🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இருட்டினில் வாழும் இதயங்களே...



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்... கிசுகிசு...! அகநக... நகைவகையர்... உலகம் சிரிக்கிறது...! உறவும் பகையும் உண்டு...


100. பண்புடைமை : 999. நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்

நகல்வல்லர் யார்...? சிரித்து மகிழ்தல் என்பது மக்களாகப் பிறந்த அனைவருக்கும் இயல்பாகவே இருக்க வேண்டிய சிறந்த குணங்களில் ஒன்று... ஆனால் பழகும் மனிதர்களுடன் கூடி மகிழ்ச்சியாகப் பழகுவதற்குள்ள திறனைப் பயிற்சியாலும் வளர்த்துக்கொள்ளலாம்... அதே சமயம் மற்றவர்கள் நம்மைப்பற்றி வேடிக்கையாக ஏதாவது பேசிச் சிரித்தாலும் முகஞ்சாய்த்துப் போகாமல் அதை நல்ல முறையில் எடுத்துக் கொண்டு பொறுத்துக் கொள்வதற்கும் ஒரு வல்லமை வேண்டும்... இப்பண்புகள் கொண்டவர் தான் நகல்வல்லர்...

"தான் உண்டு; தனது வேலை உண்டு" என்று யாருடனும் மனம் திறந்து பேசாமல் பேதைமையாக வாழ்தல்.. "சுற்றில் நடப்பது எதையும் கண்டுகொள்ளக்கூடாது" என்று அக்கறையின்மையால் அக்கம்பக்கம் குடியிருப்பவரைக் கூட தெரியாமல், தன்னைப் பற்றியும் ஊருக்குத் தெரியாது என வாழும் அறிவிலிகள்... "நமக்கு எதுக்கு வம்பு...? இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துட்டு போயிடணும்" என்று தனிமையிலேயே பொழுதைக் கழிக்க முயலும் மூடர்கள்... கவியரசர் :- பனி மலையில் தவமிருக்கும் மாமுனியும், கொடி படையுடனே பவனி வரும் காவலரும், கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும், கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும், இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும் :- தனிமையிலே இனிமை காண முடியுமா...? அதனால் இவர்கள் உலகநடை முறை வாழ்க்கைக்குத் தகுதி அற்றவர்கள்... பிறருடன் கலந்து மகிழ்கின்றபோதுதான் உள்ளம் பண்புறும் என்பதை உணராதவர்கள்... எவரைப் பார்த்தாலும் பகைவர்போல் பாராதது போல ஒதுங்கிப் போவதும் கடுகடுத்த முகத்துடன் உறுமி முறைத்துப் பார்த்தும் செல்வார்கள்... உலகமறியா, உள்மகிழ்ந்து வாழும் பண்பில்லாத இவர்களுக்குப் பகற்பொழுதும் இருளிலேயே வாழ்பவர்கள் என்கிறார் ஐயன்...

இருட்டினில் வாழும் இதயங்களே - கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்... நல்லவர் உலகம் எப்படி இருக்கும் - என்பதை பாருங்கள்... எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை -
"அவன் எப்படி வாழ்ந்தான்...?"
என்பதை உணர்ந்தால் - வாழ்க்கையில் தோல்வியில்லை2




© நான் ஆணையிட்டால் வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫


104. உழவு : 1040. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்

உடல் உழைப்பைக் கொடுக்க ஆயத்தமாய் இருந்தால், எவரும் உழவுத் தொழிலை மேற்கொண்டு பயன் பெறலாம்... அள்ளிக் கொடுக்கும் நிலம் இருந்தும் செயற்படாத சோம்பரைக் கண்டு, "நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள இயலாதவனாக இருக்கிறானே..." என்று நிலம் என்னும் நல்லாள் ஏளனத்துடன் நகுமாம்... எத்தொழிலும் நாட்டமின்றி "தனக்கு ஒன்றுமில்லையே" என்று சுற்றித் திரியும் சோம்பேறிகளை நோக்கி, "வேளாண் தொழிலில் உழைத்து வாழ்..." எனச் சொல்கிறார் ஐயன்... உழவு என்பது கடுமையான உடல் உழைப்பு; நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்க வேண்டும்... ஆனாலும் வேளாண் முயற்சி சிறந்த பயன் அளிக்கும்... நறுந்தொகை - வெற்றிவேற்கை - 68. "வித்தும் ஏரும் உளவா யிருப்ப எய்த்து அங்கிருக்கும் ஏழையும் பதரே" என்ற பழம்பாடல், நிலத்தை உழுது பயிரிடத் தேவையான வித்துக்களும் உழும் ஏரும் கையில் இருக்கும்பொழுது சோர்வடைந்து ஏழ்மையில் வாடுவதும் பதரே என்கிறது...

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு - கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு - நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு - பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு - சேராத செல்வம் இன்று சேராதோ...? - தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ...? போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை - ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ... கை கட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு - பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்... தேர் கொண்ட மன்னன் ஏது...? பேர் சொல்லும் புலவன் ஏது...? ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது...?



© பழநி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், P.B.ஸ்ரீனிவாஸ் @ 1965 ⟫

அறத்துப்பால், பொருட்பால் முடிந்து காமத்துப்பாலில் நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான பகிர்வு.

    நிலம் என்னும் நல்லாள் சிரிக்கும் படம் மிக அருமையாக இருக்கிறது.

    நல்லவர்கள் வாழும் உலகம் அதற்கு பகிர்ந்த பாடல் மிக அருமை.

    உழவு தொழிலை சோம்பல் இல்லாமல் உழைக்க சொல்லும் குறளும் அதற்கு பொருத்தமாக சினிமா பாடலும்
    அருமை.
    பொய் சொல்லிப்பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்.

    வாலி, கண்ணதாசன் பாடல் இரண்டும் மிக அருமையான பாடல்.

    பதிலளிநீக்கு
  2. சிரிக்க மறந்த மனிதர்கள்.  கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் சிறப்பை பயன்படுத்தத் தெரியாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை ஜி பழநி பாடல் வரிகள் மிகவும் அழகான பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. தான் உண்டு தன் வேலை உண்டு// இதுதான் இப்போது பலரும் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறை. இப்போதைய சூழல் டிடி. அடுத்த விட்டில் யார் இருக்கிறார் என்பது கூடத் தெரியாமல் தான் வாழ்க்கை நகருகிறது.
    அதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உழைப்பில்லாமல் எதுவுமில்லை ஆனால் உழைக்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தாமல் டக்கென்று பணம் மட்டும் வர வேண்டும் என்ற நிலையும் அதைத் தேடி ஓடும் கூட்டமும் ஒரு காரணம் எனலாம் உழவு மடிவதற்கு. இருந்தாலும் இப்போது ஒரு சிலர் தங்கள் பெரிய வேலையைத் துறந்து வேளாண்மைப் பக்கம் திரும்பி வருவதைப் பாராட்டலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நேற்று வந்த வாட்ஸ் அப் பகிர்வு :- மருத்துவரிடம் ஒருவர் வீட்டிலிருந்து எப்போது பார்த்தாலும் கணினி வேலை அதனால் மன அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார். அதில் இருந்து விடுபட மருந்து கேட்கும் ஒருவருக்கு டாக்டர் சொல்வது
    மருந்து வேண்டாம் தினம் காலையில் நடைபயிற்சி போங்க எதிர்படும் 10 பேரைப்பார்த்து சிரித்து நலம் விசாரிங்க அப்புறம் பாருங்க உங்கள் நாள் எப்படி இருக்கிறது என்று என்கிறார்.

    அதுதான் மருந்து போய் வாங்க என்கிறார்.

    சிரிக்க தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒரு போதும்

    பதிலளிநீக்கு
  7. அருமை!! பதிவும் பாடலும் உணர்த்தும் கருத்துக்கள் அனைத்துமே வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை... அதிலும் அந்த பழனி பாடலானது பழனி பஞ்சாமிர்தமாகவே திரண்டுவந்து செவிப்புலனை சிலிர்க்கச் செய்தது!!!

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல மற்றொரு அருமையான பதிவு. பாராட்டுக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    பதிவு வழக்கம் போல் அருமையாக உள்ளது. முதல் திருக்குறள் ஓவியத்தில், பூமித்தாய் சிரிப்பது போலவும், அதைப்பார்த்து விவசாயியும் மனம் மலர்ந்து காணப்படுவது போல் உள்ள காட்சி சிறப்பாக உள்ளது.

    உண்மைதான்..பொன் நகையின் மதிப்பை விட .புன்னகையின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. பதிவின் ஆழ்ந்த கருத்துக்கள் சிறப்பாக இருக்கிறது. அருமையான பழனி பட பாடலும் அன்பின் தத்துவத்தை இனிமையாக சொல்கிறது. அழகான பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. நிலம் படம் அருமை... பழனி படத்தின் பாடல் அருமை.. முன்பொரு சமயம் கேட்டது...

    பதிலளிநீக்கு
  11. இன்றைய நகர வாழ்க்கையைப் பற்றி ஐயன் அன்றே சொல்லியிருக்கிறாரே!! யாரோடும் பேசாமல் சன்னலையும் மூடி இருளில் தானே பலர் இருக்கின்றனர் - மன அழுத்தம் பெருகுவது தான் மிச்சம்! எப்போதும் போல பொருத்தமான பாடல்கள்..அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  12. உங்களின் வாசிப்பும், பகிர்வும் எங்களை வியக்கவைக்கின்றன. ஓர் தேர்ந்தெடுத்த ஆய்வாளராக ஆழ்ந்து சென்று அலசுகின்ற உங்களின் பாணி சிறப்பாக உள்ளது. மனம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்துவாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.