கலைஞர்...அனைவருக்கும் வணக்கம்... முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திரைப்பட வசனங்கள், பாடல்கள், சில பொன்மொழிகள்... பார்க்க, கேட்க, ரசிக்க...கைபேசியில் வாசிப்பவர்களுக்கு : மன்னிக்கவும், வலைப்பூவின் தொழிற்நுட்பத்தை நீங்கள் ரசிக்க முடியாது... எனது பல பதிவுகள் கணினியில் வாசிப்பதே நல்லது...

M K கீழே உள்ள   திசைப்படி சுட்டியை கொண்டு செல்லவும்... வசனம் அல்லது பாடலை கேட்க பட்டனை சொடுக்கவும்... நிறுத்த பட்டனை சொடுக்கவும்... திரை முழுவதும் பார்க்க வேண்டுமென்றால் "YouTube" அருகிலுள்ள என்பதை சொடுக்கவும்... மறுபடியும் சிறிதாக்க "YouTube" அருகிலுள்ள என்பதை சொடுக்கலாம் அல்லது keyboard-ல் "Esc"-யை தட்டலாம்...! வெளியே வர இடதுபுறமாக சுட்டியை நகர்த்தவும்... அனைத்து வரிசையிலும் கீழிருந்து மேலே சென்றால் எளிதாக இருக்கும்... ரசித்தவற்றை கருத்துரையில் சொல்லுங்கள்... நன்றி...


பராசக்தி (1952) தென்றலை தீண்டியதில்லை நான்... தீயை தாண்டியிருக்கிறேன்...!

மனோகரா (1954) அரசன் உத்தரவென்ன...? ஆண்டவன் உத்தரவிற்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்...!

ராஜா ராணி (1956) நடிகர்திலகத்தின் நீண்ட வசனம் : கவிதை புனையத்தெரியாத புலவன், கத்தி தூக்கத்தெரியாத வீரன் - இவர்களை தமிழகம் இதுவரை கண்டதேயில்லை...!


காஞ்சித்தலைவன் (1963) மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்; மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்; மாவீரர்களின் கைகள்; சென்று வா; வென்று வா...

ராஜா ராணி (1956) பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ...? மியாவ் மியாவ் (2) வானை நோக்கி திரையும் போட்டால் வட்ட நிலவும் மறைந்து போகுமோ...? மியாவ் மியாவ் (2)

மறக்க முடியுமா (1966) அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை... ஆறுதல் வழங்க யாருமே இல்லை... ஏழைகள் வாழ இடமே இல்லை... ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை...!
       

Helpகலைஞரின் பொன்மொழிகள் சில...

மந்திரி குமாரி (1950) ஊருக்கு உழைப்பவன்டி, ஒரு குற்றம் அறியானடி, உதை பட்டு சாவானடி... உதை பட்டு சா-வா-னடி...!

நாம் (1953) யாழே நான் என்றால் நாதம் நீர் தானே ? நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே !


ராஜா ராணி (1956) நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமழ்விக்க, இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடிவாருங்கள், ஓடிவாருங்கள்...

பூம்புகார் திரைக்காவியத்தைப் பற்றி... (1964)கலைஞரின் தலைமை கவிதை (1986) சென்னை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடை பெற்ற முப்பெரும் விழா கவியரங்கம்

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. மறைந்த கலைஞர் ஒரு தமிழ்க் கடல் அதில் நீந்தி முத்தெடுக்க முயன்றுள்ளீர்கள் நல்ல முயற்சி பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தனபாலன்

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு தொகுப்பு + உங்கள் உழைப்பு பாராட்டுக்கள் கலைஞரின் குரலை கேட்டு கொண்டுருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான தொகுப்பு...
  வலைப்பூவில் தங்களின் ....அழகான திறமை , முயற்சி...வியக்க வைக்கிறது சகோ.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் எளிமையாக்கி இருக்கலாம் பட்டனைத் தேடுதலிலேயே நேரம் கழிந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. GMB ஐயா... எங்கும் தேட வேண்டாம்... 6 சூரியன் படங்களும் 6 விரிந்த கை படங்களும் தெரிகிறதா...?

   அங்கு உங்களின் சுட்டியை ம்ஹீம்... அங்கு Mouse-யை, கொடுத்துள்ள திசைப்படி அதாவது மேல் நோக்கி மெதுவாக கொண்டு செல்லவும்...

   அங்கு கலைஞர் டிவி போல காணொளி தெரியும்...

