🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சமரசம் உலாவும் உலகே...

வணக்கம் நண்பர்களே... ஊழ் அதிகாரம் பற்றி, 2015 ஆம் ஆண்டு முதல் எழுதி வைத்த நீண்ட பல குறிப்புகளைச் சுருக்கி வெளியிடும் ஒரு பதிவு... வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினமான இன்று இந்தப்பதிவைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்...


கி மு ஆறாம் நூற்றாண்டு | மற்கலி கோசாலர் | ஆசீவகம் | சமண - புத்த மதங்களின் கடவுள் மற்றும் வேத மறுப்பை ஏற்றுக்கொள்ளல் | ஆனால் இரண்டின் வினைக்கோட்பாட்டை மறுத்தல்...? | ஆசீவக ஊழ்க் கோட்பாடு : நம் செயலை செய்யும் முன்னரே, அது எப்படி நிகழும், அதை மாற்றவே முடியாது எனும் வரையறுக்கும் ஆற்றல்...? | அடுத்து நடப்பவற்றை, நடந்து முடிந்தவை தீர்மானிக்கும் என்பது...? | நியதிதான் அனைத்தையும் முடிவு செய்யும் இறுதியான சக்தி...? ⎰ நீட்சி (சமணம்) | நிப்பானம் (பௌத்தம்) | சாயுச்சியம் (சைவ சித்தாந்தம்) | இறைவனடி சேர்தல் அல்லது வீடு பேறு (சைவம்) | வைகுண்ட மோட்சம் (வைணவம்) | சீவ முக்தி (வைதீகம்) | பரப்பிரம்மத்தோடு கலத்தல் (வேதாந்தம்) | பிறவா நிலை (கீதை) | இவற்றின் சமய, மத, சந்தர்ப்ப வாதிகளின் விளக்கங்களுக்கு மயங்கி மனப் பிறழ்வு...? ⎰ உலகச் சூழல் | உலக நீதி | உலக நியதி |...

கணிக்கவே முடியாத இந்த உலகின் புதிர் நிலை ஊழ்...? | பிறப்பு, வாழ்வு, இறப்பு என்கிற புதிரின் நடுவே இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என்று அறியாமலேயே முடிந்து போவதே மனிதனின் வாழ்வு...? | வகுத்தல்...? | வகுத்தவன் ஒருவனே அறிவான்...? | வகுத்தவன் யார்...? | அவரவர் நம்பிக்கை...? | அந்த நம்பிக்கையைப் பரப்பி அடுத்தவன் நம்பிக்கையைக் கெடுப்பது...? | அவர்கள்...? | இடம், காலம், அரசு, சமூகம், சுற்றுப்புற மக்கள் மக்களாலும் வரும் அனைத்து புறநிலை செயல்களுக்கு முடிவில் ஊழாய் மாறி நிற்பது தான் விதி செய்யும் விளையாட்டு...? | இல்லை மனிதன்...? | வகுத்தவன் யார்...? ⎰ நல்ல செயல்களால் நன்மை | கெட்ட செயல்களால் தீமை | இவற்றின் கூட்டல், கழித்தல், பெருக்கல் கூட அறிந்து தெரிந்து புரிந்து கொள்வதற்கு முன் வாழ்வும் முடிந்து விடும்...? | கணிப்பு தோல்வியில் அடையும் போதும், அதனின் தெளிவான காரணம் புலப்படாதபோதும் மட்டுமா 'இறைவா' என அமைதி...? ⎰ திருவிளையாடல் | கர்மா | முந்தைய பிறவி | வினைப்பயன் | நல்வினை | தீவினை | தலைவிதி | தலையெழுத்து | ஜாதகம் | ஜோதிடம் ⎰ சிந்தனை...? | பாடல்கள்...? | ...

நண்பர்களே, இந்த கேள்விகள் தான் அன்று எழுதிய குறிப்புகள்... இதற்கான பதில்கள் ஊழ் அதிகாரங்களின் குறள்களில் உள்ளது... எனினும் மேற்சொன்ன குறிப்புகளை வைத்து, ஊழியல் அதிகாரத்தைப் பற்றி ஒரு சிறிய ஆய்வுப் பதிவில் பிறகு அறிவோம்... அனைவரின் மனதில் இருக்கும் அன்பு, ஒருமித்தமாக ஒரே விதமாக வெளிப்பட்டால், ஊழ் மாறலாம்... நம்பிக்கை தானே வாழ்க்கை...

