🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பதிவர் விழாவில் கலக்கப் போவது யாரு...?

எழுவதென்றால் ஒரு மலை போல் எழுவேன் - நண்பர்கள் நலம் காண... விழுவது போல் கொஞ்சம் வீழ்வேன் - எனது எதிரிகள் சுகம் காண... உள்ளத்தில் காயங்கள் உண்டு, அதை நான் மறைக்கிறேன்... ஊருக்கு ஆனந்தம் கொடுக்க வெளியே சிரிக்கிறேன்... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... துயரத்தை எரித்து, உயரத்தை வளர்த்து... வாழ்வேன்... நலம் காண்பேன்... கலக்கப் போவது யாரு DD...? வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு...?



© வசூல் ராஜா MBBS வைரமுத்து பரத்வாஜ் 🎤 கமல்ஹாசன், சத்யன் @ 1989 ⟫


வாங்க ஆவி...! துள்ளலான பாட்டு... ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதத்தில் கலக்கப் போறாங்க... நம்ம விழாவிலும் பல புதுமைகள் உண்டு... ஒவ்வொரு விசயத்தையும் நல்லா யோசித்து உற்சாகமா செஞ்சிட்டு இருக்கோம்... புதிய பதிவர்கள் பலரும் கலந்துக்கிறாங்க... அதனால நட்பு வட்டம் இன்னும் பெருகப் போகுது... இதை விட என்ன வேண்டும் ஆவி...?

சரி தான் DD, ஏற்கனவே எல்லோருடைய ஒத்துழைப்பில் இருமுறை சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்திய நண்பர்களோட அனுபவம் இருக்கும் போது, அட்டகாசமான விழாவா இருக்கும் என்பதிலே சந்தேகமேயில்லை... ஆமா DD, நன்கொடையெல்லாம் வந்துட்டிருக்கா...?

ம்... அவங்கவங்க விருப்பம் போல தந்துக்கிட்டு இருக்காங்க... எல்லோருடைய கூட்டு முயற்சியால் தான் முந்தைய விழாக்கள் சிறப்பா நடந்தது... இப்பவும் நடக்கப் போகுது... இந்த சந்திப்பில் கிடைக்கும் நட்பை விடச் சிறந்த நன்கொடை இருக்கா ஆவி...? வாழ்வதற்குப் பொருள் வேண்டும்... வாழ்வதற்கும் பொருள் வேண்டும்... விழா நடப்பதற்கும் பொருள் வேண்டும்... ஹிஹி... முக்கியமான விசயம் : பணத்தை அனுப்பியவுடன் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் மின்னஞ்சல் - thaiprakash1@gmail.com மூலமாகவோ, கைப்பேசி எண்ணிலோ - 9080780981 தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்...

(படம் :நட்புக்காக) மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா... ரோசம் அதிகம்டா அதவிட பாசம் அதிகம்டா...! ஹா... ஹா... போன சந்திப்பிலே நம்ம நண்பர்களோ பாட்டுப் பாடினேன்... இந்த முறை ஆட்டத்தோட...! கடலளவு என் மேலே நம்பிக்கை இருக்கும் போது களங்கம் தான் என்னைப் பார்த்து பயப்படணும்... குறும்படக் கதாநாயகன் ஆயிட்டேன்லே...!

அசத்துங்க ஆவி...! உங்ககிட்டே போட்டி போட்டி போட்டு பகைச்சிக்கிற எண்ணமில்லே...! எல்லோருடைய ஆதரவும் அன்பும் என்றும் உண்டு.. ஏகப்பட்ட அன்பு உள்ளங்களைக் கொள்ளை கொள்ளப் போறீங்க...! விழாவில் குறும்பட வெளியீட்டில் படத்தைப் பார்க்க ஆவலாய் இருக்கேன்...

எனது தளத்திற்கு the VERSATILE BLOGGER award வழங்கிய நம் வலைத்தள உறவுகள் சகோதரிகள் வேலு நாச்சியார், சந்திர கௌரி சிவபாலன், உமையாள் காயத்திரி, கமலா ஹரிஹரன், சகோதரர்கள் தளிர் சுரேஷ், அவர்கள் உண்மைகள் - அனைவருக்கும் நன்றி...


வருகையைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்

நன்கொடை அளிக்க இங்கே சொடுக்கவும்

வருகை உறுதியானதை அறிய இங்கே சொடுக்கவும்


நன்றி DD, செய்யக்கூடாததைச் செஞ்சாலும், செய்ய வேண்டியதை செய்யாம இருந்தாலும் மனசிலே திருப்தி இருக்காது... அப்புறம் "ஆவிப்பா" இரண்டாம் பகுதி புத்தகத்தை விழாவிலே வெளியிடலாம்ன்னு இருக்கேன்...

வர்ற பத்து பத்துக்குள்ளே (10/10/14) உறுதி செஞ்சிடுங்க... அதே போல இப்போ வாசிட்டிருக்கிற நண்பர்களே... வரவேற்பு, உணவு, தங்குமிட ஏற்பாடெல்லாம் செய்யணுங்கிறதாலே அவசியம் வருகையை உடனே உறுதி செய்யுங்க... ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, உங்கள் பேச்சை நீங்க தான் கேட்கணும்...!

வருகையை உறுதி செய்யுறது ரொம்ப முக்கியம் DD... பல நண்பர்கள் துணையாக இருந்தாலும், திட்டமிட்டு முறையா செய்யப்படாத முயற்சி கடைசியிலே முடங்கிப் போயிடும்... வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஆலோசனைக் கூட்டமெல்லாம் எப்படி நடக்குது...?

வர்றவங்க ஒவ்வொருத்தரையும் சிறப்பா கவனிக்கணும்ன்னு ஆலோசிக்கிறோம்... வர்றவங்க மனசு நோகாதபடி வேலை செய்யலைன்னா நல்லதா செஞ்சாலும் தவறு வந்துடுமில்லே... அப்புறம் தொழிற்நுட்ப பதிவர்களைக் கௌரவப்படுத்தும் நிகழ்வும் உண்டு... அவர்கள் 1) வலைப்பூ தொழினுட்ப பதிவுகள் குறைந்தது மூன்று எழுதியிருக்க வேண்டும்... 2) நண்பர்களுக்கு வலைப்பூ தளங்கள் அமைத்துத் தந்திருக்க வேண்டும்... அவ்வளவு தான்... கருத்துரையில் சொல்லுங்க நண்பர்களே...

ஆர்வம் அதிகமாகுது DD... மூத்தவங்க வழிகாட்டுதல் இருக்கும் போது, இந்த விழாவைப் பிரமாண்டமா செஞ்சி எல்லாருடைய நட்பையும் பாராட்டையும் சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்வோம்; பாட்டு / குறள் சொல்லலையா DD ?

இதுவரை நாம பேசினதெல்லாம் குறளின் குரல் தான் ஆவி...! அதிகாரம் 47 - தெரிந்து செயல்வகை - 2013 வருடம் பதிவர் சந்திப்பு திருவிழாவிற்காக ஆதலால் பயணம் செய்வீர் என்று கேள்வி பதிலாக எழுதின பதிவை, இங்கு நம் உரையாடலாக...!!!!

01) புதிய பதிவர்களுக்காக : திருவிழா எப்படி நடைபெற இருக்கிறது...?
02) சிறப்பாக என்னவெல்லாம் நடக்குமெனத் தெரிந்து கொள்ள ஆர்வமா...?
03) காசு,பணம்,துட்டு,Money,Money,அதாங்க பொருளாதாரம்-முக்கியமா...?
04) பாட்டு, நடனம், தனிநடிப்பு, நாடகம் நிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமா ?
05) வாங்க பழகலாம்... நாம் புதியவராயிற்றே என்ற எண்ணமா/தயக்கமா...?
06) தங்களின் படைப்புகளின் நூல் வெளியீடு எனும் எண்ணம் உள்ளதா...?
07) வருகையைப் பற்றிய தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டுமா...?
08) இவ்வளவு பிரமாண்ட விழா எவ்வாறு சாத்தியமென அறிய ஆவலா...?
09) தங்குமிடம், வரவேற்பு குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருக்கிறதா...?
10) மேலும் திருவிழா சிறக்க தங்களது கருத்துகள் ஏதேனும் இருக்கிறதா...?

கேள்விகளுக்கு நம்ம தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறிய பதில்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்...

