🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉உயிரே உயிரே...

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து - உயிர் தாங்கி நானிருப்பேன்... மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால் - மலை மீது தீக்குளிப்பேன்... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே - அதற்காகவா பாடினேன்...? வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே - அதற்காகத்தான் வாடினேன்...! முதலா...? முடிவா...? அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்...!

© பம்பாய் வைரமுத்து ஹரிஹரன், K.S.சித்ரா @ 1995 ⟫


"உயிரே உயிரே..." இப்படிப் பல சுகமான சோகங்கள் ஆண்கள் வாழ்வில்...! பெண் மனம் படும்பாட்டை யாரறிவார்...? வேறு யார்...? நம்ம ஐயனைத் தவிர...! 125 "நெஞ்சோடு கிளத்தல்" அதிகாரத்தில், தன் நெஞ்சிடம் கேள்விகள் மூலம் பெண் மனம் படும்பாட்டைச் சொல்லி விட்டார் நம்ம திருவள்ளுவர்... நான் என் மனம் பாடும் பாட்டையும் சொல்லியுள்ளேன்...!
முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் சொடுக்குக : இதயமே இதயமே

நெஞ்சமே... கூடிக் கலந்து ஊடலை நீக்கும் அவரைக் கண்டால் ஒரு தடவைகூட நீ பிணங்கி உணர மாட்டாய்... ஆனால் இப்போது என்னவென்றால் அவரைப் போய் கொடியவர் என்று வெறுப்பது போல் இருக்கிறாயே... இந்தப் பொய் நியாயமா...? இது தகுமா...? நீயே சொல்...!
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்  
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு (1246)  
சொன்னது நீ தானா...? சொல் சொல் சொல் என்னுயிரே... சம்மதம் தானா...? ஏன் ஏன் ஏன் என்னுயிரே...?2 தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா...? தெருவினிலே விழுந்தாலும் வேறொருவர் கை தொடலாமா...? ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா...? ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா...?© நெஞ்சில் ஓர் ஆலயம் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி P.சுசீலா @ 1962 ⟫

நெஞ்சமே...! பொய் பித்தலாட்டத்தை விட்டு விட்டு, ஒன்று காதலால் துடிப்பதை விட்டு விடு... இல்லை அதை வெளியே சொல்லத் துணிவில்லாமல் தடுக்கும் நாணத்தை விட்டு விடு... இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது...!
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே  
யானோ பொறேன்இவ் விரண்டு (1247)  
எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் - ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்... சொல்லத்தான் அன்று துடித்தேன் - வந்த நாணத்தால் அதை மறைத்தேன்... மன்னவா, உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்... உன்னை நான் சந்தித்தேன் - நீ ஆயிரத்தில் ஒருவன்... என்னை நான் கொடுத்தேன் - என் ஆலயத்தின் இறைவன்2© ஆயிரத்தில் ஒருவன் வாலி விஸ்வநாதன் ராமமூர்த்தி P.சுசீலா @ 1965 ⟫

நெஞ்சமே... இவ்வளவு சொல்லியும் நீ அறிவற்ற பேதை போல் ஆகி விட்டாயே...! என் துன்பத்தை நினைத்து அவர் இரங்கி வந்து அன்பு செய்யவில்லை என்று, அவர் பின்னாலேயே ஏக்கம் கொண்டு ஏன் செல்கிறாய்...? நம் நிலையை எடுத்துச் சொல்லவா...?
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்  
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு (1248)  
மன்னனை நினைத்தே மாளிகை அமைத்தேன்... வள்ளலை நினைத்தே மையலை வளர்த்தேன்... மாளிகை இல்லை, மன்னனும் இல்லை... கண்ணீரில் காலம் செல்ல வேறென்ன வேண்டும்...? தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை... என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்... என்னுடனே எந்தன் பூ உடல் வாழும்... உன்னுடனே எந்தன் பொன்னுயிர் போகும்...© பணம் படைத்தவன் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி P.சுசீலா @ 1965 ⟫

