கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி...
⟪ © கவலை இல்லாத மனிதன் ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 சந்திரபாபு @ 1960 ⟫
⟪ © ராஜா ராணி ✍ அ.மருதகாசி ♫ T.R.பாப்பா 🎤 N.S.கிருஷ்ணன், T.A.மதுரம் @ 1956 ⟫
இருக்கும் வரை சந்தோசமா இருக்கணும்... சாகும் போது கூட சிரிச்சுக்கிட்டே சாகணும்ன்னு பல பேரும் சொல்றாங்களே, இது சாத்தியமா...?
அதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணும் மனசாட்சி... நல்லா சந்தோசமா இருக்கிறப்பவே வாய் விட்டு சிரிக்கும்ன்னு தோணுனாலும் கூட, நம்மகிட்டே பலபேரும் சிரிக்க மாட்டோம்... சிரிச்சா அடுத்தவங்க நம்மை தப்பா நினைச்சுடுவாங்க, இளக்காரமாக நினைச்சுடுவாங்கன்னு ஒரு எண்ணம்... இதிலே எங்கே சாகிற வரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறது...? இந்த விக்கல், தும்மல், இருமல், கொட்டாவி, ஒன்னு + இரண்டு, இன்னும் பலதும் அடக்கிக்கிறது தான் இன்றைய நாகரீகமாக்கும்...!
நம்ம வீட்டு பக்கத்திலே இருக்கிற ஒருத்தர் சாகிறப்போ "ஹஹஹாஹா"-ன்னு சிரிச்சாராம்... "என்னங்க எல்லோரும் சாகப்போறேன்ன்னு வருத்தப்படுவாங்க, நீங்க சிரிக்கிறீங்க"ன்னு சுத்தி நின்னவங்க கேட்டிருக்காங்க... அதுக்கு அவர், "இதுவரைக்கும் பத்து லட்சம் ரூபா வரைக்கும் கடன் வாங்கியிருக்கேன்... எவனுக்குமே திருப்பித் தரலே... அதனாலே சாகிறப்போ சந்தோசமா சிரிக்கிறேன்..." அப்படீன்னு சொன்னாராம்...! மனிசனோட மகிழ்ச்சி எங்கு எப்படி இருக்கு பார்த்தியா...?
உன்னோட நகைச்சுவையைக் கேட்டு சிலர் அழுவார்... சிலர் சிரிப்பார்... நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்... கருணை பொங்கும் உள்ளம் - அது கடவுள் வாழும் இல்லம்... கருணை மறந்தே வாழ்கின்றார்... கடவுளைத் தேடி அலைகின்றார்... (படம் : பாவ மன்னிப்பு) தேடிக்கிட்டே இருக்க வேண்டியது தான்... சரி அதை விடு... அழுது கொண்டே பிறக்கும் மனிதன், அடுத்தவரை அழ வைத்து விட்டு மறைந்து விடுகிறான்... அழகைக்கும் அழுகைக்கும் இடையே சிரிப்பை எப்படித் தக்க வைப்பது...? உலகிலுள்ள மற்ற உயிரினங்களிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவதும், உயர்த்திக் காட்டுவதும் அவனது பகுத்தறிவும், சிரிக்கும் இயல்பும் தான்... ஆனால் இந்த இரண்டும் இல்லாமல் தவிக்கும் மனிதர்கள் நம்மிடம் ஏராளம்... உலக நிகழ்வுகள், வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தையும் சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை நம்மிடம் தற்போது குறைந்து கொண்டே போகிறது...
இல்லை என்று சொல்லும் காலம் வந்துடும் போலிருக்கு...! ஏன்னா சிறு பொறியைக் கிளறி பெருந்தீ ஆக்குபவர்கள் தான் ஏராளம்...! ம்... படிப்பு, வேலை, பணம், வாழ்க்கை - எல்லாவற்றிலும் சிறுவயதிலிருந்தே மன அழுத்தம் நிழல் போல் என்றால், நம் அனைத்து செயல்களையும் கனமாகிக் கொண்டே போகிறது அல்லவா...? அதனால் தான் இயல்பாய் சிந்திப்பதற்கும், இயல்பாய் சிரிப்பதற்கும் கால அவகாசம் கிடைப்பதில்லை...! சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்துன்னு கண்டுபிடிச்சு, இப்போ எல்லா நகரங்களிலும் சிரிப்பு கிளப்புகள் (HUMOROUS CLUBS) வருது...!
மருந்து சரி... கிளப் தகவலே சிரிப்பு வருது...! அப்புறம் சிந்திப்பதற்கு நேரம் தேவை... சிரிப்பதற்குமா...? எதற்கெடுத்தாலும் பரபரப்பு... எதற்கெடுத்தாலும் கோபம்... எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் வெறுப்பு... முக்கிய காரணம் அகந்தை எனும் அரக்கன்...! வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி... பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி... மனிதன் என்ற போர்வையில், மிருகம் வாழும் நாட்டிலே... நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே...! (படம் ரிக்க்ஷாக்காரன்) சின்ன தடைகளுக்கும், தோல்விகளுக்கும் கூட வருத்தம் என்று, தொடர் எதிர்மறை இயல்புகளால் நம்மிடம் மகிழும் இயல்பு குறைந்து கொண்டே போகிறது... ஒரு மனிதனுக்குச் சிரிப்பும் சிந்தனையும் தான் உண்மையான சொத்துகள்... ம்... "இடுக்கண் வருங்கால் நகுக" என்று சொன்ன ஐயன், அடுக்கடுக்காகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனிடம் துன்பம் துன்பப்படுகிறது என்கிறார்
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும் (625)
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் உயரிய வாழ்வியல் சிந்தனைகளோடு தரமான நகைச்சுவைகளைத் தமிழ்த் திரைப்பட உலகில் விதைத்தவர்... திரையில் தோன்றும் பல கலைஞர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், நிழலில் வேறாகவும் நிஜத்தில் வேறாகவும் தென்படுவார்கள்... கலைவாணர் அப்படிப்பட்டவர் இல்லை... வாழ்நாள் முழுவதும் சீர்திருத்தக் கருத்துகளால் மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்... தன்னுடைய நிஜ வாழ்வில் வறுமையின் பிடியிலிருந்தாலும் அடுத்தவருக்குத் தாராளமாய் வாரி வழங்கிய வள்ளல்... உதவி என்று கேட்டு வந்தவரை என்றுமே வெறுங்கையோடு அனுப்பாதவர்... கலைவாணர் என்றும் சிரித்துக் கொண்டு இருப்பவர்... சுற்றி இருப்பவரைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவர்... சாகும் வரை சிரிப்பு... சாகும் போதும் சிரிப்பு என்று சொன்னால், அது கலைவாணருக்கே முழுக்க முழுக்கப் பொருந்தும்...
மரணப்படுக்கையில் மருத்துவமனையில் கிடக்கின்றார் கலைவாணர்... அவருடைய அன்புத் துணைவியார் T.N. மதுரம் அம்மா பார்க்கிறார்... "ஐயோ, உங்களை இந்த நிலையிலே பார்க்கிறப்போ எனக்கு தலைச் சுத்துது..." என்று சொன்னார்... அந்த வேதனை சூழ்நிலையிலும் கலைவாணர், "அடடே...! தலை சுத்துகிறதா...? ரொம்ப நல்லதாப் போச்சி மதுரம், இனிமே உன்னாலே உன் முதுகையும் தலை சுத்தும் போது பார்க்கலாம்...!" என்றார் சிரிப்புடன்...!
மரணப்படுக்கையிலும் மகிழவும், மகிழ்ச்சிப்படுத்தவும் தெரிந்தவர்களே உலகில் மகோத்துவ மாமனிதர்கள்...
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி... கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி... சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர்... சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி... கல கல கலவெனச் சிரி... கண்ணில் நீர் வர சிரி... (படம் : ஆளவந்தான்)
ஒன்னே ஒன்னு சொல்லி முடிச்சிக்கிறேன்... சோகமா இருந்தாலும் சரி, சந்தோஷமா இருந்தாலும் சரி, அழுகையோ பீறிட்டு வருது...! அதை அடக்குவதால் மனதிற்கும் உடலுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள்... எனக்கென்னமோ இன்றைய சூழ்நிலையில்... "மனம் விட்டு அழுதால் கூட நோய் விட்டு போகும்"ன்னு சொல்றேன்... இனிய உலக மருத்துவர்கள் தின வாழ்த்துக்கள்... சரி நண்பர்களே... இப்போது மேலே சென்று Play பட்டனைச் சொடுக்கி, கீழே விழாமல்... கலகலவென... கண்ணில் நீர் வர சிரிப்பீர்கள்...!
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
கவலைகள் உருவாகும் போது அதனை மனதிற்குள் கொண்டு போகாமல் இருப்பதே தனிக்கலை.
பதிலளிநீக்குவலைப்பூ தொழில்நுட்பங்களை முழுதுமாகப் பயன்படுத்தி, திருக்குறள் கருத்துக்களைப் பரப்பும் தங்களின் சிரி சிரி எங்களை கலகலவென சிரிக்க வைத்துவிட்டது.
பதிலளிநீக்குசிரிப்பதற்கு சிக்கும் முகமோ அகமோ தேவை,
பதிலளிநீக்குஇரண்டில் ஒன்றிருந்தாலும் போதும்.
சிரிப்பான பதிவு சிந்தனைக்கு உரியது
T.M 6
பதிலளிநீக்குதிருக்குறள், சினிமாப் பாடல்கள் என கலந்து... எல்லோரையும் சிரிப்போடு சிந்திக்க வைக்கும் பகிர்வு அண்ணா...
பதிலளிநீக்குகவலைகளை மனதிற்குள் கொண்டு செல்லாமல் இருந்தாலே வாழ்க்கை ருசிக்கும்... ஆனால் அதுதானே கஷ்டம்...
மிக அருமையான பாடல்கள் & கருத்துகளோடு சிறப்பான பகிர்வு டிடி சகோ.
பதிலளிநீக்குசிரிப்பு வருது சிரிப்பு வருது.
சங்கீதச் சிரிப்பு.. :)
சிரி சிரி சிரி என்ற பாடல்கள் எனக்கும் தலைப்பைப் பார்த்ததும் தோன்றியது. :)
சிரிப்பான பதிவு மிக அருமை.
பதிலளிநீக்குஅற்புதமான படத்தையும் போட்டு மரணத்தருவாயிலும் சிரிக்கவைத்த மாமனிதர் பற்றிய பகிர்வும் வழக்கம் போல் சிறப்புங்க சகோ.
பதிலளிநீக்குஅருமை டிடி! எதையுமே எளிதாக எடுத்துக் கொண்டு, வருவதை, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு மனதை காற்று போல் வைத்துக் கொண்டால் இன்பம் ...எல்லாம் மனதுள் இருக்க இன்பம்..அதை வெளியில் தேடி அலைவதுதான் இன்னல்களை வரவழைக்கின்றது...அழுகையை அடக்குவது என்பதோ கவலைகளை அடக்குவது என்பதோ மன அழுத்தத்தைத்தான் வரவழைக்கும் நீங்கள் சொல்லுவது போல்....சிறப்பான பதிவு.....ஐயனின் அருளுரைகளுடன்...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇருக்கும் வரை சந்தோசமா இருக்கணும்... சாகும் போது கூட சிரிச்சுக்கிட்டே சாகணும்ன்னு பல பேரும் சொல்றாங்களே, இது சாத்தியமா...?--சிலருக்கு சாத்தியமாகும் பலருக்கு சாத்தியமாகும் வழியில்லை....
லட்சுமி காந்தன் கோலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கபட்டு கலைவாணர் பட்ட பாடு உலகம் அறிந்ததாச்சே ,மறந்து விட்டீர்களா ?
பதிலளிநீக்குமனிதர்கள் மன அழுத்தத்தில் உழல்வதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகாலம் படுத்தும் பாடு... வேகம் படுத்தும் பாடு...மனிதனால் சிரிக்கவும் முடியவில்லை, மனம் விட்டு அழவும் முடியவில்லை. இதற்கும் மேல் தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும் முடியவில்லை.
நல்ல பதிவு.
God Bless You
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்றால் சிரிப்போம்.
பதிலளிநீக்குசிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே தான் நினைவுக்கு வருகிறது. .நல்ல பதிவு நன்றி ! வாழ்த்துக்கள் ..!
கலைவாணரைப் போன்று தரமான நகைச்சுவைகள் இந்தக் காலத்தில் யாரும் தருவதில்லை. அடுத்தவர்களை புண்படுத்தி நகைச்சுவையாக்கும் காலம் இது.
பதிலளிநீக்குசிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.
சிரிப்பை விட சிறந்த மருந்து ஏது..? அருமையான விளக்கம்..
பதிலளிநீக்குஇடுக்கண் வருங்கால் நகச் சொன்ன வள்ளுவரின் கருத்துக்கு அழகான விளக்கம்
பதிலளிநீக்குஅழுவதற்கு பல தசைகளை இயக்குவேண்டுமாம். சிரிப்பதற்கு அவ்வளவு தேவை இல்லையாம். எனவே சிரிப்போம்.
பதிலளிநீக்குமனம் விட்டு அழுதால் நோய் விட்டு போகும் என்ற தங்களின் கருத்து சிந்திக்கக் வைக்கிறது.
கலைவாணர், மதுரம் இணையர்கள்
பதிலளிநீக்குமறக்க இயலாத நகைச்சுவையாளர்கள்
கலைவாணர் கதை கூறி
சிரி சிரி பாட்டுப் போட்டு
வாய் விட்டுச் சிரித்தால்
நோய் விட்டுப் போகும் என்பதை
உள்ளம் (மனம்) விட்டு அழுதால் கூட
நோய் விட்டுப் போகும் என்கிறீர் - அதில்
எனக்கும் உடன்பாடு உண்டு!
உள்ளக் (மனக்) கனத்தை (பாரத்தை) இறக்கி வைத்தால்
உள்ளத்தில் (மனத்தில்) அமைதி தோன்றுமாம்...
அது போலத் தான்
உள்ளம் (மனம்) விட்டு அழுதால்
நோய் விட்டுப் போகும் என்பேன்!
மனித வாழ்வில் அழுகையும் சிரிப்பும்
உள, உடல் நலத்திற்கு நல்மருந்தே!
வாய்விட்டு சிரித்தால் மட்டுமல்ல...
பதிலளிநீக்குமனம் விட்டு அழுதால் கூட நோய் விட்டு போகும்ன்னு அழகா சொல்லி இருக்கீங்க சகோ...உண்மையான வாக்கு தான்.
நல்லா சிரிசிரிசிரி...ன்னு சிரித்து மகிழ்ந்தோம்...அருமையான..பதிவு சகோ
நன்றி தம +1
சிரித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குசிரிப்பைப் பற்றி எழுதிவிட்டு, மனம் விட்டு அழுதாலும் நோய் விட்டுப் போகும் என்று முடித்தது சிறப்பு.
பதிலளிநீக்குகலைவாணரின் இந்த சிரிப்பு பாட்டு கேட்கும்போதெல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கும்.
பாராட்டுக்கள்!
சிரிப்பின் பெருமைகளை உணர்த்திய பதிவு! கலைவாணரின் நகைச்சுவை உணர்வு போற்றத்தக்கது. பதிவுக்கேற்ற பாடலை காணொளிக் காட்சிமூலம் வழங்கியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதுன்பம் வரும் வேளையில சிரிங்க!..
பதிலளிநீக்குகருத்தும் கானமுமாக - களை கட்டி நிற்கின்றது பதிவு..
வாழ்க நலம்!..
நான் வாய்விட்டு சிரிச்சு நாட்கள் பலவாகிவிட்டன. மகிழ்ச்சி வந்தால் ஒரு புன் சிரிப்பு அவ்வளவுதான் இந்த மாதிரி சிரிக்க வேண்டும் எழ்பதற்காக ஒரு இயந்திரம் போல் சிரிப்பது ......எனக்கு உடன்பாடு இல்லை. எதுவும் ஸ்பொண்டேனியசாக வரவேண்டும்
பதிலளிநீக்குவாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்!
பதிலளிநீக்குஆருமை தனா!
பாடல்களும் பதிவும் நகைச்சுவையும் மனதை வருடின..!
பதிலளிநீக்குத ம 17
வணக்கம் !
பதிலளிநீக்குசிரிப்பதால் மனிதன் பூரணமடைகிறான் மரணத்தின் நொடியிலும் !
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் வாழக வளமுடன் !
வெகு நன்றாக எழுதுகின்றீர்கள். நல்ல கருத்து, அழகான பதிவு. வாழ்த்துக்கள். நன்றி.
பதிலளிநீக்குசிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா என்று பாட நினைத்தாலும் சிந்தனை எல்லாம் சிரிக்கவிடுவதில்லை பல நேரத்தில்டிடி! சிரிப்பு பற்றி அருமையான பாடலும் ,குறள் விளக்கமும்.
பதிலளிநீக்குசிரிப்பதற்கு மட்டுமல்லாமல் சிந்திப்பதற்கும்..!
பதிலளிநீக்குஅருமை.
நன்றி
வழக்கம்போல் சிறப்பான பதிவு
பதிலளிநீக்குசிரிப்பு மனித இனத்தின் மிகப் பெரிய வரம்.
சிரி..சிரி...சிரி..டிடி சொன்னா சரி !
பதிலளிநீக்குசிரிப்பது உடலுக்கு நல்லதே!
பதிலளிநீக்குவணக்கம், டிடி சார்,
பதிலளிநீக்குதாங்கள் சொன்ன கடைசிவரிகள் மிகப்பெரிய உண்மை,
மனம் விட்டு அழுதாலும் சரி, சிரித்தாலும் சரி,
சிந்திக்க வைக்கும் பதிவு,
வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
உண்மைதான் சிரித்து வாழ வேண்டும்.... மரணத்தின் இறுதி நேரத்திலும் சிரித்து மரணிக்க வேண்டும் என்பார்கள்... தங்களின் பதிவில் மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா. த.ம23
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிரிப்பை மட்டுமல்லாது, தேவையான நேரத்தில் அழுகையையும் பயன்படுத்தி பயன்பெறுவோம்.
பதிலளிநீக்குபதிவு அருமை ..சிரிப்பு இன்று மனிதர்களுக்கு தேவையான ஒன்று.மன இறுக்கம்,மன நோய் வர காரணமே சிரிப்பு குறைந்து போனது தான்
பதிலளிநீக்குகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் – மதுரம் இருவரும் சிரிக்கவும் வைத்தார்கள். சிந்திக்கவும் சொன்னார்கள். உங்கள் பதிவில் அதனை உங்கள் பாணியில் சொன்னீர்கள். எனவே சிரிப்பதோடு சிந்திக்கவும் செய்வோம்.
பதிலளிநீக்குவாசித்தேன் சிரித்தேன் மகிழ்ந்தேன் ......நன்றிகள்
பதிலளிநீக்குஅன்பின் சகோ டிடி ,
பதிலளிநீக்குமனிதனுக்கு இறைவன் வரமாகக் கொடுத்த இரண்டு உணர்வுகள், சிரிப்பும் அழுகையும்....
இரண்டுமே உன்னத உணர்வுகள். அதை அற்புதமாக எடுத்துக்காட்டி நயமாக வழக்கம்போல
பதிவில் பாட்டோடு பதித்து வைத்திருக்கிறீர்கள். எண்ணத்தைச் செதுக்குவதில் உங்களது உளி என்றுமே தயங்குவதில்லை.
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
சிரித்து வாழ வேண்டும்.... பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
பதிலளிநீக்குரசித்தேன்.
த.ம. 25
சிரியுங்கள் சிரிப்பதால் கவலையை
பதிலளிநீக்குபிரித்து வீசுகிறீர்கள் நீங்கள்!
அருமை டிடி..
அது ஒரு வரம்,எல்லோருக்கும் வாய்க்கப்பெறுவது நலம்.
பதிலளிநீக்குவாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள் மறைந்த மரியாதைக்கு உரிய கலைவாணர் அவர்கள் தாம் ஏழ்மை நிலையில் இருந்தாலும் வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் வாரி வழங்கியவர் .காசுக்காக நடிக்காமல் அதிலும் ஒரு நேர்த்தியுடன் குமுக சீர்த்திருத்தக் கோட்பாடுகளைக் கொண்டவர் .... பாராட்டுகள் .
பதிலளிநீக்கு