பதடி யார்...?
மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும், ஈனர்க் குலகந்தனில் - கிளியே... இருக்க நிலைமையுண்டோ...? நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே... சிறுமையடைவாரடி... நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்வாரடி - கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி...
வணக்கம் நண்பர்களே... மேலே படத்தில் உள்ளது போல், முன்பு 2/3 தடவை எனது மின்னஞ்சலுக்கு வந்துள்ளது... அதாவது எனது (Blogger gmail) மின்னஞ்சலுக்கு நுழைய யாரோ முயற்சி செய்து உள்ளார்கள்... வழக்கமாக ஆறு மாதத்திற்குக் கடவுச்சொல் (password) மாற்றி விடுவதுண்டு... இது போல் வந்தவுடனும் மாற்றி விடுவதுண்டு...
சமீபத்தில் இவ்வாறு இருமுறை... செங்கோன்மை கொடுங்கோன்மை பற்றி ஐந்து பதிவுகள் எழுதினேன் அல்லவா... அப்போது...! அந்த சமயத்தில் பலரும் என்னை தொடர்பு கொண்டார்கள்... அவர்கள் என்ன கேள்விகள் கேட்டிருப்பார்கள் என்பதை, கீழே உள்ள என் பதில்களைக் கண்டு ஊகித்துக் கொள்ளுங்கள்... கண்டிப்பாக அவர்கள் வலைப்பதிவர்கள் அல்ல... திருக்குறள் என்றால் என்னவென்றே தெரியாத பதடிகள்...
1) நீங்கள் எந்த கட்சியாக இருந்தாலும், உங்களுக்கு ஏற்ற மாதிரி எல்லாம் எழுத முடியாது... 2) அந்த உரையாடல் அனைத்தும் குறள்களின் குரல்கள்... 3) அவை உலகப்பொதுமறை என்று சொல்லி இருக்கேனே... 4) உங்கள் கட்சி தான் காக்கும் என்று சொல்கிற உங்களுக்கு, ஏன் உறுத்துகிறது...? 5) எந்த காலத்திற்கும், உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் பொருத்தும்... 6) பாடல்கள் மட்டுமே என்னுடைய தேர்வு... 7) பதிவை முழுவதையும், கருத்துரைகளையும் வாசியுங்கள்... இன்னும் பல...
பதடிகளே... கொஞ்சம் பொறுங்கள்... தேர்தலுக்கு முன் இரண்டொரு பதிவு எழுதி விடுகிறேன்... பிறகு எனது வலைத்தளத்தைத் திருடிக் கொள்ளுங்கள்... இல்லை வேண்டாம்... நானே கூட தருகிறேன்... ஆமாம், பதடி என்றால் என்ன...?
எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை நண்பர்களே... அனைத்து பதிவுகளையும் சேமித்து வைத்துள்ளேன்... வேறு பெயரில் (url) உடனே வெளிவரும்... என்னவொரு மனவருத்தம் என்றால், ஒவ்வொரு பதிவிற்கும் வலைப்பதிவர்களின் கருத்துரைகள்... கிட்டத்தட்ட 12000 கருத்துரைகள் - 1000 பேருக்கும் மேல்... ஊக்கம், உற்சாகம் தரும் கருத்துரைகள்... அதில் சிலரின் கருத்துரைகள் எல்லாம், எனது அடுத்த பதிவிற்கான சிந்தனைகள்... ம்... மற்றபடி வலைத்தள பிரச்சனை குறித்து எப்போதும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்...
இதுவும் ஒரு வாக்குப் பெட்டி மாதிரி...! வாங்க ஓட்டு போடலாம்...! இங்கே வேட்பாளர், சின்னம் எல்லாம் கிடையாது... கட்டமாக (Check Box) உள்ளதில் சொடுக்கவும்... நீங்கள் வாக்கு அளித்த விவரம் மட்டும் காண்பிக்கப்படும்... () ← அடைப்புக்குறிக்குள் உள்ளதை இயந்திரம் செய்யும்...! முக்கியமாக அனைத்து பட்டன்களும் வேலை செய்யும் என்பதால், ஒவ்வொன்றாகச் சொடுக்கியும் விவரம் அறிந்து கொள்ளுமாறு உருவாக்கப்பட்டது...!
