இதயமே இதயமே...
பனியாக உருகி நதியாக மாறி - அலை வீசி விளையாடி இருந்தேன்... தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து - உயிர் காதல் உறவாடிக் கலந்தே நின்றேன்... இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்...2 கோலம் கலைந்ததே புது சோகம் பிறந்ததே... நீயில்லாத வாழ்வு இங்கு கானல்தான்... இதயமே இதயமே... உன் மௌனம் என்னைக் கொல்லுதே... இதயமே இதயமே...
⟪ © இதயம் ✍ வாலி ♫ இளையராஜா 🎤 S.P.பாலசுப்பிரமணியம் @ 1991 ⟫
"இதயமே இதயமே..." இப்படிப் பல சுகமான சோகங்கள் ஆண்கள் வாழ்வில்...! பெண் மனம் படும்பாட்டை யாரறிவார்...? வேறு யார்...? நம்ம ஐயனைத் தவிர...! நலம் புனைந்துரைத்தல் (இணைப்பு : -நிலவே மலரே) பற்றி எழுதும் போது குறள் விளக்கத்திற்கேற்ப பாடல்கள் தேர்ந்தெடுக்கச் சிரமம் இல்லை... ஆனால் இன்று எந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் அல்லது ஆறுதலாக இருக்கும் என்பதோடு, மனம் விட்டு அகலாத அந்தப் பாடல்களின் படங்கள், பார்த்த இடமான டூரிங் கொட்டகைகள், அந்த வயதில் மனதிற்குள் பறந்த பட்டாம்பூச்சிகள் ! என எழுத ஓரிரு பதிவுகள் போதாது... ம்... போதும்...?!
125 "நெஞ்சோடு கிளத்தல்" அதிகாரத்தில், தன் நெஞ்சிடம் கேள்விகள் மூலம் பெண் மனம் படும்பாட்டைச் சொல்லி விட்டார் நம்ம திருவள்ளுவர்... நான் என் மனம் பாடும் பாட்டையும் சொல்லியுள்ளேன்...! ரசிக்கச் செல்வோமா...?
நெஞ்சமே...! இப்படி அவரை நினைத்து காதல் நோயால் துன்பப்படுகிறேனே, அது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா...? இந்தக் காதல் நோயைத் தீர்க்க மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்த்து, நீயாவது சொல்ல மாட்டாயா...? காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மையோ...?
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து... போனவன் போனாண்டி... தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி... ஓ..ஓ..ஓ... போனவன் போனாண்டி... நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து, போனவன் போனாண்டி ஹோய்... நீரை எடுத்து நெருப்பை அணைக்க, வந்தாலும் வருவாண்டி ஹோய்... வந்தாலும் வருவாண்டி ஹோய் ஹோய் ஹோய்... போனவன் போனாண்டி... ⟪ © படகோட்டி ✍ வாலி ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1964 ⟫
நெஞ்சமே...! மருந்தைச் சொல்லாமல், துன்பம் விளைவிப்பதும், நன்மை தருவதும் எதுவென்று எண்ணாமல், அவரால் உண்டாகும் தீமையை ஏற்றுக் கொண்டு, நன்மையை விட்டு விடும் முட்டாளாகவே வாழ்ந்து விட்டு போ...! அவர் என்னிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரையே எப்போதும் நினைத்து நினைத்துப் பார்த்து, கவலை கொள்ளும் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது...?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா...? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா...? உயிரே விலகத் தெரியாதா...? மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா...? மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா...? அன்பே மறையத் தெரியாதா...? ⟪ © ஆனந்த ஜோதி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1963 ⟫
நெஞ்சமே...! நீ கவலைப்பட்டு என்ன பயன்...? ஆமாம், என் கூடவே இருந்து கொண்டு, அவர் வருவதை எண்ணி நீ வருந்துவதும் ஏன்...? அவர் என்மீது இரக்கப்படும் எண்ணமே இல்லையே... இந்நிலையில் அவரிருக்கும் இடத்திற்கும் செல்ல முடியாமல், இங்கேயே இறந்தும் போகாமல் தவித்துத் தத்தளிப்பது ஏன்...?
