அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க... வலைப்பூவின் வலைநுட்பத்தை ரசிக்க இப்பதிவைக் கணினியில் வாசித்தால் நன்றாக இருக்கும்... நன்றி...
ஏன் என்ற கேள்வி - இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை... நான் என்ற எண்ணம் - கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை... பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே 2 உரிமைகளைப் பெறுவதெல்லாம் - உணர்ச்சிகள் உள்ளதனாலே 2 (படம் : ஆயிரத்தில் ஒருவன்) கேள்வியைத் தேடி அறிகிற அறிவாளி... கேள்வியோடு மட்டுமே திரிகிற முட்டாள்... இந்த இரண்டு பேருலே யாரு சந்தோசமா இருப்பாங்க...? என்னைக் கேட்டா எந்தக் கஷ்டமும் படாம கேள்வியை மட்டும் கேட்கிற முட்டாள் தான் சந்தோசமா இருப்பான்னு தோணுது... உனக்கு எப்படி தோணுது...?
தூக்கத்தில் என்னடா அழகு என்று நினைக்காதீர்கள். இது தூக்கம் வரும் போது.....! இணையத்தில் நான் எப்போதோ பார்த்து ரசித்தவை. பாவம் குழந்தைகள். கீழே உள்ள கண்ணொளியை பாருங்கள்.