புதன், 5 மார்ச், 2014

இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!


வணக்கம் நண்பர்களே... வலைத்தளம் ஆரம்பிக்க ஆர்வமுடைய அனைவருக்கும், இன்றைய பதிவர்களுக்கும் சிலது உதவும் எனும் எண்ணத்துடன் சிலவற்றைப் பகிர்கிறேன்... தொழில்நுட்பப் பதிவர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி... சில சூழ்நிலையால் இணையம் மூலம் உங்களுடன் சந்திப்பே சில பல மாதங்களில் மாறலாம்... அதற்கு முன் இது போல் பகிர்வுகள் பதிவு செய்து விடை பெறுவேன்... அவ்வப்போது சிந்தனைப் பகிர்வுகளும் தொடரலாம்...!


புதுக்கோட்டையில் நடந்த கணினி பயிலரங்கத்தில் பேசினதை இங்கே பேசுகிறேன்... இங்கும் முடிந்தளவு step by step சொல்ல முயற்சிக்கிறேன்... விளக்கமாக அறிய அங்கங்கே இருக்கும் நண்பர்களின் இணைப்பையும் சொடுக்கவும்... கவனிக்கவும் இந்தப் பதிவில் Δ எனும் சிம்பல் இருக்கும்... அது சொடுக்கவும் (Click) என்று அர்த்தம்...! ஆறு தலைப்புகள் உண்டு... எழுதும் போது நான் ரிலாஸாக - ஆறு பாட்டுக்கள்...! மூன்று தலைப்புக்குப் பின் டீ சாப்பிட அவகாசம் உண்டு ! ஹிஹி OK.√ நீண்ட விளக்கம் என்பதால் :

இந்தப்பதிவில் உங்களுக்குத் தேவைப்படுவதைக் கீழுள்ளதை சொடுக்கியும் செல்லலாம் :

1. சரியான பெயருடன் வலைத்தளம் ஆரம்பிப்பது எப்படி...?
2. வாசகர்களை மனிதனாக நினைத்து, Word Verification-யை நீக்க...!
3. தாய்மொழி, தாய்நாடு, நேரம் தேர்வு செய்ய...!
4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!
5. g+ கருத்துரைப் பெட்டி மற்றும் g+ Profile-யை நீக்க...!
6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

1) தளத்தின் பெயர் : "ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு Google-லின் எல்லா தயாரிப்புகளிலும் உள்நுழையலாம்" என்று சொல்லும் கூகுளின் சேவைக்கு முதலில் இங்கே சொடுக்கி சென்று உங்கள் Google mail கணக்கை துவக்குங்கள்... அனைத்து கட்டங்களையும் நிரப்பி விட்டு, அடுத்தக் கட்டத்தையும் சொடுக்கி விட்டு தயாரா ? »» அடுத்த tab-ல் blogger.com என்று டைப் செய்து என்டரை (↵) தட்டி விட்டு, முன்னுள்ள mail tab-யை மூடி விடலாம். »» இப்போது தோன்றுவதில் Limited Blogger Profile என்பதை Δ »» அடுத்து தோன்றுவதில், You will be seen as கீழுள்ள Display Name என்பதில் இப்போதைக்கு உங்களின் பெயரை இட்டு விட்டு, Continue Δ »» அடுத்து தோன்றுவதில், Create Blog என்பதை Δ »» அடுத்தது உங்கள் URL மற்றும் தளத்தின் பெயர்... விளக்கம் கீழே... இங்கு சொடுக்கியும் அறியலாம்

உங்களின் பெயரோடு + எழுதப் போகும் எண்ணங்களோடு இருந்தால் நன்றாக இருக்கும்... ஆங்கிலத்திலிருந்து தமிழில் மாற்றிப் பாருங்கள்... தமிழில் சரியாக வரும் ஆங்கில எழுத்துகள் தான் உங்கள் தள முகவரி (url) உதவிக்கு இங்கே சொடுக்கி சென்று இடது புறம் உள்ள கட்டத்தில் ஆங்கிலத்தில் ammaa என்று டைப் செய்து spacebar-யை தட்டினால் அம்மா என்று மாறி விடும்... சரியானதை திருப்தியாகத் தேர்வு செய்தால், மற்றவர்களுக்குச் சொல்வதற்கும், அவர்கள் தமிழில் மாற்றி விரைவில் கண்டுபிடிப்பதற்கும் எளிதாக இருக்க வேண்டும்... இதோ ஓர் எ.கா. :-
(படம்: குடியிருந்த கோவில்) என்னைத் தெரியுமா...? நான் சிரித்துப் பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னைத் தெரியுமா...? ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்... நல்ல ரசிகன் நல்ல ரசிகன்... உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...

2) வாசகர்களை மனிதனாக நினைக்க...! வேறு ஒன்றுமில்லை... Word Verification-யை நீக்க ! வலைத்தளம் தொடங்கியவுடன் முக்கியமாக செய்ய வேண்டிய அமைப்புகள்... நல்லதொரு பெயரோடு தளம் ஆரம்பித்து அதன் மேல் சொடுக்கி விட்டீர்களா...? இப்போது இடது புறத்திலுள்ள Settings Δ »» Posts and and comments Δ »» பல கட்டங்கள் தெரிகிறதா...? அதில் :

i) Who can comment என்பதில் Registered User (இவி ↓↓↓ வப)
i) Comment Moderation என்பதில் Always (இதைப்பற்றி விரிவாக வரும் பதிவுகளில்)
iii) Show word verification என்பதில் No

இவை எல்லாம் தேர்வு செய்து விட்டு, வலது புறம் மேலுள்ள Save settings என்பதை Δ »» கருத்துரை இடுபவர்களின் சிரமத்தை அறிய இங்கே சொடுக்கவும்...!

(படம் : சுமை தாங்கி) துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்... குணம்...! குணம்...! அது கோவிலாகலாம்...! மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...!