நெஞ்சமே...! எடுத்துச் சொன்னாலும் அவர்க்குப் புரியுமா...? ஆமாம் அவர் தான் என் உள்ளத்திலே இருக்கும் போது, நீ என்னவென்றால் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கிறாய்...? உன்னைத் தான் புரிந்து கொள்ளவே முடியவில்லை...! ஏனிந்த குழப்பம்...?
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ  
யாருழைச் சேறியென் நெஞ்சு (1249)  
இங்கு நீயொரு பாதி... நானொரு பாதி... இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி... காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்... காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல... உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல... நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல... நீ இல்லாமல் நானும் நானல்ல2© இதய கமலம் கண்ணதாசன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1965 ⟫

நெஞ்சமே... இதையாவது அறிந்து தெரிந்து புரிந்து கொள்... என்னோடு சேர்ந்திருக்காமல் என்னைப் பிரிந்து சென்றவரை என் மனத்திற்குள்ளேயே வைத்திருப்பதால், இழந்து விட்ட புற அழகோடு அக அழகையும் இழக்கப் போகிறோம்...! இது மட்டும் உறுதி...!
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா  
இன்னும் இழத்தும் கவின் (1250)  
உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு2 உயிரங்கே... உடலிங்கே... உயிரங்கே உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு... உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு...2 உடலிழந்து போகும் முன்னே ஓடி வரவும் சொல்லு... ஓடி வரவும் சொல்லு... வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு... என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு... வெண் முகிலே ஏஏஏ...© விக்கிரமாதித்தன் ஆத்மநாதன் S.ராஜேஸ்வர ராவ் P.சுசீலா @ 1962 ⟫

காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!! அறிய இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வள்ளுவரை முனிவர் என்று சொல்வதே தகுமோ என்பதைப் போன்ற குறள்கள் காமத்துப் பாலில் உள்ள குறள்கள்.

  அவரைப் போன்ற அரசியலாரும்,உளவியலாரும் மானுடவியலாரும் இதுவரை வரவில்லை என்றே தோன்றுகிறது.

  வழக்கம் போலவே அருமை தயாளரே..

  God Bless YOu

  பதிலளிநீக்கு
 2. விக்கிரமாதித்தான் பாடல் கேட்டதில்லை. குறள் விளக்கம் படித்துவிட்டு, எனக்கு ஏதாவது பொருத்தமாக பாடல் தோன்றுகிறதா என்று இரண்டு நிமிடம் யோசித்து விட்டு கீழே நீங்கள் தந்திருக்கும் பாடலைப் பார்த்தேன்.


  எனக்கு உடனே எதுவும் தோன்றவில்லை!

  பதிலளிநீக்கு
 3. நீல நிற எழுத்துக்களின் மேல் நீர்த்துளிகள் விழுவதன் ரகசியம் என்னவோ?

  பதிலளிநீக்கு
 4. காதல் உணர்வை இப்படி புட்டு புட்டு வைக்கிறாரே வள்ளுவர்.
  அதற்கான உங்கள் பாடலும் விளக்கும் கலக்கல். பின்புல அனிமேஷன் சூப்பர்

  பதிலளிநீக்கு
 5. உணர்வுகளின் வெளிப்பாட்டை உங்களது அழகான உத்தியின் மூலமாக சிறப்பாக அமைத்துத் தந்துள்ளீர்கள். இப்பதிவுக்கு நீங்கள் எடுத்துக்கொண்ட பொருண்மை மிகவும் அருமையானது. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. திருக்குறளும் திரை இசைப் பாடல்களும் என்னும் தலைப்பில் நீங்கள் ஏன் ஒரு முனைவர் பட்டத்துக்கு முயற்சிக்கக் கூடாது.? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. மெல்லிசை மன்னருக்கு சிறப்பாக அஞ்சலி செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்! குறள்களையும், திரைப்பட பாடல்களையும் திரும்பவும் இரசிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அண்ணா, கலக்கல் பதிவு. அருமையான பாடல்கள். கண்ணீர் வடிக்கும் கண்கள் சிறிது நேரம் கட்டிப்போட்டு விட்டன உங்கள் தளத்திலேயே.
  விதம் விதமாய் கலக்குகிறீர்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 9. நெஞ்சம் மறப்பதில்லை..

