🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வலைப்பூவிலுமா...?

வணக்கம் நண்பர்களே... மின்னஞ்சல் மற்றும் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் முக்கியமாகச் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும் அறிந்தோம்... இங்கே சொடுக்கி முந்தைய பதிவை "முடித்து" விட்டுத் தொடர்ந்தால் நல்லது... நன்றி...


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 22.07.2020

எனது தளம் ஆரம்பத்தில் எப்படி இருந்தது கன்னங்கரேலெனத் தளம் (கருப்பு தான் எனக்குப் பிடித்த கலரு...!) + பல படங்களுடன் தளத்தின் பெயர் பேனர் (கடையா நடத்துகிறோம்...?) + அதிக வலைப்பூ அகலம் (அதிக பட்சம்-1000 px தான் இருக்கவேண்டும்) + அழகான நிறையப் படங்கள்... (என் ரசனையப்பா...!) நிஜ வாழ்க்கையில் தான் நம் விருப்பப்படி வாழ்கிறோம்... வலைப்பூவிலுமா...?

மனமே கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டாயா...? ம்... வாசிப்பவர்களுக்குப் பிடிக்குமா...? அல்லது உதவுமா...? என்று சிந்திக்கவே இல்லை... (எனது தங்கம் எனது உரிமை...!) Gadgets + மனசாட்சியுடன்...

Running text வருக + நன்றி, கண்டிப்பாகச் சொல்லியேத் தீரவேண்டுமா...?

Slide Show நன்றாகத் தான் இருக்கும்... சீக்கிரத்திலே வலைப்பூ திறக்காதே Loading... ...!

Recents Posts or Comments என்னமோ தினம் ஒரு பதிவைப் போட்டு____(?)

Live Traffic Feed (Feedjit/Bluehost) யார் படிக்கிறாங்ன்னு கண்டுபிடித்து...?

Awards List இது உடம்புக்கு ஆகாது தம்பி... முகப்பில் தனிப்பக்கத்திற்கு (Pages) கொண்டு போ...!

Thiratti Logo சொடுக்கினால் நம் பதிவை இணைத்துக் கொள்ளுமா...? அவ்வாறு இப்போது இருக்கிறதா...?

FM மனதில் பாட்டும் நன்மையே... இங்கேயுமா...?

Clock கணினியிலே இருக்குமே...!

Pop-up-@ opening ஐயோ... அய்யய்யயோ...!

Stats/Hit counter கொமட்டுலே குத்துவேன் !

Thirukkural க்கும் படித்து விட்டாலும்...!

Thiratti Rank Lists மனசைக் கெடுத்துக் கொள்ளாதே...!

Weather இனி என்றைக்கும் வெயில் தான் !

My site is worth ஹா... ஹா... ஹா... ஹா...

Labels தளத்திலே ¾ வாசி இடம் அடைப்பது இதுவே... குறைத்து தனிப்பக்கத்திற்கு (Pages) கொண்டு போ...!

Blog List 300 வலைத்தளங்களை மட்டும் இணைக்க முடியும்... எனது நட்பின் எல்லையில்லா பட்டியலைக் கூகுளுக்குத் தகவல் அனுப்புவோம்...!

Font Size மிகச் சின்னதாக இருந்தால் Ctrl கீயை அழுத்திக் கொண்டு, படிக்க முடியுற அளவிற்கு {+} ப்ளஸ் கீயை சொடுக்கு அல்லது தேவை →

Visitors Map விட்ஜியோ (Widgeo) இருந்தால், தளத்தில் எங்கு சொடுக்கினாலும், திடீரென்று ஒரு Pop-Up window-வில் விளம்பரம் வரும் !

இன்னும் Currency Converter ∫ pdf Converter ∫ Quotes ∫ Animated Cursor ∫ Featured Video ∫ Fish Tank ∫ Cricket score + அங்கங்கே g+, Gadget தலைப்புகள் மட்டும், -, -, போதும் சாமீ...! நன்றி மனமே...! தேவையில்லை என்று நினைத்தவுடன் "எப்படி நீக்குவது...?" என்றால், அந்தந்த Gadget-ன் Edit-யை சொடுக்கி »» Remove...! இனி புதிய பதிவர்களுக்கு :-