3) தாய்மொழி தமிழ், தாய்நாடு - இந்தியா தொடர்பவர்கள் (Followers Gadget) உட்பட பலதும் தளத்தில் தமிழில் வர... இன்னும் Settings-பகுதியில் தானே உள்ளீர்கள்... »» Language and formatting Δ »» அதில் :

i) Language என்பதில் Tamil - தமிழ்
ii) அதற்குக் கீழுள்ள Enable transliteration என்பதில் Enabled
iii) அதற்குப் பக்கத்திலுள்ள Enable transliteration என்பதில் Tamil - தமிழ்
iv) அதற்குக் கீழுள்ள Time Zone என்பதில் (GMT+05:30) India Standard Time

இவை எல்லாம் தேர்வு செய்து விட்டு, வலது புறம் மேலுள்ள சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் Save settings என்பதை Δ

(படம் : ஆனந்த ஜோதி) உரிமையில் நான்கு திசை கொண்டோம்... உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்... மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்... முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்... ஒரு தாய் மக்கள் நாம் என்போம்...!


"நீண்ட பதிவு போல...!" என்று Page down செய்து பார்க்கும் எனதன்பு உள்ளங்களே... பின்வருபவை உங்களுக்கும் உதவலாம்...! மீண்டும் வருகை புரிந்தவர்களுக்கும் நன்றி ! டீ சாப்பிட்டு விட்டீர்களா ? இனி...

(புதிய பதிவர்களுக்கு அல்ல → மேலே சொன்ன குறிப்புகள் ஆங்கிலத்தில் உள்ளதால், உங்கள் தளம் தமிழில் இருந்தால், தளத்திற்கு நுழையும் முன், வலது புறம் மேலுள்ள உங்கள் பெயருக்கு கீழுள்ள, பல்சக்கரத்திற்குப் பக்கத்தில் "தமிழ்" என்று இருந்தால் (மட்டும்), அதை ஆங்கிலத்தில் [English (United States)] தேர்வு செய்து கொள்ளவும்) ஞாபகப்படுத்துகிறேன்:Δ = Click


4) என் தளத்திற்கு வந்தே தீரணும்...! அதே Settings பகுதியில், கடைசியிலுள்ள Other Δ »» Allow Blog Feed என்பதில் பக்கத்திலுள்ள கட்டத்தை Δ Full Page என்பதற்கு பதில் Until Jump Break என்பதைத் தேர்வு செய்யவும் »» வலது புறம் மேலுள்ள Save settings என்பதை Δ »» உங்கள் முகப்புப் பக்கம் அழகாகத் தெரியணும் + பதிவு எழுதும் பக்கத்தில் 4 / 5 வரிகள் எழுதிய பிறகு → மேலே நிறையப் பட்டன்கள் (Icons) இருக்கும்... அதில் Link பக்கத்தில் 2 பட்டன்கள் அடுத்து நம் பற்கள் போல இருக்கும் பட்டனை (சுட்டியை கொண்டு சென்றால் Insert Jump break என்று தெரியும்...) சொடுக்கி விட்டு, பதிவை தொடர்ந்து எழுதுங்கள்... விளக்கம் அறிய இங்கே சொடுக்கவும்...! புதிய பதிவர்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்... இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் Reader-ரிலேயே படித்து விட்டு e s c a p e...! ஹா... ஹா...

(படம் : குமுதம்) கண்ணுக்குள்ளே புகுந்து கதைகள் சொன்ன பின்னே... எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே... என்னை விட்டு ஓடிப்போக முடியுமா - இனி முடியுமா...?

5) சங்காத்தமே வேணாம் ஹா... ஹா... அவ்வளவு பிரச்சனைகள் உள்ளது... g+ கருத்துரைப் பெட்டி வைத்துள்ளவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்... புதிய தளம் உருவாக்கும் போதும், g+ சேவைகளுக்கு அவசரப்பட்டு ஆமோதித்த தளங்களில், கருத்துரைப் பெட்டி மற்றும் g+ Profile இருக்கும்... அவர்களைப் பற்றி அறிய Profile-லை சொடுக்கினால் விடிஞ்சிரும்...! ஹிஹி... கருத்துரை சொல்ல, அவர்களின் கருத்துரைப் பெட்டி திறக்க அதை விட...! இரண்டையும் எப்படி நீக்குவது...? இதோ :-

முதலில் இடது புறம் Comments கீழே Google+ என்பதை Δ »» இப்போது தோன்றுவதில் Your Google+ settings கீழுள்ள Use Google+ Comments on this blog ? இதிலுள்ள -யை எடுத்து விடவும் இப்படி → அடுத்து Profile :

கருத்துரையிட வேண்டுமெனும் நல்ல உள்ளங்கள் தற்சமயம் உங்களின் Blogger A/c-ல் தான் இருப்பீர்கள்... மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது இது → http://www.blogger.com/revert-profile.g ← இங்கேயும் சொடுக்கலாம்... இப்போது தோன்றுவதில் Switch to a limited Blogger Profile என்பதை Δ »» அடுத்து தோன்றுவதில், You will be seen as கீழுள்ள Display Name என்பதில் தளத்தின் அல்லது உங்களின் பெயரையோ இட்டு விட்டு, கீழுள்ள Continue to Blogger என்பதை Δ »» முகப்புப் பக்கம் வந்தாச்சா...?

அடுத்து தளப் பெயரை சொடுக்கி உள்நுழைந்து, மேலுள்ள view blog என்பதை Δ »» அடுத்த tab-ல் இந்நேரம் திறந்திருக்கும்... இப்போது உங்களது Profile மாறி இருக்கும்... view my complete profile என்பதை Δ »» எந்த விவரங்களும் இல்லையா...? அதனால் வலது புறம் மேலுள்ள Edit Profile என்பதை Δ »» உங்களைப் பற்றிய எந்தெந்த தகவல்கள் இந்த வலையுலத்திற்குத் தெரிய வேண்டுமோ, அவற்றை அந்தந்த கட்டங்களில் நிரப்பி விட்டு »» கீழுள்ள Save Profile என்பதை Δ »» Your settings have been saved ( View Updated Profile ) இப்படி வரும்... View Updated Profile மீண்டும் Δ செய்து மாற்றலாம்... எனது தளத்தின் மேலுள்ள "பேச/பழக" என்பதை இங்கே சொடுக்கி பாருங்களேன்...!

