தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரையில் சந்திப்போம்...


உலகத் தமிழ் வலைப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... மதுரையில் 26.10.2014 அன்று நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு தங்களின் வருகையை பதிவு செய்யஇங்கே← சொடுக்கவும்.


பதிவர்களின் நன்கொடைகள் விழா சிறக்க பெரும் உதவியாய் இருக்கும். பதிவர் சந்திப்பின் நிர்வாக கணக்குகள் பதிவர் தமிழ்வாசி பிரகாஷ் வங்கி கணக்கு மூலம் பயன்படுத்தி வருகிறோம்... நன்கொடை கொடுக்க விரும்புபவர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே... பணத்தை செலுத்திய பின்பு தங்களுடைய பணம் செலுத்தப்பட்ட விபரங்களையும், தங்களின் சுயவிவரங்களையும் (வலைப்பூ முகவரி/பெயர், மின்னஞ்சல் முகவரி) தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் கைபேசி எண்ணிலோ - 9080780981 அல்லது அவரின் மின்னஞ்சல் - thaiprakash1@gmail.com மூலமாகவோ தெரிவிக்க வேண்டுகிறோம்... பணம் எங்களுக்கு வந்து சேர்ந்தவுடன் தமிழ்வாசி பிரகாஷ்-ன் மின்னஞ்சலில் இருந்து "தங்களது பணத்தை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொண்டோம்... நன்றி..." என்ற தகவல் வந்து சேரும்...
வெளியூர் பதிவர்கள் வரவேற்பு மற்றும் ஏற்பாடுகளை கீழுள்ள பதிவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்... மாநாட்டு வேலைகளில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்...

திரு. பாலகணேஷ் (மின்னல் வரிகள்) - சென்னை
திரு. சரவணன் (ஸ்கூல் பையன்) - சென்னை
திரு. முத்துநிலவன் (வளரும் கவிதை) - புதுக்கோட்டை
திரு. தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்) - திருச்சி
திரு. சுரேஷ்குமார் (வீடு) - திருப்பூர்
திரு. ஜீவானந்தம் (கோவை நேரம்) - கோவை
திரு. சதீஷ் சங்கவி (சங்கவி) - ஈரோடு

முக்கியமான செய்தி : சென்னையிலிருந்து புலவர் இராமாநுசம் ஐயாவுடன் பாலகணேஷ், மதுமதி, சீனு, ரூபக், ஸ்கூல்பையன், கவியாழி போன்றோர் வேன் அல்லது பஸ் பிடித்து மதுரை பதிவர்கள் சந்திப்புக்கு வருவதாக திட்டம்... அவர்களுடன் சேர்ந்து வர விருப்பம் உள்ளவர்கள் வாத்தியார் பாலகணேஷ் (bganesh55@gmail.com) அவர்களை தொடர்பு கொள்ளவும்...
திருவிழாவின் அழைப்பை, தளத்தில் இணைக்கும் வழிமுறைகளை கீழே கொடுத்துள்ளபடி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உங்களின் தளத்தில் பதிவர் சந்திப்பு பற்றிய தகவலை(Side Gadget)இணைக்க:

முதலில் கீழ் பெட்டியுள்ள script முழுவதையும் சுட்டியால் select செய்து விட்டு, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C என்பதை அழுத்தி COPY செய்கிறோம்...
உங்களின் தளத்தில் உள் நுழைந்தவுடன் இடது புறத்திலுள்ள Layout என்பதை சொடுக்கவும்... »» வலது புறத்திலுள்ள Add a Gadget சொடுக்கி, வரும் popup திரையில் HTML/JavaScript என்பதைத் தேடி, அதை சொடுக்கவும். »» அங்கு Title என்பதில் "வருகையை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்" என்று தலைப்பு கொடுத்து விட்டு, அதற்கு கீழுள்ள Content என்பதில், Ctrl key-யை அழுத்திக் கொண்டு V என்பதை அழுத்தவும் »» save என்பதை சொடுக்கவும்.
எனது தளத்தில் வலது மேற்புறம் உள்ளது போல் செய்ய கீழ் பெட்டியுள்ள script-யை COPY செய்ய வேண்டும். தலைப்பாக "மதுரையில் 26.10.2014 அன்று நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் திருவிழா" என்று வைத்து விட்டு, மற்றவை மேலே சொன்னது போல் செய்யவும்.
மேலே படங்களில் மின்னும் சில நட்சத்திரங்கள் 2012 & 2013 ஆண்டுகளில் வலைப்பதிவர்கள் சந்திப்பில் எடுத்தவை...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. இந்தப்பதிவினை மிக அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  விழா மிகச்சிறப்பாக அமைய என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. என்னையும் பணிக்குழுவில் இணைத்தமைக்கு நன்றி. பணிகளைப் பகிர்ந்து குறிப்பிடுங்கள். செய்யக் காத்திருக்கிறேன். 05-10-14இல் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள எனது நூல்வெளியீட்டு விழாவில் ஒரு தனிச் செய்தியாக (ஃப்ளெக்ஸ்) போட்டு வைக்க, இங்குள்ள நம் வலை நண்பர்களோடு ஒரு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவிடுகிறேன். தனியாகவே வைக்கலாம் என்றாலும் கூட்டணிதான் நல்லது. பணமும் விரைவில் அனுப்புவேன், தகவல்களை எனது வலையில் பகர்வேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. கண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் நண்பர்களே .

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய அலைபேசி எண்ணையும் சேர்த்துக்கொள்ளவும்... 8939706125

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் திருவிழா சிறப்புடன் நிகழ நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. நானும் வருவேன் உடல்
  நலமுடன் இருப்பின்

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 7. ஏற்பாடுகள் மும்முரமாய் போய்கொண்டிருக்கிறது.எல்லோரையும் வரவேற்க நாங்கள் தயார்

  பதிலளிநீக்கு
 8. வரும் ஆவல் இருக்கிறது. ஆனால் பல விஷயங்கள் என் கட்டுக்குள் இல்லை. பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 9. விழா சிறப்பாக நடக்க இனிய வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 10. மதுரையில் இம்முறை கொண்டாடி மகிழ்வோம் சார் ...

  பதிலளிநீக்கு
 11. பகிர்வுக்கு நன்றி சகோ..!
  நானும் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 12. விழா கோலாகலமாய் சிறக்க எமது வாழ்த்துக்கள்.

  குறிப்பு - வரமுயற்சிக்கிறேன்.

  அன்புடன்
  தேவகோட்டை- கில்லர்ஜி
  அபுதாபியிலிருந்து....

  பதிலளிநீக்கு
 13. விழா சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 14. . வாழ்த்து! வருகைத் தருவோர் பட்டியலை வெளியிடுங்கள்!

  பதிலளிநீக்கு
 15. அருமையாக அழைப்பிதழை வடிவமைத்தமை சிறப்பு! வரும் ஆவல் இருக்கிறது! பார்ப்போம்! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. எனக்கும் கலந்து கொள்ள ஆசை தான்.
  இங்கே பிள்ளைகளுக்கு ஸ்கூல் துவங்கிவிட்டது....

  பதிலளிநீக்கு
 17. விழா சிறக்க வாழ்த்துகள்....

  நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. அன்பு டிடி அண்ணா...வணக்கம்...

  மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் வலைபதிவர் திருவிழா அனைத்து வகையிலும் சிறப்புற எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள் டிடி அண்ணா...

  பதிலளிநீக்கு
 19. பதிவர் திருவிழா இனிதே இடம்பெற
  எனது வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. எங்களை போல் வெளிநாட்டில் வாழும் பதிவர்களுக்கு மூலம் சில மணி நேரங்கள் பங்கேற்க வைப்பு அளியுங்கள்.

  பதிலளிநீக்கு
 21. எனது பெயரையும் பணிக்குழுவில் சேர்த்து இருக்கிறீர்கள். மதுரை எனக்கு அவ்வளவாக பழக்கம் இல்லாத ஊர். என்ற போதிலும் என்னால் இயன்றதைச் செய்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதனை மின்னஞ்சலில் தெரிவிக்கவும்.
  Tha.ma.13

  பதிலளிநீக்கு
 22. தனபாலன் சார்...
  எப்படியிருக்கீங்க...?
  ரொம்ப நாளா நம்ம பக்கமெல்லாம் வரக்காணோம்...
  விழா ஏற்பாட்டில் தீவிரமாக இருக்கிறிர்கள் என்பது தெரிகிறது.
  விழா சிறக்க வாழ்த்துக்கள் சார்...

  பதிலளிநீக்கு
 23. சைட் கேட்ஜெட் இணைத்தாயிற்று சகோ. நாளை இடுகை வரும். :)

  பகிர்வுக்கு நன்றி தனபாலன் சகோ விழா சிறப்புற வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
 24. எனக்கு கிடைத்த விருதொன்றினை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்! இங்கு!http://thalirssb.blogspot.com/2014/09/blogger-award-14-9-14.html

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சார் ...விழா சிறக்க வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 26. அன்பின் தன பாலன் - தமிழ் வாசி பிரகாஷ் மற்றும் தங்களின் பொறுப்பில் ஏற்பாடுகள் பாராட்டும் வண்ணம் நடந்து கொண்டிருக்கின்றன- நாங்களும் அயலகத்தில் இருப்பதனால் தற்போதைக்கு எதிலும் கலந்து கொள்ள இயலவில்லை. செப்டம்பர் 26 முதல் மதுரையில் முழு வீச்சாக ஈடு படுவோம், அயலகத்தில் இருக்கும் போது உடல் உழைப்பு தான் இருக்காதே தவிர - முழு மனதுடன் ஆலோசனைகள் - மின்னஞ்சல் மூலமாக தொடர்ந்து தொடர்பில் இருத்தல் - செய்ய இயலும் மற்ற பணிகள் ஆகியவை முழு ஈடுபாட்டுடன் செயல் படுத்தப் படும். இன்னும் 10 நாட்கள் தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 27. தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றி

  பதிலளிநீக்கு
 28. கருத்து சொல்ல வரவில்லை
  கற்கண்டு தரும் சுவைமிகு வாழ்த்து
  சொல்லவே யாம் வந்தோம் யாதவன் நம்பியாக!

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர்உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
  அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 29. மிக சிறப்பாக விழா நடந்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் உழைப்புக்கு வலையுலகம் சார்பாக நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.