முக்கியத் தேவையான உபகரணங்கள் (Gadgets) : இடது புறத்திலுள்ள Layout-யை சொடுக்கவும்... Profile Gadget-க்கு கீழே edit-யை சொடுக்கி, திருத்தம் செய்யவும்... உங்களைப்பற்றிய தகவல்கள் எவை உலகத்திற்கு தெரிய வேண்டுமோ, அதற்கேற்றவாறு மாற்றி விட்டு சேமிக்கவும்... »» அடுத்து Add a Gadget-யை சொடுக்கி, »» வரும் popup திரையில், கீழே உள்ளவைகளைத் தேடி ஒவ்வொன்றாக, Gadget-டுக்கேற்ற தமிழ்த் தலைப்போடு இணைக்கவும்... அனைத்தையும் இணைத்த பின், தலைப்பை மாற்ற / திருத்த, அந்தந்த Gadget-ன் Edit-யை சொடுக்கி திருத்தியபின் »» Save

Gadget-ன் வரிசையை மாற்ற, சுட்டியை அதன் மேல் அழுத்தி மேலும் கீழும் (Dragging and Dropping Method) உங்கள் விருப்பப்படி வைத்து விட்டு, மேலுள்ள Preview-வை சொடுக்கிப் பார்த்து திருப்தியானவுடன் »» Save arragements-யை சொடுக்கவும்...

01 Search Box - தேடுதல்
02 Follow by Email - புதிய பதிவுகளைப் பெறுவதற்கு
03 Profile - என்னைப் பற்றி
04 Contact Form - தகவல் அனுப்ப
05 Follower - தொடரும் நட்புகள்
06 Blog Archive - பதிவுகளின் தொகுப்பு
07 Popular Posts - பிரபல பதிவுகள்
08 Labels - குறிச் சொற்கள்
08 Translate - மொழி மாற்றம்
09 Blog's stats - பார்வையாளர்களின் எண்ணிக்கை


மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com

இவ்வளவும் இருக்கும் வலைப்பூக்களை விரைவாக திறக்க இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா.
    இப்பதிவிற்கான தங்களின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. நீங்க மட்டும் தான் எல்லா பதிவிலும் முதல் ஆளாக பின்னூட்டம் போட முடியுமா? இப்ப நாங்களும் உள்ளே வருவோம்லே.

    பதிலளிநீக்கு
  3. நீங்க சொல்லியிருக்குற அத்தனை அணிகலன் ஆபரணங்களை சுமந்து கொண்டு இருந்தால் என்னவாகும். பல சமயங்களில் படிப்பதை விட்டு ஆபரணங்களை ரசிக்கத்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
  4. பதிவு எழுதுவதைவிட இணைப்பதெல்லாம் கடியான வேலைதான். சில சமயங்களில் பிரச்சனையாக உள்ளது. பலருக்கு தகவல்கள் உதவியாயிருக்கும் என்று நினைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இனிய இனிக்கும் பதிவு
    நம்ம பதிவர்கள்
    வலைப்பூவால் புகழீட்ட
    நல்ல வழிகாட்டல்
    ஆயினும் தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்நண்பர்கள் போன்ற திரட்டிகள் தானியங்கியாக இயங்குவது போல ஏனையவை செயற்படுகிறதா? பதிவர்களுக்குத் தானியங்கித் திரட்டிகள் இலகுவாயிருக்கும் என நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. ஐயோ!!!!!!!! இவ்வளவு செய்யணுமா? தலை சுத்துதே:(

    பதிலளிநீக்கு
  7. மிக்க பயனுள்ள பதிவு. நிறைய செய்திகள் கொடுத்திருக்கிறீர்கள். புதிய பதிவர்கள் இரண்டு மூன்று முறை படித்தால் மிக்க பயனடைவர். அன்பர் காசி ராஜலிங்கத்தின் கேள்விகளுக்கு உங்களது அடுத்த பதிவு பதிலாய் இருக்கும் என நினைக்கிறேன்.

    நன்றிகள்.

    God bless You

    பதிலளிநீக்கு
  8. புதிய தகவல்களைத் தெரிந்துகொண்டேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள சகோதரர் தனபாலன் அவர்களுக்கு
    வாழ்த்துகள் .
    தங்களது சேவை 'தான் பெற்ற மகிழ்வு,அறிவு மற்றவருக்கும் சேர வேண்டும்' என்ற பெரிய மனதோடு செயல்படுவது மிகவும் போற்றுதற்குரியது . தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டாலும் மன மகிழ்வுடன் தாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைவாக விளக்கம் கொடுப்பதனை நினைத்து மிகவும் நன்றியோடு மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்
    உங்கள் அன்பு சகோதரன் .