இது சாதாரண if-else-script தான்... தயவுசெய்து இந்த வலைத்தள நுட்பத்தைப் பற்றி எல்லாம் யோசிக்காதீர்கள்... மக்களை ஏமாற்றுவதில், இதை விட உச்சக்கட்ட கேடுகெட்ட அயோக்கியத்தனம் உண்டா...? "எங்கள் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று சிலர் சொல்வது இதனாலோ...? இப்போது பதடிகளின் சமீபத்திய கருத்து என்னவென்றால், 1) அதெல்லாம் சரியாகச் செய்யும், அதையே தூக்கிவிட்டு மாற்றி வைப்போம்...! 2) இப்போதே கோளாறு என்று சொல்லி வைத்தால் தானே, பிறகு அதன் மேல் பழி சொல்ல முடியும்" என்று...! அடப்பாவிகளா...
இந்த ஈனச்செயல்கள் எல்லாம் நடைபெறக்கூடாது என்று பிராத்திக்கிறேன்... "மந்திரவாதி என்பார் - சொன்ன மாத்திரத்திலே மனக்கலி பிடிப்பர்... எந்திர சூனியங்கள் - என்னும் எத்தனை ஆயிரம் இவர் துயரங்கள்... தந்த பொருட்களைக் கொண்டே - ஜனம் தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்... அந்த அரசியலை - இவர் அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்... நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்..." ஆமா, அந்த பதடி யாருங்க...?
மற்றுமோர் அறிவிப்பு : வாக்கு இயந்திரத்தில் நீங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தின் பட்டனை அழுத்தும் போது, வேறு சின்னத்தில் உள்ள விளக்கு எரிந்தால் உங்கள் வாக்கு திருடப்படுவதாக அர்த்தம்... அழுத்திய பட்டனிலிருந்து விரலை எடுக்க வேண்டாம்... அதிகாரிகளிடம் காட்டிய பிறகு, பத்திரிக்கையாளர்கள் வந்த பிறகு ஓட்டுக்கள் திருடப்படுவதை நிரூபித்த பிறகே விரலை எடுங்கள்... பீப் சவுன்ட் வந்து கொண்டே இருந்தாலும் பரவாயில்லை....! இதெல்லாம் நடக்கிற காரியமா...?
நல்ல வேளை முந்தைய இரு பதிவுகளிலும் 'அமைச்சு" அதிகாரத்தின் குறளின் குரல் என்று சொன்னேன்... அதில் முடிவாக நம் திருவள்ளுவரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்... அமைச்சர் மற்றும் அமைச்சரவை பற்றி அனைத்தையும் சொல்லி விட்டீர்கள் வள்ளுவரே...! சரி... நாட்டு மக்களுக்கு...? அதாவது → ஓட்டு போடுவதற்கு முன், ← → நல்லவர் யார்...? கெட்டவர் யார்...? ← என்று எவ்வாறு அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு தேர்ந்தெடுப்பது...?
பதடி யார் என்று இப்போ தெரிந்து விடுமா...? அது ஒரு குறள் தானே என்கிறீர்களே...? ஆமாங்க... பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரின் பாடல் கேட்டாலும், அந்த பதடியின் பல்வேறு முகங்களை மனக்கண்ணில் காணலாம்... அந்த பதிலுக்காகப் பதிவு தேர்தலுக்கு முன் தெரிந்து விடும்...! நன்றி...
⟪ © பதிபக்தி ✍ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன், J.P.சந்திரபாபு @ 1958 ⟫
தர்மமென்பார் - நீதியென்பார் - தரமென்பார் - சரித்திரத்தைச் சான்று சொல்வார் - தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டு - தன்மான வீரரென்பார் - மர்மமாய்ச் சதிபுரிவார் - வாய்பேசா அபலைகளின் - வாழ்வுக்கு நஞ்சு வைப்பார் - கர்ம வினை யென்பார் - பிரம்மன் எழுத்தென்பார் - கடவுள்மேல் குற்றமென்பார்2 - // இந்தத் திண்ணைப் பேச்சு வீரனிடம், ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி - நாம ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி... எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் - இல்லாத நன்னாளை உண்டாக்கணும்2 பொதுநலம் பேசும் புண்ணியவான்களின் போக்கினில் அநேக வித்தியாசம்2 புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம், புவியை மயக்கும் வெளி வேசம்... அந்தப் பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த நல்லோரை எல்லோரும் கொண்டாடணும்... // கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு2 கஞ்சிக்கில்லாதார் கவலை நீங்கவே கருதவேண்டியதை மறந்தாச்சு... பழங்கதைகளைப் பேசி காலம் வீணாச்சு... கையாலே முன்னேற்றம் கண்டாகணும்...