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்... வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்... கண்ணில் நீரைக் காணாமல், கவலை ஏதும் கூறாமல், என்னை எண்ணி வாழாமல், உனக்கென நான் வாழ்வேன்...! எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு... ⟪ © நெஞ்சிருக்கும் வரை ✍ கண்ணதாசன் ♫ எம்.எஸ்.விஸ்வநாதன் 🎤 P.சுசீலா @ 1967 ⟫
நெஞ்சமே...! நீ தவித்தாலும் வருந்தினாலும் சரி... அடுத்த முறை அவரிடம் போகும் போது, எனது இரண்டு கண்களையும் கொண்டு சென்று விடு... அவரைக் காணவேண்டும் என்கிற ஆவலில் என் இரு கண்களும் என்னையே பிடுங்கித் தின்று விடுவது போல் திணற வைக்கிறது...!
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்... பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்...2 சென்ற இடம் காணேன், சிந்தை வாடலானேன், சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்...2 கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ...?2 காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ...? கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ...? ⟪ © மன்னாதி மன்னன் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1960 ⟫
நெஞ்சமே...! நீயே சொல்... உனக்கு அந்தளவு தைரியமிருக்கிறதா என்பதையும் சொல்...! என்னை விரும்பாத அவர் மீது நான் காதல் கொண்டு விரும்பி சென்றாலும், என்னை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா...?
ஒரு மட மாது உருகுகின்றாளே - உனக்கா புரியவில்லை...? இது சோதனையா ? நெஞ்சின் வேதனையா ? - உன் துணையேன் கிடைக்கவில்லை...?2 நெஞ்சம் மறப்பதில்லை... ⟪ © நெஞ்சம் மறப்பதில்லை ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1963 ⟫
பெண் மனம் பாடும் ஆறுதல், ஏக்கப் பாடல்களோடு விரைவில் அடுத்த பகுதியைத் தொடர்கிறேன்... இதயத்தைத் தொலைத்த பாடலோடு ஆரம்பித்த இப்பதிவு, இதயத்தைக் கொடுத்த பாடலோடு முடித்தால் "நமக்கும்" ஆறுதலாக இருக்கும் இல்லையா...?
இதன் அடுத்த பகுதி இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?
⟪ © இதயம் ✍ வாலி ♫ இளையராஜா 🎤 S.P.பாலசுப்பிரமணியம் @ 1991 ⟫
"இதயமே இதயமே..." இப்படிப் பல சுகமான சோகங்கள் ஆண்கள் வாழ்வில்...! பெண் மனம் படும்பாட்டை யாரறிவார்...? வேறு யார்...? நம்ம ஐயனைத் தவிர...! நலம் புனைந்துரைத்தல் (இணைப்பு : -நிலவே மலரே) பற்றி எழுதும் போது குறள் விளக்கத்திற்கேற்ப பாடல்கள் தேர்ந்தெடுக்கச் சிரமம் இல்லை... ஆனால் இன்று எந்தப் பாடல் பொருத்தமாக இருக்கும் அல்லது ஆறுதலாக இருக்கும் என்பதோடு, மனம் விட்டு அகலாத அந்தப் பாடல்களின் படங்கள், பார்த்த இடமான டூரிங் கொட்டகைகள், அந்த வயதில் மனதிற்குள் பறந்த பட்டாம்பூச்சிகள் ! என எழுத ஓரிரு பதிவுகள் போதாது... ம்... போதும்...?!
125 "நெஞ்சோடு கிளத்தல்" அதிகாரத்தில், தன் நெஞ்சிடம் கேள்விகள் மூலம் பெண் மனம் படும்பாட்டைச் சொல்லி விட்டார் நம்ம திருவள்ளுவர்... நான் என் மனம் பாடும் பாட்டையும் சொல்லியுள்ளேன்...! ரசிக்கச் செல்வோமா...?