    பதிலளிநீக்கு
  10. ஐயய்யோ, வாசித்த எனக்கே தலையை சுற்றுது, இதை எல்லாம் தேடிக் கண்டுபிடிச்சு வலையில் சேர்த்து தொகுத்து எழுதின உங்களை நினைச்சா, கலக்கல் ... !

    பதிலளிநீக்கு
  11. பதிவர்களுக்கு வழிகாட்டும் அருமையான பதிவுகள் ,இதைப் பார்த்தபிறகுதான் என்ன செய்ய வேண்டுமென்ற பல விஷயங்கள் தெரியவருகிறது,மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  12. அடேங்கப்பங்கப்பா... இவ்ளோ விசயம் கீதா...? நா ஒரு ரெண்டு மூணு திரட்டிகள்ல மட்டும்தான் இணைக்கிறேன்... அதுக்கே தாவு தீந்து போயிருது... நெறைய விசயங்கள் தெரியாதவை... அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி வாத்யாரே...!

    பதிலளிநீக்கு
  13. அடேயப்பா... எவ்வளவு விவரங்கள்! மிக மிக நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  14. வித்தியாசமான ப்ளாக்கர் தொழில் நுட்பப் பதிவு.குறியீடுகளும் கம்மேன்ட்சும் சூப்பர்.
    சிலைக்கழகு சேர்க்கும் சிறுநுட்பம் உந்தன்
    வலைக்கழகு சேர்க்கும் வடிவம்

    பதிலளிநீக்கு
  15. எனக்கு மிகவும் தேவையான நிறைய தகவல்களை தந்துள்ளீர்கள். சென்ற பதிவை படித்துவிட்டு நான் இன்னமும் என்னுடைய வலைத்தளத்தை மாற்றம் செய்யவில்லை.

    இந்த இரண்டு பதிவுகளின் உதவியால், நான் இந்தியா சென்று திரும்பிய பிறகு, என்னுடைய வலைப்பூவை மாற்றலாம் என்று இருக்கிறேன்.

    இம் மாதிரியான தகவல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
  16. யப்பா.... அவசரமாகப் படித்ததும் தலை சுற்றுகிறது.
    பொறுமையாகப் படிக்க வேண்டும்.

    மிக்க நன்றி.

    அது சரி தனபாலன் அண்ணா.... நிறைய ஓட்டுவிழ என்ன செய்யனும்..;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒட்டு விழ நீங்க முதல்ல ஒட்டு மரத்துக்கு கீழே நிக்கணும்.. அப்புறம் பலம் கொண்ட மட்டும் அதை உலுக்கனும்.. அப்புறம் பாருங்க எவ்வளவு ஒட்டு விழுதுன்னு..

      நீக்கு
    2. ஓ .....இப்படியும் ஒரு வழி இருக்கா !! முதல்ல இந்தாள உலுப்பணும் திண்டுக்கல் சகோதரா எனக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கள் .எங்க வந்து என்ன பேசுகிறார் பாருங்கள் ?...:))))))))))))

      நீக்கு
  17. அன்பின் தனபாலன்!..
    யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - என,
    நல்ல குறிப்புகளைத் தந்து வழிகாட்டிச் செல்லும்
    தங்களுக்கு மிக்க நன்றி!..

    பதிலளிநீக்கு
  18. இவ்வளவு தகவல்களை எப்படி எல்லோருக்கும் புரியும் மாதிரி அழகாத் தொகுத்து பதிவு செஞ்சீங்களோ....பெரிய ஆளுதான் நீங்க :)
    நன்றி!

    பதிலளிநீக்கு
  19. யப்பா... இவ்வளவு விஷியங்களா?? தகவலுக்கு மிக்க நன்றி .....

    பதிலளிநீக்கு
  20. கழுத்தை நீட்டுங்கள்! வழக்கம் போல உங்களுக்கு ஒரு பூமாலை! புகழமாலை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. ரொம்ப நிறைய தகவல்களை சொல்லியிருக்கீங்க.. நன்றி..