நண்பர்களே... தங்களின் பதில் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
ஊடுறுவிகளால் உங்கள் சிந்தனை சிதறாது பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள் போல இவர்கள் திண்ணைப்பேச்சு வீரர்களே...
பதிலளிநீக்குவாக்கு முறை ஆச்சர்யப்பட வைத்தது ஜி
அட கடவுளே,உங்களுக்குமா இந்த பிரச்சனை....
பதிலளிநீக்குஇவர்களையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.
பட்டுக்கோட்டையாரின் பிறந்த நாளில் அவர் பாடல்களை எல்லாம் படித்தாலே போதும் மக்கள் உணர்ந்து விடுவார்கள். நல்லவர், கெட்டவர் யார் என்று புரிந்து விடும்.
பதிலளிநீக்குஉங்கள் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது.
உங்கள் பிரச்சனைகளை முறியடித்து வெற்றி பெற்று விட்டதற்கு மகிழ்ச்சி.
வருங்காலம் நல்லதாக இருக்க வேண்டும், அதுவே அனைவரின் எண்ணமும்.
எண்ணங்களுக்கு வலு கொடுப்போம்.
"எண்ணியவெல்லாம் எண்ணியபடியேயாகும் எண்ணத்தில்
உறுதியும், ஓழுங்கும் அமைந்திடில்"
-மகரிஷி
எப்போது நாம் கவனிக்கப்படுகின்றவர்களாக ஆகின்றோம்? நம் எழுத்து மற்றும் பேச்சு அடுத்தவர்களை சிந்திக்க வைக்கத் தொடங்கும் போது. அந்த சிந்தனை பலருக்கு பேதியாக்கும் தருணத்தில் தான் குறுக்குவழிகளை சிலர் கையாளத் தொடங்குவார்கள். அப்படித்தான் இங்கு தொடங்கி உள்ளனர். எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே. நீங்கள் எழுதுவது யாருக்கோ எரிச்சலை அச்சத்தை உருவாக்கியுள்ளது எனில் நீங்கள் சரியான பாதையில் தான் சென்று கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
பதிலளிநீக்குபயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
பதிலளிநீக்குமக்கட் பதடி எனல்
சரியான குறளை வைத்து நறுக்கியிருக்கீங்க. பாராட்டுகள்.
கருத்தை கருத்தாத்தான் பார்க்கவேண்டும் என்பது என் எண்ணம்.
மகிழ்ச்சி... நன்றி ஐயா...
நீக்குநீங்கள் எதனையும் சமாளிப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். இவர்களைப் போலுள்ளவர்களைக் கண்டுகொள்ளவேண்டாம். உங்கள் பாதையில் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டிக்கொண்டே செல்லுங்கள்.
பதிலளிநீக்குடிடியிடமேவா? தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்தான் அலட்சியமாக இருக்கிறார்கள். முன்பு ஒருமுறை தொழில்நுட்பப் பதிவ்ர். பனிமலர் என நினைவு! தன் வலைப்ப பக்கத்தை இழந்து சாமார்த்தியமாக் மீட்டார். உங்களுக்கும் ஞாபகம் இருக்கும் என நினைக்க்கிறேன். எப்படியும் பேக் அப் எடுத்து வைத்திருப்பதால் கவலை இல்லை.
பதிலளிநீக்குபாஸ்வோர்ட் டபுள் வெரிபிகேஷன் பண்ணிடுங்கள் தனபாலன் பிரச்சனை இருக்காது...
பதிலளிநீக்குவலைப்பதிவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ஆனால் அவர்களில் பலர் இரு முகங்களை கொண்டவர்கள் என்பதை விட பல்வேறு முகங்களை கொண்ட "தேசபக்தி :மிகுந்தவர்களாக இருக்கிறார்கள். மோடியால் கிடைத்த ஒரு நன்மை என்னவென்றால் நல்ல உள்ளம் கொண்டவர் யார் போலியாக பழகுபவர்கள் யார் என்று புரிந்து கொள்ள முடிந்ததுதான்
2-Step Verification உண்டு... அதையும் மீறி Backup codes இருந்ததால் தப்பித்தேன்...
நீக்குபல வலைப்பதிவர்கள் பகிர்வதை விட்டுவிட்ட நிலையில், புதிய பல வலைப்பதிவர்கள் உருவாக வேண்டும் என்பதே விருப்பம்...
துணிவும் பணிவும் இருக்கையில்
பதிலளிநீக்குதுவள்வது என்றும் இல்லை..