  நின்று வாழும் மெல்லிசை.. என்றும் வாழ்வார் - MSV அவர்கள்!..

  பதிலளிநீக்கு
 10. மெல்லிசை மன்னருக்கு இனிய அஞ்சலியுடன் - சிறப்பான குறள் விளக்கம்!..

  பதிலளிநீக்கு
 11. அனிமேஷன் மிக அழகு....

  பாடல்கள் அனைத்தும் இனிமை....

  குரலும் குறளும் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  அண்ணா.

  பதிவே.. உயிர்தான்... தங்களின் அனுபவத்தினை பாடல்கள் வழி சிறப்பித்தமைக்கு நன்றி... அருமையாக உள்ளது த.ம 12
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. பத்து வருடங்களுக்கு முன்பு இசையில் அதீத ஆர்வம் கொண்டு வாழ்ந்த போது இரவு முழுக்க ஒலித்த பாடல்கள் இப்போது நினைவுக்கு வருகின்றது தனபாலன்.

  பதிலளிநீக்கு
 14. @ஸ்ரீராம். எங்கள் ஸ்ரீராம் சார் அவர்களுக்கு : 1250 குறளுக்கு தகுந்த பல பாடல்களை தேடியதில், இந்தப் பாடல் பொருத்தமாக இருந்ததில் மனதிற்கு சந்தோசமும் திருப்தியும்... ஆனால் இந்தப் பாடல் என் கணினியில் இல்லை... பிறகு காணொளியை தேடிக் கண்டுபிடித்து, அதிலிருந்து பாடலை (mp3) மட்டும் பிரித்து எடுத்து... ம்... வாசகர்கள் விரும்பினால் ஒரு பதிவே போடலாம்...! இதோ விக்ரமாதித்தனின் காணொளிப் பாடல் இங்கே →இங்கே சொடுக்குக← நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி DD. மகா சோகமான பாடல். எவ்வளவு ஒல்லி பத்மினி! யார் ஹீரோ என்று தெரியவில்லை.

   நீக்கு
 15. அனைத்துப் பாடல்களும் முன்னர் ரசித்துக் கேட்பவை மீன்டும் கேட்க ரம்யமாக இருந்தது அதற்கேற்ப குறள் அசத்தல் நன்றி சகோ !

  பதிலளிநீக்கு
 16. குறள் தேர்வும் அதற்கு தகுந்த பாடல்களும் எப்படித்தான் கண்டு பிடிப்பீர்களோ? என்று ஆச்சரியப்பட வைக்கிறது சகோ. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே!

  தங்கள் பதிவுகள் என்றாலே ஒரு தனித்தன்மை வாய்ந்ததுதான்!

  அத்தனையும் மிக மிக அருமை!
  எல்லாமே என் மனதைத் தொட்ட பாடல் வரிகள்!.
  குறட்பாக்களோடு ஒப்பீடு அபாரம்!!!

  காலத்தால் அழியாத எம் எஸ் வி ஐயாவின் நினைவு சுமந்த
  நல்ல பதிவு! நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 18. குறளுக்கேற்ற பாடல்களா...!!! பாடல்களுக்கேற்ற குறள்களா!!!! அருமை...

  பதிலளிநீக்கு
 19. குறளோடும், திரைக் குரலோடும் ஒப்பிட்டு எழுதும் உங்கள் பதிவுகள் அனைத்தும் முத்துமாலையாகும்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 20. வள்ளுவர் காதைலைப் பற்றி உருகி எழுதியிருப்பது அசத்தல்...திரைப்படப்பாடல்கள் மன்னரின் பாடல்கள் அருமை..விக்ரமாதித்தன் பாடல் இப்போதுதான் கேட்கிறோம்.

