🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கல்லாதது குறளளவு...

வணக்கம் நண்பர்களே... கணினியில் Windows 10-யை அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருப்போம்...


சமீபத்தில் மகளுக்காக புது மடிக்கணினி வாங்கினேன்... அதில் Windows 10-யை பழகிக் கொண்டே அதனின் தேடலின் போது கிடைத்த காணொளி கீழே... அதன் ► பொத்தானை இருமுறை சொடுக்கி, கணினியின் வேகத்தை அதிகப்படுத்த 19 எளிய செய்முறைகளை அறிந்து செயல்படுத்துவோம்...


(இங்கு காணொளி வரவில்லையெனில் சொடுக்குக : https://youtu.be/NXPQwBHydHI)

இதன் மூலம் அறிமுகமானவர்
திருமிகு எட்வர்ட் பாக்கியராஜ் M.Com., M.Phil., B.Ed., BLIS, PGDBA, PGDCA
Advisor, Trainer - ICT Education, e-Content Development, OER
Rosary e-Solutions, Trichy
பயன் தரும் காணொளிகள் https://www.youtube.com/user/TheEdpackiaraj/videos

6000-க்கும் மேற்பட்ட இலவச இணையத் தளங்கள் https://packiam.wordpress.com

அறிவியல் விவாத ஆய்வுக்கட்டுரைகள் https://vinganam.blogspot.com

மேற்படி ① ② ③ குழந்தைகளுக்கு(ம்) பயன் தரும்... கவனிக்க : (ம்) = நம் வழிகாட்டல் மட்டுமே... மேலும் -ல், சமீபத்தில் இணையவழி பயிற்சி அளித்ததின் காணொளிப் பதிவு ஒன்றும் இருந்தது... அது https://youtu.be/i1N0-PVzzdI ← இதைச் சொடுக்கிச் சென்று காணொளியின் விளக்கத்தை வாசித்தால், காணொளி முழுவதையும் காண ஆர்வம் தானே வரும்... பலருக்கும் தெரிந்திருந்தாலும் அதிலிருந்து சில துளிகள் :

தமிழ்

கணினியில் இணைய இணைப்பு இல்லாமலும் தமிழில் எழுத முடியும்... அதற்கு மேலுள்ள இணைப்பைச் சொடுக்கி தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்... Task Bar-ல் E என்று உட்கார்ந்து கொள்ளும் ஐகானைச் சொடுக்கி மாற்றிக் கொள்ளலாம்... இல்லையெனில் எளிதாக Alt + Shift பொத்தான்களை ஒரு சேர சொடுக்கி மாற்றலாம்...
அவலோகிதம்

மேலுள்ள இணைப்பைச் சொடுக்கிச் சென்றால், "அட, நீங்களும் பா எழுதலாங்க..." என்று யாப்பு மென்பொருள் அழைக்கும்... வலது புறமுள்ள ஒவ்வொன்றையும் சொடுக்கி விவரங்களை அறிந்து கொண்டு பா இயற்றலாம்... ஆர்வமுள்ள பலருக்கும் வியப்பான சிறப்பான தரமான வலைநுட்பம்...! இதன் மூலம் ஒரு கவிதைக்காகப் பரிசு பெற்ற நம் நண்பர் மூங்கில்காற்று திருமிகு டி.என்.முரளிதரன் அவர்கள் எழுதிய பதிவின் → இணைப்பு
http://tamilconcordance.in/REQUEST.html

தமிழ்த்துளி

பேச்சை எழுத்தாக மாற்ற

குரல்வழிப் பதிவேற்றம் ← எப்படின்னு பதிவு போட்டீங்க, காணொளியை கேட்பொலியா மாத்துறதையும் சொல்லிட்டீங்க... ஒருவர் பேசின கேட்பொலி உரையை, எழுத்துக்களாகக் கணினி மாற்றுமா...? ←இது சில நாட்களுக்கு முன் அண்ணன் ஜோதிஜி அவர்கள் கேட்டது... அதற்கான இணைப்பு தான் மேலே உள்ளது...! சரி அங்கே போயிட்டு...

ஒரு குறளையும் அதன் விளக்கமும் கொண்ட கேட்பொலியை தரவேற்றம் செய்து பார்த்தேன்... ம்ம் வரலே...! கேட்பொலி ஒரு நிமிசம் தான் இருக்கவேண்டுமாம்... அதுக்கு மேலே பணம் கட்டவேண்டுமாம்...! ஓகோ... சரி... பிறகு தாத்தா பாடுவதையே தரவேற்றம் செய்து பார்த்தேன்...! வருகிறது...! அந்த குறள் : கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின் - பாட்டியின் குறள் விளக்கத்தைக் கேட்ட பின்பு, (மேற்சொன்ன சில பயன்தரும் காணொளிகள் ஞாபகம் வந்த பின்பும்) அமைதியாக இந்தப் பதிவைப் பகிர்ந்து விட்டு... ஒரு பாடல் கேட்போமா...? நன்றி...
ஏஏஏஏஏஏஏ.... தந்தன தந்தன தந்தா | தமிழ் போல் இனித்திடுமா...

© ஊரு விட்டு ஊரு வந்து கங்கை அமரன் இளையராஜா இளையராஜா, S.ஜானகி @ 1990 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சிறப்பான தகவல்கள் தனபாலன். சில எனக்கும் பயன்படும். நன்றி.

    பதிலளிநீக்கு

  2. அருமை ஜி
    இப்பதிவில் எத்தனை எழுத்துருக்களை உபயோகப்படுத்தி இருக்கிறீர்கள் ?

    ஆச்சர்யமாக இருக்கிறது காரணம் அதன் சிரமங்கள் அறிந்து வருகிறேன்.