வலைப்பூவில் செய்கின்ற நுட்பங்கள் சரியாக வேலை செய்கிறதா...? என்பதற்காகவும், அங்கு ஒரு சேமிப்பாக இருக்கும் என்பதாலும், பதிவுகளை எனது இன்னொரு வலைப்பூவில் எழுதிப் பார்ப்பதுண்டு... நண்பர்களுக்காக எழுதிய தொழினுட்ப பதிவுகள், கருத்துரைகளால் எழுந்த சிந்தனை பதிவுகள் என, மனதில் எழுந்த எண்ணங்களுக்கேற்ப குறிச்சொற்களுடன் (Labels) நிறையப் பதிவுகள் (draft) இருக்கும்... அவ்வாறு மாட்டிக்கொண்ட ஒரு பதிவு : ☛ விதியென்பது அனைவருக்குமே பொதுவானது...! ☚ இதை ஏற்கனவே வெளியிட்டோமே என்று நினைக்கும் போது, 'அடுத்த குறளின் குரல்' என்கிற குறிச்சொல்லைப் பார்த்து மறுபடியும் வெளியிட்டுப் பார்த்தால் :

ஒரு உரையாடலுடன் பத்து பக்கம் அளவிற்குப் பதிவும்...! வியாபார சுற்றலில் சேர்ந்தவை... பிறகு இதையெல்லாம் கவனிக்க எங்கே நேரம் இருக்கிறது...? இனி...? ஆம் அதே '?' தான், எதை யோசித்தாலும் சற்றே பெரிதாக... ம்...! அந்த பத்தை சுருக்கினதே மேலே வாசித்த இரு பத்திகள்... அந்த உரையாடலைக் கொஞ்சம் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு, சில வரிகளைச் சிறிது மாற்றினேன் + சேர்த்தேன்... 'ஆயிரங்காலத்துப் பயிர்' படத்தின் பாடலையும் இணைத்தேன்... இதோ நேற்று அந்தப்பதிவில், ஒவ்வொரு குறளுக்கும் முன்பு, தாத்தாவும் பாட்டியும் பேசும் கேட்பொலியையும் இணைத்து விட்டேன்... நேரம் இருந்தால் கேளுங்கள்... பதிவு...?

அது முந்தைய ☛ ☚ பதிவு...! ஊழ் அதிகாரத்தின் குறளின் குரல்...!

திருமிகு வே.நடனசபாபதி ஐயா, திருமிகு கோமதி அரசு அம்மா, திருமிகு கீதா (தில்லையகத்து) சகோதரி ஆகியோரின் கருத்துரைகளுக்கு நன்றிகள் பல... அங்குச் சென்று வாசித்தால், நீங்களும் வியப்படைவீர்கள்... அப்படியே நீங்களும் ஒரு பாராட்டு தெரிவித்தால் மிகவும் மகிழ்வேன்...
இதுவும் விதி தானோ நண்பர்களே...? ம்... எல்லாம் ஐயன் செயல்...! நன்றி...

ஞானம் வர வைக்கும் பாடல்களில் ஒன்று ☊ :

சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஜாதியில் மேலோர் என்றும், தாழ்ந்தவர் தீயோரென்றும், பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு... தொல்லையின்றியே தூங்கிடும் வீடு - உலகினிலே இது தான், நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... ஆண்டி எங்கே ? அரசனும் எங்கே ? அறிஞன் எங்கே ? அசடனும் எங்கே ? ஆவி போன பின் கூடுவார் இங்கே - ஆகையினால் இது தான், நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே... சேவை செய்யும் தியாகி, ஸ்ருங்கார போகி, ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி, எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே - உண்மையிலே இது தான், நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...

© ரம்பையின் காதல் அ.மருதகாசி T.R.பாப்பா சீர்காழி கோவிந்தராஜன் @ 1956 ⟫

பாடலில் வரும் இடம் கூட இன்று...? இதையும் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. இதுவும் விதி தானோ நண்பர்களே...? ம்... எல்லாம் ஐயன் செயல்...! நன்றி...
    ஞானம் வர வைக்கும் பாடல்களில் ஒன்று ☊ :////

    அனைத்தும் விதிப்படிதான் நடக்கிறது... அருமை...