(படம் : தங்கப் பதக்கம்) பூவாக வைத்திருந்தேன் தளமென்பது... அதில் ஜிப்ளஸ் புகுந்து கொண்டு உறவென்றது...! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... வேதனை தான் கருத்திடுவது என்றால் தாங்காது பூமி...! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி...! முகநூல் மேல் ஜிப்ளஸ் போதுமடா சாமி...!!!
Profile அறியவும், கருத்திட தாமதமாகும் இம்சையும் வரிகளை இப்படி மாற்றி விட்டன !

6) உலகம் முழுவதும் நம் தளம் தெரிய வேண்டாமா...? இப்போது சொல்லப் போவது உங்களின் பகிர்வின் + மனதின் போக்கையே மாற்றும்... அதனால் ஜாக்கிரதை...! புதிய பதிவர்களுக்கு : வாசகர்கள் பெருக ஆரம்பத்தில் உதவலாம்... முதலில் தமிழ்மணத்தில் இணைய, பெயர் உட்பட பல தகவல்களைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்... நீங்கள் கொடுத்த மெயிலுக்கு ஒரு தகவல் வந்திருக்கும்... அதைச் சொடுக்கி confirmation செய்து விட்டு, தமிழ்மணம் (இங்கே சொடுக்கி சென்று http://www.tamilmanam.net) பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்நுழையவும்... இப்போது தமிழ்மணத்தில் உங்கள் தளத்தைச் சமர்ப்பிக்க இங்கே சொடுக்கவும்... கவனம் உங்கள் தளம் abc.blogspot.in என்று முடிந்திருக்கும்... அதை abc.blogspot.com என்று சேர்க்கவும்... தமிழ்மணம் நிர்வாகத்திடமிருந்து தகவல் வரும் வரை (வரும் வரலாம்) முக்கியமான ஒன்றை செய்வோம் (நன்றி→பொன்மலர் அவர்கள்)

பல தளங்களில் தமிழ்மணப் பட்டை இருக்கும்... ஆனால் submit செய்தால் ஓட்டுப்பட்டையாக மாறாது... யாரும் ஓட்டும் இட முடியாது... காரணம் தளம் .in என்று முடிவதால்... அதை .com என்று மாற்றி விட்டால் பிரச்சனை தீர்ந்தது... தமிழ்மணம் script-ல் சில மாற்றங்கள் செய்தால், .in என்று முடியும் தளங்களில் ஓட்டுப்பட்டையாக மாற்ற முடியும்... ஆனால் அது முக்கியமே இல்லை... + எந்தத் திரட்டியும் இணைக்காத நண்பர்களே... உங்கள் தளம் .in என்று முடிந்தால், பல நாடுகளில் உங்கள் தளத்தை வாசிக்க முடியாது... ஏனென்றால் "ஐஐ" என்று (Refresh) துள்ளிக் குதித்துக் கொண்டே இருக்கும்... நாமும் Fresh-ஆகத் துள்ளிக் குதிக்கலாம் வாங்க...!

இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...! சேர்க்க வேண்டும் - எதை...?
HTML Hyper Text Markup Language-மீசுட்டு மொழியை !

ஒவ்வொரு முறையும் HTML-யை திருத்துவதற்கு முன் முக்கியமாக முதலில் செய்ய வேண்டியது : (தவறானால் மீண்டும் பழைய Template-யை upload செய்து கொள்ள முடியும்) ஏற்கனவே இடது புறமுள்ள Settings சென்றுள்ளோம்... இப்போது அதற்கு மேலுள்ள Template Δ »» வலது புறம் மேலுள்ள Backup/Restore Δ »» Download full template Δ »» close Δ

மீண்டும் ஒருமுறை Template Δ »» Live on Blog கீழுள்ள Edit HTML Δ »» தோன்றும் பெட்டியில் ஆரம்ப வரியின் முடிவில் ஒரு Δ »» அடுத்து Ctrl Key-யை அழுத்திக் கொண்டு F-எழுத்தை அழுத்தவும்... ஒரு சின்னப் பெட்டி வலது ஓரத்தில் தோன்றும்... அதில் all-head-content என்று டைப் செய்து என்டர் (↵) தட்டவும்... இந்த <b:include data='blog' name='all-head-content'/> வரியுள்ள இடத்திற்குச் சென்று விடுவீர்கள்... அந்த வரியின் முடிவில் Δ செய்து விட்டு என்டர் (↵) தட்டவும்... இந்த இடத்தில் கீழுள்ள script-யை copy செய்து paste செய்யவும்... (COPY செய்ய : சுட்டியால் select செய்து, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C என்பதை அழுத்தவும்...) அடுத்து Save template Δ »» அடுத்து Back Δ இனி உங்கள் தளத்தைப் பார்த்தால் .com என்று மாறி இருப்பதையும், தமிழ்மணம் நிர்வாகத்திடமிருந்து Approval தகவல் வந்திருந்த தளங்களில், தமிழ்மணம் ஓட்டுப்பட்டையாக மாறியதையும் கண்டும் துள்ளிக் குதிக்கலாம்...