நெஞ்சமே...! இப்படி அவரை நினைத்து காதல் நோயால் துன்பப்படுகிறேனே, அது உன் கண்ணுக்குத் தெரியவில்லையா...? இந்தக் காதல் நோயைத் தீர்க்க மருந்து எதுவும் இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்த்து, நீயாவது சொல்ல மாட்டாயா...? காதலுக்குக் கண்ணில்லை என்பது உண்மையோ...?
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து (1241)
எவ்வநோய் தீர்க்கும் மருந்து (1241)
நெஞ்சமே...! மருந்தைச் சொல்லாமல், துன்பம் விளைவிப்பதும், நன்மை தருவதும் எதுவென்று எண்ணாமல், அவரால் உண்டாகும் தீமையை ஏற்றுக் கொண்டு, நன்மையை விட்டு விடும் முட்டாளாகவே வாழ்ந்து விட்டு போ...! அவர் என்னிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரையே எப்போதும் நினைத்து நினைத்துப் பார்த்து, கவலை கொள்ளும் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது...?
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு (1242)
பேதைமை வாழியென் நெஞ்சு (1242)
நெஞ்சமே...! நீ கவலைப்பட்டு என்ன பயன்...? ஆமாம், என் கூடவே இருந்து கொண்டு, அவர் வருவதை எண்ணி நீ வருந்துவதும் ஏன்...? அவர் என்மீது இரக்கப்படும் எண்ணமே இல்லையே... இந்நிலையில் அவரிருக்கும் இடத்திற்கும் செல்ல முடியாமல், இங்கேயே இறந்தும் போகாமல் தவித்துத் தத்தளிப்பது ஏன்...?
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல் (1243)
பைதல்நோய் செய்தார்கண் இல் (1243)
நெஞ்சமே...! நீ தவித்தாலும் வருந்தினாலும் சரி... அடுத்த முறை அவரிடம் போகும் போது, எனது இரண்டு கண்களையும் கொண்டு சென்று விடு... அவரைக் காணவேண்டும் என்கிற ஆவலில் என் இரு கண்களும் என்னையே பிடுங்கித் தின்று விடுவது போல் திணற வைக்கிறது...!
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று (1244)
தின்னும் அவர்க்காணல் உற்று (1244)
நெஞ்சமே...! நீயே சொல்... உனக்கு அந்தளவு தைரியமிருக்கிறதா என்பதையும் சொல்...! என்னை விரும்பாத அவர் மீது நான் காதல் கொண்டு விரும்பி சென்றாலும், என்னை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா...?
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர் (1245)
உற்றால் உறாஅ தவர் (1245)
ஒரு மட மாது உருகுகின்றாளே - உனக்கா புரியவில்லை...? இது சோதனையா ? நெஞ்சின் வேதனையா ? - உன் துணையேன் கிடைக்கவில்லை...?2 நெஞ்சம் மறப்பதில்லை... ⟪ © நெஞ்சம் மறப்பதில்லை ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன் ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1963 ⟫
உந்தன் நெற்றி மீதிலே - துளி வேர்வை வரலாகுமா...? சின்னதாக நீயும்தான் - முகம் சுழித்தால் மனம் தாங்குமா...? உன் கண்ணிலே துளி நீரையும் - நீ சிந்தவும் விடமாட்டேன்... உன் நிழலையும் தரை மீதிலே - நடமாடவும் விடமாட்டேன்... ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம்... நினைக்கையில் இனிக்கிறதே... நீயே என் இதயமடி... நீயே என் ஜீவனடி... ஒரு முறை பிறந்தேன்... ஒரு முறை பிறந்தேன்... உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்... மனதினில் உன்னைச் சுமப்பதினாலே - மரணத்தைத் தாண்டி வாழ்ந்திருப்பேன்.... என் கண்ணில் உனை வைத்தே - காட்சிகளைப் பார்ப்பேன்... ஒரு நிமிடம் உனை மறக்க - முயன்றதிலே தோற்றேன்... நீயே என் இதயமடி... நீயே என் ஜீவனடி...