    ஞானம் ...இப்போ பாட்டுக் கேட்காமலேயே பலருக்கு வந்திருக்கும் கொரொனாவால்:)..

    பதிலளிநீக்கு

  2. இவ்வுலகே நமக்கு வாடகை வீடுதான் அதற்குள் மனிதர்களின் ஆட்டம்தான் என்ன...  ?

    கொரோனா நம்மை விட்டு விடும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்கிறோம் எல்லாம் எழுதப்பட்ட விதியின் வழி.

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஜி

    பதிலளிநீக்கு
  3. சமரசம் உலாவும் பாடல் நல்லதொரு பாடல்.

    பதிவு வழமை போல சிறப்பு. தொடரட்டும் தங்கள் சிந்தனை....

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான பாடல். பிடித்த பாடல்.

    பதிவுக்காக எழுதி வைத்துள்ள குறிப்புகளே ஒரு பதிவு போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமை. படம் நீங்கள் சொல்லி திரு நடராஜன் வரைந்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

    வள்ளுவர் சொல்லுவதை அவர் குறளை பாடலாக பாடுவதை மக்கள் கேட்பதும், திருக்குறள் " உலக பொதுமறை " என்பதை சொல்லும் ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஐ டி துறையில் நாங்கள் parallel டெஸ்டிங் செய்வோம். அது போல இந்த வலைப்பூவிற்கும் நீங்கள் அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை என்னவென்று பாராட்டுவது.

    பதிலளிநீக்கு
  7. சமரசம் உலாவும் இடமே பாடல் எனக்கு பிடித்த பாடல்.
    சமரசம் உலவும் இடம் மண் என்று சொல்லலாம்.
    எல்லோரும் ஒரு நாள் மண்ணுக்குள். எல்லோருக்கும் இறப்பு நிச்சயம் நீங்கள் அந்த பாடலை முன்பு பகிர்ந்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ரஜினி காந் பாடல்.

    முன்பு வந்த பாடல் " ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே சொந்தமடா" இப்போது அதுவும் சொந்தமில்லை.

    அடக்கசெய்யும் இடம் ஒவ்வொருவருக்கும் மாறு படுகிறது. "இடுகாடு" முதலில் உடலை மண்ணில் இட்டார்கள் புதைத்தார்கள் , மீண்டும் மீண்டும் புதைக்க இடம் இல்லாமல் அப்புறம் சுடுகாடு ஆகி விட்டது ஒரு இடத்தில் உடலை எரித்து அதன் சாம்பலை மட்டும் நீர் நிலையில் கரைப்பது, மண்ணில் கலப்பது என்று ஆகி விட்டது.

    இத்தாலியில் இறந்தவர்களை என்ன செய்வது என்று ஆகி விட்டது.
    இடம் இல்லா நிலை.

    சிலருக்கு கல்லறைகள் உண்டு . சிலர் சொந்தமாக இடம் வாங்கி அதில் புதைத்து வழிபடுகிறார்கள் அவர்கள் சந்ததியினர்.



    பதிலளிநீக்கு
  8. நம்மை மீறி செயல்கள் போகும் போது இறைவனை அழைப்பது
    நம்பிக்கை. மனித ரூபத்தில், மனித அறிவில் புலபட்டு ஏதாவது நல்லது நடக்கும்.

    நம்புவோம். நல்லதே நடக்கும். இன்பமும்,துன்பமும் அவன் தருவது மட்டுமல்ல நம் செயலுக்கு ஏற்பவே அதுவும் அமையும்.

    இயற்கை, இறைவன், மனிதன் இவர்கள் இணைந்த முயற்சிகள் வெற்றி அடைய வேண்டும்.

    அடையும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  9. இப்பூமியில் சமரசம் இல்லாததால்தான் பல பிரச்சனைகளுக்கு காரணம்

    பதிலளிநீக்கு
  10. டிடி முதலில் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். மிக்க நன்றி டிடி. கோமதிக்கா மற்றும் நடனசபாபதி சகோவிற்கும் பாராட்டுகள்!