(படம் : ஜே ஜே) உன்னை நான், உன்னை நான், உன்னை நான்... கண்டவுடன், கண்டவுடன், கண்டவுடன்... நெஞ்சுக்குள்ளே, நெஞ்சுக்குள்ளே, நெஞ்சுக்குள்ளே... லட்சம் சிறகுகள் முளைக்குதே...! நீ சூரியனை சுட்டுவிடும் தாமரையா...? என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மோகினியா...? ஜே ஜே உனக்கு ஜே ஜே...!
நண்பர்களே... எதையுமே கற்றுக் கொடுத்தால் தான் கற்றுக் கொள்ளவே முடியும்... அதைப்பற்றிக் கணினியில் முதல் அனுபவம் - முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே...பதிவிலேயே சொல்லியுள்ளேன்... பதிவில் symbols எப்படி...? என்பதை இந்தப்பதிவால் கற்றுக் கொண்டுள்ளேன்; அதனால் இதுவரை கற்றுக் கொடுக்கவில்லை... திரட்டி உட்பட பலவற்றை, யாருடைய உதவியும் தேவைப்படாமல் நீங்களே இணைக்க மட்டுமே...! அடுத்தடுத்த பகிர்வுகளில் தான் நாம் பதிவு எழுதும் போது, இலவசமாக HTML-யை கற்றுக் கொள்ளப் போகிறோம்... இந்தப் பதிவை ஒரு tab-ல் வைத்துக் கொண்டு, மற்றொரு tab-ல் ஆர்வமுள்ள ஒரு பொறுமைசாலிக்கு DD வரும் சந்தேகங்களால் தான் நீண்ண்ண்ட விளக்கம்...! இந்தப் பதிவைப் படித்தால் மட்டும் போதாது... அதனால் "செய்து பார்த்திட வேண்டும்" எனும் முடிவுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் நண்பர்களே...!

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com / 09944345233


நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !


தொடர்புடைய பதிவுகளை படிக்க :


103 கருத்துகள்:

 1. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. அருமையான பதிவு...

  புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  மிக்க நன்றி ..

  பதிலளிநீக்கு
 3. மிக எளிமையாக ஒரு வலைப்பதிவை தொடங்குவதிலிருந்து, அதில் செய்ய வேண்டிய அமைப்புகள் வரை அடிப்படை விஷயங்களை சொல்லியிருக்கிறீர்கள். உங்களது சேவை தொடரட்டும்..

  வாழ்த்துக்கள்..!!!

  பதிலளிநீக்கு
 4. புதியவர்களுக்கு அருமையான தகவல்கள்... நானும் கடைசி தகவலின் பயனாளர்.

  பதிலளிநீக்கு
 5. என்னுடைய வலையுலக அனுபவம் ஐந்தாக இருந்தாலும் கடந்த பத்து வருடமாக இந்த தமிழ் இணையத்தில் செயல்பட்டு கொண்டிருப்பவர்களை வைத்துச் சொல்கின்றேன்.

  இதுவரையிலும் வலையுலகில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும், இனி வரப்போகின்றவர்களுக்கும் நீங்கள் முக்கியமானவர் மற்றும் முதன்மையானவர்.

  உங்கள் பெயரை எவரும் ஒதுக்கி விட்டு நகர்ந்துவிட்டு செல்ல முடியாத அளவுக்கு பல விதங்களில் சாதனை படைத்து விட்டீர்கள்.

  நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உபயோகமானது. பி டி எப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளத் தரலாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// பி டி எப்பில் சேர்த்து வைத்துக் கொள்ளத் தரலாமே... ///

   ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : முன்பு அதற்கான Save as PDF என்னும் script அல்லது gadget-யும் சேர்க்க வேண்டும்.. இப்போது அது தேவையில்லை... கூகிள் எளிதாக்கி விட்டது... எனது தளம் மட்டுமல்ல... எந்தத் தளத்தின் பகிர்வையும் உங்களது கணினியிலும் சேமிக்கலாம் உங்கள் விருப்பப்படி (.pdf ஆகவும்...!) பிடித்த பகிர்வுக்கு சென்று, Ctrl Key-யை அழுத்திக் கொண்டு P எழுத்தை அழுத்தவும்... மற்றவை சொல்ல வேண்டுமா என்ன...? ஹிஹி... அது சொல்லிக் கொடுக்கும்...! சரியா...?

   நீக்கு
  2. நீங்க சொல்லுவதும் சரி தான் அண்ணே. ஆனால் அப்படி செய்தால் கன்னாபின்ன என்று கோப்பு உருவாகும், பல சமயம் பதிவுகளை சரியாக படிக்க முடியாது.

   எனவே, நம் பதிவின் அடியில் Print Friendly தரும், buttonனை இணைத்தால், அனைவரும் எளிதில், பதிவை (மட்டும்), அழகாக எடுத்து சேமித்து வைக்கலாம். சென்று பாருங்க : http://www.printfriendly.com/button உங்க தளத்தில் சேருங்க.

   மாதிரி பார்க்க வேண்டுமானால் : தளம் http://naarchanthi.wordpress.com/2013/03/20/malai/, buttonனை அமுக்கியவுடன் கோப்பு உருவாகும் இடம் http://www.printfriendly.com/print?url=http%3A%2F%2Fnaarchanthi.wordpress.com%2F2013%2F03%2F20%2Fmalai%2F

   நீக்கு
 7. மிக்க நன்றி D.D. அதிகமானோர் கேட்பதால் பதிவாகவே போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்தப்பதிவு உங்கள் வலைத்தளத்தில் முதல்பக்கத்தில் எப்பொழுதும் இருந்தால் அநேகருக்குப் பயன்படும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. கடுமையான உழைப்பைக் காண முடிகிறது. பழையவர்கள், புதியவர்கள் என, பதிவர்கள் அனைவருக்கும் பயன்படும் தகவல்கள் அடங்கிய பெட்டகம் இந்த பதிவு. கம்ப்யூட்டர் பயிலரங்குகளில் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அனுமதியோடு குறிப்பேடாக அச்சிட்டு வழங்கலாம்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு DD.. நிறைய பேர் வரும் உங்கள் தளத்தில் இது இட்டது பல பேரை சென்றடையும்.. வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. நல்ல பயனுள்ள பதிவு அண்ணா மீண்டும் மீண்டும் படிக்கவேண்டிய பதிவு...
  ஜி+ பொறுத்தவரை நான் ஜி + ஆகவே தொடர்கிறேன். ஆனால் கருத்துப் பெட்டி இல்லாமல் ...
  நன்றி..

  பதிலளிநீக்கு

 11. பல பேருடைய (புதிய மற்றும் என்னைப் போல் உள்ள சில பழைய பதிவர்களின்) ஐயங்களை கேட்காமலேயே தீர்த்துவிட்டீர்கள். மிகவும் அருமையான உபயோகமான பதிவு. வருங்காலங்களில் பதிவர் சந்திப்பின் போது சில மணி நேரம் ஒதுக்கி புதிய பதிவர்களுக்காக உங்களை வகுப்பு எடுக்க சொல்லலாம். தொடரட்டும் உங்கள் பணி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நீங்க நல்லா இருக்கணும்... ‘பதிவர் நாடு’ முன்னேற!