    பதிலளிநீக்கு
  22. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  23. பயனுள்ள குறிப்புகள். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  24. உங்களுடைய இந்த இடுகை ஒரு பொக்கிஷம் போன்று சேமித்து வைத்து அவ்வப்போது படித்து செய்துக்கொள்ள வேண்டிய பல விஷயங்களைக் கொண்டுள்ளது. அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. பயனுள்ள பதிவு கூடுதலாக...கேஜேட்கள் + மனசாட்சி சூப்பரோ..சூப்பர்

    பதிலளிநீக்கு
  26. ஏதோ வலைப்பூ ஆரம்பித்து எழுதி வருகிறேன் எதையாவது செய்யப்போக இருப்பது எல்லாமே போய்விட்டால் என்ன செய்வது என்று பயம் . பிரபல கணினி விற்பன்னர்களின் பதிவுகளே காணாமல் போய் விடுவதைப் படிக்கும் போது எதையும் செய்து நோக்க திடம் இல்லை என்பதே உண்மை. உங்கள் இந்தப் பதிவுசேமித்து வைத்துக் கொள்கிறேன் . நன்றி.

    பதிலளிநீக்கு
  27. பயனுள்ள பதிவு சார், நான் நிறைய இதை படித்து கற்று கொண்டு இருக்கிறேன், வலைத்தளம் புது பொலிவு பெற போகிறது என்பது தெரிகிறது. தொடர்ந்து வருகிறேன்.

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  28. என்ன ஓர் அருமையான படைப்பு !எல்லோரும் எளிதில் புரிதுகொள்ளும்
    வண்ணம் மிகச் சிறப்பாக இப் பகிர்வினையும் தந்துள்ளீர்கள் சகோதரா .
    வாழ்த்துக்கள் மென்மேலும் இது போன்ற ஆக்கங்கள் பொலியட்டும் .
    மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  29. ஆஹா! ஹ டெக் வாத்தியாரே! மிகப் பயனுள்ள ஒரு பதிவு ! நாங்கள் இதையும் குறித்து வைத்துக் கொண்டுவிட்டோம் தேவைப்படும் போது ரெஃபெர் செய்து கொள்ள! ரொம்பவே, ஒரு ஆச்ரியர் பாடம் நடத்த என்னவவெல்லாம் செய்து தன்னைத் தாயார்படுத்தி, கொஞ்சம் புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் புரிய வைக்க எவ்வளவு உழைக்க வேண்டுமோ அதே பொல, கொஞ்சம் மக்கு பிள்ளைகளாகிய எங்களுக்கும் புரியும் வகையில் தாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த உழைப்பு அபாரமானது! அதற்கு ஒரு ராயல் சல்யூட் DD!

    பாராட்டுக்கள்! நன்றி!

    வாழ்த்டுக்கள்!

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  30. மிகப்பயனுள்ள பதிவு.நேரம் கிடைக்கும் போது ப்ளாக்கில் இவற்றை கொண்டுவரப்பார்க்கிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  31. மிகவும் நிதானமாகப் படித்தாலும் புரியுமா, தெரியவில்லை.
    மிகவும் மெனக்கெட்டு எல்லாம் சொல்லிக் கொடுக்கிறீர்கள், தனபாலன். என்னைப் போன்றவர்கள் இருப்பது போதும் என்று முயற்சி செய்வதே இல்லை.

    பதிலளிநீக்கு
  32. மிக அருமையான விளக்கங்கள்! எனது தளத்தில் லேபிள்ஸ் நிறைய அடைத்துக் கொள்கிறது அதை எப்படி குறைப்பது? சிம்பிளா சொல்லித்தர முடியுமா நண்பரே! நன்றி!

    பதிலளிநீக்கு
  33. உங்களிடமிருந்து நிறைய...நிறையவே கற்றுக்கொள்கிறேன்.
    நன்றி...நன்றி.