    டிடி உங்கள் குறிப்புகள் மட்டுமே பதிவு மற்றும் ஒவ்வொன்றும் தலைப்பானால் பல பதிவுகள் எழுதலாம். அப்படியான ஹெவி தலைப்புகள். விவாதம் செய்யும் அளவிற்குமே.

    என்னைப் பொருத்தவரை விதி என்று சொல்லிக் கொண்டாலும் நம் முயற்சியை விட்டுவிடக் கூடாது. கடைசி வரை போராட வேண்டும். அதற்கு உதாரணம் இப்போதையச் சூழலையும் சொல்லலாம். விதி என்று சும்மா சொல்லிவிட்டால், சும்மா இருந்துவிட்டால் மக்களைக் காப்பாற்றும் முயற்சி ஒன்று கூட எடுக்க முடியாமல் போகும். மக்களும் வந்தா வருது போனா போகுது எல்லாம் விதி வரணும்னு இருந்தா வரும்....வந்துதான ஆகும் என்று சொல்லி வெளியில் நடந்தால் அது கண்டிப்பாக விதி ஆகாது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். தன்னைக் காத்துக் கொண்டால் நம்மை அடுத்துள்ளவரையும் நம்மால் பரவாமல் காக்க முடியும். இதை எல்லாம் மீறி வந்தால் சரி இது நம் கையில் இல்லை எனலாம்...

    நம் கையில் இலை எனும் போது பிரார்த்தனை. பிரார்த்தனையில் எனக்கு அதீத நம்பிக்கை உண்டு. இருந்தாலும் இதில் கூட என் தனிப்பட்டக் கருத்து நாம் பிரார்த்தனை செய்வதால் அந்தப் பிரார்த்தனையால் கண்டிப்பாகக் காப்பாற்றப்படுவோம் என்றோ சரியாகிவிடும் என்றோ நினைப்பது சரியல்ல. ஏனென்றால் நடப்பது நடக்கும். அப்படி ஒரு கருத்து நமக்குச் சிறு வயதிலிருந்தே சொல்லப்பட்டு வளர்க்கப்படுவதால் அது ஆழமாக மனதில் ஊன்றி இருப்பதால் தான் பலரிடமிருந்தும் வரும் கேள்வி "கடவுள் காப்பாற்றுவான் என்றால் ஏன் இத்தனை இறப்புகள்? அவர்களை ஏன் கடவுள் காப்பாற்றவில்லை. ஏன் ஒரு சிலர் மட்டும் பிழைக்கிறார்களே. " என்ற கேள்விகளும். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை....பிரார்த்தனை என்பதும் கூடக் கடைசி வரை போராடுவது. பிரார்த்தனை செய்யும் போது நம் மனது அமைதியாக ஒருவித நம்பிக்கையுடன் நேர்மறை எண்ணத்துடன் இருப்பதால் மனம் தெம்பு பெற்று தைரியமடையும்.. எதையும் போராடும் ஒரு சக்தி பிறக்கும்.

    நாம் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டால் நம் மனது எப்படி ரிலாக்ஸ்டாக இருக்குமோ அது போல. அந்த நம்பிக்கை! நீங்கள் சொல்லியிருப்பது போல நம்பிக்கை அதுதான் நம்மை வழிநடத்திச் செல்லும்.

    இப்போதும் இதுவும் கடந்து போகும். ஆனால் உயிரிழப்புகள் அதுதான் வேதனை. விரைவில் எல்லாம் தீர்ந்து உலக மக்கள் எல்லாரும் அமைதியாக நிம்மதியாக வாழ வேண்டும்.

    டிடி கணினி நெட் பிரச்சனை என்பதால் கேட்க முடியவில்லை. கேட்டுவிட்டு அப்புறம் கருத்து இடுகிறேன்.

    பாடல் வரிகள் அருமை..ஆனால் வரிகள் பார்த்து எனக்குச் சட்டென்று சொல்லத் தெரியாதே. ஹிஹிஹிஹி. கேட்கிறேன். இப்போது நெட் பிரச்சனை என்பதால் பாடல் மற்றும் காணொளியும் கேட்பொலியும் கேட்க முடியவில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் அற்புதம். அருமை சிந்தனைகள்.