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  அண்ணா

  விளக்கம் நன்றாக உள்ளது நல்ல முயற்சி பலரும் பயன் பெறட்டும்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  த.ம 4வது வாக்கு

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 15. இதை விட விளக்கமாய் யாரும் எழுதியதில்லை ,அருமையான பதிவு !
  long லீவ் சொல்லி இருக்கிறீர்கள் ,எந்த நோக்கமாக இருந்தாலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !
  த ம 5

  பதிலளிநீக்கு
 16. அருமையான பதிவு/விளக்கம். பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 17. இப் பதிவை பாட்ட வார்த்தை இல்லை! வளமுடன் என்றும் வாழ்க!

  பதிலளிநீக்கு
 18. அளிக்கப்பட்ட விளக்கங்கள் மிக அருமையானவை..
  நல்ல மனம் வாழ்க!.. நாடு போற்ற வாழ்க!..

  பதிலளிநீக்கு
 19. எக்கச்சக்கமான அறிவுபூர்வமான விஷயங்கள். ஆங்கிலத்தில் படித்து படித்து இப்போ இவைகளை தமிழில் படிப்பது சுகேமே!
  தமிழில் படித்து விட்டேன்;
  உங்கள் உழைப்பு அதிகம்; ஜீரணிக்க ஒரு இரு நாள் ஆகும்
  +1

  பதிலளிநீக்கு
 20. மிகவும் பயன்மிக்க தகவல்கள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 21. என்னைப்போன்ற கத்துகுட்டி பதிவர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு பகிர்விற்க்கு மிக்க நன்றி தனபால் சார்.

  பதிலளிநீக்கு
 22. மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. மதிப்பிற்குரிய திரு.தனபாலன் அவர்கட்கு,

  "வலைப்பூ"வில் மொட்டாக நிற்கும் 'பூமொக்கை' மலரச் செய்திருக்கிறீர்கள். எத்தனை விஷயங்கள். படித்து அறிந்து கொண்டு
  செயல் படுவோம். அனைவருக்கும் பிரசாதமாய்ப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ஜெயஸ்ரீ ஷங்கர்.
  மொக்கை வலைப்பூ
  http://paavaivilakku.blogspot.in

  பதிலளிநீக்கு
 24. நீங்கள் செய்யும் மாயாஜாலங்களை எங்களுக்கும் கற்றுத் தர முடிவு செய்தமைக்கு பாராட்டுக்கள்.தொழில்நுட்பப் பதிவாக இருந்தாலும் உங்களுக்கே உரிய பாணியில் அளித்திருப்பது சிறப்பு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 25. அருமையான விளக்கங்கள் அண்ணே! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 26. .in இல் இருந்து .com ஆக மாற்றும் முறையினை பலருக்கு நீங்கள் தனிப்பட்ட முறையிலேயே சொல்லியும் செய்தும் கொடுத்துள்ளீர்கள் (என்னையும் சேர்த்து). இப்பொழுது அதை பதிவாகவே இட்டுள்ளது பலருக்கும் உதவும்... நல்ல பதிவு சார்... :)

  பதிலளிநீக்கு
 27. வாழ்த்துக்கள் தனபாலன் சார்..

  புதிய பதிவர்க்ளுக்கும், பழைய பதிவர்களுக்கும் உபயோகமாக இருக்கும். உங்களின் உதவியால் தான் நானும் என்னுடைய வலைத்தளத்தை சரி செய்துள்ளேன்..

  பதிலளிநீக்கு
 28. பயனுள்ள பதிவு.
  எந்தச் சூழ்நிலையிலும், உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கும்
  என் போன்ற ரசிகர்களை ஏமாற்றி விடாதீர்கள்.

  பதிலளிநீக்கு
 29. நல்ல பதிவு திண்டுக்கல் தனபாலன் அவர்களே.. புதுசாய் வலைப்பதிவு ஆரம்பிப்பவருக்கு நல்ல வழிகாட்டி... இதே தலைப்பை ஒத்த பதிவை நானும் டிராப்டில் டைப் செய்து வைத்துள்ளேன்..

  எனக்கு ஒரு சந்தேகம்...??

  நீங்க என்ன படிச்சிரிகீங்க????

  பதிலளிநீக்கு
 30. 6வது வழிமுறையை எனக்கும் தனிப்பட்ட முறைல சொல்லிக்கொடுத்துருக்கீங்க..!! மிகவும் பயனுள்ள பதிவு.

  உங்க சேவைக்கு மிக்க நன்றி.. :)

  பதிலளிநீக்கு
 31. அடடடா இந்த மாதிரி ஒருத்தர் நாங்கல்லாம் பதிவு தொடங்கறப்போ இருந்துருந்தா எவ்வளவு நல்லா இருக்கும். Jump Break முறையை விளக்கியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. மிகவும் தெளிவாக எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறீர்கள் - இல்லையில்லை - சொல்லித் தந்திருக்கிறீர்கள்.
  அப்படியும் என்னைபோன்ற தொழில்நுட்ப அறிவிலிக்கு உங்கள் உதவி ரொம்பவும் தேவை.
  பொதுவாக தங்களுக்குத் தெரிந்ததை யாரும் பகிர்ந்துகொள்ளவோ, பிறருக்கு சொல்லித்தரவோ விரும்புவதில்லை. நீங்கள் இதிலும் தனித்து நிற்கிறீர்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கட்டும். இணையம் உள்ளளவும், பதிவர்கள் உள்ளளவும் உங்கள் நீடித்த புகழ் இருக்கும். பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 33. மிக மிக பயனுள்ள பதிவு . அதற்கு முதலில் நன்றி .
  வீட்டுக்கு சென்று கணினியில் இந்த பதிவை படித்து தேவையானவற்றை மாற்றிக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 34. பட்டெல்லாம் பிரமாதமா எடுத்து விடுறீங்க!! நன்று!!

  பதிலளிநீக்கு
 35. கட்டுரை சிறப்பு .வாழ்த்துகள் .
  வெளிநாடு பயணமா.
  வந்து திரும்ப உங்கள் சேவையை தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 36. திண்டுக்கல் தனபாலன் ஒரு Web Developer என்று நிருபித்த பதிவிது. வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குச் சிறந்த வழிகாட்டல். எனது வலைப்பூக்களூடாக தங்கள் பதிவை அறிமுகம் செய்ய அனுமதி தரவும். பலருக்கு இப்பதிவை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். வலைப்பூ நடாத்த விரும்புவோர் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டலாக இப்பதிவு அமையும் என்பதை விட, அவரவர் தமது வலைப்பூக்களை முன்னிலை வரிசைக்குத் தரமுயர்த்த உதவும் பயனுள்ள பதிவிது. எனது நண்பர்களே, இப்பதிவை உங்கள் தளங்களிலும் அறிமுகம் செய்து உதவுங்கள். அதனால் சிறந்த வலைப்பதிவர்கள் முன்னுக்கு வர உதவியதாக அமையும்.

  பதிலளிநீக்கு
 37. அருமை சகோ. இந்தாலும் இன் என்பதில் இருந்து காம் என்பது மாற்ற யோசனையா இருக்கு. ஏன்னா சரியா செய்யாட்டா ப்லாக் காணாமப் போயிடுமோன்னு பயம். நீங்க சொல்லி இருக்கதுல நிறைய விஷயம் நான் செய்யல.. ஹ்ம்ம்.

  பதிலளிநீக்கு
 38. நல்ல பதிவு. இவ்வளவு விளக்கமாக எழுத பொறுமை தேவை. அதை விட உள்ளடக்கம் அமைக்கப்பட்டு இருக்கும் விதம் சிறப்பு. எல்லாவற்றிக்கும் இணைப்புக்களை கொடுத்து அமர்க்களப்படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. அன்புச் சகோதரா வலை உலகத்தில் உங்களைப் போன்ற சொந்தங்கள்
  இருக்கையில் எங்களுக்கு என்ன குறை ?...விரைவில் அம்பாளடியாளின்
  தளமும் தங்களால் அழகுறும் .முகம் பார்க்காத இந்த உறவுகள் எங்கள் மனக்
  கண்களுக்குள் என்றென்றும் நிலைத்திருக்கும் !! வாழ்த்துக்கள் சகோதரா அருமையான பகிர்வினை அனைவரும் பயன் பெறும் வண்ணம் மிக எளிமையாக நிறைந்த விளக்கங்களுடன் தந்துள்ளீர்கள் தங்களின் முயற்சிகள் யாவும் இது போன்றே வெற்றி பெற்றிட என் நன்றி கலந்த அன்பான நல் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 40. பணி நிமித்தமாக இடைவெளியா? வீட்டில் அனைவரும் நலம் தானே? பயனுள்ள தகவல்கள். கற்றுக் கொடுப்பதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 41. மிக மிக பயனுள்ள பதிவு, எம்மைப்போன்ற கற்று குட்டிகளுக்கு வரப்பிரசாதம். நன்றி அண்ணார் அவர்களே....

  பதிலளிநீக்கு
 42. மிக மிக நல்ல பதிவு நண்பரே! அருமையான, விரிவான விளக்கங்களுடன், மிகவும் உபயோகமாக, எளிமையாகச் சொல்லி யிருக்கின்றீர்கள்.

  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! என்பதே DD யின் கொள்கை என்பதை நிரூபித்து விட்டீர்கள்! அருமையான ஆசிரியராகவும் ஆகிவிட்டீர்கள்!

  வாழ்த்துக்கள்! தொடர்க தங்கள் சேவை!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 43. எங்களை இவ்வையகம் முழுவதும் அறிய இணைத்துக் கொடுத்தத்டும் நீங்கள் தானே! உங்கல எங்களுக்குச் சுட்டிக்காட்டிய பகவான் ஜி யையும் மறக்க இயலுமா!

  உங்கள் இருவருக்கும், மற்றும் எங்களை ஊக்குவிக்கும் எல்லோருக்குமே எங்கள் நன்றி உரித்தாகும்!

  நன்றி நன்றி! DD!!

  பதிலளிநீக்கு
 44. பயனுள்ள தகவல் !

  பாதுகாக்கப்பட வேண்டிய குறிப்புகள்

  பதிலளிநீக்கு
 45. ரொம்ப உபயோகமான பதிவு!.. நிறைய விஷயங்கள் இங்கு வந்துதான் தெரிந்து கொள்கிறேன்..பணி காரணமாக இடைவெளியா!.. ஆயினும் தங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 46. கண்டிப்பாக, புதிதாக வலைப்பூ தொடங்குபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 47. மிகவும் உபயோகமான ஒரு பதிவு! புதியவர்கள் மட்டுமல்ல! என்னை போன்றவர்களுக்கும் உதவக்கூடிய ஒன்று. நானும் .in லிருந்து .com க்கு மாற வேண்டும். இந்த பதிவு அதற்கு உதவும். சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 48. மிக்க நன்றி நண்பரே! உங்களைப் போல அனைவருக்கும் பயன்படும் கருத்துக்களை வெளியிடுவோர் பதிவுலகில் மிகவும் சிலரே!

  பதிலளிநீக்கு
 49. அனைவருக்கும் பயன்படும் அற்புதப் பதிவு
  எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 50. மிகவும் பயனுள்ள பதிவு.மிக விரிவாக எளிதாக விளக்கப்படுத்தியிருக்கிறீர்கள்.
  உங்கள் பதிவில் பாட்டுகளில்லாமல் ஓர் பதிவா.பாடல்கள் அருமை.உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 51. வணக்கம் நண்பரே! இந்தப்பதிவு மூலம் என் தளத்தை .in லிருந்து .comக்கு சற்று முன்னர் மாற்றம் செய்து விட்டேன். புரொபைலும் ப்ளாக்கர் புரொபைலுக்கு மாற்றிவிட்டேன். ஜம்ப் ப்ரேக்கும் இட்டுவிட்டேன்! மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. தொடர்ந்து இது போன்ற குறிப்புக்களை எழுதவும். அனைவருக்கும் பயனளிக்கும். நன்றி!

