🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உறவும் பகையும் உண்டு...



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்... கிசுகிசு...! அகநக... நகைவகையர்... உலகம் சிரிக்கிறது...!


96. குடிமை : 953. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு

நகை : இங்கு நகை என்பது இன்ப நுகர்ச்சி, எள்ளல், இகழ்ச்சிக் குறிப்பு ஆகியவற்றால் தோன்றுபவை அல்ல...! சிரித்த முகத்தோடு தோன்றிப் பழகுவது - இறுக்கமற்ற இதமான சூழலை உருவாக்குவது - யாரையும் எளிதாக அணுகச் செய்யும்.திறம் போன்ற நல்ல பண்புகள்... ஈகை : எதையும் எதிர்பார்க்காமல், இருப்பதை ஒளிக்காமல் வறியவர்க்கு உதவும் ஈயும் குணம்... இன்சொல் : மேற்சொன்ன நகையும் ஈகையும் செயல்படுகின்ற இடத்தில் இன்சொல் தப்பாமல் இருக்க வேண்டும்... யாரிடமும் எரிந்துவிழுதலும், கடுஞ்சொற்கள் கூறுதலும் இருக்காது... இகழாமை : நகையின் பண்புகளும், ஈகையின் குணங்களும், இன்சொல்லின் மென்மையும் மேன்மையும் இருப்பதினால், யாரையும் எள்ளி நகையாடக்கூடாது - கஞ்சிக்கில்லாதார், அறிவிலார் என்று இகழ்ச்சியாகக் கருதக்கூடாது - யாரையும் எந்த நிலையிலும் இகழ்ந்து பேசிவிடக்கூடாது... இந்த நான்கும் இருந்தால் மட்டுமே நற்குடியில் பிறந்தவர்கள் - அதாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்க்குரிய கூறுபாடுகள்...


© அமர தீபம் K.S.கோபாலகிருஷ்ணன் T.சலபதி ராஜு 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫

வாணிபத்தில் புரளுவது இந்த நாணயம் - மனிதன் வாக்கைக் காக்க உதவுவது சொந்த நாயம், மனிதன் சொந்த நாயம்... வயிற்றுப் பசியைத் தீர்த்து வைக்கும் இந்த நாணயம் - மனிதன் வாங்கும் கடனை கொடுக்கச் சொல்லும் சொந்த நாணயம் // நாயத்தைப் பேச்சில் மட்டும் காட்டக்கூடாது - நம்மை நம்பினோர்க்குத் திருட்டு கணக்கு எழுதக்கூடாது - மானம் போக்கும் லஞ்சம் எதிலும் வாங்கக்கூடாது - காளை மாடாய் உழைத்தே சாப்பிடத் தயங்கக்கூடாது...

தம்பி - நாயம் மனுசனுக்கு அவசியம் - மிகவும் அவசியம் - அதுவே நல்லோர்கள் சொல்லிவைத்த நன்மையான ரகசியம் - நாயம் மனுசனுக்கு அவசியம்... அடுத்து இங்கும் ↓


100. பண்புடைமை : 995. நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு

நகை 15--ல் நட்புள்ளவரிடத்தும் இகழ்ச்சியாகச் சிரித்துப் பேசும் பண்பில்லாத பகை விளையாட்டு வேண்டாம் என அறிந்தோம்... அதனால் துன்பமே வரும் என்று அறிந்த பண்பாளர்கள், பகையுள்ளவர்களையும் மதித்து ஒழுகுவார்கள்... பகைவரிடம்கூட தனது செறிவான பண்பு கெடாமல் அவர்களுக்குத் துன்பம் நேராதவகையில் நடந்து கொள்வார்கள்... பாடறிவார் யார்...? அவரவர் இயல்பு அறிந்து ஒழுகுபவர் அல்லது பிறருடைய குணங்களை அறிந்து நடப்பவர்... பண்புடையார் பாடறிந்து ஒழுகுவார், பகையுள்ளவிடத்தும் பண்பாகவே நடப்பர்; அதாவது பகைவரிடத்தும் இகழ்ந்து பேசமாட்டார்... பாடறிந்து ஒழுகத் தெரியாதலாலேயே பெரும்பாலான பகை உண்டாகிறது...

கலித்தொகை 133 : 8. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் : இதிலுள்ள ‘பாடறிதல்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் உலக ஒழுக்க மறிதல் எனப் பொருளுரைத்துள்ளார்... 14. பாடறிந் தொழுகும் பண்பி னாரே : செய்யும் முறைமையையறிந்து நடக்கும் குணத்தினையுடையோர் என்று 197. புறநானூற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது...