    இடையில் ஒரேயொரு ஆங்கில எழுத்துக்குகூட சில வேலைகள் செய்து இருக்கிறீர்கள்.

    திரு. பாக்கியராஜின் காணொளி சற்று கண்டேன் பிறகு கணினியில் காண்பேன்.

    நிறைய சுட்டிகளுக்கும் சென்று படிக்க வேண்டும்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொன்றாக முயற்சிப்பேன். ஐயமிருப்பின் தொடர்பு கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  4. தொழில் நுட்பம் பல தெரிந்தும் இன்னும் பழகிக் கொண்டிருக்கிறேன் என்பது வள்ளுவன் வழியான தன்னடக்கம். நான் முன்பு எழுதிய பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி. பயனுள்ள இணைப்புகள். நன்றி

    பதிலளிநீக்கு
  5. அறியாதவர் அறிந்து கொள்ள அற்புத வழிகாட்டி

    பதிலளிநீக்கு
  6. எழுத்துரு அழகிய பெண்கள் போலவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  7. விண்டோஸ் 10 நல்லாருக்கு டிடி. சில அதில் உள்ள புதியவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறேன். கணினி கிடைக்கும் சமயத்தில் எல்லாம்.

    நல்ல தகவல்கள். ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன்.

    பெயின்ட் 3 டி பயன்படுத்திப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வேர்ட் டாக்குமென்டை பிடிஎஃப் ஆக மாற்ற இணையம் செல்லாமல் மாற்ற முடிகிறது. இப்படி நிறையப்பயன்பாடுகளைத் தெரிந்து கொண்டு வருகிறேன்.

    பதிவில் உள்ளவற்றையும் குறித்துக் கொண்டுள்ளேன். நானும் வேறு வேறு எழுத்துருக்களைப் பயன்படுத்திப் பார்த்து வருகிறேன்.

    நல்ல தகவல்கள் டிடி மிக்க நன்றி

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இன்னும் கற்க நிறையவே இருக்கிறதுதான் டிடி

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள தகவல்களைக் கொண்டு அருமையான பதிவு சார்.லிங்கை பயன்படுத்த முயர்ச்சிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. விண்டோஸ் 10 தான் என் மடி கணினி.
    பயனுள்ள தகவல்கள். நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

    எல்லோருக்கும் இந்த பதிவு மிகவும் உதவும்.
    வாழ்த்துக்கள்.
    பாராட்டுக்கள்.

    பாடல் கேட்டேன். பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  11. உபயோகமான பதிவு.  +இணையத் தொடர்பு இல்லாத நிலையில் தமிழ் எழுத நான் அழகி SW வைத்திருக்கிறேன்.  குரல் வழி எழுத்தேற்றம் ஒரு நிமிடத்துக்குமேல் ஏற்ற முடியாதா?  உங்கள் எழுத்துரு வித்தியாசமாக இருக்கிறது.  சென்ற பதிவின் விளைவா?  நேற்றுதான் பானு அக்கா கணினி மிகவும் தடங்கல் செய்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.  அவருக்கு  இந்தப் பதிவு மிகவும் உபயோகப்படும்.

    பதிலளிநீக்கு
  12. பலருக்கும் பயனுள்ள பதிவு. தங்கள் உழைப்புக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  13. அருமை, அழகிய பதிவு.. எழுத்துக்கள் மிக அழகு.. தேவைப்படும்போது சுட்டிகளில் சென்று விபரம் எடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. எல்லாமே பயன் தரும் இணைப்புகள். எனக்கு வேண்டியதை பயன்படுத்திக் கொள்கிறேன். வழக்கம்போல் தரமான பதிவு.

    பதிலளிநீக்கு
  15. பலருக்கும் பயன் தரும் விஷயங்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
    Voice Typing செய்வதற்கு மிக மிக மிக எளிய வழி இன்னொன்றும் இருக்கிறதே! Google Docs ! நான் அதில்தான் கடந்த பல மாதங்களாகவே எழுதிக்கொண்டிருக்கிறேன். Google Drive - (G Drive) ஐ நிறுவிக் கொண்டால் போதும். மடிக்கணினியில் சரளமாக எழுதலாம். எழுதியவுடன் save செய்யவேண்டிய கவலையே இல்லை. தானாகவே சேமித்துவிடும். அதையே அலைபேசி மூலமும் access செய்யமுடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதிஜி அவர்கள் கேட்டது என்று, இந்தப் பதிவிலேயே "குரல்வழிப் பதிவேற்றம்" என்கிற எனது பதிவின் இணைப்பு கொடுத்து உள்ளேன் ஐயா... அதில் பலவிதமாக நுட்பங்களை சொல்லியுள்ளேன்... அவற்றையும் செயல்படுத்தி வியப்படையலாம் ஐயா... நன்றி...

      நீக்கு
  16. வணக்கம் அண்ணா
    பதிவைப் பார்த்தவுடன் நிறைய படிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன தெளிவாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. பல நல்ல விஷயங்களை மிக எளிதாக உணர்ந்து கொள்ளும் வண்ணம் பதிவாக்கி தந்துள்ளீர்கள். அனைத்தையும் நன்கு படித்து புரிந்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. பயனுள்ளவை
    கணணி தொடர்பாக சில சேவைகளுக்கு யாரையும் சார்ந்திருக்கும் தேவை குறையும்
    நன்றி

    பதிலளிநீக்கு
  19. எனது பின்னூட்டங்கள் எங்கே போகின்றன?

    பதிலளிநீக்கு
  20. மிக மிக நல்ல பயன் கொடுக்கும் பதிவு. மீண்டும் படித்துப் பார்ககிறேன். அன்பு தனபாலன் அழகான பாடலைக் கேட்டுக் கொண்டே உங்கள் குரலையும் கேட்டேன். மிக மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.