  பதிலளிநீக்கு
 52. .inலிருந்து .comற்கு மாற்ற கொஞ்சம் பயமாக இருக்கிறது. ஆனாலும் முயற்சி செய்து பார்க்கிறேன். ஜம்ப் பிரேக் இது வரை நான் செய்யவில்லை. அதையும் செய்து விடுகிறேன். எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் தனபாலன் சார் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 53. Dear Shri DDG-Dhanapal!
  Good day.
  It may be your personal...
  U plan go on long leave!..
  Many will be missing u.
  God bless u

  Balaraman R

  பதிலளிநீக்கு
 54. என்ன? இணையம் மூலம் சந்திப்பே மாறலாமா? இப்படி அதிர்ச்சி செய்தி கொடுத்துட்டீங்களே..நலம் தானே? பார்த்துக் கொள்ளுங்கள்..

  பதிவு அருமை..உபயோகமான தகவல்கள். g+ குழப்பம் தான்..இப்போதான் மாறினேன்..கருத்துரை சேர்க்காமல்..
  நன்றி!

  பதிலளிநீக்கு
 55. 'நல்லன எல்லாம் தரும்' என்ற அபிராமி அந்தாதி வரிகள் உங்களுக்கும் பொருந்தும்!

  பதிலளிநீக்கு
 56. இணையம் மூலம் சந்திப்பு மாறலாம் என்றது பணியின் காரணமாக இருக்குமோ !! உபயோகமான பதிவு. பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு

 57. எனக்கு மிக மிக அவசியமான பதிவு.
  மிகவும் நன்றி தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 58. ஜோதிஜி ஐயா அவர்களின் கருத்துடன் நான் மிகவும் ஒத்துப் போகின்றேன் ஐயா.
  வலையும் திண்டுக்கல்லும் ஒன்றுதான்.
  பிரித்துப் பார்ப்பது என்பது இயலாத காரியம். தங்களின் சேவை பாராட்டிற்கு உரியது.
  சூழ்நிலை காரணமாக இணையத்தை விட்டு சிலபல காலம் மாறலம் என்று கூறி இருப்பதுதான் மிகவும் வருத்தமளிக்கின்றது.
  ஆனால் ஒன்று இணையத்தைவிட்டு விலகி இருப்பதென்பது தங்களால் இயலாத ஒன்று.
  மீண்டும் தங்களின் வரவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 59. வலைப்பூ புதியதாக ஆரம்பிப்பவர்களுக்கு மட்டுமல்ல, தொடரந்து வலைப்பூவில் எழுதிவருபவர்களுக்கும் பயனுள்ள செய்திகளை தங்களுடைய பதிவின் மூலமாக அறிந்தேன். எங்களைத் திருத்திக்கொள்ளவும், மேம்படுத்திக்கொள்ளவும் இந்தப் பதிவு உதவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 60. மிகவும் பயனுள்ள பதிவு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 61. மிக மிக பயனுள்ள பகிர்வுக்கு நன்றிஜீ.

  தாங்கள் நலம்தானே?


  அமர்க்களம் கருத்துக்களம்
  உலக தமிழர்களின் வலை தளம்
  www.amarkkalam.net

  பதிலளிநீக்கு
 62. அருமையான பகிர்வு...
  மிகவும் அருமையான தகவல் தொகுப்பு...
  பயனுள்ள தொகுப்பு சார்....

  பதிலளிநீக்கு
 63. அன்பு சகோதரருக்கு வணக்கம்
  தங்களின் இந்த பதிவு அவசியம் அன்றாடம் அனைவருக்கும் பயன்படும். இதோ நான் பிக்மார்க் செய்து கொண்டேன். புதுக்கோட்டைக்கு நீங்கள் வந்து வகுப்பு எடுத்த அந்த தருணங்கள், நம் பேருந்து பயணம் இன்னும் என் நினைவுகளில் ரீங்காரம் இடுகிறது. மீண்டும் ஒரு பயிலரங்கத்தில் சந்திக்க வேண்டும். அனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரர்..

  பதிலளிநீக்கு
 64. மிக மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 65. இது புதியவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பயனுள்ள பதிவு. அனைத்தையும் செய்துவிட்டேன், என்னால் நம்பமுடியவில்லை. விசிட்டர்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. நன்றி.

  பதிலளிநீக்கு
 66. தாமதமான கருத்துக்கு பொறுத்தருள்க
  பொறுமையாக வாசிக்க வேண்டி இருந்ததால் தான். திரும்ப வாசித்து செயல்படுத்த வேண்டும். நல்ல பதிவு இதனால் பல குழப்பங்கள் தெளிவடையும்.நன்றி சொல்ல வார்த்தை இல்லை சகோதரா!மனசாட்சி உள்ளவர் அல்லவா அது தான் நல்ல மனம் வாழ்க...!நன்றி நன்றி ...!

  பதிலளிநீக்கு
 67. அற்புதமான பகிர்வு, வாசகர்கள் கண்டிப்பாக புதிய வலைப்பதிவுகள் தொடங்க வசதி செய்து கொடுத்துள்ளீர்கள் !

  பதிலளிநீக்கு
 68. எல்லோர்க்கும் பயனுள்ள பதிவு சார்
  மேலும் தங்கள் பணி தொடர
  நெஞ்சார வாழ்த்துகிறேன்

  இனிய வாழ்த்து
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 69. Thank you திண்டுக்கல் தனபாலன். கொஞ்சம் உங்களோடு வலை தளத்தில் தங்கள் வருகைக்கும் உற்சாக வரவேப்பிர்க்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 70. தனபாலன் சார். உடனடியாக ஓடோடி வந்து படித்தேன். ஆனால் என் சிற்றறிவுக்குச் சில செய்திகளைச் செய்ய இயலவில்லை. மேலும் மெனக்கெட நேரம் இல்லை. ஒரு ஓய்வான நாளில் மீண்டும் வந்து எல்லாவற்றையும் செயல்படுத்துவேன்.