      நீக்கு
    2. குறிப்புகள் அனைத்தும் 5 வருடம் சேமித்த சிந்தனைகள்... அவற்றை இந்த நேரத்தில் சொல்வது சரியல்ல என்று மனம் சொல்லிற்று... வந்த கருத்துரையில் மனோ சாமிநாதன் அம்மா கருத்தே அதற்கு ஒரு சான்று... இங்கு உறவினர் சிலர் பயந்து போய் விசாரித்ததெல்லாம் தனி கதை...! வழக்கம் போலவே சில அதிகாரங்களை மட்டும், குறள்களுக்கேற்ப பாடல் வரிகளோடு பதிவு செய்வது வழக்கம்... இதற்கும் உண்டு... ஆனால், எழுதி வைத்திருந்த உரையாடலே பிடித்திருந்தது... "அதை அப்படியே பகிர்வோம், யாருக்காவது குறள் ஞாபகம் வராமலா போகும்...?" என்று ஒரு சின்ன ஆவல்... மூவர் சொல்லி விட்டதில் மகிழ்ச்சி...

      இந்த ஊழ் அதிகாரத்தைப் பற்றி எழுதிய பல பக்கங்கள் (draft) இன்னும் உள்ளது... அதை வெளியிடாமல், ஒரு சிறிய ஆய்வாக சுருக்கி வெளியிடலாம் என்று உள்ளேன்... திருக்குறளில் அனைத்தும் உண்டு என்பார்கள்... இந்த அதிகாரத்தில் மொத்த திருக்குறளும் உள்ளது போல... எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்க வேண்டும்...

      ஊழ் அதிகாரம் - மனிதனின் சிந்தனை வளர்ப்பதில் ஒரு அமுதசுரபி...

      நீக்கு
  11. ஆண்டியானாலும் அரசன் ஆனாலும் எல்லோரும் இறுதியில் மரணத்தைத் தழுவித்தான் ஆக வேண்டும். இது எல்லோருக்கும் பொதுவான இயற்கை நியதி. இருந்தாலும் உலகில் இருக்கும் வரை மனிதன் போடும் ஆட்டம் இருக்கிறதே. அன்பு என்பதை மனதில் விதைத்துக் கொண்டுவிட்டால்......நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே அது...அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சமரசம் உலாவும் இடமே
    பலர் தேடும் இடமாச்சே!

    பதிலளிநீக்கு
  13. உலக மக்களிடம் அன்பு வந்து விட்டால் எல்லாவற்றையும் நேசிக்கச் சொல்லும்.

    வேதாத்திரி மகரிஷி சொல்வது போல் மனதை அமைதியாக வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் வையகத்தை வாழ்த்துவோம்.

    அனைவரும் சேர்ந்து வாழ்த்தும் போது அதுவும் நமக்காக மட்டும் வாழ்த்தாமல் எல்லோரும் நன்றாக இருக்க வாழ்த்தும் போது நல்லது நடக்கும் விரைவில்.

    நீங்கள் சொல்வது போல் அனைவரின் மனதில் இருக்கும் அன்பு ஒரே விதமாக வெளிப்பட்டால் ஊழ் மாறும். நம்பிக்கைதானே வாழ்க்கை நம்புவோம்.
    விரைவில் நலம் விளையும் என்று.

    பதிலளிநீக்கு
  14. இரு நண்பர்கள் ஒருவ மதி என்பான் மற்றவன் விதி என்பான் இருவரு நடந்து செல்லும்போது ஒரு விபத்தில் ஒருவன் காயமடைகிறான் மதியை நம்புபவன் அவனை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து காப்பாற்றுகிறான் மற்ற்வனவன்விபத்துக்குள்ளாவது விதி காப்பாற வேண்டுமென்பதும் விதி என்கிறான் இது எப்படி இருக்கு ?