யாதும் ஊரே யாவரும் கேளீர்... அன்பே எங்கள் உலகத் தத்துவம்...2 நண்பர் உண்டு பகைவர் இல்லை... நன்மை உண்டு தீமை இல்லை...2 இனிஜுகா சம் கம் மதுரையா...! Around the World... Friendship welcomes you...



© நினைத்தாலே இனிக்கும் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 S.P.பாலசுப்பிரமணியம், P.சுசீலா @ 1979 ⟫

நண்பர்களே... வாருங்கள் கொண்டாடுவோம்... நன்றி... வாழ்த்துக்கள்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. யாதும் ஊரே யாவரும் கேளிர்! அன்பே எங்கள் உலக தத்துவம் !

    உண்மை உண்மை உண்மை! கலக்கிடுவோம்ல! டிடி !

    பதிலளிநீக்கு
  2. விழா மிகப் பிரமாதமாக நடக்கும் எனத் தெரிகிறது
    உங்கள் ஏற்பாடுகளைப் பார்க்கும்போது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கூடல் மாநகரில் கூடும் பதிவர் விழாவிற்கு அற்புதமான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் குழுவினருக்கு பாராட்டுக்கள் . நான் கலந்து கொள்வதை விரைவில் உறுதி செய்கிறேன்.

    வித்தியாசமான முறையில் விழாத் தகவல்கள் வழங்க DD யாழ் மட்டுமே முடியும்.
    பதவில் அசத்தும் நீங்கள் பதிவர் சந்திப்பில் செய்யும் அசத்தல்களை காண ஆவலாக உள்ளோம்.

    பதிலளிநீக்கு
  4. ஆவிக்கு மட்டும் ஸ்பெஷல் அட்டென்ஷன் தந்த டிடியை வன்மையாகக் கண்ணடிக்கி.. ஸாரி, கண்டிக்கிறோம். இருந்தாலும் பதிவர் திருவிழா வேலையில வியர்க்க விறுவிறுக்கப் பாடுபடறதால மன்னிக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டி.டி. சார்.

      விழா துவக்கத்திலே
      பால கணேஷுக்கு ஒரு தங்க கிரீடம் அணிவியுங்கள்.
      ஆவிக்கு ஒரு வாள் தாருங்கள்.


      சுப்பு தாத்தா

      நீக்கு
    2. ஆவிக்கு ஏற்கனவே நிறைய ‘வால்’ இருக்கு சுப்புத்தாத்தா. நீங்க பாட்டுக்கு வாளைக் கொடுத்தீங்கன்னா என்னை வெட்ட வருவார். அப்புறம் நான் ‘வாள் வாள்’ன்னு கத்துவேன். அவ்வ்வ்வ்வ்.... (அந்த முதல் வரி தேனாய் இனிக்கிறது. அதுக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் ஜிகர்தண்டா வாங்கித் தர்றேன், ஹி.... ஹி...)

      நீக்கு
  5. ரொம்ப பிஸியாஇருக்கீங்கன்னு தெரியுது... கலக்குங்க..

    பதிலளிநீக்கு
  6. ஆஹா... முன்னேற்பாடுகளைப் பார்க்கும்போதே ஆவலாய் உள்ளதே. விழா சிறப்பாக நடைபெறவும் பதிவுலகில் நட்புறவு தழைக்கவும், புத்துணர்வு உருவாக்கவும் இனிய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. கூடல் மாநகருக்கு
    கூடிவரும் அன்பர்களை
    சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  8. குடும்ப விழாவில் கலந்து கொள்ளும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்...
    கலக்குவோம், கலக்குவோம்,
    மதுரையை கலக்குவோம்.
    அன்புடன்
    கில்லர்ஜி
    அபுதாபி.

    பதிலளிநீக்கு
  9. மிகுந்த ஆர்வத்தை தூண்டுகின்றது சார்....

    பதிலளிநீக்கு
  10. கலந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது கொடுப்பினை இருக்கிறதா தெரியவில்லையே.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் பதிவை பார்த்தவுடன் அதில் வந்து பங்கு பற்றிய ஒரு உணர்வுதான் நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. விழா மிக இனிமையாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. கலக்குங்கள் டிடி. விழா வெற்றிபெற வாழ்த்துக்கள். பதிவர் விழாவில் கலக்கபோவது யாருன்னா? - கலந்து கொள்கிறவர்கள் எல்லோரும் தானே கலக்கப்போகிறீர்கள்!!!

    பதிலளிநீக்கு
  14. விழா வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள் சார்.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் வெற்றி பெறட்டும் விழா நிகழ்ச்சிகள்.

    பதிலளிநீக்கு
  16. ஆஹா ...அருமை !மூவர்ணக் கொடியில் அசைந்து செல்லும் பதிவேடு !வலைத்தளத்தில் எப்போதும் ஒரு புதுமையைப் படைக்கும் தங்களின்
    ஆற்றலே தனி ! வாழ்த்துக்கள் சகோதரா பதிவர்கள் சந்திக்கும் விழாவில் மகிழ்ச்சி பொங்கி வழியட்டும் !தங்களின் உயர்ந்த எண்ணம் எல்லோர் மனிதிலும் குடிகொள்ளட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  17. விழா சிறப்பாக, வெற்றிகரமாக நடக்க நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. நான் சந்திக்க விரும்பும் பல பதிவர்கள் வருகையை உறுதி செய்திருக்கிறார்கள் ,சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் !
    த ம 9

    பதிலளிநீக்கு
  19. அடடா... மதுரை நகரே கலகலக்கப் போகிறது!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்! விரைவில் பணம் வழங்குகிறேன்! வருகையை பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது! பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  21. தங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்! தங்கள் தளத்தினை தொடர்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  22. ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது டிடி...

    பதிலளிநீக்கு
  23. விழா சிறக்க வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    (யாராவது ஜிகிர்தண்டா ஐஸ்கிரிம் எப்படி செய்யறதுன்னு ஒரு பதிவு போடுங்கப்பா..... )

    பதிலளிநீக்கு
  24. விழா ஒழுங்கமைப்புகள் சிறப்பாக அமைய
    ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு விதத்தில் கலக்க
    ஒவ்வொரு பதிவரின் சந்திப்பும்
    ஒவ்வொரு புதிய உறவை ஏற்படுத்த
    இனிதே பதிவர் விழா வெற்றி பெற
    யாழ்பாவாணனின் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  25. நாள் நெருங்கி விட்டது விரைந்த செயல்பாடுகள் தேவை!நன்றி!

    பதிலளிநீக்கு
  26. கலக்குங்க அண்ணா...
    விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. விழா சிறப்பாக நடைபெறவும் பதிவுலகில் நட்புறவு தழைக்கவும், புத்துணர்வு உருவாக்கவும் இனிய வாழ்த்துகள்.
    Vetha.Langathilakam

    பதிலளிநீக்கு
  28. தங்களுக்கு கலக்குவது எப்படிஎன்று சொல்லித்தர வேண்டுமா... என்ன அசத்துங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. ஒவ்வொரு பதிவுக்கும் எவ்ளோ உழைப்பை கொடுக்குறீங்க டி.டி.அண்ணா! களைகட்ட தொடங்கிவிட்டது விழா!!

    பதிலளிநீக்கு
  30. பதிவர் திருவிழா சிறப்புற வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  31. எனக்கு இவையெல்லாம் புதிது.

    ஆனாலும் உங்களது திட்டமிடுதலும், பரந்த உள்ளமும், அனைவரையும் அனைத்துச் செல்லும் பாங்கும் என்னை வியக்க வைக்கிறது.

    உம்மை மனம் வியந்து பாராட்டுகிறேன். உங்களது அனைத்து முயற்சிகளும் கை கூடட்டும்.

    God Bless You.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் சகோதரரே.!

    மதுரையில் நடைபெறும் இந்த ஆண்டு பதிவர் திருவிழா மிகச் சிறப்பாக, வெற்றிகரமாக நடைபெற என் மனப் பூர்வமான நல்வாழ்த்துக்கள்.!

    வாழ்த்துக்களுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  33. விழா சிறக்க வாழ்த்துகள் !

    சாமானியன்

    பதிலளிநீக்கு
  34. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  37. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  38. விழா சிறக்க வாழ்த்துக்கள் ....!
    தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
  39. விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள் !

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.