  அருமையான பயனுள்ள பதிவுக்கும் நினைவூட்டி அழைத்தமைக்கும் நன்றி தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 71. பயனுள்ள பதிவு சார் ! வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 72. நன்றிகள்.

  எனது வலைப்பூ.in லிருந்து.com ஆயிற்று.

  நீர் உண்மையாலுமே பரோபகாரிதான். நான் பார்த்தவரை கணினி கற்றவர்கள் அதிகமாக பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இது ஒரு வித மனோபாவமோ அல்லது குறையோ தெரியாது. நீர் வித்தையையும் காட்டி விளக்கமும் சொல்லியிருக்கிறீர்கள்.இது நீங்கள் கற்ற கல்விக்கு பயன் மட்டுமல்ல உங்களது பரந்த மனப்பாங்குக்கும் சாட்சி. தமிழை உணர்ந்து கற்றவர் என்பது நன்கு புரிகிறது.

  Thank you,
  God Bless you.

  பதிலளிநீக்கு
 73. பயனுள்ள தகவல்கள்..... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 74. மிக்க நன்றி தனபாலன். ஜம்ப் ப்ரேக் பற்றி எனக்கே தெரியாத தகவல். இப்போது சரி செய்து விட்டேன். Thanks a ton.

  பதிலளிநீக்கு
 75. தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும். உங்களைக் காணோமேனு நினைச்சேன். இங்கே வந்து படிச்சுப் பார்த்தால் விடைபெறுவதாக எழுதி இருக்கீங்க! :( என்ன ஆச்சு? வேலை அதிகமா? நிதானமா எல்லா முக்கியமான வேலைகளையும் முடிச்சுட்டு வாங்க. காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 76. தேவையான பதிவு. எனினும் யாரையானும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தான் செய்யணும். :)))))முயன்று பார்க்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 77. Jump Break Settings தளத்தின் பார்வையாளர் வருகையை அதிகரிக்கும் என்பது எனக்கு புதிய தகவல். நன்றி.

  பதிலளிநீக்கு
 78. அண்ணா...நான் புதிதாக (www.santhanamrobin.blogspot.com) என்ற தலத்தை
  உங்கள் பதிவுகளை கண்டு கற்று உருவாக்கியுள்ளேன்..மிக்க நன்றி...
  மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கல்....

  பதிலளிநீக்கு
 79. அண்ணா...என்தலத்தில் விளம்பரங்களை சேர்ப்பது பற்றி தயவுசெய்து
  விலக்கவும்..

  பதிலளிநீக்கு
 80. தங்களின் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது.ஆலோசனைகளுக்கு நன்றி ஐய்யா...!

  பதிலளிநீக்கு
 81. இப்போது சொல்லப் போவது உங்களின் பகிர்வின் + மனதின் போக்கையே மாற்றும்... அதனால் ஜாக்கிரதை...!

  தாங்கள் கூறி இருப்பது எனக்கு புரியவில்லை சற்று விளக்கவும்.நன்றி ஐய்யா..!

  பதிலளிநீக்கு
 82. திண்டுக்கல் தனபாலன் ஒரு Web Developer என்று நிருபித்த பதிவிது. வலைப்பூக்களூடாக உலகெங்கும் தமிழ் பேண முன்வருவோருக்குச் சிறந்த வழிகாட்டல்.

  பதிலளிநீக்கு
 83. தல.. தல... in என்பதை com என மாத்திட்டேன் தல...

  ரொம்ப நன்றிங்க தல....

  பதிலளிநீக்கு
 84. ஒவ்வொரு பதிவர்களுக்கும் இது ஒரு பகவத்கீதை போன்றது என்று உணர முடிகிறது. எல்லா கேள்விக்கும் தெளிவான விளக்கம் என்று அருமையாக எழுதி உள்ளீர்கள் சார்.


  ஆர்வமாக அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன் !

  பதிலளிநீக்கு
 85. ரெம்ப பயனுள்ள பதிவு. என்னுடைய பல நாள் தேடலுக்கு விடை கிடைத்தது. இவ்வளவு நாள் எனக்கு கமெண்ட் போட்டவங்களுக்கு பதில் அனுப்ப தெரியாம இருந்தேன். இப்போ சரி ஆகி விட்டது. ரெம்ப நன்றி அண்ணா..............

  பதிலளிநீக்கு
 86. மிகச் சிறப்பான பகிர்வு.....
  உங்கள் வருகையால் மாற்றம் என் தளத்திலும் ஏற்பட்டு விட்டது..தொடர்கிறேன்..

  நன்றிகளுடன் பாண்டியன்...

  பதிலளிநீக்கு
 87. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில்
  பாராட்டப்பட்டுள்ளது .
  இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/4.html

  பதிலளிநீக்கு
 88. நானும் .in இல் இருந்து .com மாறிவிட்டேன் ...சிறப்பான கட்டுரை ....பயனுள்ள செய்திகள் ....பகிற்விற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 89. .in இருந்து .com மாறி விட்டேன். ஆனாலும் தமிழ்மணத்தில் பதிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை.... இப்பிரச்சனை ஒரு வாரமாகவே தொடந்து வருகிறது... தயவு செய்து உதவுங்கள் சகோ!!!

  பதிலளிநீக்கு
 90. சகோ நீங்கள் இங்கே சொல்லி கொடுத்துள்ளது படி செய்து பார்த்தேன் paste செய்துவிட்டு savetheme கொடுக்கிறேன் ஆகிறது ஆனால் back போனால் பிளாக்கர்.com You have unsaved changes that will be lost. ok cancel இப்படி காண்பிக்கிறது சரி preview பார்க்கலாம் என்று பார்த்தால் The widget settings in widget with ID BloggerButton1 aren't valid. The specified logo URL is not allowed.

  Error 500
  இப்படி காண்பிக்கிறது

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.