    பதிலளிநீக்கு
  15. வேளாண் அறிவியல் வல்லுனர் திரு கோ.நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு படிக்கும்போது நான் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு மூத்த மாணவராக இருந்தவர் பின்னாட்களில் இயற்கை வேளாண் அறிவியலாளராக ஆகி வேளாண் குடிமக்களுக்கு செய்த சேவையை எண்ணி பெருமகிழ்வு கொள்கிறேன். அவருடைய பிறந்த நாளில் இந்த பதிவை வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    என்னை இந்த பதிவில் குறிப்பிட்டமைக்கு நன்றி! ‘சமரசம் உலாவும் இடமே’ என்ற பாடலில் வரும் இடம் பற்றி கேட்டிருக்கிறீர்கள். இப்போது இருக்கும் நிலையில் இந்த இடங்கள் கூட எதிர்வரும் நாட்களில் இருக்குமா என்பது ஐயமே. ஏனெனில் வீடு மனை விற்போர் இந்த இடங்களைக் கூட மனைகளாக மாற்றி காசாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் இவைகள் எல்லோரும் விற்கப்படுவதால் உண்மையில் சமரசம் உலாவும் இடம் தான்.

    பதிலளிநீக்கு
  16. வாழ்க்கையின் நிலையாமையைச்சொல்லும் அருமையான பாட்டை நினைவுபடுத்தியிருக்கிறீர்கள்! சீர்காழி ரொம்பவும் அனுபவித்துப்பாடியிருப்பார்! எல்லோருக்கும் முடிவு ஒரே இடம் தான் என்றாலும் அந்த இடத்தை அடைவதற்குள் எத்தனை போட்டிகள்! பொறாமைகள்! வஞ்சகங்கள்!
    ஆனாலும் இந்த நேரத்தில் எல்லோருக்கும் உற்சாகம் ஏற்படும்படியான பதிவுகளைப்போடுங்கள் தனபாலன்! அவை தான் இன்றைய அவசியத்தேவை! சோர்ந்திருக்கும், மன அழுத்தத்திலிருக்கும் மனங்களுக்கு சிரிப்பு தேவை! உற்சாகம் தேவை!!

    பதிலளிநீக்கு
  17. உண்மை. ஒன்றுபட்டு ஊழையும் உப்பக்கம் காண்போம் .

    பதிலளிநீக்கு
  18. வகுத்தவன் ஒருவனே அறிவான் என அறுதியிட்டு கூறி விட்டு பிறகு ஏன் அவரவர் நம்பிக்கை எ.ன கூறுகிறீர்.

    கணிக்கவே முடியாதது இயற்கை (கொரோனா போன்றவை). மனிதன் அதனோடு போராடி மருந்து கண்டுபிடித்து விடுவான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'வகுத்தவன் யார்...?' இரு முறை வரும்... இரண்டாவது முறை வரும் 'வகுத்தவன் யார்...?' அங்கு சிந்திக்க வேண்டும்...

      நீக்கு
  19. சமீப காலமாக டிடி அதிகம் எழுதி வருவது மகிழ்ச்சி.தொடரட்டும் வலைப்பூக்கள் மறுமலர்ச்சி

    பதிலளிநீக்கு
  20. இன்றைய கால கட்டத்தில் மிகவும் தேவையான பாடல். அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. மிக அழகாக தொகுத்துள்ளீர்கள். இக்காலத்திற்கேற்ற பொருத்தமான பாடல். பாடல் முழுவதும் ரசித்துக் கேட்டேன். ஏற்கனவே கேட்ட பாடல் எனினும், இப்போது கேட்கும் போது மனம் பாட்டோடு ஒன்று படுகிறது.

    இந்த பதிவை இத்தனை நாள் எப்படி மிஸ் செய்தேன் எனத் தெரியவில்லை. இதுவும் அந்த விதியை சார்ந்ததுதான். எனினும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. சமரசம் உலாவும் இடம் "இடுகாடு" அல்ல என்பது என் கருத்து ... ஏனெனில் அங்கு வெறும் உடல் மட்டுமே இருக்கிறது ... மனம் இல்லை ... ஆனால் ஜாதியும், சண்டையும். பிரிவினை வாதங்களும், சச்சரவுகளும் புதைந்து கிடப்பது மனதில். எனவே தற்பொழுது நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடம் கொரானா இருக்கும் இடமே !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  23. குறளுக்கு ஏற்ற பாடல்கள் ஆழமாகத் தேடியிருக்கின்றீர்கள். இக்காலத்துக்குத் தேவயானது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.