🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...

பல விசயங்களைச் சொல்லாததை ஒரு புகைப்படம் சொல்லும்...!

என்னைப் பொறுத்தவரைப் பக்கம் பக்கமாக எழுதுவதை ஒரு பாடலும் சொல்லும்...!

அழுகிப் போனால் காய்கறி கூட சமையலுக்காகாது... அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது... உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது... உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது... காலம் போனால் திரும்புவதில்லை... காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை... ஓஹோ ஓஹோ ஹோ மனிதர்களே... ஓடுவதெங்கே சொல்லுங்கள்... உண்மையை வாங்கி பொய்களை விற்று, உருப்பட வாருங்கள்... அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிக்காது... அழகாய் இருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது... விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது... விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது... கண்ணை மூடும் பெருமைகளாலே - தம்மை மறந்து வீரர்கள்போலே...!© படித்தால் மட்டும் போதுமா? கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫

இதோ நாட்டின் பதடி யார்...? என்பதை அறிவோம்...

முந்தைய இரு பதிவுகளையும் வாசிக்காதவர்களுக்கு இணைப்புகள் கீழே... அப்போது தான் இந்த பதிவின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும்... நன்றி...

இணைப்பு 1 ஓட்டு போடுவதற்கு முன்...
இணைப்பு 2 நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?

வாங்க... உரையாடல் தொடர்கிறது...

அமைச்சர் மற்றும் அமைச்சரவை பற்றி அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் வள்ளுவரே...! சரி... நாட்டு மக்களுக்கு...? அதாவது ஓட்டு போடுவதற்கு முன், நல்லவர் யார்...? கெட்டவர் யார்...? என்று எவ்வாறு அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது...?

மக்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்... நெற்பயிர்களுக்கிடையே விளையும் களைகள், தண்ணீரையும் இடும் உரத்தையும் உறிஞ்சி வாழும்... அப்பேர்பட்ட களைகளை ஆரம்பத்திலேயே வேரோடு பிடுங்கி எறிந்து விடுவது போல, எவ்வித செயல்திட்டம் இல்லாமல், பயனற்ற சொற்களையே எல்லா நேரத்திலும் மக்களிடம் சொல்லி, பயன் பெற நினைக்கிற மனிதப் பதரை, ஆரம்பத்திலேயே மக்கள் தூக்கி ஏறிய வேண்டும்... அவ்வாறு எந்நாளும் விழிப்புணர்வுடன் இருந்தால், என்றும் மக்களாட்சியே...! நல்லாட்சியே...!
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்  
மக்கட் பதடி யெனல் (196)
  

நண்பர்களே... திருமிகு வே. நடனசபாபதி அவர்களின் கருத்துரையையும் இங்கே சொல்கிறேன்... ஒருவனின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, இரண்டில் எவை அதிகமாக இருக்கிறது என்பதையும் ஆராய்ந்து, குணங்களின் மிகுதியைக் கொண்டே, அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்... குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (குறள் எண் : 504) சரி, அரசியலில் பதடிகளை யார் தண்டிப்பது...? அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்... நம் உரிமையையும் கடமையையும் நிறைவேற்றுவோம், அதற்கு முன்:-

(1)

5.9.2003 அன்று புது தில்லியில் டாக்டர் ஏ பி ஜெ அப்துல் கலாம் அவர்கள் வழங்கிய தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற முனைவர் அ.கோவிந்தராஜூ ஐயா அவர்களின் ஒரு பதிவின் இணைப்பை இங்குத் தருவதில் மிகவும் பெருமை அடைகிறேன்... வாக்கு அளிப்பதைப் பற்றி மிகவும் சிறப்பாகச் சொல்லியுள்ளார்... வாக்கு அளிக்கச் செல்வதற்கு முன் தவறாமல் வாசியுங்கள்...
இணைப்பு


(2)

ஒரு காணொளி விவசாயி திருமிகு சுபாஷ் கிருஷ்ணசாமி ஐயா (வலைத்தளம் சத்தியத்தீ) மூலம் கிடைத்தது... அவரின் கருத்து : இதுபோன்ற ஒரு உரையை நீங்கள் கேட்டதுண்டா...? சில நிமிடங்கள் ஒதுக்குங்கள்...! அதைவிடக் கோடி செல்வம் மேலல்ல...! சாகித்ய அகாடமி விருது பெற்ற திருமிகு எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் அற்புதமான உரை... கேட்பொலியாக மாற்றியுள்ளேன்...


நண்பர்களே... இரு வேண்டுகோள் : பதிவின் முடிவில் (1) இணைப்பில் உள்ள பதிவு வாசித்து விட்டும், (2) கேட்பொலியை கேட்டு விட்டும், கருத்துரையைப் பதிவு செய்யவும்... கோடி நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள், உங்கள் வலைதளத்தை முடக்க நினைப்பவர்கள், உங்களை அசிங்கப்படுத்த கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுபவர்கள், அவர்கள் தரப்பாக அவர்களின் நியாயங்களை படிக்கும் போது கட்சி என்பதனைத் தான் நம் மக்களின் மதம் எந்த அளவுக்கு விஷக்கிருமியாக பரவியுள்ளது என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது. நிச்சயமாக ஜிஎஸ்டி என்பதன் மூலம் முடங்கிப் போன, முடக்கப்பட்ட தொழிலை செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் பாஜக அரசுக்கு எதிராகத்தான் இருப்பார்கள். அது அவர்களுக்கு புரிய வேண்டுமே? நீ இறந்தாலும் பரவாயில்லை. என் மதத்தை ஆதரிக்கும் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பதும் அது குறித்த கருத்துகளை வெளியே வரவிடாமல் தடுக்க நினைப்பவர்களையும் பார்க்கும் போது நாம் எந்த மாதிரியான உலகத்தில் இருக்கின்றோம் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நிச்சயம் இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். ஏற்கனவே சாதி தான் முன்னிலையில் இருந்தது. இப்போது மதமும் சேர்ந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதிஜி சார்... 'சாதி'யை முன்னிருத்தும்போது, நல்லவேளை, 'நம்ம சாதி இல்லையே' என்று அனேகமாக எல்லோரும் நினைத்தார்கள். 'மதம்' முன்னிறுத்தப்படும்போது 'அடடா நம்ம கட்சி பாதிக்கப்படுதே' என்று தோன்ற ஆரம்பிக்கிறது. இன்னும் 5-10 வருடங்களிலேயே தமிழகத்தில் மூன்று-நாலு பிரிவுகளாக மக்கள் பிளவுபடுவார்கள் என்று தோன்றுது.

      மனிதனைப் பிளவுபடுத்தும் எதுவும் நல்லதல்ல என்பதுதான் நான் நினைப்பது.

      நீக்கு
  2. முதல் படம் ஆயிரம் அர்த்தங்களை சொல்கிறது ஜி

    வழக்கம்போல நல்லதொரு தொகுப்பு ஜி

    எழுத்தாளர் திரு. க. வெங்கடேசன் அவர்களின் பேச்சு கேட்டு உடல் சிலிர்க்கிறது.

    முனைவர் ஐயா திரு. அ.கோவிந்தராஜூ அவர்களின் தளம் சென்று வந்தேன் அருமை.

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் உரை அற்புதம்
    இயற்கை அறத்தைப் பேணுவோம்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல அருமையான தொகுப்பு...

    திரு. வெங்கடேசன் அவர்களது பேச்சு அருமை.. நன்செய் சூழ்ந்த கிராமங்களின் நடுவே வளர்ந்து வாழும் பெரும்பான்மையோர் இயற்கையை அழிப்பதற்கு / கெடுப்பதற்கு ஒருபோதும் ஒப்ப மாட்டார்கள்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
  5. முதல் படம் நாட்டு நடப்பை புடம் போட்டு காட்டுகிறது.
    எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களின் உரையை பகிர்ந்தமைக்கு நன்றி. அருமையான உரை

    பதிலளிநீக்கு
  6. நம்மால் பறவைகளும் விலங்கினங்களும் உயிர்வாழவில்லை; அவற்றின் பங்களிப்பால்தான் நாம் உயிர் வாழ்கிறோம் என்பதை நன்றாகப் புரிய வைத்தார்.
    பதிவில் இணைந்த படமும் பாடலும் உணர்த்தும் கருத்தை உணர்ந்தால் நன்மை.

    பதிலளிநீக்கு
  7. அருமையான தொக்குப்பு . வெங்கடேசன் பேச்சு சிந்திக்கத்தூண்டும் விடயம்.

    பதிலளிநீக்கு
  8. முதல் படம் சொல்லும் உண்மை உண்மை.
    பாடல் பொருத்தமான பாடல், அருமையான பாடல்.
    பாடல் சொல்லும் உண்மையை உணர்ந்தால் போதும்.