© மாடப்புறா அ.மருதகாசி K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி @ 1962 ⟫

இரவும் பகலும் உண்டு - வாழ்வில் இளமையும் முதுமையும் உண்டு - உறவும் பகையும் உண்டு - எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு - உறவை வளர்ப்பது? = அன்பு... மன நிறைவைத் தருவது? = பண்பு... பொறுமையை அளிப்பது? = சிரிப்பு... இதைப் புரிந்தவர் அடைவது? = களிப்பு...!

மனிதன் மாறுவதில்லை - அவன் மாறிடில் மனிதனே இல்லை...!
வந்திடும் அவனால் தொல்லை - நீ சிந்தித்துப் பார் என் சொல்லை...!
சிந்திக்க ↓

எனக்கும் ஒரு பகைவன் உண்டு, அவனைச் சிலமுறை வென்றுள்ளேன்... பலமுறை அவன் வென்று என்னைப் பகைத்துக் கொள்கிறான்... இந்தப் பகைவனுக்கு மட்டும் அருள்வாய் முருகா...!
யாரது...? அறிய இங்கு சென்று சிந்திக்கலாம்...

நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மிக இனிமையான வழியில் வள்ளுவரின்
    அறிவுரைகளைச் சொல்ல உங்களால் முடிகிறது.
    அன்பின் தனபாலன்.

    நா நயம் எவ்வளவு முக்கியம் என்பதை இப்பாடல் எத்தனை அருமையாகச் சொல்கிறது. வள்ளுவர் சொன்னதைத் திரைப்பாடலாகக் கேட்பதில்
    இன்னும் அருமையாகப் புரிகிறது மா.
    இரண்டு பாடல்களையும் கேட்டு ரசித்தேன்.
    நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளுக்கும் சென்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வாக்கினிலே இனிமை வேண்டும் என்றார் பாரதியார்.  வாக்கினிலே இனிமை எப்போது வரும்?  நினைவு நல்லதாய் இருந்தால் வரும்.

    பதிலளிநீக்கு
  3. நற்குடியில் பிறந்தோர் கூறுபாடுகள் அருமை.

    இரண்டு பாடல்களும் சொல்லிய விஷயங்கள் மிக அருமை.
    நாநயம் மிகவும் அவசியம் தான்.

    உறவை வளர்ப்பது அன்பு. மனநிறைவு தருவது பண்பு
    மருதகாசி பாடல் மிகவும் அருமை.

    பாடல் தேர்வு அருமை.
    திருக்குறள் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அமரதீபம் பாடல் வரிகள் அருமை ஜி

    மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. குறள் ஆராய்ச்சி நன்று தனபாலன். உங்கள் ஈடுபாடு பிரமிக்க வைக்கிறது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. மனிதனுக்குத் தேவையான நயம். ரசித்தேன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
  7. நல்லோர்கள் சொல்லி வைத்த ரகசியத்தை... அந்த நாநயத்தை ரகசியமாய் மறைத்துவிட்டார்கள் பல மனிதர்கள்..

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல நயம் பட உரைத்துள்ளீர்கள் நண்பரே. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே
    பதிவு வழக்கம் போல் அருமையாக உள்ளது.

    நாணயம், நா"நயம் பற்றி விளக்கங்களும், அதை குறித்த பாடலும், ஐயனின் பொருத்தமான திருக்குறளும், அதன் விளக்கங்களும், மிகவும் ரசிக்கும்படி உள்ளது. எப்படித்தான் குறளுக்கு தகுந்த பதிவாக தங்கள் எண்ணங்களை கோர்த்து தருகிறீர்கள் என ஒவ்வொரு தடவையும் வியக்கிறேன்.! தங்கள் அற்புதமான திறமைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    தாமதமாக வந்து கருத்துரை தந்ததற்கு மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. பதிவு அருமை ... ஒரு சின்ன விளக்கம்... "ந" என்றால் "உடல்" என்று அர்த்தம். "கை" என்றால் "தழுவுதல்" என்று அர்த்தம். நம் உதட்டில் உருவாகும் சிரிப்பு எதிரிலிருப்பவரின் உதடுகளையும் தொற்றிக்கொள்வதால் அல்லது தழுவிக்கொள்வதால்தான் அந்த சிரிப்புக்கு "நகை"ப்பு என்று பெயர் வைத்தனர். அதுபோல நாம் அணியும் ஆபரணங்கள் நம் உடலை தழுவியபடி இருப்பதால்தான் அதற்கும் "நகை" என்று நம் முன்னோர்கள் பெயர் வைத்துள்ளனர்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.