⟪ © நெஞ்சிருக்கும் வரை ✍ தாமரை ♫ சிறீகாந்து தேவா 🎤 ஹரிஹரன், சாதனா சர்கம் @ 2006 ⟫
⟪ © நெஞ்சிருக்கும் வரை ✍ தாமரை ♫ சிறீகாந்து தேவா 🎤 ஹரிஹரன், சாதனா சர்கம் @ 2006 ⟫
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
காதலுக்கு நல்ல விளக்கம் கொடுத்து அத்தோடு சிறந்த தொழில்நுற்பத்தையும் புகுத்தியுள்ளீர்கள் கண்கள் மூடுவது போன்ற.. படம் மிக அழகு.. பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Padithen.
பதிலளிநீக்குபொருத்தமான படப்பாடல்களுடன், கண்ணீர்த் துளிகள் விழுந்து கலங்கலில் சிணுங்கும் எழுத்துகளுடன்...
பதிலளிநீக்குபதிவு வழக்கம் போலவே அருமை.
நிச்சயம் ஆறுதலாகத்தான் இருக்கும் தொடருங்கள்....DD
பதிலளிநீக்குதிரைப்படப் பாடலாசிரியர்களுக்கு திருக்குறள் எவ்வளவு உதவி செய்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. இதயம் தொடும் பதிவு என்று சொல்லலாம்
பதிலளிநீக்குதிரைப்படப் பாடலாசிரியர்களுக்கு மட்டுமல்ல
நீக்குஉலகில் உள்ள
எல்லாத் துறை சார் அறிஞர்களுமே
திருக்குறளைத் தான்
எடுத்துக்காட்டுக்குக் கையில ஏந்துவர்!
நாற்பது வயதுக்கும் மேலே வரும் காதல் என்பது குடும்ப உறுப்பினர்களுக்குள் இருப்பதும், அதற்குள் அடங்கி விடுவதும் நம் நாட்டில் தான் அதிகம் உள்ளது. வெளியுலக காதலும் ரசிக்க வேண்டிய விசயங்கள் என அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்கால போராட்டங்களினால் மறந்து மறைந்து போய்விடுகின்றதே?
பதிலளிநீக்குகாலமெல்லாம் பாடினாலும் காதல் தீராதோ என்று வியக்கவைக்கும் பதிவு. நன்றி!
பதிலளிநீக்குஐயா வணக்கம்.
பதிலளிநீக்குதிரைப்படப்பாடல்களும் திருக்குறளும் என ஒரு பி.எச்.டி பண்ணுமளவுக்குச் சமாச்சாரங்ள் இருக்கும் போல....!!!!
முடிந்தால் இன்னொருமுறை வருகிறேன்.
நன்றி
இது போன்று திருக்குறளுக்கு விளக்கம் யாரும் கொடுத்ததில்லை. மிக அருமையாக பொருத்தமான திரைப்படப் பாடலை ஒவ்வொரு குறளுக்கும் தந்திருக்கிறீர்கள். பதிவை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅந்த படகோட்டி படப்பாடல் இப்போ வாசித்தாலும் அட்டகாசமா இருக்கு! எழுதியவர் யார்? கவியரசு கண்ணதாசனோ?
பதிலளிநீக்குபெண் மனம் படும்பாட்டை இதயமுள்ளவர்தான் அறிவார்.
பதிலளிநீக்குபெண் மனம் படும் பாடு என்று பெண்கள் யாரும் எழுதியதாய் தெரியவில்லை ..பெண்கள் யாரும் இது உண்மைதான் என்று சொன்னதாகவும் தெரியவில்லை .ஹி..ஹி:)
பதிலளிநீக்குகுறளோடு பாடல்
பதிலளிநீக்குகாதலோடு கனத்த நெஞ்சம்
பாடினேன் லயித்தேன்
ஆஹா அற்புதமான படப்பாடல்கள்..