  பதிலளிநீக்கு
 21. எல்லாமே மலரும் நினைவுகளை மீட்டுத் தரும் பாடல்கள். உங்கள் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 22. குறளும் பாடல்களும் அருமை. ஆமா கார்த்திக் சரவணன் கேட்க நினைத்ததை நானும் கேட்கிறேன். நீல நிறப் பாடலின் மேல் நீல மழைத்துளிகளோ கண்ணீரோ பொழிவதன் ரகசியம் என்ன சகோ :)

  பதிலளிநீக்கு
 23. பேக் கிரவுண்ட் அனிமேஷன் டாப் கிளாஸ்.
  மெனக்கெட்டது புரிகிறது

  பதிலளிநீக்கு
 24. வழக்கம் போலவே தெளிவான விளக்கம் குறள்களுக்கு.. tm21

  பதிலளிநீக்கு
 25. சினிமா பாட்டுக்கும் .திருக்குறளுக்கும் இவ்வளவு பொருத்தம் உள்ளதை எப்படித்தான் ஆராய்ச்சி செய்கிறீர்களோ ?உங்களின் நினைவாற்றலுக்கு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 26. ஒரு பதிவினை தருவதில் உங்களுக்குள்ள உழைப்பு புரிகின்றது! அருமையான பாடல்கள்! குறள்களுக்கு ஏற்ற வரிகளை தேடும் பொறுமை பாடல்களை இணைப்பது என்று அசத்துகின்றீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 27. வணக்கம்.மிகவும் தேடல் கொண்ட மனிதர்நீங்கள்.ஆச்சர்யம்.அப்படியே பொருந்தவும் செய்கின்றன.வள்ளுவர் காலங்கள் அனைத்திற்கும் பொருந்துகிறார்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 28. பழைய தமிழ்த்திரைப்பாடல்கள் வாழ்வின் மென்மையான ஒரு பகுதியாகப் பதிந்து கிடக்கின்றது ஆழ்மனதில். அவ்வப்போது சில வரிகள் மேலெழும்பி மனதைப் போட்டுக் கலக்கும்.பாடாய்ப்படுத்தும். பல வருடங்கள் காலஓட்டத்தில் பின்னோக்கி ஒரு நொடியில் நம்மை இழுத்துச் சென்று விடும். அப்படி ஒரு நிலையை மீண்டும் உங்கள் பதிவுகளின் மூலம் உருவாக்கிவிட்டீர்கள். தேர்ந்தெடுத்த பாடல்கள் நெஞ்சிலிருந்து நீங்காதவை. நன்றி.
  -ஏகாந்தன்

  பதிலளிநீக்கு
 29. வழக்கம் போல் அருமை...கடைசி குறளுக்கு 'மறந்து போ மனமே' எனவரும் 'வெண்மதி வெண்மதியே நில்லு' எனும் பாடல் நினைவுக்கு வந்தது.,

  பதிலளிநீக்கு
 30. திருக்குறளில் இருப்பதைத்தான் கவிஞர்கள் திரும்பச் சொல்லியிருக்கிறார்கள். அருமையான ஆராய்ச்சி

  பதிலளிநீக்கு
 31. குறள்களும் பாடல்களும் ஒன்றுக்கொன்று பொருத்தமாக தருவதில் தங்களுக்கு நிகர் தாங்களே....வாழ்க
  தம +1

  பதிலளிநீக்கு
 32. அருமையான பதிவு.
  அதிக உழைப்பு
  இனிய வாழ்த்து.

  பதிலளிநீக்கு
 33. நம்மவர் உள்ளத்தில்
  காதல் வந்து குந்த
  காற்றோடு காலம் கரைய...
  வந்து குந்திய காதல்
  நம்மாளுகளைச் சும்மா விட்டதில்லை...
  அவர்கள் படும் பாட்டை
  வள்ளுவரும் வெண்பாவில் உரைக்க
  பாவலரும் திரைப்பாவில் உரைக்க
  குறள்வெண்பா, திரைப்பாடல் பொறுக்கி
  காதல் படுத்தும் பாட்டை உரைக்க
  அறிஞர் தனபாலனும் அழகாக
  அடுக்கித் தொடுத்து ஆக்கிய பதிவை
  நான் பாராட்டுகின்றேன்.
  மென்மேலும் சிறந்த பதிவுகளை
  தருவீர்களென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
 34. இனிமைத் தமிழ்மொழி எமது.

  குறளை மறு வாசிப்பிற்குத் தூண்டுகிறது உங்களின் எழுத்து.


  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 35. உங்கள் அளவுக்கு குறளை அக்குவேறு ஆணிவேராய் கலட்டியவர் வேறு யாராவது இருக்காங்களா அண்ணா! சூப்பர்!

  பதிலளிநீக்கு
 36. அருமை அண்ணா...
  பாடல்கள் தேர்வும் குறள்களும் சூப்பர்...

  பதிலளிநீக்கு
 37. அருமையான தொழில்நுட்பத்தில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும் வண்ணம் அருமைக்குறளுடன் சிறப்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் !

  தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_28.html

  நன்றியுடன்
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 39. வணக்கம்

  இன்று வலைச்சரத்தில் என் நன்றியுரை...

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

  உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

  பதிலளிநீக்கு
 40. உழைப்புடன் கூடிய மிகமிக அற்புதமான படைப்பு.
  குறளையும் திரையிசையுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே!

  பதிலளிநீக்கு
 41. சிறப்பான பாடல் வரிகளுக்கு வள்ளுவரின் திருக்குறளை மேற்கோளை காட்டி சிறப்பான உள்ளம் கொள்ளை கொள்ளும் விதமாய் கூறிய விதம் சிறப்பு ....

  பதிலளிநீக்கு
 42. அன்புள்ள வலைச்சித்தரே!

  பாட்டுச் சித்தரே! அய்யனின் காமத்துப்பாலோடு கவியரசர் கண்ணதாசனையும் - மெல்லிசை மன்னர் விஸ்வநாதனும் இணைந்து - பெண்ணின் மனதைப் புரிந்து பொங்கிப் பெருகி உருகும் பாடலை கலந்து இரசிக்கும்படி கொடுத்தது இரம்மியமாக இருந்தது.
  கேட்டு மகிழ்ந்தோம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு

 43. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_7.html

  பதிலளிநீக்கு
 44. அருமையான தொகுப்பு ...
  வாழ்த்துக்கள்
  தம +

  பதிலளிநீக்கு
 45. குறளையும், சினிமா பாடல்களையும் அழகாய் தொகுத்து கொடுக்க உங்களை தவிர வேறு யாராலும் சிறப்பாக செய்ய முடியாது.
  அருமையான பாடல்கள்.
  உங்களுக்கு நன்றிகள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 46. அருமையான பாடல்களை அழகாக கூறிய விதம் நன்று

  பதிலளிநீக்கு
 47. தொழில் நுட்பம் ,பதிவு இரண்டுமே அருமை

  பதிலளிநீக்கு
 48. தங்களின் ஒவ்வொரு பதிவையும் படித்து, கேட்டு, உணர்ந்து, அனுபவித்து ரசிக்க ஆகிறது வெகுநேரம். இதுவும் ஒரு சேவையே. நன்றி!

  பதிலளிநீக்கு
 49. thangalin thakaval matrumthozhilnutpameppozhuthumpol vithyasamakaverasikkumpadiyaaka. puthukaiyinpathivar thiruvizhavirkkaga thangalaatrumpanikkuthalaivanangukiren nammaooruthiruvizhaa athainaam sirappaiseyvom sako, nanry.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.