    முன்பே கேட்டு விட்டேன், மீண்டும் கேட்டேன் சு. வேங்கடேசன் அவர்கள் பேச்சை .
    அதனால் முந்திய பதிவில் உங்கள் பதிவு பொருத்தம் என்றேன்.
    நீங்களும் அடுத்த பதிவில் போட முன்பே எடுத்து சேமித்து வைத்து இருப்பதாய் சொன்னீர்கள்.
    யானை மலையை , மாடக்குள கண்மாயை எல்லாம் பாதுகாக்கும் பணியில் இவரும் கிராம மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தவர்.

    இவர் சொன்ன தேனீ நீர் அருந்த அந்தி நேரம் வரும் என்பதை ஒரு கிராமத்தில் அறிந்தேன்.

    ஒரு தாமரை குளத்தில் யாரும் இறங்க அனுமதி இல்லை, இறங்கினால் தேனீக்கள் கொட்டி விடும், அதனால் யாரும் இந்த குளத்தில் இறங்காதீர்கள் என்று போட்டு இருப்பார்கள். அறிவுப்பு பலகையில்.
    பிள்ளைலோகாச்சாரி திருவரசு இருக்கும் கொடிக்குளம் என்ற ஊரில். தேனீக்கள் குளத்தின் அருகில் இருக்கும் மரத்தில் இருக்கிறது.
    அது தேனீக்களுக்கு என்று விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் ஊர் மக்கள்.
    அந்த கிராமத்து மக்கள் அதை பின் பற்றி வருகிறார்கள்.

    பல நாட்டு பறவைகள் வந்து வசிப்பதால் தீபாவளிக்கு வெடி வெடிக்க மாட்டார்கள்
    ஒரு கிராமத்து மனிதர்கள் இயற்கை அறத்தை பேணி பாதுகாத்து வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. "நாரைகள் குரல் நினைவுப்படுத்திக் கொண்டே யிருக்கிறது எங்கோ தொலைவில் உள்ள எனது கிராமத்தை"
    இப்படி சொல்பவர் புசான் யசோ.

    மால்களில் செலவிட நேரத்தை ஒதுக்கி குழந்தைகளை அழைத்து செல்லாமல் இயற்கையை ரசிக்க அதை பாதுகாக்க அழைத்து செல்லுங்கள். பள்ளியில், வீடுகளில் அழைத்து சென்று மலைகளின் வரலாறு, சொல்லித் தரவேண்டும் என்று தீபா நாகராணி என்பவர் எழுதிய கட்டுரை படித்தேன். இயற்கை அறத்தை கடைபிடிக்க இளைய சமுதாயத்திற்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
    அப்போது அவர்கள் இரக்கமுடையவர்களாக, நாம் வாழ பிறர் நலம் பறிக்க கூடாது என்ற எண்ணம் வரும்.
    பகுந்துண்டு பல்லூயிர் பேணும் எண்ணம் வரும்.

    பதிலளிநீக்கு
  10. திரு. அ. கோவிந்தராஜூ ஐயா அவர்கள் பதிவைப் படித்தேன்.
    மிக அருமையாக சொல்லி இருக்கிறார்கள்.
    வாக்காளர் ஞானம் பெறவேண்டிய நேரம் இது தான். விழித்துக் கொண்டால் நல்லது.

    பதிலளிநீக்கு
  11. முனைவர் கோவிந்தராஜு ஐயாவின் பதிவினை முன்னரே படித்துவிட்டேன். அவருடைய தளத்தில் கருத்தும் கூறியுள்ளேன். வெங்கடேசனின் பேச்சு அனைவரையும் சிந்திக்கவைக்கும் அளவில் அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
  12. தனிப்பட்ட மனிதரை அவர் வேட்பாளர் என்றால் அறிவது மிகவும் கடினம் அவர் சார்ந்து இருக்கும் கட்சியின் கோட்பாடுகள் நமக்கு ஒப்பினால் தேர்ந்தெடுக்க உதவலாம்

    பதிலளிநீக்கு
  13. வெங்கடேசன் பேச்சு நல்லா இருக்கு. வேட்பாளர் வெங்கடேசன் வேறு, இயற்கை ஆர்வலர் வெங்கடேசன் வேறு.

    முதல் படம் நல்லாத்தான் இருக்கு. அதையே இன்னும் 'தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு' வேட்பாளர் எப்படி நடந்துகொள்வார் என்றும் போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  14. கோவிந்தராஜு ஐயா பதிவிற்கு செல்கிறேன்...

    ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்ன்னு சொன்னால் ஏதோ நோயாளியை பார்க்குற மாதிரி பார்க்குறாங்கண்ணா. எந்த ஊரில் எவ்வளவு கொடுத்தாங்கன்னு ஒப்பீடு வேற!

    முன்னலாம் அப்பாவும், மாமாவும்தான் ஓட்டுக்காக பணம் பொருள்ன்னு வாங்கக்கூடாதுன்னு சொன்னாங்க. இப்ப என் பிள்ளைகளும் சேர்ந்துகிட்டாங்க. பைசா வாங்காதம்மான்னு..

    12 வருசமா எந்த தேர்தலிலும் எதுவும் வாங்குவதில்லை. கடைசியா நடந்த உள்ளாட்சி தேர்தலின்போதும் எதுவும் வாங்கல.

    பதிலளிநீக்கு
  15. மனம் நிறைந்தது காணொளியால். இவர்தான் பொது இடங்களில் பேசவேண்டும்.
    எழுத்தாளரின் சொல் வலிமை போலவே அவரது பேச்சும் இருக்கிறது.
    முனைவர் திரு கோவிந்தராஜு அவர்களின் பதிவையும் படித்தேன்.

    சாதி,மதம் வெறி இல்லாமல் வாக்காள்ர்களும்,வேட்பாளர்களும் இருக்கும் நாள்
    வரவேண்டும் . வரும். மிக மிக நன்றி தனபாலன். இது போல உத்தமமான பதிவுகளைக் கொடுத்து எங்கள் எண்ணங்களை உயர்த்துகிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. அருமையான விழிப்புணர்வுப் பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  17. பார்த்ததும் புரிந்தது படம் அடுத்து படித்ததும் தெளிந்தது கண்ணதாசன் பாடல்
    சூப்பர் அண்ணா ஒவ்வொரு பதிவும் பயனுள்ளவை தான்

    பதிலளிநீக்கு
  18. அருமை வழக்கம்போல் சிறப்பு. அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிப் பயனில்லை. மக்களும் நேர்மையை விருபுவதில்லை என பல தேர்தல்கள் உணர்த்தியுள்ளன.

    பதிலளிநீக்கு
  19. அத்தனையும் சிந்திக்கவேண்டிய, சிந்தனையில் பதிந்துகொள்ள வேண்டிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  20. முனைவர் கோவிந்தராஜூ அவரக்ளீன் பதிவை படிக்கவும், சாகித்ய அகாடமி பரிசுபெற்ற எழுத்தாளர் திரு சு.வெங்கடேசன் அவரக்ளீன் பேச்சை கேடாகவும் உதவியமைக்கு நன்றி! அருமையான பதிவு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  21. ஆயிரம் கவிதைகள் எழுதி வெளியிட்டாலும்
    ஒரு நிழற் படத்திற்கு ஈடாகுமா?

    கண்ணதாசன் பாடல் அருமை

    பதிலளிநீக்கு
  22. அருமையான பதிவு ...கார்டூன் நிதர்சன உண்மையை ஆழமாக படம் பிடித்து காட்டுகிறது...

    பதிலளிநீக்கு
  23. முதற்படம் இன்றைய உலகத்தின் யதார்த்த நிலையை அருமையாக சொல்லுகிறது. உங்கள் பதிவும் ஆயிரம் விஷயங்களை சொல்லுகிறது! மிக அருமை!

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான பதிவு. சு.வெங்கடேசன் அவர்களின் பேச்சு முகநூலிலும் பகிர்ந்திருந்தார்கள். கேட்டேன். வழக்கம் போல் திருக்குறளைப் பொருத்தம் பார்த்து வெளியிடுவதில் உங்களுக்கு நிகரில்லை என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள். தாமதமான வருகை! இன்னும் சில பதிவுகளுக்கு இன்னமும் போக முடியலை! :))))

    பதிலளிநீக்கு
  25. முதலாவது பாடல் மனதுக்குள் ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அந்தக் காலத்தில் பொழுது போக்கிற்குப் பாடல் பாடுவதாக இருந்தாலும் பல கருத்துக்களை மனதுக்கு விதைத்துச் செல்லும். இயற்க்கை அறம் என்பதை அழகாக எடுத்துரைக்கின்றார். நாம் சிந்திக்காமல் இருக்கும் விடயங்கள் இவ்வாறான உரைகளின் மூலமே விழிப்புணர்வைக் கொண்டுவந்து சேர்க்கின்றது. நன்றி

    பதிலளிநீக்கு
  26. வழக்கம்போலவே உங்களுக்கே உரித்தான பாணியில் நீங்கள் எழுதிய பதிவும் அத்துடன் நீங்கள் இணைத்துள்ள இரு இணைப்புகளும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. முதல் படம் ஆயிரம் அருமை.. சு.வெங்கடேசன் அவர்களின் பேச்சும் அருமை!.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.