    பதிலளிநீக்கு
  34. வணக்கம்
    அண்ணா

    தங்களின் பதிவு வழி அறிய முடியாத பல விடயங்கள் அறியப் பெற்றேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.....அண்ணா
    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  35. மிக நன்றி தனபாலன். அப்படியே ஒரு நடை சிகாகோ வந்து இந்தத் திருத்தங்களேல்லாம் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.. உண்மையில் நன்மை தரும் பதிவு., படித்த அளவு புரியவில்லை...என் அனுபவத்திற்கு நான் இருக்கும் நிலை போதும் என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  36. Gadgets குறித்த தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது... அப்படியே இந்த முகநூல் கருத்துப் பெட்டியை சேர்ப்பது குறித்தும் கூறினால் இன்னும் உதவியாக இருக்கும்... நான் நிறைய கோடிங்குகளை போட்டும் ஒன்றும் உதவவில்லை....

    பதிலளிநீக்கு
  37. அண்ணே!
    கிடைக்கப்பெறாத தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  38. ரொம்ப ரொம்ப ரொம்ப பயனுள்ள பதிவு!... இன்னும் இது போல் பதிவுகள் மூலம் நிறையக் கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன்!.. மிக்க நன்றி!.

    பதிலளிநீக்கு
  39. மிகவும் பயனுள்ள பதிவு !

    இப்பதிவிற்கான தங்களின் கடுமையான உழைப்பு ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது.

    நன்றி

    பதிலளிநீக்கு
  40. வலைப் பதிவு தொடர்பான உபயோகமான பதிவு.

    பதிலளிநீக்கு
  41. பயனுள்ள தகவல்கள்......

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  42. பலருக்கும் பயன் தரக் கூடிய நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  43. உங்கள் பதிவுக்கு நன்றி... உதவியானதாகவும் அமைந்தது.

    பதிலளிநீக்கு
  44. மிகவும் பயனுள்ள பதிவு அண்ணா ...எனக்கு நிறைய டவுட் இருக்கு ...பொதுவில உங்க மெயில் id யும் கொடுக்க தைரியம் வேணும் ...அதைவிட தைரியம் போன் நம்பர் கொடுக்க ..கலகீடிங்க ...உங்க நம்பர் க்கு missed கால் கொடுத்து சந்தேகத்தை தீர்த்து வைச்சிக்கிறேன் சார்

    பதிலளிநீக்கு
  45. மிக அழகாக... பொறுமையாக... விளக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள் தனபாலன் சார்...

    அருமை... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  46. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்று நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  47. பயன்தரக்கூடிய நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. தாங்கள் சொல்லும் பல கருத்துக்களை மிகவும் பயனுடையவையாக உள்ளன. பல ஐயங்களையும் தீர்த்துவைக்கின்றன. ஒட்டுமொத்தமாக அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வது என்பது சற்றுச் சிரமமே. இருப்பினும் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளவேண்டும் தங்களுடைய நல்ல மனம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  49. மறு நினைவூட்டலாக பார்க்கிறேன்.அதிகமான gadgets வைத்து இருந்தால் வலைப்பூ திறக்க நேரம் எடுத்து கொள்ளும்.தேவையானவை மட்டும் பயன்படுத்தலாம் .

    பதிலளிநீக்கு
  50. இந்த விசயத்தையே நீங்கள் மூன்று பதிவுகளாக போட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது...
    ஒவ்வொரு படியாக வாசகர்களும் உங்களுடன் வர எதுவாக இருக்கும்..
    ரொம்ப
    அருமையான
    பயனுள்ள
    சூப்பர்
    பதிவு அண்ணா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  51. அற்புதமான பதிவு சகோதரரே. மிகவும் பயனுள்ளதும் கூட. வாழ்த்துகள்.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  52. பயனுள்ள பதிவு. படிக்கும் போதே பயமாக இருக்கே... இவ்வளவு மெனக்கெடனுமா! என்னவரிடம் தான் சொல்லி செய்ய வேண்டும்...:))

    பதிலளிநீக்கு
  53. தனபாலன் சார், வணக்கம். திரட்டியில் இணைவது தொடர்பான உங்கள் விளக்கம் பயனுள்ளது. ஆனாலும்,
    ஏன் இந்த திரட்டிக்காரர்கள் எல்லாம், இப்படி சிக்கலான, சிரமமான வழிமுறைகளை வைத்துக் கொண்டு
    இருக்கின்றனரோ? என் போன்ற அப்பாவிகள் எல்லாம், ஆணியே வேண்டாம் என்று தலைதெறிக்க
    ஓடும்படியாக இருக்கிறது, திரட்டிகளின் நடைமுறை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.