   மற்ற விளக்கங்களை, பதிவில் மற்றொரு முறை வாசிக்க வேண்டுகிறேன்... நன்றி...

   நீக்கு
  2. காணொளிகள் கண்டேன் பார்த்து ரசித்தேன் மற்றபடி நிறுத்த காணொளியில் காணும் //பட்டன்களை சொடுக்கினேன்

   நீக்கு
 5. கேட்க இயலவில்லை. உங்கள் பணிக்கு வந்தனங்கள் டிடி சகோ & வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களது தொழில்நுற்பம் பிரமிக்க வைக்கிறது ஜி

  பதிலளிநீக்கு
 7. மிக்க மகிழ்ச்சி. கணினியில் பார்த்து ரசித்து மகிழ்வேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு.
  மிக்க நன்றி டிடி.
  நானும் எழுதிக்கொண்டு உள்ளேன் இவரைப் பற்றி
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  பதிவு மிக அருமை. தங்களது அருமையான கணினி செயல்பாடுகள் கண்டு வியக்கிறேன். தங்களது பதிவில் காணொளிகள் கண்டேன். கலைஞரின் வசனங்கள், கவிதைகள், அவரின் தமிழ்புலமை சொல்லால் வகுக்க முடியாதவை. என்னிடம் கணினி இல்லாத காரணத்தால், தாங்கள் கூறியிருந்தபடி கண்டு ரசிக்க இயலவில்லை. ஆயினும் கைபேசியில். காணொளிகள் கண்டு கேட்டு ரசித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. கணினியில் தொழிற் நுட்பத்தில் தாங்கள் முழுமை பெற்ற ஒளிரும் சிலையென்றால், நானெல்லாம், சிலையாக வேண்டுமென்ற ஆசையை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அசையாமல் இருக்கும் ஒரு கல். வலைதளத்தில் திறம்பட பல நுணுக்கங்களை புகுத்தியிருக்கும் தங்கள் தொழிற்நுட்பங்கள் பிரமிக்க வைக்கின்றன. அதை எங்களுடன் எங்களுக்காக பகிர்ந்தளித்த தங்களுக்கு என் பணிவான நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. ரொம்ப நாட்களுக்குப்பிறகு வெளி வந்து மறைந்த கலைஞருக்காக அழகிய ஒரு தொகுப்பை வெளியிட்டிருப்பதற்கு இனிய பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 11. நீங்கள் பகிர்ந்து இருக்கும் காணொளிகள் அனைத்தும் மிக அருமை அனைத்தையும் கேட்டு மகிழ்ந்தேன்.

  மனோகரா,ராஜாராணி,பராசக்தி, பூம்புகார் பட வசனங்கள் அடிக்கடி கேட்டு ரசித்தவை. காஞ்சி தலைவன் வெல்க வெல்க நாடு போர்பாடல் மிகவும் பிடித்த பாடல் .

  அனைத்தையும் பொறுமையாக தொழில்நுட்பத்துடன் பகிர்ந்தவிதத்திற்கு உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  முன்பு வானொலியில் அடிக்கடி ராஜாராணி வசனங்கள் இடம்பெறும். தொலைக்காட்சி வந்தபின் பழைய படங்களை விரும்பி பார்த்து ரசித்தவை.

  கலைஞருக்கு நல்லதொரு அஞ்சலி. அனைத்தையும் ரசித்து படிக்க வேண்டும்.

  மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. தகவலுக்கு நன்றி நண்பரே. நலமாக இருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 13. பாலைவன சோலை, பாசப்பறவைகள் மாதிரியான படங்களை புது படங்கள்லாம் விடுபட்டு போயிடுச்சே ஏன்?!

  பதிலளிநீக்கு
 14. கலைஞரின் புகழ் பெற்ற திரைப்படங்கள், காலத்தைக் கடந்து நிலைத்து நிற்கும் ஓரங்க நாடகங்கள், பொன்மொழிகள் எனத் தேர்தெடுத்து மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்து கலைஞருக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள். நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 15. மறக்கமுடியாத கலைஞரின் வசனங்களையும் பாடல்களையும் அருமையாய் தங்களது தொழில்நுட்ப பாணியில் வெளியிட்டு அவருக்கு ஒரு சிறப்பான அஞ்சலியை செலுத்திவிட்டீர்கள். நானும் உங்களோடு சேர்ந்து அஞ்சலியை செலுத்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 16. தங்களின் மகத்தான பணிக்கு என் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.