பதிலளிநீக்குதின்னும் அவர்காணலுற்று... என்ற தகுந்த குறள் வரிகளும் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
கட்டுரை அருமை. ஆனால், பக்கம் முழுக்க படர்ந்திருக்கும் தொழில்நுட்ப பிரயோகம்தான் பிரமிக்க வைக்கிறது. கண் சிமிட்டல்களும், நீரலை சிதறல்களும், இதயம் அலைபாய்வதுமாக... நவீன தொழில்நுட்பம், இலக்கிய அழகு பூசப்பட்டு பரிமாறப்பட்டிருக்கிறது. கற்றுக் கொள்வதற்கு, உங்களிடம் நிறைய, நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி.
- திருமங்கலம். எஸ்.கிருஷ்ணகுமார் -
திருக்குறளும், கண்களை மூடும் படமும் அழகு.
பதிலளிநீக்குதிருக்குறளும் அதற்கேற்ப திரைப்படப் பாடல்களும் அசத்தல் அது மட்டுமா வியக்க வைக்கும் தொழில்நுட்பம் வேறு. கலக்குங்கள் சகோ வழமை போல வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஅன்பின் சகோ.தனபாலன்.
பதிலளிநீக்குகாதலால் இதயங்கள் படும் பாட்டைப் பாடி கண்ணீர் மழை பொழிந்து ஆறாக ஓடிக் கொண்டிருந்தாலும் எங்கோ ரோஜாவாக இதயங்கள் இணைந்து காதல் ஜெயித்துக் கொண்டே தான் இருக்கிறது என்பதை இதழ் மழை பொழிந்தும் பதிவைக் காப்பாற்றி இருக்கிறீர்கள். தொடருங்கள். மறந்த பாடல்களும் வரிகளும் நினைவுக்குக் கொண்டுவரும் இதயத்திற்கு இனிமையான பதிவு. தங்களின் கற்பனையும் அதை அழகாக வெளிப்படுத்திய விதமும் அபாரம். தொழில்நுட்பத்திற்கு ஒரு ஜே..!
(ஒரு சின்ன மாற்றம் செய்ய வேண்டுமே....முதல் பாடல் வரிகளில்.... (கானல் என்பது காணல் என்று மாறி விழுந்திருக்கிறது..)
அன்புடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்.
என்ன திடீரென்று காதல் வரிகள்.?காதல் பிரிவு ஆண்களுக்கா பெண்களுக்கா அதிகம் என்பது விவாதத்துக்கு உரியது. உங்களுக்குப் பதிவு எழுத குறளும் தொழில் நுட்பமும் நிறையவே கை கொடுக்கிறது. வாசித்து ரசித்தேன் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க அழகு
பதிலளிநீக்குபாடல் அமைக்கும் போது குறிப்பெடுத்த குறள்
அருமை
பாராட்டுகள்
என்னை எண்ணிய பெண்
பதிலளிநீக்குநான்
எட்டாத் தொலைவில் இருந்தாலும்
எப்படி எல்லாம் - என்னை
மீட்டுப் பார்க்க வைக்கிறது - அது
அவள் உள்ளத்தில் உருவான
என் மீது கொண்ட அன்பே!
இலக்கியத்தில் தலைவன்-தலைவி
பிரிவுத் துயரெனப் பேசப்படுகிறதே!
ஆணை விட
பெண் தான் அன்புக்குரியவரை
நினைத்து நினைத்து
ஆறாத் துயரில் இருப்பதை
இலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
தங்கள் இனிய பதிவின்
அடுத்த பகுதியில் சந்திப்போம்!
வர வர நுட்பம் நிறைந்த
சிறந்த பதிவாகத் தங்கள் பதிவுகள்
மலருவதில் மகிழ்வடைகின்றேன்!
நினைக்க தெரிந்த மனமே, நெஞ்சம் மறப்பதில்லை இந்த இரண்டு பாடல்களும் குறளின் பொருளினைப் படிக்கும் பொழுதே மனதில் ஓடியது. சரியாக அதனையேகொடுத்துள்ளீர்கள்... நல்ல பதிவு சகோ
பதிலளிநீக்குவழக்கம் போலவே அருமை.