தோல்வி என்பதும் இல்லை...
உங்களது பிளாக்கர் கணக்கை யாரோ களவாட முயல்கிறார்கள். உங்களது முகநூல் கணக்கை யாரோ திருடி அதிலிருந்து ஆபாசமாக அடுத்தவர் பதிவுகளில் பதில் எழுதுகிறார்கள். உங்களது கணினியை ஹாக் செய்து யாரோ மெசெஞ்சரில் உங்களோடு ஒத்த கருத்து இல்லாதவர்களைக் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். இப்படியே போனால் உங்களது அலைபேசியை திருடி, உங்களது குரலையும் திருடி யாரோ ஒருவர் உங்கள் கருத்துக்கு எதிரான கருத்து உள்ளவர்களிடம் 'திண்டுக்கல்லுக்கு வா, கொலை செய்கிறேன்,' என்று மிரட்டல் விடுகிறார்கள் என்றும் சொன்னாலும் சொல்லுவீர்கள். அதையும் நம்புகிறவர்கள் இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை? சும்மா அடிச்சு விடுங்க.
பதிலளிநீக்குஅடடா உங்களுக்கும் பிரச்சனையா.... வேதனை.
பதிலளிநீக்குதுரை செல்வராஜூ ஐயா சொல்வது போல துணிவு உங்களுக்குத் துணை நிற்கும்.
உங்களை சரியா எடைபோடாமல் உங்கக்கிட்ட வாலாட்டி இருக்காங்க.
பதிலளிநீக்குவலைப்பதிவுக்கு ஒன்னும் ஆகாது. அப்படியே புது வலைப்பதிவுன்னு விதிச்சிருந்தா நாங்கலாம் அங்கும் வருவோம்
நாங்கள் இருவர் எங்கள் ப்ளாகர் ஐடி பயன்படுத்துவதால் துளசி அங்கு ஐடி ஓப்பன் செய்தால் எனக்கு மெஸெஜ் வரும். எங்கிருந்து என்பதெல்லாம் வரும். உடனே அவருக்கு மெசேஜ் கொடுத்துக் கேட்டுக் கொள்வேன் ஐடிக்குள் சென்றாரா என்று.
பதிலளிநீக்குஒரு தடவை தில்லுயிலிருந்து ஐடி ஆக்ஸஸ் செய்யப்பட்டது என்று வந்தது. எனக்கு சந்தேகம். துளசியிடம் மெசேஜ் கொடுத்துக் கேட்டேன். அவர் அதெ சமயத்தில் ஐடிக்குள் போனதாகச் சொன்னார். இருந்தாலும் பாஸ்வேர்ட் மாற்றிவிட்டோம் இப்போது வெரிஃபிக்கேஷன் அவ்வப்போது வரும்.
கீதா
அந்த பட்டன்கள் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அர்த்தம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை டிடி.
பதிலளிநீக்குகீதா
எந்த பட்டனை எழுதினாலும் ஓட்டு "பதடி"க்கே செல்கிறது சகோதரி...!
நீக்குநீங்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறீர்கள் நண்பரே.
பதிலளிநீக்குஜோதிஜி அவர்களின் கருத்தினை வழிமொழிகின்றேன் ஐயா
பதிலளிநீக்குபழுத்த மரத்துக்குதான் கல்லடி. யார்க்கும் அஞ்சேல்.
பதிலளிநீக்குதுணிவு வேண்டும் என்பதை அழகாக எடுத்துக்காட்டிவிட்டீர்கள் அண்ணா
பதிலளிநீக்குநீங்கள் எப்போதும் நடுவுநிலையிலிருந்துதான் நாட்டுக்கு நல்ல கருத்துகளை வெளியிடுகிறீர்கள்
பதிலளிநீக்கு'போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
பதிலளிநீக்குதூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்' என்ற கவிஞர் கண்ணதாசனின் வைர வரிகளை மனதில் கொள்ளுங்கள். தங்களின் பணி தொடரட்டும்.
தங்கள் பதிவு தொடரட்டும்
பதிலளிநீக்குபொறுக்கிப் பதிவைப் பகிருவோர் நிலைக்கார்.
பதிலளிநீக்குதங்கள் பணி தொடர ஒத்துழைப்போம்.
பட்டுக்கோட்டையார் பாடல்
பலருக்குத் தெளிவை ஏற்படுத்தட்டும்!
விழிப்புணர்வூட்டியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி.