்குதாமதத்திற்கு மன்னித்துகொள்ளுங்கள் பாஸ் நீண்ட காலமாக வலையுலகிற்கு வரவில்லை.
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு உண்மையாக திண்டுக்கல் பூட்டின் பெருமை தவிர வேறு எதுவும் தெரியாது ஆனால் உங்கள் கவிதை என்னுள் ஒரு திண்டுக்கல் கற்பனையை விதைத்திருக்கிறது.
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதிண்டுக்கல்லுக்கு மீண்டும் வரவைத்துவிட்டீர்கள்.
முன்பு பலதடவைகள் திண்டுக்கல் வந்திருக்கின்றேன்.
வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு
பதிலளிநீக்குதிண்டுக்கல் எனக்கும் ரொம்பப்பிடிக்கும்
பதிலளிநீக்குநன்றி நண்பரே. வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதை தெரியப்படுத்திமைக்கு நன்றி நண்பரே. தங்களின் வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குஅன்பு தனபாலன் ,திண்டுக்கல்லைப் பற்றி எழுதியதற்கு மிகவும் நன்றி. நான் பார்க்க ஏங்கும் நகர்களில் இதுவும் ஒன்று. விட்டு விட்டு வந்து 47 வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தம் நெஞ்சம் மறப்பதில்லை அல்லவா.முடிந்தால் திண்டுக்கல் படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.படத்திலாவது பார்க்கிறேன் நான் வாழ்ந்த நகரத்தை.
பதிலளிநீக்குவிருதுக்கு நல வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குஇனிய சந்திப்பு
பதிலளிநீக்குபதிவர் விழாவில்
வாழ்த்துக்கள்
நன்றி
பதிவு அருமை. திண்டுக்கல்லை பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள்! கவிஞரின் கவிதைகள் நன்று.
பதிலளிநீக்குanna naan pirandhu valarndha nagar idhu. en dhanthaiyudan sutriya main road, mounsepuram, arasamaram. naan paditha vasavi school ellam nivaivukkoo varugiradhu
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்
பதிலளிநீக்குநண்பர் வை.கோவிடம் இருந்து விருது பெற்றமைக்கு நல்வாழ்த்துகள்
திண்டுக்கல் பற்றிய அறிமுகம் தங்கள் நண்பர் கவிஞர் அம்ஜத் பாரதியின் கை வண்ணத்தில் வந்தது நன்று.
நல்வாழ்த்துகள் தனபாலன்
நட்புடன் சீனா
திண்டுக்கல் பெயர்க்காரணமும், அதன் நிறை குறைகளை கவிதையின் வாயிலாய் வெளிப்படுத்தியமையும் நன்று சகோதரரே. கவிதைகள் வெகுவாய் ரசிக்கும்படிக்கும், தொகுத்துள்ள விதம் அழகாகவும் இருக்கிறது. கவிஞரைப் பற்றியும் அவரின் எழுத்துக்களைப் பற்றியும் அறிந்திரா விடயங்கள் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்கு- நுண்மதி.
வாழ்த்துகள் நண்பரே....
பதிலளிநீக்குசிறந்த கவிஞரை பற்றி அறிந்து கொண்டேன்! நன்றி!
பதிலளிநீக்குகவிதை நன்று! விருது பெற்றதற்கு வாழ்த்து !தனபால்!
பதிலளிநீக்குஇன்றுதான் இப்பதிவைப் படிக்கிறேன். விருதிற்கு வாழ்த்துகள் அண்ணா.
பதிலளிநீக்குநண்பர்களுக்கு ரமலான் வாழ்த்துகள். (சரியான நாளில் தான் படித்திருக்கிறேன் :) )
இப்படிப்பட்ட கவிஞர் பல்லாண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும்! 50 வயதிலேயே மறைந்து விட்டார் என்பது வேதனை!
பதிலளிநீக்கு