பதிலளிநீக்கு"செற்றாரெனக் கைவிடல்... அடாடா அருமையான குறள்.
என்ன சொல்வது. உம் பதிவு கண்ணதாசனையும் அய்யனையும் கலந்துகட்டி இதயத்தை கனக்கச் செய்துவிட்டது.
God Bless You
அருமை டிடி! ஐயனின் பாடல்களுகும் திரைப்படப் பாடல்கள் ரொம்பவே பொருத்தம்...அந்த கண் சிமிட்டி சிமிட்டி அழுகின்றதே ....ம்ம்ம் சூப்பர் வலையை டெக் குல கலக்குறீங்க டிடி...
பதிலளிநீக்குஅருமை...
வணக்கம்,
பதிலளிநீக்குடிடி சார், என்னாச்சு, உங்களுக்கு திடீர் என்று காதல்,,,,,
அப்பப்பா எத்துனை பாடு,
ஒஒ பெண்கள் படும் பாடா?
ஆனால் தங்கள் தளத்தில் தாங்கள் செய்யும் சித்து வேலைகள் தான் மனம் கவர்கிறது,
அனைத்தும் அருமை, தொடருங்கள், நன்றி.
என்றென்றும் மனதில் இருக்கும் திருக்குறள்..
பதிலளிநீக்குஎன்றென்றும் மனதை மயக்கும் திரையிசைப் பாடல்கள்..
மறக்க இயலாது.. எதையும் மறுக்க இயலாது..
தித்திக்கும் தீந்தமிழ் விருந்து.. வாழ்க நலம்!..
ஆஹா.. பிரமாதம். வானொலி நிகழ்ச்சிக்காக சில சமயங்களில் திருக்குறளை மேற்கோளிட்டு பாடல்களை வழங்கிவருகிறேன். பிரிவாற்றாமை குறள்களோடு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பல பாடல்களை வழங்கியிருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. சொல்ல வருவதை பாடல்கள் வழியே அழகாகச் சொல்லும் திறமைக்குப் பாராட்டுகள் தனபாலன்.
பதிலளிநீக்குகுறளையும் ,திரைப்பாடல்களையும் இணைத்து சிறப்பாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்..
பதிலளிநீக்குஆண்,பெண் இருவருக்கும் உணர்வுகள் ஒன்றே1ஆணால் பகிர முடிகிறது;ஆனால் அவளால்?!
வாசித்தேன்! வள்ளுவரை! நேசித்தேன் உங்கள் பதிவை!
பதிலளிநீக்குசோகமா? சுகமா?
பதிலளிநீக்குkarthik amma
kalakarthik
குறளோடு இணைந்த பாடல்கள்... விளக்கம்... மேலும் சிறப்பான தொழில்நுட்ப இணைப்பின் மூலம் கண்கள் என கலக்கிட்டீங்க அண்ணா.
பதிலளிநீக்குஅருமையான விளக்கம்...
நெஞ்சை விட்டு நீங்கா இனிய பாடல்களோடு குறள் விளக்கம் இனிமை! எப்படித்தான் பாடல்களை தேர்ந்தெடுக்கின்றீர்களோ வியக்க வைக்கிறது. தொழில்நுட்பத்திலும் அசத்தி பின்புலத்தில் கண்களில் இருந்து விழும் நீரோட்டம் ரசிக்க வைக்கின்றது. அருமையான பதிவு நன்றி!
பதிலளிநீக்குவள்ளுவரின் குறலுக்கு தங்களின் பாட்டு எங்களுக்கு பொருளை நன்றாக விளங்க வைக்கிறது. கணினியின் ஜாலம்...கலக்குறீங்க சகோ..!!!
பதிலளிநீக்குதம 15
எங்கே நீயோ, நெஞ்சம் மறப்பதில்லை, நினைக்கத் தெரிந்த மனமே, கண்கள் இரண்டும்.., இதயமே என இதயம் தொட்ட பாடல் பகிர்வும் திருக்குறள் விளக்கமும் வழக்கம் போலவே அருமை டிடி சகோ.
பதிலளிநீக்குஅருமை அருமை
பதிலளிநீக்குஅருமை விளக்கம் குறளும் பாடலும் ! காட்சிப்படம் தொழில்நுட்பம் இன்னும் படிக்க வேண்டும் உங்களிடம் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது இப்பதிவு ஒரு சிலருக்கு மகிழ்ச்சியையும், சிலருக்கு ஏக்கத்தையும் கொடுக்கும் போலுள்ளது. வழக்கம்போல உங்களது ஒப்புமை அருமை.
பதிலளிநீக்குகண் இதயம் நெஞ்சம்
பதிலளிநீக்குஉருக்கும் வரிகள் சிந்தனை பாடல்களோடு கூடிய
தங்கள் ஆக்கங்களுக்கு தேடலிற்கு சுகமாக அகராதி முறை
வைத்தால் டிடி இந்த எழுத்து என்று தேடி பாடல்களை எடுக்கலாம்.
அருமையான வேலை.டிடி
பதிலளிநீக்குதிருக்குறளுக்கு திரைப்பாடல்கள் மூலம் விளக்கம்.. வழக்கம் போல அருமை. tm17
asaththalkal thotarattum
பதிலளிநீக்கு"ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே?" என்று சோகத்தில் திளைத்த பெண்களின் உணர்ச்சி பொங்கும் பாடல் வரிகளை வள்ளுவத்துடன் ஒப்பிட்டுள்ளது அருமை !
பதிலளிநீக்கு@ஊமைக்கனவுகள். மீண்டும் வருவதாகத்தான் கூறிச்சென்றேன்.
பதிலளிநீக்குஇன்னொரு முறை வாசித்து ஏதேனும் ஒரு குறளையாவது எடுத்துக்காட்டாலாம் என நினைத்தாலும், எதை விளக்குவது எதை விலக்குவது எனத் தெரியாத குழப்பம்.
எனவே பெயருக்கேற்றபடி பேசாமல் போகிறேன்.
நன்றி.
இந்த மாதிரி ஒரு கம்போ உங்களால மட்டும்தான் கொடுக்கமுடியும் அண்ணா!!! கிளாஸ்!! மாஸ்!!!
பதிலளிநீக்குபெண்கள் மனம் படும் பாட்டை திருக்குறள் விளக்கத்துடன் திரைப்பட பாடல்களோடு சேர்த்து தெளிவாக விளக்கியுள்ளீர்கள். இந்த கருப்பொருளில் இதுவரை நான் எந்த இடுகையையும் பார்த்ததேயில்லை. மேலும் தொடருங்கள்.
பதிலளிநீக்குஅருமை. பெண் மனம் படும் பாட்டை குறளும் பாட்டுமாய் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். அருமை.
பதிலளிநீக்குஉணர்வுக் குவியல்!
பதிலளிநீக்குபதிவும், கண் இமைக்கும்போது விழும் கண்ணீர்த் துளிகளும், அதனால் உண்டாகும் கண்ணீர்க் குளமும், இதயமும் அருமை.
பதிலளிநீக்குஇருமன வாழ்வின் ஒருமித்த கோட்பாடு உனக்கு நானும் எனக்கு நீயும் என்றான பின்பு ஊடல் என்பது உயிரை பறித்து வேறொரு கூட்டில் அடைக்கும் துயரே இருகரம் நீட்டி அழைக்கின்றேன் வந்துவிடு என்னுயிரே வேறேதும் வேண்டேன் - உச்சநிலை அச்சம் இல்லை இல்லறம் இனிதே இனியும் வாழ்வோம் வா வா... இதுதான் காதலா என்னை நானே கிள்ளிப் பார்க்கிறேன் - அருமையான விளக்கங்கள் தனபாலன் பாராட்டுகள்..
பதிலளிநீக்குwhat a flow of language?It is like a thunderous mountain stream falling from a high mountain.each and every word fits into its position in great style.welldone Dhanabalan sir!
பதிலளிநீக்குsorry for the comments in english.